“சுமி” ஒரு தொட்டாச்சிணுங்கி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 6,058 
 
 

அன்று திங்கட்கிழமை காலை ஏழு மணி. நான் வேலை செய்யும் வங்கியில் மோகனுக்கு மனேஜர் பதவி உயர்வு கிடைத்து இரு மாதங்களாகி விட்டன. நேரத்துக்கு ஆபிசுக்கு போக வேண்டும் , அப்போது தான் தனக்கு ரிபோர்ட் செய்யும் இருபது பேருக்கு தான் ஒரு வழிகாட்டியாக இருக்கமுடியும் . ஆபீசுக்குப் புறப்பட்டு, அவசரம் அவசரமாக காலை உணவையும் காப்பியையும் சாப்பிட்டு விட்டு கார் சாவியுடனும், கையில் குறும் பெட்டியுடனும் வீட்டில் உள்ள கராஜுக்கு தன் மாமனார் வாங்கிக் கொடுத்த ஹோண்டா காரை எடுக்க மோகன் வெளிகிட்டான். என் சுமி என்று நான் கூப்பிடும் அவனின் மனைவி சுமித்திரா அவன் பின்னால் போனாள்.

மோகனுக்குத் திருமணமாகி ஒரு வருடமும் ஆகவில்லை. தனிக் குடித்தனம் செய்ய வேண்டும் என்று சுமி வற்புறுத்தி மூன்று அறை உள்ள வீடு ஒன்றை மாமனார் உதவியோடு வாங்கினான் . “சுமி” தான் நினைத்ததை அழுதோ அல்லது முகத்தை நீட்டியோ சாதித்து விடுவாள்.

சுமி வசதி உள்ள பெற்றோருக்கு ஒரே மகள் .கலைப் பட்டதாரி. தனியார் கல்லூரியில் ஆசிரியை வேலை கிடைத்தும் மோகனை கவனிக்க வேண்டும் என்று வேலைக்குப் போக மறுத்து விட்டாள். அதோடு சீதனத்தோடு வந்தவள். பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் அவளின் சிரிப்பிலும், பார்வையிலும் மயங்கியவன் மோகன். சுமி அதிகம் பேச மாட்டாள். எதையும் உண்ணிப்பாக கவனிப்பாள். எப்போதும் கணவன் மேல் ஒரு சந்தேகப் பார்வை. “என் புருஷன் எனக்கு மட்டும் தான்” என்ற போக்கு உள்ளவள் என்பதை திருமணமாகி ஒரு மாதங்களுக்குள் மோகன் அறிந்து கொண்டான். அவன் மேல் சுமிக்கு அளவு கடந்த அக்கறையும், பற்றும். மோகனின் உணவு, ஆடை ,அவன் பழகும் நண்பர்கள் மேல் ஒரு அவதானிப்பு . எங்கே போகிறான், எங்கிருந்து வருகிறான். யாருடன் பேசுகிறான் எல்லாம் அவளுக்கு அவன் சொல்லியாகவேண்டும் அதுவும் அவன் பேசுவது அவள் வயது பெண்ணாக இருந்தால் பிறகு வீட்டில் வழக்கறிஞர் போல் பல கேள்விகள் கேட்பாள் . என்ன சாப்பிடுகிறான்?, யாரோடு மோகன் பேசுகிறான் என்று தன் கடைக் கண்ணால் கவனித்துக் கொள்வாள். சற்று ,மோகன் உரத்துப் பேசி விட்டால் பொல போல வென்று அவள் கண்களில் கண்ணீர் கொட்டும்.

மோகன் வீட்டுத் தோட்டம் நிரம்ப தொட்டாச்சிணுங்கிச் செடிகள். அவற்றைச் சுட்டிக் காட்டி . சுமி நீரும் அசெடிகளில் ஓன்று என்று மோகன் சீண்டுவான் . அவளைச் சீண்டி வேடிக்கை பார்ப்பது அவனக்கு விருப்பம். அது ஒரு வகை ஊடல் .

சுமி என்று அவளை கூப்பிடாமல் “தொட்டாச்சிணுங்கி இங்கே வரும் உம்மை நான் தொடலாமா” என்பான் மோகன் . தன்னைத் தொட்டா சிணுங்கியோடு மோகன் ஒப்பிடுவது அவளுக்குப் பிடிக்காது. பிறகு சில மணி நேரம் அவனோடு பேச மாட்டாள். அவன் போய் பேசினால், தொட்டாச் சிணுங்கிச் செடியின் இலைகள் சில நிமிடங்களுக்கு களுக்குப் பின் சுய நிலைக்கு வருவது போல் அவளும் சுய நிலைக்கு வருவாள் சற்று கர்வம் உள்ளவள். என்ன செய்வது. தாலி கட்டியாகி விட்டது . மோகன் ஒத்துப் போக வேண்டியது தான். ஒரு பிள்ளை பிறந்தால் அவள் மாறி விடுவாள் என்று மோகனின் பெற்றோர் அவனுக்குச் சொன்னார்கள்

தான் ஏதும் மோகனுக்குச் சொல்லலாம். கேள்விகள் கேட்கலாம். ஆனால் மோகன் மட்டும் தன் கருத்தை அவளுக்குச் சொல்ல அனுமதி இல்லை. தன் கோபத்தை அழுகை மூலம் காட்டுவாள். தாங்க முடியாவிட்டால் ஓடிப் போய் அறைக்குள் படுத்து விடுவாள். எல்லாம் பெற்றோர் வளர்த்த வளர்ப்பு. நல்ல காலம் மோகனின் அப்பாவும் அம்மா அவர்களோடு இருக்கவில்லை. இருந்திருந்தால் தினமும் மாமி மருமகள் சண்டையை தீர்த்து வைக்க மோகனுக்கு நேரம் சரியாக இருந்திருக்கும் மோகனின் அம்மா கண்டிபானவள். மகன் மேல் உள்ள தன் அன்பை வேறு ஒருத்தி பங்கு போடுவது அவளுக்குப் பிடியாது.

*****

மோகனின் சாம்சுங் செல் போன் மணி அடித்தது. அவன் பெசினான்

“எஸ் மோகன் ஸ்பீக்கிங் ஹியர்.”

“……..”

“சரி ஒன்பது மணிக்கு முன்பே நான் நிறப்பேன்”

“……..”

“என்ன? இன்று மாலை நாலு மணிக்கு ஜெனரல் மனேஜர் வருகிறாரா. எனக்கு அவரிடம் இருந்து மெசேஜ் வரயில்லையே ”?

“……..”

“சரி முக்கிய பைல்களை என் மேசையில் எடுத்து வையும் மாலதி”

“……..”

“லஞ்சுக்கு வருவேன். நீரும் வருவீர் தானே”

“……..”

“அப்போ அதைப் பற்றி பேசுவோம்”

“……..”

“ சரி பை”

போனில் பேசி முடிந்து குறும் பையுடன் மோகன் புறப்படும் பொது

“அத்தான் யார் உங்களோடை பேசினது”?: சுமி கேட்டாள்

“அது என் செக்கரட்டரி. ஏன் “?

“அவள் பெயரா மாலதி” ?

“ம்ம்”..

“என்ன வயசு”?

“ஏன் அவளுக்கு கலியாணம் பேசப் போறீரா”?

“இல்லை சும்மா கேட்டனான்”

“அவளுக்கு வயசு இருபத்தி இரண்டு. உம்மிலும் ஒரு வயசு இளமை”

“ அவள் வயசு உங்களுக்கு எப்படித் தெரியும்”?

“சென்ற புதன் கிழமை அவளின் பிறந்தநாள். அன்று ஆபிசில் கேக் வெட்டி கார்ட் கொடுத்து கொண்டாடினார்கள் அதனால் அவள் வயசு தெரியவந்தது “

“ ஓ கோ . அப்போ கேக்கும் கார்ட்டுக்கும் செலவு செய்தது நீங்களா ?

”ஆபிசில் வேலை செய்யும் எல்லோரினதும் காசு அது. இன்னும் கேள்விகள் இருக்கா”? மோகன் தன் பொறுமையை இழந்தான் . அவன் குரலில் கோபம் தொனித்தது

“ எப்ப இருந்து அவள் உங்கள் செக்ரட்டரி”?

“வங்கியில் அவள் சேர்ந்து மூன்று மாதம். சேர முன் அவள் ஒரு மாடல்’ இன்னும் விபரம் தேவையா”?

“இண்டைக்கு லஞ்ச் வெளியிலையா”?

“ ம்ம்ம்”:

“அப்போ உங்களுக்கு சாப்பாடு அனுப்ப வேண்டாமா?

“வேண்டாம். எனக்கு நேரம் போகுது நான் வாறன் “

அவளிடம் இருந்து மேலும்: , கேள்விகளை எதிர்பார்க்காமல் வீட்டில் இருந்து மோகன் புறப்பட்டான். .

அவ்வளவு தான். சுமி அழுது கொண்டு அறைக்குள் போய் படுத்து விட்டாள். வேதாளம் முருக்கை மரம் ஏறிவிட்டது . இனி கீழே இறங்க சில மணி நேரம் எடுக்கும் இறங்கும் மட்டும் மோகன் ஆபிசுக்கு போகாமல் இருக்க முடியாது

****

பல தடவை மோகனுக்கும் சுமிக்கும் இடையே நடக்கும் கேள்வி பதில் போர்களில் இதுவும் ஓன்று. . மோகன் ஒரு போதும் அவளிடம் இப்படியான கேள்விகள் சந்தேகத்தில் கேட்டதில்லை. அவனுக்குத் தெரியும் அவள் தன் மேல் உள்ள அன்பின் நிமித்தம் இப்படி நடக்குறாள் என்று.

ஒரு நாள் தனது பிரச்சனையை மனநல மருத்துவரராக இருக்கும் நண்பன் டாக்டர் சிவராமிடம் சொல்லி மோகன் கவலைப் பட்டான்.

“மோகன், உன் மனைவி தொட்டதற்கு எல்லாம் கோபப்டுவளே ; கத்துவாளே, அழுவாளே. துருவித் துருவி கேள்விகள் கேட்பாளே .அவளிடம் எதைச் சொல்வது என்று உனக்குத் தயக்கமாகவும் , பயமாகவும் இருக்குமே ”? டாக்டர் சிவா கேட்டான்

“நீ சரியாக சொன்னாய் சிவா. இதுக்கு ஏதும் மாற்று வழி ஏதும் ‘ உண்டா சிவா “ ?. மோகன் கேட்டான்

“உணர்வு மற்றும் உணர்ச்சி என்பது, உடல் சார்ந்தது. உணர்ச்சியை உணரவும், அனுபவிக்கவும் அளவு உள்ளது. அது, ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபடும். அந்த அளவை வைத்து தான் ஒருவரை, ‘தொட்டாச்சிணுங்கி’ அல்லது ‘எருமை மாட்டுத்தோல்’ என்று கூறுகிறோம். சுரனை இல்லை என்கிறோம் எங்கெங்கு, உரிமை இருக்கிறதோ, சலுகை எடுத்துக்கொள்ள முடியுமோ, அங்கெல்லாம் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டோடு வெளிப்படுத்த வேண்டும். அந்த .அடிப்படையில் தான், ஒருவரின் உணர்ச்சி வெளிப்பாட்டை, அலசி ஆராய வேண்டும். . பொதுவாக, எரிச்சல்படுகிறோம் என்றால், அங்கு உரிமை அதிகம் என்று அர்த்தம் தொட்டால் சிணுங்வது உரிமையின் அடையாளம். அதை சீர்படுத்த . வேண்டியது, உரிமை உள்ளவர்களின். கடமை. அதை, உரிமை உள்ளோர் புரிந்து கொள்ளாமல், ‘என்னை புண்படுத்திவிட்டாள்’ என்று, வெறுப்பை வளர்த்து கொள்கின்றனர் .. யாரிடம் நமக்கு உரிமை இருக்கிறதோ, அவர்களை சரிசெய்ய வேண்டியது, நமது கடமையும் பொறுப்பும் கூட. . அதை விட்டுவிட்டு, வெறுப்பை வளர்த்தால், அது விவாகரத்தில் போய் முடியும் மோகன்”

“அப்போ என்னை என்ன செய்யச் சொல்லுறாய் சிவா.”?

“ உன் புத்தியை பாவித்து உனக்கு அவள் நிலை ஏற்பட்டால் அவளுக்கு எப்படி இருக்கும் என்பதை அவள் உணர ஒரு சூழலை உருவாக்கி அவளை உணர்வை. சிலசமயம் அவள் அதை உள்வாங்கி மாறினாலும் மாறலாம். முயற்சித்துப் பார் மோகன் “ டாக்டர் சிவா அறிவுரை சொன்னார்.

****

அன்று வேலை முடிந்து மோகன் மாலை ஆறுமணிக்கு வீடு திரும்பிய பொது சுமி தன் மாமன் மகனோடு பேசிக் கொடிருந்தாள்.

“ அத்தான் இவரை எங்கள் கலியாணத்தில் கண்டிருபீர்களே;. இவர் என் அம்மாவின் அண்ணாவின் மகன் ரமேஷ். அமெரிக்கன் கொம்பனி ஒன்றில் மார்க்கெட்டிங் டிரெக்டராக இருக்கிறார். எம் பி ஏ செய்தவர் ”

“அப்படியா:”?

“எனக்கு இரண்டு வயசு மூப்பு.”

“அப்படியா:”?

“சிறு வயதில் என்னோடு சேர்ந்து கரம் விளையாடுவார்

“அப்படியா:”?

“ இன்னும் இவர் கலியானம் செய்யவில்லை”:

“அப்படியா:”?

“ உங்களுக்கு தெரிந்த வடிவான பெண் யாரும் இருந்தால் சொலுங்கோ”

“ பார்ப்போம்”

“ உங்க செக்ரட்டரி மாலதி பாங்கில் சேர முன் மொடலிங் செய்ததாக சொன்னீர்கள் அவளைப் பேசினால் என்ன ”?

“ நான் கலியாணத் தரகன் இல்லை” என்று சுருக்கமாக பதில் சொல்லி விட்டு மோகன் அறைக்குள் போனான் . சுமியின் முகம் சுருங்கியது. கண்களில் கண்ணீர் வந்தததை அடக்கிக் கொண்டாள். ரமேஷ் இருந்த படியால் அவளுக்கு அழுகை வரவில்லை;. அதைத் தான் மோகன் எதிர் பார்த்தான்

ரமேஷ் போனபின் சுமி காப்பியோடு மோகனிடம் அறைக்குள் போனாள்
“உன் மாமன் மகன் ரமேஷ் போயிட்டானா”? மோகன் சுமியிடம் கேட்டான்

“போயிட்டான் அத்தான். அவனுக்கு தான் என்னிடம் வந்தது உங்களுக்கு பிடிக்கவில்லை போல் இருக்குது என்று சொல்லிப் போய் விட்டான். நீங்கள் அப்படி அவன் முன்னால்

மரியாதையில்லாமல பேசி இருக்கக் கூடாது

“ இப்ப புரியுதா சுமி உமக்கு. என்னிடம் நீர் ஆயிரம் கேள்விகள் கேட்டு நான் பதில் சொல்லாவிட்டால் அழுது கொண்டு அறைக்குள் போய் விடுவீரே அது மரியாதைக் குறைவில்லையா? . எனக்கும் உணர்ச்சி என்று ஓன்று உண்டு. நீர் உம் மனதில் அதைப் பற்றி யோசித்துப் பாரும். தனக்கு ஓன்று என்று வந்தால் மனம் படக் படக் என்று அடிக்குமாம். ரமேஷ்சை நான் அவமானப் படுத்த வேண்டும் என்பது என் நோக்கமில்லை. அவனை எனக்கு முன்பே தெரியும். அவனின் கொமப்னிக்கு லோன் எடுக்க என்னிடம் வந்தவன். அதன் பின் அவன் என்னோடு அடிகடி பேசியும் இருக்கிறான். இதெல்லாம் நான் உனக்கு சொல்லவில்லை”.

“நீங்கள் சரியான கள்ளன் அத்தான் : உங்களுக்குப் பிடித் ஊத்தப்பமும், சட்னியும். கிழங்கு கறியும் , பால் பாயாசமும் செய்து வைதிருகிறேன். குளித்துப் போட்டு கேதியிலை சாப்பிட வாருங்கோ நான் உங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறன். அதோடு ஒரு நல்ல செய்தியும் ஓன்று சாப்பிடும் பொது உங்களுக்கு சொல்லப் போறன். செய்தியை சொல்லாமல் சுமி சமையல் அறைக்குப் போய் விட்டாள்.

அதுதான் பல மாதங்களுக்கு பின் முதல் தடவை சுமியின் பேச்சிலும் முகத்திலும் செந்தளிப்பை மோகன் கண்டான் சிவா சொன்ன படி தான் வைத்த பரீட்சையில் சுமி சித்தி அடைந்து விட்டாளா இல்லையா எனப் பொறுத்து இருந்து மோகன் பார்க்க வேண்டும்

*****

மோகனும் சுமியும் சிரித்துப் பேசியபடி இரவுப் போசனத்தை

ரசித்து சாப்பிட்டுக்கோண்டு இருநதார்கள்.

“அது சரி சுமி நீ நல்ல செய்தி ஓன்று இருக்குது என்றாயே என்ன செய்தி அது?:

“அத்தான் எங்களுக்கு ஒரு வாரிசு வரப் போறான். அவன் இருந்தால் எங்களுக்குள் சண்டை சச்காரவு வரத்து

“நல்ல செய்தி சொன்னாய் சுமி . தொட்டாச்சிணுங்கி பூத்து விட்டது” என்று சொல்லி அவளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான் மோகன் . அவள் முகம் மலர்ந்தது

*****

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *