சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 6,236 
 
 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3

அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்கு வந்த ராஜ்ஜைப் பார்த்து அங்கு இருந்த டாக்டர் “உங்க அப்பா உடம்பு ரொம்ப மோசம் ஆகி,இப்ப தான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் அவர் இறந்துப் போயி ட்டார்ங்க ரொம்ப சாரிங்க.எங்களால் அவரை காப்பாத்த முடியலீங்க”ப் என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார்.டாக்டர் சொன்னதைக் கேட்ட ராஜ்ஜுக்கும் ரத்தினத்துக்கும் தூக்கி வாரிப் போட்டது. உடனே ”ராஜ்,நம்ம எல்லாரையும் தவிக்க வுட்டுட்டு, இப்படி அநியாயமா போயிட்டாரே,இனிமே நான் என்ன பண்ணுவேன்” என்று சொல்லி தன் தலையில் அடித்து கொண்டு ராஜ்ஜைக் கட்டிக் கொண்டு அழுதாள் ரத்தினம்.ராஜ்ஜும் குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டு இருந்தான்.ரெண்டு குழந்தைகளையும் பள்ளி கூடத்திற்கு அனுப்பி விட்டு ஆஸ்பத்திரிக்கு வந்த தேவி புருஷனும் மாமி யாரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அழுவதைப் பார்த்து திடுக்கிட்டுப் போனாள்.அவளும் கொஞ்ச நேரம் அழுதாள்.பிறகு மாமியாருக்கும் புருஷனுக்கும் ஆறுதல் சொன்னாள்.கொஞ்ச நேரம் ஆனதும் ராஜ் தன் அழுகையை நிறுத்திக் கொண்டு விட்டு மேலே ஆக வேண்டியதைக் கவனிக்க ஆரம்பித்தான்.ஆஸ்பத்திரியில் கேட்டு அவனுடைய அப்பா வைத்திய செலவு என்ன ஆச்சு என்று கேட்டு அந்தப் பணத்தைக் கட்டி விட்டு ‘ரசீதை’ வாங்கிக் கொண்டான் ராஜ்.அம்மாவையும் தேவி யையும் வீட்டுக்குப் போகச் சொல்லி விட்டு அப்பாவின் ‘பாடியை’ ஒரு டாக்ஸியில் ஏற்றிக் கொண்டு மயானத்திற்குப் போய் அடக்கம் பண்ண விட்டு வீட்டுக்கு வந்தான்.

ராஜ் தன் நண்பர்களிடம் கடன் வாங்கிய இருபதாயிரம் ரூபாயை அவர்களுக்குத் திருப்பி தரா மல்,ஆஸ்பத்திரிக்கும்,தன் அப்பா ஈமக் கடன்களுக்கும் செலவுப் பண்ணி விட்டான்.கடன் கொடுத்த நண்பர்கள் பணத்தை திருப்பிக் கேடக ஆரம்பித்தார்கள்.நிறைய கட்டின வீடுகள் விலை போகாதால், ராஜ்ஜுக்கும் அவன் கன்ட்ராகடர் இன்னும் வேலை கொடுப்பதைக் குறைச்சு,வாரத்தில் மூனு நாளை க்குத் தான் வேலைக் கொடுத்து வந்தார்.கடன் தொல்லை அதிகம் ஆனதாலும்,சம்பளம் வருவதும் ரொம்ப குறைஞ்சிப் போனதாலும்,நிறைய நாள் வேலை இல்லாமல் வெறுமனே வீட்டிலே இருந்து வந் ததாலும், ராஜ் அந்த கவலையை எல்லாம் மறக்க அவன் நண்பர்களுடம் குடிக்க ஆரம்பித்தான். சாயங்காலம் ‘ஓவராக’க் குடித்து விட்டு ராஜ் குடிசைக்கு வந்தவன் வந்து வாசலிலேயே மயக்கமாய் விழுந்து விட்டான்.குடிசைக்கு வந்த தன் புருஷன் குடித்து விட்டு வந்து மயக்காமா விழுந்து இருப் பதைப் வருவதைப் பார்த்த தேவிக்குத் தூக்கி வாரிப் போட்டது.அவன் ‘ஷர்ட்’ பாக்கெட்டில் பாதி சிகரெட் பாக்கெட்டும்,ஒரு தீப் பெட்டியும் இருந்ததைப் பார்த்தாள் தேவி.’இவர் எப்போதில் இருந்து குடிக்க ஆரம்பிச்சு இருக்காரு.கூடவே சிகரெட்டும் இப்போ பிடிச்சு வறாரே’ என்று கவலைப் பட்டு ”ஏன்யா,நீ நல்லாதானே இருந்தே இத்தினி நாளா.இப்போ எதுக்காய்யா புதுசா இந்த குடிப்பழக்கமும், சிகரெட் பிடிக்கிற பழக்கமும்.வேணாய்யா.இந்த ரெண்டு பழக்கமும் உன் உடம்பை பாழாக்கி விடும் யா.இந்த ரெண்டு பழக்கமும்” என்று கத்தி விட்டு அவன் முகத்தில் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து ராஜ்ஜை எழுப்பினாள் தேவி.குடிசைக்குள்ளே இருந்து மருமக தேவி கத்துவதைப் கேட்ட ரத்தினம் வெளியே ஓடி வந்துப் பார்த்தாள்.உடனே அவள் “ராஜ்,எப்போப் பிடிச்சுடா உனக்கு இந்தக் குடிப் பழக்கம்.இது வரைக்கும் குடிப் பழக்கம் எல்லாம் இல்லாத நல்லவனாத் தானேடா இருந்து வந்தே. எவ்வளவு சொல்லியும் கேக்காம,உன் அப்பா அந்த பீடியை விடாம பிடிச்சு வந்து, அவர் உடம்பைக் கெடுத்துக் கிட்டு உசிரை வுட்டது உனக்கு மறந்துப் போச்சா ராஜ்.நீயாவது நல்ல மாதிரி இருந்து வந்து வரக்கூடாதாப்பா.உனக்கு ரெண்டு பொட்டைப் பிள்ளைங்க இருக்காங்கடா.நான் ஒருத்தி வேறே இருக்கேண்டா.வேணாம்¡ம்டா இந்த குடிப் பழக்கமும்,சிகரெட் பழக்கமும்.இன்னியோடு இந்த ரெண்டு கெட்ட பழக்கத்தையும் விட்டு விடப்பா” என்று கத்தி விட்டு அவன் பக்கத்தில் வந்து உட்கார் ந்துக் கொண்டாள்.ராஜ் நிந்தானமாக “அம்மா,இப்போ எனக்கு அந்த ‘கன்ட்ராக்டர்’ தினமும் வேலை தரது இல்லே.என் நண்பர்ங்க கிட்டே நான் வாங்கின பணத்தே நான் இன்னும் திருப்பி தரலே.அவங்க கடன் குடுத்த பணத்தே திருப்பித் தர என்னை மிரட்டிக் கிட்டு வராங்க.இதை எல்லாம் நான் மறக்கத் தான் நான் குடிக்க ஆரம்பிச்சு இருக்கேன்”என்று சொன்னான்.உடனே தேவி ”ஏங்க,உங்களுக்கு மூளே வேணாங்க.நீங்க இப்படி குடிக்கிறதாலே,அவங்க கடனை அடைச்சு விட முடியுமாங்க.நீங்க இன்னும் ஏழையா இல்லீங்க ஆகி வறீங்க.ஒழுங்கா வேலைக்கு போய் வந்து வர சம்பள பணத்தை மீத்தி கொஞ்சம் கொஞ்சமாக அவங்க கடனை அடைச்சு வரலாங்க.நீங்க முதல்லே இந்தக் குடிப் பழக்கத்தையும்,சிகரெட் பிடிச்சு வர பழக்கத்தையும் உடனே விடுங்க.எழுந்தா¢ங்க.போய் கை கால் கழுவி விட்டு சாப்பிட வாங்க.போங்க”என்று கத்தினாள் தேவி. இரவு பூராவும் தன் புருஷன் இப்படி குடிக்கும் பழக்கத்தையும்,சிகரெட் பிடிச்சிவரதையும் நினைச்சு வருத்தப் பட்டுக் கொண்டே படுத்துக் கொண்டு இருந்தாள் தேவி.தினமும் வேலைக்குப் போகும் போது தேவி தன் புருஷனைப் பார்த்து “இதோ பார்ய்யா,வேலை முடிஞ்சதும் நேரே குடிசைக்கு வந்து சேரு.இந்த ‘டாஸ் மாக்’ கடைப் பக்கமே நீ போவக்கூடாது தொ¢தாய்யா.இந்த சிகரெட் வாங்கிப் பிடிக்கிற பழக்கத்தையும் விட்டு விடய்யா.நான் சொல்றது உனக்கு புரிதாய்யா”என்று தவறாமல் சொல்லி அனுப்பி வந்தாள். ராஜ்ஜும் அவன் தலை யை ஆட்டி விட்டுப் போவானே ஒழிய,அவன் நண்பர்ங்க ‘கட்டிங்க்’ வாங்கிக் கொடுத்தா குடித்து விட்டுத் தான் குடிசைக்கு வந்துக் கொண்டு இருந்தான் ராஜ். குடிசைக்கு வந்த தும்,தேவியும் ரத்தி னமும் அவனைக் கண்டபடி திட்டுவதை துடைத்து போட்டுக் கொண்டு வந்தான். ‘சரி, இந்த மனுஷ னை இப்ப மாத்தவே முடியாது.வீணா சண்டை தான் போட வேண்டி இருக்கு இந்த மனுஷனோடு’ என்று நினைத்து தேவியும் ரத்தினமும் ராஜ்ஜைத் திட்டுவதை விட்டு விட்டார்கள்.
மூனு வருஷங்கள் ஓடி விட்டது.செந்தாமரை மூன்றாவது ‘க்லாஸில்’ படித்து வந்தாள்.அவள் ‘க்லாசில்’ எல்லா பாடங்களிலும் முதல் மார்க் வாங்கி மிகவும் நன்றாகப் படித்து வந்தாள்.அவளுக்கு அவள் ‘க்லாஸ்’ வாத்தியார் ஒரு தடவை சொல்லிக் கொடுக்கும் போதே அவள் அதை மிக நன்றாக புரிந்துக் கொண்டு வந்து அதை மறக்காமல் ஞாபகத்தில் வைத்து வந்தாள்.கணக்குகள் போடுவது அவளுக்கு ரொம்பப் பிடித்து இருந்தது.கணக்கில் எப்போதும் அவள் நூத்துக்கு நூறு வாங்கி வந்தாள்.செந்தாமரையை அவள் பள்ளிக்கூடத்தில் எல்லா வாத்தியாருக்கும் ரொம்பப் பிடித்து வந்தது.ஆனால் கமலாவுக்கோ படிப்பிலே கொஞ்சம் கூட படிப்பிலே ஈடு பாடே இல்லை.பள்ளிக்குடம் போகிற நேரம் தவிர மத்த நேரங்களில் அவள் அந்த குடிசை பகுதியில் இருக்கும் அவ வயசு பெண் களுடம் பாண்டி, நொண்டி, பல்லாங்குழி, கோலி குண்டு, ஆடு புலி ஆட்டம் எல்லாம் ஆடி வந்து தன் பொழுதை சந்தோஷமாக கழித்துக் கொண்டு வந்தாள்.இதை கவனித்த தேவி கமலாவை பல தடவை திட்டியும்,நன்றாக அடித்தும் இருக்கிறாள்.அவ்வளவு அடியும் திட்டும் வாங்கியும் கமலா துளிக்கூட கவலைப் படாமல் அவள் பாட்டுக்கு தன் பாடங்க¨ளை படிக்காமல் விளையாடிக் கொண்டு வந்தாள். குடிசையில் கமலாவுக்கு அவ பாட்டி ரொம்ப செல்லம்.ஒரு நாள் தேவி கமலாவை திட்டுவத்தையும் அடிப்பதையும் பார்த்த ரத்தினம் தேவியைப் பார்த்து ”தேவி,ஏன் நீ அவளை இப்படி அடிக்கடி திட்ட றே அடிக்கறே.அவ பொட்டைப் புள்ளெ தானே.அவ படிச்சு இப்போ என்ன ஒரு கலெக்டர் வேலை க்குப் போவப் போறாளா என்ன.அவளை இப்படி மாட்டை அடிக்கிற மாதிரி எல்லாம் அடிக்காதே. அப்புறம் கமலா உன் அடிக்கும் திட்டலுக்கும் பயந்து அவ எங்காச்சும் ஓடிப் போயிட்டா என்ன பண்றது.விடு அவளை.நீ என் பக்கத்தில் வாம்மா” என்று சிபாரிசு பண்ணி விட்டு கமலாவை தனியாக அழைத்துப் போவாள் ரத்தினம்.

‘செந்தாமரைக்கு இந்த குடிசை வாழ் மக்கள் வாழ்ந்து வரும் விதமும்,அவர்கள் தினமும் சண்டை போட்டு கொள்வதையும்,ஆண்கள் பெண்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதையும், பெண்கள் ஆண்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதையும் மிகவும் வெறுத்து வந்தாள்.‘நம் அப்பாவுக்கு குடிக்கிற பழக்கம் இருக்கு.கூடவே சிகரெட் பிடிக்கும் பழக்கம் வேறே இருக்கு.தாத்தா இப்படித் தான் பீடியைக் குடிச்சி,குடிச்சி,அவர் தொண்டைக் குழாய்,நெஞ்சு எல்லாம் புண்ணாகி இறந்துப் போனார். நம் அப்பாவுக்கு உடம்பு கெடாமல் இருக்க வேண்டுமே’ என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டாள் செந்தாமரை.‘கடவுளே என்னை ஏன் இந்த குடிசைப் பகுதியில் பிறக்க வச்சே.ஒரு நல்ல இடத்தில் என்னைப் பிறக்க வச்சு இருக்கக் கூடாதா.என்னால் இவர்கள் பேசி வரும் கெட்ட வார்த்தைகளை காது கொண்டு கேட்க முடியலையே.எங்க அப்பா உடம்பு கெட்டுப் போகாமல் இருக்க வேணுமே’ என்று தினமும் குடிசையில் மாட்டி இருந்த விநாயக கடவுள் படத்தின் முன்னால் நின்று கொண்டு வேண்டிக் கொண்டாள் செந்தாமரை.

ஆடி தை வெள்ளிகிழமைகள் வந்து விட்டால் போதும்.பக்கத்துத் தெருவில் இருக்கும் மாரி அம்மனுக்கு ‘பொங்கல் படைகிறோம்’, ‘கூழ் ஊத்தறோம்’ என்று அந்த குடிசை வாழ் ஆண்களும் பெண்களும் பெரிய பெரிய பந்தல் போட்டு,நிறைய ‘ஸ்பீக்கர்கள்’ எல்லாம் வைத்து, எல்.ஆர். ஈஸ்வா¢ பாடின மாரி அம்மன் பாட்டுகளையும்.நடு, நடுவே TMS பாட்டுகளையும்,சீர்காழி கோவிந்தராஜன் பாட்டுகளையும் நாள் பூரா ஒலி பரப்பி வருவதும், புதுப் புடவைகள் கட்டிக் கொண்டு பொங்கல் செய்து படைப்பதும்,கூழ் ஊத்துவதுமாக தங்கள் பொண்ணான பொழுதை வீணடித்து வருவதையும் பார்த்து மனது வேதனைப் படுவாள் செந்தாமரை.’இவங்களே ‘அன்னாடங்காச்சி’ வாழ்க்கை வாழ்ந்து வறாங்க. வேலைக்குப் போனா தான் இவங்களுக்கு சம்பளம் வரும்.குடிசையில் அடுப்பு புகையும்.இந்த அழகில் இந்த ஆண்கள் வேலைக்குப் போவாம,அந்த ஒரு நாள் சம்பளமும் அவங்க கைக்கு வராம இருக்கும் போது,ஏன் இப்படி ஊர் பூரா பணம் திரட்டி,போதாதுக்கு கடனும் வாங்கி வந்து இந்த மாதிரியா ஆடம் பரமா பண்டிகைகளை கொண்டாடி வரணும்.இது எல்லாம் இந்த குடிசை வாழ் மக்களுக்கு வேணுமா. அவங்களுக்கு வரும் தினக் கூலியிலே கொஞ்சம் மீதம் பிடிச்சு வந்து அவங்களுக்கு வேலை இல் லாத போது அந்தப் பணத்தை செலவு பண்ணி வந்து கஷ்டப் படாம இருந்து வரக் கூடாதா’ என்று நினைத்து மிகவும் வருந்துவாள் செந்தாமரை.ஏதாவது ஒரு குடிசையில் வாழ்ந்து வரும் ஒரு பெண் ‘வயதுக்கு’ வந்து விட்டால் போதும்.அந்த குடிசை வாழ் மக்கள் உடனே ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்கிற போ¢லே. வயசு வந்த பெண்ணுக்கும், வீட்டில் இருந்து வரும் மற்ற எல்லோருக்கும் புது துணி மணிகள் வாங்கி வந்து,அவங்க குடிசையின் முன்பு பெரிய பந்தல் போட்டு அந்த தெருவில் இருக்கும் எல்லோருக்கும்,உறவினர்கள் எல்லோருக்கும் ‘செய்தி’ சொல்லி அனுப்பி விட்டு, ஒரு பெரிய கடா ஆட்டை வாங்கி,அதை வெட்டி, ஒரு பெரிய அலுமினிய பாத்திரத்தில் பிரியாணி செஞ்சு,அதை எல்லோருக்கும் பெரிய வாழை இலையில் பறிமாறி சாப்பிடச் சொல்லி,கூடவே நிறைய ‘குடிகளையும்’ குடுத்து குடிக்கச் சொல்லி கொண்டாடி வருவதை பார்த்து வேதனைப் படுவாள் செந்தாமரை.. பதிலு க்கு அவர்களும் ‘வயசுக்கு அந்தப் பொண்ணுக்கு’ நிறைய பா¢சுகளும் வாங்கித் தருவதைப் பார்த்து இருக்கிறாள் செந்தாமரை.இவர்கள் வாழக்கையே தினப் படி வரும் வருவாயில் தானே இருக்குது. .அக்கம் பக்கத்தில் இருப்பவங்க இந்த மாதிரி விழா கொண்டாடினால் பாவம் அன்று வேலைக்குப் போகாமல் ‘மா¢யாதைக்காக’ விழா நடக்கும் வீட்டிற்கு வந்து கலந்துக் கொள்றாங்களே.இதனால் அவர்களுக்கு அந்த ஒரு நாள் சம்பளமும் இல்லாமல் போவுது.இவங்க வாழ்க்கையில் அதிகமான சேமிப்பும் கிடையாது. இப்படி இருக்கும் போது ‘உடல் ரீதியாக’ மாறி வரும் ஒரு பெண்ணின் உடலைப் பற்றின செய்தியை ஊர் பூரா சொல்லி இவ்வளவு பணம் செலவழிச்சு ‘தம்பட்டம்’ அடிக்க வேணுமா.இவ்வளவு செலவு பண்ணி சாப்பாடு எல்லாம் போட வேணுமா.ஒரு ஆண் பிள்ளையும் தான் அவன் தன் ‘வயது’ ஆனால் வயசுக்கு வந்து விடுகிறான்.இதை அவர்கள் யாரும் இந்த மாதிரி ஊரைக் கூட்டி தமபட்டம் அடிச்சு கொண்டாடுவதே இல்லயே.பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த கோலா கலம்.இவங்க இந்த ‘மஞ்சள் நீராட்டு விழாவை’க் கொண்டாம இருக்க கூடாதா.அவங்களுக்கு வீண் செலவு இல்லாம இருக்குமே’என்று நினைச்சு மிகவும் கவலைப்படுவாள்..

மருமக கொடுமை தாங்காம மூனாவது குடிசையிலே வாழ்ந்து வந்த ஒரு நாள் அந்தக் கிழவி இறந்து விட்டாள்.உடனே அந்தக் கிழவியின் பையன் ஒரு பெரிய பந்தல் போட்டு,தாரை தம்பட்டம் எல்லாம் ஏற்பாடு செஞ்சி,நிறைய பூமாலைகள் எல்லாம் அந்தக் கிழவிக்குப் போட்டு,நிறைய ஊது வத்திகள் எல்லாம் கொளுத்தி வைத்து,பெரிய ஒரு வண்டியை ஏற்பாடு பண்ணி அதை பூராவும் பூவால் அலங்காரம் பண்ணி அவள் ‘இறுதி பிரயாணத்தை’, நிறைய பட்டாஸ் எல்லாம் வெடிச்சு மயா னம் போகும் வரை வழி எல்லாம் நிறைய பூவாய் இறைச்சு,டப்பாங்குத்து ஆட ஆட்களை ஏற்பாடு பண்னி அவங்க குடிக்க நிறைய பணம் குடுத்து,அவங்களை வழி நெடுக ஆடச் சொல்லி, அந்தக் கிழவியையை அடக்கம் பண்ணி விட்டு வறான் அந்த அருமைப் பிள்ளை.ஆனா அந்தக் கிழவி உயிரோடு இருந்தப்போ வாசலில் வரும் டீக்கார பாயிடம் மூனு ரூபய் கொடுத்து ஒரு ‘சிங்கள் டீ’ வாங்கிக் கொடுக்க அவளுக்கு அவன் பணம் தாரமல் வாட்டி வந்தான் அந்த அருமை பிள்ளை. இப்போ அம்மா இறந்துப் போன பிறகு ஏன் இவ்வளவு ஆடம்பரமான தாரை, தம்பட்டம், பூமாலை கள்,பட்டாஸ்,டப்பாங்குத்து ஆடும் ஆட்களுக்குக் குடிக்க குடி,மயானம் வரை விடாமல் ஆடிய அவர்க ளுக்கு பணம்,போன்ற அநாவசியமான வீண் செலவுகள் எல்லாம் பண்ணினான் அந்த அருமந்தப் பையன்.இதனால் இறந்து போன கிழவிக்கு என்ன லாபம்.அவ உயிரோடு இருந்த போது அவளை பட்டினியால் வாட வச்சு விட்டு அவ, இறந்துப் போன பிறகு செலவு செஞ்சா அவ சந்தோஷப் படப் போறா¡ளா என்ன.இதை ஏன் அந்தக் கிழவியின் பிள்ளை உணராமல் இப்படி பணத்தை வீணடிக் கிறானே.இதை ஏன் அந்தக் கிழவியின் பிள்ளை இதை யோஜனை பண்ணக் கூடாது.இதை எல்லாம் பார்க்கும் போது மொத்தத்தில் செந்தாமரைக்கு அந்த குடிசை பகுதி செய்யும் எந்தக் காரியமும் சரி என்றே படவில்லை.அந்த குடிசை வாழ் பகுதி மக்கள் ஏன் இன்னும் யோஜனை பண்ணி,குடிப் பழக்கம்,புகை பிடிக்கும் பழக்கம்,கெட்ட வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி வரும் வழக்கம்,வீண் செலவு பண்ணாமல் இருந்து அவர்களுக்கு வரும் தினக் கூலியை வகையாக செலவு செய்து, கொஞ்சம் மீதம் பண்ணி வந்துக் கொண்டு அவர்கள் வயிற்றில் பிறந்த குழந்தைகளை இன்னும் நன் றாகப் படித்து நல்ல குடிமக்களாக வாழ்ந்து வரச் செய்யக் கூடாது என்று எண்ணி வருந்துவாள். மொத்தத்தில் செந்தாமரை ஒரு ‘சீர்திருத்தவாதி’ போல் எண்ணங்களிலும் செயலிலும் இருந்துக் கொண்டு வந்தாள்.‘ தான் நன்றாக படித்து வந்து ஒரு நல்ல வேலையில் சேர வேண்டும்’ என்று தினமும் விநாயகப் பெருமானை வேண்டி வந்தாள்.அப்படி அவள் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து அதில் வரும் சமபளத்தில், இந்த குடிசை வாழ் மக்களுக்கு பல நல்லது எல்லாம் பண்ண வேண்டும், அவங்க வாழக்கையை இன்னும் வளம்பட செய்ய வேண்டும்’ என்றும் மிகவும் ஆசைப்பட்டாள் செந் தாமரை.

மணி நாலடித்ததும் அருகே இருந்த கார்ப்பரேஷன் பள்ளிகூடத்தில் சாயர¨க்ஷ நீண்ட மணி அடித்தார்கள்.அங்கு படிக்கும் பையன்களும் பெண்களும் தங்கள் வகுப்பறையை விட்டு கூச்சல் போட்டு கொண்டு வெளியே ஓடி வந்தார்கள்.சில பையன்களும்,பெண்களும் தங்கள் பள்ளிகூட பையை பார்க் பென்ச்சில் போட்டு விட்டு சறுக்கு மரம், ஊஞ்சல், பார், இவைகளில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.பாதி ஊஞ்சல் ஆடிக் கிட்டு இருக்கும் போது செந்தாமரை ஊஞ்சலை விட்டு கீழே இறங்கினாள்.செந்தாமரை ஊஞ்சலை விட்டு கீழே இறங்கினதை பார்த்த அவ தோழி ராணீ “ஏன் செந்தாமு,இவ்வளவு சீக்கிரமா ஊஞ்சலை விட்டு கீழே இறங்கிட்டே.இன்னும் கொஞ்ச நேரம் ஆட லாம், போவாதே இரு,இரு”என்று குரல் கொடுத்தாள்.“இல்லே ராணீ,எங்க கணக்கு வாத்தியார் நிறைய கணக்குங்க வூட்லே போட குடுத்து இருக்காரு.நான் சீக்கிரமா வூட்டுக்குப் போய் வெளிச்சம் இருக்கும் போதே,அந்த கணக்குக்ளை எல்லாம் போட்டு முடிக்கணும்” என்று ராணிக்குச் சொல்லி விட்டு, அவ பதிலுக்குக் கூட காத்து இல்லாம,தன் பள்ளிக்கூட பையை எடுத்து கொண்டு பார்க்கை விட்டு தன் குடிசைக்கு ஓடினாள் செந்தாமரை.வீட்டுக்கு வந்து வாசலிலேயே பையை வச்சுக் கிட்டு தன் பள்ளிக்கூடப் பையை திறந்து கணக்கு புஸ்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு கணக்கு வாத்தியார் கொடுத்த “ஹோம் வர்க்கை’ போட்டுக் கொண்டு இருந்தாள் செந்தாமரை.

வேலைக்கு போன தேவி உடம்பு ரொம்ப முடியாம இருக்கவே,அவ மேஸ்திரி கிட்டே “மேஸ் திரி என் உடம்பு கொஞ்சம் முடியாம இருக்குங்க.நான் இப்போ வூட்டுக்குப் போவணும்” என்று சொன் னவுடன் அவர் “சரி,இப்போ போய் வா.இந்த மாதிரி அடிக்கடி நீ கேக்கக் கூடாது புரிதா.இன்னும் எவ் வளவு வேலை பாக்கி இருக்குது பாத்தியா” என்று கொஞ்சம் கடுமையாகச் சொன்னார்.தேவி ”சரிங்க. இனிமே நான் அடிக்கடி இப்படி போவ மாட்டேங்க” என்று சொல்லி விட்டு தன் குடிசைக்கு வந்தாள். வாசலில் மாமியார் உட்கார்ந்துக் கொண்டு முறத்தில் அரிசியைப் புடைத்துக் கொண்டு இருந்தாள். மருமக தேவி வேலையில் இருந்து சீக்கிரமா குடிசைக்கு வருவதைப் பார்த்த ரத்தினத்துக்கு ஆச்சரி யமாக இருந்தது.குடிசைக்குள்ளே போன வந்த தேவி உடனே ஒரு பாயை போட்டுக் கொண்டு படுத்து விட்டாள்.வேலையை விட்டு வீட்டுக்கு வந்த மருமக தேவி பாயைப் போட்டு படுத்துக் கிட்டு இருப்பதைப் பார்த்த ரத்தினம் “என்ன தேவி,வேலையில் வந்ததும்,வராததும், பாயைப் போட்டுக் கிட்டு படுத்திட்டே.உன் உடம்பு ஏதாச்சும் சரி இல்லையா”என்று சொல்லிக் கொண்டே வந்து தேவி யின் நெத்தியைத் தொட்டுப் பார்த்தாள் ரத்தினம்.உடனே தேவி தன் அத்தையைப் பார்த்து “உடம்பு ஒன்னும் இல்லே அத்தே.எனக்கு அடி வயித்தை வலிக்க ஆரம்பிச்சு இருக்கு.வலி ரொம்ப அதிகமா இருந்திச்சு.அதான் நான் என் மேஸ்திரி கிட்டே சொல்லிட்டு வூட்டுக்கு வந்தேன்.இப்போ வலி கொஞ்சம் குறைஞ்சா மாதிரி இருக்குது அத்தே” என்று சொல்லி விட்டு மெல்ல எழுந்து உட்கார ஆரம் பித்தாள் தேவி.“அவசரப் படாதே தேவி.உன் அடி வயித்தை வலிச்சா அது ‘அந்த’ வலி அந்த தான்.ஜாக்கிறதையா குந்து.ராஜ் வேலையில் இருந்து வரட்டும்.உன்னை சீக்கிரமா கார்பரேஷன் ஆஸ் பத்திரிக்கு இட்டுக் கிட்டு போவச் சொல்றேன்” என்று சொல்லி விட்டு தேவியை மெல்ல பிடித்து உட்கார வைத்தாள் ரத்தினம்.“போன தடவை நான் டாக்டர் கிட்டே போன போது,அவர் இந்த மாச கடைசியிலே தான் பிரசவம் ஆவும்ன்னு சொன்னாரே அத்தே.இப்ப எப்படி அத்தே இவ்வளவு சீக்கி ரமா குழந்தை பொறக்கும்” என்று சொல்லி விட்டு முனகிக்கொண்டு மெல்ல எழுது உட்கார முயற்சி பன்ணினாள் தேவி.ஒரு சினிமா பாட்டை வாயில் முணு முணுத்துக் கொண்டே குடிசைக்கு வந்தான் ராஜ்.கையில் ஒரு ‘குவார்ட்டர்’ பாட்டிலுடன் வந்த ராஜ்,வாசலில் உட்கார்ந்துக் கொண்டு செந்தாமரை இருந்து ஏதோ எழுதிக் கிட்டு இருந்ததைப் பார்த்த ராஜ்ஜுக்கு யாராவது இப்படி புஸ்தகங்க¨ளைப் பிரிச்சு வச்சு படிச்சுக் கிட்டு இருந்தாங்கன்னா பிடிக்கவே பிடிக்காது.

“ஏய்,செந்தாமரே,என்னடி பெரிய கலெக்டர் படிப்பு படிக்கிறே.இங்கே எழுந்து வாடீ.இந்த தெரு முனைக்குப் போய் நாலு மசால் வடை வாங்கிக் கிட்டு சீக்கிரமா ஓடி வா.’போனேன்’ ‘வந்தேன்’னு ஓடி யாரணும்” என்று குடித்து விட்டு வந்த ராஜ் கத்தினான்.வீட்டு கணக்குகளை போட்டுக் கொண்டு இருந்த செந்தாமரை புஸ்தகங்களை எல்லாம் ஓரமா எடுத்து வைத்து விட்டு அப்பா கொடுத்த பணத் தை வாங்கிக் கொண்டு கடைக்கு தெரு முனையில் இருக்கும் மசால் வடை போடும் கடைக்கு ஓடி னாள்.‘அப்பா சொன்னவுடன் அவ போவலேன்னா,காலாலே இரண்டு உதை கொடுப்பாரு” என்று அவளுக்கு நன்றாகத் தொ¢யும்.ராஜ் குரல் கேக்கவே ரத்தினம் குடிசைக்கு வெளியே ஓடி வந்து ராஜ்ஜைப் பார்த்ததும் ரத்தினம் “வாடா சரியான நேரத்திலெ தான் நீ வந்து இருக்கே.தேவிக்கு அடி வவுத்தை ரொம்ப வலிக்குதாம்.சீக்கிரமா அவளை ஆஸ்பத்திரிக்கு இட்டுக் கிட்டு போடா” என்று கத்தினாள்.செந்தமரை ஓடிப் போய் கோடியிலே இருக்கிற குடிசை கடைக்குப் போய் நாலு மசால் வடைகளை வாங்கிக் கொண்டு குடிசைக்குள் நுழைந்தாள்.ராஜ்ஜுக்கு அவன் அம்மா சொன்னது கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை.‘நாம குடிசைக்கு வந்து நிதானமா மசால் வடையை தின்னுக் கிட்டு நாம வாங்கி வந்த ‘குவார்ட்டரை’ ரசிச்சு ஆசையா குடிக்கலாம் என்று நினைச்சு வூட்டுக்கு வந்தா,இந்த அம்மா இப்படி நம்மை தேவியை இட்டுக் கிட்டு ஆஸ்பத்திரிக்கு போகச் சொல்றாங்களே’ என்று நினைத்து வருத்தப்பட்டான்.“தேவிக்கு இப்போ எல்லாம் ஒன்னும் குழந்தைப் பொறக்கா தும்மா.இந்த மாசக் கடைசி வரைக்கும் போகும்ன்னு டாக்டர் சொன்னதா தானே தேவி சொன்னாளே ம்மா” என்று வெறுப்புடன் சொன்னான் ராஜ்.“ராஜ்,இந்த மாதிரி சமயத்திலே நாம அஜாக்கிறதையா இருக்ககூடாது.அவளை உடனே ஆஸ்பத்திரிக்கு இட்டுக் கிட்டு போடா” என்று கத்தி சொல்லவே ராஜ் வேறு வழி இல்லாமல் தான் வாங்கி வந்த ‘க்வார்ட்டர்’ பாட்டிலை ஒரு ஓரமா வைத்து விட்டு ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டு தேவியை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனான்.ஆஸ்பத்திரி க்கு போய் தேவியை அங்கே இருந்த டாக்டர் கிட்டே காட்டினான் ராஜ்.அங்கே இருந்த ஒரு ‘லேடி’ டாக்டர் உடனே தேவியை உள்ளே அழைத்துப் போய் பா¢சோதனைப் பண்ணி விட்டு வெளியே வந்து “அவங்களுக்கு,இப்போ‘பிரசவ வலி’ வந்து இருக்குதுங்க.அவங்க¨ளை நாங்க ‘அட்மிட்’ பண்றோ முங்க.நாங்க பெரிய டாக்டருக்கு போன் பண்ணீ உடனே வரச் சொல்றோமுங்க” என்று சொன்னாள். ராஜ் ஆஸ்பத்திரி வாசலில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.கொஞ்ச நேரம் ஆனதும் அவனுக்கு பசி அதிகமாக இருந்த்தினால் அவன் அங்கே இருந்த ஒரு ‘நர்ஸ்’ கிட்டே சொல்லி விட்டு குடிசைக்கு சாப்பிட வந்தான்.கமலாவுக்கும்,செந்தாமரைக்கும்,அவங்க அப்பா அம்மா இல்லாமல் திரும்பி வந்த தை பார்த்ததும் “ஏம்பா, அம்மா எங்கேப்பா.அவங்களுக்குக் குழந்தை பொறந்திச்சாப்பா.குழந்தை நல்லா இருக்காப்பா” என்று கோரஸாக கேட்டார்கள்.ரத்தினமும் ”வா ராஜ்,தேவி எங்கேடா.நீ மட்டும் தனியா வந்து இருக்கே அவ உடம்பு எப்படி இருக்குடா”என்று கலவரத்துடன் கேட்டாள்.உடனே ராஜ் “அம்மா அங்கு இருக்கும் டாக்டர் ‘தேவிக்கு பிரசவ வலி வந்து இருக்குது. நாங்க அவளை ‘அட்மிட்’ பண்ணி விடறோம்.பெரிய டாக்டருக்கு ‘போன்’ பண்ணி உடனே வரச் சொல்றோம்’ன்னு சொன்னா ங்கம்மா.எனக்கு இப்போ ரொம்பப் பசி எடுக்குதும்மா.நான் சாப்பிட்டு விட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் தேவியைப் பாக்கிறேன்.எனக்கு சீக்கிரமா சாப்பாடு போடும்மா” என்று சொல்லிக் கொண்டே தன் கைகளை கழுவிக் கொண்டு தன் தட்டை எடுத்து போட்டுக் கொண்டான்.உடனே ரத்தினம் “அப்படி யா ராஜ்,நான் இதோ சாப்பாடு போடறேன்.நீ சாப்பிட்டு விட்டு ஆஸ்பத்திரி போய் வா” என்று சொல்லி சமைத்து வைத்து இருந்த சாப்பாட்டை ராஜ்ஜுக்கு போட்டாள்.ராஜ் சாப்பிட்டு விட்டு அம்மாவிடம் சொல்லிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிப் போனான்.

ஆஸ்பத்திரிக்கு வந்த ராஜ் அங்கு இருந்த டாக்டரை “பெரிய டாக்டர் வந்து விட்டாங்களாங்க” என்று கேட்டான்.அங்கு இருந்த டாக்டர் “அவங்க ‘செல்’ போன்லே கிடைக்கலீங்க.எப்ப போன் பண் ணாலும் அவங்க போன் ‘ஸ்விச் ஆ·ப்’ பண்ணப் பட்டு இருக்குது’ ன்னு தாங்க பதில் வருதுங்க. அவங்க எங்காச்சும் வெளியில் இருக்காங்க போல இருக்குதுங்க நாங்க அவங்களுக்கு விடாம ‘ட்ரை’ பண்ணிகிட்டே இருக்கோம்க”என்று சொன்னாள்.ராஜ்க்கு கோவம் கோவமாக வந்து.கோவத்துடன் அவன் அங்கே காலியாக இருந்த சோ¢ல் வந்து உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.ஒரு மணி நேரம் கழித்து பெரிய டாக்டர் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.வந்தவுடன் அவர் நேரே உள்ளே பிரசவ அறைக்குள் போனார்.ரெண்டு மணி நேரம் கழித்து வெளியே வந்த அவர் “சாரிங்க,என்னால் உங்க குழந்தையை உயிரோடு எடுக்க முடியவில்லை.குழந்தை அவங்க வயித்திலேயே செத்துப் போய் இருக்குதுங்க” என்று சொல்லி முடிக்கவில்லை ராஜ்ஜ்க்கு இன்னும் ரொம்ப கோவம் கோவமாய் வந்தது.அவன் உட னே ”என் குழந்தை செத்துப் போய் பொறந்ததுக்கு நீங்க தான் காரணம்.நான் என் பெண்ஜாதியை இந்த ஆஸ்பத்திரிக்கு மூனு மணி நேரத்துக்கு முன்னாடியே இட்டுக் கிட்டு வந்தேன்.உங்களுக்கு போன் பண்ணினா, உங்க ‘செல்’ போனிலே ‘ஸ்விச் ஆ·ப்’ பண்ணப் பட்டு இருக்குது’ ன்னு பதில் வந்துக்கிட்டு இருந்தது. நீங்க மட்டும் நான் என் பெண்ஜாதியை நான் ஆஸ்பத்திரியில் சேத்தப்ப உடனே வந்து இருந்தீங்கன்னா என் குழந்தையை நீங்க காப்பாத்தி இருக்கலாம்.நான் இப்போ போலீ ஸ் ஸ்டேஷனுக்குப் போய் நடந்தை எல்லாம் விவரமா சொல்லி உங்களைப் பத்தி புகார் கொடுக்கப் போறேன்”என்று கத்தினான்.ஆஸ்பத்திரியில் இருந்த சிப்பத்திகள் எல்லாம் ஒன்னா கூடிவிட்டார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்னா சேர்ந்துக் கொண்டு ராஜ்ஜைப் பார்த்து “இதோ பாருங்க, எங்க பெரிய டாக்டர் ஒரு தவறும் செய்யலே.உங்க பெண்ஜாதி வயத்திலே இந்தக் குழந்தை சாயங்காலமே செத்துப் போச்சுங்க.எங்க பெரிய டாகடர் வந்து,உங்க சம்சார்த்துக்கு மயக்க மருந்து கொடுத்து அந்தக் குழந் தையை வெளியே எடுத்து உங்க பெண் ஜாதி உயி¢ரைக் காப்பாத்தி இருக்காருங்க.அவங்க மட்டும் இப்போ வராது இருந்தா,இந்நேரம் உங்க பெண்ஜாதி கூட செத்துப் போய் இருப்பாங்க. அவரு இப்போ வந்ததால் தான் உங்க பெண்ஜாதி இப்போ உயிரோடு இருக்காங்க.நீங்க எங்கே வேணுனாமாலும் போய் புகார் குடுங்க.எங்களுக்கு ஒரு பயமும் இல்லே.யாரும் எங்களை ஒன்னும் செய்ய முடியாது” என்று மாறி மாறி கத்திக் கொண்டு ராஜ்ஜைப் பிடித்துத் தள்ளினார்கள்.

ராஜ்ஜுக்கு இன்னும் கோவம் அதிகமாக வந்தது.அவன் உடனே “இருங்க,நான் இப்போ போலீஸ்க்குப் புகார் பண்ணி உங்க பேர்லே ‘என் குழந்தை செத்து போனதுக்கு உங்க பெரிய டாக்டர் தான் பூரா காரணம்’ன்னு சொல்லி ஒரு ‘கேஸ்’ போட சொல்றேன்.அப்போ நீங்க கோர்ட்டுக்கு வந்து பதில் சொல்லுங்க.அப்போ தொ¢யும் இந்த ராஜ் யாருன்னு” என்று கத்தி விட்டு அங்கே வாசலில் நின்றுக் கொண்டு இருந்த ‘வாச்மென்னை’ப் பார்த்து “நீங்க கொஞ்சம் உண்மையே சொல்லுங்க பெரியவரே.நான் என் பெண்ஜாதியை இந்த ஆஸ்பத்திரிக்கு ஆறு மணிக்கு எல்லாம் இட்டாந்தேனா இல்லையா.நான் போலீஸ்லே ‘கேஸ்’ போட்டா நீங்க வந்து சாட்சி எனக்கு சொல்லமுடியுமா பெரிய வரே”என்று கத்தினான்.அந்த ‘வாச்மென்’ பெரியவர் ஆடி போய் விட்டார்.இது என்னடா வம்பு.இவர் என்னமோ ‘போலீஸ் கேஸ்’ன்னு சொல்றாரு.என்னை வந்து சாட்சி சொல்லுங்கன்னு சொல்றாரு. நாம எப்படி நம்ம பெரிய டாக்டருக்கு எதிரே சாட்சி எல்லாம் சொல்றது’ என்று பயந்து போனார்.‘நாம இந்த வம்புலே எல்லாம் மாட்டிக் கொள்ளகூடாது’ என்று நினைத்து அந்த ‘வாச்மென்’ பெரியவர் ராஜ்ஜைப் பார்த்து ”இதோ பாருங்க.நீங்க உங்க பெண் ஜாதியே இந்த ஆஸ்பத்திரிக்கு எப்போ இட்டுக் கிட்டு வந்தீங்கன்னு எனக்கு சரியா தொ¢யாதுங்க.நீங்க இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தப்போ,நான் கேட்டுலேயே இல்லிங்க.ஒரு வேளை நான் ‘டீ’ குடிக்க போய் இருந்து இருப்பேனுங்க” என்று சொன்னதும் ராஜ்ஜு க்கு இன்னும் கோவம் அதிகமாக ஆகியது.அவன் உடனே ”நீங்க எல்லாம் ஒன்னா சேர்ந்துக் கிட்டா நான் பயந்துப் போயிடுவேன்னு நினைச்சிங்களா.இருங்க,உங்களை நான் கோர்ட்டுக்கு இழுத்து உங்க ளை நாற வைக்கறேன்” என்று கத்தி கொண்டே போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட ஆரம்பித்தான் ராஜ்.

உடனே அங்கு இருந்த ஒரு டாக்டர் ”கொஞ்சம் இருங்க.நான் சொல்றதை முழுக்கக் கேட்டு விட்டுப் போங்க.நீங்க எங்கே வேணுமானாலும் போய் புகார் கொடுங்க.நாங்க ஒரு தப்பும் பண்ணலே. ஆனா போவறதற்கு முன்னாலே இதைக் கேட்டுக் கிட்டுப் போங்க.பெரிய டாக்டர் உங்க பெண் ஜாதிக்கு நிறைய மயக்க மருந்துக் குடுத்து விட்டு அப்புறமா ‘அபரேஷன்’ பண்ணி இறந்துப் போன குழந்தையை அவங்க வயித்திலே இருந்து வெளியே எடுத்தாங்க.உங்க சம்சாரம் இப்போ ரொம்ப மயக் கத்திலே இருக்காங்க.அவங்க கண் முழிக்க இன்னும் ஐஞ்சு மணி நேரமாவது ஆகும்.இறந்து போன உங்க குழந்தையை நாங்க ‘மார்ச்சுவா¢யிலே’ வச்சு இருக்கோம்.இப்ப நீங்க வந்தா அங்கு இருக்கிற அதிகாரி,உங்களுக்குக் குழந்தையின் ‘பாடியை’க் கொடுப்பாரு.அவர் ‘டியூட்டி’ ஒன்பது மணிக்கு எல் லாம் முடிஞ்சி விடும்.நீங்க ஒன்பது மணிக்கு மேலே இங்கே வந்தா அவர் வீட்டுக்குப் போய் விடுவார். அப்புறமா நாளைக்கு காத்தாலே ஏழு மணிகுத்தான் அந்த அதிகாரி மறுபடியும் ‘டியூட்டிக்கு’ வருவா ருங்க.அப்புறமாத் தான் நீங்க உங்க குழந்தை ‘பாடியை’ அந்த ‘மார்ச்சுவா¢யில்’ இருந்து வெளியே வாங்க முடியும்.அப்புறமா நாங்க இதை உங்க கிட்டே சொல்லலேன்னு புகார் குடுக்காதீங்க.நாங்க சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம்.அப்புறமா உங்க சௌகா¢யம்”என்று சொன்னாள்.ராஜ் உடனே “என்ன நீங்க என்னை பயமுறுத்த பாக்கிறீங்களா.இப்படி நீங்க சொன்னா நான் பயந்து போய் உடனே செத்துப் போன என் குழந்தை ‘பாடியை’ வாங்கிகிட்டு போயிடுவேன்னு நினைச்சீங்களா.அது தான் என் கிட்டே நடக்காது.நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு புகார் கொடுத்து உங்களை போலீ ஸ்லே மாட்டாம விடமாட்டேன்.என்னை என்ன ‘கேனை’,’இளிச்சவாயன்னு’ நினைச்சீங்களா” என்று கத்தி விட்டு போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஓடினான் ராஜ்.போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன ராஜ் அங்கு இருந்த ‘ஏட்டிடம்’ “நான் அவசரமா இன்ஸ்பெக்டர் ஐயாவை பார்க்கணுங்க” என்று கத்தனான். உடனே அந்த ‘ஏட்’ ”அவர் வெளியே போய் இருக்கார்.வர நேரம் தாங்க இது.என்னங்க விஷயம் சொல்லுங்க”என்று கேட்டார்.‘ இன்ஸ்பெகடர் போலீஸ் ஸ்டேஷனில் இல்லை’ என்று அந்த ‘ஏட்’ சொன்னவுடன் ராஜ்ஜுக்கு ரொம்ப ஏமாற்றமாக இருந்தது.

கொஞ்ச நேரம் இந்த ‘ஏட்’ கிட்டேயே நம்முடைய விஷயத்தை சொல்லலாமா,இவர் நாம குடுக்கற புகாரை ஒரு ‘கேஸாக புக்’ பண்ணிட்டு, உடனே நம் கூட அந்த ஆஸ்பத்திரிக்கு வந்து அந்த பெரிய டாக்டரைப் பார்த்து விசாரிப்பாரா’என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான் ராஜ். அந்த ‘ஏட்’ விடாம ”என்னங்க சமாசாரம் சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.அந்த நேரம் பார்த்து இன்ஸ்பெகடர் தன் மோட்டார் பைக்கிளீல் கீழே இறங்கி மோட்டார் பைக்குக்கு ‘ஸ்டாண்ட்’ போட்டு விட்டு தன் தொப்பியைக் கழட்டி கையில் வைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்.

இன்ஸ்பெக்டரைப் பார்த்ததம் ராஜ்ஜுக்கு போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. இன்ஸ்பெக்டர் தன் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டார்.உடனே ராஜ் அவருக்கு ஒரு பெரிய சலாம் போட்டு விட்டு “சார்,என் பேர் ராஜ்ஜுங்க நான் இங்கே பக்கத்திலே இருக்கிற சேத்துப் பட்டு குடிசை யிலே தாங்க இருந்து வரேன்.இங்கே பக்கத்திலே இருக்கிற ஆஸ்பத்திரியிலே நான் என் பெண் ஜாதியை பிரசவத்திற்கு ஆறு மணிக்கெல்லாம் சேத்தேனுங்க.அப்போ அங்கே சின்ன டாக்டர் தாங்க இருந்தாங்க.அவங்க உடனே என் பெண்ஜாதியை ‘அட்மிட்’ பண்ணி விட்டு என்னைப் பாத்து ‘அவங்களுக்கு இப்போ பிரசவ வலி தான் வந்து இருக்கு.நான் பெரிய டாக்டருக்கு போன் பண்ணி உடனே வர சொல்கிறேன்னு” என்று சொல்லி விட்டு பெரிய டாக்டருக்கு போன் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.எனக்கு ரொம்ப பசியா இருந்திச்சிங்க.நான் பக்கத்திலே இருக்கிற என் குடிசைக்குப் போய் சாப்பிட்டு விட்டு பத்து நிமிஷத்துக்கு எல்லாம் ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டேங்க.அப்போ கூட அங்கே இருந்த சின்ன டாக்டர் பெரிய டாக்டருக்கு போன் பண்ணிக் கிட்டு இருந்தாங்க.பெரிய டாக்டர் போன்லே அவங்க போன் ‘ஸ்விச்ச் ஆ·ப்’ செய்யப்பட்டு இருக்குங்க’ ன்னு பதில் வந்துக் கிட்டெ இருந்துங்க.ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பெரிய டாக்டர் ஆஸ்பத்திரிக்கு வந்து பிரசவ அறைக்குப் போனாருங்க.அவர் உள்ளே போய் ஒரு ரெண்டு மணி நேரத்துக்குள்ளாற வெளியே வந்து ‘சாரிங்க, என்னால் உங்க குழந்தையை உயிரோடு எடுக்க முடியவில்லே.குழந்தை அவங்க வயித்தி லேயே செத்துப் போய் இருக்கு’ ன்னு சொல்லி விட்டாருங்க.அந்த பெரிய டாகடர் ரொம்ப நேரம் கழி ச்சு வந்ததால் தாங்க என் பெண்ஜாதி வயித்திலே அந்தக் குழந்தை செர்த்துப் போய் இருக்கு ங்க.நீங்க உடனே அந்த பெரிய டாக்டர் மேலே ‘என் குழந்தை பெண்ஜாதி வயித்திலேயே செத்து போனதக்கு அந்த பெரிய டாக்டர் தாங்க காரணம் ன்னு’ சொல்லி ஒரு ‘கேஸ்’ புக் பண்ணுங்க” என்று அழுதுக் கொண்டே சொன்னான்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *