கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 12,759 
 

“பார்வதி ,நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே சாயங்காலம் கிளம்பி போற உன் கணவர் நைட்டுதான் திரும்பி வரார். உன்னைக் கேட்டால் கோவிலுக்கு போயிருக்கார்னு சொல்றே ….ஆனால் ……”

அம்புஜம் இழுத்தாள்

“என்ன ஆனால் …சொல்லு அம்புஜம்”

“நானும் தினமும் என் மகனுக்காக வேண்டிகிட்டு கோவிலுக்குப்போறேன். அங்கே ஒரு நாள் கூட உன் கணவரை பார்க்கவில்லை”

“நீ சரியா பார்த்திருக்க மாட்டே அவர் அங்குதான் இருந்திருப்பார். என்கிட்டே அவர் பொய் சொல்லவேண்டிய அவசியம் என்ன?”.

“அதைத்தான் நானும் கேட்கிறேன். அவர் உன்னிடம் கோவிலுக்குப் போவதாக பொய் சொல்லணும்? வேறு ஏதோ விஷயம் இருக்கு ..கவனிம்மா “.

தெளிவாக இருந்த குளத்தில் கல் ஏறிந்துவிட்டு போனாள் அம்புஜம். பார்வதி குழம்பித்தான் போனாள்.

மணி எட்டு.

கணவர் வந்ததும் பேச்சு கொடுத்து பார்த்தாள். ஒன்றும் விளங்கவில்லை. ஐம்பதிலும் சபலம். வரும் அறுபதிலுமா?. கலிகாலமாச்சே .எதுவும் நடக்கலாம் அடுத்த நாள் உஷாரானாள் பார்வதி.

“என்னங்க இன்னைக்கு நானும் உங்களோட கோவிலுக்கு வரேன் வெள்ளிக்கிழமையா இருக்கு”

“என்ன பார்வதி அதிசயமா இருக்கு?. எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் வந்து போகிட்டுத்தான் இருக்கு, இந்த வெள்ளிக்கிழமை என்ன விஷேசம்னு நீ கோவிலுக்கு கிளம்பறே?”

“என்னமோ தோணித்து. ஏன் மனைவியோடு போறதில தப்பா …கொவிளுக்குத்தானே போறீங்க?. இல்ல வேறு எங்காவதா ?”

“என்னவோ இன்னைக்கு உன் பேச்சே புதுசா இருக்கு …புதிர் போடாம விஷயத்தை சொல்லு?”

“நீங்க கோவிலுக்கு போறேன்னு சொல்றது பொய்யாம், ஒரு நாள் கூட இந்த நேரத்திலே உங்களை அங்கே பார்க்கலைன்னு எல்லா தோழிகளும் சொல்றாங்க ….அப்படின்னா எங்கேதான் போறீங்க?”

“ஓஹோ ..அதான் உன் சந்தேகமா?. நான் கோவில்னு சொன்னது அநாதை விடுதியை .. அங்கு உள்ள அநாதை பிள்ளைகளுக்கு ஆறு மணி முதல் எட்டு மணி வரை ஆங்கிலம் இலவசமா சொல்லித்தரேன் …அனாதை விடுதி காப்பாளர் எனக்குத் தெரிந்தவர் ஆங்கிலம் சொல்லித்தர ஆள் இல்லைன்னு வருத்தப்பட்டார். உனக்குத் தெரிஞ்சா வேண்டாம் என்பே ..இந்த சேவை என்னோட மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு அதான் அந்த பொறுப்பை நான் எடுத்துக்கிட்டேன் …..படிப்பு சொல்லிகொடுக்கிற இடம் கோவிலதானே?. இன்னும் சந்தேகம்னா நீயும் வந்து பாரு அந்த கோவிலை”.

“உங்க தங்கமான மாசு புரியாம சந்தேகப்பட்டுட்டேன், என்னை மன்னிச்சுடுங்க”, என்றாள் பார்வதி.

“நீ என்ன பண்ணுவே. நீயும் பெண்தானே சந்தேகம் உங்க பிறப்பிடம் ….அது போகட்டும் நீ இப்ப என் கோவிலுக்கு வரியா ..இல்லையா?”.

“இல்லே, எனக்கு சீரியல் பார்க்கணும், நான் வரலே ”

சிரித்தபடியே கிளம்பினார்.

– பெண்கள் மலர் – 28-5-2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *