அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2
சென்னை சேத்துபட்டு கூவம் நதிகரையில் இருந்தது அந்த குடிசைப் பகுதி.வா¢சையாக இருந்த குடிசைகளில் பகல் நேரங்களில் ஒரு மயான அமைதி நிலவும்.சில நேரங்களில் கூச்சலும் சண்டையுமாய் இருக்கும்.சில நேரங்களில் குடித்து விட்டு வரும் தினக் கூலி ஆட்களின் முரட்டுப் பேச்சும்,மற்றவர்கள் கெட்ட,கெட்ட,வார்த்தைகளால் திட்டி வருவது கேட்டுக் கொண்டு இருக்கும். ஆனால் எல்லா நாட்களிலும்அந்த குடிசைப் பகுதியின் சின்ன பெண்கள் பாண்டி ஆடி வருவதும், நொண்டி ஆட்டம் ஆடி வருவதும்,கண்ணா மூச்சி விளை யாடி வருவதும் மட்டும் இருந்து கொண்டு இருக்கும்.அந்த குடிசைப் பகுதியில் பிறந்த சின்னப் பெண்களுக்கு வேறு என்ன பொழுது போக்கு இருக்க முடியும் சொல்லுங்க!!
சில வயாதான கிழவிகள் பல்லாங்குழல் ஆடுவார்கள்,சில வயதான கிழவர்கள் ஆடு புலி ஆட்டம் ஆடி வருவார்கள்.மணி மூனடித்ததும் உள்ளே வெய்யிலுக்காக ஓய்வு எடுத்துக் கொண்டு இருக் கும் வயதானவர்கள் வாசலில் வந்து உட்கார்ந்துக் கொண்டு ஒரு பழைய சைக்கிளில் மணியை அடித்துக் கொண்டு வரும் ஒர் பாயின் வரவுக்காகக் காத்து இருப்பார்கள்.தெருக் கோடியில் இருந்து சைக்கிள் மணியை அடித்துக் கொண்டே யார் யார் வாசலில் தனக்காகக் காத்துக் கொண்டு இருக்கா ங்களோ,அவங்க கிட்டே மூனு ரூபாயை வாங்கி தன் சைக்கிளில் தொங்கிக் கொண்டு ஒரு துணிப் பையில் போட்டு கொண்டு,இன்னொரு பையில் அவர் அடுக்கி வைத்து இருக்கும் ’ப்லாஸ்டிக் கப்’ ஒன்றை எடுத்து, சைக்கிள் பின் சீட்டில் இருக்கும் ஒரு பொ¢ய எவர்சில்வர் கேனில் இருந்து ‘டீயை’ப் பிடிச்சிக் கொடுப்பார்.ஆனால் அவர் வாயில் புகைந்துக் கொண்டு இருக்கும் பீடியை எடுக்காமலே அவர் கேட்ட கேள்விகளுக்கு வாயை மென்ற வாறே பதில் சொல்லுவார் அந்த ‘டீ’ கொடுக்கும் பாய். அது அந்த டீக்கார பாயின் ஸ்டைல்!!
பாயிடம் மூனு ரூபாயைக் கொடுத்து விட்டு அவர் ‘ப்லாஸ்டிக் கப்பில்’ கொடுக்கும் ‘டீயை’ மெல்ல உறிஞ்சிக் குடிச்சு அந்த ‘டீயை’ ரசிப்பார்கள் அந்த குடிசை வாழ் கிழங்கள்.குடித்து முடிந்ததும் அந்த ‘ப்லாஸ்டிக் கப்பை’ தூர எறிந்து விட்டு ரத்தினம் வாசலில் காய்ந்துக் கொண்டு இருக்கும் மிளகாயை கிளறி விட்டு விட்டு, ஒரு வேலையும் செய்யாத அவள் கணவனை ”ஏன்யா, நீ ஒரு கால ணா கூட சம்பாதிக் காம சும்மா குந்திக் கிட்டு இருக்கே.உனக்கு மூனு ருபாய்க்கு நீ குடிக்கிற ‘டீயே’ தண்டம்.எதுக்கய்யா அந்த பீடியை வெறுமனே குடிச்சிக் கிட்டு இருக்கே.’பீடியே’ குடிக்காம இருந்து அந்த பீடிக்கு செலவு பண்ற பணத்தையாவது மீதம் பண்றது தானேய்யா”என்று கத்தினாள் ரத்தனம்.
“போடி,போக்கத்தவளே,கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு சொல்வாங்க.அதே போல இந்த பீடிப் பிடிக்கிறதிலே இருக்கிற சுகம் உனக்குத் தெரியாதுடீ.இதெ இழுக்க இழுக்கத்தான்டீ சொர் க்கம் தெரியுது.உன் வேலையே பார்த்து கிட்டு போவியா.நீ கூட இந்த பாய் குடுக்கிற ‘டீயை’க் நீ குடிக்காமஇருந்து,என் பிள்ளைக்கு மூனு ரூபாயை மீதம் பண்றது தானே.என்னமோ பெரிசா சொல்ல வந்துட்டா,பொ¢ய இவளாட்டும்”என்று சொல்லி விட்டு பீடியை வாயில் இருந்து எடுத்து விட்டு, ஆகா யத்தை பார்த்துக் கொண்டு புகையை ‘ஸ்டைலாக’ விட்டு கொண்டு இருந்தான் காளி.கணவன் கூட பேசி ஒரு பிரயோஜனமும் இல்லே.இவர் திருந்தவே மாட்டார் என்று நினைச்சி ரத்தினம் மிளகாயை கிளறி விட்டு விட்டு அவளுக்கு தெரிஞ்ச ஒரு அம்மாவோடு வம்பு பேசப் போனாள்.மூனாவது குடிசை அம்மா அப்போ தான் ஒரு சைக்கிள் ரிக்ஷ¡வில் ரெண்டு பை நிறைய மீன்கள் வாங்கிக் கொண்டு வந்து,அந்த சைக்கில் ரிக்ஷ¡வில் இருந்து இறங்கி சைக்கிள் ரிக்ஷ¡காரனுக்குப் பணத்தைக் கொடுத்து விட்டு,தன் இடுப்பில் இருந்த சுருக்குப் பையைத் திறந்து தன் குடிசை சாவியை எடுத்து குடிசையைத் திறந்துக் கொண்டு உள்ளே போனாள்.உள்ளே போய் அந்த அம்மா தன் முகத்தை கழுவிக் கொண்டு வந்து தன் முகத்திற்கு கொஞ்சம் பவுடர் போட்டுக் கொண்டு வாசலுக்கு வந்து ஒரு ‘பிலாஸ்டிக் காகிதத்தை விரித்து வைத்து அதில் தான் வங்கி வந்த மீன்களை எல்லாம் வகை வகையாய் பிரித்து வைத்தாள்.மறுபடியும் உள்ளே போய் மீனை வெட்டும் கத்திகள்,ரெண்டு பலகை எடை போடும் தராசு எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள் கோடி வீட்டு குடிசை அம்மா ராத்திரிக்கு சுட இட்லிப் பானை,தோசை கல், மசால் வடை,பஜ்ஜி எல்லாம் போட கடாய், எண்ணை,திரி ‘ஸ்டவ்’,இட்லி மாவு, பஜ்ஜி போட காய்ங்க,வெங்காயம்,நறுக்க கத்தி எல்லாம் கொ ண்டு வந்து வைத்து கொண்டு தன் கடையை ஆரம்பிக்க தயாரானாள்.தன் மணைவி சொன்னது பொறுக்காம,அடுத்த நாளே காளி தான் போய் வந்துக் கொண்டு இருந்த சித்தாள் வேலைக்குப் மறு படியும் போய் வந்துக் கொண்டு இருந்தான்.
காளிக்கும்,ரத்தினத்துக்கும் ஒரே பிள்ளையாய் பிறந்தவன் ராஜ்.அவர்கள் உறவிலே அவர்க ளுக்கு ரொம்ப தெரிஞ்ச பொண்ணு தேவியை ராஜ்ஜுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தார்கள்.தேவி பார்க்க ரொம்ப அழகாக இருந்தாள்.ராஜ், ஒரு கட்டிட ‘கன்ட்ராக்டா¢டம்’ தச்சனாக வேலை செஞ்சி வந் தான்.அவன் எழும்பூரில் ஒரு சின்ன வீட்டில் தன் மணைவியுடன் வசித்து வந்தான்.
பல முறை தேவி கேட்டும் ராஜ் தேவியை எந்த வேலைக்கும் போய் வரக் கூடாது என்று மறுத்து வந்தான்.“வேணாம் புள்ளே.நீ வேலைக்கு எல்லாம் போவ வேணாம்.நீ பாக்க கொஞ்சம் அழகா இருக்கே.நீ எங்கேயாச்சும் ஒரு வேலைக்கு போவே.அங்கே இருக்கிற எவனாச்சும் உன்னே ‘சின்ன வீடா’ ‘செட் அப்’ பண்ணிக்கிடுவான்.அப்புறம் நான் அந்த ஆளோட சண்டைக்குப் போவ ணும்.வேணவே வேணாம் இந்த வம்பு எல்லாம்.நீ பேசாம வூட்டிலேயே இருந்து சோறு ஆக்கி அம்மா வுக்கும்,அப்பாவுக்கும் சாப்பாடு போட்டு விட்டு,நீயும் சாப்பிட்டு வா.நான் ஒருத்தன் சமபாதிச்சு வரது போதும்.எனக்கு வர சம்பளம் நம்ம நாலு பேருக்கு தாராளமாக போதும்.நீ வேறே சித்தாள் வேலை க்குப் போய் சம்பாதிக்க வேணாம்”என்று ஏதோ ஒரு இல்லாத ஒரு காரணத்தை சொல்லி தேவியை வேலைக்குப் போகாமல் தடுத்து வந்தான்.தேவிக்கு‘ நாம மேலே படிக்க நினைச்சோம்.ஆனா நம்ம அம்மா அதை தடுத்து இந்த படிப்பு வாசனையே குடும்பத்திலே நம்மை கல்லாணம் பண்ணி வச்சு நம்ம ஆசைகளை எல்லாம் நெருப்பிலெ போட்டு பொசுக்கி விட்டாங்க.நாமும் நம் புருஷன் கூட கட் டிட வேலைக்குப் போய் ஒரு நாலு காசு சம்பாதிக்கலாம்னு ஆசைப் பட்டா இந்த மனுஷன் ஏதோ ‘இல்லாத’ ‘பொல்லாத’ காரணத்தை சொல்லி நம்ம ஒரு சமையல் காரி ஆக்கி வூட்டிலே இருந்து வரச் சொல்றாரே’என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டாள்.ராஜ்ஜையும் அவன் குடும்பத்தையும் அவ்வ ளாவக பிடிக்கவில்லை தேவிக்கு.தவிர ராஜ்ஜின் அப்பாவும் அம்மாவும் பார்க்க ரொம்ப சுமாராகத் தான் இருந்தார்கள்.ராஜ்ஜின் அப்பா காளியும் ராஜ் வேலை செஞ்சு வந்த ‘கன்ட்ராகா¢டம்’ ஒரு கொத் தனாராகத் தான் வேலை பண்ணி வந்தார்.ரத்தினம் வெறுமனெ வீட்டில் வேலை செஞ்சு வந்தாள். ரெண்டு பேருக்கும் படிப்பு வாசனையே இல்லை.தேவி அடிக்கடி தன்னை நொந்து கொண்டாள்.’நாம் என்ன பண்ணுவது.அப்பா அம்மா இருந்து வர கஷ்ட நிலைமையிலே இவரைத் தவிர இன்னும் நல்ல இடத்தைப் பார்த்து எனக்குக் கல்யாணம் கடி கொடுக்க அவங்ககளால் முடியாம இருந்திச்சே.அது என் தலை எழுத்து.இதை மாத்த யாரால் முடியும்.இந்த ஜென்மத்திலே எனக்கு ‘இவன் தான்’,’இந்த குடும்பம்தான்’ னு என் தலையில் அந்த பிள்ளையாரு எழுதி வச்சி இருக்காரே.நாம என்ன பண்ண முடியும்’ என்று நினைத்து தன் மனசை சமாதானப் படுத்தி கொண்டு அந்த சின்ன வீட்டில் ராஜ்ஜு டன் குடித்தனம் பண்ணி வந்தாள் தேவி.
ஒரு வருஷம் தான் ஆகி இருக்கும்.தேவிக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்தது.விஷயம் கேள் விப் பட்டதும் தேவியின் அம்மா சரஸ்வதியும்,அப்பா சரவணனும்,தம்பி முத்துவும் தேவியின் வீட்டி ற்கு குழந்தையை பார்க்க வந்தார்கள்.ராஜ்ஜும்,ரத்தினமும்,காளியும் அவர்களை வரவேற்று கா·பி பலகாரம் எல்லாம் கொடுத்தார்கள்.சரஸ்வதியும்,சரவணனும் குழந்தைப் பார்த்து “குழந்தை ரொம்ப நல்லா இருக்குங்க.என்ன பேர் வக்கப் போறீங்க” என்று கேட்டதும் தேவியும் ராஜ்ஜும் “நாங்க குழந்¨ தக்கு கமலான்னு வக்கப் போறோமுங்க”என்று கோரஸாகச் சொன்னார்கள்.உடனே சரவணனும் சரஸ்வதியும் “ரொம்ப நல்ல பேருங்க.அதையே வையுங்க” என்று சொல்லி விட்டு குழந்தை கையிலே ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு குழந்தையை வாழ்த்தி விட்டுப் போனார்கள். பதினோறாது நாள் அந்தக் குழந்தைக்கு ‘கமலா’ என்று பேர் வைத்து ராஜ்ஜும் தேவியும் வைத் தார்கள்.அந்த பேர் வைக்கும் விழாவுக்கும் மறுபடியும் தேவியின் அம்மாவும்,அப்பாவும், முத்து வும்,தேவியின் வீட்டிற்கு வந்து குழந்தையை வாழ்த்தி விட்டு,குழந்தை கையிலெ ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு, கா·பி பலகாரம் எல்லாம் சாப்பிட்டு விட்டுப் போனார்கள்.கமலா பொற ந்த ஐஞ்சாவது மாசத்திலேயே ராஜ்ஜுக்கு அந்த ‘கன்ட்ராகடர்’ ஆறு நாளும் கொடுத்து வந்த வேலை யை வாரத்துக்கு மூனு நாளாகக் குறைச்சுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.அந்த ‘கன்ட்ராக்டர்’ கட்டி வந்த ‘·ப்லாட்டுகள்’ எல்லாம் விலை போகாமல் மிகவும் தேக்கமாக இருந்தது வந்தது.‘·ப்லாட்’ வாங்க ‘அட்வான்ஸ்’ கொடுத்தவங்க எல்லாம் அடுத்த ‘பேமண்ட்டை’ கொடுக்காமல் ‘டயம்’ கேட்டு வந்தார் கள்..‘கன்ட்ராகடர்’ என்ன பண்ணுவார்.அவர் தன்னிடம் வேலை செஞ்சு வந்த ஆட்களை தினமும் வேலை செஞ்சு வராம ரெண்டு நாள்,மூனு நாளாக குறைச்சு வந்தார்.இதனால் ராஜ்ஜுக்கு அவன் குடித்தனம் பண்ணி வந்த சின்ன வீட்டுக்கு வாடகையே கொடுக்க முடியவில்லை.உடனே ராஜ் அந்த வீட்டைக் காலி பண்ணி விட்டு,அப்பா அம்மா இருந்து வந்த சேத்துப் பட்டு குடிசைக்கு தன் மணவி குழந்தையுடன் குடி வந்தான்.’இப்படி ஒரு குடிசையில் வாழ்ந்து வரும் நிலைமைக்கு நாம் வந்து விட் டோமே’ என்று நினைத்து மிகவும் மனம் உடைந்து போனாள் தேவி.‘நல்ல புருஷன்,நல்ல வீடு என்று வாழ்ந்து வர நினைச்ச நம்மை இப்படி ஒரு குடிசைக்கு அழைச்சுக் கிட்டு வந்து விட்டானே நம்ம புருஷன்’ என்று நினைத்து மிகவும் வேதனைப் பட்டாள் தேவி.அந்த சோ¢ வாழ்க்கையை நினைத்து பல நாள் மனதில் அழுதுக் கொண்டு வந்தாள் தேவி.
விஷயம் கேள்விப் பட்ட தேவியின் அப்பா சரவணன் மிகவும் வருத்தப் பட்டார்.தன் வேலையை நல்லா செஞ்சு வந்து ஒரு சுமாரான இடத்தில் வாழ்ந்து வராமே,தன் மகள் தேவியை இப்படி ஒரு குடி சைப் பகுதிக்கு அழைச்சுக் கிட்டு வந்து விட்டாரே இந்த மருமகன்.தேவி ரொம்ப ஆசைப் பட்டப்ப அவளை மேலே படிக்க விடாம பிடிவாதமா அவளுக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சி வச்சுட்டாளே இந்த சரஸ¤.நான் தேவியை மேலே படிக்க வைக்காம்ன்னு ஆசைப் பட்டதுக்கு அவ ‘தேவி பொட்டை ப் புள்ளே தானே மேல் படிப்பு எதுக்குன்னு’ சொல்லி நம் வாயை அடைச்சு விட்டா.நாம் சொன்னதே அவ கேக்கலையே.இப்ப பாவம் நம்ப தேவி அந்த குடிசையிலே இருந்து கஷ்டப்பட்டு வறாளே’ என்று தூக்கம் இல்லாமல் தவித்தார் சரவணன்.ஒரு நாள் வருத்தம் தாங்காமல் சரவணன் தன் மணைவி சரஸ்வதியைப் பார்த்து ”பார் சரஸ¤,நம்ப தேவி இப்போ அந்த குடிசையிலே இருந்துக் கிட்டு கஷ்டப் பட்டு கிட்டு வறா.நான் உன் கிட்டே அவ மேலே படிக்கட்டும்ன்னு சொன்னப்போ, நீ அதை கேக்காம ‘தேவி பொட்டைப் புள்ளே தானே மேல் படிப்பு எதுக்குன்னு’ சொல்லி என் வாயை அடைச்சுட்டே. போறாததுக்கு உன் உறவிலே இருந்த ஒரு பையனுக்கு அவளை கல்யாணம் கட்டி வேறே வச்சே. இப்ப அவ கஷ்டப் பட்டு வருவதைப் பாத்தா என் மனசு ரொம்ப வேதனைப் படுது.உனக்கு நம்ப தேவி படற கஷ்டம் வருத்தத்தை தரலையா” என்று கண்களில் கண்ணீர் மல்க கேட்டார்.உடனே சரஸ்வதி “இதோ பாருங்க.ஒவ்வொரு பொண்ணுக்கும் அவ புருஷன் வீடு அமைவது எல்லாம் அவ வாங்கி வந்த வரம்ங்க.அவ தலை எழுத்து அப்படி இருக்குங்க.அதை நம்மால் மாத்த முடியாதுங்க. அவ கஷ்டப் பட்டு வறான்னு சொல்லி நீங்க வருத்தப்படுவது சா¢யே இல்லிங்க.எழுந்து உங்க வேலை யே கவனிங்க.நாளைக்கு நம்ப மருமக நல்லா சம்பாதிச்சு ஒரு பொ¢ய வீட்டுக்குப் போய் வாழ்ந்து வரலாமேங்க.நம்பிக்கையோடு இருந்து வாங்க”என்று துளிக் கூட வருத்தப் படாமல் சொன்னாள்.
‘இந்த மனுஷனை கல்யாணம் கட்டிக் கிட்டு இந்த சோ¢ வாழ்க்கைக்கு வந்து விட்டோம்.இனி மேலாவது நாம் புத்தியோடு பிழைச்சு வரணும்.இனிமே குழந்தை எதுவும் நாம பெத்துக்காம,இந்த ஒரு குழந்தையோடு நிறுத்தி கிட்டு,புருஷனுக்கு வரும் சம்பளத்திலே இந்த பெண் குழந்தையை நல்லா படிக்க வச்சி,ரெண்டு வேளையாவது நல்ல சாப்பாடு போட்டு வரணும்’ என்று முடிவு பன்ணினாள் தேவி.ராஜ் சொன்னா மாதிரியே தேவி அவங்க வீட்டிலே ஒரு சமையல் காரியாக இருந்து வந்து தன் ஆசைகளை எல்லாம் பொசுக்கிக் கொண்டு வாழ்ந்து வந்தாள்.கமலாவுக்கு ஐஞ்சு வயசு ஆனதும் அவளை பக்கத்திலேயே இருந்த கார்பபரேஷன் பள்ளிக் கூடத்திலே சேர்க்க வேண்டும் என்று பிடிவா தம் பிடித்து வந்தாள் தேவி.படிப்பு வாசனையே இல்லாதா ராஜ் யாராவது புஸ்தகங்க¨ளைப் பிரிச்சு வச்சு படிச்சுக் கிட்டு இருந்தாங்கன்னா அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது.“இவ படிச்சு என்ன பொ¢ய கலெக்டரா ஆவப் போறாளா என்ன.இவ படிப்புக்கு ஆவுற செலவு இருந்தா அரை கிலோ கறி வாங்கி நாம சந்தோஷமா சாப்பிடலாம்.இவ ஒன்னும் படிக்க போக வேணாம்.பேசாம வூட்டிலேயே இருக்க ட்டும்.பொட்டை புள்ளேக்கு என்ன படிப்பு வேண்டி கிடக்கு தேவி” என்று கத்தினான் ராஜ்.
ராஜ்க்கு தன் பெண் கமலாவை பள்ளிக் கூடம் சேர்க்கவே ஆசைப் படவில்லை.அவன் பிடிவா தமாக இருந்து வந்தான்.தேவிக்கு இது பிடிக்கவே இல்லை.உடனே தேவி ”ஏன்யா பொட்டை பிள்ளை பள்ளிக்கூடம் போய் படிக்கறது உனக்குப் பிடிக்கலையா.இந்த காலத்திலெ எல்லா பையங்களும், பொண்களும் பள்ளிக்கூடம் போய் படிச்சிட்டு தான் வராங்கய்யா.கமலாவையும் நீ பள்ளிக்கூடம் அனுப்புயா.அவ பள்ளிக்கூடம் போய் வரட்டும்”என்று சண்டைப் போட்டு வந்தாள்.“நீ சும்மா இரு தேவி.உனக்கு ஒன்னும் தெரியாது.அவ பள்ளிக் கூடம் போனா நமக்கு செலவு அதிகம் ஆகும்.அவ பேசாம வூட்டிலேயே இருந்து வரட்டும்.அவ வயசுக்கு வந்தவுடன் எவன் கையிலேயாவது பிடிச்சுக் குடுத்துடலாம்.அது வரை அவ வூட்டிலேயே இருந்து வரட்டும் புள்ளே” என்று சொல்லி விட்டு வெளி யே போய் விட்டான் ராஜ்.என்ன செய்வது என்றும் புரியாமல் தவித்தாள் தேவி.’எப்படியாவது கமலா வை படிக்க வச்சே தீரணும்’ என்று முடிவு பண்ணினாள்.’இந்த ஆளு கமலாவை படிக்க வச்சா செலவு அதிகம் ஆகும்ன்னு தானே சொல்றான்.பேசாம நாம் வேலைக்குப் போய் வந்து அந்த செலவை சமா ளிக்கலாம்.இந்த ஆளு கிட்டே பணமே கேக்க வேணாம்’ என்று நினைத்தாள் தேவி.ஒரு வேலைக்குப் போக தீர்மானம் பண்ணினாள்.அன்று இரவு பூராவும் யோஜனைப் பண்ணீனாள் தேவி.‘எந்த வேலை க்குப் போனா நமக்கும் கைக்கு கொஞ்சம் பணம் வரும்’ என்று யோஜனைப் பண்ணினாள்.ஒரு முடிவுக்கு வந்தாள் தேவி.அடுத்த நாள் காத்தாலேயே ராஜ்ஜுடன் வேலைக்குக் கிளம்பினாள் தேவி. தேவி தன்னுடன் வேலைக்குக் கிளம்பின தேவியை பார்த்து “எங்கே,இம்மாம் காலையிலே கிளம்பி இருக்கே புள்ளே” என்று கத்தினான் ராஜ்.“நானும் நீ வேலை செஞ்சு வரும் மேஸ்திரிக் கிட்டே கேட்டு ஒரு சித்தாளா வேலைக்கு சேரப் போறேன்.அப்படி நீ வேலை செய்யர இடத்திலேயே நான் ஒரு சித்தா ளா வேலைக்கு சேந்தா,உனக்கு என்னைப் பத்தி எந்த வித சந்தேகமும் வராது,எனக்கும் சம்பளம் வரும்.அந்த சம்பள பணத்திலே நான் கமலாவைப் படிக்க வக்கிறேன்.நீ உன் சம்பள பணத்திலே கால ணா கூட நீ அவ படிப்புக்குன்னு செலவு பண்ண வேணாய்யா.போதுமா.இப்போ நீ நிம்மதியா வேலை க்குப் போய் வா” என்று சொன்ன தும் ராஜ்ஜுக்கு இன்னும் கோவம் அதிகம் ஆயிற்று.அவன் கையை தேவி மேலே ஓங்க வந்தான்.அவன் கையைப் பிடித்துக் கொண்டாள் தேவி.
“இதோ பார் கையே ஓங்கற வேலை எல்லாம் என் கிட்டே வேணாம்.நான் சித்தாள் வேலைக்கு நிச்சியமா போகத் தான் போறேன்யா.எனக்கு கமலா படிச்சே ஆகணும்” என்று எதிர் கத்தல் போட்டாள் தேவி.“நான் சொல்றதை நல்லா கேளு தேவி.இந்த மேஸ்திரி பயலுங்க எல்லாம் ரொம்ப பொல்லாத வங்க.நீ வேறே வாளிப்பா இருக்கே.சித்தாளு வேலைக்கு எல்லாம் போவாதே.நான் சொல்றதை கொ ஞ்சம் கேளுடி”என்று இன்னும் ஓங்கிய குரலில் கத்தினாள்.இவர்கள் சண்டை போடுவதை கேட்டு ஓடி வந்த ராஜ்ஜின் அப்பாவும் அம்மாவும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தார்கள்.ஆனால் ”நான் வேலைக்குப் போவத் தான் போறேன்.எனக்கு என் கமலா படிக்கணும். அது தான் என் ஆசை” என்று சொல்லி விட்டு வேலைகுக் கிளம்பிபாள் தேவி.
தேவி ராஜ் வேலை செஞ்சு வந்த கட்டிட மேஸ்திரியைப் பார்த்து அவனை கெஞ்சி ஒரு சித்தாள் வேலையை வாங்கிக் கொண்டாள்.முதல் வார சம்பளம் தன் கைக்கு வந்ததும் தேவி முதல் வேலையாக தன் பெண் கமலாவை பக்கத்தில் இருக்கும் கார்பரேஷன் பள்ளிக் கூடத்தில் ஒண்ணாம் ‘க்லாஸில்’ சேர்த்தாள்.அன்றில் இருந்து ராஜ்ஜுக்கும் தேவிக்கும் அடிக்கடி சண்டை வந்துக் கொண்டு இருந்தது. அவள் வேலை செய்து வரும் மேஸ்திரிக்கும் அவளுக்கும் ‘கள்ள தொடர்பு இருக்குதுன்னு’ தினமும் சொல்லி தேவியை கண்டபடி எல்லாம் திட்டி வந்தான் காளி.தேவி கவலைப் படவே இல்லை.‘புருஷன் என்ன வேண்டுமானால் சொல்லி கிட்டு போவட்டும்,நாம பாட்டுக்கு ஒரு சித்தாள் வேலைக்குப் போய் வந்து கையில் கொஞ்சம் காசு சம்பாதிச்சு வந்து கமலாவை படிக்க வைக்க வேணும்ன்னு என்பதில் தீர்மானமாக இருந்தாள் தேவி.தினம் ராஜ்ஜுக்கும் தேவிக்கும் வரும் சண்டையை விலக்கி வருவதற் கே நேரம் போத வில்லை காளிக்கும் ரத்தினத்துக்கும்.காளி மருகம பக்கமும்,ரத்தினம் பிள்ளைப் பக்க மும் கட்சி சேர்ந்துக் கொண்டு வாதாடி வந்தார்கள்.ஆனால் தேவி கவலைப் படாமல் அவள் வேலை யை கவனித்துக் கொண்டு இருந்தாள்.
ராஜ் பல முறை கெஞ்சிக் கேட்டும் தேவி ‘இன்னொரு குழந்தையைப் பெத்துக்க மாட்டேன். இந்த ஒரு பெண் குழந்தையே போதும்’ என்று பிடிவாதம் பிடித்து வந்தாள்.தேவி பிடிவாதம் பிடிச்சு வருவது சா¢ இல்லை,ராஜ் சொல்றா மாதிரி கேட்டு இன்னொரு குழந்தையைப் பெத்துக்கணும்’ என்று மாமனாரும் மாமியாரும் தேவிக்கு பல தடவை என்று சொல்லி வந்தார்கள்.ஆனால் தேவி கேட்காமல் அவள் பிடிச்ச பிடிவாதத்திலே இருந்து வந்தாள்.வெக்கத்தை விட்டு ராஜ்ஜும் பல தடவை தேவியை ‘இதை’ கேட்டு வந்தான்.தேவி அவனுக்கு இடமே கொடுக்காமல் இருந்து வந்தாள்.இதனால் வெறுப் பும் கோபமும் அதிகம் ஆகி வரவே,வேறு வழி இல்லாமல் ராஜ் குடிக்கு அடிமை ஆகி வந்தான். காளிக்கும் ரத்தினத்துக்கும் இதனால் தேவி பேர்லே ரொம்ப கோவமாக இருந்தார்கள்.தேவியைப் பார்த்து “உன்னால் தான் எங்க பிள்ளை ராஜ் இப்படி ஒரு குடிகாரனா மாறிட்டான். நீ அவனை கல்லா ணம் கட்டி கிட்ட சம்சாரம் தானே அவன் என்ன ஒரு ‘சன்னியாசியா’ என்ன. உனக்கு புத்தி வேணா மா புள்ளே.நீ சொல்றது போல அவன் எப்படி இருந்து வர முடியும்.அவன் இன்னும் இள வயசு பிள்ளை தானே.உனக்கு இவ்வளவு பிடிவாதம் கூடவே கூடாது.அவனோடு குடுத்தனம் பண்ணி வா.சீக்கிரமா இன்னொரு குழந்தையை பெத்துக்க”என்று சண்டை போட்டு வாதாடி வந்தார்கள் காளியும் ரத்தினமும்.தேவியும் ‘அவங்க என்ன வேணுமானால் சொல்லி கிட்டு இருக்கட்டும்’ என்று நினைத்து அவள் யார் கூடவும் பேசாமல் அவள் வேலையை கவனித்து வந்துக் கொண்டு இருந்தாள். “தேவி நாம் சொன்னதைக் கேக்காம வீணா பிடிவாதம் பிடிச்சு வறா.நீங்க பேசாம அவங்க அம்மா, அப்பா, கிட்டே இதை சொல்லிட்டு அவங்களே வந்து அவங்க பொண்ணுக்கு நல்ல புத்திமதி சொல்லி விட்டுப் போக சொல்லுங்க.எனக்கு வேறே வழி ஒன்னும் தெரியலே” என்று கத்தி விட்டு வேலைக்கு போனான் ராஜ்.உடனே ரத்தினம்”ஆமாய்யா, ராஜ் சொல்றது தான் சா¢.நீ உடனே அவங்க வூட்டு க்குப் போய் தேவி அம்மா, அப்பா, கிட்டே தேவி பிடிச்சு வர பிடிவாதத்தை சொல்லி அவங்களை இங்கே வந்து அவங்க பொண்ணுக்கு நல்ல புத்தி சொல்லி விட்டு போக சொல்லுயா.எழுந்திரியா. அவங்க வூட்டுக்கு போய் வாய்யா’ என்று சொல்லி காளியின் கைகளை பிடித்து இழுத்து சொன்னாள். வேறு வழி இல்லாமல் காளி தன் தோள் மேலே ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு “சா¢ நான் போ யாறேன்.அவங்க வூட்டுக்குப் போய் தேவி பிடிச்சு வர பிடிவாதத்தை சொல்லி அவங்க ரெண்டு பேர்லே யாராச்சும் ஒருத்தரையாவது நம்ப வூட்டுக்கு வந்து தேவிக்கு புத்திமதி சொல்ல சொல்றேன்” என்று சொல்லி விட்டு தேவியின் அம்மா அப்பா வீட்டுக்குக் கிளம்பினான் காளி.காளி சரவணன் வீட்டுக்கு வந்து அவர்கள் குடும்ப சண்டையை சொல்லி விட்டு போனான்.உடனே சரவணன் ”சரஸு, இது பொமபளேங்க சமாசாரம்.நீ நாளைக்கு அவங்க வீட்டுக்குப் போய் தேவி கிட்டே மெல்ல சொல்லி வா”என்று வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னார்.
அன்று ஞாயிற்றுக் கிழமை.சரஸ்வதி தன் கணவனை கடைக்கு அனுப்பி விட்டு,முத்துவுக்கு நாஷ்டாவைக் கொடுத்து,அவனை பள்ளிக்கூட பாடங்களை நல்லா படிக்க சொல்லிவிட்டு,தானும் நாஷ்டாவை சாப்பிட்டு விட்டு,தேவி குடிசைக்கு கிளம்பி போனாள்.வாசலியே உட்கார்ந்து கொண்டு இருந்த ரத்தினம் சரஸ்வதி தன் குடிசைக்கு வருவதைப் பார்த்து விட்டு “வாங்க,உள்ளே வாங்க.உங்க பொண்ணுக்கு நல்ல புத்தி சொல்லிட்டு போங்க.வீணா ராங்கி பிடிச்சி அலையறா உங்கப் பொண்னு” என்று கத்தினாள்.தன் மாமியார் கத்துவதைக் கேட்ட தேவி உடனே வாசலுக்கு வந்து தன் அம்மா வந்து இருப்பதைப் பார்த்து ஆச்சா¢யப்பட்டாள்.பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டு அம்மாவைப் பாத்து “வாம்மா.நீங்க மட்டும் தனியாவா வந்து இருக்கீங்க.அப்பா உங்க கூட வரலையாம்மா” என்று கேட்டு விட்டு அம்மாவை அழைத்துக் கொண்டு குடிசைக்கு உள்ளே போனாள் தேவி.உடனே தேவி அம்மாவுக்கு கொஞ்சம் ‘டீ’ போட்டுக் கொடுத்தாள்.காளயும், ரத்தினமும், ராஜ்ஜும் மாறி மாறி “உங்க பொண்ணு தேவி ரொம்பவே அட்டகாசம் பண்றா.பிடிவாதம் பிடிக்கிறா.அவ பிடிவாதத்தை மாத்திக் கிட்டு ஒழுங்கா குடித்தனம் பண்ணீ இன்னொரு குழந்தேயே பெத்துக்கச் சொல்லுங்க” என்று கத்தி கோவமாக சொன்னார்கள்.முதலில் சரஸ்வதிக்கு ‘தன் பெண் தேவி செய்து வருவது சா¢’ என்று பட வில்லை.எதற்கும் அவளை தீர விசாரிப்போம்,அப்புறமா நாம் அவளுக்குப் புத்திமதி சொல்லலாம் என்று அவர்களைப் பார்த்து “நான் தேவி கூட தனியா கொஞ்ச நேரம் பேசி விட்டு அப்புறமா அவ ளுக்கு நான் புத்திமதி சொல்லி விட்டுப் போறேங்க.நீங்க மூனு பேரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்க” என்று ¨தா¢யமாகச் சொன்னாள் சரஸ்வதி.பிறகு சரஸ்வதி தேவியிடம் தனியாக நிதானமாக “என்ன நடந்தது தேவி.அவங்க ஏன் உன் பேர்லே இவ்வளவு கோவமாக இருக்காங்க.எனக்கு நீ நடந்த உண்மையை சொல்லு” என்று கேட்டாள்.தேவி அவள் அம்மா விடம் நடந்த கதை பூராவையும் நிதான மாகச் சொன்னாள்.தேவியின் அம்மாவுக்கு அவ மகள் தேவி செய்து வருவது ஆரமபத்தில் சரி என்று பட்டாலும்,கொஞ்ச நேரம் யோஜனை பண்ணி கொண்டு இருந்தாள்.தேவியுடன் பேசி விட்டு சரஸ் வதி வெறுமனே தன் பொண்ணுக்கு ஒன்னும் சொல்லாம இருந்ததைப் பார்த்த காளியும்,ரத்தி னமும் மறுபடியும் கத்தி பேச ஆரம்பித்தார்கள்.இவர்கள் சண்டை வாசலில் நடந்தது.அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ‘இது தான் சாக்கு’ என்று ஆளுக்கு ஒரு பக்கம் அவர்களுக்குத் தோன்றியதை எல்லாம் சொல்லி வந்தார்கள்.
வேறு வழி ஒன்றும் தெரியாததால் சரஸ்வதி தன் பெண் தேவியைத் தனியாக அழைத்து மெல்ல “தேவி,நீ இப்படி பிடிவாதம் பிடிக்கிறதாலே வீணா உன் புருஷன் உடம்பு குடிச்சி குடிச்சி கெட்டு போ வுது.அவர் இப்படி குடிச்சி,குடிச்சி,படுத்த படுக்கையா ஆயிட்டா,நீ தானேடீ அவருக்கு எல்லாம் செஞ் ஞ்சு ஆவணும்.உன் மாமனார் மாமியார் ரெண்டு பேருக்கும் ரொம்ப வயாசாவுதுடீ.நீ வீணா பிடிவாதம் பிடிக்காதேடீ.அவரோடு ஒத்துப் போ.ஒரு குழந்தையே பெத்துக்கோ.அப்புறமா நீ குழந்தையே பெத் துக்க வேணாம்.நான் உன் நண்மைக்குத் தான் சொல்றேன்.இந்த விஷயம் அக்கம் பக்கத்திலே எல்லாம் இப்போ பரவி இருக்கு.அவங்க எல்லாம் ஆளுக்கு ஒரு பக்கம் அவங்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் பேசி வராங்க.எனக்கு ரொம்ப அவமானா இருக்கு.நான் சொல்றதை கொஞ்சம் கேளு” என்று கெஞ்சினாள்.தேவி அம்மா சொன்னதை நிதானமாக யோஜனைப் பண்ணினாள்.கொஞ்சம் நேரம் கழித்து “சா¢ம்மா, நீ இப்போ வூட்டுக்கு போ.நான் யோஜனை பண்ணி செய்றேன்.நீ கவலைப் படாம இருந்து வா.அப்பாவையும் இதைப் பத்தி கூட கவலைப் படாம இருந்து வரச் சொல்லும்மா” என்று சொன்னாள் தேவி.உடனே சஸ்வதி ”நான் சொன்னதுக்கு தேவி என் கீட்டே ‘சா¢’ ன்னு சொல்லி இரு க்காங்க.அவ நிச்சியமா தன்னை மாத்திக்க வாங்க.நீங்க கவலைப்படாதீங்க.நான் போய் வறேனுங்க” என்று சொல்லி விட்டு ‘விடு’ ‘விடு’ என்று அந்த குடிசைப் பகுதியை விட்டு வேகமாக வெளியே வந்து தன் வீட்டை நோக்கி நடந்தாள்.ரெண்டு மாசம் கழித்து தேவி தன்னுடைய பிடிவாதத்தை மாத்திக் கொண்டு மெல்ல ராஜ்ஜோடு ‘குடித்தனம்’ பண்ணி வந்தாள்.
ரெண்டு வருஷம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தையை பார்த்த அத்தனை ஆஸ்பத்திரி சிப்பந்திகளும் ஒரு வாய் வச்சா மாதிரி “குழந்தை ரொம்ப அழகா,நல்ல கலரா,நல்ல வாளிப்பா இருக்கு. பாக்க ‘பாப்பார பொண்ணு’ மாதிரி இருக்கா” என்று சொல்லி மிகவும் புகழ்ந்தார்கள்.தேவிக்கும் தன் குழந்தையைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாகவும் ஆச்சா¢யமாகவும் இருந்தது.‘எப்படி என் வயித்திலெ இப்படி ஒரு அழகா,நல்ல கலரா,ஒரு குழந்தை பொறந்து இருக்கு. நானும் கருப்பு.அவரும் நல்ல கருப்பு.நம்ம அப்பா அம்மா பக்கமும் சா¢,நம்ம புருஷன் பக்கமும் எல்லா ரும் நல்ல கருப்பு தானே’ என்று நினைத்து யோஜனைப் பண்ணினாள்.அப்போது தான் பிரசவ அறை க்குள்ளே ராஜ்ஜும் காளியும் ரத்தினமும் வந்தார்கள்.அவர்களும் பிறந்து இருக்கும் குழந்தையைப் பார்த்து “குழந்தை ரொம்ப அழகா,கலரா பிறந்து இருக்கே.நம்ம குடும்பத்திலேயும்,உங்க குடும்பத்தி லேயும் யாரும் இவ்வளவு கலரே இல்லையே.குழந்தை பாக்க ஒரு ‘பாப்பார’ பொண்ணு மாதிரி இருக் கே” என்று வாய் விட்டு சொல்லி,குழந்தையை மிகவும் புகழ்ந்தார்கள்.தேவிக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.விஷயம் கேள்விப் பட்ட சரவணனும்,சரஸ்வதியும்,முத்துவும் ஆஸ்பத்திரிக்கு வந்து தேவி க்கு பிறந்து இருந்த குழந்தையை பார்க்க வந்தார்கள்.சரவணனும் சரஸ்வதியும் குழந்தையைப் பார்த்து விட்டு “குழந்தை நல்ல கலரா ரொம்ப அழகா இருக்குங்க” என்று சொல்லி குழந்தையை கொஞ்சி னார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் சரஸ்வதி தேவியைப் பார்த்து ”ஏன் தேவி, இந்த மாதிரி நல்ல கலரா,அழகா ஒரு குழந்தையைப் பெத்துக்கத் தான் நீ இத்தனை வருஷம் ஒரு குழந்தையைப் பெத்து க்காம அடம் பிடிச்சு இருந்து வந்தியா” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். சரஸ்வதி சொன்னதை கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.ஆஸ்பத்திரியில் ரெண்டு நாள் இருந்து விட்டு குழந்தையை எடுத் துக் கொண்டு தன் குடிசைக்கு வந்தாள் தேவி.அந்தத் தெருவில் இருக்கும் வசிக்கும் அத்தனை அம்மாக்களும் உடனே வந்து தேவியின் குழந்தைப் பார்த்தார்கள்.எல்லோரும் ஒரு வாய் வைத்தார் போல் ”குழந்தை ரொம்ப அழகா,நல்ல கலரா இருக்குதே.இந்தக் குழந்தை இந்த சோ¢யிலே பொறக்க வேண்டிய குழந்தையே இல்லே.பாக்க ‘பாப்பார’ வூட்டு குழந்தை போல இருக்கா” என்று சொல்லி விட்டு குழந்தையை தொட்டு விட்டு திருஷ்டி கழித்தார்கள்.குழந்தை முகம் நன்றாக படர்ந்து இருந் ததால் தேவி அந்தக் குழந்தைக்கு ராஜ்ஜும், தேவியும்,செந்தாமரை என்று பேர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள்.பேர் வைக்கும் விழாவுக்கு சரவணனும் சரஸ்வதியும் வந்து இருந்து குழந்தை கையில் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு குழந்தையை வாழ்த்தி விட்டு அவர்கள் கொடுத்த நாஷ்டாவை சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.செந்தாமரை நாளுக்கு நாள் அழகாக ஆகி வந்தாள்.அந்த குடிசையில் இருந்த எல்லா அம்மாக்களும் தினமும் கொஞ்ச நேரம் தேவி குடிசைக்கு வந்து செந்தாமரையை கொஞ்சி விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.செந்தாமரை பொறந்து ஒரு மாசம் ஆன பிறகு தேவி மறுபடியும் சித்தாள் வேலைக்குப் போய் தன் கையில் கொஞ் சம் காசு சேர்த்து வந்தாள்.ஐஞ்சு வருஷங்கள் ஓடி விட்டது.ராஜ்ஜிடம் ‘செந்தாமரையை பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டும்’என்று சொல்லி பிடிவாதம் பிடித்து வந்தாள் தேவி.ஆரம்பத்தில் வேண்டாம் என்று பிடிவாதம் பிடிச்சு வந்த ராஜ்,தேவியின் உபத்திரவம் தாங்காம ஒரு நாள் செந்தாம ரையை படிக்க வைக்க சம்மதித்தான்.உடனே தேவி செந்தாமரையை,கமலா படித்து வந்த, பக்கத்தில் இருந்த கார்பரேஷன் பள்ளிக் கூடத்திலேயே சேர்த்தாள்.
அக்கா தங்கை ரெண்டு பேரும் ஒன்றாக பள்ளிக் கூடம் போய் வந்துக் கொண்டு இருந்தார்கள்.இவர்கள் ரெண்டு பேரையும் பார்ப்பவர்கள் ஒரு வாய் வைத்தார் போல “அமாவாசையும்,பௌர்ணமியும் ஒண்ணா பள்ளி கூடம் போய் வராங்க” என்று கிண்டல் செய்தார்கள்.
ஆறு மாசம் கூட ஆகி இருக்காது.காளி ஒரு நாள் காலையிலே எழுந்தா¢க்கும் போது ராஜ்ஜை கூப்பிட்டு “ராஜ்,எனக்கு ரொம்ப நெஞ்சு வலிக்குதுப்பா.தாங்கிக்கவே முடியலே” என்று கத்தவே உட னே ராஜ் தன் அம்மாவைக் கூட்டி கிட்டு பக்கத்தில் இருந்த ஒரு ஆஸ்பத்திரியில் தன் அப்பாவை சேர்த்தான்.தேவி குழந்தைகளை தயார் பண்ணி, அவர்களை பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி விட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்தாள்.ராஜ் தேவயிடம் “தேவி,எங்களே இங்கே குந்தி இருக்கும் படி சொல்லி விட்டு அப்பாவை உள்ளே இட்டுக் கிட்டு போய் இருக்காங்க இந்த ஆஸ்பத்திரி டாக்டருங்க.அவங்க வெளியில் வந்து சொன்னா தான் நமக்கு அப்பா உடம்பை பத்தி விஷயம் தெரியும்” என்று அழுதுக் கொண்டே சொன்னான்.அங்கு இருந்த பென்ச்சில் உட்கார்ந்துக் கொண்டு அழுதுக் கொண்டு இருந் தாள் ரத்தினம்.தேவி தன் மாமியாரைப் பாத்து “அழாதீங்க அத்தே.மாமா உடம்பு சீக்கிரமா குணம் ஆயிடும்,அழாதீங்க”என்று ஆறுதல் சொல்லி வந்தாள்.மூனு மணி நேரம் கழிச்சு வெளீயே அந்த டாக்டர் “அவர் உடம்பு இன்னும் நல்லா ஆகவில்லைங்க.ஏங்க அவருக்கு புகை பிடிக்கிற பழக்கம் இருக்காங்களா” என்று கேட்டார் டாக்டர்.ராஜ் தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு “ஆமாங்க.அவர் நிறைய பீடீ பிடிப்பாருங்க” என்று அழுது கொண்டே சொன்னான்.”அப்படியா,அவர் தொண்டை குழாய்,நுரை ஈரல், எல் லாம் ரொம்ப புண்ணாகி விட்டு இருக்குங்க.கூடவே அவருக்கு ரொம்ப ரத்த அழுத்தம் வேறே இருக்குங்க.நாங்க அவருக்கு ‘இஞ்செக்ஷன்’ போட்டு மாத்திரைகள் கொடுத்து இருக்கோம் பாக்கலாம்.அவர் இங்கேயே இன்னைக்குப் பூரா இருந்து வரட்டும்.அவரை நீங்க இப்போ வீட்டுக்கு இட்டுக் கிட்டு போக முடியாது.அவர் உடம்பு ரொம்ப மோசமா இருக்குங்க” என்று சொல்லி விட்டு அவர் மறுபடியும் போய் விட்டார்.வருத்த பட்டுக் கொண்டே ரஜ்ஜும், ரத்தின மும்,தேவியும்,வீட்டுக்கு வந்து விட்டார்கள்.
– தொடரும்