சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 8,491 
 

அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 | அத்தியாயம்-26

உடனே சாந்தா “செந்தாமரை எங்க வீட்டுக்கு வந்த வேளை ரெண்டு வருஷத்துக்குள்ளாற எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்துங்க.எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்ததுங்க” என்று சொன்னாள்.செந்தாமரை “நான் பத்தாவது வகுப்பு படிக்கிற பிள்ளைங்களை இட்டு கிட்டு மதுரைக்கு ‘எக்ஸ்கர்ஷன்’ போய் இருந்தேன்க்கா.நாங்க மதுரை கோவிலை பபாத்து விட்டு வெளியே வந்தப்ப, தூரத்தில் அப்பாவும்,அம்மாவும் தனியா உக்காந்து கிட்டு இருப்பதை பாத்தேங்க்கா.அவங்க பையன் ஆனந்தன் அப்பாவையும் அம்மாவையும் ஒரு முதியோர் இல்லத்லே சேத்து விட்டு இருக்கான் என் கிற விஷயம் தொ¢ய வந்திச்சி.நான் அவங்களெ என் கூட சென்னைக்கு வரும்படி ரொம்ப வற்புருத்தி கேட்டு கிட்டேன்.முதல்லெ அவங்க வர மறுத்தாங்க.அப்புறமா நான் ரொம்ப கெஞ்சி கேட்டு கிட்ட தாலே அவங்க ஒத்து கிட்டாங்க.அப்புறமா நான் சென்னைக்கு வந்து தரை மட்டத்திலெ இருக்கிற ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கிட்டு,வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் வாங்கி போட்டு விட்டு,ஒரு சமையல்கார அம்மாவையும், வீட்டு வேலை செஞ்சு வர அம்மாவையும் ஏற்பாடு பண்ணி விட்டு,அந்த வார கடைசியிலே மறுபடியும் மதுரைக்கு போய் அந்த முதியோர் இல்லத்துக்குப் போய் மானேஜா¢டம் பேசி,அப்பாவையும் அம்மாவையும் என் வீட்டுக்கு இட்டு கிட்டு வந்து இருக்கேங்க்கா” என்று பூரா கதையையும் சொன்னாள்.

உடனே சாந்தா “செந்தாமரை எங்களை அவ வீட்டுக்கு இட்டுக் கிட்டு வந்து சாப்பாடு சமைச்சு ப் போட ஒரு சமையல் கார அம்மாவையும்,வீட்டு வேலை செஞ்சு வர அம்மாவையும் ஏற்பாடு பண்ணீ இருக்கா.எங்க ரெண்டு பேர் கண் பார்வையும் சரி இல்லாம இருந்திச்சி.செந்தாமரை அவ செலவிலே எங்க ரெண்டு பேர் கண்களுக்கும் கண் ‘ஆபரேஷன்’ பண்ணி எங்க கண்ணுக்கு கண்ணாடி வாங்கிப் போட்டு இருக்கா.செந்தாமரை எங்க வயித்திலெ பொறக்காத ஒரு ‘மாணிக்கம்ங்க. செந்தாமரை எங்களே மதுரையிலே சந்திச்சு,எங்களை அவ கூட அழைச்சு கிட்டு வந்து,நாங்க தங்க எல்லா ஏற்பாடு பண்ணினதே,நாங்க போன ஜெனமத்லே செஞ்ச புண்ணியம்ன்னு நினைக்கிறோம்ங்க நாங்க இப்போ செந்தாமரை கூட ரொம்ப சந்தோஷாமா இருந்து வறோமுங்க” என்று தன் கண்களில் கண்ணிர் மல்க சொன்னாள்.

கொஞ்ச நேரம் பேசிக் கிட்டு இருந்து விட்டு கமலா கொடுத்த பலகாரத்தை சாப்பிட்டு விட்டு செந்தாமரை கணபதியையும் சாந்தாவையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.செந்தாமரை கணபதியையும் சாந்தாவையும் அழைத்துக் கொண்டு ரமேஷ் வீட்டுக்குப் போனாள். செந்தாமரையைப் பார்த்ததும் ரமேஷ் ஆச்சரியப் பட்டு “வா செந்தாமரை” என்று சொல்லி வரவேற்றான்.பின்னாலேயே வந்த விஜயாவும் செந்தாமரையை உள்ளே வரும்படி சொல்லி வரவேற்று சோபாவில் உட்காரச் சொன்னாள்.செந்தாமரை அவரகள் இருவருக்கும் தன் நன்றியை சொல்லி விட்டு எல்லோரும் சோபாவில் உட்கார்ந்துக் கொண்டார்கள்.

கொஞ்சம் நேரம் போனதும் செந்தாமரை” ராஜேஷ் சார்,இதோ என்னுடன் கூட இருக்கும் இந்த ரெண்டு ‘தெய்வங்கள்’ தான் என்னை மதுரைக்கு அழைச்சு போய் பதினோராவதும், பன்னாடாவதும் அவங்க செலவ்லே படிக்க வச்சு,இருக்க இடமும் கொடுத்தவங்க.நம்ப பள்ளிகூடம் என்னை மதுரை க்கு’எக்ஸ்கர்ஷன்’ அனுப்பி இருந்த போது,நான் இவங்களே மதுரை மீனாக்ஷி கோவிலிலே சந்திச்சு, இவங்களே இங்கே அழைச்சு கிட்டு என்னுடன் வச்சு கிட்டு வந்து,இவங்க பண்ண அந்த ‘பெரிய உதவி’க்கு என் நன்றியே செலுத்தி வறேன்” என்று சொல்லி கணபதியையும் சாந்தாவையும்,அறிமுகப் படுத்தினாள்.செந்தாமரை கண்களீல் கண்ணீர் முட்டியது.

உடனே ராஜேஷ்” சார்,நீங்க பண்ண இந்த பெரிய உதவியை செந்தாமரை அடிக்கடி என் கிட்ட சொல்லி, உங்க ரெண்டு பேருக்கும் மானசீகமாக நன்றி செலுத்தி வருவா” என்று சொல்லி அவர்க ளை பாராட்டினான்.உடனே கணபதி “நான் அவ கிட்ட சில மணக்கணக்குகளை கேட்டவுடன் அவ ‘சட்’’சட்’ டென்று சா¢யான விடைகள் சொன்ன போதே ‘இவ நிச்சியாமா ஒரு கணித மேதையா இரு க்க வேண்டும்’ என்று முடிவு பண்ணீ தான்,அவளை நான் மதுரைக்கு அழைச்சுப் போனேன்” என்று சந்தோஷமாக சொன்னார்.”நீங்க சொல்றது நூத்துக்கு நூறு நிஜம் சார்.நானும் அவ கணக்கு மேதாவி தனத்தை பல தடவை பாத்து சந்தோஷப் பட்டு இருக்கிறேன்” என்று சொன்னான்.உடனே செந்தா மரை “சார்,ராஜேஷ் ஒன்னும் கணக்கு மேதாவிதனத்தில் குறைஞ்சவர் இல்லே.இவரும் நானும் தான் உங்க கிட்ட குடுத்த பத்தாவது பன்னாடவது புஸ்தகங்கள் போட்டோம்”என்று சொல்லி ராஜேஷைப் புகழ்ந்தாள்.கணபதி “செந்தாமரை எனக்கு அந்த ரெண்டு கணக்கு புஸ்தகங்களை படிக்கக் குடுத்தா. நான் அவைகளை முழுக்கப் படிச்சேன்.உண்மையிலேயே அந்த ரெண்டு கணக்கு புஸ்தகங்களும் பத்தாவது பன்னாடாவது பிள்ளைகளுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.எனக்கே சில இடங்களில் இந்த கணக்கை இவ்வளவு சுலபமாக போல முடியுமான்னே சந்தேகம் வந்தது” என்று சொல்லி மிகவும் சந்தோஷப் பட்டார்.பிறகு விஜயா கொண்டு வந்த பாகாரத்தையும், காபியையும்,குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்கள்

அடுத்த ஞாயிற்று கிழமை செந்தாமரை கணபதியையும்சந்தாவையும் மூர்த்தி சார் வீட்டுக்கு அழைத்துப் போய் மூர்த்தி சாரிடம்”சார்,இந்த ரெண்டு ‘தெய்வங்கள்’தா¡ன் என்னை சென்னையில் இருந்து மதுரைக்கு அவங்க காரில் அழைச்சுக் கிட்டு போய்,அவங்க வீட்டிலே வச்சு கிட்டு அவங்க செலவிலே என்னை பதினோராவதும், பன்னாடாவதும் படிக்க வச்சாங்க” என்று சொல்லி விட்டு பிறகு மூர்த்தி சாரை காட்டி”இவர் தான் அவர் செலவிலே என்னை ஒன்பதாவதும்,பத்தாவதும் படிக்க வச்ச ‘தெய்வம்’ “என்று சொல்லி அவர் காலை தொட்டு வணங்கினாள்.உடனே மூர்த்தி சார் “அப்படியா செந்தாமரை,மிஸ்டர் கணபதி,நான் செந்தாமரையை ஒன்பதாவது,பத்தாவது படிச்சு வரும் போதே அவ கணக்கு ஆற்றலை வெகுவாக புகழ்ந்தேன்.அவ உண்மையிலேயே கணக்கிலே ஒரு ‘ஜீனியஸ்’ ” என்று சொல்லி சந்தோஷப் பட்டார்.கணபதியும் “நானும் அவ கணக்கு அறிவை கவனிச்ச பிற்பாடு தான் இவளை மதுரைக்குப் போய் படிக்க வச்சேன்.அவ என்னை ஏமாத்தாம,B.Sc. Maths லும் M.Sc.Maths லும் ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வந்து காட்டினா” என்று அவர் பங்குக்கு சொல்லி சந்தோஷப் பட்டார்.பிறகு அவர்கள் வீட்டில் குடுத்த பலகாரத்தையும் காபியையும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

கணபதியும்,சாந்தாவும்,செந்தாமரை வீட்டிலே சந்தோஷமாக சமையல்கார அம்மா செய்து போடும் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டும்,டீ.வீ.யைப் பார்த்துக் கொண்டும்,செந்தாமரை வாங்கி வந்த தினசா¢ பேப்பரையும்,வாராந்திர,மாதாந்திர புஸ்தகங்களையும் எல்லாம் படித்து வந்து சந்தோஷ மாய் இருந்து வந்தார்கள்.செந்தாமரை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சமையல்கார மாமிக்கு லீவு கொடுத்து விட்டு கணபதியையும்,சாந்தாவையும், ஒரு கால் டாக்சியை வைத்துக் கொண்டு சென்னை யிலே இருக்கிற எல்லா சுற்றுலா இடங்களுக்கும் அழைத்துப் போய் காட்டி விட்டு ஒரு நல்ல ஹோட்ட லிலே சாப்பாடு வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
கணபதியும்,சாந்தாவும்,சந்தோஷமாக இருந்து வந்தார்கள்.ஒரு நாள் கணபதிக்கு தூக்கத்திலேயே “மாஸிவ் ஹார்ட் அட்டாக்” வந்து அவர் இறந்து போனார்.சாந்தா கதறி கதறி அழுதாள்.செந்தாமரை சாந்தாவிடன் “நீங்க கவலைப் படாதீங்கம்மா. நான் உங்களுக்கு கூடவே இருந்து வருவேன்” என்று சொல்லி ஆறுதல் சொன்னாள்.செந்தாமரை சாந்தாவை வீட்டில் சமையல் கார அம்மாவை ஜாக்கிறதையா பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு கணபதி பூத உடலை அடக்கம் பண்ணி விட்டு வந்தாள்.செந்தாமரை எவ்வளவு ஆறுதல் சொல்லி சாந்தாவுக்கு தன் கணவன் இறந்த துக்கம் தீர வில்லை.அந்த துக்கத்திலும் “அம்மா செந்தாமரை,எங்களுக்கு என்று ஒரு மகன் பொறந்து இருந்தும் இருந்தும்,அவன் கையாலே ‘அவருக்கு ’இறுதி சடங்கு’ பண்ண குடுப்பனை இல்லே. நீ வாய்க்கு வாய் அவரை ‘அப்பா’ ‘அப்பா’ன்னு கூப்பிட்டு இருந்தே.உனக்கு அந்த பாக்கியம் கிடைச்சு இருக்கு”என்று சொல்லிம் போது சாந்தாவுக்கு துக்கம் மேலிட்டது.அவ அழுது கொண்டே” நானும் இன்னும் ரொம்ப நாள் உயிரோடு இருக்கமாடேன்ம்மா.என்னை ‘அம்மா’ ‘அம்மா’ ன்னு கூப்பிட்டு வந்தே.என்னையும் அவருக்கு செஞ்சா மாதிரி எல்லா ‘காரியமும்’ செஞ்சு விடம்மா” என்று செந்தாமரை கையைப் பிடித்து க் கொண்டு அழுதாள்.உடனே செந்தாமரை “நீங்க கவலை இல்லாம இருந்து வாங்க.நான் உங்க ஆசையை நிச்சியமா நிறைவேத்துவேன்” என்று சொல்லி சாந்தாவை சமாதானப் படுத்தினாள்.

50 வருட காலம் வரை ஒன்றாக வாழ்ந்து வந்த தம்பதிகள் இவர்கள் இல்லையா??

என்ன தான் செந்தாமரை ஆறுதல் சொன்னாலும்,சொந்த மகன் அவர்களை இப்படி அனாதை களாக வீட்டு விட்டுப் போன துக்கமும்,நாம இப்படி தங்கிப் போய் விட்டோமே எங்கிற ஏக்கமும், சாந்தாவை வாட்டி வந்தது.அந்த ஏக்கமே அவளை ஒரு நாள் ராத்திரி கணபதி இறந்தது போலவே துக்கத்திலேயே இறக்க வைத்து விட்டது.செந்தாமரை சாந்தா கேட்டுக் கொண்டது போல அவளுக்கு எல்லா ஈமக் கிரியைகளையும் செய்து முடித்தாள்.

கணபதி சாந்தா மறைவுக்குப் பிறகு செந்தாமரை மறுபடியும் ஒரு தனி மரம் ஆனாள். செந்தா மரை அவள் இருந்து வந்த வீட்டில் இருந்த எல்லா சாமான்களையும் பழைய சாமான்கள் வாங்கும் ஓருவா¢டம் விற்றாள்.‘காஸ்’ ‘கனெக்ஷனை’ ‘சரண்டர்’ பண்ணி விட்டு வீட்டு ஓனா¢டம் தான் இந்த வீட்டை காலி பண்ணப் போவதாய் சொன்னாள்.அந்த ஓனரும் செந்தாமரையின் தனிமையை நினைத்து மிகவும் வருத்தப் பட்டார்.செந்தாமரை இடம் இருந்து வீட்டு சாவிகளை வாங்கி கொண்டு செந்தாமரை கொடுத்த ‘அட்வான்ஸ்ஸை’ திருப்பிக் கொடுத்தார்.

செந்தாமரை மறுபடியும் ‘லேடீஸ் ஹாஸ்டலுக்கு’ வந்து விட்டாள்.நேரம் கிடைக்கும் போது செந்தாமரை தன் அக்கா வீட்டுக்குப் போய் அவர்கள் எலோருடைய சௌக்கியத்தை விசாரித்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தாள்.

பிரின்ஸிபால் ஷர்மா ‘ரிடையர்’ ஆனதும் பள்ளி கூட நிர்வாகம் ரமேஷை ‘பிரின்ஸிபால்’ இடத்தி ற்கு பிரமோஷன் கொடுத்து,செந்தாமரைக்கு உதவி ‘பிரின்ஸிபால்’ பதவிக்கு பிரமோஷன் கொடுத்து சம்பள உயர்வையும் கொடுத்தார்கள்.செந்தாமரையும், ரமேஷூம், ஒருத்தரை ஒருத்தர் வாழ்த்திக் கொ ண்டு புது வேலையை சந்தோஷமாக செய்து வந்தார்கள்.

ரமேஷ் ‘ரிடையர்’ ஆன அன்று பள்ளி கூட நிர்வாகம் அவருக்கு ஒரு ‘பிரிவு உபசார விழாவை’ கொண்டாடி அவரை கௌரவித்தார்கள் எல்லா வாத்தியார்களும் அந்த விழாவில் கலந்துக் கொண்டு ரமேஷூக்கு சால்வைப் போர்த்தி, நிறைய பரிசுகள் எல்லாம் கொடுத்தார்கள்.விழா முடிந்தவுடன் ரமேஷ் செந்தாமரையை தனியாக சந்தித்து “செந்தாமரை, இத்தனை வருஷமா நான் உன்னோடு வேலை செஞ்சி வந்தேன்.நாம் இருவரும் ஆராய்ச்சி பண்ணி பத்தாவது வகுப்புக்கும்,பன்னாடாவது வகுப்புக்கும்,கணக்கு புஸ்தகம் போட்டோம்.இன்னியிலே இருந்து நான் ‘ரிடையர்’ ஆயி இருக்கேன். இனிமே நான் தினமும்ஒருவரை ஒருவர் பாக்கமுடியாது.உன்னை என் வாழக்கையிலே சந்திச்சதே நான் ஒரு பெரும் பாக்கியமா கருதுறேன்.நீ உண்மையிலே கணக்கிலே ஒரு ‘ஜீனியஸ்’ செந்தாமரை. உன்னை என் வாழக்கை துணைவியாக்கிக் கொள்ள நான் ரொம்ப ஆசைப் பட்டேன்.ஆனா அந்த பகவான் வேறே விதமா நினைச்சுண்டு இருந்து இருக்கார் போல இருக்கு.எனக்கு அடுத்த ஜென்மம் ன்னு ஒன்னு இருந்தா,நான் அந்த ஜென்மத்திலாவது,உன்னை என் மணைவியாக அடையணும்ன்னு ரொம்ப ஆசைபடறேன் செந்தாமரை” என்று தன் கண்களில் கண்ணீர் மல்க சொன்னான். செந்தாமரை சிரித்து கொண்டே”அப்படியே ஆவட்டுங்க.எனக்கும் அது தாங்க ஆசை.இப்போ நீங்க உங்க ‘ரிடையர்ட் ‘லைப்பை’ உங்க ‘வைபோடு’ சந்தோஷமா கழிச்சு வாங்க” என்று சொல்லி ரமேஷை அனுப்பி வைத்தாள்.

அடுத்த வாரமே பள்ளிகூட நிர்வாகம் செந்தாமரையை அந்த பள்ளி கூடத்திற்கு ’ப்ரின்சிபால்’ பதவிக்கு பதவி உயர்வு கொடுத்து சம்பள உயர்வும் கொடுத்தார்கள்.’நான் படித்த இந்த நுங்கம்பாக்கம் பள்ளிகூடத்துக்கு ‘பிரின்ஸிபால்’ பதவிக்கு ஒரு நாள் வருவேன்னு,கனவிலும் நான் நினைக்கலே. ஆனா இப்ப இது நிஜம் ஆகி இருக்கே.பிள்ளையாரே இது எல்லாம் உன் அனுக்கிரஹம் தாம்ப்பா’ என்று தன் மனதில் சொல்லி கொண்டு,தான் தினமும் வேண்டி வரும் பிள்ளையாருக்கு நன்றி சொல்லி விட்டு செந்தாமரை ‘பிரின்ஸிபால் சீட்டை’த் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டு விட்டு உட்கார்ந்தாள்.செந்தாமரை தான் இருந்து வந்த ‘லேடீஸ் ஹாஸ்டலை’ காலி பண்ணி விட்டு ‘பிரின்ஸிபால்’ வீட்டுக்கு குடிவந்தாள்.செந்தாமரை அந்த பள்ளி கூடத்தை மிக நன்றாக நடத்தி வந்தாள்.பள்ளி கூட நிர்வாகம் செந்தாமரையை வெகுவாக புகழ்ந்தார்கள்.
செந்தாமரைக்கு அறுபது வயது ஆகியும் கூட அவ பள்ளி கூடத்தை நடத்தி வந்த விதம் ‘மானேஜ்மெண்டு’க்கு மிகவும் பிடித்து இருந்ததால், அவளுக்கு ‘ரிடையர்மென்ட்’ கொடுக்காமல் ‘பிரின்ஸிபால’ வேலையை செய்து வரச் சொன்னார்கள்.செந்தாமரையும் அந்த ‘பிரின்ஸிபால் வேலை யை சந்தோஷமாக செய்து வந்தாள்.செந்தாமரைக்கு வயது அறுபத்தைந்து ஆகியது.நாளாக நாளாக செந்தாமரைக்கு தனிமையும், தள்ளாமையும் ஒன்றாக சேர்ந்து கொண்டது.’நாம செய்து வந்த இந்த ‘பிரின்ஸிபால’ வேலை போதும்.இனிமே நாம எங்காவது ஒரு ‘பாதுகாப்பான’ இடத்திற்கு போய் நம்ம கடைசி காலத்தை கழித்து வர வேண்டும் என்று முடிவு பண்ணீனாள்.

அந்த முடிவை ‘மேனேஜ்மென்ட்டிடம்’ சொன்னாள்.’மேனேஜ்மெண்ட்டும்’ செந்தாமரை கேட்டுக் கொண்டது போலவே அந்த வருடம் பாஷைகள் எல்லாம் முடிந்தவுடன் அவளுக்கு ‘ரிடை யர்மெண்ட்’ கொடுத்தார்கள்.செந்தாமரை ‘ரிடையர்’ ஆனவுடன் பள்ளிக் கூடத்தில் இருந்து தனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டாள்.பள்ளி கூட நிர்வாகமும்,எல்லா வாத்தியார்களும், ’பிரின்ஸிபால்’ செந்தாமரைக்கு பிரிவு உபசார விழாவை கோலாகலமாக் கொண்டாடி நிறைய பரிசு களை கொடுத்தார்கள்.செந்தாமரை எல்லோருக்கும் தன் நன்றியை சொன்னாள்.

தான் இருந்து வந்த ‘ பிரின்ஸிபால்’ வீட்டை காலி பண்ணி விட்டு மறுபடியும் ஹாஸ்டலுக்கு வந்து விட்டாள் செந்தாமரை.ஹாஸ்டலுக்கு வந்த செந்தாமரை படுக்கையில் படுத்துக் கொண்டு தான் அடுத்து என்னப் பண்ணப் போகிறோம் என்று தீவிரமாக யோஜனைப் பண்ணீனாள்.நமக்கும் வயசு ஆயி வறுது,நமக்கு இந்த உலகத்திலே துணைன்னு யாரும் இல்லே.வயது அதிகம் ஆக,ஆக, உடம்பு க்கு ஏதாவது வியாதின்னு வந்தா யார் நம்மை ஹாஸ்பிடலுக்கு எல்லாம் வந்து அழைச்சுப் போய் பாத்துக் கொள்ளுவாங்க.நம்மை யார் கவனிச்சு வருவாங்க.நம்ப காலம் முடிஞ்ச பிறகு நம்மிடம் இருக்கும் பணம் யாரை போய் சேரும்.அப்படி ஒருவரும் நம் வாழ்க்கைலே இப்போ இல்லையே.’நீங்க உங்க குடும்பத்தோடு சதோஷமா இருந்து வாங்கன்னு தானே நாம அக்கா கிட்டே சொல்லிட்டு வந்தோம்.இப்ப நாமஅங்கே போய் அவங்க கூட வந்து தங்கறோம்னு’ சொன்னா அவங்க ‘இவளுக்கு வயசு அதிகம் ஆயிடிச்சி,தனக்கு உதவி வேணும்ன்னு தானே இவ மறுபடியும் நம்ம கூட இருந்து வர ஆசைப் படறா’ன்னு நினைச்சுக்க மாட்டாங்களா.தவிர இப்ப மாமாவும் வேலைக்குப் போய் வறார். அவங்க வசதியாக வாழ்ந்து வறாங்க.எனக்கும் வசதியாக வாழ்ந்து வரும் அவங்க குடுமபத்திலே மறுபடியும் போய் தங்கி,வந்து அவங்களுக்கு தொந்தரவாக இருந்து வர விருப்பம் இல்லையே .என்ன பண்ணலாம்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.அவளுக்கு ஒரு வழியும் தொ¢ய வில்லை.கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை தூங்கிப் போனாள்.

அடுத்த நாள் காலையிலே ‘காபி’க் குடித்து விட்டு அன்றைய தினசா¢ பேப்பரைப் பிரித்து படிக்க ஆரம்பித்தாள்.செந்தாமரைக்கு இப்போது பள்ளி கூடத்திற்குப் போக வேண்டிய அவசரம் இல்லாததால்,அவள் நிதானமாக ஒவ்வொரு பக்கத்தையும் படித்தாள்.அந்த தினசிரியில் கீழ் கண்ட ஒரு விளம்பரம் வந்து இருந்தது.

அன்னை தெரஸா முதியோர் இல்லம்.
125, பூந்தமல்லி ரோடு,சென்னை 87. தமிழ் நாடு.
போன்: 883 677 3478.
அன்புடையவர்களே,எங்க முதியோர் இலத்திலே மொத்தம் முப்பது முதியோர் இருந்து வறாங்க. ஐந்து வருஷத்துக்கு முன்னாடி,ஒரு வெளி நாட்டவர் சுற்றுலா வந்த போது எங்க முதியோர் இல்லத்து க்கு வந்து இருந்தார்.நாங்கள் செய்து வரும் புனித சேவையை அவர் வெகுவாக புகழ்ந்தார். அவர் திரும்பி அவர் நாட்டுக்குப் போன பிறகு மாசா மாசம் எங்களுக்கு பணம் அனுப்பி கிட்டு வந்துக் கொண்டு இருந்தார்.இரண்டு மாசத்திற்கு முன்பு அவர் இறந்துப் போய் விட்டார்.அதனால் எங்க முதியோர் இல்லத்திற்கு அவர் பணம் அனுப்புவது நின்றுப் போய் விட்டது.தற்போது நாங்க இங்கே இருக்கும் முதியர்களுக்கு ரெண்டு வேளை சாப்பாட்டுக்கும்,அவர்கள் வைத்திய செலவுக்கும்,மிகவும் கஷ்டப் பட்டு வறோம்.இந்த விளம்பரத்தை படிக்கும் தயாள குணம் படைத்தவர்கள்,தயவு செஞ்சி எங்களுக்கு பண உதவி பண்ணுமாறு உங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம். இப்படிக்கு:
இல்லத்தின் டைரக்டர் சிஸ்டர் நிர்மலா.

இந்த விளபரத்தை படித்த செந்தாமரைக்கு மனம் நெகிழ்ந்தது.‘நான் ஏன் என்னிடம் இருக்கும் பணத்தை மொத்தமா அந்த முதியோர் இல்லத்துக்கு குடுத்து விட்டு,அந்த முதியோர் இல்லத்லே நம்மால் முடிஞ்ச உதவியைப் பண்ணிக் கிட்டு,அங்கேயே நம்முடைய கடைசி காலத்தைக் கழிச்சு வரக் கூடாது’ என்று யோசித்தாள்.அவள் மனம் ‘நாம் அப்படி செஞ்சு வந்தா தான் இந்த வயசான காலத்லே நமக்கு நல்ல நிம்மதி கிடைக்கும்’ என்று தீர்மானம் பண்ணீனாள்.அவள் முடிவு எடுத்தாள். குளித்து விட்டு செந்தாமரை தன் துணிமணிகளை ஒரு ‘ சூட் கேஸில் ‘’பாக்’ பண்ணீனாள். ஹாஸ்டலில் நாஷ்டா சாப்பிட்டு விட்டு நேரே தான் பணம் வைத்து இருக்கும் ‘பாங்குக்கு’ப் போனாள்.
செந்தாமரையைப் பார்த்த அந்த பாங்கு மானேஜர் செந்தாமரையை வரவேற்று உட்காரச் சொன் னார்.கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை அந்த மானேஜரைப் பார்த்து “சார்,நான் என் பணம் பூரா வையும் பூந்தமல்லி பக்கத்திலே இருக்கிற அன்னை தெரஸா முதியோர் இல்லத்துக்கு குடுத்து விட்டு, அந்த முதியோர் இல்லத்திலெ தங்கி,என் கடைசி காலத்தை கழிக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக் கேன்”என்று சொல்லி அவள் தினசா¢ பேப்பரில் படித்த விளம்பரத்தை காட்டினாள்.உடனே அந்த மானேஜர் “ஆமாங்க,காத்தாலே நானும் அந்த விளம்பரதை படிச்சேங்க.எனக்கு மட்டும் கல்யாணத்து க்கு ரெண்டு பொண்ணுங்க இல்லாம இருந்தா நானும் இந்த பாங்கிலெ இருந்து ‘வாலின்டா¢ ரிடையர் மென்ட்’வாங்கிக் கிட்டு,என் மொத்த பணத்தையும் அந்த முதியோர் இல்லத்துக்குக் குடுத்து விட்டு நானும் என் மணைவியும் எங்க கடைசி காலத்தை அந்த முதியோர் இல்லத்லே கழிக்க முடிவு பண்ணீ இருப்பேனுங்க.நம்ப பணம் நிறைய ஏழைகளுக்கு உபயோகப்பட்டா அது நமக்கு புண்ணீயம் தானே. நீங்க அந்த மாதிரியே பண்ணுங்க.மூதாட்டி ஒளவையார் கூட ‘பாத்திரம் அறிந்து பிச்சை போடுன்னு’ தாங்க வசனம் எழுதினார்.இல்லையாங்க.நீங்க அதன்படி நடந்தா ரொம்ப நல்லதுங்க. உங்களுக்கு இந்த ஜென்மத்திலே நிறைய புண்ணீயம் சேரும்ங்க” என்று மனம் உருகிச் சொன்னார்.அவர் கண் களில் இருந்து கண்ணீர் வழிந்தது.மானேஜர் தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கைக் குட்டை யை எடுத்து தன் கண்களை துடைத்துக் கொண்டார்.செந்தாமரைக்கு அவர் சொன்ன வார்த்தைகள் மனதில் ஆழமாக பதிந்தது.உடனே செந்தாமரை “சார்,நானும் அப்படித் தான் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன்.அதனாலே நீங்க என் ‘அக்கவுண்டிலே’ ஒரு லக்ஷம் ரூபாய் மட்டும் வச்சுக் கிட்டு,மத்த பணம் பூராவையும் ‘அன்னை தெரஸா முதியோ இல்லம்’என்கிற பேருக்கு,ஒரு ‘ட்ராப்ட்டா’ கொடுதீங்கன்னா,நான் அந்த ‘ட்ராப்படை’அந்த முதியோர் இல்லத்தின் டைரக்டர் கிட்டே கொடுத்து விட்டு,அங்கேயே என் கடைசி காலத்தை கழிக்க முடிவு பண்ணி இருப்பதாக சொல்ல சௌகா¢யமா இருக்கும்”என்று கேட்டுக் கொண்டாள்.உடனே அந்த மானேஜர் “ஓ.கே. மாடம். நான் அப்படியே செய்யறேன்”என்று சொல்லி விட்டு தன் உதவி மானேஜரை கூப்பிட்டு “நீங்க இந்த மாடத்துக்கு கிட்டே அவங்க விரும்புமிற மாதிரி ஒரு ‘லெட்டர்’ எழுதி வாங்கி கிட்டு,ஒரு ‘ட்ராப்ட்’ குடுத்து விடுங்க”என்று சொல்லி அனுப்பி விட்டு செந்தாமரையைப் பார்த்து ‘ ““பெஸ்ட் விஷஸ் பார் யுவர் ஓல்ட் ஏஜ் லைப்’ “ என்று வாழ்த்து சொல்லி அனுப்பினார்.

“ரொம்ப ‘தாங்க்ஸ்’ சார்” என்று சொல்லி அவரை ‘தாங்க்’ பண்ணி விட்டு அவர் ரூமை விட்டு வெளியே வந்து அந்த உதவி மானேஜா¢டம்,தான் விரும்புற மாதிரி ஒரு ‘லெட்டர்’ எழுதி கொடுத்து விட்டு,அவர் கொடுத்த ‘ட்ராப்டை’ வாங்கி கொண்டு பாங்கை விட்டு வெளியே வந்தாள்.மதியம் உணவை முடித்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு வந்து தன் ரெண்டு ‘சூட் கேஸ்களை’ எடுத்து கொண்டு ஒரு ஆட்டோவை வைத்துக் கொண்டு ‘அன்னை தெரஸா முதியோர் இல்லம்’ இருக்கும் இடத்தை விசாரித்துக் கொண்டு,அந்த இல்லத்திற்கு வந்து சேர்ந்தாள் செந்தாமரை.ஆட்டோவை விட்டு கீழே இறங்கி ஆட்டோ டிரைவருக்கு பணத்தை கொடுத்து விட்டு தன் ‘சூட் கேஸ்களை’ எடுத்துக் கொண்டு அந்த முதியோர் இல்லத்திற்குள் போனாள்.

அந்த இல்லத்தின் டைரக்டர் ‘சிஸ்டர் நிர்மலா’ இருக்கும் இடத்தை விசாரித்துக் கொண்டு அந்த இடத்திற்குப் போனாள் செந்தாமரை.

வாசலில் இருக்கும் ‘பியுனிடம்’ செந்தாமரை தான் ‘டைரக்டரை’ப் பார்க்க விரும்புவதாகச் சொன்னாள்.அந்த பியூனும் உள்ளே போய் சிஸ்டர் நிர்மலாவைப் பார்த்து “அம்மா,உங்களைப் பார்க்க ஒரு வயசான அம்மா வந்து இருக்காங்க.அவங்களே நான் உள்ளே அனுப்பட்டுமாங்க” என்று கேட் டான்.உடனே சிஸ்டர் நிர்மலா “அனுப்புப்பா” என்று சொன்னதும் அந்த பியூன் வெளியே வந்து செந்தாமரையைப் பார்த்து “உங்களை உள்ளே வரச் சொன்னாங்க”என்று சொன்னதும்,செந்தாமரை அவள் கொண்டு வந்த ‘சூட் கேஸ்களையும்’ அந்த பியூனை பார்த்து கொள்ளச் சொல்லி விட்டு ‘சிஸ்டர் நிர்மலா’ ரூமுக்குள் நுழைத்து “குட் ஈவினிங்க் சிஸ்டர்” என்று தன் கையைக் கூப்பிக் கொண்டு சொன்னாள்.தலை மயிர் எல்லாம் நரைத்து இருக்கும் வயதான அந்த அம்மாவைப் பார்த் ததும் ‘சிஸ்டர் நிர்மலா’ பதிலுக்கு “”குட் ஈவினிங்க் மேடம்.வாங்க உக்காருங்க” என்று தன் சீட்டை விட்டு எழுந்து நின்றுக் கொண்டு சொல்லி செந்தாமரையை வரவேற்றாள்.செந்தாமரையும் ‘சிஸ்டர் நிர்மலா’ காட்டின ஒரு ‘சேர்லே’ உட்கார்ந்துக் கொண்டாள்.செந்தாமரை ‘சிஸ்டர்’ நிர்மலாவைப் பார்த்து “சிஸ்டர்,நான் நுங்கம்பாக்கம் ‘ஹை ஸ்கூலில் இருந்து ரிடையர் ஆன ஒரு பிரின்ஸிபால்.என் பேர் செந் தாமரை.இன்னைக்கு காத்தாலே நீங்க ‘இண்டியன் எக்ஸ்ப்ரஸ்’ பேப்பரில் குடுத்த விளம்பரத்தை படிச்சேன்.நான் உங்க முதியோர் இல்லத்தின் பேர்லே இந்த ‘ட்ராப்ட்டை’கொண்டு வந்து இருக் கேன்.இந்த ‘ட்ராப்டை’ உங்க கிட்டே குடுத்து விட்டு,என் கடைசி காலத்தை இங்கே இருக்கும் முதியவர்களுக்கு என்னால் முடிஞ்ச உதவிகளை பண்ணிக் கிட்டு,அவர்களில் நானும் ஒருவளாக இருந்து வர ரொம்ப ஆசைப் படறேங்க.உங்க பள்ளிகூடத்திலே இருக்கும் பிள்ளைகளுக்கு நான் கணக்கு சொல்லிக் குடுக்க ஆசைபடறேன்.இந்தாங்க அந்த ‘ட்ராப்ட்’.இந்த பணத்தை உங்க ‘அக்கவுண்டில்’ போட்டுங்க.அப்புறமா என்னை நீங்க இந்த முதியோர் இல்லத்திலே சேத்துக் கிட்டு, எனக்கு ரெண்டு வேளை சாப்பாடுப் போட்டு,இருக்க இடம் கொடுப்பீங்களா சிஸ்டர்” என்று தன் கையை கூப்பி கொண்டு கேட்டாள்.செந்தாமரை கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.உடனே செந்தாமரை தன் ‘ஹாண்ட் பாக்கில்’ இருந்து தன் கைக் குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
உடனே ‘சிஸ்டர் நிர்மலா’ செந்தாமரை இடம் இருந்து அந்த ‘ட்ராப்டை’வாங்கி பார்த்தாள். ‘ட்ராப்டை’ப் பார்த்ததும் ‘சிஸ்டர்’ முகம் மலர்ந்து காணப்பட்டது.அவர் உடனே “மேடம்,உங்களுக்கு ரொம்ப நன்றிங்க.நான் விளம்பரம் குடுத்து ஒரு நாள் கூட இன்னும் ஆகலே.அதுக்குள்ளாற உங்களை மாதிரி தயாள குணம் படைத்த ஒருவரை கர்த்தர் எங்களுக்கு காட்டுவார்ன்னு நாங்க கனவிலும் நினைக்கலே.இது வரை எங்களுக்கு இவ்வளவு பணம் ஒரே தடவையா யாரும் குடுத்ததே இல்லே. நீங்க கொடுத்து இருக்கும் இந்த முப்பத்து ஏழு லக்ஷம்,என்பதாயிரத்து தொன்னெத்தெட்டு ரூபாய் க்கு நாங்க உங்களுக்கு வடை பாசயத்தோடு உங்க காலம் முடியும் வரை சாப்பாடு போட முடியும்.நீங்க இங்கே தாராளமா தங்கி வரலாங்க.நீங்க இங்கே தங்கி வருவதே நாங்க எங்க பாக்கியமா கருதுவோங்க. நீங்க இனிமே எந்த வித வருத்தமும் இல்லாம,இங்கே நிம்மதியா இருந்து வரலாங்க”என்று சொன்னார்.

கொஞ்ச நேரம் ஆனதும் அந்த சிஸ்டர் “மேடம், நான் உங்களுக்கு என் ரூமுக்கு பக்கத்திலே இருக்கிற ‘கெஸ்ட் ரூமை’ திறந்து விடச் சொல்கிறேன்.அந்த ‘கெஸ்ட் ரூமில் நீங்க சந்தோஷமா இருந்து வாங்க.நீங்க ஆசைப் படுவது போல இங்கே இருக்கும் பள்ளீகூடத்தின் பிள்ளைகளுக்கு கணக்கு சொல்லி குடுங்க.நீங்க தவறா எடுத்தலேன்னா,எங்க முதியோர் இல்லத்தின் அன்ரறாட வரவு செலவு கணக்கைக் கூட பாத்து வந்தா,எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.இங்கே நாங்க எல்லோரும் சாப்பிட்டு வரும் உணவை உங்களுக்கு தரோம்.இந்த இல்லத்தில் பதினாறு ஆண் முதிய வர்களும்,பதினான்கு பெண் முதியவர்களும் இருக்காங்க.இந்த இல்லத்லே நாங்க மொத்தம் ஆறு ‘சிஸ்டர்கள்’ வேலை செஞ்சு வறோமுங்க.நாங்க எல்லோரும் சர்ச்சில் ‘கன்னி ஸ்திரியாக’ ‘சீனியர் பாதரால்’ கர்த்தர் அருள்’ கொடுக்கப்பட்டவங்க.அவங்களே நான் உங்களுக்கு அறிமுகம் பண்ணீ வக்கிறேன்“என்று சொன்னதும் செந்தாமரை மிகவும் சந்தோஷப் பட்டு “நான் நீங்க சொன்ன ரெண்டு வேலைகளையும் நான் செஞ்சு வறேன்” என்று சந்தோஷமாக சொன்னாள்.

சிறிது நேரம் ஆனதும் ‘சிஸ்டர் நிர்மலா’ பியூனைக் கூப்பிட்டு “ஜார்ஜ்,நீ உடனே போய் நம்ம இலத்திலே இருக்கிற மீதி ‘சிஸ்டர்களை’ என் ரூமு க்கு வரச் சொல்”என்று சொல்லி அனுப்பினார். உடனே ஜார்ஜ் அந்த இல்லத்தில் வேலை செஞ்சு வந்த மத்த ஐஞ்சு ‘ சிஸ்டர்களையும்’ பார்த்து “உங்க எல்லாரையும் மதர் சுபீரியர் அவங்க ரூமுக்கு வரச் சொன்னாங்க”என்று சொன்னான்.

பத்து நிமிஷத்துக்கு எல்லாம் ஐஞ்சு ‘சிஸ்டர்களும்’ ‘சீனியர் சிஸ்டர்’ நிர்மலா ரூமுக்கு வந்தார்கள்.

‘சீனியர் சிஸ்டர்’ நிர்மலா அவர்களை பார்த்து ”இந்த அம்மா நம்ம இல்லத்திற்கு முப்பத்து ஏழு லக்ஷம்,என்பதாயிரத்து தொன்னெத்தெட்டு ரூபாயே ‘டொனேஷன்’ஆக குடுத்து இருக்காங்க. இவங்க அவங்க காலம் முடியும் வரைக்கும் இந்த இல்லத்லே தங்கி வரப் போறாங்கக.அவங்க ஆசைப் படுவது போல இங்கே இருக்கும் பள்ளீகூடத்தின் பிள்ளைகளுக்கு கணக்கு சொல்லி குடுக்கப் போறாங்க.கூடவே நம்ம முதியோர் இல்லத்தின் அன்ரறாட வரவு செலவு கணக்கை எல்லாம் பாத்து வரப் போறாங்க”என்று சந்தோஷத்துடன் சொன்னர்.உடனே அந்த அஞ்சு ‘சிஸ்டர்களும்’ செந்தாமரை க்கு வணக்கம் சொன்னார்கள்.செந்தாமரை அவர்களுக்கு பதில் வணக்கம் சொன்னாள்.
“மோ¢ சிஸ்டர்,இந்தாங்க ‘கெஸ்ட் ரூம் சாவி.அந்த ‘கெஸ்ட்’ ரூமை இவங்களுக்கு கொஞ்சம் திறந்து விடுங்க”என்று சொல்லி விட்டு ‘கெஸ்ட் ரூம் சாவியை ‘சிஸ்டர் மோ¢’யிடம் கொடுத்தார்.

மோ¢’ சிஸ்டர் அந்த சாவியை வாங்கிக் கொண்டு செந்தாமரையை அழைத்துக் கொண்டு ‘கெஸ்ட் ரூமுக்கு போனாள்.பியூன் ஜார்ஜ் செந்தாமரை வைத்து விட்டுப் போன ரெண்டு ‘சூட் கேஸ் களை’ எடுத்துக் கொண்டு ‘மோ¢ சிஸ்டர்’ ‘ருமை’ திறந்தவுடன் வைத்து விட்டு செந்தாமரைக்கு வணக்கம் சொல்லி விட்டு வெளியே வந்தான்.’மோ¢ சிஸ்டரும்’ செந்தாமரைக்கு வணக்கம் சொல்லி விட்டு அவள் வேலையைக் கவனிக்கப் போய் விட்டாள்.செந்தாமரை தான் தினமும் வேண்டி வரும் பீள்ளையாருக்கு தன் நன்றியைச் சொல்லி விட்டு அங்கு இருந்த சேர் ஒன்றில் உட்கார்ந்துக் கொண்டு யோஜனைப் பண்ண ஆரம்பித்தாள்.

செந்தாமரை வெளியில் போனதும் ‘சிஸ்டர் நிர்மலா’ செந்தாமரை கொடுத்து விட்டுப் போன ‘ட்ராப்டை’ சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.‘சிஸ்டர் நிர்மலா’ மற்ற ‘சிஸ்டர்களை’ எல்லாம் போக சொல்லி விட்டு,தனது ‘டெபுடியான’ ‘சிஸ்டர்’ அல்போன்சாவை மட்டும் தன்னுடன் அவர் ரூமில் இருக்க சொன்னார்.
மற்ற எல்லா ‘சிஸ்டர்களும்’ அவர் ரூமை விட்டு வெளியே போனதும், ’சிஸ்டர் நிர்மலா’ ’சிஸ்டர் அல்போன்சா’வைப் பார்த்து “இவ்வளவு பெரிய தொகையை குடுத்து இருக்கும் அந்த அம்மாவைப் பத்தி நாம ஒன்னும் விசாரிக்கவே இல்லையே.அவங்களைப் பாத்தா,அவங்க ஒரு பிராமன ஜாதியை சேர்ந்தவங்க போல தோனுது.அவங்க தங்களுடைய கடைசி காலத்தை அவங்க ‘குடும்பத்துடன்’ இருந்து வராம இங்கே வந்து இருக்காங்களே.ஒரு வேளை அவங்க தன் கணவனை இழந்தவராக இருப்பாங்களோ.இல்லே,அவங்களுக்கு குழந்தைகள் இல்லாம இருக்குமோ.எனக்கு ஒன்னுமே புரிய லெ ‘சிஸ்டர்’.அவங்க இந்த முதியோர் இல்லத்லே நிரந்தரமா இருந்து வரப் போறாங்க.ஏன் நாம நாளைக்கு,எல்லா பள்ளிப் பிள்ளைங்களையும்,முதியவர்களையும் ‘அசெம்பளி ஹாலுக்கு’ வரச் சொல்லி அவங்களை அவங்க வாயாலே அவங்க வாழ்க்கையை பத்திக் கேக்கக் கூடாது” என்று தன் மனதில் இருந்த சந்தேகத்தைக் கேட்டார்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி ன ‘சீனியர் சிஸ்டர்’ அல்போன்சா “நீங்க சொல்றது ரொம்ப நல்ல ஐடியா ‘சிஸ்டர்’ அப்படியே பண்ணுங்க.நமக்கும் அவங்களை பத்தின எல்லா விவரமும் தொ¢ய வரும்”என்று சொன்னவுடன் “சிஸ்டர்,நீங்க தயவு செஞ்சி அதற்கு ஏற்பாடு பண்ணுங்க”என்று சொன்னாள்.உடனே ‘சிஸ்டர் அல்போன்சா “நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன்” என்று சொல்லி விட்டு மற்ற ‘சிஸ்டர்களை எல்லாம் கூப்பிட்டு ‘சிஸ்டர்’ நிர்மலா சொன்னதைச் சொல்லிவிட்டு “நா¨ளைக்கு சனிக் கிழமை.நம்ம பள்ளிகூடம் லீவு.அதனால் எல்லா பள்ளிப் பிள்ளைங்களையும், எல்லா முதியவர்களையும் ‘அசெம்பலி ஹாலுக்கு’ பத்து மணிக்கு முன்னாடி வந்து உக்காரச் சொல்லு ங்க.பள்ளிப் பிள்ளைங்களும்,நீங்களும்,’அசெம்பளி ஹாலை’ கலர் பேப்பர் தோரணங்களாலே ‘டெகரேட்’ பண்ணுங்க”என்று உத்தரவு பிறபித்தாள்.எல்லா ‘சிஸ்டர்களும் “சா¢ ‘சிஸ்டர்,நாங்க அப்படி யே செய்யறோம்” என்று சொல்லி விட்டு அவர்கள் வேலையை கவனிக்கப் போனார்கள்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *