சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 7,580 
 
 

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

செந்தாமரை தன் படிப்பைப் பத்தி தன் குடிசையில் பேச சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டு இருந்தாள்.அன்று அவருக்கு வேலை கொடுக்கவில்லை அந்த ‘கன்டாராகர்’.ராஜ் வீட்டிலே யே இருந்தான்.நாம் இப்போது நம்ம படிப்பைப் பத்தி பேச ஆரம்பிச்சா, பாட்டியும் அப்பாவும் ‘நீ மேலே எல்லாம் படிக்க வேணாம், எட்டாவது படிச்சதே போதும்’ என்று சொல்லி நம்மை மேலே படிக்க அனு மதி தர மாட்டாங்க.அம்மா சாயங்காலமா குடிசைக்கு வரட்டும் அவங்களை வச்சு நாம் இந்த படிப்பு பத்தின விஷயத்தை பத்திச் சொல்லலாம்’ என்று நினைத்து செந்தாமரை ஒன்னும் பேசாமல் இருந் தாள்.அன்று சாயங்காலம் அம்மா வந்தவுடன் அப்பாவுக்கு ‘டீ’ போட்டு குடித்தாள்.ராஜ் தேவி கொடு த்த டீயைக் குடித்துக் கொண்டு இருந்தான்.இது தான் நல்ல சமயம் என்று நினைத்து செந்தாமரை மெதுவாக ”அம்மா,எனக்கு மூனு வருஷமா கணக்கு சொல்லிக் குடுத்த கணக்கு வாத்தியார் என்னை தனியா அழைச்சு ‘செந்தாமரை,நான் உனக்கு இந்த மூனு வருஷமா சொல்லிக் குடுத்து வறேன்.இது வரைக்கும் என் கிட்டே படிச்ச எந்த மாணவணும் மாணவியும் சரி,உன்னைப் போல இவ்வளவு புத்தி சாலியாக இருந்ததே இல்லை.உன்னை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு.உனக்கு மேலே படிக்க ஆசை இருக்கா.எனக்குக் குழந்தைங்க கிடையாது.எனக்கு ரொம்ப தொ¢ஞ்ச என் குடு ம்ப நண்பர் நுங்கம்பாக்கம் உயர்நிலை பள்ளியிலே ஒரு கணக்கு வாத்தியாரா வேலை செஞ்சி வறார். நான் அவர் கிட்ட பேசி, என் செலவிலே உன்னை அந்தப் பள்ளி கூடத்திலே சேர்த்து விடறேன்.நீ அந்தப் பள்ளி கூடத்திலே பன்னாடாவது வரை படிச்சு வா.இப்போ ‘க்லாஸிலெ’ முதல் மாணவியா வறது போல,நீ அந்தப் பள்ளியிலும் எல்லா வருஷமும் முதல் மாணவியா வரணும்.உங்க வீட்டிலே உன்னை மேலே படிக்க அனுப்புவாங்களா’ன்னு கேட்டாரும்மா.நான் உடனே அவர் கிட்டே ‘எனக்கு மேலே படிக்க ரொம்ப ஆசை சார்.எங்க வீட்டிலே மேலே படிக்க அனுப்புவாங்க’ன்னு சொன்னேன்மா. நான் அந்த பள்ளி கூடத்திலே சேர்ந்து மேலே படிக்கட்டுமாம்மாம்மா” என்று கேட்டாள்.

செந்தாமரை கேட்டு முடிக்கவில்லை உடனே ரத்தினம் “அதெல்லாம் நீ ‘அவர் சொல்றார்’,’இவர் சொல்றார்’ என்பதை எல்லாம் கேட்டு விட்டு அவ்வளவு தூரம் இருக்கிற பள்ளிக் கூடத்திலே எல்லாம் போய் படிக்க வேணாம்.காலம் கெட்டுக் கிடக்குது.நீ வேறே பாக்க பாப்பாத்தி பொண்ணு போல அழகா இருக்கே.அவர் இப்படி சொல்லி உன்னை ஏமாத்திக் ‘கெடுத்தாலும்’ கெடுத்து விடுவார்.அப்புறமா ஒன்னும் பண்ண முடியாது.அதனால்லே நீ மேலே எல்லாம் படிக்க போக வேணாம்” என்று சொல்லி விட்டாள்.செந்தாமரைக்கு ரொம்ப ஏமாற்றமாய் இருந்தது.‘இவ்வளவு நல்ல கணக்கு வாத்தியார் போ¢லே இந்த ஆயா அபாண்டமா சொல்றாங்களே.அவர் எவ்ளவு நல்ல வாத்தியார்.அவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டரே’ என்று நினைத்து செந்தாமரை மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டு இருந் தாள்.”அத்தே,அவர் நம்ம செந்தாமரையை கூப்பிட்டு நீ ரொம்ப நல்லா படிக்கிறே.எனக்குக் குழந்தை ங்க இல்லே.நான் உன்னை என் செலவிலே மேலே படிக்க வக்கிறேன்னு சொல்றார்.அப்படிப் பட்ட ஒரு நல்ல மனுஷனுக்கு இப்படி ஒரு ‘கெட்ட’ புத்தி எல்லாம் இருக்கவே இருக்காது.அவர் நல்ல எண்ணத் திலே தான் சொல்லி இருப்பார்.செந்தாமரை அவர் சேத்து விடறேன்னு சொன்ன பள்ளிக் கூடத்திலே சேந்து படிச்சு வரட்டும்.நாம யாரும் தான் படிக்கலே.அவ ஒருத்தியாவது இந்த குடும்பத்திலே நல்லா படிச்சு முன்னுக்கு வரட்டும்.நீ அவருக்கு ‘சரி’ ன்னு சொல்லி அவர் அந்தப் பள்ளிக் கூடத்திலே சேத்து விட்டாருன்னா சேந்து நல்லா படி” என்று கத்திச் சொன்னாள் தேவி.“ தேவி,உனக்கு மூளை ஏதாச்சும் இருக்கா,இல்லையா.செந்தாமு பாக்க ரொம்ப அழகா பாப்பாத்தி பொண்ணு போல இருக்கா. அந்த வாத்தியார் செந்தாமுக்கு இப்படி ஆசை காட்டி அவளைக் கெடுத்து விடுவாருன்னு பயப் படாறாங்க.நீ என்னவோ அவளை அவர் சேக்கும் பள்ளிக் கூடத்திலே சேந்து படின்னு சொல்லி கிட்டு இருக்கே.அந்த கணக்கு வாத்தியார் அவளை படிக்க வக்கிறேன்னு சொல்லி அவளை ‘கெடுத்து’ விட்டார்ன்னா அப்புறமா நாம ஒன்னும் பண்ண முடியாது.வேணவே வேணாம்.செந்தாமு அங்கே
படிக்க வேணாம்” என்று சொல்லி ரத்தினம் சொன்னதை ஆமோதித்தான் ராஜ்.

“வாயை மூடய்யா.இங்கே குடிசையிலே என்ன வாழுது.போன வாரம் ராணி தனியா குடிசை யிலெ இருந்தப்ப அவன் தாய் மாமன் அவளைக் ‘கெடுத்து’ விட்டுப் போயிட்டான்.உனக்கு ஞாபகம் இல்லையாய்யா.ராணீ என்ன வெளியிலே போய் படிக்க போனதாலே தான் அவள் ‘கெட்டு’ப் போனா. இல்லே நான் தொ¢யாமத்தான் கேக்கறேன்.இத்தனை ‘வயசுக்கு’ வந்த பொட்டை புள்ளேங்க பள்ளிக் கூடம் போய் படிக்கிறாங்களே.அந்தப் புள்ளேங்களே அங்கே இருக்கிற வாத்தியாருங்க ‘கெடுத்து’ விட றாங்களாயா.அப்படி இருந்தா அவங்க அப்பா அம்மா அந்த பொம்பளே பிள்ளைங்களை படிக்கவே அனுப்பமாட்டாங்க.இதை நீங்க நல்லா யோஜனை பண்ணுயா.செந்தாமரை அந்த வாத்தியார் சேக்கற பள்ளிக்கூடத்திலே சேந்து படிச்சு வரட்டும்.அவ ரொம்ப புத்திசாலி பொண்ணு.இது வரைக்கும் அவ எல்லா வகுப்பிலும் முதல் மாணவியா வந்து இருக்கா.அவ்வளவு புத்திசாலிப் பொண்ணு வாழக்கையை ஏதோ காரணம் சொல்லி நீங்க கொன்னு விடாதேய்யா.செந்தாமரை,நீ நாளைக்கே அவர் கிட்டே போய் ‘எங்க வீட்டிலே மேலே படிக்க அனுமதிக் குடுத்து இருக்காங்க’ ன்னு சொல்லி விட்டு நீ அவர் சேர்க்கிற பள்ளி கூடத்திலே படிச்சு வா” என்று சொன்னாள்.செந்தாமரை அம்மாவுக்கும், அப்பாக்கும் ஆயாவுக்கும் தன் நன்றியைச் சொல்லி விட்டு “அப்பா,ஆயா,நீங்க கவலைப் படாதீங்க.நான் எல்லா இடத்திலேயும் ரொம்ப ஜாக்கிறதையா இருந்து வறேன்.எப்பவும்,எங்கேயும்,தனியா இல்லாம, என் கூட படிக்கிற பெண்கள் கூடவே இருந்து வறேன்” என்று சொன்னாள்.

தன் மணைவி செந்தாமரையை பணம் கட்டி படிக்க வைக்கும் ஐடியாவை ஒத்துக் கொண்டதால் கனக்கு வாத்தியார் சுந்தரம் பிள்ளை தன் குடும்ப நண்பர் மூர்த்தியைப் பார்க்க நுங்கம்பாக்கம் பள்ளி கூடத்திற்குப் போனார்.குடும்ப நண்பர் சுந்தரம் பிள்ளையைப் பார்த்தவுடன் மூர்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது.உடனே மூர்த்தி சுந்தரம் பிள்ளையைப் பார்த்து ”வாங்க சுந்தரம்,உங்களை பார்த்து ரொம்ப வருஷங்கள் ஆவுதே.சௌக்கியமா இருக்கீங்களா.உங்க வீட்டிலே உங்க சம்சாரம் சௌக்கியமா இருக் காங்களா.உங்களை பாத்ததிலே எனக்கு ரொம்ப சந்தோஷம் பிள்ளை” என்று சொல்லி சுந்தரம் பிள் ளையை வரவேற்றார்.உடனே சுந்தரம் பிள்ளை ”நானும் சௌக்கியம்,என் சம்சாரமும் சௌக்கியம் மூர்த்தி சார்.நீங்க சௌக்கியமா இருந்து வறீங்களா.உங்க வீட்டிலே அவங்க சௌக்கியமா இருந்து வறாங்களா” என்று பதிலுக்கு விசாரித்தார்.கொஞ்ச நேரம் அவர்கள் சௌக்கியத்தை பேசிக் கொண்டு இருந்து விட்டு செந்தாமரையைப் பத்தி எல்லா விவரமும் சொல்லி தான் வந்த விஷயத்தை விவரமாக சொன்னார் சுந்தரம் பிள்ளை.உடனே மூர்த்தி “பிள்ளை,நீங்க பண்ற இந்த உதவி ரொம்ப பெரிய உதவி.அந்தப் ஏழைப் பொண்ணை படிக்க வச்சி நீங்க உங்களுக்கு புண்ணியத்தை சேர்த்துக்கிறீங்க. அந்த குடிசையில் வாழ்ந்து வரும் அந்தப் பொண்ணு செந்தாமரை அவ்வளவு புத்திசாலிப் பொண்ணா.கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு பிள்ளை.நான் நிச்சியமா அந்தப் பொண்ணுக்கு எங்க பள்ளி கூடத்து ‘பிரின்சிபால்’ கிட்டே பேசி,அவளுக்கு ஒன்பதாவதிலே ஒரு ‘சீட்’ வாங்கி கொடு த்து சேத்துக்கறேன்.நீங்க கவலைப்படாதீங்க பிள்ளை.அந்த மாதிரி ரொம்ப புத்திசாலிப் பொண்னுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கு.அந்தப் பொண்ணை நிச்சியமா அழைச்சுக் கிட்டு வாங்க பிள்ளை”என்று சொன்னார் மூர்த்தி.பிறகு சுந்தரம் பிள்ளை அவரிடம் கொஞ்ச நேரம் மத்த விஷயங்களை பேசிக் கொண்டு இருந்து விட்டு, அவர் வாங்கி கொடுத்த ‘கா·பி யை’க் குடித்து விட்டு தன் வீட்டுக்கு வந்தார்.

நான்கு நாட்கள் ஆனவுடன் செந்தாமரை அவ அம்மா அப்பா ஆயா மூனு பேர் கிட்டேயும் சொல்லிக் கொண்டு அவ கனக்கு வாத்தியாரை பள்ளிக் கூடத்தில் பார்க்கப் போனாள். செந்தாமரை யைப் பார்த்தவுடன் சுந்தரம் பிள்ளை ”என்ன செந்தாமரை,உங்க வீட்டிலே உன்னை மேலே படிக்க ‘பர்மிஷன்’ கொடுத்தாங்களா”என்று கேட்டடார். செந்தாமரை உடனே “என் அப்பா,அம்மா,ஆயா, மூனு பேரும் என்னை மேலே படிச்சு வர சம்மதம் குடுத்து விட்டாங்க சார்” என்று சந்தோஷ மிகுதி யால் சொன்னாள்.”அப்படின்னா சரி செந்தாமரை.நான் அந்த கணக்கு வாத்தியார் கிட்டே உன்னைப் பத்தி சொல்லி இருக்கேன்.அவரும் ‘பிரின்சிபாலை’ப் பார்த்து பேசி உனக்கு ஒன்பதாவது வகுப்பில் ஒரு ‘சீட்’ வாங்கிக் குடுத்து, உன்னை அவங்க பள்ளிக் கூடத்திலே சேத்துக் கொள்ள ஒத்துக் கொ ண்டு விட்டார்” என்று சொன்னதும் செந்தாமரைக்கு சந்தோஷம் தாங்கவில்லை.அவள் உடனே அந்த கணக்கு வாத்தியாரின் கால்களைத் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டாள்.உடனே சுந்தரம் பிள்ளை செந்தாமரையை அழைத்துக் கொண்டு போய்,மூர்த்தியிடம் அறிமுகப் படுத்தினார்.உடனே மூர்த்தி பிரின்ஸிபாலிடம் போய் செந்தாமரையை பற்றி விவரமாய் சுந்தரம் பிள்ளை சொன்னதை எல்லாம் விவரமாகச் சொல்லி அவளுக்கு ஒன்பதாவது வகுப்பில் ஒரு ‘சீட்’ வாங்கிக் கொடுத்து அந்தப் பள்ளி கூடத்திலே செந்தாமரையை சேர்த்துக் கொள்ள ‘பர்மிஷன்’ கொடுத்தார்.சுந்தரம் பிள்ளை செந்தாமரைக்கு அந்த வருஷத்திற்கு கட்ட வேண்டிய ‘·பீஸை’க் கட்டினார். செந்தாமரை ரெண்டு பேர் கால்களையும் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொ¡ண்டு,தன் நன்றியை சொல்லி கையைக் கூப்பி வணங்கினாள்.சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்த செந்தாமரை “அம்மா அந்த வாத்தியார் என் னை அழைச்சுக் கிட்டுப் போய் என்னை நுங்கம்பாக்கம் உயர் நிலைப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பில் சேத்து விட்டு, எனக்கு ஒரு வருஷ ‘·பீஸை’ கட்டி விட்டு இருக்காரும்மா” என்று குதித்து கொண்டேசொன்னாள்.உடனே தேவி “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு செந்தாமு.நீ அந்த பள்ளிக்கூடத்திலே சேந்து நல்லா படிச்சு வா.அந்த வாத்தியார் சொன்னபடி நீ எல்லா பா¢¨க்ஷயிலும் நல்லா மார்க் வாங்கி பாஸ் பண்ணனும்”என்று சொல்லி சந்தோஷப் பட்டாள்.உடனே செந்தாமரை “அம்மா நிச்சியமா நான் நல்லா படிச்சி ‘பாஸ்’ பண்ணுவேம்மா” என்று சந்தோஷமாக சொன்னாள்.

நுங்கம்பாக்கம் பள்ளிக் கூடம் திறந்தவுடன் செந்தாமரை முதல் நாள் பள்ளிக் கூடம் போய் வர ஆரம்பித்தாள்.மூனு அடுக்குகள் கொண்ட அந்தப் பள்ளிக் கூட ‘பில்டிங்கை’ப் பார்த்து அசந்து விட் டாள் செந்தாமரை.அவள் இது வரைப் படித்த பள்ளிக் கூடத்தில் தரை மட்டத்தில் தான் எல்லா வகுப் பும் இருந்தது.இந்த பள்ளிகூடத்தில் எல்லா வகுபிலும் ‘·பேன்கள்’ இருந்ததன.நல்ல வெளிச்சத்து டன் காற்றோட்டமாய் இருந்தது எல்லா வகுப்புகளும். படிக்க வந்து இருக்கும் எல்லா பெண்களும் சரளமாக ஆங்கிலம் பேசி வந்தார்கள்.நன்றாக டிரஸ் பண்ணிக் கொண்டும்,பார்க்க அழாகயும் இருந் தார்கள்.‘இந்தப் பள்ளிக் கூடத்திலே ஒரு இடம் வாங்கி சேத்த அந்த கணக்கு வாத்தியாருக்கும்,தான் வணங்கி வரும் பிள்ளையாருக்கும் மனதார தன் நன்றியைத் மனதில் தொ¢வித்தாள்.

செந்தாமரை அவளுக்கு ‘சீட்’ வங்கிக் கொடுத்த கணக்கு வாத்தியாரைப் பார்க்க வாத்தியார்கள் ரூமுக்குப் போனாள்.அங்கே உட்கார்ந்துக் கொண்டு ஏதோ எழுதிக் கொண்டு இருந்த கணக்கு வாத்தியாரை பார்த்து ”வணக்கம் சார்,நான் இன்னைக்கு இந்தப் பள்ளி கூடத்திலே சேந்து விட்டேன். நீங்க பண்ண இந்த உதவியை நான் என் வாழ் நாள் பூராவும் மறக்க மாட்டேன் சார்.நான் மிகவும் கஷ்டப்பட்டு படிச்சு வந்து எல்லா வகுப்பிலும் முதல் மாணவியாக வருவேன்.நீங்க எனக்கு ஆசீர்வா தம் பண்ண வேணும்” என்று சொல்லி விட்டு அவர் கால்களைத் தொட்டு கண்களில் ஒத்திக் கொண் டாள் செந்தாமரை.உடனே அவர் எழுந்து நின்றுக் கொண்டு “ரொம்ப ‘கான்·பிடண்ட்டா’ சொல்றயே. குட்.உனக்கு இந்த வருஷம் கணக்கு நான் தான் எடுக்கப் போறேன் செந்தாமரை.நான் சொல்லிக் கொடுக்கும் கணக்குளை எல்லாம் நல்ல போட்டு வா.நீ நல்லா படிச்சு வர ஆசீர்வாதங்கள்”என்று சொல்லி செந்தாமரையை வாழ்த்தினார்.செந்தாமரை தன் வகுப்புக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டாள்.

“அம்மா,தேவி நம்ம கமலாவுக்கு வயசு ஏறி கிட்டே போவுது. ஒரு பயனாப் பாத்து அவளுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணிக் குடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்.நீங்க என்ன சொல்றீங்க” என்று ராஜ் கேட்டான்.உடனே ரத்தினம் “ஆமாம் ராஜ் நானே உன் கிட்டே இதை பத்தி சொல்லணும் ன்னு தான் இருந்தேன்,நீயே இப்போ அதைக் கேட்டுட்டே.ஒரு நல்ல பையனா நமக்குக் கிடைக்கணு மே.அப்படி கிடைச்சா நிச்சியமா கமலா கல்லாணத்தை செஞ்சு முடிச்சிடலாம்” என்று சொன்னாள் “என்ன தேவி,நீ ஒன்னும் சொல்லாம இருக்கயே.பொண்ணை பெத்தவ நீ. இப்படி பேசாம இருந்தா எப்படி” என்று கேட்டு தேவியின் வாயைக் கிளறினான்.“நான் என்ன சொல்றது.அவ வயசுக்கு வந்து ஐஞ்சு வருஷம் ஆவுது.நான் இல்லேன்னு சொல்லலே.அவளுக்கு படிப்பே இல்லை. எட்டாவது கூட பாஸ் பண்ணலே அவ.அவ மாதிரி எட்டாவது கூடப் படிக்காத எவனாவது ஒரு படிக்காத ஆளாப் பாத்து அவன் தலையிலே அவளைக் கட்டிட்டா,உங்க வேலை முடிஞ்சுது.இதிலெ நான் சொல்றதுக்கு என்ன இருக்குது.உங்க ரெண்டு பேர் இஷ்டம் போல பண்ணுங்க” என்று வெறுப்புடன் சொன்னாள் தேவி.தேவிக்கு கமலா நல்லா படிக்கவில்லையே என்கிற குறை நெஞ்சு வரைக்கும் இருந்தது.‘இவ நல்லா படிச்சு இருக்கக் கூடாதா.அப்படி இவ படிச்சு இருந்தா இவளுக்கு ஒரு நல்ல படிச்ச பையனா ப்பாத்து கல்யாணம் கட்டிக் கொடுத்தா,இவ கஷ்டம் இல்லாம தன் வாழ்க்கையயே வாழ்ந்து வருவா ளே.நாம சொன்னப்ப எல்லாம் நம்ம வார்த்தையைக் கேட்டு அவ படிக்கலே.எப்பவும் ரேடியோவிலே சினிமா பாட்டு கேட்டு கிட்டும்,மூனாவது வீட்டு குடிசைக்குப் போய் அங்கே டீ.வீ. பாத்துக்கிட்டும் அவ பொழுதை விணா கழிச்சுக் கிட்டு வந்தா. இப்ப என்ன பண்றது.இவ அப்பனும், ஆயாவும் எந்த படிக்காத ஆளை பாத்து அவன் தலையிலே இவளைக் கட்டிக் கொடுக்கிறாங்களோ அவன் கூட இவ வாழ்ந்து பிள்ளைக் குட்டிகளை பெத்து வந்து கஷ்டப் பட்டு வரட்டும்.இவ தலையிலே அந்த கடவுள் அப்படி எழுதி இருந்தா அதை மாத்தா யாரால் முடியும்’ என்று நினைத்து வேதனைப் பட்டாள் தேவி. கல்லாணம்ன்னு வந்தா கமலாவுக்கு ஏதாச்சும் நகை போடணுமே என்கிற கவலை அவளுக்கு வந்தது. அவள் ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.அன்றில் இருந்து தேவி வேலை செஞ்சு தனக்கு வந்த பணத்தி லே அவ வேலை செய்யற ‘சைட்டு’லேயே சீட்டு பிடிச்சு வந்தாள்.அதைத் தவிர மீந்த பணத்தை அவ அப்பா கிட்டே கொடுத்து வந்து ”என் வூட்டுக்காரரும்,மாமியாரும் கமலாவுக்கு கல்லாண பேச்சை ஆரம்பிப்பாங்க.அவங்க ரெண்டு பேர் கையிலேயும், ஒன்னும் ரொம்ப பணம் இல்லே.அப்பா,நீங்க இந்த பணத்தை கொஞ்சம் ஜாக்கிறதையா வச்சுக் கிட்டு வாங்க.நான் தேவைப்படும் போது உங்க கிட்டே வந்து கேக்கறேன்.இப்ப எங்க வூட்லெ,இந்த பணத்தே குடுத்தா,என் வூட்டுக்காரர் அதை குடிக்க எடுத்துக்கிடுவார்” என்று கண்களில் கண்ணிர் மல்க சொன்னாள்.சரவணன் “அம்மா தேவி,நீ கவலை படாம இருந்து வா.நான் இந்த பணத்தே ஜாக்கிறதையா வச்சுகிட்டு வறேன்” என்று ¨தா¢யம் சொன் னார் .

முத்துவுக்கு எட்டாவது வருஷாந்திர பா¢¨க்ஷகள் ஆரம்பித்து விட்டது.அவன் தினமும் பள்ளிக் கூடத்தற்குப் போய் பா¢க்ஷ¢களை எல்லாம் எழுதி வந்தான்.அவன் தினமும் பா¢¨க்ஷ எழுதி விட்டு வந்ததும் சரஸ்வதி முத்துவைப் பார்த்து ”முத்து இன்னைக்கு பா¢¨க்ஷ எப்படிப்பா எழுதி இருக்கே, ‘பாஸ்’ பண்ணி விடுவாயா” என்று கேட்டதற்கு முத்து “ரொம்ப நல்லா எழுதி இருக்கேம்மா” என்று பதில் சொல்லி வந்தான்.அதை கேட்டு சரஸ்வதி சந்தோஷப் பட்டு வந்தாள்.ரெண்டு மாசம் ஆனதும் எட்டாவது பா¢¨க்ஷ ‘ரிஸ்ல்ட்’ வந்தது.முத்து எட்டாவதில் ‘பெயில்’ ஆகி இருந்தான். சரவணன் மிக வும் வருத்தப் பட்டார்.சரஸ்வதிக்கு என்ன சொல்வது என்றே தொ¢யவிலை.முத்துவை நன்றாகத் திட்டி னாள்.“நீ இப்படி எட்டாவதில் இந்த தடவையும் பெயில் ஆகி வந்து நிப்பேன்னு தொ¢ஞ்சு இருந்தா, நான் உங்க அப்பா கிட்டே உன்னை உங்க வாத்தியார்ங்க கிட்டே சிபாரிசு பண்ணி உன்னை மறுபடி யும் எட்டாவதில் சேத்து இருக்கவே மாட்டேன்டா.என்னை இப்படி ஏமாத்தி விட்டாயேடா.உன்னைப் பாத்தாலெ எனக்கு ரொம்ப கோவம் வருதுடா.என் கண் எதிரிலே நிக்காதேடா.போடா வெளியே” என்று கத்தி விட்டு சமையல் கட்டுக்குப் போனாள் சரஸ்வதி.உடனே சரவணன் “போகட்டும் விடு சரஸ¤.இப்ப அதை பத்தி எல்லாம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லே.அதை மறந்துட்டு மேலே ஆக வேண்டியதை நாம இப்ப கவனிச்சு வரணும்” என்று சொல்லி கோவமாக இருந்த தன் மணைவியை சமாதானப் படுத்த முயற்சி பன்ணினார்.கொஞ்ச நேரம் ஆனதும் முத்து தொ¢யத்தை வரவழைத்துக் கொண்டு “அப்பா, எனக்கு இனிமே மேலே படிக்க வேணாம்மா.நான் உங்க கூட உங்க மளிகை கடைக்குப் வந்து மளிகை கடை சமாசாரங்களை எல்லாம் கத்துக் கிட்டு வறேன்ப்பா.உங்களுக்கு உதவியா இருந்து வறேம்பா” என்று அழுது கொண்டே சொ¢ன்னான்.சமையல் ரூமில் இருந்து முத்து தன் அப்பா கிட்டே அழுதுக் கொண்டே சொன்னதைக் கேட்டாள் சரஸ்வதி.அவள் மனதுக்குள் ரொம்ப வருத்தப் பட்டாள்.சரவணன் உடனே சரஸ்வதியை பார்த்து “சரஸ¤,இங்கே கொஞ்சம் வாயேன்.முத்து சொன்னதைக் கேட்டியா.நாம அதன்படி செய்யலாமா” என்று கேட்டார்.சரஸ்வதி கோவத்தில் “முத்து எங்கே நான் சொன்னபடி செஞ்சான்.கடைசியிலே நீங்க சொன்னபடியே தானே முடிஞ்சி இருக்கு.இதில் என்னை நீங்க கேக்க என்ன இருக்குங்க.உங்க இஷ்ட படியே செஞ்சு வாங்க. அவன் தலை எழுத்து அவன் அப்பாவை போலவே ஒரு மளிகைக் கடை வச்சு பிழைச்சி வரணும்ன்னு எழுதி இருந்தா, அதை மாத்தா யாரால் முடியும்.நான் அவன் படிச்சு, ஒரு நல்ல வேலைக்குப் போய் வருவான்னு எதிர்பார்த்தேன்.அந்த ஆசையிலே அவன் மண்ணை அள்ளீப் போட்டு விட்டானே.நான் நினைச்சது நடக்கலே” என்று சொல்லும் போது அவள் கண்கள் கலங்கியது.உடனே சரவணன் ”மனசு கஷ்டப் படாதே,சரஸ¤.எனக்கு மட்டும் அவன் நல்லா படிச்சு ஒரு நல்ல வேலைக்கு போய் வர வேணும்னு ஆசை இல்லையா சொல்லு.என்ன பண்ணுவது சொல்லு.நான் முன்னமே ஒரு தடவை சொன்னா மாதிரி நல்லா படிச்சு ‘பாஸ்’ பண்ண நல்ல உழைப்பும்,நல்ல மூளையும்,எல்லாத்துக்கும் மேலாக அந்த கடவுள் ஆசீர்வாதமும் இருக்கணும்.துரதிர்ஷ்டவசமா பாவம் நம்ப முத்துவுக்கு அந்த மூனும் இல்லே” என்று சொல்லி மிகவும் வருத்தபட்டார்.நிறைய நேரம் மூவரும் உட்கார்ந்து கொண்டு யோஜனைப் பன்ணினார்கள்.

கடைசியிலே மூவரும் ‘முத்து மளிகைக் கடைக்கு போய் வந்து அந்த மளிகை கடை வியா பாரத்தை நல்லா கத்துகிட்டு வந்து,சில வருஷங்கள் போனதும் அவனுக்கும் ஒரு சின்ன மளிகை வச்சுக் கொடுத்து,அந்த மளிகை கடையில் அவன் காலை ஊன்றிக் கொண்டு நன்றாய் சம்பாதித்து வந்தால் அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்து அவன் வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக வழி பண்ணலாம்’ என்கிற முடிவுக்கு வந்தார்கள்.அடுத்த ரெண்டு நாள் கழித்து ஒரு நல்ல நாள் பார்த்து முத்து தன் அப்பாவுடன் மளிகைக் கடைக்குப் போய்க் கொண்டு வர ஆரம்பித்தான்.ஆனால் சரஸ்வதிக்கு மட்டும் ‘முத்து படிக்காம இப்படி மளிகைக் கடைக்குப் போய் மளிகைக் கடையில் ஒரு வேலைகாரன் போல இருந்த வரானே.நல்லா படிச்சு ஒரு நல்ல வேலையை செஞ்சி வரக்கூடாதா.இந்த மாதிரி ஒரு மளிகைக்கடையில் இருந்து வரும் பையனுக்கு யார் பொண்ணு கொடுப்பாங்க.இவனுக்கு எப்படி ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் நடக்கும்.கல்லாணத்துக்கு பைய னை கேக்கவறவங்க பையன் ‘என்ன படிச்சு இருக்கான்’,’என்ன வேலை பண்றான்’ன்னு கேட்டா இவர் என்ன சொல்லப் போறார்.முத்து வாழ்க்கை இப்படி வீணாகி போச்சே’ என்று நினைத்து மிகவும் கவலைப்பட்டாள்.சரவணன் வீட்டில் இருக்கும் போது தன் கவலையை சொன்னாள் சரஸ்வதி ”ஏங்க, நீங்க இதை யோஜனைப் பண்ணீங்களாங்க.முத்து படிக்காம இப்படி மளிகைக் கடைக்குப் போய் மளிகைக் கடையில் ஒரு வேலைக்காரன் போல இருந்த வரானேங்க.இந்த மாதிரி ஒரு மளிகைக் கடையில் இருந்து வரும் பையனுக்கு யாருங்க பொண்ணு கொடுப்பாங்க.இவனுக்கு எப்படி ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் நடக்கும் சொல்லுங்க.கல்லாணத்துக்கு பையனை கேக்க வறவங்க பையன் ‘என்ன படிச்சு இருக்கான்’,’என்ன வேலை பண்றான்’ன்னு கேட்டா நீங்க என்ன சொல்லப் போறீங்க முத்து வாழ்க்கை இப்படி வீணாகிப் போச்சேங்க”என்று சொல்லி அழுதாள் சரஸ்வதி.சரவணன் சரஸ்வதி சொன்னதைக் கேட்டு மிகவும் வருத்தப் பட்டார்.“எனக்கும் அந்த வருத்தம் அதிகமாக தான் இருக்கு சரஸ¤.நாம என்ன பண்ணுவது சொல்லு.அவனை நாம மூனு தடவை எட்டாம் ‘க்ளாஸிலே’ சேர்தும் அவன் ‘பாஸ்’ பண்ணலையே.அதுவரை இந்தத் தொழிலையாவது நல்லா கத்துகிட்டு வந்து அவன் காலை நல்லா ஊனிக்கட்டும். அப்புறமா நாம அவன் கல்லாணத்தை பத்தி யோசிக்கலாம். இப்போ நீ வீணா கவலைப்படாம இருந்து வா” என்று தன் மணைவிக்கு ஆறுதல் சொன்னார் சரவ ணன்.சரவணனும் முத்துவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லா சாமான்கள் என்ன அசல் விலை ஆவுது, அதை என்ன விலைக்கு விக்கறது,அப்படி வித்தா என்ன லாபம் வரும்,எந்த சாமான் சீக்கிரம் கெட்டு விடும்,எந்த சாமான் நாள் பட கெடாம இருக்கும்,மளிகை சாமான்களை எல்லாம் எப்படி பொட்டலம் கட்டித் தருவது போன்ற எல்லா விவரங்களையும் கொஞ்சம் கொஞ்சம்காகக் கற்றுக் கொடுத்து வந்தார்.முத்துவுக்கு ஓரளவுக்கு எல்லா சாமான்களை எல்லாம் எப்படி எடை போடுவது, எப்படி அவைகளை எல்லாம் பொட்டலம் கட்டி தருவது என்பதை எல்லாம் நன்றாக தொ¢ந்துக் கொண்ட பிறகு சரவணன் கடையில் இருந்த பையனை நிறுத்தி விட்டு முத்துவை அந்த வேலை களை எல்லாம் செய்து வரச் சொன்னார் சரவணன்.

வேலையில் இருந்து குடிசைக்கு ராஜ் தன் அம்மாவையும் தேவியையும் பார்த்து ”நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கவனமா கேளுங்க.என் கூடவே எங்க ‘கன்டாக்டர்’ கிட்டே சேகர்னு ஒரு பையன் இருக்கான்.பாக்க நல்ல வாட்ட சாட்டமா இருப்பான்.ரொம்ப நல்ல பையன் அவன்.அவனுக்கு அப்பா இல்லை.சின்ன வயசிலேயே அவரு இறந்துட்டாராம்.அவன் அம்மா மட்டும் தான் அவன் கூட இருந்து வறாங்களாம்.நான் அவனை நம்ம குடிசைக்கு நாளைக்கு இட்டாரேன்.நீயும்,தேவியும் அந்தப் பையனைப் பாருங்க.கமலாவும் அந்தப் பையனைப் பாக்கட்டும்.நம்ம எல்லாருக்கும் அந்த சேகரைப் பிடிச்சு இருந்தா,முக்கியமானவங்க சிலரை மட்டும் கல்லாணத்துக்கு கூப்பிட்டு விட்டு, பக்கத்திலே இருக்கிற பிள்ளையார் கோவிலிலே இருக்கிற ஐயரை மந்திரம் சொல்லச் சொல்லி ரெண்டு பேரும் மாலையை மாத்திக்கிட்டு,சேகர் கமலாவுக்கு தாலியைக் கட்டட்டும்.அப்புறமா நாம எல்லோரும் பக்கத்திலே இருக்கிற ஒரு ஹோட்டலுக்குப் போய் மதியம் சாப்பாடு சாப்பிட்டு வரலாம்.கல்யாண செலவும் அதிகம் பண்ண வேணாம்.என்ன சொல்றீங்க”என்று சொன்னான் ராஜ்.“சரி,ராஜ்,நாம அப்படியே செய்யலாம்.நீ,நாளைக்கு சாயங்காலமா அந்த பையன் சேகரை நம்ம குடிசைக்கு வரச் சொல்லு.நாம எல்லாரும் பாக்கலாம்.கமலவும் அந்தப் பையனைப் பாக்கட்டும்.அந்தப் பையனும் கமலா வைப் பாக்கட்டும்.எல்லாருக்கும் பிடிச்சு இருந்தா நீ சொன்னா மாதிரியே கல்லாணத்தை சிக்கனமா செஞ்சி முடிச்சிடலாம்” என்று சொன்னாள் ரத்தினம்.ஆனால் தேவி ராஜ் சொன்னதுக்கு ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்து வந்தாள்.கொஞ்ச நேரம் ஆனதும் தேவி “ஏன்யா அந்த பையன் என்ன வேலை செஞ்சு வரான்ய்யா”என்று கேட்டதும் ரத்தினத்துக்கு கோவம் அதிகமாக வந்து “ஏன் தேவி, உனக்கு மூளை ஏதாச்சும் கெட்டுப் போச்சா என்ன.ராஜ் என்ன கலேக்டர் வேலை செய்யற பையனையா பாத்து இருப்பான்.அவன் ‘ஸைட்லே வேலை செய்யற ஒரு பையனா தான் பாத்து இருப் பான்.நம்ம சக்திக்கு ஏத்த பையனா தானே அவன் பாக்க முடியும்” என்று சொன்னதும் “அது எனக் கும் நல்லாவே தொ¢யும் அத்தே.நான் ஒன்னும் ஒரு கலெக்டர் பையனை பாத்து கமலாவுக்கு கல்லா ணம் பண்ணச் சொல்லலே.அந்த பையன் என்ன வேலை செஞ்சு வரான்னு தான் கேட்டேன்” என்று கோவமாக சொன்னாள்.‘இவங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சண்டை போடறுத்துக்கு முன்னாலே நாம அந்த பையனை பத்தி சொல்லிடலாம்’என்று நினைத்து ”தேவி,அந்த பையன் எங்க கன்ட்ராகடர் கிட்டே ‘டைல்ஸ்’ புதைக்கிற வேலை செஞ்சு வரான்” என்று சொல்லி இருவரையும் ஒரு வழியாக ஓயப் பண்ணீனான்.

தேவி பிறகு தன்னைத் தேற்றிக் கொண்டு ’இவங்க ரெண்டு பெரும் கமலாவுக்கு கல்யாணம் பண்ணுவதிலேயே மும்முறமாக இருப்பதை பார்த்து “அது சரி,கல்லாணம் வந்தா,அந்த பையனுக்கு அம்மா,நம்மைப் பாத்து கமலாவுக்கு என்ன நகை போடுகிறீங்கன்னு கேப்பாங்களே.நாம என்ன நகை யே போட்டு கல்லாணம் பண்றது” என்று கேட்டாள் தேவி.உடனே ராஜ் ”ஆமாம் புள்ளே இதை நாம யோஜனை பண்ணணும்” என்று இழுத்தான். உடனே ரத்தினம் “நான் கழுத்திலெ போட்டு இருக்கிற ரெண்டு சவரன் சங்கிலியே அழித்து அவளுக்கு புதுசா கொஞ்சம் மெலே போட்டு ஒரு சங்கிலே போடலாம்”என்று சொன்னாள்.”என் நண்பர்ங்ககிட்டே கொஞ்சம் கடன் வாங்கி அவளுக்கு தாலி செஞ்சுடலாம்.உன் கிட்டே என்ன பணம் இருக்கு தேவி” என்று கேட்டான் ராஜ்.”நானும் ‘ஸைட்லே’ சீட்டு பிடிச்சுக் கிட்டு வந்து கிட்டு கொஞ்சம் பணம் சேத்து வச்சு இருக்கேன்.நான் கமலாவுக்கு ரெண்டு காதுக்கும் ஜிமிக்கி செஞ்சு போடறேன்” என்று சொன்னாள் தேவி. தேவி தன் அப்பாவிடம் போய் தான் கொடுத்த பணத்தை வாங்கி வந்து ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டாள்.தனக்கு நேரம் கிடைத்த போது ஒரு தங்க கடைக்குப் போய் கமலா காது ‘ஸைஸ்’க்கு ரெண்டு ஜிமிக்கி வாங்கி பத்தி ரமாக வைத்து கொண்டாள்.

அடுத்த நாள் காலையிலே ராஜ் ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான்.வேலை செய்யும் இடத்தில் சேகரைப் பார்த்தான் ராஜ்.உடனே ராஜ் “சேகர், வா உன் கிட்டே ரெண்டு நிமிஷம் பேசணும்” என்று சொல்லி கூப்பிட்டான்.உடனே “என்ன மேஸ்திரி,என்ன விஷயம்” என்று கேட்டுக் கொண்டே வந்தான் சேகர். சேகர்,நான் என் வூட்டிலே உன்னைப் பத்தின எல்லா விவரமும் சொல்லி இருக்கேன்.அவங்க ‘சரி’ ன்னு சொல்லி இருக்காங்க.அதனால்லே நீ எங்க குடிசைக்கு உங்க அம்மா வவையும் கூட இட்டுக் கிட்டு வந்து என் பொண்ணு கமலாவை ‘பொண்ணு பாக்கா’ வா.எல்லாருக்கும் ஒருத்தரை ஒருத்தருக்கு பிடிச்சு இருந்தா இந்த கல்யாணத்தை ‘சிம்பிளா’ ஒரு கோயிலிலே வச்சு, ரெண்டு பேரும் மாலை மாத்தி கிட்டு, அப்புறமா அங்கு இருக்கும் ஐயரை மந்திரம் சொல்லி நீ கமலா கழுத்திலே தாலி கட்டு.கல்லாணம் நல்ல விதமா முடிஞ்ச பிறவு,நாம எல்லாரும் பக்கத்திலேயே இருக்கிற ஒரு ஹோட்டலுக்குப் போய் மதியம் ஒரு ‘ஸ்பெஷல்’ சாப்பாடு சாப்பிட்டு விட்டு வரலாம். என்ன உனக்கு சம்மதமா”என்று கேட்டான்..”அப்படியா மேஸ்திரி. ரொம்ப சந்தோஷம் நீங்க சொன்ன சமாசாரத்துக்கு.நான் இன்னைக்கு சாயங்காலம் என் வூட்டுக்குப் போய் என் அம்மா கிட்டே கலந்துப் பேசி உங்க கிட்டே சொல்றேன் மேஸ்திரி”என்று சொல்லி விட்டு போனான் சேகர்.’இந்த பையன் அவங்க அம்மா கிட்டெ கலந்து பேசி நம்ப வூட்டுக்கு கமலாவை பொண்ணு பாக்க ஒத்துக் கிட்டு எல்லாருக்கும் பிடிச்சு இருந்தா கமலாவை சேகருக்கு கல்லாணம் கட்டி வச்சிடலாமே.எல்லாம் நல்ல படியே நடக்கணுமே’என்று யோஜனைப் பண்ணிக் கொண்டே ராஜ் அவன் வேலை செய்யும் ‘சைட் டுக்கு’ப் போனான்.அடுத்த நாள் தூரத்திலேயே வரும் மேஸ்திரி ராஜ்ஜை பார்த்தவுடன் சேகர் அவர் கிட்டே ஓடிப் போய் “நான் என் அம்மா கிட்டே நீங்க சொன்ன சந்தோஷ சமாசாரத்தைச் சொன் னேன்.அவங்க ‘சரி’ ன்னு சொல்லி ஒத்துகிட்டாங்க மேஸ்திரி.நான் இன்னைக்கு சாயங்காலம் ஒரு ஐஞ்சு மணிக்கு எங்க அம்மாவை கூட்டிக்கிட்டு உங்க குடிசைக்கு வந்து,உங்க பொண்ணு கமலாவை ‘பொண்ணு’ பாக்கறேன்.எல்லாருக்கும் ஒருத்தரை ஒருத்தருக்கு பிடிச்சு இருந்தா,நீங்க சொன்னா மாதிரியே கல்லாணத்தை அங்கு இருக்கும் ஐயரை மந்திரம் சொல்லி உங்க பொண்ணு கமலா கழுத்தி லே தாலி கட்டறேன்.அப்புறமா நாம எல்லாரும் பக்கத்திலே ஒரு ஹோட்டலுக்குப் போய் மதியம் ஒரு ‘ஸ்பெஷல்’ சாப்பாடு சாப்பிட்டு விட்டு வரலாம்”என்று சந்தோஷத்துடன் சொன்னான் சேகர்

”ரொம்ப ரொம்ப சந்தோஷம் சேகர்.நீ கமலாவை ‘பொண்ணு’ பாக்க சாயர¨க்ஷ ஐஞ்சு மணிக்கு உங்க அம்மாவை இட்டுக் கிட்டு என் குடிசைக்கு வா.இது தான் என் ‘அட்ரஸ்’ ” என்று சொல்லி சேகருக்கு தன் குடிசை ‘அடரஸ்ஸை’ ஒரு காகிததில் எழுதிக் கொடுத்தான் ராஜ்.அதை வாங்கிக் கொண்ட சேகர் “நான் போய் வறேன் மேஸ்திரி.அந்த மூனாவது மாடி ‘·ப்லாட்டிலே’ ஒரு ரெண்டு மணி நேர வேலை இருக்கு.அதை நான் சீக்கிரமா முடிச்சிட்டு வூட்டுக்கு போய் மதியம் சாப்பாடு சாப்பிட்டு விட்டு,சாயர¨க்ஷ ஐஞ்சு மணிக்கா என் அம்மாவை இட்டுக் கிட்டு உங்க குடிசைக்கு வறேன் மேஸ்திரி”என்று சொல்லி விட்டு வேகமாக மூனாவது மாடிக்கு ஓடினான் சேகர்.தன் வேலையை கொஞ்சம் முடித்துக் கொண்டு பகல் பன்னண்டு மணிக்கு ‘கன்ட்ராகடர்’ கிட்டே ”மேஸ்திரி, இன்னைக்கு சார¨க்ஷ ஐஞ்சு மணிக்கு என் பொண்ணு கமலாவை பொண்ணுப் பாக்க ‘டைல்ஸ்’ போடற பையன் சேகர்,அவங்க அம்மாவோடு என் குடிசைக்கு வரப் போறான்.எனக்கு நீங்க கொஞ்சம் இன்னைக்கு அரை நாள் லீவு குடுங்க” என்று தயங்கிக் கொண்டு கேட்டான் ராஜ்..உடனே அந்த கன்ட்ராகடர் ”ராஜ் நிறைய வேலை பாக்கி இருக்கே நீ செஞ்சு முடிக்க.இப்போ அரை நாள் லீவு வேணும்ன்னு வேறே கேக்கறே.உன் பொண்ணை ‘பொண்ணு’ பாக்க வறாங்கன்னு சொல்றதாலே நான் உனக்கு அரை நாள் லீவு தறேன்.ஆனா நீ நாளைக்குக் காத்தாலே நீ சீக்கிரமா வேலைக்கு வந்து, ராத்திரி எந்நேரம் ஆனாலும் எல்லா பாக்கி வேலைங்களையும் செஞ்சு முடிச்சிட்டுத் தான் வூட்டுக்கு போவணும் தொ¢தா” என்று கண்டிப்பான குரலில் சொன்னார் அந்த கன்ட்ராகடர். “ரொம்ப ‘தாங்ஸ்’ மேஸ்திரி” என்று சொல்லி விட்டு ராஜ் தேவி வேலை செய்யற ‘ஸைட்டுக்கு’ப் போய் தேவி இடம் எல்லா வியஷயத்தையும் சொல்லி அவளை அவ மேஸ்திரி கிட்டே அரை நாள் லீவு வாங்கிக் கொண்டு வர சொன்னான்.வேறே வழி ஒன்னும் தொ¢யாததால் தேவி ராஜ்ஜை அழைத்துக் கொண்டு அவள் வேலை செய்யும் மேஸ்திரி கிட்டே ராஜ் சொன்ன சமாசாரத்தை சொல்லி அரை நாள் லீவு கேட்டு வாங்கிக் கொண்டு ராஜ்ஜுடன் குடிசைக்கு வந்து சேர்ந்தாள்.வரும் வழியிலே தேவி கமலா வுக்கு நிறைய பூ வாங்கிக் கொண்டு வந்தாள்.ராஜ் வீட்டுக்கு வந்து ‘ஸைட்லே’ சேகர் தன் கிட்டே சொன்ன சந்தோஷ சமாசாரத்தை சொன்னான்.ரத்தினத்துக்கு கையும் ஓடலே.காலும் ஓடலே ”அப்படி யா ராஜ்,அவங்க இன்னைக்கு சாயர¨க்ஷ ஐஞ்சு மணிக்கு நம்ப கமலாவை ‘பொண்ணு’ பாக்க வறா ங்களா.எல்லாம் நல்ல படி முடிஞ்சு,நம்ப கமலாவுக்கு சீக்கிரமா கல்லாணம் நடக்கணும்.அந்த மாரியா த்தா தான் இதை செஞ்சு முடிக்கணும்” என்று சொல்லி தன் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.தன் குடிசைக்கு வேகமாக வந்த தேவி கமலாவுக்கு ‘மஞ்சள் நீராட்டு விழாவிலே’ அவளுக்குக் கொடுத்து இருந்த ஒரு புதுப் புடவைக் கட்டி,தலையிலே தான் வாங்கி வந்த பூவை நிறைய வச்சு அலங்காரம் பண்ணினாள்.ரத்தினம் கோடி வீட்டில் பஜ்ஜிப் போடும் அம்மாவிடம் இருந்து ஒரு பத்து சூடா அதிரஸம்,பத்து மசால் வடை,பத்து பஜ்ஜி வாங்கி வைத்துக் கொண்டு இருந்தாள்.கமலாவுக்கு அம்மா செய்யும் அலங்காரத்துக்கு கூட மாட உதவி பண்ணி வந்தாள் செந்தாமரை. ராஜ் குளித்து விட்டு,தன் பழைய டிரஸ்ஸைக் கழட்டி விட்டு ஒரு புது ‘ஷர்ட்’ புது வேஷ்டியைக் கட்டி கொண்டு தயாராய் காத்து கொண்டு இருந்தான்.

மணி ஐஞ்சு அடிச்சது.சேகர் அவன் அம்மாவைக் கூட்டிக் கொண்டுக் குடிசைக்கு வந்தான். சேகரை பார்த்தவுடன் ராஜ் அவனையும் அவன் அம்மாவையும் “வாங்க, வாங்க” என்று வரவேற்று அங்கு போட்டு இருந்த சேர்களில் அவர்களை உட்காரச் சொன்னார்கள்.உள்ளே இருந்து தேவியும் ரத்தினமும் அவர்களைப் பார்த்து “வாங்க, வாங்க உக்காருங்க” என்று சொல்லி அவர்களை சேரில் உட் காரச் சொன்னார்கள்.உடனே ராஜ் “இது தாங்க என் சம்சாரம்.அவ பேரு தேவி.இது என் அம்மா. அவங்க பேரு ரத்தினம்.இது என் ரெண்டாவது பொண்ணு.இவ பேர் செந்தாமரை” என்று தன் குடும பத்தில் இருந்தவர்களை அறிமுகம் செய்து வைத்தான்.உடனே சேகரும் “என் பேர் சேகருங்க. நான் ராஜ் மேஸ்திரி வேலை செய்யற ‘பில்டர்’ கிட்டே ‘டைல்ஸ்’ வேலை செஞ்சு வரேங்க.இது என் அம்மா. இவங்க பேரு செங்கமலம்.என் அப்பா சின்ன வயசிலேயே ஒரு விபத்திலே இறந்திட்டாருங்க. இவங்க ளுக்கு நான் ஒரே பையன் தானுங்க”என்று தன் குடும்பத்தைப் பத்தி சொன்னான் சேகர்.சேகர் சொல்லி முடிக்கவில்லை உடனே சேகா¢ன் அம்மா செங்கமலம் “உங்கப் பொண்னு செந்தாமரை பாக்க நல்ல கலரா,அழகா பாப்பார பொண்ணு போல இருக்காளே” என்று சொன்னதும் தேவி உடனே ”ஆமா ங்க,அவளைப் பார்க்கிற எல்லாரும் இப்படித்தான் சொல்றாங்க” என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டாள் தேவி.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *