கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 10, 2024
பார்வையிட்டோர்: 674 
 
 

‘சீக்கிரம்! சீக்கிரம்! வந்துர போறாங்க,  வரதுக்குள்ள எல்லா ரெடியாயிரணும்’ என பரபரப்புடன் ஒரு குரல். ‘இந்த பூ தட்டை கொஞ்ச அங்கே வை மா’ என்று அண்ணி வந்தவர்களிடம் கூறினார். ‘என்னமா? அவ ரெடி ஆய்ட்டாளாணு போய் பாரு’ என்று அண்ணன் கூற. ‘தொ போறெங்கே’ என அண்ணி சொன்னார். அப்பொழுது, வீடே ஆர்ப்பாட்டம் கலந்த மகிழ்ச்சி நிலவியது.  

அன்று ரவாங் ஜாலான் பூச்சொங்கில் உள்ள மீனாவின் அண்ணன் வீட்டில், மீனாவுக்கு பெண் பார்க்கும் ஏற்பாடுகள் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. உறவினர்களும் சுற்றத்தாரும் மீனாவின் முகத்தில் வெட்கம் சிவக்க வைத்தனர். 

அழகே உருவான மீனாவை மேலும் தேவதையாய் அலங்காரம் செய்திருந்தார்கள். ‘என்னமா ரெடியா ஆகிட்டிய? என் அழகி! ஏவுளோ அழகா இருக்கா பாருங்களேன்’ என்று அண்ணி கூறினார். லேடீஸ் பிங்கர் போல இருக்கும் அவளின் விரல்களின் மேல் மருதாணியின் கலர் மேலும் அழகு கூட்டியது. பாலில் விழுந்த பழங்களை போல பருவம் உருவம் நிறைத்தவளாக  அலங்கரிக்கப்பட்டிருந்தாள்.  

‘மீனா! முதல் சந்திப்பும் முதல் தோற்றமும் தான் மனதில் அப்படியே பதியும். நீ கொஞ்சம் கவர்ச்சியாய் அலங்கரித்துக் கொள்வதில் தப்பில்ல. கண்டிப்பா போன தடவ நடந்த மாதிரி இன்னிக்கு ஆகாதுமா. அதே பத்தி யோசிக்காம நல்லா சிரிச்ச முகத்துடன் இரு… செறிய? குனிந்தபடிய ஆம் என தலையை அசைத்தாள்.  

மீனாவுக்கு அலங்காரத்தில் உள்ள வெறுப்பை உணர்ந்து அவர் அண்ணி அவளுக்கு அறிவுரை வழங்கினாள்.   

அலங்காரங்கள் பண்பாட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் மீனா. சிறுவயது முதல், மலர்களையும் மரம் செடி கொடிகளையும் மலைகளையும் இயற்கைகளையும் நேசித்து வாயில்லா ஜீவன்களுடன் வாழ்ந்து வந்த மீனாக்கு சீட்டி வாழ்க்கை அவளுக்கு மிகவும் வெறுப்பூட்டியது. பெற்றோர் வற்புறுத்தலால், அவர்களின் மனவருத்தத்தை நினைத்து அவர்களின் ஏற்பாட்டுக்கு மனம் இறங்கினாள். நேரம் ஆகா ஆகா ஆர்வமும் படபடப்பும் மீனாவிற்கு அதிகமாயிற்று. ‘அவர்… எனக்கானவனாக இருப்பாரா? என்னையே ஏற்றுக்கொள்வாரா? என பல  கேள்விகள் அவளின் நினைவில் எழுந்தன.’ 

மாலை ஐந்து மணி. மாப்பிள்ளை வீட்டார் இரண்டு காடியில் குடும்பத்தோடு வந்து இறங்கினார்கள். பெண் வீட்டார் அவர்களை எதிர்கொண்டு வரவேந்தனர். 

மாப்பிள்ளையாக இருந்த பையன் மிடுக்காகவும் நிதானமாகவும் காணப்பட்டான். அவன் கண்களில் எதையும் கூர்ந்து நோக்கும் பார்வை இருந்தது. அழகுக்கு மயங்காத கம்பீரம் அவன் முகத்தில் தெரிந்தது. அமைதியாக நடந்து வந்து இருக்கையில் அமர்ந்தான். “நல்ல நேரம் முடியறதுக்குள்ள இருவீட்டார் பெரியவுங்க சபையில் வந்து உக்காந்து அவரவர் குடும்பத்தாரை அறிமுகம் செஞ்சிக்கோங்கப்பா.’ சடங்குகள் தொடங்கின.  

மாப்பிள்ளையாகவிருந்த பையன் வீடு முழுமையும் ஒரு நோட்டமிட்டான். அங்குமிங்கும் ஓடியாடி செயல் புரிபவர்களின் போக்குகளை ஊன்றிக் கவனித்தான். மீண்டும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவனாய் தன் பார்வையை வெளியே உலவ விட்டான். 

மீனா இன்ப அதிர்ச்சியில் நடுங்கும் கரங்களினால் காப்பி கொண்டு வந்து வைத்தாள். எதிரில் அமர்ந்திருந்த ஆண்மகனைப் பார்க்க ஆசையிருந்தும் நாணம் அவளை விடவில்லை. அவன் சிவந்த பாதங்களை நோக்கினாள். மனதிற்குள் சிறு சலனம். துணிவை வரவழைத்துக் கொண்டு மெதுவாய் நிமிர்ந்தாள். அவன் கண்கள் அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. காப்பி கப்பை எடுக்கும் சாக்கில் அவளது கையைத் தொட்டுவிட எண்ணினான். 

ஒரு கணம்தான். மறுவினாடியே உள்ளே சென்று விட்டாள். அவள் மனதில் அவன் மெல்லிய பாதங்கள் பதிய முயன்றன. அன்னியமாய் ஓர் உணர்வு அவளை ஆட்டிப் படைத்தது. பக்கத்து அறையின் கதவோரமாய் நின்று பெரியவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

“என்ன தம்பி! பொண்ண புடிச்சிருக்கா? பேசி முடிச்சிரலாமா?” அவன் பேசவில்லை. 

ஒரு நிமிடம் அந்த வீட்டில் எந்த சத்தமும் இல்லை. மயான அமைதியாயிற்று. எல்லாருடைய காதுகளும் அவன் வாய் அசைவில் இருந்து வரும் வார்த்தைக்காக ஆர்வத்துடன் காத்திருந்தன. ‘என்னப்பா சமந்தமா உனக்கு ? கல்யாணத்துக்கு தேதி குறிச்சிரலாமா?’ என வந்திருந்த உறவினர் காதோரம் வினாவினார்.   

அவன் மிக நெஞ்சழுத்தக்காரன். எல்லாருடைய பொறுமையையும் மிகவும் சோதித்தான். 

‘பிடித்திருக்கிறது அல்லது இல்லை!’ என்று சொல்லாமல் தன்னுடன் வந்திருந்த உறவினர்களைப் பார்த்தான். 

“உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” தன்னுடன் வந்த உறவினர்களைக் கேட்டான். 

வந்திருந்த உறவினர்களில் ஒருவர், “நாங்களா கல்யாணம் பண்ணிக்கப் போறோம்? நீதானே கல்யாணம் பண்ண போற? உனக்குப் பிடிச்சிருக்கா? அதைச் சொல்லு மொதல்ல.” அவர் பொறுமை இழந்து கேட்டார். 

“நான் வீட்டுக்கு போயிட்டு யோசிச்சி சொல்றேன்.” மீண்டும் அவன் அமைதியாய்ப் பேசினான். பெண் வீட்டார்கள் திகைத்தார்கள். ‘முடிவைத் தெரிந்து கொள்ள இன்னும் எத்தனை நாள் ஆகுமோ?’ போனதடவ மாதிரி ஏதாச்சும்?… சும்மா இரு டி.. என அண்ணன் பேச விடாமல் தடுத்தார். ‘என்னாடி இப்படி சொல்லிட்டாரு… இந்த சமந்தமாச்சும் நல்ல அமையும்னு நா நினைச்சனே’ மீனாவின் அண்ணனும் அண்ணியும் ஏமாற்றத்துடனும் கவலையுடனும் காணப்பட்டனர்.  

கண்ணாடி துண்டுகளால் அவள் மனம் சிதற மீனாவின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிர்த்தன. தன் அண்ணியை அழைத்துத் தனியே பேசினாள். 

“அண்ணி, நான் வெறும் ஸ்.பி.ம் தான்னு சொல்லிருங்க. அம்மாவுடன் உளு கெலாங்க்லே பால்மரம் வெட்டுவதையும் சொல்லிருங்க. நம்ம வீடு தண்ணி, எலக்ட்ரிக் இல்லாத வீடும்னு சொல்லிருங்க. எனக்கு வயசு மூப்பதியாருனு சொல்லிடுங்க. எதையும் மறைக்க வேணா. எல்லாத்தையும் வச்சு யோசிச்சி அவரு முடிவு செய்யட்டும்.” மீனா குனிந்தபடியே சொன்னாள்.  

எல்லா விபரங்களையும் கேட்டுக் கொண்டே ‘முத்து’ உறவினர்களுடன் பெண் வீட்டை விட்டுப் புறப்பட்டான். 

அன்றிரவெல்லாம் மீனாக்கு ஒரே சிந்தனை. 

‘ஏன் என்னோடே ஆசையே யாருமே கேட்கல? எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது? நான் யாருக்கும் ராசி இல்லாதவளோ?’ தன்னுடைய நிலைக்காக மீனா, தானே பரிதாபப்பட்டாள். மறுநாள் புக்கிட் பெருந்துங் செல்லும் பஸ்ஸில், உளு கெலாங்க்குப் புறப்பட்டாள். சாலை இருப் பக்கங்களிலும் உயரமான மரங்கள் கம்பீரமாகக் காட்சியளித்தன. குரங்குகள் அங்கும் இங்கும் ஓடி குதித்து குறும்பு செய்த வண்ணமாய் இருந்தன. இனிய தென்றல் வீச அந்த பயணமே அழகானது. இயற்கை அன்னையே அங்கேதான் குடி இருக்கின்றார் போல் இருந்தது. தன்னுடைய பயணத்தில் இவ்வளவு அழகான காட்சிகள் இருந்தும் அந்த பரிதாபம் மீனாவுக்கு அதனை ரசிக்க தான் மனமில்லை.  

“நீங்க ரெண்டு டிக்கெட்டா எடுத்திருக்கீங்க?”

“இல்ல… ஏன்? ” 

“ஒன்னுமில்ல. ஒரு டிக்கெட்டுக்கு ஒரு சீட்தான். நீங்க ஒன்னுல உட்கார்ந்திருக்கீங்க. பக்கத்து சீட்ல சுவெட்டரை வெச்சிருக்கீங்க?-

“இதா? வேணுமின்னேதான். இங்க யாராச்சும் ஆம்பளைங்க வந்து உட்கார்ந்திடுவாங்கன்னு பயம். ஸ்வெட்டர் இருந்தா, ஆள் இருக்குனு சொல்லிடலாமே!”  

“ஏன்…. ஆம்பளைங்க உட்கார்ந்தா என்ன?”

“சேட்டை பண்ணுவாங்க… எனக்குப் பிடிக்காது.”

“நான் உட்கார்ந்தா கூடவா?” 

அவளுக்குள் தர்மசங்கடம். அது அவளது கண்களில் தெரிந்தது. எனினும், முறுவலித்தாள். மெல்ல தன் குளிராடையை எடுத்துக் கொண்டாள். அங்கே அவன் அமர்ந்தான். அவள் ஒரு முறை அவனை நேருக்கு நேர் நோக்கி விட்டு, சன்னலுக்கு வெளியே பார்த்தாள்.  

“ஹோம் டவுன் எது?’ 

சொன்னாள். 

“தெரியும் , அது எனக்கு ரொம்பே வேண்டப்பட்ட இடம். உங்க ஃபேமிலில எல்லாருமே எப்படி இருக்காங்க?” அவன் கேட்டான். 

“அப்பா இல்லை. அம்மா, அண்ணன், அண்ணி கூடத்தான் இருக்கேன். ” என்று சொன்னாள்.

“அதான் தெரியுமே…” 

“எப்படி?”

பதில் சொல்லாமல் அவன் புன்னகைத்தான்.  

பஸ் ஒரு நிலையத்தில் ஓய்வெடுத்தது.  

“அட!!! தம்பி நீங்களா? நீங்க எப்படி இங்க? Uniform-ல  செம்மையா இருக்கீங்க”, பஸ் ஸ்டாப்பிலிருந்து ஒருவர் கேட்டார். உங்கள பத்தி ஒரு நியூஸ் கேட்டேனே உண்மையா? எதோ… training-ல… 

ஆமா uncle, அப்பறோம் வீட்டுக்கு வந்து பேசுறன, என கூறி பார்வையை அவள் பக்கம் திருப்பினான். 

சில நிமிடங்கள். 

மறுபடியும் அதன் பயணம் தொடர்ந்தது.  

‘இன்னுமா நான் யாருனு தேரிலே?’

‘தெர்லங்கா, முதல் தடவையா இப்போதான் பாக்குறேன்’.

அவள் ஓரக் கண்ணால், அவனை விழுங்கினாள். அவனும் ஓரக்கண்ணால், அதை அறிந்து கொண்டான்.  

சரி சொல்றேன்! நான்தான் உங்கள முதல… 

பஸ் விசிலடித்து.  

அவள் மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள். 

அவள் சரேலென பஸ்சை விட்டு இறங்கினாள்.  

“கண்டிப்பா உங்கள மறுபடியும் பாப்பெங்கே…” என உரக்க பஸ்ஸில்லிருந்து கத்தினான். 

‘என்ன சொல்ல வந்தாருனு தெரிலைய?’ என முணுமுணுத்தாள். 

தூரத்தில் அவள் தலை தெரிவதைக் கண்டதும் அவள் வளர்த்த அன்பு நாய் அதன் காதுகளை உயர்த்திக் கொண்டு ஓடி வந்தது. அவள் மேல் தாவிக் குதித்தது. ஒரு நாள் பிரிவை அவளுடன் பரிமாறிக் கொண்டது. கை, கால், முகத்தை முத்தமிட்டது. 

‘ஜூலி ‘யின் அன்பில் மீனா நெகிழ்ந்து போனாள். பட்டுப் போன்ற அதன் வெள்ளை முடியைக் கோதிவிட்டாள். முகத்துடன் முகம் சேர்த்தாள். 

‘இந்த வாயில்லா ஜீவனின் அன்புக்கு ஈடு இணையே இல்லை. யார் சம்மதித்தால் என்ன? சம்மதிக்காவிட்டால் எனக்கு என்ன? கிடக்குறாங்க! இந்த இயற்கையை, வாயில்லா உயிர்களை நேசித்து வாழ்வதே ஒரு தனி சுகம்!’ மீனாவின் மனதில் ஒரு புதிய உற்சாகம் மேலிட்டது. குழந்தை போல் பழைய மீனாவாயானாள். 

இரண்டு வாரங்கள் ஓடி மறைந்தன. 

எல்லாரும் மாப்பிள்ளை வீட்டாரின் பதிலுக்காக ஆவலுடன்  காத்திருந்தார்கள்; பதிலும் வந்தது. “மீனா! அண்ணே இப்போதான் போன் பண்ணுச்சு மாப்பிள்ளைக்கு உன்னைய புடிச்சிருக்கா அண்ணா அண்ணிக்கும் சம்மதமா. ஆனா…” 

“ஆனா என்னமா? என்ன சொன்னாரு?” என்று அவளின் குரலில் ஒரு பதற்றம் இருந்தது.  

“ம்ம்ம்… இல்ல மாப்பிள்ளைக்கு சில கண்டிஷன்ஸ் இருக்காம். நீ இந்த உளு கெலாங் காட்ல இருக்கக் கூடாதாம் திருமண ஆகுறவரை  ரவாங்கில் அண்ணன் வீட்ல தான் தங்கணுமாம். அங்கு போன பிறகு யாரு கேட்டாலும் factory-ல வேலை செஞ்சுதா  சொல்லனுமாம், பால்மரம் வெட்டின, பங்கு துடைத்தேன்னு சொல்லக் கூடாதாம் ஏனா அவரோட அந்தஸ்துக்கு கேவலொன்னு அண்ணன் கிட்ட சொல்லி இருக்காரு. அதனால இதெல்லாம் ஏத்துக்கிட்டு உன்னை மாத்திக்கோ மீனா. எங்கள பத்தி ஒன்னும் யோசிக்காத மா. நீ வாழனும். அதான் முக்கியம். பையன் நல்லவனா தெரியுறான். நீ நல்லபடி வாழணுமா” மீனாவின் தாய் கண்ணீர் சொரிந்தாள். 

“ஏம்மா! இத்தனை நாளா இந்த உளு கிளாங் காடுதானே நம்மைக் காப்பாத்தினிச்சு. இந்த ரப்பர் பால வித்துதானே நாம எல்லாம் சாப்பிட்டோம். இதை எல்லாம் மறக்கச் சொல்றியாம்மா?” மீனாவின் தாய் கண்ணீர் உகுத்துக் கொண்டு மெளனமாய் நின்றார். 

“இந்த உளு கிளாங் காட்டை ரசிக்கத் தெரியாதவருக்கு நான் கழுத்த நீட்ட தயாரா இல்லம்மா. இந்தப் பால்மரத்துக்கு வாயில்ல. ஆனா அதான் நம்பள காப்பாத்தினிச்சு. இந்த வாய் பேசாத மரம், செடி, கொடி, நாய் இதுங்களோடேயே நான் இருந்திடுறேம்மா. வஞ்சனைய மனசுல வச்சிருக்கிற வாய் பேசுற மனுசனுங்க உறவே வேண்டாம்மா!” உங்களுடைய இஷ்டத்துக்கலாம்  ஏத்துக்கிட்ட என்னால வாழ முடியாதும்மா” எனக் கூறிவிட்டு  அவள் அறையை நோக்கி நடந்தாள். 

ஜூலி வழக்கத்துக்கு மாறாக சத்தமா குறைத்து. “அமைதியா இரு ஜூலி…” என சொல்லிக்கொண்டே  அம்மா வெளியே சென்றார்.  

தம்பி! நீங்களா? நீங்க எப்படி உயிரோட இங்க?…  

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *