கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2024
பார்வையிட்டோர்: 1,474 
 
 

தேவி நேரமாகிறது கிளம்பலாமா? என்றாள் மலர்

இல்லடி … வயிறு வலிக்குது மே பி பிரியட்ஸ்ன் நினைக்கிறேன்.

இன்னிக்கு லீவு சொல்லிடு என்றாள்.

”காதலெனும் தேர்வு எழுதி” செல்போனில் ஒலித்தது. வானில் பறக்கின்ற பறவையாய் மனதில் அவ்வொலி காதை துளைக்க ஒடி சென்று காதில் பொருத்தினாள். அதில் மயனின் குரல் ” கரெக்ட்டா 10மணிக்கு வந்துவிடுவாயா பிரமிஸ் பண்ணின மாதிரி வெளியே போலாம்” என்றான்.

”நான் கிளம்பிட்டே இருக்கிறேன்” என்றாள் தேவி

மலரிடமிருந்து போன் கால் ”உடம்பு பாத்துக்கா நான் கிளம்பறேன் ஏதாவது என்றால் கால் பண்ணு” என்றாள் உயிர்தோழி.

ஆரம்பகால நாட்கள் முதல் மலர் உயிர் தோழியாக இருந்தவள். பள்ளிபருவ காலம் முதல் இருவரும் இணைபிரியா நண்பர்கள். தனியாக தைரியமாக வளர்ந்த பெண் தன் வாழ்க்கையின் முடிவுகளை தானே எடுத்து பழக்கப்பட்டவள். தைரியம் அவளுக்கு அதிகம். தன் உணர்வுகள் எண்ணங்களை மலரிடம் மட்டும் பகிர்ந்து கொண்டவள் தேவி.

மயனிடமிருந்து போன் கால் ”கிளம்பிட்டாயா … இதோ வந்துட்டேன் 2 நிமிடம்” என்றாள்.

மயனின் குடும்பம் பெரிது. அப்பா அம்மா தாத்தா பாட்டி அக்கா அக்காவின் கணவர் குழந்தைகள் உள்ளனர். நான்கு வருடமாக இவர்களின் காதல் தொடர்கிறது.

பைக்கில் மயனின் பின்புறம் அமர்ந்து செல்கையில் வானில் பறப்பது போன்ற எண்ணம். ”இன்னைக்கு கிளைமெட் நன்றாக இருக்கிறது இல்ல நாம் திருவிடந்தை கோவிலுக்கு செல்வோமா அங்கிருந்து பக்கத்தில் உள்ள கடற்கரைக்கு செல்வோமா ” என்றாள்.

கடற்கரை மணலை வாரி கையில் எடுத்தவாறே ”எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா! . கோயில் பார்தோம். இப்போ கடற்கரையில் ” என்றாள். அவளின் சந்தோஷத்தை கண்ட மயனின் மனதில் உற்சாகம் ஏற்பட கடலுக்கு போவாமா என்றான். கடலின் குளியலில் உள்ளம் குதுாகலிக்க உடலும் நீரின் ஆளுமைக்கு உட்பட யாருமற்ற சூழழில் இருவரின் மனதோடு உடலும் இணைந்தது.

” புதுசா திறந்திருக்கின்ற ரெஸ்டாரண்ட் போலாமா வெகன் என்ற ரெஸ்டாரண்ட் இருக்கிறது அங்கு போலாமா” என்றாள்.

வயிறு நிரம்ப சுவையான உணவை சாப்பிட்டார்கள். அவள் இருக்கும் ஹாஸ்டலில் பைக் நின்றது. இறங்க மனம் வராமல் இறங்கினாள் தேவி.

மூன்று மாதங்கள் உருண்டு ஓடியது. யாருக்காகவும் மாதங்கள் நிற்பதில்லை. மாதவிடாய் வருவது நின்றதை கவனித்தாள் தேவி . மருந்து கடையில் செக்கப் கிட் வாங்கி பரிசோதித்த பொழுது இரண்டு சிகப்பு கோடுகள் அதில் தெரிய கர்ப்பம் உறுதியாகியது. திருவிடந்தை பெருமாள் கோயில் போன அன்னைக்கு தான் நடந்தது என்ற நினைப்பு வந்தது. மனதில் சந்தோஷ அலைகள் வந்து சென்றன. சரி பார்போம்.

மயனின் செல்போனுக்கு கால் செய்தாள். மறுமுனை ஹலோ என்றது. பக்கத்திலிருக்கும் பார்க்கு போவாமா என்றாள் முக்கியமான விஷயம் பேசனும். என்றாள். மயனின் பைக் பார்க் முன் நின்றது. சிறிது தயக்கமின்றி பிரக்னன்ஸி டெஸ்ட் ல் பாஸிடிவ் வந்திருக்கு என்றாள். ”தேவி உன்னோட முடிவு என்ன பெற்றுக் கொள்ள போகிறாயா என்றான்.

பெற்றுக்கொள்ளலாம் எனக்கு துணையாய் நீ இருப்பாயா என்றாள். டெலிவரியாக நீ கூட இருக்கனும். மத்து எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் என்றாள்.

மாதங்கள் உருண்டு ஒடியது அழகிய ஆண் குழந்தையை பிரசவித்தாள். துணைாக நின்றவள் மலர் மட்டுமே. மயனின் செல்போனுக்கு கால்கள் பறந்தன. மறுமுனை கால்கள் துண்டிக்கப்பட்டன. இந்நிலை சில மாதங்கள் நீடித்தது. உண்மை நிலை அறிந்தாள் தேவி.

மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் தான் இக்குழந்தையை வளர்க்க முடியாது என்றும் அதை எங்கு சேர்ப்பது.என்ற வழிமுறையை கேட்டு அறிந்தாள். மருத்துவர் அரசு தொட்டில் போடுங்க அதில் உள்ளவங்க ஒரு பாரம் கொடுப்பாங்க அதில் உங்க பிரசினல் டிடெயில் கேட்பார்கள் அதை முழுவதும் நிரப்பி அவர்களிடம் கொடுத்தால் குழந்தையை எடுத்துக்கொள்வார்கள் என்றார்.. உங்கள் பிரசினல் டிடெயில் யாருக்கும் தர மாட்டார்கள். என்றார்.

அவரின் உதவியால் குழந்தையை ஒப்படைத்தாள் தேவி. தன் இருப்பிடம் சென்றாள். காலம் உருண்டு ஓடியது. ஒன்றரை வருடங்கள் ஓடின.

சிவா தனக்கு ஒரு பையன் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்துடன் இருந்தான். அவனின் ஏக்கத்தை தீர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் மனது வலித்தது. கமலி பிறந்த பொழுது கர்ப்பபை எடுத்துவிட்டார்கள்.. இது ஆழ்மனதை நெருடி கொண்டே இருக்கிறது. மனது எதையும் மறப்பதில்லை.

சிவாவை சந்தித்தது நினைவலைகளாக மனதில் மலர்ந்தது. சுகமான நினைவலை. கல்லுாரி முடிந்து ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள் தேவி அந்த சாப்ட்வேர் கம்பெனி தலைமையிடத்தில் வந்தவன் தான் சிவா. நல்ல வேலை திறமையும் நிதானமாக நேர்மையாளனாக எதையும் நல்ல முறையில் அணுகும் தன்மை கொண்டவனாக எல்லா நபரையும் நல்ல மனதுடன் மதிக்கதக்க வகையில் நடத்துபவனாக இருந்தான். அவனின் பண்புகளால் ஈர்க்கப்பட்டாள் தேவி திருமணமும் செய்தாள். வாழ்க்கை பயணமும் இனிதாகவே ஓடியது. இப்போது அவனது அவாவை தான் தன்னால் தீர்க்க இயலவில்லை என்பது மனதிற்குள் முள்ளாய் குத்தியது.

இதைப் பற்றி தன் தோழி மலரிடம் பேசினாள். ” நீ தைரியமான பெண்ணாயிற்றே வேலைக்கு இருவரும் லீவு போடுங்க சுற்றுலா எங்காவது போனால் மனது ஒரு நிலைக்கு வரும் நல்ல தீர்மானமும் பண்ணமுடியும். கமலி சுற்றி பார்க்க சந்தோஷப்படுவாள் என்றாள்.

அன்றிரவு சிவா அமைதியான யோசனையுடன் தட்டில் போட்ட உணவை தின்று கொண்டிருந்தான். அவனின் யோசனை கலைக்கும் வண்ணம் சிவா என்றாள்.

என்ன? என்றான் ஒற்றை சொல்லில்

இந்த வாரம் லீவு கிடைக்குமா என்றாள்.

எதுக்கு என்றான்

நான் லீவு போடலாமிருக்கிறேன் என்றாள்.

உங்க ஊர் பக்கம் போலாம் என்று தோன்றுகிறது.

யோசித்தவாறே போலாம் என்ற பதில் வந்தது.

எங்கே போலாம் என்று நச்சரிக்க

கொல்லம் போகலாம் என்றான்.

மனதில் உற்சாகம் ஏற்பட கொல்லத்திற்கு தயாரானார்கள்.

இரவின் தனிமையில் சிவா கொல்லத்தின் அழகை விவரித்தான். அவனின் உற்சாகம் தேவியையும் தொற்றியது. கேரள பற்றி தெரியுமா என்றான்.

அது ”கடவுளின் சொந்த நாடு” இயற்கையான அரபிக்கடல் சுற்றி ஆறுகளும் நிறைந்த பசுமை வாய்ந்த இடம். நீர் போக்குவரத்து அதிகம் நிறைந்த இடம்.

கொல்லத்தில் சுற்றிப் பார்க்க எந்த எந்த இடம் இருக்கிறது என்றாள்.

மன்றோ தீவு அலப்புழா கொல்லம் கடற்கரை புதிதாக கட்டிய கடற்கரை கலங்கரை விளக்கம் போன்றவை நன்றாக இருக்கும் என்றான்.

டிரெயினில் புக் பண்ணிக்கொண்டு கிளம்பலாம் என்றான்.

காலையில் மனதின் உற்சாகத்துடன் கமலியை அழகுப் படுத்தினாள். அவளது சினுங்கலும் அழுகையும் கூட சலிப்பும் கோபமும் ஏற்படுத்தாமல் அவளை சமாதானம் செய்தாள்.

சீக்கிரம் டிரெயினுக்கு நேரமாச்சு என்றாவரே படுக்கை அறையிலுள்ளே நுழைந்தான் சிவா இருவரையும் அழுகு தேவதையாக கண்டவுடன் சற்றே தன் பேச்சை நிறுத்தி ரசிக்கவும் ஆரம்பித்தான்.

என்னங்க என்றாள்.

கிளம்பலாமா என்றான்

வீட்டை விட்டு கிளம்பியவர்கள் மனதில் சந்தோஷ அலைகள் மோத ஆரம்பித்தன.

அவளின் மனதில் இச்சந்தோஷ நிமிடத்திலும் சிறு நெருடல்கள் இல்லாமல் இல்லை இதை கவனிக்க தவறவில்லை சிவா.

டிரெயின் நகர ஆரம்பித்தது ஜன்னல் அருகே அமர்ந்து வேடிக்கை பார்ப்பது மிகவும் சுகமாக இருந்தது.

இப்போ உங்க ஊரில் நம் சொந்தங்கள் யார் இருக்கிறார்கள் என்றாள்.

எல்லாரும் ஏதோ ஓரு விஷயத்துக்காக ஊரை காலி செய்து சென்று விட்டார்கள். இப்போ யாருமில்லை என்று நினைக்கிறேன் என்றான்.

பின்னே நாம தங்க எங்கே போய் ஏற்பாடு செய்யனும். என்றாள்.

நேத்து இரவே ஜங்கில் ஆடவென்சர் என்ற வெப்பசைட்டில் போய் மன்றோ ஐலெண்ட் ஒரு ரிஸாட் புக் பண்ணிட்டன் என்றான்.

இதை எப்ப பண்ணிங்க என்றாள்.

நீ சொன்ன பின்னே பண்ணாமே இருப்பேனா என்றான்.

மனதில் காதல் தளும்ப அவனை பார்த்தாள் தேவி

டிரெயின் ரயில் நிலையத்தில் நின்றது.

புது உலகை கண்ட உற்சாகம் தொற்றியது. அதனுடனே குடும்பத்துடன் காலை கடன்களை முடித்து சிற்றுண்டி எடுத்துக்கொண்டு மன்றோ தீவுக்கு பயணமாயினர்.

அவர்களை அழைத்து செல்ல கார் காத்திருந்தது அதில் ஏறியவர்களை சுமந்த சென்று கொண்டிருந்த கார் சிறிது நேரத்தில் கப்பல் உள்ளே சென்று ஒளிந்தது. கப்பல் செல்ல தொடங்கியது இதை பார்த்த தேவிக்கு ஆச்சிரியமாக இருந்தது.

கண்கொட்டாமல் இதை எல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.

சிறது நேரத்தில் ஒரு தீவில் கப்பல் நின்றது அதிலிருந்து கார்கள் வெளியே வந்தன. இவர்களை இறக்கிய கார் திரும்பி கப்பலுக்குள் சென்றது. இவர்கள் வருகைக்காக காத்திருந்தது ஒரு படகு. அதில் ஏறி தீவுக்குள் சென்றனர். அங்கு முழுங்கால் அளவு நீரில் இறங்கி ரம்மியமான அந்த தீவின் அழகை ரசிக்க சொன்னார்கள். அந்த சுற்றுலா ஏஜண்ட்.

தேவிக்கு இறங்க தயங்கிய போது பார்த்து இறங்கு நான் இருக்கிறேன் என்றான் சிவா.

அவனின் தைரிய மொழியால் அவளது கரம் அவனிடத்தில் நீண்டது. குழந்தை என்றாள். நீ முதலில் இறங்கு நான் அதை பார்த்துக்கொள்கிறேன் என்றான்.

சூழலை ரசித்த வண்ணம் அந்நீரில் நின்றாள்.அங்கு விற்றுக்கொண்டிருந்த பாணத்தை வாங்கி அருந்தினர். பின்னர் தீவை விட்டு கப்பல் நகர்ந்தது.

மதியம் 12மணிக்கு மன்றோ தீவுக்குள் கப்பல் நுழைந்தது. அங்கு கடலும் நதியும் சேரும் முகத்துவாரத்தில் கப்பல் அனைத்து வசதியுடன் உள்ள தங்கும் வீடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவர்களுக்கான பதிவுகள் முடிந்த பின் இவர்களுக்கு நீரில் மிதக்கும் கப்பல் வீடுகளில் ஒன்று கொடுக்கப்பட்டது.

அதில் திறந்து பார்த்த தேவிக்கு சந்தோஷ தாங்கமால் தன் கணவனுக்கு முத்தம் தந்தாள். அதை ஏற்ற சிவா இப்பவே இப்படி என்றால் இந்த டீரிப் முடிவதற்குள் எனக்கு எத்தனை கிடைக்கும் என்றான். முகத்தில் நாணத்துடன் அறைக்குள் சென்று சுத்தம் செய்து பாப்பாவையும் அழகுப்படுத்தினாள்.

அறை கதவு தட்டப்பட்டது உணவு தயாராக இருப்பதாக அறிவித்தனர். இருவரும் குழந்தையுடன் சாப்பிட சென்றனர். அங்கு கேரளா உணவு வகைகள் ரெடியாக இருந்தன. அதை சாப்பிட்ட இருவருக்கும் அதன் சுவை வித்தியாசமாக இருந்தது.

எப்ப பார்த்தாலும் வீட்டு சாப்பாடு சாப்பிட்டதால இது கொஞ்சம் நல்லாயிருக்கு இல்ல. எனக்கு இந்த ஊர் சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு வருஷம் ஆச்சு தெரியுமா எனறாவரே சுவைத்து சாப்பிட்டான்.

அதை பார்த்த தேவிக்கு மனது ஆனந்தமாகியது. வேலை வேலை என்று இருவரும் ஓடிக்கொண்டிருந்தது மனதை இயந்திரமாக்கியுள்ளது சிறது மனதிற்கும் உடலுக்கும் அமைதியும் ஓய்வும் தேவைப்படுகிறது என்பதை இங்கு உணர்ந்தாள் தேவி. மனதார மலருக்கு நன்றி சொன்னாள்.

மூன்று மணியளவில் இவர்களை தோணியில் முகத்துவாரத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு மீன் பிடிப்பவர்களை கண்டனர். கடலுக்கு அருகே உள்ள குளிர் காற்று மனதை வருடி சென்றது. இதை எல்லாம் கண்டு களித்தபின் தோணி திரும்புகையில் தேவி மனதை சிவா சொன்ன குழந்தை வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதன் யோசனையில் ஆழ்ந்து போனாள். கரையோரம் கப்பல் நின்றது கூட அவளுக்கு தெரியவில்லை.

தேவி தேவி என்றான் சிவா

என்னங்க என்றாள்

இறங்கும் இடத்திற்கு வந்து விட்டோம் எங்கே கவனம் என்றான்.

கப்பலை விட்டு அவர்கள் தங்கிருக்கும் அறைக்குள் சென்றனர்.

கதவு தட்டப்பட்டது இரவு உணவிற்கு வந்த அழைப்பு அதையும் முடித்துக்கொண்டு அறைக்கு திரும்பினர்.

படுக்க செல்லுமுன் ”என்ன யோசனை “ என்றான் சிவா

குழந்தை பற்றி நீங்கள் கேட்டீர்களே அந்த யோசனை தான் என்றாள்.

இதைப்பற்றி காலையில் பேசலாம் என்றான்.

காலையில் கட்டுமரத்தில் ஊரை சுற்றி காட்ட கட்டுமரான் என்ற படகு வந்தது அதில் சவாரி செய்தது புதுமையாக இருந்தது. அதை ரசித்தவாறு இருந்தபொழுது தேவி நீ குழந்தையை பற்றி கேட்டாய் அல்லவா நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் என்றான்.

என்னங்க அந்த முடிவு என்றாள்.

நாம் ஏன் ஒரு குழந்தையை சட்டப்படி தத்து எடுத்துக்கொள்ள கூடாது என்றான்.

தேவிக்கு அந்த யோசனை சரி என்று பட்டது. நல்லயோசனை தான்

இதற்குரிய வழிமுறையை எப்படி மேற்கொள்வது யாரை கேட்பது என்று கேட்டாள்.

அதை நான் பாத்துக்கிறேன் என்றான்.

படகு சவாரியுடன் யோசனையும் தீர்மானது வந்து எண்ணி தேவி மலருக்கு மனதளவில் நன்றி சொன்னாள்.

சுற்றுலா முடிந்து வீடு திரும்பினர். குழந்தைக்கான முயற்சியில் ஈடுபட்டான் சிவா

தேவி மலருக்கு இந்த நற்செய்தியை கூறினாள்..

சந்தோஷமா இருக்கு என்றாள் மலர்.

சட்ட சிக்கல் இல்லாமல் இருக்க வக்கில் மோகனை கலந்து ஆலோசிக்க சென்றான். அங்கு மோகனின் சொந்தகர்களான மயனின் அப்பா அம்மா வந்திருந்தனர்.

சிவா மோகனிடம் தன் தேவைகளை கூறினான்.

நல்ல யோசனை தான் செஞ்சிடலாம் என்றான். அதற்கு ஏற்பாடு பண்ணிடறேன்.

நான் உன்னை இந்த நேரத்தில் வந்து தொந்திரவு செய்திட்டேன் நினைக்கிறேன் என்றான்.

அதெல்லாம் ஒன்னுமில்லை எனக்கு துாரத்து உறவு மாமா அவர் .மயன்னு 25 வயது பையனை இழந்துட்டு நிற்கரார் என்றார்.

மோகனிடம் சொல்லி ஒரு வாரத்தில் சிவாவுக்கு கால்வந்தது ”ஆர்மர் அனாதை விடுதியில் ஒரு பையன் இருப்பதாக” என்றார்

மோகனும் சிவாவும் அந்த அனாதை விடுதிக்குள் நுழைந்தனர். அங்கிருக்கும் விடுதி பொறுப்பாளர் இவர்களை பற்றி விசாரித்தனர்.தன் தேவைகளை கூறினான் சிவா அதற்கு ஏற்றார் போல ஒரு குழந்தையை அழைத்து வந்தனர். குழந்தையை கண்டவுடன் அதிர்ச்சியானார் மோகன். அதைக்கண்ட சிவா விஷயம் யாதென கேட்டான்.

இவனை பார்த்த என் சொந்காரன் மயன் போலவே உள்ளான் என்றார்.

சிவா மோகனை பார்த்து எனக்கு இவனோட ப்ரசனல் டிடெயில் தெரியணும் கேட்டான். ஒரு வாரத்தில் பார்த்து தருவதாக மோகனின் பதில் வந்தது.

நாட்கள் ஒடின . மோகன் குழந்தையின் ப்ரசனல் டிடெயில் படிஇவனது தாயார் பெயர் தேவி என்ற பதில் சிவாயை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குழந்தை காணவேண்டும் என்று அனாதை இல்லத்துக்கு சென்றான். குழந்தையை ஆர தழுவிக்கொண்டான். தேவியின் கடந்தவை அவனுக்கு தவறாக தோன்ற வில்லை. மனைவியின் இளமை பருவம் அவனுக்கு அவசியமற்றது. தேவியின் குழந்தை உயர்ந்த இடத்திற்க்கு கொண்டு செல்ல வேண்டும். யாருமற்ற அனாதையாக திருடனாக மாறக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கியது. தேவியிடம் இதை பற்றி கூறி அவள் மனதை கஷ்டப்பட வைக்க எண்ணமில்லாதால் இதைப் பற்றி வீட்டில் மூச்சு விடவில்லை.

ஒரு வாரம் கழித்து தேவியை அனாதை இல்லத்திற்கு அழைத்து வந்தான். செல்வத்தை பார்த்த மாத்திரத்ததில் தன் குழந்தை என்ற நினைப்பு தேவிக்கு வந்தது. குழந்தையை வாரி அணைத்தாள். முத்தமிட்டாள். முள்ளாக குத்திய மனது நிம்மதியடைந்தது.

மலருக்கு செல்போன் செய்தாள் தேவி ”என் செல்வத்தை திரும்ப பெற்றேன்” என்றாள்.

வாழ்க்கை திரும்ப தேவிக்கு சுகமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *