சாலையில் பயணித்த முருகன் கைபேசி அழைப்பு ஒலிகேட்டு பயணித்த வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கைபேசியை எடுத்து பேசினான். எதிர்முனையில் முருகனின் பத்து வயது மகள் கீர்த்தி. அப்பா நான் ஸ்கூலவிட்டு வந்துட்டேன், இன்னைக்கு ஸ்கூல டெஸ்ட் வைத்தார்கள். டெஸ்டில் நான்தான் முதல் மதிப்பெண். டீச்சர் குட்போட்டு பாராட்டினார்கள், என சந்தோஷமாக கூறினாள்.
அதற்கு முருகன், அப்படியா, அருமை! நீங்கதான் என் தங்கமச்சேடா என்று பாராட்டினான். அப்போது கீர்த்தி அப்பா வீட்டுக்கு எப்ப வருவீங்க என கேட்டாள். இன்னும் அரைமணிநேத்தில் வந்துவிடுவேன் என்றான் முருகன்.
கீர்த்தி தயக்கமாக அப்பா… என்றாள். முருகன், என்னடா என்றான். அப்பா வரும்போது எதாவது தீனி வாங்கிட்டுவாங்கப்பா வீட்டுல தீனி எதுவும் இல்லையாம் அம்மா சொன்னாங்க என்றாள். சற்று யோசித்தவர் சரிடா, வாங்கிட்டு வரேன் என்று கூறிவிட்டு கைபேசியை வைத்தான்.
முருகன் பாக்கெட்டையும் மனிபர்சையும் பார்த்தான். மொத்தமாக அவனிடம் இருந்தது ரூ.130 .00 தான் இருந்தது அது வண்டிக்கு பெட்ரோல் அடிக்கவேண்டுமே என்று யோசித்தவாறு மகள் கேட்டதை நிறவேற்றுவதா? பெட்ரோல் போடுவதா? என்று யோசிக்கும்போது அவனருகில் 65 வயது மதிக்க தக்க ஆயா இரண்டு கைகளிலும் குச்சிபை, தலையில் ஒருகூடையுடன் வந்தது நின்று தம்பி எள்ளுரைண்டை சீடை வாழைப்பழம் இருக்கு உங்களுக்கு எதாவது வேண்டுமா என்றார்.
அம்மா எள்ளுருண்டை சீடையெல்லாம் யாருமா இப்ப சாப்பிடராங்க எல்லாம் கேக்கு, பீட்சா, சேன்விஷ், தான் கேக்கறாங்க என்றான் முருகன்.
சிறிய புன்னகத்துவிட்டு தம்பி எம்பேரு சிந்தாமணி நான் ஒருவிவசாய குடும்பம். எங்க நிலத்துல வாழ போட்டிர்ந்தோம் இப்ப அடிச்ச காத்துல வாழைமரம் எல்லாம் சரிஞ்சுருச்சு அதுல இருந்த வாழைக்காயை இயற்கையாகவே பழுக்க வைத்த பழம், அதசாப்பிட்டு பாருதம்பி நீ சொன்ன கேக்கு அது இது எல்லாத்தையும் விட தித்திப்பா இருக்கும் என்றுகூறினார்.
இல்ல இல்ல வேண்டாம் என்றான். ஒருபழம் மட்டும் சாப்பிடு பாருங்க நல்ல இல்லைனா வாங்கவும் வேண்டாம் அந்த ஒருபழத்துக்கு காசு தரவேண்டாம், என்று கூறி ஆயா இந்த கூடைய கொஞ்சம்பிடி என்றார்.
ஆயா கையில இருந்த இரண்டு பையையும் கிழே வைத்து விட்டு பழக்கூடையை இறக்கி வைத்துவிட்டு ஒருபழத்தை சீப்பில் இருந்து பியித்து முருகன் கையில் கொடுத்துவிட்டு தன் உள்ளங்கை பார்த்து விட்டு வாயில் பூ….. என்று காற்று உதினார் அப்போது முருகன் ஆயா கொடுத்த பழத்தை உரித்து சாப்பிட்ட வாறு ஏன் என்னாச்சு என்று ஆயாவின் கையை பார்த்தவாறு கேட்டான். அப்போது ஆயா உள்ளங்கையை காட்டியது அது சிவந்து காப்பு காய்த்து இருந்தது. என்ன ஆயா கை இப்படி சிவந்திருக்குனு முருகன் கேட்டான் அதற்கு தம்பி இந்த பையை தூக்கிகொண்டு இரண்டு மைலுக்கு மேல நடந்து வரேன் அப்பறம் சிவக்காம இருக்குமா என்றவுடன் அந்த காப்புங்க என்றான் அதற்கு ஆயா, தம்பி இது எள்ளுரண்டை இடிச்சது தம்பி என்றார்.
அதுவரை வண்டியில் அமர்ந்து பேசிய முருகன் வண்டிய விட்டு கீழே இறங்கினான். அப்போது ஆயா சொன்னாங்க இந்த எள்ளுரண்டை எந்த கலப்படம் இல்லத சுத்தமான எள்ளு கருப்பட்டி சுக்கு இஞ்சினு எல்லாம் குளவியில போட்டு ஒலக்கால இடிச்சது. இதசாப்பிட்டா அவ்வளவு நல்லா இருக்கும் என்றார். அந்த காப்பு எள்ளுரண்டை இடிச்சது பல வருஷமா எள்ளுரண்ட இடிச்சு கூடுக்கறேன். காசுக்காக இல்லனாலும் புள்ளதாச்சி புள்ளைகளுக்காக அதிகமா செஞ்சு குடுப்பேன் என்றார்.
அதற்க்கு முருகன் ஏன் ஆயா விவசாயம் கை குடுக்கலையா என்றான். அதற்க்கு அப்படியெல்லாம் இல்ல சாமி உண்மையாலும் ஒருவருஷம் நல்ல விளச்சலு நல்ல லாபம் கிடைக்குது ஒருவருஷம் கிடைக்கிறது இல்ல அதனால லாபம் கிடைக்கிறது இல்லனு விவசாயத்த கொற சொல்லறதவிட லாபம் இல்லாத வருஷம் இந்த மாதரி ஏதாவது உழைச்சு சம்பாரிச்சுக்கோனும் தம்பி என்றார். அதற்குள் முருகன் பழத்தை சாப்பிட்டு முடித்திருந்தான். பழமும் நன்றாக இருந்தது.
ஆயாவின் பேச்சில் இருந்த கன்னியத்திற்கு மதிப்பளித்தவனாக சரி ஆயா எள்ளுரண்டை வேனா குடுங்க பழம் நல்ல இருக்கு ஆன எனக்கு இப்ப எள்ளுரண்டைமட்டும் குடுங்க என்றான். சரி என்று கூறிய அந்த ஆயா எள்ளுரண்டை பாக்கெட்டை எடுத்து நீட்டி ஒரு பாக்கெட் நாற்பது ருபாய் என்றது. ஆயா நாற்பது ருபாயா என்றான் அதற்கு தம்பி உண்மையான உடல் உழைப்பு கலப்படம் இல்லாத பொருள் நேர்மையான பேச்சு தம்பி இதவாங்கிட்டு போங்க இதல ஒரு உருண்ட மிச்சமானாலும் தாராளமா என்ன வீட்டலேயே சாபமிடுங்க என்றார். சற்று யோசித்தவன் சரிஆயா இன்னொரு பாக்கெட் குடுங்க என்றான் உடனே ஆயா இன்னொரு பாக்கெட்டை எடுத்து கொடுத்தார். அதை வாங்கிய முருகன் ரூ 100.00 எடுத்து நீட்டினான்.
ஆயா சில்லரை இல்லையா தம்பி என்றவுடன் இல்லைங்காயா என்றான். ஆயா சற்று தள்ளியிருந்த டீக்கடையை பார்த்து நான் அங்க போயி சில்லரை வாங்கிட்டு வரேன் நீங்க இதபாத்துங்க தம்பி என்றார். முருகன் ஆயா இல்ல குடுங்க நான் போரேன் என்றான். இல்ல தம்பி நானே போயிடு வரேன் இருங்க என்று டீக்கடை நோக்கி நகர்ந்தாள். சிறிது நேரம்மாகியும் ஆயா வரததால் டீக்கடை பார்த்தான் முருகன் அப்போது அந்த ஆயா இரு இரு என்று கையசைத்தார். சிறிது நேரத்தில் வந்த ஆயா முருகனிடம் ரு20.00 மீதம் கொடுத்தார் அப்போது முருகன் கேட்டான் ஏன் ஆயா இவ்வளவு நேரம் என்றான்.
அதற்கு அந்த ஆயா சொன்னார் டீக்கடையில டீகுடிக்க காசு இல்லாம ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு டீயும் பண்ணும் வாங்கி குடுத்துட்டு வந்த தம்பி என்றார். அதற்க்கு முருகன் ஆயா நீங்களே கஷ்டபட்டு வேலசெஞ்ச தலையில சுமந்து சம்பாதிக்கிறீங்க நீங்க ஏங்க ஆயா இப்படி செய்யனும் ஏதோ இரண்டு ரூபா குடுக்க வேண்டியது தானே என்றான். அதற்கு அந்த ஆயா லேசாக புன்னகித்த வாறு பசிக்கிறவங்களுக்குதான் பசியோட அருமை தெரியும் என்று சொல்லிவிட்டு இந்த கூடைய கொஞ்சம் தூக்கிவிடப்பா என்றார். முருகனும் சரி ஆயா என்று கூடையை தலையில் வைத்தவுடன் இரண்டு பைகளையும் கையில் எடுத்த நடந்த ஆய இரண்டடி சென்றபின் திரும்பி தம்பி எள்ளுரண்டை பிடிக்கலனா சாபமிடுதம்பி என்ற கூறிய வாறு நகர்ந்தார்.
முருகனும் கையில் மிதியிருந்த ரு50 க்கு பெட்ரோல் அடித்து விட்டு வீட்டை நோக்கி பயணித்தான். வீட்டிற்கு சென்றவுடன் கீர்த்தி என்று மகளை அழைத்து இந்தாமா தீனி கேட்டையே என்றார். அதற்கு கீர்த்தி அப்பா எள்ளுரண்டையா என்னப்ப இதெல்லாம் தீனியா… போங்கப்பா இங்க பாத்திங்களா சாக்வெட் கேக் என்று கையிலிருந்த கேக்கை காட்டினாள். அப்போது முருகன் கேக்கா ஏது என்றான் அதற்க்கு கீர்த்தி அப்பா… சித்தி, சித்தப்பா, வந்திருக்காங்க சித்தி வாங்கிட்டு வந்தாங்களே என்று கூறினாள்.
சற்று எரிச்சலூடன் எள்ளுரண்டை பாக்கெட்டை முருகன் கீர்த்தியிடம் கொடுத்து இத அம்மாவிடம் கொடுத்து விடு என்று கூறிவிட்டு வாசலில் இருந்த தண்ணீர்பைப்பை திறந்த வாரு போச்சா ரூ80.00 அநியாமா போச்சா பேசம பெட்ரோலாவது அடுச்சிருக்கலாம் இதல வேற அந்த ஆய சாபம் வேற விடுனுது. வர கோபத்துல சாபம் உடனும் இருந்தாலும் ஆயாவின் நல்ல மனதை நினைத்து சாபம் விடாமல் கைகால்கள் கழுவிவிட்டு, இருந்தாலும் அந்த ஆயாதான் சாபம் உடுன்னுதானா சொல்லுச்சு மனைவி எதாவது திட்டுனா சாபம் விட்டுவிடவேண்டியதுதான். என்றவாறு விட்டுக்குள் நுழைந்து கோபத்துடன் மனைவியை அழைக்க எண்ணும் போது, அங்கே கீழே எள்ளுரண்டை பாக்கெட்டின் கவர் வெறும் கவராக வந்து விழுவதைப்பார்த்தான்.
உடனே நிமிர்ந்தான் முருகன் அங்கே அவனது கொழுந்திய மாமா எப்படி இருக்கிறிங்க என்றவாறு அவன் முன் வந்து நின்றாள். மாம நான் வந்திருக்கேனு உங்களுக்கு தெரியுமா கரெக்டா அப்பா மாதிரியே எனக்கு ரொம்ப பிடித்த எள்ளுரண்டைய வாங்கி வந்திருக்கீங்க என்று கேட்டாள். தன்னை அப்பா ஸ்தானத்தில் வைத்திருந்த கொழுந்தியாவை தன் முதல் மகளாக எண்ணி அவள் தலையில் தடவிவிட்டு இது எத்தனாவது மாசம் என்றான்.
(முதல் சிறுகதை முயற்சி).
நல்ல சிறுகதை.. ஆனால் கர்ப்பமாக இருகுங்கவங்க எள்ளு சாப்பிடக்கூடாது னு சொல்லுவாங்க .. சரி பார்க்கவும்..