செஞ்சோற்று கடன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 3,360 
 

மனோகருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாக புரிந்தது… அவளை பழி வாங்க வேண்டும் என்பது மட்டும்…. போலீஸ் கேஸ் ஆகிவிட்டது அதுவும் மகளிர் காவல் நிலையத்தில் அவளை அடித்தததாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும்.

கேஸ் கொடுத்தவள் ஒன்றும் உத்தமி அல்ல ஒரு கை குழந்தையை விட்டுவிட்டு உடல் தினவு எடுத்து கள்ளக் காதளனான மனோகரின் அண்ணன் உடன் ஓடிவந்தவள் தான்…

இராணு அதிகாரியான மனோகர் ஊருக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தது கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன் அப்பா இறந்தபோது வந்தது….அப்பா இறந்த கையோடு இரண்டு அண்ணங்களில் ஒரு அண்ணன் கண்ணன்……. தம்பி நான் வேலை வெட்டி இல்லாமல் காஷ்ட்டப்படுகிறேன் வீட்டு வாடகை கொடுத்து முடியவில்லை, உனது வீடு ஒன்று சும்மாதானே கிடக்கிறது அதில் உன் அண்ணியுடன் இருந்து கொள்கிறேன் என்றதும் பாசமும் இறக்க குணமும் உள்ள மனோகர் நமது அண்ணன் தானே இருந்து கொள்ளட்டும்….. சரி அண்ணா அதர்க்கென்ன என்று பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டார் மனோகரின் மனைவியும் குழந்தைகளும் வட மாநிலத்தில் இருந்தனர் அவர் பணி புரியும் இடத்தில். …

மனோகருடய மற்ற சகோதர சகோதரிகளும் ஊரிலேயே இருந்தனர் பாசம் யாரை விட்டது சரி விடுமுறை கிடைத்ததும் பார்த்துவிட்டு செல்லலாம் என்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஊருக்கு வந்த போதுதான் தெரிந்தது மனோகரின் அண்ணன் கண்ணன் முதலில் திருமணம் செய்த மனைவியுடன் மனோகர் கொடுத்த வீட்டில் தங்கவில்லை கைக்குழந்தையும் புருஷனையும் விட்டு வந்த அந்த ஓடுகாலியுடன் தங்கியிருக்கிறான் என்று ….மனோகருக்கு வலித்தது காரணம் குடும்ப பெரியோர்களால் பார்த்து திருமணம் செய்து வைத்த முதல் மனைவியான அண்ணியை நினைத்து…மனம் வேதனை அடைந்தது

ஒரு ஆணோ பெண்ணோ யாருடன் வேண்டுமானாலும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் …ஆனால் அது தன்னை ஏற்கனவே நம்பி வந்தவர்களையும் சொந்த பந்தங்களையும் பாதிக்காதவாறு இருக்கவேண்டும்…. இங்கே மனோகரின் அண்ணன் கண்ணனின் வாழ்க்கை அப்படி இல்லை ….ஏற்கனவே நிறந்தரமற்ற வேலை அத்துடன் ஒரு வப்பாட்டி வேறு …. சட்டமும் சம்பிரதாயமும் ஒன்றுதான்….சட்டம் எழுதப்பட்டது சம்பிரதாயம் சொல்லப்பட்டது… என்று தெரியாத ஜென்மம் … முதல் மனைவிக்கு எந்த தீர்வும் இல்லாமல் அதுவும் சொந்த தம்பியே தனது வீட்டில் ஒடுகாலியுடன் தங்க அனுமதித்துள்ளான் என்று தெரியும் போது முதல் மனைவியான அண்ணி என்ன நினைப்பார்கள் என்று மனோகருக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்தது….அந்த வருத்தம் நியாயம ஒன்று …அது எல்லா மனிதர்களுக்கும் இருக்க வேண்டிய ஒன்று… இதை கேட்க்காமல் இருக்கக் கூடாது என்று எண்ணி தனது வீட்டுக்கு சென்று நியாயம் கேக்க….வாக்குவாதம் பிரச்சனையாக மாற்றப்பட்டது ….. தங்கினால் அண்ணியுடன் தங்கு இல்லை என்றால் இந்த ஒடுகாலியை அழைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல் என்ற உண்மையான வார்த்தைகளின் விளைவு… மகளிர் காவல் நிலையத்தில் புகார்….

ஒடுகாலிக்கு விவரம் கொஞ்சம் அதிகம் தான் சீருடைப் பணியில் இருப்பவன் மீது புகார் கொடுக்கப்பட்டால் வேலை போகும் அபாயம் இருக்கும் என்ற தந்திரத்தை பயன் படுத்தி மனோகரை சரியாக மாட்டி வைத்தாள்…

மனோகர் பயத்தில் பதரித்தான் போனார் …ஆனால் மனோகரை மேலிட உத்தரவு இன்றி போலீஸ் கைது செய்ய இயலாது…..

மனோகர் கேஸ் பீன் அப்பாய்ண்ட்ட பைய் தி பிரசிடெண்ட் ஆப் இந்தியா…

அவரை கைது செய்ய வேண்டும் என்றால் ஒரு ஐ பி ஸ் அதிகாரிததான் வரவேண்டும்

அதுவும் மேலிடத்தில் உத்தரவு பெற்று… இது தெரியாத பத்து மாத குழந்தையை வயிற்றில் சுமப்பதுபோல் வயிறு வைத்து இருந்த லேடி இன்ஸ்பெக்டர் துடித்தாள் பிரசவ வலியில் துடிப்பதுபோல் மனோகரை கைது செய்வதற்கு ஒடுகளியான பெண்ணின் உரிமை காப்பதற்காக…

அதுவும் போக மனோகரின் அண்ணன் வழக்கறிஞர் என்பதால் கைது ஆவதில் இருந்து காப்பாற்ற பட்டான்…

மனோகரின் கமாண்டிங் ஆஃபீஸ்ருக்கு தெரிவிக்கபட்டது ….கம்ஆன் மேன்…வீ வில் ஷார்ட் அவுட் தி இசுவ்ஸ் ஓவர் ஏ கால்…கம் அண்ட் ஜாயின் தி டூட்டி..என்று சொன்ன பிறகு…

குடும்ப பிரச்சனை சமாதானமாக போகிறோம் என்று சொல்லி காவல் நிலையத்திற்கு ஐந்தாயிரம் ஒடுகாலிக்கு பத்தாயிரம் கொடுத்து இருக்கும் உயர் பதைவியை மனைவிக்கும் குழந்தைகளுக்காகவும் காப்பாற்றினால் போதும் ….அத்துடன் டெபார்ட்மென்டின் மரியாதையையும் காப்பாத்த வேண்டும் என்று விடுப்பிலிருந்து வேளையில் வந்து சேர்ந்தார் மனோகர்.

அலுவலகம் சென்ற மனோகருக்கு ஆயிரம் சலியூட் அடிக்கப்பட்டது இந்த நிகழ்வுக்கு முன் மனோகர் தன்னையும் தனது அதிகாரி பதைவியையும் மிக பெருமையாக நினைத்து வந்தார் ஆனால் கடந்த சில நாட்களாக அவை அனைத்தும் தூள் தூளாக நொறுக்கப்பட்டு ஒரு செத்த பாம்புக்கு சமமாக தோன்றியது ஒரு ஒடுகாலியின் ஒரு பொய் புகாரினால்…

இங்கே சட்டம் சில நேரம் பொய்யான புகார்களுக்கு மரியாதை கொடுக்கிறது புகார் கொடுத்து ஒரு பெண் என்ற ஒரே காரணத்தால்…என்ன பிரயோஜனம் பலநாள் கஷ்டத்தை பார்த்து படித்து பல நேர்முகத் தேர்வில் வென்று சமையல்காரன் முதல் ஷூ துடைப்பதற்கும் கார் கதவு திறந்து விடுவதற்கும் செல்லும் இடமெல்லாம் சல்யுட் அடிப்பதற்கு பணி ஆட்கள் இருக்கும் ஒரு உன்னதமான உயர் பதைவியை அடைந்தும் ஒரு ஒடுகாலிக்கு அடிபணிய வேண்டியே நிலை ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணி எண்ணி தூக்கத்தை துளைத்துவிட்டு துக்கத்தை மட்டும் கைவசப் படுத்தினார் மனோகர்

ஒரு வழியாக மனோகருக்கு புரிந்தது இங்கே உணர்ச்சி வசப்படுவது வேலைக்கு ஆகாது புத்தியை உபயோகப் படுத்த வேண்டும் மகாபாரதத்தில் சுபலன் பீஷ்மரை பழிவாங்க எப்படி சகுனியை உருவாக்கினாரோ அப்படி… கூட இருந்தே குழி பறிக்க வேண்டும்…சில கெட்ட எண்ணம் கொண்ட மனிதர்களை சூறையாட திருச்செந்தூரில் இருந்து முருகன் புறப்பட்டு வரமாட்டார் …அதை நாமே செய்ய வேண்டும் அவமானம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது…..நாம் தான் அதை நிவர்த்தி செய்ய வேண்டும்….தனக்காக இல்லை என்றாலும் ஒரு பாவப் பட்ட பெண் தன் கணவன் தன்னை விட்டு ஒரு ஒழுக்கம் கெட்ட பெண்ணுடன் வாழும் போது ஒன்றும் செய்ய துணிவில்லாமல் அவர் சந்தோசமாக இருந்தாலே போதும் என்று சொல்லும் ஒரு உத்தமி அண்ணியை மனதுக்குள் சிரிக்க வைக்கவாவது செய்ய வேண்டும்…..

எனக்கு மகன் போல ஒரு கொழுந்தன் இருக்கின்றான் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்…. எனது மாமனாரும் மாமியாரும் இறந்து விட்டார்கள் …நான் வாக்கப்பட்டு வந்த இடத்தில் என் கணவனும் என்னை விட்டு சென்றுவிட்டான் நான் யாருக்குக்காக வாழ்வது என்ற சந்தேகம் வரக்கூடது… தீர்க்கவேண்டும் ….அப்படிஅண்ணிக்கு கொழுந்தனுக்கும் உள்ள உறவுஅண்ணியின் மனதிலே….

கடவுள் மனிதர்களின் ரூபத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கையில் வாழும் அந்த அண்ணி என்ற அம்மாவின் நம்பிக்கையை நிலை நாட்டுவதற்காகவாவது இந்த காரியத்தை செய்தாக வேண்டும் என்று தோன்றியது மனோகருக்கு

பசுத்தோல் போர்த்திய புலியாக மாறினார் மனோகர்….. சத்திரபதி சிவாஜி கொரில்லா அட்டாக் செய்தது வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிறது…இங்கே சத்திரபதியின் வீரம் தேவையில்லை சகுனியின் சாமர்த்தியமே போதுமானது….

தினமும் கைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார்…

பணம் காசு வேண்டுமா என்று கேட்டு பணம் அனுப்பி வைத்தார்…அழிச்சாரியை அண்ணி என்று அழைக்க துவங்கினார்….

அங்கே அண்ணன் முதல் அழிச்சாரி வரை மனோகரை வீழ்த்திவிட்டதாக எண்ணி ஆனந்தப் பட்டுக்கொண்டிருந்தனர்…..

இங்கே மனோகரோ…..
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அங்கே சிரிபவர் யார் அழுவர் யார் தெரியும் அப்போது….என்று பாடல் கேட்டுக் கொண்டிருந்தார்…

அதே சமயம் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி கேட்டுக்கும் போதெல்லாம் பணம் கொடுக்கும் அட்சய பாத்திரமாகவே மாறினார் மனோகர்…இதற்குத்தானே ஆசைபட்டாய் பால குமாரா என்று சந்தோஷப்பட்டு விடுமுறை எடுத்து ஊருக்கு வந்தடைந்தார் மனோகர்…

நல்ல வரவேற்பு ஊரில் …உணவு மட்டும் வெளியில் இருந்து வரவழைத்து விட்டார் மனோகர்…புருசனையும் கைக்குழந்தையையும் விட்டு வர தெரிந்தவளுக்கு சொத்துக்காக சோத்தில் விஷம் வைக்க தெரியாதா என்ன?

மதிய உணவு உண்ணும்போது அந்த ஒட்டு வீட்டில் இருந்து ஒரு வெளிச்சம் வீட்டுக்குள்ளே தெரிந்தது அது உடைந்த ஓடு…மனோகருக்கு அது தெரிந்த விஷயமே அது தான் அவரின் டிரம்ப் கார்டு…மெல்ல கரு அறுக்கும் பேச்சை துவங்கினார் …

என்ன அண்ணி வெயில் வீட்டுக்குள்ள வருது …இப்பவே இப்படினா…மழை காலத்தில் எப்படி சமாளிக்கிறீங்க….

ஆமா மனோகர் இந்த ஓட்ட கொஞ்சம் மாத்தனும்…நீ பார்த்து செஞ்சாதான் உண்டு …

அட போங்க அண்ணி …இவ்வளவுதான… இந்த வீட்டையே மாத்தி கொடுக்கிறேன்…என்ன ஒரு ரெண்டு லட்சம் செலவு ஆகுமா? …நாளைக்கே வேலையை ஆரம்பபிச்சுடலாம்…என்று சொன்னதும் பலிகடா ஆகப் போவது தெரியாமல் அப்போதைக்கு அண்ணி என்று அழைக்கப்பட்ட ஆடு சரி என்று சந்தோசத்தில் தலையை ஆட்டிக்கொண்டிருந்தது…

கூட படித்த உண்மையிலேயே பொறியாளராக இருக்கும் நண்பரை அழைத்து அளவு எடுத்து அழகாக பொய் சொல்லப் பட்டது…வீடு ஒரு மாதத்தில் புதிப்பிக்கப் படும் என்று…

ஒரு மாசம் நான் எங்கே இருப்பேன் என்று கேட்ட அன்றைய தினத்தில் அண்ணிக்கு பதில் அளித்தான் மனோகர்…

எதுக்கு கவலை படுறீங்க …..வீடு ஒன்னு பார்த்தாச்சி…அட்வான்ஸும் குடுத்துட்டேன்…நீங்க அங்க மாத்துங்க …இந்த வீட்டு வேலை முடிஞ்சதும் இங்க வந்துடுங்க…இந்த வீட்டுக்கு வர்ற வரைக்கும் அந்த வீட்டுக்கு நான் வாடகை கொடுக்கிறேன் …நீங்க எனுக்கு சீதை …அண்ணன் எனக்கு ராமன்….நான் உங்களுக்கு அனுமன் மாதிரி என்று பொய் பேசும் மனோகரை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் ..சூர்ப்பனகை மூக்கு அறுபடப் போவது தெரியாமல்…. உண்மை பேசினால் உலகம் நம்புவதில்லை…பொய் பாராட்டுக்கு ஏங்கிக்கிடக்கும் மக்கள்….நீ செய்வது தவறு என்று கூறுபோதே உன்னை திருத்திக் கொண்டிருக்கவேண்டும் ஆனால் நீ திருத்திக் கொள்ளவில்லை…..ஆகவே நீ இப்போது திருத்தப்படப்போகிறாய்..என்று மனதில் சிரித்திக்கொண்டார் மனோகர்.

சொன்னபடி வீடு மாற்றப்பட்டது…மாற்றியதும் பழைய வீட்டில் ஓடுகள் பிரிக்கப்பட்டது தற்கால அண்ணிக்கு பொறுப்பு கொடுக்கப் பட்டது…. அன்றைய தினத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியாக மாற்றப் பட்டபோது இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கோயோ அழைகின்றாய் ஞானதங்கமே என்ற பாடலுடன்… யானை தன் தலையில் மீது மண் வாரி தூற்றிக்கொள்ளும் என்பதற்கு அர்த்தம் புரிந்தது மனோகருக்கு….

போ மகளே போ…. நீ தெருவில் நிற்க்கும் காலம் வந்துவிட்டது…உன்னை பார்த்து உலகம் சிரிக்கும் காலம் வந்துவிட்டது இந்த இரண்டு நாள்களுக்கு நீ முதலாளியாக இருந்துவிட்டு போ…இதற்கு பின் வரும் காலம் உன் இருண்ட காலமாக இருக்கும் ஒரு சீருடை பணியில் இருக்கும் ஒரு நல்ல மனிதனை கவுக்க நினைத்தின் பலன் …வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்….

வீடு தரைமட்டம் ஆக்கப்பட்டது …தரைமட்டம் ஆக்கப்பட்ட இடத்தில் மேற்கொண்டு ஒன்றும் செய்யவில்லை …மனோகர் ஒருமாத்திற்கு எல்லா சேவைகளையும் செய்தார்…..வாடகை கேட்டு வீட்டு முதலாளி வந்ததாக தற்காலிய அண்ணி கூறினாள்…ஓ….அப்படியா என்றான்….

வீட்டு ஒனரின் நம்பரியில் அழைப்பு விடுத்து வரவழைத்தார்…வாடகை கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது வீட்டில் இருக்கும் சாமான்களை வெளியே தூக்கி எறிவோம் என்றார்…சரி நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள் என்று கூறிவிட்டு தனது உண்மையான அண்ணிக்கு கைபேசியில் அழைப்பு கொடுத்து அங்கு வரவழைத்தார்….வீட்டில் இருக்கும் சாமான்கள் வீட்டு முதலாளியால் சூறை ஆடப் பட்டுக்கொண்டிருந்தது… ஒடுகாலி ஒதுங்க இடம்மின்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள்….. அடே அண்ணா பெயர் அளவிலும் லீலைகளிலும் கண்ணனாக நீ இருந்து கொள் ….செயல் அளவில் நான் மட்டுமே கண்ணனாக இருப்பேன்…என்று என்னும் போது…. உண்மையான அண்ணி கொழுந்தனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள்….அந்த முத்தத்தில் இறந்து போன அம்மாவின் வாசனை வந்தது மனோகருக்கு அத்துடன் தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *