அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 | அத்தியாயம்-16
நான் அப்புறமா B.Ed. ‘கோர்ஸ்’ படிச்சு ‘பாஸ்’ பண்ணி னேன்.நான் என்னுடைய அந்த ஆ¨ சயை நிறைவேத்திக் கொள்ள இப்போ நான் சென்னைக்கு வந்து இருக்கேன்” என்று தன் கதையை சொல்லி தன் பையில் இருந்து எல்லா டிகிரீ ‘சர்டிபிகேட்டுகளையும்’ எடுத்து ‘பிரின் ஸிபாலிடம்’ காட்டினாள்.அந்த ‘சர்டிபிகேட்டுகளை’ எல்லாம் வாங்கிப் பார்த்த மூர்த்தி அசந்து விட்டார். ‘பிரின் சிபால்’ ஆச்சரியப்பட்டு “அப்படியா செந்தாமரை.என்னால் நம்பவே முடியலையே.ஏதோ ஒரு சினிமா லே வரும் கதை போல இல்லே இருக்கு.செந்தாமரை எல்லா பா¢¨க்ஷக ளிலும் நீ ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வந்து இருக்கியே.நீ உண்மையிலே ஒரு ஜீனியஸ்மா.உன்னை இங்கே படிக்க வச்சப்பவே நீ ஒரு ‘பிரிலியண்ட்’ ‘ஸ்டூடண்ட்’ன்னு எனக்கு தெரிஞ்சது.உன்னை நிசைச்சா எனக்கு ரொம்ப பெரு மையா இருக்கும்மா.நீ ஆசைப் பட்டாப் போல ஒரு கணக்கு வாத்தியார் வேலையில் சேர்ந்து உன்னு டைய லட்சியத்தை சந்தோஷமா செஞ்சு வா செந்தாமரை.அதுக்கு என் பா¢பூரண வாழ்த்துகள்” என்று சொல்லி எழுந்து நின்று செந்தாமரையின் கைகளைப் பிடித்து சொன்னார் ‘பிரின்சிபால்’ மூர்த்தி. கொஞ்ச நேரம் ஆனதும் மூர்த்தி செந்தாமரையை பாத்து “செந்தாமரை இந்த சந்தோஷ சமாசாரத்தை எல்லாம் கேக்க இப்போ நம்மிடையே சுந்தரம் பிள்ளை இல்லெம்மா.அந்த கடவுள் அவர் நம்ம கிட்டே இருந்து அவரை பிரிச்சி அழைச்சுக் கிட்டு போயிட்டாரம்மா” என்று சொல்லி தன் கண்களைத் துடை த்துக் கொண்டார்.செந்தாமரை” ஆமா சார்.எனக்கும் ரொம்ப வருத்தமா இருக்கு சார்.அவரைப் பார்த்து என் நன்றியைச் சொல்ல நான் அந்தப் பள்ளி கூடத்திற்குப் போனேன் சார்.என் எதிரே வந்த ஒருவர் இந்த துக்க செய்தியை சொல்லி ரொம்ப வருத்தப் பட்டார்.நான் என் மனசுக்குள்ளே ரொம்ப அழுதேன் சார்.அவர் மட்டும் என்னை அன்னைக்கு உங்க கிட்டே அழைச்சிக் கிட்டு வராம இருந்தா நான் ஒரு சாதாரண எட்டாம் ‘க்ளாஸ்’ ‘பாஸ்’ பண்ணின பொண்ணாவே இருந்து வந்து இருப்பேன் சார்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
சற்று நேரம் கழித்து செந்தாமரை ‘பிரின்ஸிபாலை’ப் பார்த்து “சார் நம்ம பள்ளிக் கூடதில் கணக்கு வாத்தியாரக வேலை பண்ணனும் எனக்கு ரொம்ப ஆசை.எனக்கு இங்கே வேலை நீங்க கொடுக்க முடியுமா சார்” என்று பணிவுடன் கேட்டாள்.”நீ சரியான சமயத்தில் தான் வந்து இருக்கே செந்தாமரை.இந்த வாரம் தான் எட்டாவது ‘க்லாஸ்’ கணக்கு ‘டீச்சர்’ கல்யாணம் பண்ணிக் கிட்டு வே லையை ‘ரிசைன்’ பண்ணி விட்டு இருக்காங்க” என்று சொல்லி சற்று யோசித்து விட்டு “நீ ஒன்னு பண்ணு செந்தாமரை.நீ ஒரு ‘அப்ளிகேஷன்’ எழுதி, அதில் உன் ‘டிகிரி சர்டிபி கேட்டு’ களின் ‘ஜெராஸ்ஸை’ எல்லாம் ‘அட்டாச்’ பண்ணி,என் கிட்டெ குடு.நான் உன் ‘அப்லிகேஷனை’ பள்ளிக் கூட ‘பிரஸிடெண்ட்டிடம்’ கொடுத்து ‘அப்ரூவல்’ வாங்கி உனக்கு இந்த வேலையை வாங்கித் தர ‘ட்ரை’ பண்றேன்” என்று சொன்னதும் செந்தாமரைக்கு தலை கால் புரியவில்லை.
உடனே செந்தாமரை “ சார்,நீங்க சொன்னபடியே நான் ‘அப்ளிகேஷன்’ எழுதி, என் ‘டிகிரி சர்டிபிகேட்டு’களின் ‘ஜெராஸ்ஸை’ எல்லாம் ‘அட்டாச்’ பண்ணி உங்க கிட்டே தறேன்.அந்த வேலை யை எனக்கு வாங்கி குடுங்க சார்.நான் காலம் பூராவும் உங்களுக்கு ரொம்ப கடமைப் பட்டவளாய் இருபேன் சார்” என்று தன் கண்களில் கண்ணீர் மல்க கேட்டாள். “நீ இப்போவே எனக்கு அந்த ‘அப்லி கேஷனை’ எழுதிக் குடு.நான் என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் பண்ணி உன்னை எங்க பள்ளி கூடத்திலே ஒரு கணக்கு வாத்தியாரா சேர்த்துக் கொள்ளப் பார்க்கிறேன்.உன்னை மாதிரி ஒரு ‘ஜீனியஸ்’ எங்க பள்ளி கூத்திலே ஒரு கனக்கு வாத்தியாரா வேலை செஞ்சு வர நாங்க ரொம்ப குடுத்து வச்சு இருக்கணும்மா” என்று ‘பிரின்ஸிபால்’ மூர்த்தி சொன்னதும் செந்தாமரை அவருக்கு வணக்கம் சொல்லி விட்டு அவர் ரூமை விட்டு வெளியே வந்தாள்.செந்தாமரை ஒரு வெள்ளைத் தாளில் ‘தான் இந்தப் பள்ளி கூடத்திலே எட்டாவது வரை படிச்சு முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணினதை முதலில் எழுதி,அப்புறமா தான் B.Sc கணக்கு ,M.Sc கனக்கு, B..Ed ல்லாம் பாஸ் பண்ணி இருப்பதாயும், இந்தப் பள்ளி கூடத்திலே ஒரு கணக்கு வாத்தியாரா வேலை செஞ்சு வர ரொம்ப ஆசைப் படுவதாய் சொல்லி தனக்கு ஒரு கணக்கு வேலை கொடுக்கும் படி’ பணிவாக எழுதி, எல்லா டிகிரீ ‘சர்டிபி கேட்டுகளின்’ ‘ஜெராக்ஸ்’ காப்பியும் ‘ அட்டாச்’ பண்ணி ‘பிரின்ஸிபால்’ ரூமுக்குள் வந்து கொடுத் தாள்.அந்த ‘அப்லிகேஷனை’ வாங்கிப் பார்த்த ‘பிரின்ஸிபால்’ மூர்த்தி மிகவும் சந்தோஷப் பட்டு உடனே அந்த ‘அப்ளிகேஷனில்’ தன் பலத்த சிபாரிசை எழுதினார்.செந்தாமரை ‘ பிரின்சிபால்’ ரூமை விட்டு வெளியே வந்து ‘ரிஸ்ப்ஷனில்’ உட்கார்ந்துக் கொண்டு தான் தினமும் வேண்டி வரும் பிள்ளை யாரை தன் மனதில் நினைத்துக் கொண்டு ‘பிள்ளையாரே, எப்படியாது இந்தப் பள்ளிக் கூடத்திலெ இந்த கணக்கு வாத்தியார் வேலையை எனக்கு வாங்கி குடுப்பா.நான் இந்தப் பள்ளிக் கூடத்திலெ வேலை செஞ்சு வந்து என் அம்மா,அம்மா ஆயா அக்கா இவங்க கூட இருந்து வந்து, அவங்க ஏழமை நிலை மையை போக்கி அவங்களை எல்லாம் சந்தோ ஷமா வச்சுக் கிட்டு வர ரொம்ப உதவியா இருக் கும். இந்த பெரிய உதவியை தயவு செஞ்சி எனக்கு பண்ணுப்பா’ என்று தன் கண் களை மூடிக் கொ ண்டு மனம் உருகி வேண்டிக் கொண்டு இருந்தாள்.ஓரு அரை மணி நேரம் ஆகி இருக்கும்.தன் ரூமுக்கு வந்தார் ‘பிரின்ஸிபால்’ மூர்த்தி.
சிறிது நேரம் ஆனதும் ‘பிரின்ஸிபால்’ பியூனை தன் ரூமுக்கு கூப்பிடார்.பியூன் தன் ரூமுக்கு வந்ததும்’ பிரின்ஸிபா’ பியூனைப் பார்த்து “ வெளியே ‘ரிசப்ஷனில்’ செந்தாமரைன்னு ஒரு பொண்ணு உக்காந்துக் கிட்டு இருப்பாங்க.அவங்களை என் ரூமுக்கு வரச் சொல்” என்று சொன்னார்.உடனே பியூன் ‘ பிரின்ஸிபால்’ ரூமை விட்டு வெளியே வந்து ‘ரிஸ்ப்ஷனில்’ உட்கார்ந்துக் கொண்டு இருந்த செந்தாமரையையிடம் வந்து ”உங்களை ‘ பிரின்சிபால்’ அவங்க ரூமுக்கு வர சொன்னாருங்க” என்று சொல்லி விட்டுப் போனான்.உடனே செந்தாமரை எழுதுக் கொண்டு பிள்ளையாரை வேண்டிக் கொண் டே ‘பிரின்ஸிபால்’ ரூமுக்குள் மெல்ல நுழைத்தாள்.“செந்தாமரை, யூ ஆர் டூ லக்கி. உன்னை இந்த கணக்கு வாத்தியார் வேலையில் சேர்த்துக் கொள்ள ‘பிரெஸிடெண்ட்’ ‘அப்ரூவல்’ கொடுத்து விட்டார் .நீ இன்னும் ஒரு வாரமோ,பத்து நாளுக்குள்ளேயோ இந்த வேலையில் சேர்ந்து விடு,சரியா” என்றார். செந்தாமரைக்கு தான் காண்பது கனவா,நனவா,என்று புரியவில்லை.”ரொம்ப தாங்க்ஸ் சார் உங்களு க்கு.உங்களால் தான் எனக்கு இந்த வேலை கிடைச்சு இருக்கு.உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எனக்கு புரியலே.நான் ஒரு வாரத்தில் வேலையில் சேர்ந்து விடறேன்” என்று சொல்லி தன் கைகளை கூப்பி வணங்கினாள்.பிறகு அவர் ரூமை விட்டு வெளியெ வந்து ஆபீஸ்க்கு போய் கணக்கு வாத்தியார் வேலைக்கு ‘அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை’ வாங்கிக் கொண்டு செந்தாமரை அந்தப் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்தாள்.
செந்தாமரையைப் பார்த்ததும் ராதா “வா செந்தாமரை,நீ சரியான நேரத்துக்குத் தான் வந்து இருக்கே.நாங்க எல்லோரும் இப்போ ‘ஷாப்பிங்க்’ கிளம்பிக் கிட்டு இருக் கோம்.நீயும் வா.எல்லோரும் சேர்ந்து போய் சுமதி நிச்சியதார்த துணிமணிகள் வாங்கி கிட்டு வரலாம்” என்று அழைத்தாள்.”சரி ஆண்டி.நான் வறேன்.அதுக்கு முன்னடி உங்களுக்கு எல்லாம் ஒரு ‘ஹாப்பி நியூஸ்’.உங்க எல்லோரு டைய ஆசீர்வாதத்தால் நானும் சுமதியும் படிச்ச நுங்கம்பாக்கம் பள்ளிக் கூடத்திலேயே எனக்கு ஒரு கணக்கு வாத்தியார் வேலை கிடைச்சு இருக்கு” என்று சொல்லி எல்லா பெரியவர்கள் காலையும் தொ ட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டாள் செந்தாமரை.உடனே கணபதி “அப்படியா செந்தாமரை, நீ ஆசைப் பட்டது போலவே உனக்கு ஒரு கணக்கு வேலை கிடைச்சு இருக்கு.அந்த வேலையை நீ சந் தோஷமா செஞ்சுக் கிட்டு வந்து உன் வாழ் நாள் ஆசையை பூர்த்தி பண்ணி வாம்மா.உனக்கு என் பா¢பூரண வாழ்த்துகள்”என்று சொல்லி செந்தாமரையின் கைகளைப் பிடித்துக் கொண்டு வாழ்த்தினார். அதுவரை சும்மா இருந்த சுமதி ”செந்தாமரை நாம் படிக்கும் போது நாம் ‘ஹோம் வர்க்’ போட்டுக் கிட்டு வராதவங்களை ஒரு பெரிய பிரம்பினால் கணக்கு வாத்தியார் அடிப்பாங்களே,அந்த மாதிரி எல்லாம் நீ ‘ஸ்டூடண்ட்ஸ்’ களை அடிக்காதே” என்று சொன்னதும் செந்தாமரை ”நான் அப்படி எல்லாம் ஒரு பிரம் பும் வச்சுக்க மாட்டேன் சுமதி.’ஹோம் வர்க்’ போட்டு கிட்டு வராதவங்களை அடிக்கவும் மாட்டேன். நான் அவங்க கூட உக்காந்து கிட்டு அந்த ‘ஹோம் வர்க்’ எப்படி போடுவதுன்னு சொல்லி குடுப்பேன்” என்று சொன்னதும் கணபதி “அது தான் சரியான முறை.எந்த பிள்ளையையும் அடிக்கவே கூடாது. கணக்கு அவங்களுக்குப் புரியும் படி வாத்தியார் தான் சொல்லித் தரணும்” என்று சொன்னார்.
பிறகு எல்லோரும் காரில் கிளம்பி ‘ஷாப்பிங்க்’ க்கு புறபட்டார்கள்.துணிகடையில் சுமதி நிச்சி யதார்த்ததுக்கு எல்லோருக்கும் வேண்டிய வேண்டிய துணிமணிகளையும் எடுத்து விட்டு செந்தா மரைக்கும் ஒரு ‘டிரஸ்’ வாங்கினார்கள்.தனக்கு ஒரு ‘டிரஸ்’ வாங்கினதுக்கு செந்தாமரை ராதா ராஜா தம்பதிகளுக்கு தன் நன்றியை தெரிவித்தாள் செந்தாமரை.பிறகு எல்லோரும் ஒரு பெரிய ஹோட்ட லில் இரவு உண வை முடித்துக் கொண்டு பங்களாவுக்கு வந்து படுத்துக் கொண்டார்கள்.அடுத்த நாள் காலையிலே செந்தாமரை ராதா ஆன்டியை பார்த்து ”நான் இது வரை என் அம்மா,அப்பா,ஆயா, அக்கா எல்லாரையும் போய் பார்த்து வரணும் என்கிற ஆசையை எனக்குள்ளே அடக்கி வச்சு கிட்டு இருந்தேன்.நான் இப்போ அவங்களைப் போய் பார்த்து விட்டு வரட்டுமா” என்று பவ்யமாக கேட்டாள். உடனே ராதா ஆன்டி “அதுக்கென்ன செந்தாமரை,நீ அவங்களைப் போய் பார்த்துட்டு வா.அவங்க கிட்டே நீ மதுரைக்குப் போய் படிச்ச படிப்பு எல்லாத்தையும் காட்டி விட்டு,உனக்கு இப்போ நீ படிச்ச பள்ளிகூடத்திலே ஒரு கணக்கு வாத்தியார் வேலை கிடைச்சு இருக்கும் சந்தோஷ சமாசாரத்தையும் சொல்லு”என்று சொன்னதும் செந்தாமரை பங்களாவை விட்டு கிளம்பி வெளியே வந்தாள்.
செந்தாமரை வேகமாக ஒரு ‘ரெடி மேட்’துணிகள் விற்கும் கடைக்கு வந்தாள்.செந்தாமரை அந்தக் கடைக்காரிடம் முஸ்லிம் பெண்கள் போட்டுக் கொள்ளும் ஒரு முழு கருப்பு கவுனையும், ஒரு பையையும், விலை பேசி வாங்கிக் கொண்டாள்.வரும் வழியில் இருந்த ஒரு கழிப்பறைக்குள் நுழைத்து தன் ‘டிரஸ்ஸின்’ மேல் தான் வாங்கிக் கொண்டு வந்த கருப்பு கவுனைப் போட்டுக் கொண்டாள். மெ ல்ல லெசாக இருட்டியதும் செந்தாமரை மெல்ல அவள் வாழ்ந்த வந்த குடிசை வாழ் பகுதிக்கு வந்தாள். அவள் மனம் ‘திக்’, திக்’ கென்று அடித்துக் கொண்டு இருந்தது.தன் ஆசைகளை எல்லாம் மெல்ல அடக்கி கொண்டு தன் வீட்டு முன்னால் மெல்ல வந்தாள்.வாசலில் ஒரு பழைய நாற்காலியில் அவள் அப்பா உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.‘நம் அப்பா இப்படி மெலிஞ்சுப் போய்,ஒரு பழைய நாற்காலி யில் குந்திக் கிட்டு இருக்காரே.இவருக்கு உடம்பு ஏதாச்சும் சரி இல்லாம இருக்குமா’ என்று கவலைப் பட்டுக் கொண்டே மெல்ல அவா¢டம் போய் செந்தாமரை “பெரியவரே,இந்த வூட்லே செந்தா மரை ன்னு ஒரு பொண்ணு இருந்துச்சே,அது இப்போ எங்கே இருக்குங்க” என்று ¨தா¢யத்தை வரவழை த்துக் கொண்டு தட்டு தடுமாறிக் கேட்டாள்.“எனக்கு கண் பார்வை சரியில்லைம்மா.நீ யாரும்மா. நீ ஏன் அந்த பொண்ணு செந்தாமரையைப் பத்தி என் கிட்டே கேக்கறே” என்று கேட்டார் ராஜ்.செந்தா மரைக்கு கண்ணில் கண்ணீர் முட்டியது.மெல்ல தன் கண்ணீரை அடக்கி கொண்டு “நான் அவ கூட படிச்ச பொண்ணுங்க நான் சின்ன வயசிலேயே பெங்களூர் போயிட்டேன்.அதுக்கு அப்புறமா நான் செந்தாமரையை பார்க்கலீங்க “என்று ஒரு பொய்யைச் சொன்னாள் செந்தாமரை.“ஓ அப்படியா, அந்தப் பொண்ணு செந்தாமரை ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி வூட்டை விட்டு ஓடிப் போய் விட்டா. அவளைப் பத்தி அதுக்கப்புறம் ஒரு சமாசாரமும் எங்களுக்கு தெரியலேம்மா” என்று வருத்தப் பட்டுக் கொண்டு சொன்னார் ராஜ்.”ஓ அப்படிங்களா.செந்தாமரை அம்மா வூட்லே இல்லிங்களா” என்று கேட்டாள் செந்தாமரை.“அவ வேலைக்குப் போயிருக்காம்மா,இப்போ வர நேரம் தான்” என்று சொல்லி விட்டு கண்ணை மூடிக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டார் ராஜ். “சரிங்க,நான் அப்புறமா வந்து அவங்களைப் பார்க்கிறேனுங்க” என்று சொல்லி விட்டு அவள் எதிர் பக்கம் போய் மெல்ல தன் அக்கா வீட்டை நோக்கி நடந்தாள் செந்தாமரை.
பத்தடி கூட போய் இருக்க மாட்டாள் செந்தாமரை, தூர அவள் அம்மா வருவது தெரிந்தது. அம்மா பழைய உடம்பில் பாதி ஆக ஆகி இருந்தாள்.அவள் தலை முடி நிறைய நரைத்து இருந்தது அந்த இருட்டிலும் செந்தாமரைக்கு நன்றாக தெரிந்தது.‘நம் அம்மா உடம்பில் இவ்வளவு மாற்றமா. அப்பாவுக்கு கண் பார்வை சரியில்லை.அவர் வேலைக்குப் போகாமே வீட்டோடு குந்திக் கிட்டு இருக் கார்’.இவை எல்லாவற்றையும் பார்த்த செந்தாமரைக்கு கண்கள் குளமாயிற்று.மெல்ல நடந்து தன் அக்கா குடிசையின் வாசலுக்கு வந்தாள் செந்தாமரை.அக்கா வீட்டின் முன் வந்த செந்தாமரை அங்கு வாசலில் ஒரு மண்ணெண்ணை விளக்கு எரிந்துக் கொண்டு இருப்பதையும்,அதன் முன் ஒரு பெண் உட்கார்ந்துக் கொண்டு படித்துக் கொண்டு இருந்ததை கவனித்தாள்.செந்தாமரை மெல்ல அந்தப் பெண்ணிடம் போய் அவளிடம் “ஏம்மா உங்க அம்மா எங்கேம்மா” என்று மெல்ல கேட்டாள். அதற்கு உடனே அந்த பெண் “நீங்க யாருங்க” என்று பட்டென்று கேட்டாள்.”நான் ரொம்ப வருஷ த்துக்கு முன்னாடி இந்த ஊரில் இருந்தேன்.உங்க அம்மவை எனக்கு ரொம்ப நல்லா தெரியும்” என்று இன்னும் ஒரு பொய்யைச் சொன்னாள் செந்தாமரை.அப்போது உள்ளே இருந்து ஒரு சின்ன பெண் ஓடி வந்து அக்கா “சோறு வெந்துடுச்சான்னு வந்து கொஞ்சம் பாரேன்.எனக்கு சரியா பாக்க தெரியலே” என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள்.‘நம் அக்காவுக்கு ரெண்டு பொண்ணா,அடப் பாவமே’ என்று நினைத்து வருத்தப் பட்டாள் செந்தாமரை.படித்துக் கொண்டு இருந்த பெண் ”அம்மா வீட்டு வேலை க்கு போய் இருக்காங்க.வர ராத்திரி ஒன்பது ஆகும்” என்று சொல்லி விட்டு குடிசைக்குள்ளே போய் விட்டாள்.செந்தாமரை வெளியே வந்த சின்னப் பெண்ணிடம் “உங்க அப்பா கூட இன்னும் வேலை யில் இருந்து வரலையா”என்று கேட்டாள்.அதற்கு அந்த சின்னப் பெண் சட்டென்று “எங்க அப்பா எங்களை விட்டுட்டு வேறு அம்மாவுடன் ஓடிப் போய் ஐஞ்சு வருஷம் ஆவு துங்க.ஆமா நீங்க யாரு ங்க.உங்களை நான் இது வரைக்கும் பார்த்த்தே இல்லையே” என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போது உள்ளே இருந்த அக்கா ராணீ “செல்வி,சீக்கிரம் வா” என்று குரல் கொடுக்கவே அந்தச் சின்ன பெண் உள்ளே ஓடிப் போய் விட்டாள்.செந்தாமரைக்கு துக்கம் பொத்துக் கொண்டு வந்தது. அவள் தன் அழுகையை அடக்கிக் கொண்டாள்.உள்ளே போன பெண்கள் வெளியே வருவதற்குள் அந்த குடிசையை விட்டு சீக்கிரமாக கிளம்பி மெயின் ரோடுக்கு வந்தாள் செந்தாமரை.அக்காவின் குடும்ப நிலையை நினைத்துப் பார்க்கும் போது அவளுக்கு மேலும் அழுகை அழுகை யாக வந்தது.‘நம் அக் காவுக்கு ரெண்டு குழந்தைங்களை கொடுத்த பிறகு,இந்த மாமா வேறே ஒரு பொண்ணைக் கல்யா ணம் பண்ணி கிட்டு இருக்காரே.இந்த மாமாவுக்கு இப்படி ஒரு ஆசையா.தன் ரெண்டு பெண் குழந் தைகளுடனும்,அக்காவுடனும் சந்தோஷமா இருந்து வந்து,அவங்களை காப்பாத்தி வரகூடாதா. இப்படி தனியா தவிக்க விட்டுட்டு வேறே ஒரு பொண்ணோடு ஓடிப் போய் இருக்காரே.என்ன மனு ஷன் இவரு’ என்று தன் மனதுக்குள் மாமாவைத் திட்டினாள் செந்தாமரை.
மெயின் ரோட்டிற்கு வந்த செந்தாமரை ஒரு இருட்டான இடத்திற்குப் போய் தான் போட்டு இருந்த கவுனை கழட்டி,தான் கொண்டு வந்து இருந்த பைக்குள் போட்டு, அந்த பையை எதிரே இருந்த ’ டஸ்ட் பின்னில்’ வீசி எறிந்து விட்டு ஒரு மர ஓரமாக நின்றுக் கொண்டு மனம் விட்டு கொஞ்ச நேரம் அழுதாள்.பங்களாவுக்கு வந்து சேர்ந்தாள் செந்தாமரை.பங்களாவுக்கு வந்த செந்தாம ரை சுமதியை அழைத்துக் கொண்டு அவ ‘பெட் ரூமு’க்கு வந்தாள்.செந்தாமரையின் கண்கள் கோவைப் பழம் போல சிவந்து இருப்பதைப் பார்த்த சுமதி செந்தாமரையைப் பார்த்து “ என்ன செந்தாம ரை,வெளியே போன நீ ரொம்ப அழுது இருக்கேப் போல் இருக்கே.உன் கண்க ரெண்டும் கோவைப் பழம் போல சிவந்து கிடக்குதே.ஏன்,என்ன ஆச்சு செந்தாமரை“ என்று கவலையுடன் விசாரித்தாள். செந்தமாரை தான் இந்த ஊரை விட்டுப் போன பிறகு தன் குடும்பம் இருக்கும் பா¢தாபமான நிலை யை சொல்லி அழுதாள்.சுமதி செந்தாமரைக்கு தேத்தறவு சொல்லி சமாதானப் படுத்தினாள்.
குறிப்பிட்ட தினமான வெள்ளிக் கிழமை தினத்தில் சுமதி சந்தோஷ் நிச்சியதார்த்த நிகழ்ச்சி வெகு விமா¢சையாக நடந்து முடிந்தது.ராஜா, ராதா,ஏற்பாடு பண்ணி இருந்த தடபுடலான சாப்பாட் டை எல்லோரும் சந்தோஷமாக சாப்பிட்டார்கள்.விழாவுக்கு வந்த எல்லோரும் ‘சுமதி ,சந்தோஷ்’ ஜோடிப் பொருத்தம் ரொம்ப நன்றாக இருந்தது என்றும்,அவர்கள் ஒருவருக்கு ஒருவர் Made for each other’ என்றும் சொல்லி புகழ்ந்தார்கள்.அடுத்த நாள் கணதியும் சாந்தாவும் குழந்தை, ஆனந்தனும் மதுரைக்குப் போக ரெடி ஆனார்கள்.
கணபதியும் சாந்தாவும் ராஜாவிடமும்,ராதாவிடமும்,சுமதி இடமும் சொல்லிக் கொண்டு மதுரை க்கு கிளம்வும் போது செந்தாமரை அவர்கள் காலில் விழுந்து ”அப்பா, அம்மா,நீங்க ரெண்டு பெரும் என்னை மதுரைக்கு அழைச்சுப் போகாம இருந்து இருந்தா நான் எங்கேயோ திண்டாடிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்து வந்து இருப்பேன்.நீங்க செஞ்ச இந்த பெரிய உதவியால் நான் இன்னைக்கு ஒரு கணக்கு வாத்தியாரா வேலைக்குச் சேரப் போறேன்.இந்த உதவியை நான் என்னைக்கும் மறக்க வே மாட்டேன்” என்று கண்களில் கண்ணீர் தளும்ப சொல்லி அவர்கள் காலைத் தொட்டு தன் கண்க ளில் ஒத்திக் கொண்டாள்.”நீ கணக்கு வாத்தியரா சேந்து முத மாச சம்பளம் வர வரைக்கும்,இந்த பத்தாயிரம் ரூபாயை உன் செலவுக்கு வச்சுக்கம்மா “என்று சொல்லி செந்தாமரைக்கு தன் ‘ப்ரீப்’ கேஸில் இருந்து ஒரு பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.செந்தாமரை தன் நன்றியை கண பதிக்கு சொல்லி விட்டு அந்த பத்தாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டாள்.கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை ஆனந்தனை பார்த்து “ஆனந்தா,நீ நல்லாப் படிச்சு முன்னுக்கு வரணும் தெரியுமா.அப் பாவைப் போல நீயும் ஒரு ‘ப்ரபஸராக’ வேலை செஞ்சு வரணும்.இந்த அக்காவை மறந்து விடாதே எப்பவும் என்னை ஞாபகம் வச்சுக்க” என்று சொல்லி அவன் தலையை வருடினாள்.பிறகு கணபதி எல்லோரையும் அழைத்துக் கொண்டு தன் காரில் மதுரைக்குக் கிளம்பிப் போனார்.
அடுத்த நாள் செந்தாமரை தன் துணி மணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு பங்களாவை விட்டு வெளியே வந்தாள்.செந்தாமரை தன் பள்ளிக்கூடத்தின் அருகாமையில் இருக்கும் ஒரு சின்ன ‘லாட்ஜில்’ ரூம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டாள். அந்த ‘லாட்ஜ்’ ரூமுக்கு வந்து நன்றாக குளித்து விட்டு ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு பள்ளிக் கூடத் திற்குக் கிளம்பினாள்.பள்ளிக் கூடத்திற்கு வந்து செந்தாமரை ‘பிரின்ஸிபாலை’ப் பார்த்து தான் இன் னைக்கு கணக்கு வாத்தியார் வேலைக்கு சேர ஒரு கடிதம் கொடுத்தாள்.உடனே ‘பிரின்ஸிபால்’ செந் தாமரை கொடுத்த கடிதத்தை வாங்கிக் கொண்டு அவளை எட்டாம் வகுப்புக்கு கணக்கு வாத்தியா ராக வேலை செய்து வரச் சொன்னார்.செந்தாமரை தான் தினமும் வேண்டி வரும் பிள்ளையாருக்கு தன் நன்றியை மனதில் சொல்லிக் கொண்டாள்.செந்தாமரை எட்டாம் வகுப்பில் நுழைந்து வாத்தியார் அமரும் நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டாள்அவள் மனம் ஆகாயத்தில் பறந்தது.
தன்னுடன் வாத்தாயாரா வேலை செஞ்சு வரும் மனோரமா ‘டீச்சரின்’ சிபாரிசால் அவ தங்கி வந்த ‘லேடீஸ் ஹாஸ்டலில்’ தங்க ஒரு ரூம் கிடைத்தது.செந்தாமரை உடனே ‘லாட்ஜ்ஜுக்கு’ப் போய் தன் துணி மணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து ‘லேடீஸ் ஹாஸ்டலில்’ செட்டில் ஆனாள். செந்தாமரை ஒரு வாத்தியார் வேலையும் கிடைத்து தங்க ஒரு இடமும் கிடைத்து விட்டதால் சந்தோ ஷமாக வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தாள்.தன் கையில் கொஞ்சம் பணம் சேரும் வரை தன் குடும்பத்தாரை பார்க்கும் ஆசையை அடக்கி வைத்துக் கொண்டு இருந்தாள் செந்தாமரை.மூன்று மாதம் சென்றது.தனக்கு வரும் சம்பளத்தில் சிக்கனமாக செலவு பண்ணி வந்துக் கொண்டு கையில் கொஞ்சம் பணத்தை கணிசமாக சேர்த்துக் கொண்டாள் செந்தாமரை.‘லேடீஸ் ஹாஸ் டலை’க் காலி பண்ணி விட்டு தன் பள்ளிக் கூடத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு காலனியில் ஒரு சின்ன ரெண்டு ‘ரூம்’ வீட்டை வாடகைக்கு எடுத்து கொண்டாள்.அந்த வீட்டில் செந்தாமரை ‘காஸ்’ அடுப்பு ,‘காஸ் கனெக்ஷன்’,உட்கார நாலு சேர்கள்,ஒரு சாதாரண ‘சோபா செட்’,சாப்பாடு செய்ய பாத்தி ரங்கள் எல்லாம் வாங்கி வைத்தாள்.அன்று சனிக்கிழமை.பள்ளிக் கூடம் முடிந்தவுடன் விட்டு தன் வீட்டுக்கு வந்தாள்.சாயங்காலம் மணி ஏழடித்ததும் செந்தாமரை நன்றாகக் குளித்து விட்டு,டிரஸ் பண்ணிக் கொண்டு,மார்கெட்டில் இருந்த கடைக்குப் போய் நிறைய பூ,பழம்,இனிப்பு, பலகாரம்,புது பாய்,புது தல காணிங்க எல்லாம் வாங்கிக் கொண்டு தன் அம்மா அப்பா வசிக்கும் குடிசைக்கு வந்தாள்.அவள் மனம் ‘திக்’’திக்’ என்று அடித்துக் கொண்டு இருந்தது.
மெல்ல பயத்துடன் குடிசை வாசலுக்குப் போய் அந்த குடிசையை ஒரு நோட்டம் விட்டாள். அதே குடிசை,பழமை,ஏழ்மை நிறைந்த அதே நிலைமையில் இருந்தது.ஆனால் செந்தாமரைக்குத் தூக்கி வாரிப் போட்டது.அம்மா அடுப்பில் சமைச்சுக் கிட்டு இருந்தாங்க.ஆயாவைக் காணவில்லை. அப்பா மட்டும் ஒரு ஈஸி சோ¢ல் சாய்ந்து படுத்துக் கொண்டு இருந்தார்.குடிசை வாசலை தாண்டி உள்ளே வந்து,பயத்துடன் செந்தாமரை “அம்மா,அப்பா, நான் செந்தாமரை வந்து இருக்கேன்” என்று குரல் கொடுத்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.கூப்பிட்டு விட்டு குடிசை சுவர் எல்லாத் தையும் பார்த்தாள்.செந்தமரைக்குத் தூக்கி வாரிப் போட்டது.ஆயாவின் போட்டோ சுவத்திலே மாட்டி இருந்து அந்த போட்டோக்கு ஒரு மாலையும் போடப் பட்டு இருந்தது.‘அடப் பாவமே நம்ப ஆயா இற ந்துப் போயிட்டாங்களா.சுவத்திலே அவங்க போட்டோவுக்கு ஒரு மாலைப் போட்டு இருக்காங்களே. நம்ப ஆயா எப்படி இறந்து போய் இருப்பாங்க.அவங்களைப் பார்த்து நம்ப கணக்கு வாத்தியார் வேலை யைச் சொல்லி அவங்களை அழைச்ச்சுப் போய் சந்தோஷமா வச்சு வரலாம்ன்னு நினைச்சோமே. அவங்களே இனிமே நான் பார்க்க முடியாதே’ என்று நினைக்கும் போது செந்தாமரைக்கு அழுகை வந்தது.செந்தாமரையைப் பார்த்ததும் தேவியும் ராஜ்ஜும் அசந்துப் போனார்கள்.
செந்தாமரை நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு இருபத்தி நாலு வயசுப் பொண்ணுக்கு இருக்கும் வளர்த்தியுடனும்,வாளிப்புடனும் நின்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்து விட்டு “செந்தாமு நீயா.நான் காணறது கனவா இல்லே நிஜமா.எங்கேடி இத்தனை வருஷம் நீ போய் இருந்தே. எங்களே விட்டுட்டு ஏண்டீ சொல்லிக்காம கொள்ளாம ராவோடு ராவா இந்த குடிசையை விட்டு ஓடிப் போனே. எங்களை விட்டு விட்டு ஓடி போக உனக்கு எப்படிடீ மனசு வந்திச்சு.நீ எவனையாவது இசுத்துகிட்டுப் போய் அவனை கல்லாணம் கட்டிக் கிட்டு இப்போ இங்கே வந்து நிக்கறயாடீ.நாங்க உசிரோடு இருக் கோமா,இல்லை செத்து ஒழிஞ்சோமான்னு பாக்க வந்தியாடீ.உனக்கு நானும்,உன் அப்பாவும், ஆயா வும் என்னடி குறைவச்சோம்டீ சொல்லு” என்று கத்தினாள் தேவி.செந்தாமரை மெல்ல தன் அம்மா வின் காலைத் தொட்டு தன் கண்ணில் ஒத்திக் கொள்ளப் போனாள்.ஆனால் தேவி தன் கால்களை பின்னுக்கு இழுத்துக் கொண்டு ”என்னைத் தொடாதேடீ.நீ எங்களை விட்டு ஓடி போன பொண்ணுடீ. என்னைத் தொடாதே” என்று மறுபடியும் கத்தினாள்.எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தார் ராஜ்.தேவி விடாம கத்துவதைக் கேட்ட ராஜ் “ஏம் புள்ளே,பத்து வருஷத்துக்கு அப்புறமா நம்மைத் தேடி வந்து இருக்க செந்தாமுவைப் பாத்து இப்படி கத்து கத்துன்னு கத்தறே.செந்தாமுவை உள்ளே கூப்பிட்டு மெதுவா உன் கோவத்தைச் சொல்லி அவ கிட்டே கேளு.அக்கம் பக்கம் இருக்கிற குடிசை சனங்க காத்திலே எல்லாம் விழப் போவுது.செந்தாமுவை உள்ளே கூப்பிடு.அவ கிட்டே மெல்ல பேசு” என்று சொன்னான்.”உனக்கு ஒன்னும் தெரியாதுயா.நான்தான்யா இந்த செந்தாமுவை பத்து மாசம் சுமந்துப் பெத்தவ.இவளை எவ்வளவு ஆசையா நான் வளத்து இருப்பேன்ன்னு எனக்குத் தான் தெரி யும்யா.அத்தனை ஆசையிலும் மண்ணை அள்ளிப் போட்டு விட்டு,எவனோ ஒரு சிறுக்கனோடு ஓடிப் போனவ தானே இந்த செந்தாமு.இவ கிட்டே எதுக்கய்யா நான் மெதுவா பேசணும்.அக்கம் பக்கத்திலே இருக்கிற சனங்க வந்து இவ அழகைப் பாக்கட்டுமேய்யா.எனக்கு என்னயா பயம்.நானா எவனொ டாவது ஒடிப் போய் இருக்கேன்” என்று விடாமல் கத்தினாள் தேவி.இதற்குள் ராஜ் மெல்ல ‘ஈஸி சேரை’ விட்டு எழுந்து குடிசை வாசலுக்கு வந்தான்.செந்தாமரை நிதானமா “அம்மா,அப்பா என்னை மன்னிச்சிடுங்க.நான் எவனோடவும் ஓடிப் போகலே.கல்யாணமும் கட்டிக் கிட்டு இங்கே வரலேம்மா. இந்த குடிசையை விட்டு எப்படி போனேனோ அப்படியே வந்து இருக்கேன்ம்மா.நான் சொல்றதே கொஞ்சம் கேளும்மா.நான் உள்ளே கொஞ்சம் வரட்டுமாம்மா.நான் உனக்கு எல்லா சமாசாரமும் விவரமா சொல்றேன்” என்று சொல்லி மறுபடியும் அவர்கள் கால்களை தொட குனிந்தாள். தேவி ஒன்னும் சொல்லாம குடிசைக்கு உள்ளே போனாள்.ராஜ் மட்டும் ”வாம்மா செந்தாமு.வா நீ குடிசைக்கு உள்ளே வந்து எல்லா சமாசாரமும் விவரமா சொல்லு”என்று சொல்லி செந்தாமரையை குடிசைக்குள் ளே அழைத்துக் கொண்டுப் போனார்.செந்தாமரை மெதுவாக “அம்மா,நான் இப்போ நுங்கம்பாக்கம் உயர் நிலை பள்ளிக் கூடத்திலே ஒரு கணக்கு வாத்தியாரா வேலை செஞ்சு வறேம்மா. மூனு மாசம் முன்னாலெ தான் நான் அந்த கணக்கு வாத்தியார் வேலைக்கு சேர்ந்தேம்மா.எனக்கு இப்போ மாச த்துக்கு இருபத்தி ஐஞ்சு ஆயிரம் ரூபா சம்பளம் தறாங்கம்மா” என்று சொல்லிக் கொண்டு இருக்கு போது கமலா கொஞ்சம் ‘டீத்’ துள் வாங்கிப் போக தேவி குடிசைக்கு வந்தாள்.செந்தாமரையைப் பார்த்ததும் கமலா ”யார் இது,நம்ம செந்தாமுவா.அடையாளமே தெரியாம நல்ல மள,மளன்னு வளந்து இருக்கியே” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.“வா,அக்கா நீ சரியான நேரத்திலே வந்து இருக்கே. நான் உன் தங்கை செந்தாமு தான்”என்று சொல்லி கமலாவைக் கட்டிக் கொண்டாள்.உடனே தேவி “என்ன நீ மாசத்துக்கு இருபத்தி அஞ்சு ஆயிரம் ரூபாய் சம்பாதிச்சு வறயா” என்று கேட்டதும் “ஆமா ம்மா.நான் பொய் சொல்லலேம்மா.நிஜமாத் தாம்மா சொல்றேன்” என்று சொன்னதும் தேவிக்கு செந்தா மரையின் மேல் இருந்த கோவம் கொஞ்சம் குறைந்தது.
செந்தாமரை தன் அம்மாவை பார்த்து “அம்மா,ஆயா இறந்துப் போயிட்டாங்களாம்மா.ஆயா போட்டோ சுவத்திலே மாட்டி ஒரு மாலையும் போட்டு இருக்கேம்மா” என்று கண்களில் கண்ணீர் மல்க கேட்டாள். உடனே காளி “அந்த சோகக் ககதையை ஏன் கேக்கறே செந்தாமு.ஆயா நல்லாத் தான் இருந்தாங்க.அவங்க கடைக்குப் போய்க் கிட்டு இருந்தப்ப எவனோ ஒரு கிறுக்குப் பய ஆயா மேலே மோதிட்டாம்மா.ஆயாவுக்கு தலையிலே பலத்த அடிப்பட்டுச்சும்மா.அவங்களை உடனே ஆஸ்பத்தி ரியிலே சேர்த்து வைத்தியம் பண்ணினோம்.ஆனா ஆயா கண்ணை முழிக்காமலேயே இறந்துப் போயி ட்டாமா”என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கன்ணீரைத் துடைத்துக் கொண்டான். அப்புறமா செந்தாமரை தான் வாங்கி வந்த பூப் பொட்டலத்தை அம்மாவிடம் கொடுத்து “அம்மா,நீயும் அக்காவும் உங்க தலையிலே இந்த பூவை நிறைய வச்சுக்குங்க.இந்த ‘ஸ்வீட்’ டப்பா விலே நிறைய ஜிலேபியும், இந்த பாக்கெட்டிலே நிறைய முறுக்கும்,பக்கோடாவும் வாங்கி வந்து இருக்கேன்ம்மா” என்று சொல்லி தான் வாங்கி வந்த ‘ஸ்வீட்’ பாகெட்டையும்,பலகார பாக்கெட்டையும் பிரித்தாள் இதை பார்த்துக் கொண்டு இருந்த கமலா “இரு செந்தாமு.நான் என் குடிசைக்குப் போய் என் பிள்ளைங்களே அழைச்சுக் கிட்டு குடிசையை பூட்டி விட்டு இங்கு வாரேன்” என்று சொல்லி விட்டு ஓடினாள்.செந்தாமரை பிரித்த ‘ஸ்வீட்’ பாக்கெட்டில் இருந்து ரெண்டு ஜிலேபியை எடுத்து அம்மா கையிலேயும்,அப்பா கையி லேயும்,கொடுத்தாள்.தன் குடிசைக்கு ஓடிப் போன கமலா தன் பெண் குழந்தைங்களைப் பாத்து “ஓடியாங்க.பத்து வருஷத்துக்கு முன்னாடி ஓடிப் போன உங்க சித்தி செந்தாமரை இப்போ திரும்பி வந்து இருக்காங்க.வாங்க, வாங்க.நீங்க அவளைப் பத்தி அடிக்கடி கேட்டுக்கிட்டு இருப்பீங்களே. அவங்க இப்போ வந்து இருக்கா” என்று அவசரப்படுத்தினாள்.உடனே ராணியும் செல்வியும் “அப்படி யாம்மா, அவங்க எப்படி இருப்பாங்கம்மா.இப்போ என்ன செஞ்சிக் கிட்டு இருக்காங்கம்மா. அவங்க ளுக்கு கல்லாணம் ஆடிடுச்சா ம்மா” என்று கேள்வி மேலே கேள்வி கேட்டு துளைத்தார்கள். உடனே கமலா ”அதெல்லாம் நீங்க ரெண்டு பேரும் உங்க சித்தி கிட்டேயே கேளுங்க.இப்ப முதல்லே கிளம்பு ங்க” என்று சொல்லி விட்டு ரெண்டு பேரையும் அழைச்சுக் கிட்டு அவ குடிசை கதவைப் பூட்டிக் கொண்டு அம்மா குடிசைக்கு ஓடினாள்.அம்மா குடிசைக்கு வந்ததும் கமலா செந்தாமரையைக் காட்டி “இவங்க தான் உன் சித்தி செந்தாமரை” என்று சொன்னதும் ராணி செந்தாமரையைப் பார்த்து “சித்தி, சித்தி நீங்க தான் எங்க சித்தியா.நீங்க இவ்வளவு கலரா,ரொம்ப அழகா இருக்கீங்களே” என்று சொன் னதும் செந்தாமரை கண்களில் கண்ணீர் சுரந்தது.”நான் இனிமே எங்கேயும் போகமாட்டேன். உங்க கூடவே தாம்மா இருந்து வருவேம்மா” என்று சொல்லி ராணீயையும் செல்வியையும் க் கட்டிக் கொண் டாள் செந்தாமரை.எல்லோரும் ஸ்வீட்டையும் பலகாரத்தையும் சாப்பிட்டார்கள்.
செந்தாமரை ”அம்மா இப்போ என் கதை எல்லாத்தையும் நிதானமா சொல்றேம்மா.உனக்கு ஞாபகம் இருக்கும்.நான் என்னோடு படித்த சுமதி என்கிற பொண்ணுக்கு ‘டியூஷன்’ எடுத்து வந்தேன் இல்லையா.என் பத்தாவது ‘ரிஸ்ல்ட்’ வந்ததும் நான் அவங்க பங்களாவுக்குப் போனேம்மா.அப்போ அவங்க வீட்டுக்கு சுமதியின் மாமாவும் மாமியும் மதுரையிலே இருந்து வந்து இருந்தாங்க.அந்த மாமா மதுரை பல்கலை கழகத்திலே ஒரு பெரிய கணக்கு ‘ப்ரப்சர்ம்மா.அவர் என்னைப் பாத்து கணக்கிலே நிறைய கேள்விங்க கேட்டாரும்மா.நான் அவர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சரியா பதில் சொல்ல வே அவர் என்னைப் பார்த்து ‘செந்தாமரை,நீ என்னோடு மதுரைக்கு வறயா.நான் உன்னை நல்லா படிக்க வச்சு கணக்கிலே ஒரு பட்டதாரி ஆக்க ஆசைப் படறேன்’ன்னு கேட்டரும்மா.எனக்கும் அவர் கூடப் போய் அவங்க காலேஜிலே படிச்சு ஒரு கணக்கு பட்டதாரியா ரொம்ப ஆசையா இருந்திச்சிம்மா. அதனால்லே உங்க கிட்டே எல்லாம் சொல்லிக் கொள்ளாம நான் அவங்க கூட மதுரைக்குப் போயிட் டேம்மா.அவர் தயவாலேநான் அவங்க வீட்டீலெ தங்கி பன்னாடாவதிலே சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா ‘மார்க்’ வாங்கி ‘பாஸ்’பண்ணினேம்மா.அவர் ரொம்ப சந்தோஷப் பட்டாரம்மா.நான் இந்த மாதிரி சென்னை மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்னு தெரிஞ் சதும் அந்த காலேஜ் ‘பிரின்ஸிபால்’ எனக்கு B.Sc. கணக்கு படிச்சு வர ஒரு ‘சீட்’ குடுத்து இலவசமா படிச்சு வர சொன்னாரும்மா.இந்த சமயத்திலே என்னைப் பத்தி கேள்விபட்டு சுந்தரம் கம்பனி ‘மானே ஜிங்க டைரக்டர்’ எனக்கு வருஷத்துக்கு இருபத்தி ஐஞ்சு ரூபாய் ‘ஸ்காலர்ஷிப்’ கொடுத்தாங்க.அந்த காலேஜ் ‘ஹாஸ்டலிலே’ இருந்து வந்து,நான் கஷ்டப் பட்டு B.Sc. கணக்கு படிப்பிலே முதல் மாணவி யா ‘பாஸ்’ பண்ணினேம்மா.அந்த கம்பனி மறுபடியும் எனக்கு வருஷத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் குடுத்து இன்னும் மேலே படிக்க வச்சாங்க.நான் M.Sc.கணக்கு பட்டம் படிச்சு இதிலேயும் சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணேம்மா.அந்த கம்பனி மேலதிகாரி எனக்கு அவங்க கம்பனியிலே ஒரு பெரிய வேலைப் போட்டுத் தறேன்ன்னு சொல்லி,என்னை அந்த கம்பனியிலே சேரச் சொன்னாங்கம்மா. ஆனா நான் அந்த மாதிரி வேலையிலே சேர எனக்குஇஷ்டம் இல்லே.நான் அவர் கிட்டே ‘நான் சென்னைக்குப் போய் ஒரு கணக்கு வாத்தியாரா வேலைக்கு சேர்ந்து நிறைய ஏழை குடிசைப் பிள்ளை ங்களுக்கு கணக்கு சொல்லிக் குடுத்து அவங்க வாழக்கை தரத்தை உயர்த்த ரொம்ப ஆசை படறேங்க’ ன்னு சொன்னதும் அவர் என்னை ரொம்ப புகழந்து,ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினாரும்மா.இந்த சமயம் பாத்து சுமதிக்கு நிச்சியதார்த்தம் வரவே நாங்க எல்லோரும் சென்னை க்கு வந்தோம்மா.நான் சென்னைக்கு வந்ததும் என்னுடைய பழைய கணக்கு வாத்தியாரைப் பாத்து அந்த நுங்கம்பாக்கம் பள்ளிகூடத்திலே, எனக்கு ஒரு கணக்கு வாத்தியார் வேலை வாங்கி கொடுக்க சொன்னேமா.அவர் உடனே எனக்கு ஒரு கணக்கு வாத்தியார் வேலை கொடுத்து இருக்காரு.எனக்கு இந்த கணக்கு வாத்தியார் வேலைக்கு சம்பளம் இருபத்தி ஐஞ்சு ஆயிரம் ரூபாய்மா” என்று ஒன்னு விடாம மூச்சு முட்ட முட்ட சொன்னாள்.