சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 16, 2019
பார்வையிட்டோர்: 6,041 
 

அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10

செந்தாமரை உடனே அவர் காலைத் தொட்டு தன் கண்களில் தன் ஒத்திக் கொண்டு ”சார், நீங்க ரெண்டு பேர் மட்டும் என்னை படிக்க வைக்காம இருந்தா நான் எட்டாவதோடு என் படிப்பை நிறுத்தி விட்டு,அந்த சேத்துப் பட்டு குடிசையிலே எவனாவது ஒரு குடிகாரனை கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்ந்து வந்து கொண்டு இருந்து இருப்பேன்.நீங்க ரெண்டு பேர் செய்த இந்த மாபெரும் உடவியை நான் என் வாழ் நாள் பூராவும் மறக்கவே மாட்டேன்.நீங்க ரெண்டு பெரும் தான் என்னை வாழ வைத்த தெய்வங்க” என்று தன் கண்களில் கண்ணீர் மல்க சொல்லி விட்டு அவர்கள் ரெண்டு பேர் கால்களை மறுபடியும் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டாள்.“செந்தாமரை,நீ இவ்வளவு நல்லாப் படிச்சு சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா வந்து இருகே.நானும் பிள்ளையும் உன் னை இந்தப் பள்ளிக் கூடத்திலேயே மேலே படிச்சு வர பண உதவி செஞ்சு படிச்சு வைக்க ரொம்ப ஆசைபடறோம்.உங்க வீட்டிலே உன்னை மேலே பன்னாடாவது வரை படிக்க அனுமதிப்பங்களா.நீ உன் வீட்டிலே உன் அம்மா அப்பாவை கேட்டு கிட்டு வந்து எங்களுக்கு சொல்றயா செந்தாமரை. அவங்க சம்மதிசாங்கன்னா நீ கவலையேபடாம நம்ம பள்ளிக் கூடத்திலேயே பன்னாடவது வரை படிச்சு வா.பன்னாடவதிலும் நீ சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா வரணும்.அது தான் எங்க ஆசை செந்தாமரை.நீ உங்க வீட்டிலே உங்க அம்மா அப்பா கிட்டே கேட்டு கிட்டு வந்து எங்க ளுக்கு சொல்லு”என்று சொன்னதும் செந்தாமரை “சார், நான் நிச்சியமா எங்க வீட்டிலே என் அம்மா அப்பா கிட்டே கேட்டு கிட்டு வந்து உங்க கிட்டே சொல்றேன்.எனக்கும் மேலே படிக்க ரொம்ப ஆசை யா இருக்கு.நீங்க அப்படி என்னை படிக்க சேர்த்தா நான் நிச்சியமா கஷ்டப்பட்டு படிச்சு வந்து பதி னோறாவதிலும்,பன்னாடாவதிலும் சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா வந்து காட்டுவேன் சார்” என்றாள் மிகவும் ‘கான்·பிடண்டாக’ ”ரொம்ப சந்தோஷம் செந்தாமரை,நீ உங்க வீட்டிலே கேட்டு விட்டு வந்து என் கிட்டே சொல்லு.நான் அதுக்கு வேண்டிய ஏறபாடுகளை எல்லாம் செய்யறேன்” என்று சொன்னதும் செந்தாமரை ”நீச்ச்சியமா சார்.நான் எங்க வீட்லே கேட்டுட்டு வந்து உங்க கீட்டே சொல்றேன்”என்று சொல்லி விட்டு ரூமை விட்டு வெளியே வந்தாள்.தயாராகக் காத்துக் கொண்டு இருந்த சுமதி செந்தாமரையை அழைத்துக் கொண்டு தன் பங்களாவுக்கு வந்தாள்.வாசலிலேயே சுமதியின் அப்பாவும் அம்மாவும் காத்துக் கொண்டு இருந்தார்கள்.”செந்தாமரை,வா.நீ சுமதிக்கு கண க்கு சொல்லிக் கொடுத்ததாலே தான் சுமதி பத்தாவதிலே கணக்கிலே ‘பாஸ்’ மார்க வாங்கி இருக்கா. உனக்கு நன்றி சொல்லத் தான் நானும்,ராதாவும்,வாசலிலேயே காத்துக் கிட்டு இருக்கோம்.ரொம்ப ‘தாங்ஸ்’ செந்தாமரை”என்று சொல்லி செந்தாமரையின் கைகளை பிடித்து கொண்டு ‘தாங்க்’ பண்ணீ னார்கள்.உடனே சுமதி “அம்மா,அப்பா,செந்தாமரை நம்ம சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணி இருக்கா.எங்க பள்ளிக்கூட ‘பிரின்ஸி பாலும்’ மத்த வாத்தியார்களும் செந்தாமரை கையை பிடிச்சி ‘கங்கிராஜுலேட்’ பண்ணினாங்க. செந்தாமரை எட்டாவதிலே இருந்து பத்தாவது வரைக்கும் எப்பவுமே கணக்கிலே நூத்துக்கு நூறு மார்க வாங்கி இருக்கா.ஒரு பா¢¨க்ஷ யிலும் அவ கணக்கிலே நூத்துக்கு குறைவா வாங்கினதே இல்லை” என்று சொன்னதும் ரெண்டு பே ரும் செந்தாமரையின் கைகளை பிடித்து “நீ இவ்வளவு புத்திசாலிப் பொண்ணா.எங்களுக்கே இவ்வ ளவு சந்தோஷமா இருக்கே செந்தாமரை,உங்க அம்மா, அப்பா இதை கேள்விப் பட்டா அவங்க இன் னும் ரொம்ப சந்தோஷப் படுவாங்க”என்று சொல்லி செந்தாமரையை உள்ளே அழைத்து வந்தார்கள் ராதாவும் ராஜனும்.

சுமதியின் மாமா கணபதியும்,அவர் மணைவி சாந்தாவும் அன்றைக்கு காலையிலே தான் எல்லா நவக்கிருஹ ஸ்தலங்களுக்கு போய் நிறைய பூஜைகள் எல்லாம் பண்ணி விட்டு தங்களுக்கு சீக்கிரம் ஒரு குழந்தை வேண்டும் என்று பிரார்த்தணை பண்ணிக் கொண்டு அக்கா பங்களாவுக்கு வந்து இருந் தார்கள்.கணபதி மதுரை பல்கலை கழகத்தில் கணக்கு ‘ப்ர·பஸாரக’ வேலை செய்து வந்தார். கல்யா ணம் ஆகி பத்து வருஷங்கள் ஆகியும் அவருக்கு குழந்தைகள் பிறக்கவே இல்லை.‘கணக்கில் எப்போ தும் நுத்து நூறு மார்க வாங்கி வருவா’ என்று செந்தாமரையைப் பத்திச் சொல்லவே கணபதிக்கு செந் தாமரையைக் கூப்பிட்டு அவ கணக்கு அறிவாற்றலை சோதிக்க எண்ணி, அவர் செந்தாமரையை தன் அருகில் அழைத்து ”செந்தாமரை, நீ கணக்கிலே எப்போதும் நூத்துக்கு நூறு மார்க் தான் வாங்கி வறே ன்’னு சுமதி சொன்னதை நான் கேட்டேன்.நான் உனக்கு சில மன கணக்குகளை கேக்கறேன்,நீ அதுக்கு எல்லாம் சரியா பதில் சொல்வாயா”என்று கேட்டார்.உடனே செந்தாமரை “கேளுங்க சார். நான் உங்களுக்குப் பதில் சொல்றேன்”என்று மிகவும் ‘கான்·பிடண்டாக’ச் சொன்னாள்.சாந்தா செந் தாமரையைப் பார்த்தாள்.செந்தாமரை ரொம்ப அழகாக இருந்தாள்.சாந்தா செந்தாமரையைப் பார்த்து “செந்தாமரை,நீ பாக்க ரொம்ப அழகா இருக்கே.நீ ஒரு ஐயர் வீட்டு பொண்ணா” என்று கேட்டாள். செந்தாமரை தயங்கிக் கொண்டே “இல்லிங்க,நான் ஒரு சோ¢யிலே வாழ்ந்து வர ஏழைப் பொண்ணுங்க” என்று சொன்னாள் சாந்தாவுக்கு ‘நாம ஏண்டா செந்தாமரையைக் கேட்டோம்’ என்று வருத்தமாக இருந்தது.செந்தாமரையின் தன்னம்பிக்கையை மிகவும் புகழ்ந்து கணபதி ஆரமபத்தில் சின்ன சின்ன மனக் கணக்குகளைக் கேட்டார்.செந்தாமரை அவர் கேட்ட எல்லா மனக் கணக்கு களுக்கும் ‘சட்’ ‘சட்’ என்று பதில் சொல்லி விட்டு அடுத்த கேள்விக்காக கணதியின் வாயை பார்த்து கொண்டு இருந் தாள்.அசந்து விட்டார் கணபதி.அடுத்து அவர் கஷ்டமான மனக் கணக்குகளை எல்லாம் கேட்டார். செந்தாமரை அவைகளுக்கும் யோஜனைப் பண்ணீ சரியான பதிலை சொன்னாள். அவர் கேட்ட எந்த மனக் கணக்குக்கும் செந்தாமரை தவறான பதிலையே சொல்லவில்லை. செந்தாம ரையின் முதுகிலே தட்டி “எக்சலன்ட், செந்தாமரை.நீ உண்மையிலே கணக்கிலே ஒரு புலி தான்.நீ கணக்கிலே இவ்வளவு புத்திசாலியா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்லை.பல்கலைக் கழகத்தில் படிக்கும் பையன்கள் கூட நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் இத்தனை ‘கரெக்டான’ பதிலை சொல்ல கஷ்டபடுவாங்க” என்று சொல்லி செந்தாமரையின் கையைப் பிடித்து குலுக்கினார் கணபதி. உடனே அவர் தன் மணை வியைப் பார்த்து “சாந்தா,என் பத்து வருஷ கணக்கு வாத்தியார் வாழ்க்கையிலே,கணக்கிலே செந்தாம ரையை போல இவ்வளவு புத்திசாலியான ஒரு பொண்ணே நான் பாத்ததே இல்லே.செந்தாமரை உண்மையிலே கணக்கிலே ஒரு ‘ஜீனியஸ்’.இவ ஆசை பட்டா நான் இவளை மதுரைக்கு அழைச்சு போய், நம்ம வீட்டில் வச்சு வந்து இவளுக்கு எல்லாம் கணகுக்களையும் சொல்லிக் குடுத்து இவளை கணக்கிலே ஒரு பட்டதாரியாக்க ரொம்ப ஆசைப் படறேன்.நீ என்ன சொல்றே” என்று கேட்டதும் சாந்தாவுக்கு ‘நமக்கோ ஒரு குழந்தையும் இல்லை.இவரும் ரொம்ப ஆசைப் படறார். ஒரு சேறிப் பொண்ணுக்கு நாம் இந்த உதவியை பண்ணா என்ன. அது நமக்கு புண்ணீயம் தானே’ என்று மிகவும் இறக்கப் பட்டு “ரொம்ப நல்லதுங்க.ஒரு ஏழைப் பொண்ணுக்கு நாம இந்த உதவியை நீங்க பண்ண லாங்க” என்று சட்டென்று பதில் சொன்னாள்.

உடனே கணபதி ”செந்தாமரை,உன்னுடைய கணக்கு புத்திசாலித்தனத்தை பாத்த எனக்கு உன்னை என்னுடன் மதுரைக்கு அழைச்சுப் போய் என் பல்கலைக் கழத்திலே உன்னை சேத்து, கணக் கிலே உன்னை ஒரு திறமையான பட்டதாரியாக்க நான் ரொம்ப ஆசைப் படுகிறேன்.நீ உங்க வீட்டிலெ சொல்லி ‘பர்மிஷன்’ கேட்டு விட்டு, என்னுடன் மதுரைக்கு வர முடியுமா.நானும் என் பெண்ஜாதியும் நாளைக்கு ராத்திரி தான் மதுரைக்குக் கிளம்பிப் போகப் போறோம்.அதுக்குள்ளாற நீ இங்கே வந்து சொன்னாப் போதும் செந்தாமரை” என்று கேட்டார்.செந்தாமரைக்கு அவ கேட்பது கனவா நிஜமா என்று கொஞ்ச நேரத்துக்கு புரியவில்லை.’நம்மை இவர் வேலை செஞ்சு வரும் மதுரை பல்கலை கழகத் திலே சேத்து கணக்கிலே என்னை ஒரு பட்டதாரியாக ஆக்கறேன்’ என்கிறாரே.இவங்க ரெண்டு பேரை யும் பார்த்தா ரொம்ப நல்லவங்க போல தொ¢யுதே.நான் ‘சரி’ என்று சொல்லி விட்டு இவங்க கூட மதுரைக்கு போய் நல்லா படிச்சு ஒரு கணக்கு பட்டதாரியா ஆகி வந்தா என்ன.இங்கே இருந்து படிச்சா நாம வெறுமனே பன்னாடவது மட்டும் தானே படிக்க முடியும்.அதுக்கு அப்புறமா நான் எப்படி ஒரு கல்லூரியில் சேர்ந்து ஒரு பட்டதாரியா ஆக முடியும்.இவர் சொல்வதை போல செய்தால் என்ன’ என்று செந்தாமரையின் மனம் எண்ணம் இட்டு ஏங்கியது.உடனே செந்தாமரை ”சார்,எனக்கும் நான் பன்னா டாவது படிச்சு முடிச்ச அப்பூறமா,ஒரு நல்ல கல்லூரியில் சேந்து ஒரு கணக்கு பட்டதாரியா ஆகி,நான் படிச்ச பள்ளிக் கூடத்திலேயே ஒரு கணக்கு வாத்தியாரா சேந்து, நிறைய ஏழை குடிசை பிள்ளைகளு க்கு இலவசமா கணக்கு சொல்லிக் கொடுக்க வேணும்னு ரொம்ப ஆசை.ஆனா ஒரு சாதாரண குடிசை யில் வாழ்ந்து வரும் என்னால் எப்படி பண்ண முடியும் என்று தொ¢யாமல் இத்தனை வருஷமா தவி ச்சுக் கிட்டு இருந்து வந்தேன் சார்.நீங்க இப்ப சொன்னது என்னுடைய ஆசையை வளர்த்து இருக்கு. நான் நிச்சியமா எங்க வீட்டிலே ‘பர்மிஷன்’ வாங்கிக்கிட்டு வந்து,உங்க கூடவே மதுரைக்கு வறேன் சார்” என்று சொல்லி அவர் காலைத் தொட்டு அவள் கண்களில் ஒத்திக் கொண்டாள் செந்தாமரை ”கணபதி,உனக்கு ஒன்னு தெரியுமா செந்தாமரை சுமதிக்கு கணக்கு சொல்லிக் குடுத்ததுக்கு காலணா கூட டியூஷன் ‘·பீஸா’ வாங்கிக்க மாட்டேன்னு சொல்லிட்டா.இந்த ஆறு மாசமா அவ சுமதிக்கு ‘·ப்ரீயா’ கணக்கு சொல்லி கொடுத்து வந்து இருக்கா” என்று சந்தோஷப் பட்டுக் கொண்டு ராதா சொன்னாள்.சற்று நேறம் போனதும் ராஜனும் ராதாவும் ”ஆமாம் கணபதி,சுமதி பத்தாவதிலே கண க்கிலே ‘பாஸ்’ பண்ண வச்சதுக்கு பிரதி உபகாரமா அவளுக்கு இந்த உதவியை நீ நீச்சியமா பண்ண ணும்”என்று சொன்னார்கள்.பிறகு எல்லோரும் உட்கார்ந்து கொண்டு உணவு சாப்பிட்டார்ககள். கொஞ்ச நேரம் பங்களாவில் இருந்து விட்டு “நான் இப்போ போய் வறேன் சார்” என்று எல்லோருக்கும் தன் கையைக் கூப்பி சொல்லி விட்டு செந்தாமரை ஒரு புது தெம்போடு பங்களாவை விட்டு வெளியே வந்தாள்.பிறகு செந்தாமரையை சுமதி தன் காரில் ஏற்றிக் கொண்டு டிரைவரை செந்தாமரையின் குடிசைக்கு ஓட்டிப் போக சொன்னாள்.செந்தாமரை குடிசை வந்தவுடன் சுமதி காரில் இருந்து கீழே இறங்கிக் கொண்டு “’பெஸ்ட் ஆ·ப் லக்’ செந்தாமரை” என்று சொல்லி விட்டு காரில் ஏறி கொண்டு காரின் கதவை மூடி கொண்டாள்.தன் குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்த செந்தாமரை மனசு கன க்க ஆரம்பித்தது.‘எப்படி நாம் நம்ம வீட்டிலே சொல்லி நம்ம அம்மா அப்பா கிட்டே ‘பர்மிஷன்’ வாங்கப் போறோம்.ஒரு முன் பின் தெரியாத அவங்களோடு மதுரைக்கு போய் படிக்கப் போறேன்னு’ சொன்னா நம்ம அம்மாவும் அப்பாவும் ஒத்துக் கொள்ளுவாங்களா மாட்டார்களோ’ என்று நினைக்கும் போது செந்தாமரைக்கு தலையே சுத்தியது.பயந்துக் கொண்டே குடிசைக்குள் நுழைந்தாள்.

ஆயா அடுப்புக் கிட்டே ஏதோ சமைச்சு கிட்டு இருந்தாள்.ரெண்டு மணி நேரம் ஆனதும் ராஜ்ஜும்,தேவியும்,ஒன்றாக ஏதோ வாக்கு வாதம் பண்ணிக் கொண்டே குடிசைக்குள் நுழைத்தார்கள். இவர்கள் வாக்கு வாதம் கொஞ்சம் ஓயட்டும் என்று காத்துக் கொண்டு இருந்து விட்டு செந்தாமரை அவங்க வாக்கு வாதம் ஓய்ந்ததும் ”அம்மா,அப்பா நான் பத்தாவது வகுப்பிலே சென்னை மாநிலத்தி லேயே முதல் மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்” என்று சந்தோஷமாக சொன்னாள்.உடனே தேவி ”அப்படியா ரொம்ப சந்தோஷம் செந்தாமு.நீ ரொம்பக் கஷ்டப் பட்டு படிச்சு வந்த போதே,நீ ரொம்ப நல்ல மார்க் வாங்குவேன்னு எனக்கு தொ¢யும்” என்று சொன்னாள்.ராஜ் அதிகம் ஒன்னும் சொல்லாம”ரொம்ப சந்தோஷமா இருக்கு செந்தாமு” என்று சொல்லி விட்டு தன் கை கால்களை கழு வப்போனான்.‘சரி இது தான் சரியான சமயம்’ என்று நினைச்சு செந்தாமரை அவ அம்மா கிட்டே ”அம்மா, என்னை படிக்க வச்சி வந்தாரே,ஒரு கணக்கு வாத்தியார் என்னை பன்னாடவது வரை படிக்க வைக்கிறேன்னு சொன்னாரும்மா.நான் பன்னாடவது சேர்ந்து படிக்கட்டுமா” என்று முதலில் தான் மேலே படிக்க ஒத்துக்காங்கறாங்க,அப்படி ஒத்துக் கிட்டா நாம அப்புறமா மதுரைக்கு போவதைப் பத்திச் சொல்லலாம்’ என்று நினைத்து சொல்லி விட்டு செந்தாமரை அவ அம்மா முகத்தையே பார்த் துக் கொண்டு இருந்தாள்.உடனே தேவி தேவி ”இதோ பாரு செந்தாமு.நீ ரொம்ப ஆசைப் பட்டே ன்னுத் தான் உன்னை உங்க அப்பாவும் ஆயாவும் ‘வேணாம்’ ‘வேணாம்’ ம்னு சொன்னா கூட நான் உன்னை படிக்க வச்சேன்.நீ பத்தாவது படிச்சது போதும் செந்தாமு.நீ பன்னாடவது படிச்சு முடிக்க இன்னும் ரெண்டு வருஷம் ஆவும்.நீ பன்னாடவது படிச்சு முடிச்சா,அப்புறமா உன்னை அந்த படிப் போ, இல்லை இன்னும் மேலே படிச்ச ஒரு பையணுக்கு தான் கல்லாணம் கட்டிக் கொடுக்கணும். என் சம்பள பணத்திலே தான் குடிசையிலெ நெருப்பு புகையுது.கமலாவுக்கு கையிலே ஒரு குழந்தை வே றே.அவங்க வூட்டிலே நாலு ஜீவன் சாப்பிட்டு வரணும்.அவ ‘அம்மா எங்க வூட்டிலே ரொம்பப் பண கஷ்டமா இருக்குது’ ன்னு சொல்லி இங்கே கையை பிசைஞ்சுக்கிட்டு வந்து அழுதா நான் தான் அவ ளுக்கு ஏதாவது பணம் கொடுத்து தானே அனுப்பணும்.இதை எல்லாம் யோசிச்சா,நீ பத்தாவது படிச்சது போதும். இப்போ நீ ஏதாவது ஒரு சின்ன வேலையே தேடிக் கிட்டு, சம்பாதிச்சு வந்தா நம்ம குடும்பத்துக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.அப்படி உனக்கு வர சம்பளத்திலே நீ பாதியை உனக்கு சேத்து வச்சு கிட்டு,மீதி பாதி சம்பளத்தே எங்க கிட்டே கொடுத்தியினா நல்லா இருக்கும்.நீ அதனா லே மேலே எல்லாம் படிக்காம வேணாம்.உடனே ஏதாச்சும் ஒரு வேலையேத் தேடிக் கிட்டு வந்து சம்பா திக்கிற வழியைப் பாரு.உன் கிட்டே கொஞ்சம் பணம் சேந்த அப்புறமா ஒரு நல்ல பையனா,உன்னா ட்டும் படிச்ச ஒரு பையனா பாத்து உனக்குக் கல்லாணம் கட்டி வைக்க சௌகரியாமா இருக்கும்.நீ பத்தாவது வரைக்கும் படிச்சது போதும் செந்தாமு” என்று தன் அம்மா சொன்னதை கேட்டதும் செந் தாமரைக்கு தூக்கி வாரி போட்டது.அவ அம்மா ‘இப்படி தன்னை மேலே படிக்க வேணாம்,நீ உடனே ஒரு வேலையைத் தேடிக் கிட்டு சம்பாதிச்சு வா’ ன்னு அம்மா சொல்லிட்டாங்களே.இப்போ என்ன பண்ணப் போறோம்’ என்று ஒன்னும் புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணின செந்தாமரை தன் அம்மாவைப் பாத்து “அம்மா, அன்னைக்கு ஒரு நாள் கமலா மாமியார் என் கிட்டே ‘உன் படிப்பு முடிஞ் சதும் நீ கல்லாணம் கட்டிக்கப் போறயான்னு’ கேட்டாங்கன்னு உங்க கிட்டே வந்து சொன்னேம்மா. அதுக்கு நீங்க உடனே என்னை பாத்து ‘நீ வருத்தப் படாதே செந்தாமு.உலகம் பல விதமா சொல்லும்.நீ கவலையே படாதே.நீ எவ்வளவு படிப்பு படிக்க ஆசைப் படறயோ அவ்வளவு படிப்பு நீ படிச்சு வா.நீ எப்ப கல்லாணம் கட்டிக்க ஆசை படறயோ அப்ப சொல்லு.நாங்க உனக்கு கல்யாணம் பண்ணி வக்கிறோம்.இப்ப நீ நிம்மதியா உன் பாடங்களை படிச்சு வா’ன்னு சொன்னீங்களேம்மா.ஆனா நீங்க இப்ப என்னை பாத்து ‘நீ படிச்சது போதும்.உடனே ஒரு வேலைக்குப் போய் சம்பாதிச்சு வா’ ன்னு சொல்றீங்களேம்மா.எனக்கு இன்னும் மேலே படிக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கும்மா” என்று அழுது கொண்டே கேட்டாள்.உடனே தேவி ”செந்தாமரை,நீ வீணா அழுது உன் உடம்பை கெடுத்துக்காதே.நான் சொன்னா மாதிரி உன் படிப்பை நீ பத்தாவதோடு முடிச்சுக்கோ.நீஅதுக்கு மேலே எல்லாம் படிக்க முடியாது.நான் சொல்றதே நீ நல்லா புரிஞ்சுக்கோ.பேசாம படிப்பை இத்தோடு முடிச்சுக் கிட்டு ஒரு சின்ன வேலையப் பாத்து வேலை செஞ்ஜி வாம்மா”என்று செந்தாமரை முதுகைத் தட்டி இதமாக சொன்னாள்.செந்தாமரை விடாம “அம்மா, அந்த வாத்தியார் என்னை பத்தாவது படிக்க வச்சது போல அவங்க செலவிலேயே என்னை பன்னாடாவது படிக்க வைக்கிறேன்னு சொன்னார்மா.நமக்கு காலணா கூட செலவு இல்லே. .ரெண்டு வருஷம் ஓடிப் போயிடும்மா. நான் பன்னாடாவது படிச்சு ‘பாஸ்’ பண்ணா எனக்கு ஒரு நல்ல பள்ளிக் கூடத்திலே ஒரு கணக்கு வாத்தியார் வேலை எனக்கு கிடைக்கும்மா.எனக்கு கணக்கு வாத்தியார் வேலை செஞ்சு வந்து நிறைய ஏழை பிள்ளைங்களுக்கு எல்லாம் இலவசமா கணக்கு சொலல்லிக் குடுக்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசைம்மா.நான் பன்னாடாவது படிச்சு முடிக்கிறேம்மா” என்று தன் அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.தேவி “செந்தாமு,உனக்கு வயசு ஏறிக் கிட்டே போவுது.அதுக்கென்ன நீ பத்தாவது படிச்சு முடிக்கிற வரைக்கும் நம்ம குடும்ப கஷ்டத் தை பத்தி உன் கிட்டே சொல்லக் கூடாதுன்னு நான் ஆயா கிட்டேயும்,உங்க அப்பா கீட்டேயும் கண்டிப்பா சொன்னதாலே தான் அவங்க உன் கிட்டே இதை பத்தி மூச்சு விடலே.நீ இப்போ ஏதாவது ஒரு வேலைக்குப் போய் சம்பாதிச்சு வந்தா தான் நம்ம வீட்டிலே அடுப்பு புகையும் செந்தாமு..நான் சொல்றதே கொஞ்சம் கேளு.வீணா பிடிவாதம் பிடிச்சு வந்து அழுது அடம் எல்லாம் பிடிச்சு வராதே” என்று கண்டிப்பாய் சொல்லி விட்டாள்.செந்தாமரை ‘இனிமேல் நாம் அம்மா கிட்டே பேசி ஒரு பிரயோ ஜனமும் இல்லை.நாம மேலே படிக்க அவங்க நிச்சியமா ஒத்துகிட மாட்டாங்க.இங்கெயே மேலே படிக்கவே ஒத்துக்காத நம்ம அம்மா, எப்படி நம்மை மதுரைக்கு போய் படிக்க ஒத்துக் கொள்ளப் போற ¡ங்க.இது நடக்காத காரியம்.நம்ம கனவு பலிக்காது போல இருக்கே.எப்படி நம் கனவு நனவாக பண்ணுவது’ என்று யோஜனை பண்ணிக் கொண்டே படுத்துக் கொண்டு இருந்தாள்.

‘செந்தாமரை,உன்னுடைய கணக்கு புத்திசாலித்தனத்தைப் பாத்த எனக்கு உன்னை என் னுடன் மதுரைக்கு அழைச்சுப் போய் என் பல்கலைக் கழத்திலே சேர்த்து கணக்கிலே உன்னை ஒரு திறமையான பட்டதாரியாக்க நான் ரொம்ப ஆசைப் படுகிறேன்.நீ உங்க வீட்டிலெ சொல்லி விட்டு என்னுடன் மதுரைக்கு வர முடியுமா.நானும் என் பெண்ஜாதியும் நாளைக்கு ராத்திரி தான் மதுரை க்குக் கிளம்பிப் போக போறோம். அதுக்குள்ளாற நீ இங்கே வந்து சொன்னாப் போதும்’ என்று கணபதி சொன்னதும்,ஆமாம் கணபதி,நம்ம சுமதிக்கு செந்தாமரை ‘·ப்ரீயா’ கணக்கு சொல்லிக் குடுத்து அவளை பத்தாவதிலே கணக்கிலே ‘பாஸ்’ பண்ண வச்சதுக்கு பிரதி உபகாரமா அவளுக்கு இந்த உதவியை நீ நீச்சியமா பண்ணணும்’ என்று ராதாவும் ராஜாவும் சொன்னதும்,செந்தாமரை,நீ உங்க வீட்டிலே சொல்லி ‘பர்மிஷன்’ வாங்கிக் கிட்டு எங்க கணபதி மாமாவோடு மதுரைக்குப் போய் அவர் ‘ப்ர·பஸராக’ இருக்கும் கல்லுரியிலே சேர்ந்து நீ நல்லா கணக்கு படிச்சு கணக்கிலே ஒரு பட்டதாரியா ஆகி வரணும்.அது தான் என் ஆசையும் கூட. நீ கனக்குகளை எல்லாம் எனக்கு சொல்லிக் குடுக்கும் போது நீ நம்ம கணக்கு வாத்திரே மிஞ்சிட்டே செந்தாமரை.நீ கணக்கு பட்டதாரியா ஆனா,நீ நிச் சியமா ஒரு நல்ல கணக்கு ‘டீச்சரா’ வருவே இந்த நல்ல சான்ஸை ‘மிஸ்’ பண்ணி விடாம உபயோக படுத்தி வா செந்தாமரை.’பெஸ்ட் ஆ·ப் லக்’’ என்று சுமதி சொன்னதும் செந்தாமரை காதுகளிலே மாறி மாறி ¡£ங்காரம் பண்ணிக் கொண்டு இருந்தது. ’நாம கணக்கிலே நன்றாகப் படித்து, ஒரு பட்டதாரியாய் ஆகி ஓரு நல்ல கணக்கு வாதியாராய் வேலைக்கு சேர்ந்து,நிறைய ஏழை பிள்ளை களுக்கு கணக்கு சொல்லி கொடுக்க வேணும் என்று நாம் ஆசை ப்பட்டோம்.ஆனா இந்த அம்மா நம்மை வேலைக்குப் போக சொல்றாங்களே.உங்கே இருந்து வந்தா அம்மா ஒரு ‘பில்டிங்க்’ வேலை செய்து வரும் எவனையாவது ஒருத்தனைப் பாத்து கல்யாணம் பண்ணிக்க சொல்லி,இந்த குடிசை வாழ்க்கையை நிரந்தரமா செஞ்சு விடுவாங்க.அப்புறமா நாம கமலா அக்கா கஷ்டப் பட்டு வருவதை போல காலம் பூராவும் கஷ்டப் பட்டுக் கிட்டு தான் வர வேணும்.இந்த குடிசை வாழ்க்கையிலே இருந்து எப்படியாவது வெளீயிலே வர வேண்டும் என்று ஏங்கி வரும் நமக்கு,அம்மா மறுபடியும் இந்த குடிசை வாழ்க்கையை தான் அமைக்க திட்டம் போடறாங்க.இதில் இருந்து நாம் வெளியே வர ஒரு வழி தான் இருக்கு.பேசாமல் இந்த குடிசையை விட்டு ஓடிப் போய் அந்த நல்ல மனுஷர் கூட மதுரைக்குப் போய் நம்முடைய கனவை நனவாக்கிக் கொள்ள வேண்டும்.வேறு ஒரு வழி ஒன்னும் நமக்குத் தொ¢ய வில்லையே.இத்தனை வருஷமா நமக்கு சாப்பாடு போட்டு வளர்த்து வந்த அம்மா, அப்பா,ஆயா இவங்க கிட்டே ஒன்னும் சொல்லிக் கொள்ளாம ஓடிப் போவது சரியா.அப்படி நாம் அந்த மனுஷருடன் ஓடி போய் நாம் நினைத்தது போல ஒரு கணக்கு பட்டதாரியாய் ஆக வேண்டுமே.ஒரு வேளை அப்படி ஒரு கணக்கு பட்டதாரியாக ஆகாமல் தங்கி விட்டா…..’ இதை அவளால் நினை த்துக் கூடப் பார்க்க முடியவில்லை.அடுத்த நாள் காலையிலே அவ கண்கள் மட்டும் கோவைப் பழம் போல சிவந்து இருந்ததை ஆயா,ராஜ்,தேவி,மூனு பேரும் பார்த்ததார்கள்.தேவி உடனே ”என்ன செந்தாமு,நீ ராப் பூரா தூங் காம அழுது கிட்டு இருந்தியா.உன் கண்ணு ரெண்டும் இப்படி கோவை பழமா சிவந்துக் கிடக்குது. என்ன அழுது பிடிவாதம் பிடிச்சு,இப்படி உன் கண்ணுங்க ரெண்டையும் கோவைப் பழம் போல சிவக்க வச்சி என் முன்னாலே வந்து நின்னா,நான் உன்னை படிக்க வச்சிடி வேன்னு நினைச்சியா.ரொம்ப கஷ்டத்திலே நாங்க மூனு பேரும் இருந்து வறோம்மா.நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சு வந்தா எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.நான் சொல்றதே கொஞ்சம் கேளு செந்தாமு” என்று தன் குரலை கொஞ்சம தாழ்த்தி பேசினாள்.செந்தாமரை வேறே வழி இல்லாமல் “சரிம்மா,நான் அப்படியெ செய்யறேன்” என்று சொல்லி விட்டாள்.

செந்தாமரை ஒரு பத்து மணிக்கு ரத்தினத்திடம் சொல்லிக் கொண்டு பள்ளிக் கூடம் போனாள்.

மூர்த்தி வாத்தாயார் முன்னால் தன் முகதைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந் தாள்.செந்தாமரையை அவள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றுக் கொண்டு இருப்ப தைப் பார்த்த பார்த்த மூர்த்தி வாத்தியார் “என்ன செந்தாமரை, என்ன விஷயம்.நீ எப்பவும் சந்தோஷ மா இருப்பியே.ஏன் இன்னைக்கு உன் தலையைத் தொங்கப் போட்டுக் கிட்டு நிக்கறே” என்று கவ லையுடன் விசாரித்தார்.செந்தாமரை தன் தலையை நிமிர்ந்ததும், அவள் கண்களில் இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் தரையிலே விழுந்தது.இதைக் கவனித்த மூர்த்தி வாத்தியார் ”செந்தாமரை,நீ ஏன் அழறே.உனக்கு என்ன ஆச்சு”என்று மறுபடியும் கவலையோடு கேட்டார்.செந்தாமரை அழுதுக் கொ ண்டே”சார், எங்க அம்மா என்னை பாத்து, நீ மேலே எல்லாம் படிக்க வேணாம்.நம்ம குடும்பம் இப்போ ரொம்ப கஷ்டத்திலே இருந்து வருது.நீ ஒரு வேலைக்கு போய் சம்பாதிச்சு வந்தா நம்ம குடும்பத்துக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.மேலே படிக்கிறதை மறந்து விட்டு ஒரு வேலைக்கு போய் வா.நான் சொல்றதே கொஞ்சம் கேளு’ன்னு கண்டிப்பா சொல்லி விட்டாங்க சார்.அதனால்லே நான் மேலே படிக் கலே சார்.நீங்களும் சுந்தரம் பிள்ளை வாத்தியாரும் என்னை இவ்வளவு தூரம் படிக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி சார். நீங்க ரெண்டு பேரும் இந்த பெரிய உதவியைப் பண்ணாம இருந்து இருந்தா,நான் வெறும் எட்டாவது படிப்போடு நின்னுப் போய் இருப்பேன்.உங்க ரெண்டு பேருக்கும் நான் எப்படி நன்றி சொல்றதேன்னே எனக்குத் தொ¢யலே.என்னை மன்னிச்சுடுங்க சார்” என்று சொல்லி மூர்த்தி வாத்தியார் கால்களைத் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டாள்.அந்த நேரம் பார்த்து சுந்தரம் பிள்ளை மூர்த்தி வாத்தியார் ரூமுக்குள் நுழைந்தார்.செந்தாமரை அழுதுக் கொண்டு நின்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்த சுந்தரம் பிள்ளைக்கு ‘ஷாக்காக’ இருந்தது. அவர் உடனே ”என்ன மூர்த்தி சார்,செந்தாமரை ஏன் அழுது கிட்டு நின்னு கிட்டு இருக்கா” என்று கவலையோடு கேட்டார். உடனே மூர்த்தி வாத்தியார் “பாவம் சுந்தரம் பிள்ளை.செந்தாமரையை அவங்க அம்மா பாத்து ‘நீ மேலே எல்லாம் படிக்க வேணாம்’ன்னு சொல்லிட்டாங்களாம்.அவ என்னை மன்னிச்சுடுங்க சார்’ ன்னு சொல்லி விட்டு அழுதுக் கிட்டு நின்னுக் கிட்டு இருக்கா” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் ரெண்டு வாத்தியார்களும் செந்தாமரையைப் பார்த்து ”சரி, செந்தா மரை,நீ உங்க அம்மா சொன்னது போல செஞ்சி வா.உங்க குடும்ப கஷ்டம் உங்க அம்மாவுக்குத் தான் தொ¢யும்.நீ மேலே படிக்க ஆசைப் பட்டு,உங்க அம்மா அப்பாவும் சம்மதம் கொடுத்தாத் தான் நாங்க உன்னைப் படிக்க வக்கிறோம் என்று சொன்னோம்.நீ உன் வீட்டுக்குப் போய் உங்க அம்மா சொன்னது போல செய் செந்தாமரை. அது தான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது” என்று சொல்லி செந்தாமரை போகச் சொன்னார்கள்.செந்தாமரையும் தன் கைகளைக் கூப்பி “உங்க ரெண்டு பேரு க்கும் என்னை நீங்க பத்தாவது வரை படிக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி சார்” என்று சொல்லி விட்டு கண்களில் கண்ணீருடன் மூர்த்தி வாத்தியார் ரூமை விட்டு வெளியே வந்து தன் குடிசைக்கு வந்தாள்.

மணி ஐந்தடித்தது.கொஞ்ச நேரம் தூங்கி எழுந்த ரத்தினம் ரெண்டு பேருக்கும் ‘டீயை’ப் போட்டாள். ரத்தினம் ‘டீ’யை குடித்து விட்டு ஒரு பழைய துணி பையை எடுத்துக் கொண்டு செந்தா மரையைப் பார்த்து “செந்தாமு,குடிசையைப் பாத்துக்க.நான் கொஞ்சம் கமலா குடிசைக்குப் போய் அவளை பாத்துட்டு கடைக்கு போய் கொஞ்சம் மீன் வாங்கிக் கிட்டு சீக்கிரமா வந்திடறேன்” என்று சொல்லி விட்டு செந்தாமரை ஆயாவைப் பாத்து “சரி,போய் வாங்க ஆயா” என்று சொல்லி ஆயாவை அனுப்பினாள்.தான் இரவு படுத்து கொண்டு எடுத்த முடிவை செயலாக்க ஆரம்பித்தாள் செந்தாமரை குடிசையில் மாட்டி இருந்த பிள்ளையார் படத்துக்கு முன்னாலே போய் நின்றுக் கொண்டு ”பிள்ள யாரே.எனக்கு வேறே வழி ஒன்னும் தொ¢யலே.உன்னை நல்லா வேண்டிக் கிட்டு நான் இந்த குடிசை யை விட்டு அந்த நல்ல மனுஷர் கூட மதுரைக்குப் போய் மேலே படிச்சு வரப் போறேன். எனக்கு ஒரு கஷ்டமும் இல்லாம,என் கற்புக்கு எந்த களங்கமும் ஏறபடாம,நான் நல்லா படிச்சு கணக்கிலே ஒரு பட்டப் படிப்பு படிச்சு வெளியே வரணும்.நீ தான் என் கூட இருந்து வந்து என் ஆசையை பூர்த்தி பண்ண அருள் புரியணும்” என்று நன்றாக வேண்டிக் கொண்டு பிள்ளையார் படத்திற்கு ஒரு நமஸ் காரத்தைப் பண்ணி விட்டு அந்த பிள்ளையார் படத்தை தன்னுடன் தன் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டாள் செந்தாமரை.தனது மூன்று மாத்து உடைகளையும் அந்த பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டாள்.மெல்ல வாசலுக்கு வந்தாள்.தன் தலையை ரெண்டு பக்கமும் சுற்றி பார்த்தாள்.கண்ணில் யாரும் தென்படாததால் செந்தாமரை ‘விரு’ ‘விரு’ என்று தன் பெட்டியை எடுத்து கொண்டு குடிசை யை வீட்டு வெளியே வந்து நேராக சுமதி பங்களாவுக்கு பயந்துக் கொன்டே வந்தாள்.செந்தாமரையை பார்த்ததும் சுமதி “வா செந்தாமரை,உங்க அப்பா அம்மா உனக்கு ‘பர்மிஷன்’ கொடுத்தாங்களா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”என்று சொல்லி செந்தாமரையின் கைகளைப் பிடித்து குலுக்கி னாள்.செந்தாமரையின் கைகள் நடுங்கிக் கொண்டு இருந்ததது.ஹாலில் இருந்து வந்த கணபதி “வா செந்தாமரை.உன் அம்மா அப்பா ‘பர்மிஷன்’ கொடு த்து உன்னை இங்கே அனுப்பி இருக்காங்க இனிமே நான் உன்னை எங்க காலேஜிலே,நல்லா படிக்க வச்சு,ஒரு கணக்கு பட்டதாரியா ஆக்க வேண்டியது என் பொருப்பு” என்று சொல்லி சந்தோஷப்பட்டார்.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு எல்லோரும் சாப்பிட்டார்கள்.மணி ஏழடித்ததும் கணபதி தன் மணைவி சாந்தா வையும்,செந்தாமரையையும் கூட்டிக் கொண்டு காரில் மதுரைக்கு கிளம்பினார்.

ரத்தினம் கமலாவை கொஞ்ச நேரம் பார்த்து பேசி விட்டு கடைக்குப் போய் அவ கொண்டுப் போன பணத்திற்கு மீன் வாங்கிக் கொண்டு குடிசைக்கு வந்தாள்.குடிசையில் நுழைந்த ரத்தினம் செந்தாமரை குடிசையில் இல்லாததைப் பார்த்து “செந்தாமு,செந்தாமு” என்று குரல் கொடுத்தாள். பதில் ஒன்றும் வராததால் மறுபடியும் வாசலுக்கு வந்து பார்த்தாள் ரத்தினம்.செந்தாமரையைக் கா ணோம்.‘நாம கடைக்குக் கிளம்பிப் போவும் போது ‘சரி, ஆயா போய் வாங்க’ன்னு சொல்லி நம்மை அனுப்பினாளே.குடிசையில் அவளைக் காணோமே.சாதாரணமா குடிசையை விட்டு எங்குமே போக மாட்டாளே இந்த செந்தாமரை.எங்கே போய் இருப்பா’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டே இருந்த போது பக்கத்து குடிசை அம்மா வெளியே வந்தாள்.ரத்தினத்திற்கு கொஞ்ச கவலையாய் இருந் தது.ரத்தினம் ’சரி இங்கே எங்கேயாச்சும் போய் இருப்பா.வரட்டும்’ என்று நினைத்து மறுபடியும் குடி சைக்கு உள்ளே வந்து மீன் குழம்பு சாம்பார் வைக்க ஆரம்பித்தாள்.ராஜ் குடிசைக்குள் நுழைந்தான். அவன் உள்ளே வந்ததும் அவனைப் பார்த்து ரத்தினம் “ராஜ், நான் கடைக்குப் போவும் போது செந்தாமரை குடிசையிலெ இருந்தாப்பா.நான் கமலா கூட கொஞ்ச நேரம் பேசிட்டு விட்டு கடைக்கு போய் மீன் வாங்கி கிட்டு குடிசைக்கு வந்தப்ப செந்தாமுவை காணோம்ப்பா. கொஞ்சம் வாசலிலே போய் பாரு” என்று சொன்னாள்.”எனக்கே ரொம்ப அசதியா இருக்கு.அவ எங்கே போய் இருப்பாம் மா.இன்னும் கொஞ்ச நேரத்துலே அவ வந்திடுவா”என்று சொல்லி அங்கே போட்டு இருந்த ஒரு சோ¢ல் ‘தொப்’ பென்று உட்கார்ந்தான் ராஜ்.அந்த நேரம் பார்த்து தேவி குடிசைக்கு வந்தாள்.ராஜ் சொல்லிக் கொண்டு இருந்தது அவள் காதில் விழுந்தது. “என்ன செந்தாமுவைக் காணோமா” என்று சொல்லிக் கொண்டே குடிசைக்கு வந்த தேவி ரத்தினத்தைப் பார்த்து “நீங்க குடிசையிலெ தானே இருந்தீங்க.செந்தாமு எங்கேன்னு உங்களுக்குத் தொ¢யாதா”என்று கவலையுடன் கேட்டாள். “தேவி, நான் சாயங்காலமா செந்தாமுவை பாத்து ‘செந்தாமு, குடிசையைப் பாத்துக்க.நான் கொஞ்சம் கமலா குடிசைக்குப் போய் அவளை பாத்துட்டு அப்புறமா கடைக்கு போய் கொஞ்சம் மீன் வாங்கி சீக்கிரமா வந்திடறேன்”என்று சொல்லி விட்டு போனேன்.அப்போ செந்தாமு ஏதோ ஒரு புஸ்தகத்தைப் படிச்சு க்கிட்டு இருந்தா.அவ என் கிட்டே ‘நீங்க போய் வாங்க ஆயா’ன்னு சொன்னா.ஆனா நான் கடையிலே இருந்து மீன் வாங்கிக்கிட்டு வந்து பாத்தப்ப அவ குடிசையிலெ இல்லே.நான் உடனே வாசலுக்கு வந்து பாத்தேன்.அவ என் கண்ணுக்கு தென்படலே.அப்போ வாசலுக்கு வந்த பக்கத்து வீட்டு அம்மா வைக் கூட கேட்டேன் தேவி.அவங்க ‘செந்தாமுவைப் நான் பாக்கலேன்னு’ சொன்னாங்க.அப்போ தான் ராஜ் உள்ளே வந்தான்.நான் அவன் கிட்டெ சொல்லிக் கிட்டு இருக்கும் போது தான் நீ குடிசைக் குள்ளே நுழைஞ்சே தேவி” என்று சொன்னதும் தேவிக்கு கவலை அதிகம் ஆகியது.

தேவி குடிசைக்கு வெளியே வந்து “செந்தாமு,செந்தாமு” என்று உரக்க குரல் கொடுத்தாள். பதில் ஒன்னும் வராததால் தேவி பயந்துப் போய் ராஜ்ஜை கூப்பிட்டு ”செந்தாமுவை காணோமேயா. வாய்யா நாம் போய் தேடி வரலாம்.எழுந்திரியா”என்று கத்தி ராஜ்ஜை எழுப்பினாள் தேவி. “அவ எங்கேயும் போய் இருக்க மாட்டா தேவி.ஒரு வேளை செந்தாமு நம்ம கமலாவைப் பாக்கப் போய் இருப்பா.கமலாவைப் பாத்துட்டு இப்போ வந்து விடுவா” என்று எழுந்துக்காமலே பதில் சொன்னான் ராஜ்.பகல் பூராவும் வேலை செஞ்சு வந்த உடம்பு களைப்பு அவனுக்கு.“உனக்குத் தொ¢யாதய்யா. இந்நேரம் சேகர் குடிசைக்கு வந்துட்டு இருப்பான்.செந்தாமு அங்கே போய் இருக்க மாட்டாய்யா. எழுந் திரிய்யா.வாய்யா வெளியிலே போய் தேடி வரலாம்” என்று அவன் தோளைத் தொட்டு எழுப்பினாள் தேவி.“வேண்டா வெறுப்பாக எழுந்துக் கொண்டான் ராஜ்.தேவியும் ராஜ்ஜும் குடிசை கோடி வரை போய் எதிரில் வந்தவர்களை எல்லாம் பார்த்து “எங்க செந்தாமரையை நீங்க பாத்தீங்களாங்க” என்று கேட்டுக் கொண்டே போனார்கள்.எதிரில் தென்பட்டவர்கள் எல்லோரும்ஒரு வாய் வைத்தார் போல் ”நாங்க பாக்கலேங்க”என்று சொன்னதும் தேவிக்கும் ராஜ்ஜுக்கும் இன்னும் பயம் அதிகம் ஆகியது.

“இந்நேரம் குடிசைக்கு செந்தாமரை வரலேன்னா,எனக்கு என்னவோ அவ குடிசையை விட்டு எங்கோ ஓடிப் போய் தான் போய் இருப்பா. சீக்கிரமா வாய்யா.நாம போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் ஒரு புகார் குடுத்துட்டு வரலாம். போலீஸ் அவளைத் தேடி கண்டு பிடிச்சுடுவாங்க” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினாள் தேவி. போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே போய் தேவி அங்கே இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டா¢டம் ”சார்,எங்க பொண்ணு செந்தாமரையை இப்ப ஒரு மணி நேரமா காணோமுங்க. சாயங்காலம் ஆறு மனி வரை குடி சையிலேதாங்க அவ இருந்தா” என்று தன் கண்களில் கண்ணீருடன் சொல்லி அழுதாள். உடனே அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவியை பார்த்து ”உங்க பொண்ணுக்கு என்ன வயசு ஆவுது.அவ படிச்சுக்கிட்டு இருக்காளா.இல்லெ வேலை ஏதாச்சுக்கும் போய் வறாளா” என்று கேட்டார்.“அவளுக்கு பதினைஞ்சு முடிஞ்சு பதினாறு வயசு தாங்க நடக்குது.அவ இந்த வருஷம் தான் பத்தாவது படிச்சு முடிச்சு இருக்கா.அவ மேலெ படிக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டாங்க.நாங்க நீ மேலே எல்லாம் படிக்க வேணாம்.ஒரு வேலையைத் தேடிக்கோன்னு சொன்னோமுங்க.அவளுக்கு அது பிடிக்கலீங்க. அவ நேத்து ராத்திரி பூரா தூங்கலேங்க.அழுது கிட்டே இருந்து இருக்காங்க. காலையிலே எழுந்ததும் அவ ‘சரிம்மா நான் வேலைக்கு போறேன்’ ன்னு சொன்னாங்க.ஆனா இப்போ சாயங்காலத்திலே இருந்து தாங்க அவளை காணோமுங்க” என்று சொல்லி விட்டு மறுபடியும் அழுதுக் கொண்டு இருந்தாள் தேவி.“அவ காதலன் எவனாவது ஒருத்தனொடு அவ ஓடி போய் விட்டு இருப்பா அவ காதலன் யாருன்னு உங்களுக்குத் தொ¢யுமாங்க”என்று சொல்லி கேட்டார் அந்த இன்ஸ்பெக்டர். உடனே தேவி “அவளுக்கு இந்த காதல் விஷயத்திலே எல்லாம் கொஞ்சமும் ஈடுபாடே கிடையாதுங்க. எப்பவும் பாட புஸ்தகங்களைத் தாங்க அவ படிச்சுக் கிட்டு இருப்பா.ரொம்ப நல்ல பொண்ணுங்க” என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *