சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 6,564 
 
 

அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 | அத்தியாயம்-17

உடனே தேவி “அப்படியா செந்தாமு.நீ அவ்வளவு படிப்பு படிச்சு,எல்லா படிப்பிலேயும் முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணி இருக்கியா.எனக்குக் கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா” என்று சொல்லி செந்தாமரையைக் கட்டிக் கொண்டாள்.உடனே ராஜ்ஜும் “அப்படியாம்மா.நீ இத்தனை படிப்பு படிச்சி இருக்கேன்னு நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா.நீ இந்த குடிசையிலே இருக்க வேண்டிய பொண்ணே இலேம்மா.நீ உண்மையிலேயே ரொம்ப படிப்பாளிப் பொண்ணும்மா. உன் திற மையைத் தெரிஞ்சுத்தான்,அந்த நல்ல மனுஷன் உன்னை மதுரைக்குக் கூட்டிப் போய் படிச்க்க வச்சு இருக்காரும்மா.அவரும் அவங்க சம்சாரமும் ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும்மா.இந்த மாதிரி நல்ல மனுஷங்க அந்த கடவுளுக்கு சமானானவங்க செந்தாமரை” என்று தன் கண்களில் கண்ணீர் பொங்க சொன்னார்.உடனே செந்தாமரை ”ஆமாம்ப்பா.நீங்க சொல்றது நுத்துக்கு நூறு நிஜம்மா அவர் மட்டும் என்னை மதுரைக்கு அழைச்சுக் கிட்டுப் போய் பன்னாடாவது படிக்க வக்காம இருந்து இருந் தா நான் இன்னைக்கு வேறும் பத்தாவது மட்டும் தாம்ப்பா ‘பாஸ்’ பண்ணீ இருப்பேன் அவர் உண்மை யிலே எனக்கு இந்த ‘வாழக்கையை’ கொடுத்த ஒரு மறக்க முடியாத தெய்வம்மா.அவருக்கு நான் என் னைக்கும் ரொம்ப கடமைப் பட்டவளாய் இருக்கணும்மா” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.கொஞ்ச நேரம் எல்லோரும் மனம் விட்டுப் பேசினார்கள்.

செந்தாமரை ”அம்மா,அப்பா,நான் மூனு மாசமா வேலை செஞ்சு எனக்கு கிடைச்ச பணத்திலே சிக்கனமா செலவு பண்ணி வந்து நிறைய பணம் சேர்த்து வச்சு இருக்கேம்மா.நான் எனக்கு கணக்கு வாத்தியார் வேலைக் கிடைச்சதும் மூனு மாசம்தான் ஒரு ‘லேடீஸ் ஹாஸ்டலில்’ தங்கி இருந்தேன். இப்போ நான் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கிட்டு இருக்கேன்.உங்க எல்லாரையும் அந்த வீட் டுக்கு அழைச்சுக் கிட்டு போய் சந்தோஷமா வச்சு வர ஆசைப் படறேன்.நீங்க மறுக்காம என் கூட அந்த வீட்டுக்கு வந்து தங்கணும்” என்று தன் கைகளைக் கூப்பி சொன்னாள்.”அதெல்லாம் வேணாம் செந்தாமு.நாங்க எங்க குடிசை வாழ்க்கையை வாழ்ந்து வரோம்.நீ உன் வழியேப் பார்த்து கிட்டுப் போய் சந்தோஷமா இருந்து வா” என்று சொல்லி விட்டாள் தேவி.“அம்மா அப்படி எல்லாம் சொல்லி என் ஆசை கனவை எல்லாம் மொத்தமா அழிச்சு விடாதேம்மா.நான் உன் கால்களைப் பிடிச்சு கெஞ்சிக் கேக்கறேம்மா.என்னோடு நீங்க எல்லாரும் வந்து தங்கி இருக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் படறே ம்மா.அப்பா நீங்க கொஞ்சம் அம்மா கிட்டே சொல்லுங்கப்பா.ப்ளீஸ்ப்பா” என்று சொல்லி அப்பாவின் கைக¨ளைப் பிடித்து கெஞ்சினாள் செந்தாமரை.ராஜ் தேவியைப் பார்த்து “ஏம் புள்ளே,செந்தாமு இப்படி கெஞ்சிக் கேக்கறா.நாம அங்கே போய் செந்தாமு கூட இருந்து வராலாமே” என்று சொன்னார். “நீ வேணும்ன்னா அவ கூட போய் தங்கி வாய்யா.நான் இந்த குடிசையை விட்டு எங்கேயும் வரமாட் டேன்” என்று சொல்லி பிடிவாதம் பிடித்து வந்தாள்.கொஞ்ச நேரம் கழிச்சு செந்தாமரை கமலாவைப் பார்த்து ”அக்கா,நீங்க அம்மா கிட்டே கொஞ்சம் சொல்லி என் கூட வந்து தங்க சொல்லுங்க.உங்களை எல்லாம் என்னோட சந்தோஷமா நான் வச்சுக் கிட்டு வரத் தான் நான் எனக்கு சுந்தரம் கம்பனி கொடு த்த ஒரு பணக்கார வேலையை வேணாம்ன்னு சொல்லி விட்டு சென்னைக்கு வந்து இந்த கணக்கு வாத்தியார் வேலையைத் தேடிக் கிட்டு,பணத்தை நிறைய மிச்சம் படுத்தி வந்து இருக்கேன். நான் என் சுகத்தை பெரிசா நினைக்கலேக்கா.நாம எல்லாம் ஒன்னா சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் நான் எப்பவும் ஆசைப் பட்டேன்கா” என்று சொல்லி கமலாவின் கைகளைப் பிடித்து கெஞ்சினாள்.கமலாவும் தேவியைப் பார்த்து” ஏம்மா,செந்தாமு தான் இத்தனை கெஞ்சிக் கேக்கறா.நாம எல்லா ரும் அவ கூட போய் இருந்து வரலாமேம்மா” என்று அம்மாவின் கைகளைப் பிடித்துக் கேட்டாள்.உடனே தேவி “கம லா,நீ வேணும்ன்னா,உங்க அப்பாவையும் கூட்டி கிட்டு,உங்க பொண்ணுங்களையும் கூட்டி கிட்டுப் போய் அவ கூட சந்தோஷமா இருந்து வா.நான் இந்த குடிசையிலேயே இருந்து வாரேன்” என்று கடுமையாகச் சொன்னாள்.எல்லோருக்கும் ‘என்ன பண்ணுவது,என்ன சொன்னா தேவி தன் முடிவை மாத்திப்பா’ என்று புரியாமல் தவித்தார்கள்.

யாரும் ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்ததைப் பார்த்த செந்தாமரை ”அம்மா, நீங்க மட்டும் என்னோடு அந்த வீட்டுக்கு வந்து தங்கா விட்டா,நான் அந்த இருபத்தி ஐஞ்சு ஆயிரம் ரூபாய் சம்ப ளம் வரும் கணக்கு வாத்தியார் வேலையை ராஜினாமா பண்ணி விட்டு இந்த குடிசையிலேயே உன் கூட தங்கி விடப் போறேம்மா.நீங்க என்ன சாப்பாடு எனக்குப் போடா£ங்களோ,அதை தின்னு விட்டு உன் கூடவே நான் இருக்கப் போறேம்மா.நான் அந்த வீட்டுக்கோ,என் கணக்கு வாத்தியார் வேலை க்கு இனிமே போவப் போவது இல்லேம்மா.எனக்கு நீதாம்மா வேணும்.என்னை மட்டும் இந்த குடிசை யை விட்டு வெளியே அனுப்பி விடாதேம்மா.எனக்கு கொஞ்சம் சாப்பாடு போட்டு உன்னோடு வச்சு க்க மாட்டாயாம்மா” என்று தன் அம்மாவின் கைகளைப் பிடித்து கெஞ்சி அழுதாள்.அவள் பெத்த மனம் இளகியது.தேவி செந்தாமரையைப் பார்த்து “சா¢,செந்தாமு,நீ அந்த கணக்கு வாத்தியார் வேலே யே விட வேணாம்.நாங்க உன் கூட உன் வீட்டுக்கு வந்து தங்குகிறோம்மா” என்று சொல்லி செந்தாம ரையைக் கட்டி கொண்டு ‘ஓ’ என்று அழுதாள்.பிறகு தேவி பண்ணி இருந்த சாப்பாட்டை எல்லோரும் மிகவும் ரசித்து சாப்பிட்டார்கள்.சாப்பாடு முடிந்ததும் செந்தாமரை தான் வாங்கி வந்த புது பாய்,புது தல காணிகளை எல்லாம் கொடுத்தாள்.”அம்மா,நான் இன்னைக்கு ராத்திரி உங்களோடு தங்கி இருந்து விட்டு நாளைக்குக் காத்தாலே எல்லோரும் என் வீட்டுக்குப் போகலாமாம்மா” என்று சொன்னாள். பிறகு எல்லோரும் படுத்துக் கொண்டார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை தன் அம்மாவைப் பாத்து “அம்மா,தாத்தா பாட்டி எப்படி இருக்காங்க.முத்து மாமா எப்படி இருந்து வறார்.மாமாவுக்கு கல்யாணம் ஆயிடிச்சா.அவருக்கு குழந் தைங்க இருகாங்களாம்மா” என்று கேட்டதும் தேவிக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. தேவி தன் புடவைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.செந்தாமரை அம்மா அழுவ தைப் பார்த்து பயந்துப் போனாள்.உடனே செந்தாமரை அம்மாவைப் பார்த்து “ஏம்மா அழறே. ஏதாச்சும் நடக்கக் கூடாது நடந்து இருக்கா.எனக்கு விவரம் சொல்லுமா” என்று தன் அம்மாவை உலுக்கினாள். தன் கண்களைத் துடைத்துக் கொண்டே தேவி ”அதை ஏம்மா கேக்கறே.அவங்க கதை பெரிய சோகக் கதைம்மா.அவனுக்கு படிப்பு ஏறாத்தால் அவனும் தாத்தா கூட மளிகை கடைக்கு போய் வந்து கொ ண்டு இருந்தான்.மளிகை கடைக்கு பக்கத்திலே இருந்த ஒரு குடிசையிலே இருந்து சரளான்னு ஒரு பொண்ணு தினமும் மளிகை சாமாங்க வாங்கி கிட்டு போய் கிட்டு இருந்தா. நம்ப முத்துவுக்கும் அந்தப் பொண்ணுக்கும் காதல் வந்து இருக்கு.முத்து அந்த பொண்ணு சரளாவுக்கு ஒரு ‘செல் போன்’ வாங்கிக் குடுத்து,அவங்க ரெண்டு பேரும் நெருக்கமா குந்திக் கிட்டு இருக்கிற போட்டோங்களை எடுத்துக் கிட்டு இருக்காங்க.அந்த ‘செல் போனை’யும்,போட்டோங்களை எல்லாம் சரளா அம்மா, அப்பா,முறை மாமன்,மூனு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அங்கு இருந்த சப் இன்ஸ்பெக்டர் கிட்டே வந்து ‘அந்த மளிகைக் கடைக் கார பையன் எங்க பொண்ணைக் ‘கெடுத்து’ விட்டு இருக்கான்.இதோ பாருங்க அவங்க நெருக்கமா குந்திக் கிட்டு போடோங்களே’ன்னு காட்டி இருக்காங்க.அந்த போட் டோங்களே பாத்த சப் இன்ஸ்பெக்டர் நம்ப முத்துவே ‘லாக் அப்பில்’ அடைச்சுட்டாரு.அப்போ அங்கே இருந்த தாத்தா அவங்களுக்கு ரெண்டு லக்ஷ ரூபாய் குடுத்து அவங்களே சமாளிச்சாரு. இதுக்கு நடுவிலே சரளா தூக்குப் போட்டுக் கிட்டு செத்துப் போயிட்டா.பேப்பர்லே இதைப் படிச்ச நம்ப முத்து உடனே எழும்பூர் ரயில் ஸ்டேஷன் கிட்டே தன் தலையைக் கொடுத்து தற்கொலை பண்ணிக் கிட் டான்.எனக்கு விஷயம் தெரிஞ்சவுடனே நானும் அப்பாவும் ஒடிப் போய் தாத்தா பாட்டிக்கு ஆறு தல் சொன்னோம்” என்று அழுது கொண்டே சொன்னாள்.தன் தாத்தா,பாட்டி,முத்து சோகக் கதையை கேட்டு செந்தாமரை மிகவும் கவலைப் பட்டு கொஞ்ச நேரம் அழுதாள்.அம்மா கொஞ்சம் நார்மல் ஆனதும் செந்தாமரை அம்மாவைப் பார்த்து “அம்மா,நாளைக்கு நாம ரெண்டு பேரும் தாத்தா பாட்டி வீட்டுக்கு போய் அவங்களைப் பார்த்து ட்டு வரலாம்மா” என்று கேட்டாள்.தேவி “சா¢ செந்தாமு.சா¢ நாம நிச்சியமா போய் வரலாம்.மணீ இப்போ மணி பன்னடிச்சிடிச்சி செந்தாமு.இப்ப நீ படுத்துத் தூங்கு.எனக்கு ரொம்ப தூக்கம் வருது.வா நாம படுக்கலாம்” என்று சொல்லி விட்டு செந்தாமரை வாங்கி வைத்து இருந்த புது பாயையையும் தலையணையையும் போட்டுக் கொண்டு படுத்தாள். செந்தாமரையும் தன் அம்மா பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.

காலையில் எழுந்ததும் செந்தாமரை பல்லைத் தேய்த்துக் கொண்டு அம்மா போட்டுக் கொடுத்த ‘டீயை’க் குடித்தாள். செந்தாமரை எல்லோரையும் அழைச்சுக் கிட்டு ஒரு ஹோட்டலுக்குப் போய் நிறைய ‘டிபன்’ வாங்கிக் கொடுத்தாள்.அப்பாவப்யும்,கமலாவையும், அவ குழந்தைகளையும், குடிசை க்கு போகச் சொல்லி விட்டு செந்தாமரையும் தேவியும் மார்கெட்டில் நிறைய பூவும் பழமும், பலகார மும் ‘ஸ்வீட்டும்’ வாங்கிக் கொண்டு சரவணன் வீட்டுக்குப் போனார்கள்.செந்தாமரையையும் தேவி யையும் பார்த்த சரவணணும் சரஸ்வதியும் மிகவும் ஆச்சா¢யப் பட்டார்கள்.சரவணனும் சரஸ்வதியும் ரெண்டு பேரையும் “வாங்க, வாங்க” என்று கூப்பிட்டு ஹாலில் உட்கார வைத்தார்கள்.செந்தமரை அவர்கள் வாங்கி கொண்டு வந்த பூ பழம் பலகாரம் ‘ஸ்வீட்’ எல்லா வற்றையும் கொடுத்து விட்டு அவர் கள் கால்களைத் தொட்டு தன் கண்ணில் ஒத்திக் கொண்டாள்.பிறகு சரஸ்வதி “செந்தாமரை, நீ எங் கே ஓடிப் போய் இருந்தே இத்தனை வருஷமா.உன் அம்மா அப்பா கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு போக வேணாமா.இப்படி சொல்லிக் கொள்ளாம,வூட்டை விட்டு ஓடிப் போவலாமா செந்தாமு“ என்று கடிஞ்சுக் கொண்டாள்.“தப்பு தான் பாட்டி நான் பண்ணது.அப்ப இருந்த சூழ் நிலையிலே என்னால் அவங்க கிட்டே சொல்ல முடியாம போயிடுச்சி.மதுரையிலே என் படிப்பு முடிஞ்சவுடனே நான் சென் னைக்கு திரும்பி வந்தவுடனே,ஒரு கணக்கு வாத்தியாரா வேலைக்கு சேந்து.மூனு மாசம் சம்பளம் வாங்கிக் கிட்டவுடனே,நான் அம்மா அப்பா குடிசைக்குப் ஓடி வந்து,மன்னிப்புக் கேட்டு விட்டு, இப் போ அம்மா,அப்பா,அக்கா அவங்க குழந்தைங்க எல்லாரையும் என் கூட இட்டுக் கிட்டு வந்து என் வீட்டிலே வச்சுக் கிட்டு இருந்து வரப் போறேன்.என் கணக்கு வாத்தியார் வேலைக்கு இருபத்தி ஐஞ்சு ஆயிரம் சம்பளம் தறாங்க தாத்தா” என்று சொல்லி விட்டு தன் சென்னையை விட்டுப் ஓடி போனதில் இருந்து அன்று வரை நடந்த எல்லா சமாசாரங்களையும் தாத்தா பாட்டி கிட்டே ஒன்னு விடாம சொன் னாள் செந்தாமரை.

உடனே சரவணன் ”அப்படியா செந்தாமரை,நீ இப்போ ஒரு ‘டவுள் கணக்கு கிராஜுவேட்டா.நீ படிச்ச நுங்கம்பாக்கம் உயர் நிலைப் பள்ளியிலே ஒரு கணக்கு வாத்தியாரா சேந்து இருக் கியா.உனக்கு மாசம் இருபத்தி ஐஞ்சு ஆயிரம் ரூபா சம்பளம் வருதா” என்று ஆச்சா¢யத்துடன் கேட்டார். பிறகு செந்தாமரையும் தேவியும் அவர்கள் சௌக்கியத்தையும் உடல் நிலைப் பத்தியும் ரொம்ப விசாரித்தார் கள்.அப்போது தான் சரவணன் தனக்கும் சரஸ்வதிக்கும் இப்போது சக்கரை வியாதி இருப் பதாயும் அந்த வியாதியால் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டு வருவதாயும்,மளிகை வியபாரம் ரொம்ப சுமாராய் போய்க் கொண்டு இருப்பதாகவும் சொன்னார்கள்.செந்தாமரை தன் தாத்தா பாட்டியைப் பார்த்து “தாத்தா,பாட்டி நான் இனிமே எங்கேயும் போவ மாட்டேன்.என் அம்மா, அப்பா, அக்கா, அக்கா பசங்க இவங்க கூடத்டான் இருந்து வர போறேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். உடனே சரஸ்வதி ”அது என்ன அப்படி சொல்றே செந்தாமரை.உனக்கும் இருபத்தி ஐஞ்சு வயசு ஆகி இருக் கும்.இந்த வயசிலே கல்யாணம் பன்ணிக்காம இன்னும் எத்தினி வருஷம் உன் கல்யாணத்தைத் தள்ளிப் போடப் போறே.நல்லா படிச்சு இருக்கே,நல்ல வேலையும் கிடைச்சு இருக்கு,பாக்க ரொம்ப் அழகாவும் வேறே இருக்கே.உன் அம்மா அப்பாவை உனக்கு ஒரு நல்ல மாபிள்ளையா பாக்க சொல்லு அப்புறமா அந்தப் பையனை உனக்கு பிடிச்சி இருந்தா சீக்கிரமா கல்யாணம் பன்ணிக்கோ” என்று பேத்தியை பார்த்து சொன்னாள்.“இல்லை பாட்டி.நான் என் அம்மா,அப்பா,அக்கா பசங்க கூடத்தான் இனிமே இருந்து வரப் போறேன்.நான் கல்யாணமே கட்டிக்க போறதில்லே” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் செந்தாமரை.கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை தன் ‘ஹாண்ட் பாக்கில்’ இருந்து ஒரு ஐயாயிரம் ரூபாயை எடுத்து தாத்தா கிட்டே கொடுத்து “தாத்தா,இந்தப் பணத்தை தறேன்.இதை தயவு செஞ்சி மறுக்காம வாங்கிக்கங்க.உங்க சக்கரை வியாதிக்கு மருந்துங்க வாங்கி சாப்பிடுங்க. சக்கரை வியாதி ரொம்ப பொல்லாத வியாதி தாத்தா.நீங்க ரெண்டு பேரும் சக்கரை இருக்கிற பக்கமே போகாதீங்க. உங்க உடம்பை ஜாக்கிறதையா கவனிச்சுக் கிட்டு வாங்க.அம்மா மாமா முத்துவோட சோக கதையை என் கிட்டே சொன்னாங்க.நான் ரொம்ப வருத்தப்பட்டேன்” என்று சொல்லி தாத்தா பாட்டி கால் களைத் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டாள்.பிறகு தாத்தா பாட்டி கிட்டே சொல்லிக் கொண்டு விட்டு அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள் செந்தாமரை.
வர வழியிலே செந்தாமரை ஒரு ‘டெம்போவை’ ஏற்பாடு பண்ணிக் கொண்டு வந்து, அம்மா குடி சையில் இருந்த முக்கியமான சாமான்களையும்,கமலா குடிசையில் இருந்த முக்கியமான சாமான்களை யும் ஏற்றிக் கொண்டு தன் வீட்டுக்கு வந்து இறக்கி வைத்தாள்.‘டெம்போவுக்கு’ பணம் கொடுத்து விட்டு அனுப்பி விட்டு செந்தாமரை தன் வீட்டை அம்மாவுக்கும்,அப்பாவுக்கும், கமலாவுக்கும் சுத்திக் காட்டினாள்.கமலாவும் தேவியும் அந்த வீட்டைப் பார்த்து மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.தேவி “செந் தாமு,நான் கல்லாணம் கட்டிக் கிட்டு வந்த ரெண்டு வருஷமாவது இந்த மாதிரி ‘சிமென்ட்டாலே’ கட்டின வூட்லே இருந்து வந்தேன்.பாவம் கமலாவும் நீயும் ஒரு குடிசையிலே தான் இருந்து வந்தாங்க. அந்த குடிசையை விட்டு நீ வெளியே போயிட்டேம்மா.ஆனா இது நாள் வரைக்கும் கமலாவும்,அவ பொண்ணுங்களும் பாவம் குடிசை வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்து இருக்காங்க இனிமே லாவது கமலாவும் அவ பொண்ணுங்களும் ஒரு ‘சிமென்ட்’ வீட்டில் சந்தோஷமா இருந்து வரட்டும்மா” என்று சொல்லி கமலாவையும் அவ பொண்ணுங்களையும் கட்டிப் பிடித்துக் கொண்டு கண்களில் கண்ணீர் பொங்க சொன்னாள்.செந்தாமரையும் கமலாவும் கடைக்குப் போய் வீட்டுக்கு வேண்டிய எல்லா முக்கிய சாமான்களையும் வாங்கி வந்தார்கள்.தேவி செந்தாமரை வாங்கி வைத்து இருந்த புது ‘காஸ்’ அடுப்பில் சமைத்து எல்லோருக்கும் போட்டு அவளும் சாப்பிட்டாள்.சாப்பிட்டு விட்டு எல்லோ ரும் ஹாலில் உட்கார்ந்துக் கொண்டு சந்தோஷமாக பேசி கொண்டு இருந்தார்கள்.செந்தாமரை அம்மா வையும் அக்காவையும் பார்த்து “இனிமே நீங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போக வேணாம். அம்மா சமையலை கவனிச்சு வரட்டும்.அக்கா நீங்க அம்மாவையும்,அப்பாவையும், ராணியையும், செல்வியை யும் நல்லா கவனிச்சு கிட்டு வாக்கா.எனக்கு நிறைய சம்பளம் வருது.நாம் ஒருத்தரும் இனிமே கஷ்டப் படாம இந்த வீட்டிலெ சிரிச்சு,பேசி கிட்டு இருந்து வரலாம்க்கா” என்று சொல்லி கமலாவின் கைகளை பிடித்து கெஞ்சினாள். உடனே கமலா ”சா¢ செந்தாமு,நான் நீ சொன்னபடியே செய்யறேன்.நீ கவலைப் படாதே” என்று சொன்னாள்.அன்று சாயங்காலமே செந்தாமரை எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஒரு பெரிய ஜவுளி கடைக்குப் போய் எலோருக்கும் புது துணிமணிகள் வாங்கி கொடுத்தாள்.ரெண்டு நாள் ஆனதும் செந்தாமரை ராணீயையும்,செல்வியையும்,பணம் கட்டி படிக்கும் ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தாள்.ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்ததும் படிப்படியாக வீட்டில் டீ.வீ. ரேடியோ பீரோ,எல்லாம் வீட்டுக்கு வாங்கினாள் செந்தாமரை.தேவியும்,கமலாவும்,ரெண்டு பெண் குழந்தைக ளும் ராஜ்ஜும் செந்தாமரை வீட்டிலெ மிகவும் சந்தோஷாமா வாழ்ந்து வந்தார்கள்.

செந்தாமரையைப் பற்றி எல்லா விவரங்களையும் ‘பிரின்சிபால்’ மூர்த்தி ஒரு நாள் பன்னா டாவது வகுப்புக்கு கணக்கு எடுக்கும் வாத்தியார் ரமேஷிடம் பேசி கொண்டு வந்த போது ரமேஷ் மிகவும் ஆச்சா¢யப் பட்டான்.ரமேஷ் அவா¢டம் ”அந்த பொண்ணு செந்தாமரை அவ்வளவு ‘இன்டெலி ஜெண்டா சார்,என்னால் நம்ப முடியவில்லையே சார்” என்று கேட்ட போது அவர் ”ஆமாம், ரமேஷ் அவ கணகிலே ஒரு ஜீனியஸ்.அவளை எனக்கு எட்டாவது படிக்கும் போதில் இருந்தே தெரியும். அப்படி அவ ஒரு ‘ஜீனியஸ்ஸா’ இல்லாம இருந்தா அவ எப்படி ‘டென்த்’, ‘ட்வெல்த்’ BSc maths லும் MSc mathsலும் ‘ஸ்டேட் ‘பஸ்ட்டா’ வர முடியும் சொல்லு” என்று கேட்டார்.ரமேஷ் அவர் சொன்ன தை அசந்துப் போனான்.“ஆமாம் சார்,நீங்க சொல்றபடி அவ கணக்கிலே ஒரு ‘ஜீனியஸா’ இல்லா விட்டா அவ எல்லா பா¢¨க்ஷயிலும் அவ ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வர முடியாது சார்” என்று சொல்லி விட்டு அவர் ரூமை விட்டு வெளியே வந்தான் ரமேஷ்.அன்று ‘பிரின்சிபால்’ சொன்னதில் இருந்து ராஜேஷ¤ க்கு செந்தாமரையுடன் பேசி பழகவேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தது.ராஜேஷ் செந்தாம மரையின் புத்தி கூர்மையை பா¢¨க்ஷ பண்ணிப் பார்க்க அவளுடம் ஆரம்பத்தில் கணக்குப் பத்தின பல கஷ்டமான கேள்விகளை எல்லாம் கேட்டு அவ சொன்ன பதிலை கேட்டு அசந்து விட்டான். அந்த கணக்கு பேச்சை வைத்துக் கொண்டு,செந்தாமரையிடம் ராஜேஷ் பழகி வந்தான்.ராஜேஷ் கேட்ட கணக்கு சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லி வந்த செந்தாமரை அவனுடன் சகஜமாக பழகி வந்ததைப் பார்த்த ராஜேஷ்க்கு அவள் போ¢ல் ஈர்ப்பை வளர்த்தது.ரெண்டு மாசம் பழகி வந்தது.

ராஜேஷ் ஒரு நாள் ராஜேஷ் செந்தாமரையைப் பர்த்து “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சி இருக்கு செந்தாமரை.நான் என் அம்மா,அப்பா ரெண்டு பேரையும் என் வீட்டுக்கு வந்து கிரமமாக ஜாதகப் பா¢வர்த்தணை பண்ணிக்க கொள்ள சொல்லட்டுமா.பெரியவங்க ஜாதகம் பார்த்து பொருந்து இருந்தது ன்னா அப்புறமா கல்யாணப் பேச்சை பேசச் சொல்லலாம்.உனக்கு என்னைப் பிடிச்சி இரு க்கா செந்தா மரை” என்று கேட்டு விட்டு செந்தாமரையின் முகத்தை ஆவலோடு பார்த்துக் கொண்டு இருந்தான். செந்தாமரை வெறுமனே ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சும்மா இருந்தாள். செந்தாமரை நிதானமா ”இதோ பாருங்க.நான் பொய் சொல்ல விரும்பலே.உங்களை எனக்கு பிடிச்சி இருக்கு. ஆனா நீங்க என்னைப் பத்தின எல்லா விவரமும் தெரிஞ்சிக் கிட்டா நீங்க என்னை கல்யாணம் பண்ணி கொள்ள யோஜனை பண்ணுவீங்க.நான் ஒரு சோ¢ப் பொண்னுங்க.என் அம்மாவும் அப்பாவும் ரொம்ப சாதாரணமானவங்க.போன மாசம் வரைக்கும் என் அம்மா ஒரு ‘பில்டிங்க கன்ட்றாக்டர்’ கிட்டே தினக் கூலி செஞ்சு வந்தவங்க.உங்க அம்மா,அப்பா,என்னைப் பத்திக் கேள்விப் ப்ட்டா என்னை அவங்க வீட்டு மருமகளா ஏத்துக்க மாட்டாங்க.நீ என்னை மறந்து விட்டு,வேறே உங்க ஜாதிப் பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கங்க” என்று சொல்லி ராஜேஷ் முகத்தை பார்த்தாள் செந்தாமரை.“அப்படியா செந்தாமரை.நான் உன்னை ஒரு பிராமணப் பொண்ணுன்னு தானே இந்த நிமிஷம் வரைக்கும் நினைச்சுண்டு இருந்தேன்.என் அம்மாவும், அப்பாவும்,உன் அம்மாவும்,அப்பாவும் சம்மதம் கொடுத்தா நான் உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.அப்படி ரெண்டு பெரியங்களும் சம்மதம்ன்னு சொன்னா நீ என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளுவாயா” என்று கேட்டான் ராஜேஷ்.செந்தாமரை வெறுமனே “இதோ பாருங்க.இப்ப இந்த இள வயசிலே எல்லா பையங்களுக்கும், பொண்ணுங்களுக்கும்,இந்த காதல் ஏற்படுவது ரொம்ப சகஜம்ங்க. ஆனா என்னை மாதிரி ஒரு சோ¢ப் பொண்ணை மருமகளா ஏத்துக் கொள்ள நிச்சியமா உங்க அம்மா அப்பா ஒத்துக் கொள்ள மாட்டாங்க.நீங்க பேசாம வேறே உங்க ஜாதிப் பொண்ணாப் பாத்து காதல் பண்ணுங்க” என்று சொல்லி விட்டாள்.“என்ன செந்தாமரை, நான் உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைப் படறேன்.நீ என்னடான்னா என்னை வேறே ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கன்னு சொல்நான் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள ரொம்ப ஆசைப் படறேன்” என்று செந்தாமரையின் கையைப் பிடிக்க தன் கையை நீட்டினான் ராஜேஷ். தன் கையை கொஞ்சம் பின்னுக்கு இழுத்துக் கொண்டு செந்தா மரை ”எனக்கு இந்த கல்யாணம் நடக்கும் என்று கொஞ்சமும் நம்பிக்கை இல்லீங்க.நான் சொன்னா மாதிரி நீங்க பண்ணுங்க” என்று சொல்லி விட்டு வாத்தியார் ரூமை விட்டு வெளியே போய் விட்டாள் செந்தாமரை. ராஜேஷ் செந்தமரை ரூமை விட்டு வெளியே போவதையே மன வருத்ததுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

‘ஒரு நாள் அவன் அம்மா அப்பா ‘ப்ரீயாக’ ஹாலில் பேசிக் கொண்டு இருந்த போது ராஜேஷ் அவர்களைப் பார்த்து “நான் என் கூட கணக்கு வாத்தியார வேலை செஞ்சு வர செந்தாமரை என்கிற பொண்ணை கல்யாண்ம் பண்ணிக் கொள்ள ரொம்ப ஆசைப் படறேன்.அவ நல்ல கலரா, அழகா பாக்க ஒரு பிராமணப் பொண்ணுப் போலத் தான் இருப்பா.அவ ‘டெந்திலும்’’ ட்வெல்திலும்’ ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வந்து ‘பாஸ்’ பண்ணி வந்து இருக்கா.ரொம்ப ‘இன்டெலிஜன்ட்’ பொண்ணு அவ. அவ கிட்டே நான் பேசி வந்தப்ப அவ என்னமோ தன்னை ‘நான் ஒரு சோ¢ப் பொண்ணு’ ன்னு சொன்னா.ஆனா எனக்கு அவ சொல்றதிலே எனக்கு நம்பிக்கை இல்லே.ஒரு வேளை அவ சொல்றது உண்மையா இருந்ததுன்னா,நீங்க செந்தாமரையை இந்த வீட்டு மருமகளா ஏத்துப்பீங்களா” என்று நோ¢டையாகவே கேட்டு விட்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள ஆசைப் பட்டான் ராஜேஷ்.ராஜேஷ் அம்மாவும், அப்பாவும் பதில் ஒன்னும் சொல்லாமல் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார்கள்.“எனக்கு என்னவோ அந்த சோ¢ப் பொண்னு இந்தாத்துக்கு மாட்டுப் பொண்ணா வறது பிடிக்கலேடா.நீ வேறே ஒரு பிராமண பொண்ணா பார்த்து காதல் பண்ணேண்டா.அது ஒரு காதல் கல்யாணமானலும் பரவாயில்லைன்னு நான சம்மதம் தறோம் ராஜேஷ்” என்று மெதுவாக தன் அபிப்பிராயத்தைச் சொன்னார் கண்ணன்.“காதல் எல்லாம் நீ பண்ண வேண்டான்டா.நாங்க உனக்கு ஒரு நல்ல பிராமணப் பொண்ணா,நம்ம உறவிலேயே விசாரிச்சு, ஜாத கப் பா¢வர்த்தனைப் பண்ணி, உங்க ரெண்டு பேருடைய ஜாத கங்களும் நன்னா பொருந்தி இருக்கா ன்னு ரெண்டு மூனு ஜோஸ்யா ளைப் பாத்து கேட்டுண்டு,வந்து கிரமப் படி பொண்ணு பாத்து, பொண்னு அம்மா அம்மா கிட்டே கலந்து பேசி கல்யாணத்தை ‘ஜாம்’ ‘ஜாம்’ என்று பண்ணி வைக்கி றோமேடா” என்று ஒரு பெரிய ‘லெக்ச்சரே’ கொடுத்தாள் காயத்திரி.ரெண்டு பேர் சொன்னதையும் கேட்ட ராஜேஷ் ஆடிப் போய் விட்டான்.தன் மனதை கட்டுப் படுத்திக் கொண்டு வெளியே கிளம்பிப் போனான்.மணி எட்டடித்ததும் வீட்டுக்கு வந்தான் ராஜேஷ்.தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான்.அவனுக்கும் ஆத்துக்காரருக்கும் தட்டைப் போட்டு சாதம் பறிமாறி னாள் காயத்திரி.அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது காயத்திரி “நீ பேசாம ஒரு பிராம ணப் பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிண்டா யாருக்கும் ஒரு கஷ்டமும் இல்லாம இருந்து வரலாம்” என்று சொல்லி விட்டாள்.

அடுத்த நாள் அம்மா கொடுத்த ‘டிபனை’ சாப்பிட்டு விட்டு ‘லன்ச் பாக்ஸை’ எடுத்துக் கொண்டு பள்ளிக் கூடத்திற்கு வந்தான்.செந்தாமரைக்கு முதல் ‘பீரியட்’ ‘ப்ரீயா’ இருக்கவே ரா ஜேஷ் அவ கூட உட்கார்ந்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.தன்னுடைய பூரா கதையையும் சொன்னாள் செந்தாமரை.“அப்படியா செந்தாமரை.நீ என்ன சொன்னாலும் பரவாயில்லே.எனக்கு ஒன்னை ரொம்ப பிடிச்சி இருக்கு.கல்யாணம் பன்னீண்டா உன்னை தான் பண்ணிக்கணும்ன்னு நான் ரொம்ப ஆசைப்படறேன்” என்று சொல்லி அவள் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் ராஜேஷ்.செந்தாமரை மெல்ல சிரித்துக் கொண்டு “நீங்க சொல்றது எனக்கு நல்லா புரியுது ங்க.ஆனா இந்தக் கல்யாணம் நடக்காதேங்க.நம்ப ரெண்டு குடும்பத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் இருக்கிற வித்தியாசம் இருக்குங்களே.இதைத் தவிர நான் என் அம்மா,அப்பா, அக்கா,அவங்க குழந் தைங்க இவங்களுக்கு ஆதறவா இருந்து வர வேண்டிய நிர்பந்ததில் இருக்கேங்க. உங்களைக் கல்யா ணம் கட்டிக் கிட்டு உங்க கூட நான் தனியா இருந்து வர முடியாதுங்களேங்க” என்று தீர்மானமாக சொல்லி விட்டாள்.செந்தமரை வீட்டு விலாசத்தை ‘ஆபீஸில்’ இருந்து எழுதி கொண்டான் ராஜேஷ்.

அன்று ஞாயித்துக் கிழமை.ராஜேஷ் அம்மா அப்பாவிடம் ‘ நான் கொஞ்சம் வெளியே போய் வறேன்’ என்று சொல்லி விட்டு செந்தாமரை வீட்டு விலாசத்தை விசாரித்துக் கொண்டு செந்தாமரை வீட்டுக்கு வந்தான்.செந்தாமரை வீட்டு ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினான் ராஜேஷ். செந்தாமரை தான் கதவைத் திறந்தாள்.வாசலில் நின்றுக் கொண்டு இருந்த ராஜேஷைப் பார்த்ததும் செந்தாமரை அசந்து விட்டாள்.ராஜேஷைப் பார்த்து “வாங்க,உள்ளே வாங்க” என்று சொல்லி ராஜேஷ வீட்டுக்குள் ளே அழைத்துப் போய் ஹாலில் இருந்த சோபாவில் உட்கார சொன்னாள் செந்தாமரை.மெல்ல பயந்துக் கொண்டே ராஜேஷ் வீட்டுக்கு உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தான்.உடனே செந்தா மரை அவ அம்மா அப்பா அக்கா எல்லோரையும் கூப்பிட்டு “அம்மா,அப்பா,அக்கா,இவர் என் கூட வேலை செஞ்சு வர கணக்கு வாத்தியார்.இவரு பேர் ரமேஷ்.எங்க பள்ளி கூடத்திலே ஆறு வருஷமா வேலை செஞ்சுக் கிட்டு வறார்.இவர் பன்னாடாவது வகுப்புக்கு கணக்கு எடுத்து கிட்டு வறார்” என்று சொல்லி ராஜேஷை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.உடனே தேவியும் காளியும் ”வாங்க தம்பி” என்று தங்கள் கையைக் கூப்பி வணக்கம் சொன்னார்கள்.உடனே ராஜேஷ¤ம் எழுந்து நின்றுக் கொ ண்டு அவர்களுக்கு வணக்கம் சொல்லி விட்டு மறுபடியும் உட்கார்ந்துக் கொண்டான்.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்த ராஜேஷ் காளியையும்தேவியையும் பார்த்து ”நான் செந்தாமரை கூட வேலை செஞ்சு வறேன்.நான் உங்க பொண்ணு செந்தாமரையை கல்யாணம் பண்ணிக் கொள்ள ரொம்ப ஆசை ப் படறேன்.அப்படி நான் செந்தாமரையை கல்யாணம் பன்ணிக் கொள்ளறதிலே உங்களுக்கு ஏதாவது ஆ§க்ஷபணை இருக்குமா.நான் என் அம்மா,அப்பாவை,இங்கே வந்து உங்க கிட்டே அதை ப் பத்தி பேசச் சொல்லட்டுமா” என்று நோ¢டையாகவே கேட்டான்.உடனே தேவி “ஏங்க உங்களையும், நீங்க பேசற பாஷையையும் பாத்தா,நீங்க ஒரு ஐயர் வீட்டு பையன் போல தெரியுதுங்க.நாங்க ரொம்ப சாதார ணவங்க.போன மாசம் வரைக்கும் நான் ஒரு ‘பில்டிங்க்’ கன்ட்ராக்டர்’ கிட்டே தினக் கூலிக்கு வேலை செஞ்சு கிட்டே வந்தேங்க.போன மாசம் தான் செந்தாமரை எங்க குடிசைக்கு வந்து எங்களை இந்த வூட்டுக்கு அழைச்சு கிட்டு வந்தா.எங்க ஜாதி வேறேங்க.உங்க ஜாதி வேறேங்க.செந்தாமரையை உங்க அம்மா அப்பா நிச்சியமா அவங்க மருமகளா ஏத்துக்க மாட்டா ங்க.நீங்க உங்க ஜாதிப் பொண்ணைப் பாத்து,கல்லாணம் கட்டிக்கங்க.அது தாங்க உங்களுக்கு நல்லது.எங்களுக்கும் நல்லது” என்று நோ¢ டையாகவே சொன்னாள்.எல்லோருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டு விட்டு எழுந்து வெளீயே போனான்.ராஜேஷ் எழுந்து போனதும் தேவி ”என்ன செந்தாமு,இந்த ஐயர் பையன் உன்னை கல்லா ணம் கட்டிக்க ஆசைப் படறார்.நீ அவர் மேலே ரொம்ப ஆசைப் படறாயா செந்தாமு. நீஅவரைக் கல் லாணம் கட்டிக்க ஆசைப் படறயா” என்று கேட்டாள்.உடனே செந்தாமரை “அம்மா, எனக்கு இந்த கல்யாணத்திலே கொஞ்சம் கூட இஷ்டம் இல்லேமா.எந்த காரணம் கொண்டும் நான் கல்யாணம் கட்டி கிட்டு உங்களை விட்டு விட்டு தனியாய் போய் இருக்கமாட்டேன் எனக்கு நீங்க தான் முக்கியம்” என்று தன் கண்களில் கண்ணீர் பொங்க சொன்னாள்.
ராஜேஷ் தன் வீட்டுக்கு வந்து ““சா¢ப்பா,நான் செந்தாமரையை கல்யாணம் பண்ணிக்கலே. எனக்கு நீங்க வேறே எந்தப் பிராமணப் பொண்ணையும் பாக்க வேண்டாம்.எனக்கு வேறே பொண் ணோட கல்யாணமே வேண்டாம்ப்பா” என்று சொல்லி விட்டு எழுந்து தன் பெட் ரூமுக்குப் போய் விட்டான்.ராஜேஷ் ‘பெட் ரூமுக்குள்’ போனதும் “கல்யாணம் என்கிறது ஆயிரம் காலத்து பயிறு.நமக்கு இருப்பதோ ராஜேஷ் ஒரே பையன் தான்.இப்போ அந்த சோ¢ப் பொண்ணு மேலே இருக்கிற மோகத் திலெ அப்படி சொல்லிட்டுப் போறான்.அந்த சோ¢ப் பொண்ணை அவன் மறந்துட்டானு தெரிஞ்சா, நான் நிதானமா அவன் கிட்டே பேசி அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வக்கிறேன்.நீ இப் போ நிம்மதியா இருந்து வா.அது போதும் எனக்கு” என்று ரகசியமாக சொல்லி தன் மணைவியை சமாதானப் படுத்தினார் கண்ணன்.அடுத்த நாள் ராஜேஷ் “நான் ஸ்கூலுக்குப் போயிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு வீட்டை விட்டுக் கிளம்பி ஸ்கூலுக்கு வந்தான்.தன் சீட்டுக்கு வந்து உட்கார் ந்தான்.அவன் ஒரு வெள்ளைக் காகித்ததை எடுத்து எழுத ஆரம்பித்தான்.

“அன்புள்ள செந்தாமரை,நான் உன்னை கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து உன்னை கஷ்டப் படுத்த எனக்கு விருப்பம் இல்லை.நான் உன்னோடு பேசினதை நீ மறந்து விட்டு நீ உனக்குப் பிடிச்ச ஒரு உங்க ஜாதிப் பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.நான் உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளா விட்டாலும்,உன்னிடம் அடிக்கடி கணக்கு சம்மந்தமா பேசி வர எனக்கு ஆசையா இருக்கு.இதை மட்டும் நீ தடுக்காம என் கிட்டே பேசி வா.அந்தப் பேச்சில் வெறும் கணக்கைப் பத்தின பேச்சு மட்டும் தான் இருக்கும்.காதல் பேச்சு இருக்கவே இருக்காது.இது சத்தியம் செந்தாம ரை.கூடிய சீக்கிரமா உன் கல்யாண சமாசாரம் கேக்க எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கு.உனக்கு கல்யாணம் நிச்சியம ஆனா எனக்கு அவசியம் சொல்லு.நான் அந்தக் கல்யாணத்து க்கு வந்து உன் னையும் உன் கணவரையும் வாழ்த்தி விட்டு,ஒரு வாய் சாப்பிட்டு விட்டு, என் ஆசீர்வாததையும் சொல்லி விட்டுப் போறேன்.Best of Luck for your happy Married Life. இப்படிக்கு ராஜேஷ்.

என்று எழுதி முடித்தான்.ராஜேஷ் தான் எழுதின லெட்டருக்கு ஒரு ‘ஜெராக்ஸ்’ காப்பி எடுத்து தன் ‘பைலில்’ வைத்துக் கொண்டான்.வகுப்பு முடிஞ்ச மணி அடித்தது. ஒரு பத்து நிமிஷம் ஆனதும் ராஜேஷ் மெல்ல எழுந்து செந்தாமரை உட்கார்ந்துக் கொண்டு இருக்கும் ரூமுக்கு வந்தான். மெல்ல அவள் ரூமை எட்டிப் பார்த்தான் ரஜேஷ்.செந்தாமரை ஏதோ ஒரு கணக்கு புஸ்தகத்தை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டு இருந்தாள்.செந்தாமரை தனியாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள். ராஜேஷ் அவளிடம் போய் “செந்தாமரை,நான் இந்த லெட்டா¢ல் எல்லாம் விவரமா எழுதி இருக்கேன். இதை நிதானமாகப் படி.நான் வறேன்” என்று சொல்லி விட்டு அவன் கொண்டு வந்த லெட்டரைக் கொடுத்து விட்டு வேகமாகப் போய் விட்டான்.செந்தாமரை எழுந்து நின்றுக் கொண்டு அந்த லெட் டரை ராஜேஷிடம் இருந்து வாங்கிக் கொண்டாள்.லெட்டரைக் கொடுத்ததும் ராஜேஷ் உடனே போய் விட்டான்.செந்தாமரை தன் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு ராஜேஷ் கொடுத்த லெட்ட ரைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள்.செந்தாமரை அந்த லெட்டரை மூன்று தடவை திரும்ப,திரும்பப் படித்தாள். அவள் கண்களில் லேசாக நீர் முட்டியது.தன் கர்சீப்பால் அதை துடைத்துக் கொண்டாள். கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரைக்கு ராஜேஷ¤க்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தாள் உடனே ராஜேஷ் எழுதின லெட்டரை தன் ‘பைலில்’ வைத்துக் கொண்டாள்.‘இந்த லெட்டருக்கு முதலில் நான் அவருக்கு நன்றி பதில் எழுதுவோம்.அப்புறமா அவரை நேரே பார்க்கும் போது அதைத் தரலாம்’ என்று நினைத்து செந்தாமரை ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து ஏழுத ஆரம்பித்தாள்.

“மதிப்புக்குறிய ராஜேஷ் அவர்களுக்கு செந்தாமரை எழுதிக் கொண்டது.நம்முடைய சந்திப்பு இப்படி உங்க மனம் புண்படும்படி ஆகி விட்டதை நினைத்து நான் மிகவும் வருத்தப் படுகிறேன். இங்கே வேலை செஞ்சு கொஞ்சம் பணத்தை கையிலே சேர்த்துக் கொண்டு போன மாசம் தான் என் அம்மா அப்பா அக்காவை குடிசைக்குப் போய் அவங்களை கெஞ்சிக் கேட்டேன்.அவங்க முதல்லே என் கூட வர மாட்டேன்னு சொல்லி மறுத்தாங்க.அப்புறமா நான் ரொம்ப கேட்டதாலே ஒரு வழியா சம்மதிச்சு என் கூட வந்து தங்கி இருக்காங்க.எனக்கு அவங்க தான் என் உலகம்.அவங்களை நான் சந்தோஷமா வச்சுக் கிட்டு வரணும்.இது தான் என் முதல் லட்சியம்.என் ரெண்டாவது லட்சியம் ஏழை குடிசை வாழ் குழந்தைகளுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்து அவங்க வாழ்க்கையை மேம்படுத்த ரொம்ப ஆசைப் படறேன்.என் உயிர் உள்ள வரைக்கும் இந்த ரெண்டு லட்சியங்களையும் நான் நிறை வேத்த பாடுவேன்.அதனால் நான் இந்த ஜென்மத்திலெ கல்யாணமே பண்ணிக் கொள்ளப் போவதி ல்லை.கணக்கு தான் எனக்கு எல்லாம்.நீங்க என்னை எப்ப வேணுமானாலும் சந்தித்து கணக்கு பத் தின விஷயங்களை எல்லாம் பேச வரலாங்க.எனக்கு அது தாங்க வேணும்ங்க.I honestly like, and love,to talk to you about Maths.தயவு செஞ்சி நீங்க என்னை மன்னிச்சிடுங்க.
இப்படிக்கு செந்தாமரை.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *