சுமங்கலிப் பிரார்த்தனை

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 12,294 
 
 

“ரஞ்சு………….ப்ளீஸ் ரஞ்சு எழுந்திருடா……இன்றைக்கு ஒரு நாள் மட்டும் டா…….

ரவி ஆறாவது தடவையாகத் தன் புது மனைவியை கெஞ்சிக் கொஞ்சி எழுப்புகிறான்.

ர………….வி …..ப்ளஸ் இன்னும் ஒரு பிஃப்டீன் மினிட்ஸ் “லெட் மீ ஸ்லீப் யா…….ரொம்பத் தூக்கம் தூக்கமா வரது…

இல்லடா செல்லம்.. இன்னைக்கு வீட்ல சுமங்கலி ப்ரார்த்தனை இல்லையா? உனக்குத்தான் தெரியுமே… அதனால இன்னைக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுமா……அவன் கெஞ்சுவது பரிதாபமாகத்தான் இருந்தது.

அதற்கும் காரணம் இருந்தது, ரஞ்சுவிடம் ஒரு பழக்கம், இதை இப்படித்தான் செய்யணும் என்றால் மாற்றித்தான் செய்வாள், அது மட்டுமல்லாமல் செய்தால் என்னதான் ஆகும் என்று கட்சி பேசுவாள், திருமணம் முடிந்து இந்த மூன்று மாதத்தில் எத்தனையோ நிகழ்வுகள், அதுவும் அவனுக்கும் அவளுக்கும் என்றால் பரவாயில்லை, பல சமயங்களில் தன் ஆச்சாரமான அம்மாவுக்கும் முற்போக்கு எண்ணங்களைக் கொண்ட அவளுக்கும் கருத்து வேறுபாடுகள் எழும் போது ரவி முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும், ஆனால் அந்த மாதிரி நேரங்களில் அவன் அம்மா பாலாம்பாள் மிகவும் சாமர்த்தியமாக. பல நேரங்களில் வெறும் புன்னைகையாலோ அல்லது ஒன்றிரண்டு வார்த்தைகளோடு “நச்” என்று முடிவு கட்டி விடுவாள், அது மட்டுமல்லாமல் அவன் தோளைத் தட்டி “இதோ பார் ரவி எதுக்கும் கவலைப்படாதே எல்லாம் காலப்போக்கில் அவளே புரிந்து கொள்வாள், நீ கவலைப்படாமல் உன் புது திருமணவாழ்கையை “என்ஜாய்” பண்ணு என்று கன்னம் குழி விழ சிரித்துக்கொண்டே சென்று விடுவாள்.

நாள் கிழமைகளில் அம்மாவை மடிசார் புடவையோடும் முன் நெற்றியோரமும். காதோரமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைத்த இடுப்புவரை நீண்ட கூந்தலை அழகாகப் பைப்பின்னல் பின்னி அதில் அரையே அரை முழம் மல்லிகை சூடி எலுமிச்சை நிற முகத்தில்நடு நெற்றியில் பழைய குட்டி பத்துபைசா அளவில் குங்குமமும் அதன் மேல் விரற்கடை அளவு வீபூதியும் வைத்த அவள் சாட்சாத் தெய்வ அவதாரம் தான், தெய்வம் கூட சில சமயங்களில் பக்தர்களுக்காக “காம்ப்ரமைஸ்” செய்யும், ஆனால் அம்மா தன் கொள்கைகளில் அதுவும் முக்கியமாக மடி ஆச்சாரவிக்ஷயங்களில் மிகவும் கண்டிப்பானவாள், அப்பா குருமூர்த்திக்கே அவளிடம் சற்று அச்சம்தான், அப்படிப்படிப்பட்ட அம்மா தன் மனைவியிடம் இந்த மூன்று மாதத்தில் எத்தனை முறை “காம்ப்ரனைஸ்” செய்திருப்பாள், ஒரு வேளை மருமகள் என்றால் எந்தத் தவறு செய்தாலும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது தான் அவள் அறிந்த ஆச்சாரமோ? போன வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியை இப்பொழுது நினைத்தாலும் அவனுக்கு வெடவெடவென்று நடுங்கியது.

அம்பாளுக்கு ஸகஸ்ரநாமம் சொல்லி அம்மா நைவேத்யம் செய்ய வைத்திருந்த சர்க்கரைப் பொங்கலையும் உளுந்து வடையையும் ரஞ்சு குளிக்காமல் சமையலறையில் வந்து ருசி பார்த்ததுதான். அதுவும் “அந்த” மூன்று நாட்களில் ஒரு நாள். யாருக்கும் அது தெரியாது. அவனைத் தவிர, அப்போது அம்மாவுக்கும் ரஞ்சுவுக்கும் நடந்த உரையாடல் அவன் கண்முன்னே நிழலாடியது.

“என்ன ரஞ்சு, குளிக்கல?”

“இல்ல ஆன்டி. எனக்கு நேத்து ராத்திரி பூரா ஸ்டமக் பெய்ன், அதனால நைட் சாப்பிடல. காலை எழுந்ததும் ரொம்ப பசிச்சுது, அதோட இந்த மாதிரி நேரத்தில எனக்கு எப்பவும் பசி அதிகமாக இருக்கும், அதனாலதான்…”

…………….

“ஏன் ஆன்ட்டி எடுக்ககூடாதா? சாப்பிடக்கூடாதா? என்று ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை, அவள் பாட்டுக்கு விடுவிடென்று மாடிக்குச்சென்று விட்டாள், இவள் இப்படி ஏதாவது ஏடாகூடமாய் பண்ணி விடுவாளோ என்று பயந்து ரவி பின்னாடியே வருவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது.

அம்மாவைப் பார்த்தான் மன்னிப்பு கேட்கும் பாவனையில், கண்ணால் கெஞ்சினான், ஆனால் அம்மாவின் கண்களிலும் அவை பார்த்த பார்வையிலும் இருந்த ரௌத்ரத்தை அவனால் தாங்க முடியவில்லை. உடைந்து போனான் ரவி, “அம்மா ஸாரிம்மா, வெரி வெரி ஸாரி…” என்று கண் கலங்கி விட்டான்.

ஒரு நிமிடம்தான். தன்னை சுதாரித்துக் கொண்ட அம்மா.

“ஒண்ணுமில்லடா ரவி அவளுக்கு நாம் சொல்றதெல்லாம் இன்னும் சரியா “அண்டர்ஸ்டாண்ட்” ஆகல்லடா, புரியற மாதிரி சொன்னா அவ மாறிடுவா, நீ ஒண்ணும் கவலைப்படாதே, எல்லாம் நான் பாத்துக்கறேன், அந்த “எல்லாமில்” ஒரு அழுத்தம் இருந்ததை ரவி உணர்ந்து கொண்டான்.

அவனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது, இரு எதிரெதிர் துருவங்களை எப்படி ஒரே நேர்க்கோட்டில் இணைக்க முடியும்? அவளிடம் பலமுறை இதைப் பற்றிப் பேசினால் “இந்த காலத்தில் என்ன ரவி,,,,,,ஆச்சாரம் அது இதுன்னு. சுத்த கிறுக்குத்தனமா இருக்கு, இதெல்லாம் பாலோ பண்ணினாத்தான் என்னை முழுமையா ஏத்துக்குவாங்கன்னா, ப்ச்சு…எனக்கு அந்த அங்கீகாரம் வேண்டாம், முட்டாள்தனமான சடங்கு சம்ரதாயங்களுக்கெல்லாம் என்னால வளைஞ்சு குடுக்க முடியாது, அவள் முகத்தில் இருந்த தீவிரமும். ஆச்சாரத்தை அடியோடு வெறுக்கும் அவள் கொள்கைகளையும் பார்த்து ரவி பயந்தே விட்டான், அவளை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்தாக வேண்டுமே? என்ன செய்யலாம், கெஞ்சினான்.

இல்ல ரஞ்சு…. உன்னோட நடவடிக்கைகள் எங்கம்மவோட உணர்வுகளை எவ்வளவு பாதிக்குதுன்னு நீ புரிஞ்சுக்கோடா, ப்ளீஸ், அவள் முகவாய்கட்டையை பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

அவள் அவன் கையை அலட்சியமாத் தட்டி விட்டு, ப்ச், இதோ பாரு ரவி…ச்சும்ம்மா …சென்டிமென்ட் பேசாதே, உனக்குப் பிடிக்கலேன்னா சொல்லிடு, எங்க வீட்டுக்கு போயிடறேன், நீ அங்க வந்து என்னைப்பாரு, ஆன்ட்டி சர்க்கஸ் ரிங் மாஸ்டர் மாதிரி உன்னையும் அங்கிளையும் ட்ரயின் பண்ணி வச்சிருக்காங்க, நீங்க வேணா அவங்க சொல்றபடி ஆடலாம், பட் என்னால முடியாது, ஸாரி, அவன் செய்வதறியாமல் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான்.

….ஓ,காட்…டைம் ஆச்சே…..ரஞ்சு இன்னிக்கு மட்டும்டா ப்ளீஸ்…

அவன் நினைவலைகளிருந்து மீண்டு தலையை மேலே உயர்த்தி பார்த்த பொழுது…….

ரஞ்சு எழுந்து குளித்து கூறைப்புடவையில் மடிசாருடன் கிட்டத்தட்ட மணக்கோலத்தில் பார்த்தது போல் அத்துணை நகைகளோடும், அவன் எதிரில்,

“ரவி நான் ரெடி,,,,நான் முதல்ல கீழே போறேன், நீ குளிச்சு தயாராகி வா என்ன? இன்னிக்கு ஆன்ட்டி என்னென்ன “சில்லி” சம்ப்ரதாயங்கள் சொல்ல. செய்யப் போறாங்கன்னு பார்க்கப்போறேன், சொல்லிக்கொண்டே அவன் பதில் கூறும் முன் மாடிப்படிகளில் காஞ்சிபுரம் பட்டு சரசரக்க இறங்கிச்சென்றாள்,

ரவிக்கு அவள் செய்கைகளைப் பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாகவும் அதே சமயத்தில் குழப்பமாகவும் இருந்தது, என்ன பெண் இவள்? சடங்கு சம்ப்ரதாயங்களுக்கு எதிராகவே பேசும் நடக்கும் இவளால் எப்படி சட்டென்று அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்ள முடிகிறது? இல்லை,,,உடை விஷயம் மட்டும் தான் மாறியிருக்கிறது, மற்றது? பொறுமையா இன்றைக்கு நடக்கப்போகும் விசேஷசத்தையும் (விபரிதத்தையும்) எதிர்கொள்ள தன் மனதை பக்குவப்படுத்திக்கொண்டான் ரவி,

அவன் தயாராகி கீழே வரும் பொழுது இலை போட்டு எல்லாம் பரிமாறி பெண்டுகள் மற்றும் கன்யாக் குழந்தைகள் புதுசு உடுத்தி தயாராக இருந்தார்கள், ஸ்வாமி இலையும் இரண்டு இரட்டை இலையாகப் போட்டு எல்லா அயிட்டங்களும் பரிமாறப்பட்டது, அதற்கு முன்பே மணைப்பலகையில் மாக்கோலம் போட்டு நனைத்து உலர்த்திய புதுப்புடவையை அழகாகக் கொசுவி கொசுவம் தலை போல அமைத்து பலகையில் அதை அழகாக அமர்த்தினாற்போல் வைத்து அதில் சங்கிலிகள் மற்றும் நெக்லஸ். ஜpமிக்கி. தோடு. வளையல்கள் எல்லாம் பாங்காக அணிவிக்கப்பட்டு அது பிரதிபலிப்பதற்காக சுவற்றோரம் மணையின் பின்னால் ஒரு அழகான சற்றே பெரிய கண்ணாடியும் வைத்திருந்தார்கள், பார்ப்பதற்கு யாரோ ஒரு பெண்ணே உட்கார்ந்து இருப்பது போல அவ்வளவு தெய்வீகமாக இருந்தது,

அம்மா ஒவ்வொருத்தருக்கும் மஞ்சள்பொடி கொடுத்து கால்களை அலம்பிக்கொண்டு வருமாறு சொல்ல அவர்கள் அப்படியே செய்து வந்த பின்பு ஒவ்வொருவாpன் வலக்கையையும் தன் இரண்டு கைகளாலும் பிடித்து ராஜம்மா. யோகாம்பாள். விஜயலட்சுமி. என்று பேரைச் சொல்லி (அதாவது இறந்து போன சுமங்கலிகளை நினைவு கூர்வதாகவும். அவர்களையே அங்கு சாப்பிடுவதற்கு வாpத்ததாக அர்த்தம்) சொல்லும் போதே அம்மாவின் கண்களில் நீர் திரையிட்டது, எல்லோரையும் உட்காரச் சொல்லி விட்டு இன்னும் பெயர் விட்டுப்போனவர்கள். வந்தவர்கள் எல்லோரும் வந்து இருந்து நல்லபடியாக நடத்திக்கொடுங்கள் என்று சாமி இலை பக்கம் பார்த்து கைதட்டிவிட்டு கன்யாக்குழந்தைகளையும் அப்படியே சாயம்மா. அஞ்சலி என்று பெயர் சொல்லி கைபிடித்து உட்காரவைத்தாள், சாமிக்குக் கற்பூரம் காட்டி தாயே அம்பிகே எல்லாத்தையும் நல்லபடியா நடத்தி வைடி என்று மனமுருக ப்ரார்த்தனை செய்தாள்,

அவரவர்களின் இலைகளின் பக்கத்தில் ஒரு அழகான ப்ளாஸ்டிக் தட்டை வைத்து முக்கியமாகக் குழந்தைகளிடம் பட்சணம் ஏதாவது இப்ப சாப்பிட முடியலேன்னா எடுத்து அந்தத் தட்டிலே வச்சுடுங்கோ, நான் அப்புறமா பேக் பண்ணி தரேன், ஆத்துக்குப் போய் சாப்பிடலாம், எதையும் எhpயப்படாது என்ன? என்று அன்பொழுகக் கூறி இலையில் பாயஸத்திலிருந்து பட்சணம் வரை எல்லாம் பாpமாறியபின் தத்தம் குத்தினாள் பாலா மாமி,

ஆயிற்று, எல்லோரும் சாப்பிட்டு முடித்து மறுபடியும் தீர்த்தம் விட்டு எல்லோரும் எழுந்தவுடன் அவ்விடத்தில் (சாணம் கிடைப்பது கஉக்ஷ;டமாக இருப்பதால் )துளி மஞ்சள்பொடியைப் போட்டு சாப்பிட்ட இடத்தை சுத்தமாகத் துடைத்தாள்,

அவர்கள் அனைவரையும் கட்டில் போடாத அறைக்குள் போகச் சொல்லி ஒரு புதுப்பட்டுப் பாயை விhpத்து அமரச் சொல்லி எல்லோருக்கும் நீர் மோர். பானகம். சுக்குவெல்லம் கொடுத்தாள், பின்பு எல்லோருக்கும் இரண்டு பாதங்களிலும் நலங்கு மஞ்சளை ஒரு விரற்கடை அளவு அகலம் வைத்து பென்சில் ஸ்கேல் வைத்து அளந்தாற்போல் அவ்வளவு அழகாக பூசினாள், பின்பு மடிசார் தலைப்பில் வெற்றிலை பாக்கு.குண்டுமஞ்சள்கிழங்கு. குங்குமம். ஸ்டிக்கர். கண்ணாடி வளையல்கள்.புடவை ரவிக்கை. மட்டைத்தேங்காய். சீப்பு. சற்றே பொpய கண்ணாடி. சோப்புடப்பா. சில்லறை போட ஒரு பர்ஸ் மற்றும் இதையெல்லாம் போட்டுக் கொடுக்க ஒரு அழகான ஜpப் வைத்த கோp பேக், கன்யாகுழந்தைகளுக்கு அவர்கள் வயதிற்கேற்றவாறு உடைகள் மற்றும் கலர் பென்சில்கள். ஜhமெட்hp பாக்ஸ். வாட்டர்பேக் வகையறhக்கள், மாமி எல்லாவற்றிலும் பக்கா பர்ஃபெக்ட் லேடி, எந்த விஉக்ஷயத்திலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத ரகம்,

எல்லோருக்கும் தனித்தனியே சந்தனம் குங்குமம் கொடுத்து வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து பெண்டுகளுக்கு நமஸ்காரம் செய்யச் சொல்லி அட்சதை போடச் சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள், (ரஞ்சுவைத் தவிர) வணங்கி எழுந்ததும் பாலா மாமி. உங்க எல்லோரையுமே நான் மறைந்து போன என்னோட முPதாயர்களாகத்தான் நினைக்கிறேன், நீங்கள் எங்களை வாழ்த்துவது அவர்களே வந்து மனப்பூர்வமாக வாழ்த்துவதாகத்தான் நம்புகிறேன், நான் கட்டிக் காக்கும் ஆச்சாரமும். சம்ப்ரதாயங்களும் நிச்சயமாக எனக்குப் பின்னே வரக்கூடிய தலைமுறைகளைக் காக்கும் என்று உறுதியாக நம்புகிறேன், சொல்லும்போது விழிக்கோடியில் கண்ணீர்,

எல்லோரையும் அனுப்பியபின் சற்றே ஆயாசமாக உணர்ந்தாள் மாமி, நெற்றியிலும் கழுத்திலும் ஒழுகிய வியர்வையை இடுப்பில் சொருகியிருந்த கைக்குட்டையால் துடைத்தாள், பின்பு ஏதோ நினைவுக்கு வந்தவளாக வாசலை எட்டிப் பார்த்தாள், பார்த்தவுடன் அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி,

அங்கே “அம்மா,,,,,அம்மா என்ற பாpச்சயமான குரல் இரண்டு முறை ஒலித்தது, அவளுக்குப் புhpந்து விட்டது, அவள் முகத்தில் காலைச் சு{hpயனைப் போல் அவ்வளவு பிரகாசம், வாசலுக்கு ஓடினாள், அங்கே சிவப்பு நிறச் சின்னக்கட்டம் போட்ட கைத்தறி சேலை அணிந்து முகம் நிறைய மஞ்சளும். நெற்றி நிறைய குங்குமப் பொட்டும். ஸ்நானம் செய்த தலையை கோடாலி முடிச்சிட்டு அதில் அரைமுழக் கதம்பம் சு{டியபடி பூக்காhp “ரங்கு” என்கிற ரங்கம்மாள், பாலா மாமியின் ஆஸ்தான பூக்காhp,

வாடி ரங்கு,,,,,,ஒன்னைத்தான் இத்தனை நாழியா எதிர்பார்த்திண்டு இருந்தேன், ஒனக்காகத்தான் சாப்பிடாமக்கூடக்காத்திண்டு இருக்கேன்,

அதற்குள் ரவியும் ரஞ்சுவும் அங்கே வர,,,என்னம்மா,,,நாங்கள் எல்லோரும் சாப்பிட்டாச்சு, உனக்காகத்தான் ரஞ்சு காத்திண்டு இருக்கா, வாம்மா என்று அன்போடு அழைத்தானே தவிர அதில் ஒரு பதட்டமும் ஒளிந்து கொண்டுதான் இருந்தது, ஏனெனில் இவ்வளவு நேரம் அவள் காத்திருந்ததே பொpய விஉக்ஷயமில்லையா?

இதோ வரேன் ரவி,,,,,,,நான் யாருக்காக முக்கியமா காத்திண்டு இருந்தேனோ அந்த வி,ஐ,பி, இப்பத்தானே வந்திருக்கா, அவளோட சேர்ந்து சாப்பிடத்தான் வெயிட் பண்ணிண்டு இருந்தேன், இதோ ஒரு நிமிடம்,,,சொல்லிவிட்டு.

“வாடி ரங்கு வந்து மஞ்சள்பொடி வாங்கிண்டு முகத்திலேயும் கை கால்களிலேயும் பூசிண்டு துளி எடுத்து சொம்பு ஜலத்தில் கரைச்சு காலலம்பிண்டுவாடி” என்று கூறி விட்டு நகர்ந்தாள்,

ரங்கு வந்ததும் “உட்கார்டீ” என்று அவளுக்கு ஒரு மணையையும் போட்டு சாமி முன்னால் இருந்த இரட்டை இலைகளில் முன்னால் இருந்த இலையை மெதுவாக நகர்த்தி அவள் முன்னால் போட்டு எல்லா பதார்த்தங்களையும் இரண்டு இலைகளுக்கும் நிரவி பாpமாறினாள், பின்பு ஏதோ நினைவுக்கு வந்தவளாக ,,,,,அடடா ரஞ்சு சாப்பிடஹணுமே,,,,, “ரவி நுனி இலைகளெல்லாம் சமையல் மேடை மேலே வச்சுருக்கேன் பார், அதில ஒண்ஹணு கொண்டு வந்து ரஞ்சுவுக்குப் போடு,,என்றhள்,

ரவிக்கு ஒன்றும் புhpயவில்லை, சாமி இலையில் மாமியாரும் மருமகளும் தானே சாப்பிடுவது வழக்கம், அம்மாவின் மடி என்ன? ஆச்சாரம் என்ன? ஒரே நாளில் எப்படி இப்படியொரு மாற்றம்? பூக்காhpக்கு சாமி இலையா? வீட்டு மருமகள் ரஞ்சுவுக்கு எதுவுமே இல்லையா? ரவி அம்மாவின் செய்கைகளால் மிகவும் குழப்பம் அடைந்தான், ஏனென்றhல் இந்த விஉக்ஷயத்தைப் பற்றி ஒரு வாரம் முன்புதான் அவனுக்கும் ரஞ்சுவுக்கும் இடையில் ஒரு பொpய டிஸ்கஉக்ஷன் நடந்தது,

இறந்து போன சுமங்கலிகளையும். கன்யாக்குழந்தைகளையும் நினைவு கூறும் வகையில் இந்த சுமங்கலிப் ப்ரார்த்தனை,அதாவது பெண்டுகள், அவர்கள் மனத்தில் எவ்வளவோ ஆசாபாசங்கள். ஏக்கங்கள் இருக்கும், ஆகையால் அவர்களது ஆத்மா சாந்தியடையும் வகையில் அவர்களை நினைத்து இவர்களை அவர்களாகவே வாpத்து அவர்களுக்கு உணவிட்டு வஸ்த்தரம் கொடுப்பதன் முPலம் இறந்த நம் முன்னோர்களுடைய ஆசியைப் பெறுவதற்காகவும். அவர்களை நினைவு கூறும் நாளாகவும். அதன் முPலம் அவர்களின் நல்லியல்புகள். குணநலன்கள். பழக்கவழக்கங்கள் இவற்றைப் பற்றி எல்;லாம் பேசி அதன் முPலம் பல வாழ்வியல் பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் அவர்களது ஆசிகள் நம்மையும் நமக்குப் பின் வரப்போகிற நமது சந்ததிகளையும் நன்றhக வாழவைக்கும் என்ற நம்பிக்கையிலும் தான் இவற்றையெல்லாம் நாம் நடத்துகிறேhம்,

வகுப்பில் தமிழ் ஆசிhpயர் செய்யுளுக்குத் திரண்ட பொருள் கூறுவது போல் “பெண்டுகள்” தாத்பர்யத்தை ரஞ்சுவுக்குப் பொறுமையாக அவள் புhpந்து கொள்ளும் வண்ணமாகவும் அழகாக கூறினான், ஆனால் பதிலுக்கு ரஞ்சு. “ ஸில்லி ரவி இதெல்லாம் செஞ்சாத்தான் நாம நல்லா இருப்போமா? சுத்தப் பேத்தல் ரவி ஐ டோன்ட் அக்hp வித் ஆல் தீஸ் ஃபூலிஉக்ஷ; பிலிவ்ஸ் அவள் வெகு அலட்சியமாக அவன் சொன்ன தாத்பர்யத்துக்கு முட்டாள்தனமான நம்பிக்கைகள் என்று ஒரு புது வியாக்யானம் தந்தாள்,

ஆனால் அவன் விடவில்லை, பொறுமையாக மறுபடியும் ரஞ்சு ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட், இதன் முPலமா நாம் தருமம் செய்கிறேhம், அன்னதானம். வஸ்த்ர தானம் எக்ஸட்ரா, இதெல்லாம் நல்ல விஉக்ஷயங்கள்தானே,,,,இதை நீ தப்பு என்று சொல்வாயா?

இல்லை,, நீ சொல்றது ஓ,கே, ஆனா நம்ப ஆளுங்களையே கூப்பிட்டுதான் தரஹணுன்னு என்ற கட்டாயமா என்ன? ஒரு அனாதை அல்லது இல்லாதவர்கள் அல்லது இதில் நம்பிக்கை உள்ளவர்கள் இவர்களைக் கலந்து கொள்ளச் செய்யலாமே? அதிலும் நம்மவர்களையேதான் நாம் அழைக்கிறேhம், நீ என்ன சொன்னாலும் சாp, என்னால ஒத்துக்க முடியல, ஒண்ஹணுவேணா செய்யறேன், நீ இவ்வளவு தூரம் சொல்றதால நெக்ஸ் வீக் இந்த சொpமனில நான் பங்கெடுத்துக்;;;;;;கறேன், ஓ,கே, பட் பிகாஸ் ஆஃப் யூ? டோன்ட் ஒhp, அப்பபொழுது எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பாலா மாமியின் காதுகளில் ரஞ்சுவின் நம்ப ஆளுங்களையே ,,,,,,,,,மற்றும் அதன் பின்னால் அவர்கள் பேசியது மொத்தமும் காதில் விழுந்தது, அவர் இதழ்க் கோடியில் ஒரு மந்தஉறhசப் புன்னகை,

“பார்வதி மாமி கொஞ்சம் வந்து எங்களுக்குப் பாpமாறுங்கோ,,,
இதோ வந்துட்டடேன் என்று சமையல் செய்ய வந்த பார்வதி மாமி பாpமாறத் தொடங்கினாள்,

ரவி தன் நினைவலைகளிலிருந்து மீண்டு ஏதோ பேச வாயெடுத்தான், அவகை; கையமர்த்தி விட்டு. “அந்த நுனி இலையில் நீ உட்கார்ந்துக்கோ ரஞ்சு” என்றhள் பாலா மாமி,

“ரங்கு வேஹணுங்கறதை நன்னா கேட்டு வாங்கிச் சாப்பிடுடி ரங்கு கூச்சப்படாத என்ன,,,,,என்று செல்லமாகச் சொன்னாள்,

சாப்பிட்டு முடித்தவுடன் இலையை எடுக்கப்போன ரங்குவிடம்.”என்ன காhpயம்டி பண்ற,,எனக்கு வர புண்யமெல்லாம் நீ எல எடுத்தாப் போயிடும்டீ,,,பேசாத அந்தப் பக்கம் போய் பட்டுப்பாய்ல உட்கார், நான் இப்ப வந்துடறேன்,”என்று சொல்லி உடனே வந்து ரங்குவுக்கு நலங்கு மஞ்சள் வைத்து நீர்மோர். பானகம். சுக்குவெல்லம் கொடுத்தாள், நலங்கு வைப்பதற்காக காலை காண்பிக்க ரங்கு கூச்சப்பட்டாள், “என்ன தாயி நீ போய் என் காலைத் தொட்டுகிட்டு”,,, என்று நௌpந்தாள்,

“என்னடி ரங்கு. என் மாமியார் செல்லம்மாளா வாpச்சு உன்னை நலங்கு மஞ்சள் இட்டுக்க கூப்பிட்டா நீ என்னமோ ரொம்ப அலட்டிக்கறயே? என் மாமியார் கூட இப்படித்தான், அவருக்கு எல்லாத்தையும் இரண்டு முPன்று முறை கேட்டுக் கேட்டுச் செய்யஹணும், சித்த உபசாரம் பண்ணஹணும், ஆனாலும் ரொம்ப நல்லவர்டி ரங்கு, என்னைத் தன் பெண் போலப் பார்த்துண்டார், இப்பல்லாம் அந்த மாதிhp மனுஉக்ஷhளைப் பார்க்க முடியாதுடி,”

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சுவுக்கு ரவி சொன்னதெல்லாம் (முக்கியமாக பொpயவாளோட குணநலன்கள். பண்புகள் ஆகியவைகளை நினைவு கூர்வது ) ஞாபகம் வந்தது, ஏதோ சிந்தனையில் அவள் புருவங்கள் சுருங்கின,

சற்று நேரம் கழித்து மாமி ரங்குவிடம் சாமி புடவையை எடுத்துக் கொடுத்து. “ரங்கு இதைக் கட்டிக்கோ ஆனா ஒம்போது கஜம் ரெண்டு சுத்தா சுத்திக் கட்டிக்கோ” என்றhள், இதைக் கேட்டு ஒரு மாதிhp சிhpத்த ரங்கு “நீங்க புடவையைக் குடுங்க மாமி”என்று சொல்லி அந்த அறையிலேயே கதவை ஒருக்களித்து விட்டு புடவையைக் கட்டிக்கொள்ள ஆரம்பித்தாள்,

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ரங்கு “ரங்கு மாமி” யாகி விட்டாள், பாலா மாமி ஆச்சர்யத்தில் கண்கள் விhpய ரங்குவைப் பார்த்தாள், அவள் கண்களில் “எப்படி இது” என்பதற்கான விடை தொpந்து கொள்ளும் ஆவல்,

“மாமி நான் சின்ன வயசில ஒரு ஐயர் ஓட்டல்ல வேல செஞ்சேன், அப்ப அந்த மாமி புடவை கட்டும்போது அவங்ககிட்ட கேட்டேன், அவங்க இதை எப்படி கட்டஹணுன்னு கத்துக்கொடுத்து. எங்களவங்களே இப்பல்;லாம் இதைக் கட்டிக்க அலுத்துக்கறh,,,ஆனா நீ இவ்வளவு ஆசைப்படறியேடி குழந்தை என்று சொல்லி ஒரு நாள் கட்டி விட்டாங்க, அப்படியே பதிஞ்சிடுச்சு மாமி,

கேட்கக் கேட்க பாலா மாமியின் ஆனந்த அதிர்ச்சி அதியமாகியது, “என்ன மாமி அப்படியே பார்க்குறீங்க? என்னை ஆசீர்வாதம் பண்ஹணுங்க.” என்று காலில் விழப்போனவளைத் தடுத்து. “அடி அசடே இன்னிக்கு நாங்கதாண்டி உங்கால்ல விழஹணும், சித்த இரு,,,,,என்று அட்சதையை அவள் கையில் கொடுத்து ,,,ஏன்னா,,உங்களைத்தானே இங்க சித்த வரேளா,,,,என்று கணவரை அழைத்;தாள், இருவரும் ரங்குவின் காலில் சாஉக்ஷ;டாங்கமாக விழுந்து நமஸ்காpத்தனர், ரங்குவின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர்,

“அம்மா,,,ஐயா,,,,நீங்க உங்க குடும்பம். உங்க வம்சம் என்னென்னிக்கும் நல்லாயிருக்கஹணுமின்னு எங்க முனீஸ்வரனை வேண்டிக்கறேம்மா,,, என்றhள் தழுதழுக, அவள் முகம் முழுவதிலும் பாலா மாமியின் குடும்பம் என்றென்றும் நன்றhக இருக்கவேண்டும் என்கிறதாக உணர்ச்சிக்குவியலாக நின்றhள்,

ரஞ்சுவுக்கு அங்கு நடப்பது எதுவுமே பிடிக்கவும் இல்லை.புhpயவும் இல்லை,எhpச்சலாக வேறு வந்தது, ரவி அம்மாவின் முரண்பாடான இந்த நடவடிக்கையால் மிக மிக குழம்பிப் போயிருந்தான், அப்பொழுது எல்லோரையும் பார்த்து பார்வையிலேயே அனைவரது எண்ணஓட்டங்களைப் புhpந்த அவள்,,,,,,,

“எல்லோரும் அப்படியே சித்த ஒக்காருங்கோ,,,உங்க எல்லோருக்கும் ஒரு விஉக்ஷயத்தை இங்கே தௌpவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என்று ஒரு பீடிகையோடு ஆரம்பித்தாள்,

‘நீங்க எல்லோரும் இப்ப எம்மேல கோபமாகவும் எhpச்சலாகவும் இருப்பேள், அது உங்க எல்லார் முகத்தையும் பார்க்கும்போதே தொpகிறது, என்னடா. மடி. ஆச்சாரம்ன்னுட்டு எல்லோரையும் இடுக்கிப்பிடி பிடிக்கும் மாமி இன்னிக்கு நடந்துண்ட விதம் உங்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்திருக்கும், ஆனா எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு,பொதுவா நம்மாங்கள்ல சுமங்கலிப் பிரார்த்தனை செய்யும் போது ஆத்து மாட்டுப்பொண்களும் மாமியாரும்தான் ஸ்வாமி இலையில் சாப்பிடுவது வழக்கம், ஆனால் நான் யோசித்துப் பார்த்தேன், ஸ்வாமிக்குப் படைத்ததை அதிதி ஒருவர் உண்டால் மிகவும் நல்லதாயிற்றே, அவர்கள் உண்டு நம்மை வாழ்த்தினால் நம் வம்சத்துக்குத்தானே நல்லது, அதனால் நம்மை. நம் கலாச்சாரங்களையும் மதிக்கத் தொpந்த ஒரு மனுஉக்ஷpக்கு இந்த மாpயாதை செய்ய வேண்டும் என்று தோன்றியது, உடனே என் ஞாபகத்திற்கு வந்தது நம் பூக்காhp “ரங்கு”தான் அதுக்கும் ஒரு காரணம் இருக்கு, ஒரு நாள் நான் பூ வாங்கப் போன போது ரங்கு என்னைப் பார்த்தவுடன் இன்னும் சிறிது ஒதுங்கி நின்றுகொண்டு தன் மகளை விட்டு எனக்குப் பூ கொடுக்கச் சொன்னாள், நான் ஏண்டி என்று கேட்டபொழுது விவரம் சொன்னாள்,

“இல்லம்மா,,,நீங்கல்லாம் ரொம்ப ஆச்சாரமானவங்க, அதோட எங்க வீடுங்கல்லேயும் கிராமத்தில இருக்கும்போது “அந்த” முPஹணுநாளும் தலைக்கு ஊத்திகிட்டு தள்ளி தனியாத்தான் இருப்போம், எங்க ஆத்;தா. அப்பத்தா. என் மாமியா எல்லாம் இதைப் பத்தி எல்லாம் சொல்லும், அந்;த நேரம் நம்ம உடம்புல இருந்து மாசம் முPச்சு{டும் சேர்ந்;த அழுக்கெல்லாம் வெளியேறுதாம், அதனால அந்த நேரத்தில நம்ம கையால எதுவும் செய்யக்கூடாதாம், அதோடு கூட நமக்கு அந்த நேரத்துல ஓய்வு கிடைச்சா நல்லது அப்படீன்னெல்லாம் எங்க அப்பத்தா சொல்லும், மத்தவங்களுக்கு எப்படியோமா எனக்கு மனசு ஒப்பல, அதனால அந்த நாள்ல நான் வியாபாரத்துக்கு வந்தாக்கூட என் பொண்ணை விட்டுத்தான் பூகுடுக்க சொல்லுவேன், எனக்கு எங்க பொpயவங்க சொன்னதெல்லாம் மதிக்கோஹணும் ஏன்னா தொpயாம அவங்க எதுவும் சொல்லமாட்டாங்க அதாம்மா என்று ஒரு பொpய பிரசங்கம் பண்ணி முடித்தாள் ரங்கு,

நான் யோசித்தேன், பொpயவர்கள் வார்த்தைகளில் இத்துணை நம்பிக்கை வைத்து அவர்கள் வாக்கை வேதவாக்காக மதித்து அதை வாழ்வியலிலும் கடைபிடிக்கும் ரங்குவிற்கு ஸ்வாமி இலை மாpயாதை பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் என் மனதில் ஒருசிறு குழப்பம் இருந்தது, அதை விலக்குகிறhற்போல் என் மாட்டுப்பெண் ரஞ்சுவும் இதே கருத்தை என் பையனிடம் விவாதித்துக்கொண்டிருந்தாள், அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன், ரங்கு நம் குலத்தைச் சேர்ந்தவளாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவள் எண்ணங்களும் பொpயோhpன் கருத்துக்களை பின்பற்றவேண்டும் என்ற மனப்பாங்கும் இருந்தது, இவளுக்கு மாpயாதை செய்ததன் முPலமாக என் முPதாதயர்கள் என் பூiஜயை எற்றுக் கொள்வார்கள் என்று திடமாக நம்பகிறேன்,

இவ்வளவு நேரம் தன் மாமியார் பேசியதைக் கேட்ட ரஞ்சுவின் மனதில் ஒரு பளீர் மின்னல், அதில் மாமியாhpன் பளிங்கு மனது புhpய ஆரம்பித்தது, அவளுக்கு ஆச்சாரத்தின் உண்மையான அர்த்தம் தொpந்து, அவள் பார்வையில் மாமியார் இப்பொழுது கோபுரகலசமாக ஜெhலித்தாள்,

Print Friendly, PDF & Email

3 thoughts on “சுமங்கலிப் பிரார்த்தனை

  1. இது ஒரு சிறு கதையல்ல. ஒரு பழைய தத்துவத்தை கதையாக சொல்லியிருக்கிறார் கதை ஆசிரியர். அவருக்கு என் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  2. சூப்பர் கதை. ஜாதிகள் Illaiadi பாபா என்ற Bharathi கருத்தை தெளிவு படுத்தி உள்ளார் .

    தம்புசாமி.

  3. மிஹவும் அருமையான கதை. சுமங்கலி பூஜை மிஹ விவரமாய் சொல்லப்பட்டு உள்ளது. பூக்காரி அம்மாவிற்கு மரியாதை செய்வதற்கான காரணம் அருமையஹா சொல்லப்பட்டுள்ளது. முதலில் ஏன் நமவர்களை மட்டும் குப்பிட வேண்டும் என்று சொன்ன மருமகள் பூக்காரிக்கு மரியாதை செய்யும்போது முகம் சுளிபதாக எழுதியது அருமையான observation ஒப் கேரக்டர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *