கோரைப் புற்களின் கோரைப்பற்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2014
பார்வையிட்டோர்: 16,594 
 
 

திடீரென்றுதான் அந்தச்சப்தத்தைக்கவனித்தேன் ஒரேசீராக “சாக்,சாக்,சாக்’ கென்று. கூடவே லேசாய்ப் பச்சைப் புல்வாசம் மூக்கைத் துளைத்தது. இதுநேரம் வரை வேலை மும்முரம். காபிக்கடை, டிபன், சாப்பாடு வகையா என்று மூளைசேணம் கட்டிவேலை பார்த்தது. புளிகரைத்தது. பருப்புவேகவைத்தது. இட்டிலி சுட்டு இக்கியது. சட்னி அரைத்தது. புளிகொதிக்கவைத்துச் சாம்பாராக்கியது. ஐந்தாறு தரம் சகலருக்கும் காப்பி கலந்தது. வீட்டின் கும்பல் குûந்து, சுவாசம் சீரானதும்தான் சப்தம் மனசில் ஏறியது.

“”கோடி வீட்டம்மா கிளம்பருங்க பாரு. ரெண்டு காப்பி கொண்டார இத்தனை நேரமா?”

அத்தையின் வார்த்தைகள் இக்கை கட்டிக் கொண்டு அவசரத்தைச் சுமந்து வந்தன.

“”ம் இதோ… இதோ…”

காப்பியைக் கையில் கொடுத்துப் புன்னகையும் கொடுத்தேன். என்னை ஊடுருவும் பார்வையை அனுப்பினார் அந்தப் பெண்மணி. என் அஞ்சரை அடிஉயரம், சுருட்டைத் தலைமுடி, அடர்த்தியான மாநிம் எதுவுமே அவர் பார்வையிலிருந்து தப்பவில்லை. முகம், கண், கருவிழி, உடம்புத்தோல், எலும்பு எல்லாவற்ûயும் ஊடுருவும் பார்வை, தராசுத் தட்டில் வைத்து நிறுத்துப் பார்க்கும் பார்வை. இந்தக் குடும்பத்துக்கும், தாம்பத்யத்துக்கும் தோதுப்படுவேனா என்று பரீட்சித்துப் பார்க்கும் பார்வை.

“”ம்…. ம்… உன் மருமவ லட்சணமாத்தான் இருக்கா. காப்பி கூடப்பரவால்ல ஏதோ என் அதிர்ஷ்டக்குûச்சல் þ இடக்கு முடக்கா எனக்கு அமைஞ்சிட்டா ….. உனக்கு அதிர்ஷ்டம் தான் கைக்கு அடக்கமா, வீட்டோட மருமவளாப் புடிச்சிட்டே…..”

காப்பியின் ருசிமயக்கம் அவரின் வார்த்தைகளில் தெறிக்கக்கிளம்பினார்.

மறுபடியும் சர்க்சர்க்சாக்கென்று சப்தம். புல்வாசனை. பின்பக்க இரும்பு கிரில் கம்பியைப் பிடித்து எட்டிப் பார்த்தேன். தண்ணீர் டாங்கின் அருகில் புல்வெட்டிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். பத்து மணிக்கே கொளுத்திய வெயிலில் þ வியர்வை அவரின் உடம்பைக் குளிப்பாட்டியது. நரைமுடியும் முன் வழுக்கையும் வெயிலில் மின்னியது. அங்கே இங்கே கவனம் சிதாமல் சர்க்சர்க்சர்க். ரொம்ப நேரமாய்ச் செய்திருக்க வேண்டும் புதர்புதராய் வெட்டின கோரைப்புல் குவியல்.

“”என்ன வேடிக்கை?”
“”புல்லு வெட்டாரு….”

“”ஆமாமா மாசாமாசம் இது ஒரு வேலை நாமதான் ஆபீஸ்ல எழுதி வைக்கணும், புல்லு வெட்ட ஆளு அனுப்புன்னு. இல்லேன்னா கோரை கோரையா வளர்ந்துடும். கொசு மண்டும். சாயங்காலம் புடுங்கி எடுத்துடும். அங்க கெடையாதோ இந்த சோலி?”

“”ம்ஹீம் சாணித் தண்ணி தெளிப்போமே முன்னேவும் பின்னேவும்……”

“”இங்க எங்க போக சாணிக்கும் தண்ணிக்கும்? வாசல் பெருக்கிக் கோலம் கூடப்போடதில்ல. சரி நீ சாப்பிட்டுப் புடவை மாத்திக்க. மேல் வீட்டு ஐயாவும் அம்மாவும் வருவாங்க….”

விடுவிடுவென்று ஹாலுக்கு போய்ச் கின்னத்திரைக்குஉயிர்கொடுத்தார். தொடர்ச்சியாய்த் திரைப்பாடல்கள் þ காதலைப் போற்றி, காதலைத் தவமாக்கி, காதலைச் செய்முûயாய் விளக்கி…. காதை அறுத்தன. அத்தோடுமனசையும். இத்தனை காலையிலேயே இந்தக்கொடுமையா? கடவுளே….

பசி இல்லை எனக்கு காப்பி, பலகாரம், சாப்பாடு என்று கலவைவாசனை குமட்டியது. காப்பி கலந்து கலந்து þ என் மீதே ஏகத்துக்குக் காப்பி வாசனை. இந்தக் கண்ராவியை எப்படித்தான்மனிதர்கள் குடிக்கிார்களோ.

“”அவங்களுக்கு மசாலா டீ தான் புடிக்கும். ஏலக்காய் தட்டிப்போட்டுத் தயார் பண்ணிடு……”

காற்றுþவழக்கம் போல அத்தையின் கட்டளையைச் சுமந்து வந்தது.

புல்வெட்டும் பெரியவரைப் பார்த்தால் பாவமாயிருந்தது. வியர்க்க விறுவிறுக்க வேலைபண்ணிக் கொண்டிருந்தார். நான் கவனிப்பது தெரிந்தோ என்னவோþதலைநிமிர்ந்தார். அரிவாளைத் தரையில் போட்டார்.

“”என்ன தாயி பார்க்கú?”
“”இவ்வளவு புல்லையும் தனி ஆளாவா வெட்டப்போறீங்க?”
“”ம் நெதமும் இதான சோலி?”
“”கை விண்டு போயிடுமே……”
“”ம்…ம்…. கை மட்டுமா? குனிஞ்சேயிருந்து முதுகு கூடத்தான் கழண்டுரும் தலைகிர்ருன்னு சுத்தும். இதையெல்லாம் பார்த்தாþவயித்துப் பசிக்கு என்ன பண்ண?”

சின்னத் துண்டினால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டார்.

“”இத்தினி வயசுக்கும் þ உக்காத்தி வச்சுக் கஞ்சிஊத்த ஆள் இல்லையா?”

“”நாதியத்துப் போய்த்தானேம்மா வெய்யில்ல காயúன். கையப் பாரு, மம்முட்டி புடிச்சிப் புடிச்சிக் காய்ச்சிப் போச்சு”.

ரெண்டு கைகளையும் முகத்தில் அழுத்தித் தேய்த்து வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

“”குடிக்கத் தண்ணிவேணும் தாயி….”

“”ம்… இதோ…”

பின்பக்க கிரில் கதவைத்திந்து சொம்போடு நீட்டினேன். ரெண்டு கையும் ஆசையாய் நீட்டி அள்ளிக் கொண்டார். அவர் குடிக்கக் குடிக்க எனக்கு மனசு நிûந்தது வயிறு குளிர்ந்தது.

“”மசாலா டீ ரெடியா?” உள்ளே வந்த அத்தை முதலில் கேள்வியை அனுப்பினார்.

“”ம்…ம்… இதோ ரெண்டே நிமிஷம்…”

“”இந்தா தாயி. நல்லாயிருப்பே…..”
செம்பை வாசல் ஓரமாய் வைத்தார் பெரியவர்.

“”தண்ணி குடுத்தியா என்ன?”

“”ம் …..”

“”கதவைத் திந்து போடதே… புல்லு வெட்ட மாதிரி நோட்டம் போடுவானுக…. திருட்டுப்பசங்க …

“”பெரியவர் நல்லவராத் தெரியராரு அத்தே…”

“”பின்ன திருடனுங்க நெத்தில எழுதி ஒட்டிட்டா வருவானுங்க? இப்படித்தான் வருவானுக…..”

அத்தையின் காரப்பேச்சு அவரின் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. சுவரோரமாய்க் குந்தி பீடியைச் சுகமாக இழுத்துப் புகைத்தார்.

“”டீ அவருக்கும் தரவா அத்தே?”

“”ம் குடேன் தாராளமாக்குடு டீ குடு அப்பும் சாப்பாடு போடு. சுடச் சுட சாயங்காலம் டிபன். ஆறுமணிக்கு டீ. இப்படி வரிசையாக் குடு. புல்லை வெட்டிப்போடவனுக்கு விருந்தே குக்கலாமே…”

நிஜமாக என்று நினைத்தேன் அத்தையின் குரலிலிருந்த கேலியைப் புரியக் கொஞ்ச நாழியானது.

“”க்ரவுண்ட் ப்ளோர் வீட்டுல இது ஒரு கஷ்டம். மேல் வீட்டுக் காரங்க தப்பிச்சிடுவாங்க. நாமதான் மாட்டிப்போம். வாரபோ பிச்சைக்காரனுங்களுக்கு அடைக்கலம். கீரைக்காரி, சித்தாளு, மேஸ்திரி, காய்க்காரனுக, வாட்ச்மேன், மாடிப்படிபெருக்கவ, úஸல்ஸ் ஆளுங்க, குப்பைஅள்ளவன்þஅத்தினி ப்ளோருக்கும் ஒரு வேலைக்குக்கூட நம்மலைத்தான் தொந்தரவு பண்ணுவானுக…. இந்த அழகுல விருந்துபகாரம் பன்றியாக்கும்….”

அத்தை பாட்டுக்கு விடாமல் பேசினார். பீடியை முடித்து எழுந்த பெரியவர் அரிவாளைக் கையில் தூக்கிக் கொண்டார். துண்டினால் முகத்தையும், உட்ம்பையும் அழுந்தத் துடைத்துக் கொண்டார். அவருக்குக் கேட்டிருக்குமோ?

“”ம்…. ம்… கஷ்டம்தாம்மா. வாஸ்தவமான பேச்சு…”அவரின் வார்த்தைகளும்þகிண்டல்ச் சுமந்தனவா என்று கணிக்க முடியவில்லை.

மதிய உணவுக்குள்ளாக நாலைந்து வீட்டு ஆட்கள் வந்து வந்து போனார்கள்.

புதிய மருமகள் எப்படி இருக்கிாள்? எப்படிப்பேசிப் பழகுகிாள் ? எப்படிச் சமைக்கிாள் என்ùல்லாம் விதவிதமான தேர்வுகள். எல்லாமே பூரி, உருளைக்கிழங்கு, தோசை, கலவை சாதம், ஜøஸ், காபி, டீ என் வகையாக்களோடு.

சமைத்தலுக்கும், பரிமாறுதலுக்கும்þஉள்ளே எடுத்து வைத்தலுக்குமே முதுகெலும்பு நொறுங்கிப்போனது எனக்கு.திரும்பத் திரும்ப விருந்தோம்புதலில் மனசு கூடக் கலைத்து விடுமோ..? அப்படித்தான் ஆகிப்போனது எனக்கு.

“”மருமவளே… அப்படியே எனக்கும் சாப்பாடு போட்டுரு கட்டையைச் சாய்க்கணும். அடிச்சுப்போட்ட மாதிரி வருது.”

களைப்பின் உச்சக்கட்டம் டி.வி. நிகழ்ச்சி பார்த்ததற்கும், வந்தவர்களை வரவேற்றுப் பேசியதற்குமே களைப்பு.

“”நீயும் உக்காரேன் சேர்ந்தே சாப்பிடலாம்…”
“”பசியில்ல அத்தே….”
“”வந்தவங்க சாப்பிட்டதெல்லாம் ரொம்ப மிச்சமாயிருக்கு. புல்லுவெட்ட தாத்தாவுக்கு தரவா…?”

“”ம்ஹீம். அதெல்லாம் வேணும். சோறு குடுத்தா ஊறுகா கேப்பானுங்க. குழம்பு வேணும்பாங்க. சட்டமாத்திம்பானுங்க. புதுசாப் பழக்கப் படுத்தாதே… எல்லாம் குப்பைல கொட்டு..”

சாப்பாட்டுக் கடைமுடிந்து வீடு அமைதியானது. சின்னத் திரையும் உங்கியது. அத்தையின் குட்டைþஅசதியின் அடையாளமாய்.

இன்னும் நாலுபேர் சாப்பிடும்படியான மிச்சத்தைக் குப்பைவாளியில் கவிழ்த்தேன். பாத்திரங்களை ஒழித்துப் போடுகையில் அமைதியை நசுக்கியது சர்க் சர்க் என்லயம்.

பின்னால் போனேன்.

“”தாத்தா…”
சர்க் சர்க் சர்க்…
“”பெரியவரே…..”
குரலை லேசாய் உயர்த்தினேன்.
“”என்ன தாயி?”
“”சாப்டீங்களா?”
“”ம். ஆச்சும்மா….”

“”எடுத்துட்டு வந்தீங்கலா” பக்கத்து டிபன் கடைலேயா…?”

“”எடுத்துட்டு வரவா? சமைக்க நாதி இல்ல. தூக்குவாளில போட்டுத் தர நாதியில்ல. தின்னியா இல்லியான்னு கேக்கக் கூடநாதி இல்லாத சென்மம் நா….”

“”கடைல சாப்பாடு பலமோ….”

“”ம்.. ம்.. ரொம்பப் பலம்தான்…. ரெண்டு ரூபா இருந்துச்சு. ஸிங்கிள் டீக்குப் பதிலா முழு டீ குடிச்சேன்…”

அவர் பாட்டுக்குப் பேச்சோடு சோலியைத் தொடர்ந்தார். அரிவாளால் வெட்டப்பட்டு விழுந்தவை புற்கள் மட்டுமா? அவரின் வார்த்தைகளும், நிதர்சனமும் வெட்டி வெட்டி என் ஹ்ருதயமே அறுபட்டது. என் ஸ்வாசம் அறுபட்டது. கை, கால், காது, விரல்கள் என்று தனித்தனியாய் அறுபட்டது. ரத்தம் சொட்டியது.

நிஜமா? நிஜம்தானு?

“”காலைலேர்ந்து புல்லு வெட்டி நெயைப் பசிக்குமே தாத்தா வெறும் டீ போதுமா?”

“”ம். அதுக்கு என்ன பண்ண? சோறுதான் வேணும்னா எங்க போக? யாரு குடுப்பாக? வயிரு நல்ல சொல்பேச்சுக் கேக்கணும் தாயி…”

தலைப்பாகையைக் கழற்றி வியர்வையை துடைத்தார்.

“”இருக்கப்பட்டவங்களுக்குத்தான் நாலுவகை வெஞ்சனம் வேணும். என்னை மாதிரி ஆளுங்களுக்குப் பாதி நாள் தண்ணிதான் சாப்பாடு. பாதிநாள் காத்துதான் சாப்பாடு. பாதி நாள் சிங்கிள் டீ தான் சாப்பாடு…. சரி நா சோலிய முடிக்கேன் தாயி…”

என்னைத் தொந்தரவு செய்யாதே என்கி தொனியில் பேச்சை நிறுத்தினார். அரிவாளும் கத்திரிக்கோலும் மட்டும் பேசின.

என் சாப்பாட்டையும் முழுசுமாய்க் குப்பை வாளியில் கவிழ்த்தேன். ஒவ்வொரு அரிசியிலும் ஆயிரம் பசித்த வயிறுகள் கும்பியைத் தட்டிப் பிச்சையெடுப்பது மாதிரி உணர்ந்தேன்.

நாலரை மணிபோல் எழுந்துவந்தார் அத்தை.

“”பால் காய்ச்சறியா? வாசனை வருதே… புதுடிகாகஷன் இக்கிடு. திக்கா காப்பி குடிக்கணும். நாக்கு துடிக்குது அதுக்கு முன்னாடி ரெண்டு தோசை குடு. பொடியோட சாப்பிடணும்….”

“”அத்தே பெரியவருக்குக் காப்பியும் ரெண்டு தோசையும் தரவாþ காலைலேருந்து ஒண்ணுமே சாப்பிடல்லே அவரு…. மத்தியானம் கூட டீ தான் குடிச்சிருக்காரு….”

“”அம்மா மருமவளே. திரும்பத் திரும்ப இந்தப் பன்னாடைப் பேச்சை ஆரம்பிக்காதே. கிடைக்க வரைக்கும் லாபம்னு பஞ்சப்பாட்டு பாட ஆசாமிங்க கண்டுக்காதே… இன்னிக்கு ஒருநா நீ தோசை குடுத்தா þ நாளைக்கு எங்க போயிக்கையை நனைப்பாரு? ம்? வேணும்னா இதைப் பண்ணு…”

“”சொல்லுங்க அத்தே….”

“”ராத்திரி உன் புருஷனோட ஆபீஸ் பிரண்டெல்லாம் வாராங்க. பால்பாயசம் பண்ணு முந்திரியும்பிஸ்தாவும் தாராளமா அரைச்சு விடு. அப்பத்தான் மதிப்பா இருக்கும்….”

சூடாய் முறுகலாய் நெய்தோசை மூணும், கள்ளிச் சொட்டுக் காப்பியும் சாப்பிட்டார். சின்னத்திரை பேச ஆரம்பித்தது.

மறுநாள்
வேறு யாரோ ஒருத்தர் வந்து காய்ந்த கோரைப்புற்களுக்குத் தீ வைத்தார். கனன்று கனன்று புகைந்தது.

“”பெரியவர் வரல்லியா?”

“”ம்ஹீம். இனிம வரமாட்டாரு…”

“”ஏன்?”

”நேத்து ராத்திரி திடீர்னு மன்டையப்போட்டாரும்மா…”என்கையிலிருந்த பால்கவர் ஜில்லிட்டு நழுவிக் கீழே விழுந்தது.புல்வெட்டும் அரிவாள்þஎன் கழுத்தில் வெட்டியதாய் உணர்ந்தேன்.

“”அத்தே…. அந்தப் பெரியவர் செத்துப்போயிட்டாராம்…” “”ப்ச.. அவரோட விதி முடிஞ்சிருக்கு அவரு வாங்கிட்டு வந்த அரிசி தீர்ந்து போயிருக்கும்…”

அவர் பெயர் எழுதிþஅரிசி ஏதாவது வாங்கி வந்தாரா என்ன? ம்ஹீம்…. டீயும், தண்ணியும் தானே விதித்திருந்தன. அவருக்கு புல் புகையினூடே பெரியவர் என்ன தாயி” என்பதாய்க் கேட்டது.

“”காப்பி குடு மருமவளே… பதினேரு மணிக்கு காப்பி குடிக்கலேன்னா மண்டைகுடையது. கதவை அடை, புகைஅடிக்குது பாரு. முகம் ஏன் வாடியிருக்கு? பசிக்கவேயில்லை நேத்துமுழுசும் சாப்பிடலே. இன்னிக்கும் பச்சத் தண்ணி கூடக் குடிக்கலேன்னா எப்படி? ம்? ஒருவாய்க் காப்பியாச்சும் குடி…”

என் கண்ணீர் கோரைப்புல் புகையால் என அத்தை நினைத்துக் கொண்டதற்கு நான் என்ன பண்ண? சாப்பிட என்று முதல்கவளம் எடுக்கையில் வயிறும் நெஞ்சும் நெருங்கி முன்னால் உரசிக்கிழித்துக் காந்துகின்தே என்ன பண்ண? கோரைப் புல்லை விடக் கொடிய கொசு மண்டும் மனுஷப் புற்களை. மனுசக் கோரைப் பற்களை எப்படிவெட்ட….? இன்னமும் யோசிக்கிúன்… பின்னால் வழக்கம்போல அடர்த்தியாய்க் கோரைப் புல்.

– ஜூலை 2000

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *