சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 6, 2019
பார்வையிட்டோர்: 4,997 
 
 

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7

கொஞ்ச நேரம் பேசிக் கிட்டு இருந்து விட்டு ரத்தினம் கமலாவைக் கூப்பிட்டு “கமலா,நீ எல்லா ருக்கும் பலகாரம் கொண்டு வந்து குடும்மா” என்று சொன்னதும் கமலா ஆயா வாங்கி வச்சு இருந்த பலகாரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு மெல்ல ஆடி அசைஞ்சு கொண்டு வந்து முதலில் சேக ரின் அம்மாவுக்கும்,அப்புறமா சேகருக்கும்,கொடுத்து விட்டு மீதி இருந்த தட்டை தன் அப்பாவுக்கும் கொடுத்து விட்டு எல்லாருக்கும் ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு அப்பா பக்கத்திலே தரையிலே உட்கார்ந்துக் கொண்டாள்.கமலா கொடுத்த பலகாரத்தை வாங்கிக் கொண்டு சேகர் மேலும் கீழும் கமலாவை நோட்டம் விட்டான்.அவனுக்கு கமலாவை ரொம்ப பிடித்து இருந்தது.எல்லோ¡ரும் பலகாரத்தை சாப்பிட்ட பிறகு தேவி கமலாவை கூப்பிட்டு “கமலா, எல்லாருக்கும் ‘டீ’ சூடா கொண்டு வந்து குடும்மா” என்று சொன்னதும் கமலா எழுந்துப் போய் அம்மா போட்டு வைத்து இருந்த ‘டீயை’க் கொண்டு வந்து எல்லாருக்கும் கொடுத்து விட்டு மறுபடியும் உட்கார்ந்துக் கொண்டாள்.‘டீயை’க் குடித்து கொண்டே செங்கமலம் ”உங்க பொண்னுக்கு நீங்க கல்லாணத்துக்கு என்ன நகை எல்லாம் போடப் போறீங்க”என்று கேட்டாள்.உடனே ரத்தினம் “உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லே. நாங்க ரொம்ப வசதி இல்லாதவங்க.நாங்க கமலாவுக்கு ரெண்டு சவரன்லே ஒரு செயின் போட றோமுங்க.ரெண்டு சவரன்லே காதுக்கு ஜிமிக்கி செஞ்சு போடறோமுங்க.ஒரு சவரன்லே தாலி செஞ்சு போடறோமுங்க.கல்லாணத்தே நல்ல விதமா செஞ்சு குடுக்கிறோமுங்க.நீங்க தயசு செஞ்சி இதுக்கு ஒத்துக்குங்க”என்று தன் கையை கூப்பி சொன்னாள்.‘சேகருக்கு கமலாவை ரொம்ப பிடித்து இருந் தாதால் அவன் அம்மா முகத்தை பார்த்து “சரின்னு சொல்லுங்கம்மா” என்று அவசரப்படுத்தினான்.”நீ சும்மா இருடா.உனக்கு ஒன்னும் தெரியாது.நாங்க பெரியவங்க பேசி கிட்டு இருக்கோம்” என்று சொ ல்லி விட்டு “நீங்க இன்னும் ஒரு சவரனுக்கு கமலாவுக்கு ஒரு மோதிரம் பண்ணி போடுங்க” என்று கண்டிஷனாக சொன்னாள்.

’சரி,சேகருக்கு நம்ப கமலாவை ரொம்ப பிடிச்சு இருக்கு.ஒரு சவரன்லே மோதிரத்தே எப்படியாச்சும் கடன் வாங்கிப் போட்டு விடலாம்’ என்று நினைத்து ராஜ் உடனே “சரிங்க, நீங்க சொன்னா மாதிரியே நாங்க கமலாவுக்கு ஒரு சவரன்லெ மோதிரம் போடறோமுங்க”என்று சொல்லி ஒத்துக் கொண்டான்.சேகரும் கமலாவும் சந்தோஷப் பட்டார்கள்.‘தான் சொன்னதுக்கு பொண்ணோட அப்பா ஒத்துக் கிட்டாறே’ என்று சந்தோஷபட்டு கொண்டு “நீங்க கமலாவுக்கு நல்லா சமைக்க கத்துக் குடுத்து இருக்கிங்களாங்க.கல்லாணம் கட்டிக் கிட்டு அவ எங்க வூட்டுக்கு வந்தா, சேகருக்கு அவ சமைச்சு போட வேண்டி இருக்குமேங்க.என்னால் ரொம்ப குனிஞ்சி,நிமிந்து எல்லாம் வேலை செய்ய முடியாதுங்க.கமலா தான் சமையல் வேலை செய்யணுங்க எங்க வூட்லே.அதாங்க நான் கேட்டேன்” என்று சொல்லி நிறுத்தினாள் செங்கமலம்.செங்கமலம் சொன்னதைக் கேட்டு திடுகிட்டுப் போனாள் தேவி.’இந்த அம்மா என்ன நம்ம கமலாவை ஒரு சமையல்காரியா ஆக்கி விட போறாங்களா’ என்று யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தாள்.உடனே ரத்தினம் ‘அவங்களுக்கு நம்ம கமலாவை ரொம்பப் பிடிச்சுப் போச்சு,அவங்க கல்லாணம் ஆனப்பிறவு அவ தான் எங்க வூட்லே சமைக்கணும்’ ன்னு சொல்றாங்களே’ என்று நினைச்சு சந்தோஷத்துடன் “அவளுக்கு நல்லா சமைக்க வருங்க. கல் லாணம் ஆவறதுக்குள்ளாற நான் இன்னும் மீதி சமையலை எல்லாம் கத்து குடுத்து விடறேங்க.நீங்க கவலை படவே வேணாம்¡ங்க”என்று சொன்னாள் உடனே செங்கமலம்.“சரிங்க.கமலா சேகர் கல்யா ணம் நடக்கறதுள்ளாற அம்மாவும்,ஆயாவும் கமலாவுக்கு எல்லா சமையலும் கத்துக்குடுத்து விடுங்க” சேகருக்கு விதம் விதமா சாப்பிட ரொம்பப் பிடிக்கும்” என்று சொன்னாள்.அந்த நேரம் பாத்து கமலா எல்லோரும் குடிச்ச ‘டீ’ ‘க்லாஸ்களை’க் கொண்டு போய் உள்ளே வைத்து விட்டு வர போனாள். ரத்தினமும் தேவியும் அவள் பின்னா¡யேப் போனார்கள்.

ராஜ் சேகரையும் அவன் அம்மாவையும் பார்த்து “கொஞ்சம் இரு சேகர்,நான் உள்ளே போய் கொஞ்சம் பேசி விட்டு வாரேன்”என்று சொன்னதும் செங்கமலம் “ஆமாங்க,நீங்க அவங்க மூனு பேரை யும் பாத்து பேசி அவங்க சம்மதத்தையும் கேட்டு கிட்டு வாங்க.எல்லோருக்கும் சம்மதம்ன்னா தாங்க நாம இந்த கல்லாணத்தை செய்ய முடியும். போங்க” என்று கொஞ்சம் அதட்டலாகவே சொன்னாள். உடனே ராஜ் “தப்பா எடுத்தாகாதீங்க. இதோ நான் ரெண்டு நிமிஷத்திலெ வந்து விடறேங்க” என்று சொல்லி விட்டு உள்ளே போனான்.ரத்தினம் கமலாவை பாத்து ”கமலா,உனக்கு அந்த சேகர் பையனைப் பிடிச்சு இருக்கா”என்று கேட்டு கொண்டு இருந்தாள்.அதற்கு கமலா தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெக்கப்பட்டுக் கொன்டே”பிடிச்சு இருக்கு ஆயா” என்று சொல்லி கொண்டு இருந்தாள்.உடனே தேவி அவள் மாமியாரை பார்த்து “அத்தே,இந்த பையன் வேணாம். ரொம்ப சாதாரண வேலை தான் செஞ்சு வறான்.போதாததுக்கு பையன் மாமியார் வேறே கூடவே இருந்து வறாங்க.அந்த அம்மாவும் சாதாரணமா பேசாம,நாம போடற நகைக்கு மேலே ‘இன்னும் ஒரு சவரனுக்கு ஒரு மோதிரம் போடணும்’ ன்னு ரொம்ப ‘கண்டிஷனா’ வேறே பேசி வறாங்க” என்று தன் அபிப்பிராயத்தை சொன்னாள்.எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான் ராஜ்.மருமக சொன்னதுக்கு “தேவி,இப்ப அவங்க பையன் கல்லாணம் பண்ணும் போது அப்படித் தான் ‘கண்ஷனா’ பேசுவாங்க.கமலா சேகரைக் கல்யாணம் கட்டிக் கிட்டுப் அவங்க வூட்டுக்குப் போய், சேகருக்கும்,அவங்களுக்கும் நல்லா சமையல் செஞ்சிப் போட்டு,அவங்க ரெண்டு பேரையும் நல்லாப் பாத்துக் கிட்டு வந்தா,அவங்க கமலா பேர்லே ரொம்ப ஆசையா இருந்து வருவாங்க.ராஜ் வேறே ‘நாங்க ஒரு சவரன்லே மோதிரம் போடறோமுங்க’ன்னு ஒத்து கிட்டு இருக்கானே” என்று பதில் சொன்னாள் ரத்தினம்.“ஆமாம் தேவி,அம்மா சொல்வது ரொம்ப சரி. நாளா வட்டத்திலே ஒருத்தரை ஒருந்தர் நல்லா புரிஞ்சுக் கிட்டாங்கன்னா அவங்க சந்தோஷமா இருந்து வருவாங்க.நீ வீணா கவலைப் படாதே” என்று சொல்லி எப்படியாவது இந்த இடத்தை கமலாவுக்கு முடிச்சி விடணும் என்பதில் குறியாய் இருந்தான் ராஜ்.“இதோ பாருங்க,நம்ப கமலாவுக்கு இன்னும் நல்ல இடத்திலே,இன்னும் நல்ல வேலை செஞ்சி வர பையணா பாத்து நாம கல்லாணம் செஞ்சு வக்கலாங்க.பையன் ரொம்ப சுமாரான வேலை தான் செஞ்சி வராங்க”என்று மறுபடியும் சொன்னாள்தேவி .இவர்கள் மூனு பேரும் பேசி வருவதைக் கவனித்துக் கொண்டு இருந்தாள் செந்தாமரை.அவளுக்கு அம்மா சொல்வது ரொம்ப நியாயமாகப் பட்டது. இருந்தாலும் ‘நாம் ரொம்ப சின்னப் பொண்ணு.பொ¢யவங்க பேசும் போது நாம குறுக்கே ஓன்னும் பேசக் கூடாது.அது தப்பாப் போயிடும்’ என்று நினைத்து அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டு இருந்தாள்.

தேவி சொன்னது ரத்தினத்துக்கும் ராஜ்ஜுக்கும் பிடிக்கவில்லை.உடனே ரத்தினம் தேவியைப் பார்த்து “தேவி,கல்லாணம் செய்துக் கொள்ளப் போற கமலாவே ‘எனக்கு சேகரைப் பிடிச்சி இருக்கு’ ன்னு சொல்லும் போது நாம அவளுக்கு பிடிச்ச பையன கல்லாணம் கட்டி வைக்கிறதிலே ஒரு தப்பும் இல்லே.பேசாம இந்தப் பையனையே நாம கமலாவுக்குக் கல்லாணம் கட்டி வச்சிடலாம்ன்னு எனக்குத் தோணுது” என்று சொன்னாள்.ரத்தினம் சொன்னது தேவிக்கு பிடிக்கவில்லை.அவள் உடனே ”இதோ பாருங்க.கமலா ரொம்ப சின்னப் பொண்ணு.ஒரு வயசுப் பையனைக் கொண்டு வந்து அவ முன்னாலெ நிறுத்தி ‘நீ இந்தப் பையனை கல்லாணம் கட்டிக்கிறயா’ன்னு கேட்டா,அவ தனக்கு இருக்கிற வாலிப கல்லாண ஆசையிலே ‘சரி’ ன்னு தான் தலையை ஆட்டுவா.அவ வயசு அப்படி.அவளுக்கு அந்த கல் லாண ஆசை அவ கண்ணை மறைச்சிடும்.பொ¢யவங்க நாம தான் பாத்து அவளுக்கு ஒரு நல்ல இடத் திலே கல்லாணம் செஞ்சி வக்கணும்”என்று அவள் சொன்னதையே சொல்லி வந்தாள்.ராஜ் தன் பொறுமையை இழந்து விட்டான்.அவன் உடனே ”இதோ பார் தேவி,சேகர் இன்னும் சின்ன பையன். அவங்க வூட்லே நம்ம கமலவை சேத்தா மூனு பேருங்க தான்.நாளைக்கே அவன் ஒரு மேஸ்திரி கூட ஆவலாம்.நீ ரொம்ப கவலை படாம இருந்து வா.சேகரைக் கல்லாணம் கட்டிகிட்டா கமலா ஒரு கஷ்டமும் இல்லாம சந்தோஷமாத் தான் இருந்து வருவா.சேகரை விட இன்னும் அதிகம் சம்பளம் வாங்கும் பையனா நான் கமலாவுக்குப் பாத்தா அவங்க பையனுக்கு கேக்கறதே எல்லாம் நம்மால் போட்டு கல்லாணத்தே செய்ய முடியாதே.சேகர் அப்படி ஒன்னும் கேக்கலே தேவி.நாம முடிஞ்சதை செஞ்சி கமலா கல்லாணத்தே சந்தோஷமா செஞ்சி வரலாம்.நீ ஒன்னும் சொல்லாம பேசாம இந்தக் கல்லாணத்துக்கு சம்மதம் சொல்லு” என்று கெஞ்சினான்.தேவிக்கு என்ன சொல்வது என்றே புரிய வில்லை.தேவி எங்கோ பார்த்து யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தததைப் பார்த்த ராஜ் அவளைப் பாத்து “தேவி இப்பவே ரொம்ப நேரம் ஆயிடுச்சி.நாம இன்னும் ரொம்ப ‘லேட்’ பண்ணா, அவங்க நமக்கு இந்தப் பையனைப் பிடிக்கலேன்னு நினைச்சு அவங்க எழுந்து போயிடப் போறாங்க. ’சரி’ ன்னு சொல்லு தேவி” என்று அவசர படுத்தினான்.வேறே ஒரு வழியும் தெரியாததால் தேவி ராஜ் கேட்டதற்கு வேண்டா வெறுப்பாக “சரியா.நீங்க ஆசைப் படுகிற மாதிரியே செஞ்சி விடய்யா” என்று சொல்லி விட்டாள்.உடனே ராஜ் வெளியே வந்து ”எங்க எல்லாருக்கும் ரொம்ப சம்மதங்க இந்தக் கல்லா ணத்திலே”என்று சிரித்துக் கொண்டெ சொன்னான்.ரத்தினமும் தேவியும் அவன் பின்னாலே வந்து நின்றுக் கொண்டு இருந்தார்கள்.செங்கமலம் ராஜ்ஜைப் பார்த்து “நீங்க மூனு பேரும் ரொம்ப நேரமா பேசிக் கிட்டு இருந்தீங்க.நான் சேகர் கிட்டே ‘சேகர்,அவங்களுக்கு இந்த கல்லாணத்திலெ சம்மதம் இல்லே போல இருக்குடா’ ன்னு சொல்லிக் கிட்டு இருந்தேன்” என்று சொன்னாள்.பயந்துப் போன ராஜ் ”அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க.எங்க அம்மாவுக்கு கொஞ்சம் முடியாம இருந்திச்சிங்க.அதாங்க கொஞ்சம் நேரம் ஆயிடுச்சிங்க.நீங்க தப்பா எடுத்தாதீங்க” என்று தன் கைகளைக் கூப்பி சொன்னான். கொஞ்ச நேரம் போனதும் ரெண்டு குடும்பமும் ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் பேசிக் கொண்டு இருந்து விட்டு,சேகர் கமலாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்றதிலே தங்களுக்கு சம்மதம் என்று செங்கமலம் சொல்லி விட்டாள்.கொஞ்ச நேரம் கழித்து ராஜ் ”நான் பக்கத்திலே இருகிற கோவில் ஐயரைப் பார்த்து ஒரு நல்ல நாள் குறிக்கச் சொல்லி விட்டு அவர் சொன்னதும்,நான் சேகர் கீட்டே சொல்லி விடறேங்க. அந்த நாள்ளே அந்த பிள்ளையார் கோயிலிலே கல்யாணத்தை வச்சுக் கிட்டு,ரெண்டு பேரும் மாலை மாத்திக் கிட்டு, அப்புறமா அங்கு இருக்கும் ஐயரை மந்திரம் சொல்லி சேகரை கமலாவுக்கு தாலி கட்ட சொல்லாலாங்க.கல்யாணம் நல்ல படியா முடிஞ்சுப் போன பிறவு,நாம எல்லாரும் பக்கத்திலே இருக்கிற ஒரு ஹோட்டலுக்கு போய் மதியம் ஒரு ‘ஸ்பெஷல்’ சாப்பாடு சாப்பிட்டு விட்டு வரலாம்.உங்களுக்கு சம்மதமாங்க”என்று கேட்டான்.உடனே சேகரும் அவன் அம்மாவும் “உங்க கல்யாண ஏற்பாடு எங்களு க்கு ரொம்ப சம்மதங்க.அப்படியே செய்யலாங்க” என்று ராஜ் சொன்னதுக்கு சம்மதம் சொன்னார்கள். கொஞ்ச நேரம் எல்லோரும் பேசிக் கொண்டு இருந்து விட்டு கிளம்பத் தயாரானார்கள்.சேகர் அவன் அம்மா¨வை அழைத்து கொண்டு சந்தோஷத்துடன் குடிசையை விட்டு வெளியே கிளம்பினான். ராஜ்ஜும் தேவியும் சேகருடனும்,அவன் அம்மாவுடனும் வாசல் வரைக்கும் போய் அவர்களை ஒரு ஆட்டோப் பிடித்து ஏத்தி விட்டு குடிசைக்கு வந்தார்கள்.

குடிசைக்கு திரும்பி வந்ததும்“அம்மா,நீங்க கமலாவுக்கு எப்படி சோறு ஆக்குவது,இட்லி சுடு வது,குழம்பு வக்கிறது,சட்டினி அரைக்கறதுன்னு எல்லாத்தையும் நல்லா சொல்லி கொடுங்க.சேகர் அம்மா பாக்கிறதுக்கு ரொம்ப ‘கெடு’ ‘பிடி’யான பொம்பளே மாதிரி தெரியுது.கமலா அவங்க வூட்லே சமைக்க கஷ்டப் படாம இருந்து வரணும்.அந்த அம்மா கிட்டே மாட்டிக் கிட்டு பாவம் கமலா அந்த வூட்டிலே கஷ்டப் படாம இருக்கணும்மா” என்று சொன்னான் ராஜ்.“நீ கவலைப் படாதே ராஜ். நான் கமலாவுக்கு எல்லா சமையலையும் சொல்லிக் குடுத்திடறேன்” என்று சொல்லி விட்டு கமலாவை கூப் பிட்டு “கமலா,நீ இப்போதில் இருந்து நான் சமையல் செய்யக் கொளள என் கூட வந்து நின்னுக் கிட்டு எப்படி சமையல் செய்யறதுன்னு நல்லா கத்துக்கணும்.புரிதாம்மா” என்று சொன்னாள் ரத்தினம்.கமலா உடனே ”சரி ஆயா,நான் உங்க கூட நின்னுக் கிட்டு நீங்க சமையல் செய்யும் கொள,எல்லாத்தையும் நான் கத்துக்கிறேன்”என்று சந்தோஷத்தில் சொன்னாள்.அடுத்த நாள் முதல் கமலா தன் ஆயா கிட்ட நின்னுக் கிட்டு இருந்து,அவங்க இட்லி சுடுவது,எப்படி,சட்னி எப்படி அறைப்பது,சோறு எப்படி ஆக்குவது,சாம்பார் எப்படி வைப்பது போன்ற எல்லா வேலைகளையும் சந்தோஷமாக கற்றுக் கொண்டு வந்தாள்.தனக்கு சேகருடன் கல்யாணம் நிச்சியம் ஆகி விட்டதை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டு வந்தாள்.அவள் மனம் ஆகாயத்தில் பறந்துக் கொண்டு இருந்தது.ரெண்டு நாள் போனதும் ரத்தினம் ராஜ்ஜை பார்த்து “ராஜ் இந்தக் கல்லாணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுளையும் சீக்கிரமா பண்ணு ப்பா”என்று சந்தோஷத்தில் சொன்னாள்.உடனே ராஜ் ”நான் அந்தப் பிள்ளையார் கோவிலில் இருக் கும் ஐயரைப் பார்த்து கமலா சேகர் கல்லாணத்துக்கு ஒரு நல்ல நாள் குறிக்க சொல்றேன்ம்மா. அந்த நல்ல நாள்லே கமலா சேகர் கல்லாணத்தை செஞ்சு முடிச்சிடலாம்மா” என்று சொன்னான்.

ராஜ் அவன் நண்பர்களைப் பார்த்து கமலாவின் கல்யாணத்திற்கு முப்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி வந்தான்.குடிசைக்கு வந்து தன் அம்மாவிடம் “அம்மா,என் நண்பங்க நாலு பேர் அவங்க கிட்டே இருந்த பணத்தை எனக்குக் கடனா குடுத்து இருக்காங்க.மொத்தம் முப்பதாயிரம் ரூபாய். இந்தாம்மா பணம்.இந்தப் பணத்தை பீரோவில் வச்சு பூட்டி ஜாக்கிரதையா பாத்து வாம்மா” என்று சொல்லி அவன் கொண்டு வந்த பணத்தை ரத்தினத்திடம் கொடுத்தான் ராஜ்.உடனே ரத்தினமும் அந்தப் பணத்தை பீரோவில் வச்சுப் பூட்டி சாவியை தன் இடுப்பில் சொருகிக் கொண்டாள்.தேவி மட்டும் ‘இந்த மனுஷன் இப்படி அவன் நண்பர்ங்க கிட்டே கடன் வாங்கி கிட்டு வறாரே.எப்படி அந்த கடனை எல்லாம் இவர் அடைக்கப் போறார்’என்று மிகவும் கவலைப் பட்டு வந்தாள்.அடுத்த நாள் கழித்து ராஜ் அருகில் இருந்த பிள்ளையார் கோவிலுக்குப் போய் அங்கு இருந்த ஐயரைப் பார்த்து “சாமி,நான் என் முதல் பொண்ணு கமலாவுக்கு சேகர் என்கிற பையனை கல்யாணத்துக்கு நிச்சியம் பண்ணி இருக்கோம்.அவங்க ரெண்டு பேர் கல்யாணத்தை இந்தக் கோவிலிலேயே வச்சுக்கலாம்ன்னு இருக்கோம்.நான் அதுக்கு இந்தக் கோவிலிலே பணம் கட்டி விட்டு வந்து இருக்கேன் சாமி.நீங்க அவங்க ரெண்டு பேர் கல்லா¡ணத்துக்கு ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுங்க.அப்புறமா நீங்களே கல்யாண மந்திரம் எல்லாம் சொல்லி தாலி கட்ட ஏற்பாடு பண்ணுங்க நான் உங்களுக்கு வெத்திலை பாக்கு தேங்காய் பழத்துடன் நீங்க கேட்ட பணமும் தரேன் சாமி” என்று கேட்டுக் கொண்டான். உடனே அந்த குருக்கள் தன் மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பஞ்சாங்கத்தைப் பிரித்துப் பார்த்து கமலா சேகர் கல்யாணத்திற்கு ஒரு நல்ல முஹ¤ர்த்த நாளாய் பார்த்தார்.பிறகு பஞ்சாங்கத்தை மூடி விட்டு “இந்த மாசம் இருபதாம் தேதி அதாவது வர இங்கிலிஷ் மாசம் ஐஞ்சாம் தேதி வெள்ளீ கிழமை காத்தாலே மணி பத்தில் இருந்து பதினொன்னு வரை முஹ¥ர்த்தம் ரொம்ப நன்னா இருக்கு.நீங்க அன்னைக்குக் காத்தாலே எல்லோரையும் அழைச்சுண்டு இங்கே வந்துடுங்கோ நான் அவா ரெண்டு பேர் கல்யாணத்தை சுபமா பண்ணி வைக்கிறேன்.அப்புறமா நீங்க சொன்னா மாதிரி எனக்கு நான் கேட்ட தக்ஷணையைப் பண்ணி விடுங்கோ” என்று சொன்னார். உடனே ராஜ் ”ரொம்ப சந்தோஷம் சாமி.நீங்க சொன்னா மாதிரியே நான் எல்லாரையும் இட்டுக் கிட்டு, காத்தாலே ஒரு ஒன்பது மணிக்கெல்லாம் கோவிலுக்கு வந்திடறேன்.நீங்க என் பொண்ணு கல்லாணத்தை நல்ல விதமா முடிச்சிக்குடுங்க”என்று சொல்லி விட்டு தன் குடிசைக்கு வந்தான் ராஜ்.

குடிசைக்கு வந்து ராஜ் தன் அம்மாவையும் தேவியையும் கூப்பிட்டு “நான் பக்கத்திலே இருக்கிற பீள்ளையார் கோவிலுக்கு போய் கமலா சேகர் கல்யாணத்துக்கு பணம் கட்டி விட்டு, அங்கு இருக்கிற குருக்கள் ஐயாவை பாத்து நம்ம கமலாவுக்கும், சேகருக்கும் கல்யாணத்துக்கு நாள் குறிக்க சொன்னேன்.அவர் பஞ்சாங்கத்தை பாத்து ‘இந்த மாசம் இருபதாம் தேதி அதாவது வர இங்கிலிஷ் மாசம் ஐஞ்சாம் தேதி வெள்ளீ கிழமை காத்தாலே மணி பத்தில் இருந்து பதினொன்னு வரை முஹ¥ர்த்தம் ரொம்ப நல்லா இருக்குது.நீங்க அன்னைக்குக் காத்தாலே எல்லோரையும் அழைச்சுக் கிட்டு இங்கே வந்து விடுங்க.நான் அவங்க கல்யாணத்தை சுபமா பண்ணி வக்கிறேன்’ ன்னு சொல்லி ட்டார்.இப்ப நாம நம்ம உறவுக்காரங்க,தேவி வூட்டுலே எல்லாருக்கும் விஷயத்தை தெரிவிச்சு அவங்க ளை கமலா கல்யாணத்துக்கு வர சொல்லணும்.அம்மா நீ ஊர்லே இருக்கிற உங்க தங்கச்சிக்கும் போன்லே சொல்லி அவங்களையும் கல்யாணத்துக்கு வரச் சொல்லு.நான் என் நண்பர்ங்க ஐஞ்சு பேரை மட்டும் கல்லா ணத்துக்கு அழைச்சிடறேன்.இங்கே பக்கத்திலே உங்களுக்கு ரொம்ப தெரிஞ்ச ஒரு நாலு பேரை மட் டும் கல்யாணத்துக்குக் கூப்பிடுங்க.நான் மொத்த ஒரு முப்பது பேருக்கு வடை, பாயசத்தோட மதியம் சாப்பாடு சொல்லலாம்ன்னு இருக்கேன்.நாம இன்னும் நிறைய பேரைக் கல்யாணத்துக்குக் கூப்பிட்டா செலவு அதிகமா ஓடிப் போயிடுமோன்னு பயமா இருக்குது” என்று சொல்லி நிறுத்தினான்.“ஆமாம் ராஜ்,நீ அதிகம் பேரை கல்யாணத்துக்கு கூப்பிட்டா மதியம் சாப்பா ட்டு செலவு ரொம்ப அதிகம் ஆவும் முப்பது பேரே கமலா கல்லாணத்துக்கு போதும் ராஜ்” என்று தன் பிள்ளை சொன்னதை ஆமோதித்தாள் ரத்தினம்.

அடுத்த நாள் ராஜ் வேலைக்குப் போனதும் அங்கு சேகரைப் பார்த்து “சேகர், நான் உங்க கல்லா ணத்திற்கு நாள் பாத்து இருக்கேன்.எங்க வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிற பிள்ளையார் கோவிலிலே வச்சுக்கறதா ‘ப்லான்’ பண்ணி இருக்கோம்.அந்தக் கோவிலிலே கல்லாணம் பண்ண பணமும் கட்டி விட்டேன்.அங்கு இருக்கும் குருக்கள் சாமி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிக் கொடுத்து இருக்கார்.வர இங்கிலிஷ் மாசம் ஐஞ்சாம் தேதி,வெள்ளிகிழமை காத்தாலே பத்து மணியில் இருந்து பதினோரு மணி வரை கல்யாண முகூர்த்தம் இருக்குதாம்.அதனாலே நீ உன் அம்மாவையும்,உங்க உறவுக்காரங் களையும்,உன் நண்பங்களையும் கூட்டிக் கிட்டு பிள்ளையார் கோவிலுக்கு வந்து விடு.நான் சொல்றே ன்னு தப்பா எடுத்துகாதே.நீ ரொம்ப பேரை கல்யாணத்துக்கு கூப்பிடாதே.முக்கியமானவங்களை மட்டும் கூப்பிடு.அதிகம் பேரைக் கூப்பிட்டா வீணா செலவு தான் அதிகம் ஆயிடும்.நான் சொல்றது உனக்கு நல்லா புரியுன்னு நினைக்கிறேன்”என்று அவன் கையைப் பிடித்து கேட்டான். “சரி, மேஸ்திரி ,நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுது.நான் எனக்கு தெரிஞ்ச ரொம்ப முக்கியமானவங்களை மட்டும் கல்யாணத்துக்குக் கூப்பிடறேன்” என்று சொன்னதும் ராஜ் அவன் கைககளை பிடித்துக் கொண்டு “ரொம்ப நன்றி சேகர்.எங்கே நான் சொன்னதை நீ தப்பா எடுத்துகிட்டியோன்னு நான் ரொம்ப பயந்தேன்ப்பா” என்று சொல்லும் போது அவன் கண்களில் நீ துளித்தது. உடனே ராஜ் அன்று சாயந்திரமே தேவியை அழைச்சுக் கிட்டு தேவியின் அப்பா வீட்டுக்கு போய் அவர்கள் எல்லோரையும் கமலா கல்யாணத்திற்கு அழைத்து விட்டு வந்தான்.ரத்தினம் செல் போனில் ஊரில் இருக்கும் அவ தங்கை முத்தம்மாவைக் கூப்பிட்டு, கமலா கல்யாண தேதியை சொல்லி,அவளையும் அவ வீட்டுக் காரையும் கல்யாணத்துக்கு வரச் சொன்னாள்.ரத்தினம் கமாலாவுக்குக் கல்யாணம் என்கிற சந்தோஷ சமாசாரத்தை கேள்விப் பட்டவுடன் முத்தம்மா அந்த செல் போனிலேயே ”ரத்தினம்,உன் பேத்திக்கு கல்யாணம்ன்னு கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.நான் அவசியம் கல்லாணத்துக்கு சென்னைக்கு வாறேன்.இங்கே மழையே இல்லே. நாங்க விவசாயமே மூனு போகமா பண்ணவே இல்லே.நானும் மச்சானும் சாப்பாடுக்கே ரொம்ப கஷடப் பட்டு வறோம் ரத்தினம்.அதனால்லே நீ தப்பா எடுத்துக்கலீ ன்னா எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்ப முடியுமா.நான் மச்சனையும் அழைச்சுக் கிட்டு கமலா கல்லாணத்துக்கு வந்துட்டு போறோம். என்னை தப்பா எடுத்துக்காதே ரத்தினம்.இப்ப எனக்கு ரொம்ப பண முடை” என்று சொன்னதும் ரத்தினத்துக்கு என்ன சொல்வது என்று கொஞ்ச நேரத்திற்கு புரியவில்லை.கொஞ்ச நேரம் யோஜனை பண்ணின ரத்தினம் “சரி,முத்தம்மா,நான் ராஜ்ஜுக்குக் கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு, நான் உனக்கு ஆயிரம் ரூபாயை மணி ஆர்டர் பண்றேன்.பணம் கிடைச்சதும் நீ மச்சானை இட்டுக் கிட்டு சென்னைக்கு கமலா கல்லாணத்துக்கு ஒரு நாள் முன்னமே வந்து சேரு”என்று சொல்லி விட்டு செல் போனை ‘கட்’ பண்ணினாள்.ரத்தினம் ராஜ் சந்தோஷமா இருந்தப்போ ரத்தினம் தங்கச்சி முத்தம்மா சொன்னதைச் சொன்னாள்.உடனே ராஜ் ”என்னம்மா, நானே கல்யாணத்துக்கு ஆவுற செலவை குறைக்க என்ன பண்ணலாம்,எந்த செலவை குறைச்சு வரலாம்ன்னு யோஜனை பண்ணிக் கிட்டு இருக்கேன்,நீ இந்த சமயத்திலே சித்தி நம்மை ஒரு ஆயிரம் ரூபாய் மணி ஆர்டர் பண்ணச் சொன்னாங்கன்னு சொல்றே.என்ன பண்றது.சித்தியே வாய் விட்டு கேட்ட பிறவு நாம பணம் அனுப்பாம இருக்க முடியாது.இந்தா இந்த பணத்தை அவங்களுக்கு அனு ப்பி வைம்மா” என்று சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டே ஒரு ஆயிரம் ரூபாயை அம்மா கையிலே கொடுத்தான்.அடுத்த நாளே ரத்தினம் அவ தங்கைக்கு ராஜ் கொடுத்த ஆயிரம் ரூபாயை மணி ஆர் டர் பண்ணீனாள்.அன்று சாயந்திரமே அந்தக் குடிசைப் பகுதியிலே ரொம்ப தெரிஞ்ச ஒரு ஐஞ்சு பேரை மட்டும் ரத்தினமும் தேவியும்,கமலா கல்யாணத்திற்கு வச்சு இருந்த தேதியையும் முஹ¥ர்தத ‘டயத்தியும்’ சொல்லி பிள்ளையார் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.ராஜ்ஜும் தனக்கு ரொம்ப வேண் டிய நண்பர்கள்,கடன் கொடுத்த நண்பர்கள் ஐஞ்சு பேரை கமலா கல்யாணத்துக்கு அழைச்சு விட்டு வந்தான்.
ராஜ்ஜும் தேவியும் ஜவுளிக் கடைக்குப் போய் கமலாவுக்கு மூனு நல்ல புடவையும்,தனக்கு ரெண்டு புடவையும்,ஒரு தாலியையும்,ரத்தினத்துக்கு ரெண்டு புடவையும், எல்லா புடவைகளுக்கும் ‘மேச்சிங்க் ப்லவுஸ¤ம்’, ராஜ்ஜுகு ஒரு புது ‘ஷர்ட்டும்’ புது வேஷ்டியும்,செந்தாமரைக்கு ஒரு பாவாடை சட்டையும்,மாப்பிள்ளை சேகருக்கு ரெண்டு ஷர்ட்டும்,ரெண்டு ‘பான்ன்ட்டும்’ ரெண்டு வேஷ்டியும், ரெண்டு துண்டும்,சேகரின் அம்மாவுக்கு ஒரு நல்ல புடவையும் ‘ப்லவுஸ¤ம்’ வாங்கிக் கொண்டு குடி சைக்கு வந்தார்கள்.கமலா கல்யாண நாள் வந்தது.தேவி,கமலாவை நன்றாகக் குளிப்பாட்டி அவ கல்யாணத்துக்கு வாங்கி இருந்த ஒரு நல்ல புடவையும், ‘ப்லவுஸையும்’ போட்டு விட்டு, அவ தலை யிலே நிறைய பூவை எல்லாம் வைத்து அலங்காரம் பண்ணீ,அவ காதுகளிலே அவ வாங்கி வந்த ஜிமிக்கிகளை போட்டு விட்டாள்.ரத்தினமும், ராஜ்ஜும், ஜிமிக்கி ரொம்ப நல்லா இருக்குது என்று தேவிக்கு சொன்னார்கள்.உடனே கமலா ”அம்மா,எனக்கு இந்த ரெண்டு ஜிமிக்குங்களும் என் காதுக ளுக்கு ரொம்ப நல்லா இருக்கும்மா” என்று சந்தோஷத்துடன் சொன்னாள்.செந்தாமரையும் “ஆமாம் மா,அக்காவுக்கு நீங்க வாங்கிப் போட்டு இருக்கிற ஜிமிக்கிங்க அக்கா காதுகளுக்கு ரொம்ப நல்லா இருக்குதும்மா” என்று சொல்லி சந்தோஷப் பட்டாள்.ராஜ் மார்கெட்டுக்குப் போய் பூக்கடைக்குப் போய் ரெண்டு பொ¢ய மாலைகள்,நிறைய பூ,தேங்காய்கள்,வெத்திலை,பாக்குப் பொட்டலம் நிறைய வாழைப் பழம்,ஆப்பிள்,சாத்துக்குடி,ரெண்டு கிலோ ஸ்வீட்,எல்லாம் வாங்கி கொண்டு அந்து பிள்ளையார் கோவிலிலே வைத்து விட்டு குடிசைக்கு வந்தான்.மணி ஒன்பது அடித்ததும்,ராஜ் எல்லோரையும் அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு வந்தான்.ராஜ் பிள்ளையார் கோவிலுக்கு வந்த பத்து நிமிஷத்துக்கு எல்லாம் சேகர், அவன் அம்மா,அவன் உறவுக்காரங்க, அவனு டைய நண்பர்கள்,எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக பிள்ளையார் கோவிலுக்கு வந்தார்கள். ராஜ்ஜும், தேவியும் உடனே சேகர் கிட்டே அவர்களுக்கு வாங்கி வந்த ஜவுளியை கொடுத்து போட்டுக் கொள்ளச் சொன்னார்கள்.சேகரும்,அவங்க கொடுத்த புது ‘டிரஸ்ஸை’ப் போட்டுக் கொண்டு கல்யாண த்திற்கு ரெடி ஆனான்.செங்கமலமும் புது புடவையையும் ‘ப்லவுஸையும்’ போட்டுக் கொண்டாள்

ராஜ் பிள்ளையார் கோவிலுக்குள் போய் அங்கு இருந்த மனேஜா¢டம் அவன் கல்யாணத்துக்கு பணம் கட்டின ரசீதை காட்டி விட்டு,பிறகு பிள்ளையார் சன்னதிக்கு வந்தான்.ராஜ் கோவில் குருக்கள் ஐயா¢டம் “சாமி,நான் பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேரையும் அழைச்சு கிட்டு வந்து இருக்கேன். மாலைகளும் வாங்கியாந்து இருக்கேன்.இந்தாங்க தாலிக் கயிறு.இது கல்யாணத்துக்கு கோவிலில் பணம் கட்டின ரசீது. இப்ப நீங்க மந்திரம் சொல்லி கல்யாணத்தை செஞ்சு வையுங்க சாமி” என்று சொல்லி தன் கையைக் கட்டிக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான்.அந்த குருக்கள் ராஜ் கொடு த்த எல்லாவற்றையும் கையில் வாங்கிக் கொண்டு கமலா சேகர் ரெண்டு பேரையும் கழுத்தில் மாலை யைப் போட்டுக் கொள்ளச் சொல்லி விட்டு உரக்க மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.பாதி மந்திரம் சொல்லிக் கொண்டு இருக்கும் போது மந்திரத்தை நிறுத்தி விட்டு ரெண்டு பேரையும் மாலைகளை மாத்திக் கொள்ளச் சொன்னார் அந்த குருக்கள்.அவர்கள் மாலையை மாத்திக் கொண்ட பிறகு மறுபடி யும் மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.கடைசியில் தாலி கட்டும் மந்திரத்தை சொல்லி சேகரை கமலா கழுத்தில் கட்ட சொன்னார்.சேகரும் குருக்கள் சொன்னா மாதிரி கமலா கழுத்தில் கட்டி மூனு முடிச்சு கள் போட்டான்.கல்யாணத்திற்கு வந்த எல்லோரும் பலமாகக் கையைத் தட்டி கரகோஷம் பன்ணினார் கள்.ராஜ் சேகர் கையை குலுக்கி தன் நன்றியைத் தெரிவித்தான்.சேகர் நண்பர்களும்,ராஜ் நண்பர்க ளும் சேகர் கையைக் குலுக்கி தங்கள் சந்தோஷத்தைத் தெரிவிதார்கள்.

ராஜ் ஒரு தட்டில் வெத்திலை, பாக்கு,பழம்,தேங்காய்,ஒரு ஆயிரம் ரூபாய் வைத்து அவருக்குக் கொடுத்து அவருக்கு தன் நன்றியைச் சொன்னான்.குருக்களும் ராஜ் கொடுத்த வெத்திலைப் பாக்கு தட்டில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு தன் இடுப்பில் சொருகிக் கொண்டு, வெத்தி லைப் பாக்கு தட்டை வாங்கி கொண்டார்.எல்லோரும் கொஞ்ச நேரம் கோவில் பிரகாரத்தில் உட்கார் ந்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள்.ராஜ் தான் வாங்கி வந்த ‘ஸ்வீட்’ பாக்கெட்டைப் பிரித்து எலோருக்கும் ‘ஸ்வீட்டை’த் தர ஆரம்பித்தான்.அப்போது தான் ராஜ் வந்து இருந்த பேரை எண்ணினான்.சுமார் நாப்பது ஐஞ்சு பேர்கள் இருந்தார்கள்.அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.அவன் ஹோட்டலில் முப்பது பேருக்குத் தான் மதியம் சாப்பாடு ‘ஆர்டர்’ கொடுத்து இருந்தான்.‘ஸ்வீட்’ பாக் கெட்டில் இருந்த ‘ஸ்வீட்டை’ முதலில் சேகர் அம்மா,சேகர் அவன் உறவினர்கள்,நண்பர்கள் இவர்களு க்கு எல்லாம் முழுசா கொடுத்து விட்டு அவன் நண்பர்கள்,உறவினர்களுக்கு பாதி பாதியாக உடைத்து கொடுத்துக் கொண்டே,“நான் அவசரத்லே ஒரு ‘ஸ்வீட்’ பெட்டியே வூட்லேயே வச்சு விட்டு வந்துட் டேன்.இப்போ வூட்டுக்குப் போய் அந்த ‘ஸ்வீட்’ பாக்கெட்டை’ கொண்டு வர ரொம்ப டயம் ஆவும். அதானால் தான் நான் ‘ஸ்வீட்டை’ ரெண்டா உடைச்சு தரேன்.என்னை தப்பா எடுத்துக்காதீங்க” என்று சிரித்தவாறே பல்லை காட்டிக் கொண்டே ஒரு பொய்யைச் சொன்னான் ராஜ்.மணி பன்னண்டு அடித்ததும் ராஜ் எல்லோரையும் அகுகில் இருந்த ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்து போனான். அவன் ஹோட்டல் மானேஜா¢டம் போய் ரகசியமாக ”சார், நான் முப்பது பேருக்கு தான் மதியம் சாப் பாடு ஆர்டர் உங்க கிட்டே சொல்லி இருந் தேன்.ஆனா இப்போ கல்யாணத்துக்கு நாப்பத்தைஞ்சு பேர் வந்து இருக்காங்க.நீங்க அவங்க எல்லாருக்கும் சாப்பாடு போடுங்க.நான் ‘எக்ஸ்ட்ரா’ பணம் எவ்வளோ ஆவுதே அதை தரேன்” என்று சொன்னதும் உடனே அந்த மானேஜர் “ஆவட்டுங்க,நீங்க அவங்களை எல்லாம் முதல்லே சாப்பிட சொல்லுங்க.நீங்க அதுக்குள்ளாற ‘எக்ஸ்ட்ரா’ பேருக்கு ஆவுற சாப்பாட்டு செலவுக்கு ரெண்டாயிரம் ரூபாய் பணத்துக்கு உடனே ஏற்பாடு பண்ணுங்க” என்று சொல்லி விட்டு, வந்தவர்களை எல்லாம் உட்காரச் சொல்லி சர்வரை கூப்பிட்டு அவர்களுக்கு சாப்பாடு பறிமாறச் சொன்னார்.

”சரிங்க,நான் இப்போ உடனே போய் பணத்தை எடுத்தாறேன்” என்று சொல்லி விட்டு தேவியையும் ரத்தினத்தியும் தனியா கூப்பிட்டு ”நான் இந்த ஹோட்டல்லே முப்பது பேருக்குத் தான் மதியம் சாப்பட்டுக்கு ஆர்டர் பண்ணி இருந்தேன்.ஆனா இப்போ பாத்தா நாப்பத்து ஐஞ்சு பேர் வந்து இருக்காங்க.அந்த ஹோட்டல் மானேஜர் ‘எக்ஸ்ட்ராவா’ ரெண்டாயிரம் ரூபாய் உடனே ஏற்பாடு பண்ணச் சொல்லி இருக்கார்.இந்தப் பணத்துக்கு இப்பொ திடீரென்று எங்கே போறதுன்னு தெரியலே” என்று தன் கையை பிசைந்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான்.எல்லார் எதிரிலும் ராஜ் கஷ்டப் படுவதைப் பார்த்த தேவி ராஜ்ஜை தனியா அழைத்து “ஏங்க உங்க நண்பர்களே கொஞ்சம் குறைச்சிக் கூப்பிடக்கூடாதுங்களா.இப்ப பாருங்க கல்லாண செலவு ரெண்டு ஆயிரம் ரூபா அதிகமா ஆயிடுச்சே” என்று அவள் கொஞ்சம் கடுமையாக கேட்டாள்.

“இல்லே தேவி,அவங்க எல்லாம் எனக்கு கடன் குடுத்து உதவினவங்க அவங்களே எப்படி நான் கூப்பிடாம இருக்கிறது சொல்லு.இந்த சேகர் பையன் பக்கம் தான் அதிகம் பேர் கல்யாணத்துக்கு வந்து விட்டு இருக்காங்க” என்று அழாமாட்டாத குரலில் சொன்னான் ராஜ்.”நான் இப்போ என் சங்கிலியை கழட்டித் தறேங்க.அதை பக்கத்திலே இருக்கிற ‘சேட்’ கடையிலே வச்சு பணத்தை வாங்கியாந்து ஹோட்டல் மானேஜர் கீட்டே குடு.இந்தா” என்று சொல்லி தன் கழுத்தில் போட்டு இருந்த சங்கிலி யை கழட்டிக் கொடுத்தாள் தேவி.தேவி கழட்டிக் கொடுத்த சங்கிலியை ‘சேட்’ கடையிலே அடகு வைத்து விட்டு ராஜ் அவர் கீட்டே இருந்து ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு வந்து ஹோட் டல் மானேஜா¢டம் கொடுத்தான்.கல்யாணம் முடிந்ததும் கமலாவுக்கு கண்களில் கண்ணீர் முட்டியது. அவள் அம்மாவையும்,ஆயாவையும்,தங்கை செந்தாமரையையும் பார்த்து “நான் போயாறேன்.நீங்க உங்க உடம்பை நல்லா கவனிச்சு வாங்க.செந்தாமு,நான் தான் படிக்கலே.நீயாவது நல்லா படிச்சு ஒரு நல்ல வேலையிலே சேந்து,நீறைய சம்பாதிச்சு வா.எனக்கு அது தான் ஆசை” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரை கண்களைத் துடைத்துக் கொண்டாள்.உடனே செந்தாமரை கமலாவைப் பார்த்து ”நான் நிச்சியமா நல்லாப் படிச்சு ஒரு நல்ல வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பாதிப்பேன்.நீ இப்போ அழக் கூடாது.கவலைப் படாம உங்க வூட்டுக்குப் போய் ரொம்ப சந்தோ ஷமா இருந்து வா அக்கா” என்று கமலாவுக்கு பதில் சொல்லி அனுப்பினாள்.உடனே ரத்தினமும் தேவியும் ”போற இடத்திலே நீ ரொம்ப சந்தோஷமா இருந்து வரணும் கண்ணு.நான் இதைத் தான் தினமும் அந்த கடவுள் கிட்டே வேண்டி வருவேன் கமலா.உன் புருஷன் கிட்டேயும்,மாமியார் கிட்டே நல்ல விதமா நீ நடந்து வந்து நல்ல பேரை வாங்கணும்.சந்தோஷமாப் போய் வாம்மா” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள்.எல்லோரும் போன பிறகு ராஜ் தன் அம்மாவையும்,செந்தாமரையையும் குடிசைக்கு அனுப்பி விட்டு தேவியை அழைத்துக் கொண்டு சேகர் கமலாவை அவர்களுடம் போய் அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வர ரெடி ஆனான்.தேவியும், ராஜ்ஜும் சேகருடனும்,அவன் அம்மாவுடனும் கூடப் போய் கமலாவை அவர்கள் வீட்டில் விட்டு வந்தார்கள்.கொஞ்ச நேரம் அவர்கள் வீட்டில் இருந்து விட்டு ராஜ்ஜும் தேவியும் கிளம்பும் போது கமலாவை பார்த்து “சந்தோஷமா இருந்து வாம்மா. “உன் புருஷன் கிட்டேயும்,மாமியார் கிட்டே நல்ல விதமா நீ நடந்து வந்து நல்ல பேரை வாங்கணும். எங்களுக்கு எப்ப எப்ப முடியுதோ அப்ப எல்லாம் உன்னே நாங்க வந்துப் பாக்கறோம்மா”என்று சொல்லி விட்டு தங்கள் கண்களைத் துடைத் த்துக் கொண்டார்கள்.

தேவி சேகரின் மாமியாரிடம் “அம்மா,கமலா ரொம்ப சொன்னப் போண்ணு. அவ ஏதாச்சும் சரியா பண்ணாத இருந்தா,கொஞ்சம் நீங்க அவளுக்கு சொல்லிக் குடுத்து வாங்க.அவ அதைக் கத்துக் கிட்டு,அதுக்கு அப்புறமா அவைகளை எல்லாம் சரியா செஞ்சி வருவா. கமலாவை உங்க சொந்தப் பொண்ணு போல நீங்க நினைச்சு அவளே சந்தோஷமா வச்சுக் கிட்டு வாங்க.நாங்க போ யிட்டு வறோம்மா”என்று தன் கண்களில் கண்ணர் மல்க கேட்டுக் கொண்டாள்.உடனே சேகர் மாமியார் “நீங்க கவலைப்படாம போய் வாங்க.எங்களுக்கு எல்லாம் தெரியுங்க.அவ சேகரோடு ஒழுங்கா குடித்தனம் பண்ணி வந்தா,அவ ஏங்க கஷ்டப் படப் போறா.எல்லாம் அவ இருந்து வரதுல்லே தாங்க இருக்கு.அவளை கஷ்டப் படுத்த நான் யாரோ இல்லிங்க.அவ மாமியார் தானுங்களேங்க.நீங்க நிம்மதி யா போய் வாங்க”என்று சொன்னதும் ராஜ்ஜுக்கும் தேவிக்கும் சேகரின் அம்மா இப்படி பட்டென்று சொன்னது ஒரு மாதிரியாய் இருந்தது.ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் தேவி “ஆமா ங்க நீங்க சொல்றது ரொம்ப சரிங்க.நீங்க கமலாவுக்கு யாரோ இல்லே.அவ மாமியார் தானே” என்று கொஞ்சம் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னாள் தேவி.பிறகு இருவரும் அவர்கள் மூனு பேர் கிட்டேயும் சொல்லிக் கொண்டு தங்கள் குடிசைக்குக் கிளம்பினார்கள்.

“ஏங்க, சேகர் இருந்து வர வீடு ரொம்ப சின்னதா இருக்குங்களேங்க. அந்த சின்ன இடத்திலே எப்படிங்க அந்த ‘சிறுசுகள்’ சந்தோஷமா ‘வாழ்ந்து’ வர முடியும். எனக்குப் புரியலேங்களே”என்று நேர டியாகவே கேட்டாள்.“ஆமாம் தேவி,எனக்கும் நீ சொன்னா மாதிரியே தான் தோணிச்சு.பாக்கலாம் அந்த சேகர் பையன் அதுக்கு ஏதாச்சும் பண்ணுவான்னு நினைக்கிறேன்.இப்ப நாம எதையும் அவசரப் பட்டு கேக்கக் கூடாது” என்று சொல்லி ஒரு வழியாக தேவியை சமாதானப் படுத்தினான் ராஜ்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *