சீ.. இந்த வயசிலே…இந்த ஆசையா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 6,082 
 
 

சுந்தரம் தம்பதிகள் தங்கள் பெண் ரமாவை அமொ¢க்காவில் ஓரு பொ¢ய I.T.கம்பனியில் நல்ல உத்தியோகத்தில் வேலை செய்து வரும் கண்ணன் என்னும் பையனுக்கு நிச்சியம் பண்ணினார்கள். தங்கள் சேமிப்பை எல்லம் போட்டு ரொம்ப தடபுடலாக ‘எத்திராஜ் கல்யாண மண்டபத்தில்’ ரமா கண்ணன் கல்யாணத்தை செய்து முடித்தார்கள்.

சுந்தரம் ‘கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில்’ ஒரு பெரிய ப்லாஸ்டிக் சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து பிஸினஸை நல்ல லாபத்தில் நடத்தி வந்தார். தன் தொழிற்சாலைக்கு பக்கத் திலேயே ரெண்டு ‘கோடவுன்’ வைத்து அதில் ப்லாஸ்டிக் மூலப் பொருள்களும்,பாக்கிங்க் செய்ய நிறைய பைகளும்,கோணிப் பைகளும் வாங்கி ‘ஸ்டோர்’ பண்ணி இருந்தார்.

பெரிய பெண் ரமாவுக்கு கல்யாணம் ஆன அடுத்த வருஷமே,தன் இரண்டாவது பெண் உமா வுக்கும் அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கும் சேகர் என்கிற பையனுக்கு நிச்சியம் பண்ணினார் கள் சுந்தரம் தம்பதிகள்.

பிள்ளை வீட்டார் கண்ணன் சுந்தரம் தமபதிகளைப் பார்த்து பொண்ணுக்கு நிறைய நகைகள் போடச் சொல்லி,பையன் சேகர் அமெரிக்காவில் இருந்து கல்யாணத்திற்க்கு வந்து வரவும்,கல்யாணத் திற்கு பிறகு சேகரும் உமாவும் அமெரிக்கா போகவும் விமான ‘டிக்கட்’ வாங்கச் சொன்னார்கள்.உடனே “எங்களுக்கு சம்மதங்க.நீங்க கேட்டபடி நாங்க எல்லாம் செய்யரோமுங்க”என்று ஒத்துக் கொண்டார்கள் சுந்தரம் தம்பதிகள்.

பத்து நாள் லீவில் ‘பெண்’பார்க்க வந்த சேகர் தனக்குப் பெண் பிடித்து இருக்கு என்று சொன் னவுடன் சேகர் ஊருக்குப் போகும் முன் ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சியதார்த்தமும் பண்ணி முடித்தா ர்கள் சுந்தரம் தம்பதிகள்.

நிச்சியதார்த்தின் போது சேகர் தன்னால் உடனே இந்தியா வர முடியாது என்று சொன்னதால் அவன் சௌகா¢யப்படி ‘கல்யாண தேதி’ யை ஒரு ஒன்பது மாசம் தள்ளி வைக்க ஒத்துக் கொண்டார்கள் சுந்தரம் தம்பதிகள்.

இதற்கிடையில் சுந்தரம் தொழிற்சாலையில் யூனியன் தகராறு அதிகா¢த்து வந்தது.’போனஸ்’ வேணும்,சம்பள உயர்வு வேணும்,பிரமோஷன் வேணும்’ போன்ற பல கோரிக்கைகளை தொழிலாளர்கள் கேட்டார்கள்.’பிலாஸ்டிக்’ சாமான்கள் தயாரிப்பும் குறிப்பிட்ட அளவுக்கு இல்லாமே,மிகவும் குறைவாக வே தயார் பண்ணி வந்தார்கள் தொழிலாளர்கள்.

சுந்தரம் யூனியன் தலைவர்களை தன் ரூமுக்கு அழைத்து பல முறை பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் ‘யூனியன்’ தலைவர்கள் மிகவும் பிடிவாதமாக இருந்து வந்ததார்கள்.தான் போட்ட ‘அக்ரிமெண்ட்’ படி ‘பிலாஸ்டிக்’ பொருள்களை சுந்தரத்தினால் அந்த கம்பனிகளுக்கு ‘சப்ளை’ பண் ண முடியவில்லை.

‘அக்ரிமெண்ட்’ போட்ட கம்பனிகள் வழக்குப் போட்டு நஷ்ட ஈடு கேட்க ஆரம்பித்தார்கள். சுந்தரம் யூனியன் தலைவர்கள் மிரட்டலுக்கு பயப்படவில்லை.அவருடைய “அக்கவுண்ட் ஆபீசர்’ பண தட்டு பாடு,’கோர்ட் கேஸ்’,’பாங்க்’,இவைகளுக்கு போய் வந்து கொண்டு மிகவும் ‘பிஸி’யாக இருந்தார்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.இரவு இரண்டு மணிக்கு ‘செக்யூரிட்டி கார்ட்’கொஞ்சம் கண் அசந்த போது யூனியன் ஆள் ஒருவன் இரண்டு ‘கோடவுனி’லும் கண்ணாடி ஜன்னலை உடைத்து பெட்ரோ லை உள்ளே ஊத்தி பத்த வைத்து விட்டான்.’பிலாஸ்டிக் கோடவுன்’ ஆனதால் நெருப்பு வேகமாக பற்றிக் கொண்டு எல்லா மூலப் பொருள்களும் பூராவும் எரிந்து சாம்பலாகி விட்டது.

‘கோடவுன்’ சேதாரம் ஆனதற்கு ‘அக்கவுண்ட் ஆபீசர்’ ‘இன்சூரன்ஸ்ஸ¤க்கு’ அப்ளை பண்ண ‘இன்சூரன்ஸ் பாலிஸியை’ப் பார்த்த போது அவருக்கு தூக்கி வாரிபோட்டது.அந்த ‘இன்ஷ¥ரன்ஸ் பாலிஸி’ முதல் நாளே முடிந்து விட்டு இருந்தது.அதனால் சுந்தரத்திற்கு ‘இன்சூரன்ஸ்ஸில்’ இருந்த காலணா கூட திரும்பி வர வில்லை.பெருத்த நஷ்டம் ஏற்பட்ட சுந்தரம் ‘பாக்டரி’யை இழுத்து மூடி விட்டார்.தன் வீட்டை எழுபது லக்ஷம் ரூபாய்க்கு அடமானம் வைத்து கொடுக்க வேண்டிய கடன்களை எல்லாம் கொடுத்து முடித்தார் சுந்தரம்.விஷயம் கேள்விப் பட்டு சுந்தரம் சம்மந்தி நடரா ஜன் சுந்தரம் வீட்டுக்கு வந்து அவரை விசாரித்தார்.சுந்தரம் நடந்த எல்லா சமாசாரங்களையும் சம்மந்தி இடம் சொல்லி வருத்தப்பட்டார்.

நடராஜன் அவருக்கு ஆறுதல் சொன்னார்.

கண்ணண் தன் அப்பா அமொ¢க்க வர ‘எமிரேட்ஸில்’ போக வர டிக்கட்டை அனுப்பவே அவர் குறிப்பிட்ட தினத்தில் கிளம்பிப் போய் தன் பையன் வசிக்கும் ‘சான் பிராண்ஸிக்கோ’வுக்குப் போய் சேர்ந்தார் நடராஜன்.

கண்ணண் வேலை செய்து வரும் ஆபீஸ் அவன் இருக்கும் வீட்டில் இருந்து ரொம்ப தூரம். ஆபீஸ் போகவே ஒரு மணிக்கு மேல் ஆகும்.அவன் தன் மணைவி ரமாவைத் தான் தன் அப்பாவை ‘சூப்பர் மார்கெட்டுக்கும்’,‘மால்’ களுக்கும் அழைத்துப் போய் வரச் சொல்லி இருந்தான். ‘சூப்பர் மார்கெட்’ போகும் நாட்களில் எல்லாம் கண்ணன் தன் அப்பாவுக்கு ஒரு நூறு டாலர் கையில் ‘காஷ¤ம்’ கொடுத்து வந்தான்.

ரமா அவரை சூப்பர் மார்கெட்டுக்கு அழைத்து போகும் போதெல்லாம் அவர் ரமாவை விட்டு விட்டு அவர் மட்டும் ரகசியமா அங்கே இருக்கும் ‘பார்மஸி’க்குப் போய் ஏதோ வாங்கிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்.இதை கவனித்த ரமா அவரைப் பார்த்து “மாமா,நீங்க தனியா என்ன வாங்கப் போனீங்க” என்று கேட்டாள்.அவர் அதற்கு “ஒன்னுமில்லேம்மா,இங்கே இருக்கிர ‘சூப்பர் மார்கெட்லே’ என்ன,என்ன, மருந்து எல்லாம் கிடைக்குதுன்னு பாத்துக் கிட்டு இருந்தேன் அவ்வளவு தான்”என்று ஒரு பொய்யை சொன்னாரே ஒழிய தான் என்ன வாங்கினேன் என்பதை மட்டும் அவர் சொல்லவே இல்லை.

அன்று இரவே தன் கணவனிடம் இதைச் சொன்னாள் ரமா.கண்ணனும் பதில் ஒன்றும் சொல்லவில்லை.அடுத்த முறை ரமா ‘சூப்பர் மார்கெட்டு’க்கு போகும் தினத்தன்று நடராஜன் தன் பையன் கண்ணனிடம் கொஞ்ச ‘டாலர்’ வாங்கிக் கொண்டார்.

இந்த தடவையும் அவர் ‘சுப்பர் மார்கெட்டு’க்கு போனவுடன் ரமாவை சாமான்கள் வாங்கிக் கொண்டு ‘காஷ் கவுண்டருக்கு’ வரச் சொல்லி விட்டு,அவர் மட்டும் தனியாய் ‘பார்மஸிக்கு’ப் போய் ஏதோ வாங்கிக் கொண்டு ‘காஷ் பே’ பண்ணி விட்டு வந்தார்.இந்த தடவையும் அவர் ஏதோ வாங்கிக் கொண்டு ‘காஷ் கவுண்டருக்கு’ வந்ததும் “‘பார்மசியில்’ என்ன மாமா நீங்க வாங்கினீங்க” என்று கேட்டாள் ரமா.“ஒன்னும் இல்லேம்மா,சும்மா பாத்து கிட்டு இருந்தேன்” என்று மறுபடியும் ஒரு பொய் யைச் சொன்னார் நடராஜன்.

அன்று இரவும் தன் கணவனிடம் இந்த விஷயத்தை சொன்னாள் ரமா.”ஏதோ அவர் வாங்கிக்கிட்டு போறார் ரமா.நீ ஏன் அவரை அதெல்லாம் கேட்டுக் கிட்டு இருக்கே” என்று சற்று கோபத்துடன் சொல்லவே ரமா அன்றில் இருந்து தன் கணவனைக் கேட்பதை விட்டு விட்டாள்.

அன்று சாயங்காலம் நடராஜன் “அம்மா ரமா,நான் கொஞ்சம் காலாற ‘வாக்கிங்க்’ போயிட்டு வறேன்.எனக்கு தலையை ரொம்ப வலிக்குது”என்று சொல்லி விட்டு வெளியே ‘வாக்கிங்க்’ கிளம்பிப் போனார் நடராஜன்.

அவர் வெளியே போய் ஒரு ஐஞ்சு நிமிஷம் கழித்து ரமா மெல்ல அவர் ‘ரூமு’க்குப் போய் திறந்து இருந்த அவர் ‘சூட் கேஸை’ திறந்துப் பார்த்தாள்.அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.மாமா நிறைய ‘வயாக்ரா மாத்திரைகளை’ வாங்கி வைத்து இருந்தார்.சட்டென்று ‘சூட் கேஸை’ மூடி விட்டு ‘ரூமை’ விட்டு வெளியே வந்து விட்டாள்.
’அத்தே செத்துப் போய் அஞ்சு வருஷம் ஆவுது.இவர் ஏன் ‘வயாக்ரா மாத்திரை’ களை வாங்கிச் சேத்துக் கிட்டு இருக்கார்.சீ…இந்த வயசிலே…இந்த ஆசையா …’ என்று எண்ணிப் பார்க்கும் போதே ரமாவுக்கு தன் மாமனார் போ¢ல் ஒரு அருவருப்பு ஏற்பட்டது.

வெளியே போன நடராஜனுக்கு தலை வலி அதிகமாகி விடவே அவர் போன பத்தாவது நிமிஷ மே திரும்பி வந்து விட்டார்.”அம்மா ரமா,எனக்கு தலையை ரொம்ப வலிக்குதும்மா.எனக்கு சாப்பாடு போட்டு விடு.நான் சாப்பிட்டு விட்டு படுக்கப் போகலாம்ன்னு இருக்கேன்” என்று சொல்லி விட்டு கைகளை கழுவி கொண்டு வந்து டைனிங்க டேபிளின் முன்னால் வந்து உட்கார்ந்தார்.ரமாவும் மாமாவுக்கு சாப்பாடு போட்டாள்.

நடராஜன் சாப்பிட்டு விட்டு கைகளை கழுவிக் கொண்டு வந்து ரமாவைப் பார்த்து “நான் படுக்கப் போறேன்ம்மா” என்று சொல்லி விட்டு படுக்கப் போய் விட்டார்.
ஆபிஸில் இருந்து திரும்பி வந்த கண்ணன் சாப்பிட உட்கார்ந்தான்.ரமாவும் அவன் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.“அப்பா எங்கே ரமா.அவர் சாப்பிட்டுட்டு சீக்கிரமா படுக்கப் போயிட்டாரா என்ன”என்று கேட்டான் கண்ணன்.”அவர் தனக்கு தலையை ரொம்ப வலிக்கு து ன்னு சொல்லிட்டு சாப்பிட்டு விட்டு படுக்கப் போயிட்டாருங்க” என்றாள் ரமா.

சாப்பிட்டுக் கொண்டே ரமா கண்ணனைப் பார்த்து “உங்க அப்பா நீங்க கொடுத்த ‘டாலர்லே’ என்ன வாங்கி இருக்கார் தொ¢யுமா.சொன்னா வெக்கக் கேடு.இந்த வயசிலெ உங்க அப்பா நிறைய ‘வயாக்ரா மாத்திரைகளை’ வாங்கி வச்சுக் கிட்டு இருக்கார்”என்று சொல்லி முகத்தை வெறுப்பாக வைத்துக் கொண்டு இருக்கும் போது மருமக சொன்னதைக் கேட்டுக் கொண்டே ரூமை விட்டு வெளி யே வந்தார் நடராஜன்.

“என்ன இன்னைக்கு ஆபீஸில் இருந்து கண்ணன் சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டான் போல் இருக்கே.அவன் குரல் கேட்டதேன்னுத் தான் நான் எழுந்து வந்தேன்” என்று சொல்லிக் கொண்டே ‘டைனிங்க் டேபிள்’ அருகே வந்தார்.உடனே கண்னன் நிலைமையை சமாளிக்க “அப்பா,ரமா உங்க ளுக்கு ரொம்பத் தலை வலின்னு சொன்னாளே,இப்ப எப்படி இருக்குப்பா” என்று கரிசனத்தோடு விசாரித்தான்.

குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் ரமா.‘இப்ப கொஞ்சம் தேவலைடா தலை வலி.நான் தூங்கி எழுந்தா சரியாய் போயிடும்.நான் படுக்கப் போறேன் நீ’ஆபீசில்’ இருந்து சீக்கிரமா வரவே தான் நான் எழுந்து உன்னைப் பார்க்க எழுந்து வந்தேன்” என்று சொல்லி விட்டு அவர் ரூமுக்குப் போய் விட்டார்.
நடராஜன் போனதும் கண்ணன் சற்று நேரம் ஒன்றும் சொல்லாமால் சும்மா இருந்தான்.

நடராஜன் சென்னைக்கு கிளம்ப வேண்டிய நாள் வந்தது.அவர் கண்ணனைப் பார்த்து “கண்ணா,நான் சென்னைக்குப் போற வழிலே தூபாய் வழியா போக ஆசைப் படறேன்.நீ எனக்கு அப்படி ஒரு ‘டிக்கட்’ வாங்கு” என்று சொன்னதும் கண்ணன் உடனே “சரிப்பா, நான் அப்படியே உங்க டிக்கட்டை’ வாங்கறேன்” என்று சொல்லி விட்டு “ட்ராவல் ஏஜண்டுக்கு” போன் பண்ணி அப்பா சொன்னபடியே ‘டிக்கட்டை’ வாங்கினான்.

அடுத்த நாள் ”அப்பா நான் உங்களுக்கு தூபாய் வழியா சென்னைகு ஒரு ‘டிக்கட்டை’ வாங்கி விட்டேன்.கூடவே ‘தூபாய் க்ராண்ட்’ ஹோட்டலில் தங்க ஒரு ரூமும் போட்டு இருக்கேன்.நீங்க துபாய் எல்லாம் முழுக்கச் சுத்திப்பாருங்க.ஹோட்டலுக்கு நான் எல்லா ‘பேமெண்ட்டும்’ பண்ணி இருக் கேன்” என்று சொல்லி அவர் கையில் இரண்டாயிரம் டாலர் ‘காஷ்’கொடுத்தான்.பணத்தை வாங்கிக் கொண்டார் நடராஜன்.

துபாயை சுற்றிப் பார்த்து விட்டு நடராஜன் சென்னை வந்து சேர்ந்தார்.நடராஜன் சுந்தரத்தின் வீட்டுக்குப் போய் அவரை விசாரித்தார்.

சுந்தரம் மிகவும் மெலிந்து வருத்தத்துடன் காணப் பட்டார்.“வாங்க சம்மந்தி,‘அமொ¢க்கா டிரிப்’ எப்படி இருந்திச்சு”என்று விசாரித்தார் சுந்தரம்.

“எதெல்லாம் நல்லாப் போச்சுங்க.உமா கல்யாணத்துக்கு இன்னும் மூனு வாரம் தானே பாக்கி இருக்கு.கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடெல்லாம் பண்ணி ஆயிசுச்சான்னு விசாரிக்கத் தான் நான் வந்தேன் சம்பந்தி.மறுபடியும் பாக்டா¢யைத் திறந்தீங்களா.இப்ப ‘ப்ராப்லெம்’ ஒன்னும் இல்லையா” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு சம்மந்தியை விசாரித்தார் நடராஜன்.

சுந்தரம் கண்ணில் நீர் துளித்ததைப் பார்த்தார் நடராஜன்.“என்னத்தே சொல்றது சம்மந்தி. கொஞ்சம் முதல் போட்டு மறுபடியும் ‘பாக்டா¢யை’ திறக்கலாம்ன்னா பழைய தொழிலாளர்களுக்கும் யூனியன் தலைவர்களுக்கும் ‘பாக்டா¢’ மூடி இருந்த மாசங்களுக்கு பாதி சம்பளம் தரணும்.உமாவுக்கு இன்னும் நகைங்க கூட நாங்க பண்ணலே.கல்யாணத்தை எப்படி பண்ணப் போறோம்ன்னு நினைச்சா எனக்கு தலையே சுத்துது சம்மந்தி”என்று சொல்லி தன் தோள் மேலே போட்டு இருந்த துண்டினால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் சுந்தரம்.

“கவலையை விடுங்க சம்மந்தி” என்று சொல்லிக் கொண்டே தன் ‘பிரீப் கேஸை’ திறந்து அவர் தூபாயில் இருந்து வாங்கி வந்த தங்க வளையல்கள்,தங்க செயின்,தாலிக் கொடி,காதுக்கு, மூக்குக்கு என்று நாற்பது சவரன் தங்க நகைகளை எடுத்து வைத்தார்.கூடவே ஒரு ஐந்து லக்ஷ ரூபாய்க்கு ஒரு ‘செக்கும்’ கொடுத்தார்.

சுந்தரத்திற்கும் கமலாவுக்கும் ஆச்சரியம் தாங்க வில்லை.

“சம்மந்தி நீங்க..” என்று கேட்கும் முன்பே “சம்மந்தி,நான் இந்த தங்க நகைங்களே எல்லாம் தூபாயில் தான் வாங்கினேன்.நான் இங்கு இருந்த ’கஸ்டம்ஸ்’ அதிகாரிகளுக்கு நான் அமொ¢க்காவி லே இருந்த போது வாங்கின முப்பது ‘வயாக்ரா’ மாத்திரைகளே குடுத்தவுடனே, அவங்க என்னை ‘க்ரீன் சானலிலேயே’ போக அனுமதி குடுத்தாங்க” என்று சொல்லி சிரித்தார் நடராஜன்.

சுத்தரமும்,கமலாவும்,உமாவும் உடனே நடராஜன் காலில் விழுந்து நன்றி சொன்னார்கள்.

ரமாவும் கண்ணனும் அமெரிக்காவில் இருந்து உமா கல்யாணத்திற்கு சென்னைக்கு வந்தார்கள்

பெண் ரமாவிடமும்,மருமகன் கண்ணனிடமும்,சுந்தரமும் கமலாவும் சம்மந்தி நடராஜன் தூபா யில் இருந்து வாங்கி வந்த நகைகளை எல்லாம் காட்டி,அவர் எப்படி சென்னை ‘கஸ்டம்ஸ்’ அதிகாரிக ளுக்கு ‘வயாக்ரா’ மாத்திரைகளை கொடுத்து ‘க்ரீன் சானலிலேயே’ வந்த விஷயத்தையும், கூடவே அவர் கொடுத்த ஐந்து லக்ஷ ரூபாய் செக்கையும் காட்டினார்கள்.

இருவரும் சுந்தரம் காட்டின நகைகளையும், செக்கையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

ரெண்டு நிமிஷம் கூட ஆகவில்லை.

கண்ணனைக் கூட்டிக் கொண்டு ரமா தன் மாமனாரைப் பார்க்க அவர் வீட்டுக்கு ஓடினாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும் தன் மாமனார் காலில் விழுந்து “என்னை மன்னிச்சு விடுங்க மாமா. உங்க தங்கமான குணம் தொ¢யாம,நான் தான் உங்களை தவறாப் புரிஞ்சுக் கிட்டேன்” என்று சொல்லி க் கொண்டு நடராஜன் கால்களில் விழுந்து,அவர் கால்களை தன் கண்ணீரால் நனைத்துக் கொண்டு இருந்தாள் ரமா.

கண்ணன் தன் அப்பா ரமாவின் குடும்பத்துக்கு செய்த உதவியை எண்ணி சந்தோஷப் பட்டுக் கொண்டு இருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *