அடாது பெய்த பழை ஒரு வாரமாக மாணிக்கத்தை வீட்டிலேயே கட்டிப்போட்டிருக்கிறது.
அன்றாட பிழைப்புக்கு ஓர் இடைக்கால தடை.
அதுக்கு தான் தலை தலையா அடிச்சுக்கிட்டேன். காசு வரும்போது அதுல கொஞ்சம் வங்கியிலே போட்டு வையுங்கன்னு. இப்ப பாருங்க. அவசரம் ஆபத்துக்கு வழியில்லே என்றால் இளவழகி.
கேட்டு கொண்டிருந்த அவர்களுடைய மகள் பொன்மணி எழுந்து சென்று தன் சிறிய தகர பெட்டியை எடுத்து வந்தாள்.
கவலைப்படாதீங்க அம்மா. வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்க கொடுக்குற காசுகளை இதுல போட்டு வச்சிருக்கேன். வேலை கிடைச்சதும் திருப்பி தந்திடனும்.
அதுவும் வட்டியோட என்றாள்.
எண்ணிப் பார்க்கையில் நூறை தாண்டிற்று.
தன் செய்கையால் புத்தி சொன்ன மகளை ஆரத் தழுவிக்கொண்டான் மாணிக்கம்.
– வினோதானந்த் (ஒக்ரோபர் 2010)