கேரளத்தில் எங்கோ…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2023
பார்வையிட்டோர்: 1,216 
 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5

பன்னிரண்டு மணி பஸ் தவறி விட்டது. 

அடுத்தது இரண்டு மணிக்கு. காத்திருக்கும் சித்ர வதைக்கு ஏதேனும் ஒரு வண்டி, எதிர்த்திக்காயிருந்தாலும் சரி- எங்கானும் போய்க் கொண்டிருந்தால் சரி. பைத்தியம் பிடித்து, உண்மையாகவே அந்தப் பைத்தியக்காரத்தனத் தைச் செயல் படுத்துவதற்கு முன்னால், நல்ல வேளை, இரண்டுமணி வண்டி மூணு மணிக்கு மாப்பிள்ளை மாதிரி மிடுக்காக வந்து திடீர் ப்ரேக் போட்டு நின்றது. 

உள் இருந்தவர்கள் வெளியேற, வெளிக் கூட்டம் உட்புக, நேர்ந்த மத்துக்கடையலில் – ஒரு கையில் வாழைப் பழச்சீப்பு – அப்பா கருணாகரா, போதுமடா நீ படுத்தற பாடு; தலையிலடித்துக் கொள்ள மறுகை இல்லே. வேட்டி அவிழ்ந்து போச்சுடா! – நிற்க இடம் கிடைத்ததே அனந்த பத்மநாபன் அருள். 

இது சாக்கில் ஒரு எண்ணம், தோன்றியது தோன்றியபடி. ஒண்ணும் வேண்டாம், வெறுமென உயிருடன் – அல்ல, உயிராக இருப்பதே. இருப்பதிலேயே, அந்த ப்ரக்ஞையிலேயே ஒரு தூய சந்தோஷமுமில்லை? உபநிஷத் கதை – பாழுங் கிணற்றில் விழுந்து விட்ட ஆள் – தண்ணீ ரில் வாயைப் பிளந்து காத்துக் கொண்டிருக்கும் முதலை- மேல் துரத்தி வந்தபுலி – உறையைச் சுற்றி உடம்பு வளைந்த பாம்பு – ஆனால் மரத்திலிருந்து சொட்டும் கொம் புத் தேனுக்கு நாக்கை நீட்டிக் கொண்டு, காத்திருந்தானாம். என்ன தவறு? இத்தனை கஷ்டங்களிடையே, கிடைத்த சந்தோஷம் கிடைத்த வரை – இதிலேயே ஒரு ஆத்மாவின் தேடலைப் படிக்க முடியாதா? மனிதனின் சபல புத்தியைத் தான் பார்க்கணுமா? 

அப்போத்தான் நினைப்பு வந்தது. இன்று பூரா பட்டினி என்பது. பேஷ் அம்மாவின் சிரார்த்த தினம் என் ஆசாரத்தைத்தானே காப்பாற்றிக் கொடுக்கிறது. நாக்கு வழ வழத்தது. 

நடு வழியில் பஸ் ப்ரேக்டெவுன். கண்டக்டரும், ட்ரை வரும் ஹாய்யாக உள்ளே ஸீட்டில் காலை நீட்டி விட்டான் கள். இரண்டு மணி நேரத்துக்குப்பின் அடுத்த பஸ், கடைசி பஸ். ஏற்கனவே பிதுங்கிற்று. காத்திருந்தவரில் கைவரிசை யுள்ளவர்கள் தொற்றிக் கொண்டனர். இந்தச் சமயம் எனக்கு அவ்வளவு சாமர்த்தியம் பற்றவில்லை. பஸ் பறந் தது, என்னை விட்டு விட்டு. 

நடராஜா ஸர்வீஸ்தான், இன்னும் என் இடத்துக்கு இருபது கிலோ மீட்டருக்குப் பஞ்சமில்லை. 

”ஏற்றிக் கொள்ளப்பா, இரக்கம் காட்டப்பா’ என்று கெஞ்சுவதற்கு மாதிரிக்கு ஒரு கட்டை வண்டிகூட தென் படவில்லை. விட்டுப் போனவர்கள் ஒன்றிரண்டு பேர் ஆங்காங்கே குறுக்குப் பாதையில் திரும்பி விட்டனர். இந்தப் பக்கமே…நட்சத்திர… வெளிச்சத்துக்கே ஓசையடங்கி விடும். ரோட்டில் விளக்குகள் கிடையா. என் கையை என் முகத் தெதிரே நீட்டிக் கொண்டால், விரல்களைப் பார்க்க முடியாது. வழித் துணைக்கு – நானும் என் எண்ணங்களும் தான். 

ஆங்காங்கே மின்மினிகள், எண்ணங்களுக்குத் தைரியம் தருகின்றன. மேலே மரங்களின் கிளைகள், இலை களின் அடர்த்தியுள் நட்சத்திரங்கள் ஒளிந்து கொண்டன. காலடியில் புழுதி மண் மெத்துமெத்தென அழுந்துகிறது எனக்குக் கண்ணில் சதை வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆண்டவனே, இந்த இருட்டில் எங்கேனும் மோதிக் கொள் ளாமல் இருக்கணுமே! வழி தப்பாமல் இருக்கணுமே! 

அதோ அதென்ன எட்ட, மரங்களிடையே ஆடும் வெளிச்சம்? வாடை வீசுகிறது. பிணம் எரிகிறது. இந்த இருளில் வாசனைகள் தாம் வழிகாட்டி. 

”ஜக்ஜக்ஜக்ஜக்’ — எங்கோ வயற்காட்டில் மோட்டார் ஓடுகிறது. அதுவும் தெம்பாய்த்தானிருக்கிறது.நட, நடந்து கொண்டேயிரு. 

ஒரு பிரம்மாண்டமான திரைச்சீலைக்கு வழிவிடுவது போல் சாலையின் இடப்புறம் மரங்கள் திடீரென ஒதுங்கிப் பின் விழுகின்றன. வானம் மரங்களின் சிறைகளினின்று விடுபடுகின்றது. அண்டப் பிடியிலிருந்து கிருஷ்ணபட்சம், பஞ்சமி நிலா உதயமாகிறது. அந்த வட்ட விளிம்படியில் ஏரி ஜலம் செவ்வெள்ளித் தகடாய் ஜ்வலிக்கிறது. சிற்றலை கள் கிளுகிளுக்கின்றன, மீன்களின் துள்ளோசை விட்டு விட்டுத் தெறிக்கிறது. 

கொசுவின் ‘ஙொய்ஞ்ஞில்’ இருளினின்றி இழை பிரிந்து நெருங்க நெருங்க மூச்சு ஓயாத கருவண்டாக மாறி, வெகு விரைவில் வானத்திலிருந்து தம்பூரின் ஸ்ருதி போல் ஒரு ஓங்காரம் இடம் பூரா பொழிந்து நிறைகின்றது.ஹா! ஏரி மேல் உயர ஒரு சிவப்பும், பச்சையும் மாறி மாறிக் கண் சிமிட்டின. திருவனந்தபுரத்திலிருந்து வந்து கொண்டிருக்கி றான்,வருகிறான், வந்து விட்டான். ஒரு வளை வடித்து அதோ எட்ட எட்ட மறைந்து விட்டான். 

மறுபடியும் தனிமையாக விடப்படுகிறேன். 

இப்போ ரேடியோவை முடுக்கினால் பாலமுரளி கேட்கும். சாமணையால் பொறுக்கி வைரங்களைத் தோடில் பதிப்பது போலும், ஸ்வரங்களை நேர்த்தியாகத் தொடுத்து வரும் மந்தரத்தில் ஸிம்ஹநாதம், அதிபஞ்சமத் தில் வானம்பாடி உச்சஸ்தாயிலிருந்து அப்படியே சுருண்ட அடித்துக் கொண்டு கீழிறங்கும் பிர்க்காவில், ஜாதிப்பறவை யின் குறி பிசகா பாய்ச்சலின் வீச்சு.அந்த ‘த்ரில்லை’ நினைத்தால் உடல் குலுங்குகிறது. 

அடுத்தாற் போலேயே எதிர்மாறான ஒப்புவமையில் மதுரை சோமு. ஸ்ருதி சுத்தமான நாதவெள்ளத்தின் காட்டாறு. ‘குரு நாதா! ‘அன்றொரு நாள் இதே திருவை யாறு உற்சவத்தில், தன் குருநாதர் பாட, அவருக்குத் திண்டு மாலை சார்த்தினாற் போல, பின்னணியில் சோமு குரல் குருநாதரின் குரலை அன்புடன், பணிவுடன், திடமாக அணைத்துக் கொண்டு “மரியாத காதய்யா!” அப்பா! இப்பவும் மயிர் கூச்செறிகிறது. அதுபோல் இன்னும் கேட்கப் போகிறேன். எனக்குத் தெரியும். கேட்கப் போவதில்லை. 

அதெல்லாம் முகூர்த்தவேளை. விதி பாக்கியம் அப்போ அமைந்ததோடு சரி. திரும்பாது. 

அறை விளக்கை அணைத்து விட்டு ரேடியோ பல்பே இருளின் நெற்றிக்கண். ரேடியோ எதிரே, பிரம்பு சாய்வு நாற்காலியில் அம்மா சாய்ந்து கொண்டிருக்கிறாள். அவள் காலடியில் நான், தரையில். 

அம்மாவின் பார்வையின் ‘மெத்தை உணர்கிறேன். இசை பின்னும் கோலத்தில் நாங்களும் இரு கட்டான்கள். 

“குருநாதா!” 

அம்மா! நீயேதான் என் குருவும் கூட என்னை ஆளாக்கினவளே நீதான். இந்த சமயம், உன் காலடியில் நான் இப்படி உட்கார்ந்திருப்பது- அம்மா * எனக்குச் சொல்லத் தெரியல்லே – நான் நாயாக மாறி விடமாட்டேனா என்று ஆசையாக இருக்கிறது. அம்மா எனக்கு சொல்லத் தெரியல்லே. 

அதெல்லாம், முகூர்த்தவேளை திரும்பாது. 

அம்மா, என் இதயத்தில் அப்படிக் கிளர்ந்தது பக்தியா பாசமா, விசுவாசமா? 

உன்னைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. உன் மோனச் சிரிப்பைச் சிரித்துக் கொண்டு சும்மாயிருந்து விடுவாய் மூலவர் போல. 

“அடபோடா அசடே” என்று அதற்கு அர்த்தம் கொள்ளலாம். 

“உனக்கு எப்படித் தோண்றதோ அது” என்றும் கொள்ளலாம். 

என் அசட்டுக் கேள்விக்கு வாய்திறந்து பதில், அதை விட அசட்டுத்தனமாயிருந்திருக்கும். 

அது எனக்கு இப்போ புரிகிறது. 

ஆனால் அது உனக்கு அப்பவே தெரியும். 

கேள்வியோ, பதிலோ வெளிப்பட்டிருந்தால்; அந்த சொல்லிலேயே சிதைத்து விடும் நேர்த்தியான தருணம் அது. அந்த வேளையின் துல்லியத்தில் இங்கே ஏதோ ஒரு உண்மை மலர்ந்திருக்கிறது. அதன் இதழ்களின் நடுவி லிருந்து மோனாதேவி எழுகிறாள். அவள் அரிதானவள் கேள்வியென்றும், பதிலென்றும், விசாரணையென்றும்,நம் வறட்டுச் சாதுர்யங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வார்த்தைகளின் கிசுகிசுப்பு கூட அவளுக்கு ஆகாது. நலுங்கிப்போவாள். அவ்வளவு நளினமானவள் நளின காந்தி. 

‘மன வியால கிஞ்சரா தடே மர்மமெல்லதில்-‘

கவிதா சோகத்தின் அத்தரே ஆனந்த நிலையின் அடையாளம். 

பாலம், பாராங்கல், பெரிய மண்டபம் – 

அட, எண்ணங்களின் இன்பத் திளைப்பிலேயே நடை அலுப்பு தெரியாமலே என் இடத்தின் அடையாளங்களுக்கு வந்து விட்டேனே! ஆச்சு,இன்னும் அஞ்சு நிமிஷம்தான். 

உர்ஸ், என்னத்தை ஆக்கி வைத்திருக்கப் போகிறாள்? முழுச்சோம்பேறி, சாமி இன்னிக்கு வராது என்று சாவியை கூரை ஓலையிடுக்கில் (அசல் இடம் எங்களுக்குத் தெரியும்) ஒளித்து வைத்து விட்டுப் போயிருப்பாள். 

“க்றீச்!’ 

தூக்கி வாரிப் யோட்டது. அலறியது, குரங்கா. அல்ல? வேறெந்த இரவுப்பறவை? மறுகணமே, மேலே பலாக் கிளையினின்று பொத்தென்று என் கழுத்தில் ஒருவடம் விழுந்தது. மேலும் தானாகவே இன்னொரு வளையம் சுற்றிக் கொண்டது, கல்லாய் உறைந்து போனேன். 

நிலா வெளிச்சத்தில், கறுகறுவெனக் கூந்தல் கறுப்பில், வழவழவென்று நெளிவுகள் தாமே மாறிக் கொண்டு, தன்னைத்தானே சாட்டை உருவிக் கொண்டு என்னை ஏதோ கேட்க ஆயத்தத்தில் என் முகத்தெதிரே தலையை உயர்த்தி. மண்டையில் இரு நீலக்கற்கள் கொதித்தன. 

இன்னும் யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். இன்னும் வியப்புத் தணிந்த பாடில்லை. அந்தச் சமயம் எனக்கு நேர்ந்தது அதிர்ச்சி? …..பயம்? திட்ட வட்டமாய்த் தெரியவில்லை. “இன்றோடு என் ஆட்டம் முடிந்தது” ஊஹும். நிச்சயமாய் வாய் குழறவில்லை. மனம் பேதலிக்க வில்லை. 

விரக்தி? அப்படியென்றால் அசலாய் என்ன அது? 

தெளிவு? திரை கிழிந்த மாதிரி? அப்படிச் சொல்லிக் கொள்ளலாமா? 

ஆம் என்கிற பாவனையில் முனகுகிறேனோ? 

பயங்கர பரவசம். தடம் மாறிப் போன உணர்வு. எல்லாம் ஒரே உயிரின் வியாபகம். அதன் மையத்தில் நான் இம்மாபெரும் உயிரோவியமாய் என்னிலிருந்து உயிரின் ஒளிக் கதிர்கள் புறப்பட்டுப் பரவி கழித்து என்னிலேயே திரும்பவும் அடைந்து கொண்டிருக்கின்றன. லோகோஸ் ருதியின் சுழிப்பில் நீ வேறு நான் வேறு.நீ யார், நான் யார்? ஸ்ருதி வெள்ளத்தின் துளும்பலின் விதிர்விதிர்ப்பு கள் எத்தனை எத்தனையோ? பேச்சு, பேச்சு, பேச்சின் வியர்த்தம். உருவங்கள் அர்த்தமற்றுப் போகின்றன. போன அர்த்தத்தில் நான் நாகலக்ஷ்மி. இந்த அர்த்தத்தில் உன்னோடிருக்க உன்னிடம் வந்திருக்கிறேன்.தனித்தனி அர்த்தங்கள் அர்த்தமற்றுப் போகின்றன. ஒரு அர்த்தம் ஒரே அர்த்தம் தான் உண்டு. பிரிதல் கூடுதல், சாவு, வாழ்வு, பிறப்பு எல்லாம் என்ன பித்துக் கொள்ளிதனம்? உனக்கும் எனக்கும் சொந்தம் விட்டுப் போயிடுமாடா? இன்று எனக்குத்தான் சாப்பாடு இல்லை. நீயும் பட்டினி கிடக்கணுமாடா? 

என்னவோ தோன்றிற்று. என் கையில், கூடவே வளர்ந்து விட்டாற்போல் இருந்த வாழைப்பழச் சீப்பை தூக்கிப் பிடித்தேன். அதன் மேல் தாவிப் படர்ந்து கொண்டது. சீப்பை அப்படியே மெதுவாகக் கீழேயிறக்கி னேன். ஒரு பழத்தைப் பறித்து, உரித்து நீட்டினேன். அதை அது கவ்விக் கொண்டது. நானும் ஒன்று உரித்துப் போட்டுக் கொண்டேன், அம்மாடி! தொண்டைக் குழாய் வழி சில்லென்று உள்ளே இறங்குகையில் என்ன சுகம்! என்ன சுகம்? மேலும் நாலைந்து உரித்து ரயில் வண்டித் தொடர்போல் ஒன்றையொன்று ஒட்டினாற் போல் வைத்தேன். 

இதென்ன உறவு? ஐந்து வருடங்களாக விட்டுப்போன அம்மா சிராத்தம் இன்று ஸர்வ ப்ராயசித்தத்துடன் நிறை வேற்றிக் கொள்கிறதா? தன் ஹவிர்ப் பாகத்தை அம்மாவே நேரில் வந்து வாங்கிக் கொள்கிறாளா? என் சக்தி அவள் பசி – எங்கள் அந்தரங்கம் நாங்கள் யாருக்குச் சமாதானம் சொல்லியாகணும்? 

நகர்ந்து நகர்ந்து பத்தடி – அது என்னைத் துரத்த வில்லை,இன்று காலை உர்ஸ் என்னை முன் கூட்டி எச்சரித்த இடம் இதுதான் என்று ஞாபகம் வந்ததும் – என் நடை வேகம் அதிகரித்தது. ஒன்றும் நேரவில்லை.திகில் ஓடினேன்.குடிசை, குடிசைச் சாவியைக் கண்டு பிடித்து எடுத்து, கதவைத் திறந்து, உள்ளே புகுந்து கதவை மூடித் தாளிட்டு – அதற்குமேல் தாளவில்லை. தடம் திரும்பி விட்டது. குப்பென்று வேர்த்துக் கொட்டிற்று. முடியவில்லை. இடுப்பு தள்ளாட்டம் கண்டு விட்டது. நின்ற விடத்திலேயே தடாலென்று விழுந்ததுதான் தெரியும். 

அத்தியாயம்-6

கதவைத்தட்டும் சத்தம். 

விழித்துக் கொள்கிறேன். 

சுவரில் பொற்கதிர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. 

முக்கி முனகி எழுந்து கதவைத் திறக்கிறேன். 

வாசற்படியில் உர்ஸ் நிற்கிறாள். ரவிக்கை. பாவாடை. இடையில் குடம். மறுகையில் என் வாழைப் பழச் சீப்பு போனது போக. 

அவள் கண்களில் வியப்பு. வாதாங்கொட்டை மேட்டு விழிகள். கீழுதடின்மேல் உறங்கும் மேல் உதடு. அசப்பில், சில ஓரைகளில் சில சாயல்களில் அந்த முகம் சிற்பியின் கனவாயிருக்கக்கூடும். 

மறுபடியும் எனக்கு உடலில் வெலவெலப்பு. தள்ளாடி நடந்து, சற்று எட்டப்போய் உட்காருகிறேன். 

என்மேல் நாட்டம் மாறாமலே குடத்தை இறக்கி விட்டு என்னிடம் வந்து அருகே அமர்கிறாள். மழையோ, வெய்யிலோ, கொட்டுகிற பனியோ, இந்த மலையாளிகள் எப்படி இவ்வளவு தண்ணிப்பு வெள்ளத்தில் நாள் தவறாது தலைக்கும் ஸ்னானம் பண்ணுகிறார்கள்? ஜலத்தில் விரலை வைக்கவே நமக்குப் பயமாயிருக்கிறது. 

அவள் விழிகளில் வினா முற்றியது. சட்டென அவள் மூக்கு நுனி சுருங்கிற்று. என்னை, என் முகத்தை,என் மார்க்களத்தை, மூக்கு நுனியாலேயே உழுவதுபோல, மேலேபடாமல், பரவலாக முகர்ந்தாள். 

“என்ன ஸாமி, நேற்று பெரியகளியோ?” பாதி நையாண்டி, பாதி வினை. 

ஆம், எனக்கும் தெரிகிறது, என்மேல் தாழம்பூ கமாளிக்கிறது. 

‘சௌக்யமாயிருக்கேளா நீங்கள் எங்கேயோ அங்கே நீங்கள் நான் இங்கே. இருவருக்கும் வீண் வீறாப்பில் விரலி டுக்கில் வழிஞ்சுபோன நாட்களை நான் எண்ணி வெச்சுகல்லே, உங்கள் மாதிரி. ஆனால் உள்ளே உளுத்துப் போச்சு. ஒரு வருஷமா உடம்பு சரியில்லே. சோர்ந்து சோர்ந்து வரது. ஆகாரம் தங்கல்லே. வெளி நோக்கிடறது. எக்ஸ்ரே எடுத்தது. எல்லாம் சரியாய்ப்போயிடும்னு எல்லா ரும் சேர்ந்து அடிச்சு சொல்றா. அதாலேயே முழுப் பூசனிக் காயை மறைக்கறா. மனசை சரியா வெச்சுக்கணுமாம் எப்படி வெச்சுக்கறது? நீங்களே சொல்லுங்கோ…என்னை வந்து பாருங்கோ, நமஸ்காரம். நேக்குப் பயமாயிருக்கு’. 

‘நேக்குப் பயமாயிருக்கு.’ 

ஆம், எனக்கும்தான் பயமாயிருக்கு. பயம் ஒட்டுவா ரொட்டி. நாய் பாய்கிற மாதிரி ப்யத்தை இன்னொருவர் மேல் அவிழ்த்து விடலாம். என் கைகளில் உதறலினின்று ஒளிந்து கொள்வதற்காக இருகைகளாலும் என்னை அழுந்தத் தழுவிக் கொள்கிறேன். வெய்யில் திடீரென மஞ்சள் மங்கிற்று. 

உர்ஸ் குந்திட்டு உட்கார்ந்து கொண்டு தோசை வார்த்துக் கொண்டிருக்கிறாள். மாவுக் கொட்டாங்கச்சி யினாலேயே, தகரத்தில் ஊற்றிய மாவை மெல்லியதாக வட்டம் எழுதுகிறாள். கொடியடுப்பில் குழம்பு காய்கிறது, தோசையில் புள்ளிகள் தோன்றுகின்றன. மணம் வயிற்றைக் குடைகிறது. நேற்று பட்டினி என்பதால் மட்டு மல்ல. வயிற்றில் மண் எடுத்துவிட்ட மாதிரி, ஏதோ பள்ளம் விழுந்து விட்டது. கெட்ட சேதிக்கு ஒண்ணும் வேண்டிருக்காது என்பார்கள். ஆனால் எனக்குப் பயங்கர மாப் பசிக்கிறதே! 

பாம்பு கழுத்தில் விழுந்தது ஆகாதென்பார்கள். 

“கழுத்தில் விழுந்த மாலை கழட்ட முடியவில்லை. நற்காரிகையே வகையறியேனே.’ 

அந்த நாள் நாகசாமி பாகவதர் ப்ளேட். மூக்குக் கொஞ்சம் ‘ஙொண ஙொண் ஆனால் நல்ல குரல். 

விட்டுத் தொலைத்து விட்டேன். சென்று போன என் வாழ்க்கைக்கு ஸ்னானம் பண்ணி விட்டேன் என்று நினைச்சதெல்லாம் தப்புக் கணக்கு. அஞ்சு வருடங்களாகி யும், இவ்வளவு தூரத்திலும் மதுரத்தின் கை இவ்வளவு நீளமா? கடலாழத்தில் நங்கூரம் புதைவது போல். 

இப்போ கூட என்னைக் கட்டியிழுத்துச் செல்ல யார் இங்கே? முகம் பாராமல், முதுகைத் திருப்பிக் கொள்ள எத்தனை நாழி? 

எண்ணினால் வந்த கடிதம் எட்டு சுக்கல். மதுரநாயகி அம்மாள், உங்கள் கடிதம் கண்டு உங்களை நான் மறந்தா லும் என் மனச்சாட்சி தெளிவுதான். நீ அன்று சவால் விட்ட மாதிரி உன் பிள்ளைகள் முன்னுக்கு வந்திருப்பார்கள். உன்னை ஜாம் ஜாம் என்று தாங்குகிறார்கள். ஏழை நான் அங்கு வந்து உனக்கு என்ன செய்யப் போகிறேன்? இறந்த காலத்துள் ஏன் என்னைத் திரும்ப இழுக்கப் பார்க்கிறாய்? உன் கோபுரத்துக்கு அழகாகக் குரங்கு வேண்டியிருக்கிறதாக் கும்! இப்பவே நீ பொய் சொல்லவில்லை என்று என்ன நிச்சயம்? உன் தாய் வழிப்படி உனக்கு ஆயுசு கெட்டியாகத் தானிருக்கும். இதெல்லாம் சந்ததி பேசும்- 

அரவம் கேட்டு நிமிர்கிறேன்.உர்ஸ் இரண்டு கைகளி லும் ஏனங்களைத் தாங்கிக் கொண்டு எதிரே நிற்கிறாள். என் மடியில் தோசையைத் தட்டோடு வைக்கிறாள். பற்றா பசையா? மதுரம் கத்துவாள். இப்பவே ஆரம்பித்து விட்டாளே! குடி தண்ணீரைத் தரையில் வைத்து விட்டு என் காலடியில் உட்கார்ந்து கொள்கிறாள். 

”சாமிக்கு உடம்பு சுகமில்லையோ?” 

பாங்குக்குக் கேட்டாலும் சந்திரன் கோட்டை போல், அதுவும் அனுசரணையாத் தானிருக்கிறது. 

சுழல் இழுத்துச் செல்கையில் கரையில் முளைத்திருக் கும் கோரைப் புல்லும் உயிருக்குப் பிடிதான். கரையேற ஒருவழிதான். 

கடிதத்தை அவளிடம் நீட்டுகிறேன். அப்படியே அவசரப் பார்வை பார்த்து, உதட்டைப் பிதுக்கித் தலையை ஆட்டி, கை விரிக்கிறாள். எனக்குப் புரிகிறது. 

“என் மனைவி உடம்பு சரியில்லேன்னு எழுதி யிருக்கா. 

என் விழிகள் திடீரென வழிகின்றன. நான் எதிர் பார்க்கவில்லை. விரும்பவில்லை. சொட்டுக்கள் தோசை மேல் விழுகின்றன. நான் மறைக்க முற்படவில்லை. இனி மறைத்து என்ன? ஆனால் உர்ஸ் கண்டு கொள்ளாது கன காரியமாய் அடுப்பண்டை விரைகிறாள். போகிற போக்கில் மூச்சோடு மூச்சாய்: 

“ஐயம் சாரி” 

வார்த்தைகள் காற்றில் தொற்றிக் கொண்டு — காற்றை யும் பெருமூச்சாக்கின. 

இலைகளின் ஓசைகள், பக்ஷிகளின் கானங்கள் சட்டென ஏதோ அச்சத்தில், அடங்கிப் போனாற்போல் தோன்றுகிறது; எனக்குப் பயம் அதிகரிக்கிறது. இவ்வளவு பெரிய அனுதாபம் நான் வேண்டவில்லை. உங்கள் ஓசை களில் ஒன்றாகி விடத்தான் என் விருப்பம். 

நேக்குப் பயமாயிருக்கு. 

மரங்களின் பின்னணியில், அவைகளை ஓங்கிக் கொண்டு ஒரு கருமேகம் கட்டுகிறது. உயரமாய், அகலமாய், ராக்ஷஸமாய், பயங்கரத்தின் கம்பீரத்தில் மரங்களின், கிளைகளின், இலைகளின் பின்னணியில் நின்றபடி அத்துடன் ஒரு குட்டி மேகம், ஆயுதம் போல் தானே நகர்ந்து அதன் கையில் ஒட்டிக் கொள்கிறது. 

‘வா போகலாம்’ என விளிக்கிறது. 

பகவானே, என் செய்வேன்? கைகள் பிசைந்து கொள்கின்றன. 

கற்பனைக்கிடங்கொடேல். உள்ளதும் உள்ளதற்குப் பெரிசரக உருக்காட்டிப் பயமுறுத்தும் மறதியை வெற்றி யுடன் பயிர் செய்ய மனதைக் கல்லாக்கிக் கொள்ளணும். அந்த சக்தி என்னிடமில்லையே! சரியாகக் கரையாமல் கட்டியுமுட்டியுமாய்க் கஞ்சிமாவாய் ஆகிவிட்டேனே! 

மதுரம் புக்ககத்துக்கு வந்த புதிது. கூட்டுத்தனமா யிருந்த நாள். வீடு ஒரே ஸல்லோ புல்லோ-இன்னும் சாந்தி கழிக்கவில்லை. நாள் இன்னும் பொருந்தவில்லையாம். “எல்லாம் நல்லத்துக்குத்தான், நெடுங்காலத்துக்குத்தான் சொல்றோம். பொறுக்கலாம், பொறுக்கணும்” அதென்ன பாஷையோ? இவர்கள் வார்த்தைக்கு யார் எதிர்ப்பு சொன்னது? எங்கே தைரியம் இருக்கிறது? இருந்தால் அந்தத் தோரணையில்தான் பெரியவர்களுக்கு அவர்கள் வயதின் அதிகாரம்!வந்தவர் போனவர் எல்லாம் அவர்கள் பேருக்கு ஆளுக்கு ஒரு அடி அடித்து விட்டும் போகணும் “என்னவோ அப்பா நான் சொல்றதைச் சொல்லிட்டேன். கையைக் கோத்துண்டு போகணும்னா. கையைக் குவித் துண்டு போவதோடு, நின்னால்சரி” இது இன்னொரு பாணி! பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு கனியக் காத்திரு என்பது அது அந்த நாளை விக்ரமாதித்த சோதனைகளில் ஒன்று. 

ஒரு வெள்ளிக்கிழமை காலை. 

அவள் வென்னீருள்ளிருந்து வெளிப்படுவதற்கும். அகஸ்மாத்தாய் என் ஸ்னானத்துக்குத் தயாராகிக் கொண்டு அவளை எதிர் கொள்வதற்கும் சரியாயிருந்தது. மோதிக் கொள்ளவில்லை ஆனால் கிட்டத் தட்ட அப்படித்தான். 

சம்பந்தா சம்பந்தமில்லாது இந்த சமயத்தில் ஏன் இந்த நினைப்பு? தெரியவில்லை. 

கூந்தலைச் சிம்மாடுக் கொண்டையிட்டு, முகத்தில் மஞ்சள் பளிச்சிட, கூடவே மைசூர் ஸாண்டல் சோப்பின் ‘கம் – உடம்பில் ஈரத்தைச் சுற்றிக் கொண்டே, அரக்குக் கலர்ப் புடவை. உள்ளே எதுவும் அணியவில்லை. தோய்த்த ரவிக்கை தோள்மேல் தொங்கியது. இருதோள்களும் மஸ்தாய் மறைவு எதுவுமிலாமல். 

ஈரத்தில் விளிம்பு காட்டும் அவள் மார்முட்டை இப்போ நினைத்தாலும் ‘சுருக்’. வயது தாண்டிவிட்டாலும் இதற்கெல்லாம் – நினைப்புக்கு வயதுகிடையாதோ? அந்த 

  • நினைப்பில் அந்த வயதாகி விட்டேன். அதனால் அப்படித் தோன்றியது. அந்த வயதின் குற்றமோ, உரிமையோ என் னென்று கண்டேன்? 

அவள் முகத்தில் ஒருங்கே வெட்கமும் வெற்றியும் குழுமி கண்களில் ஒரு சவால் புன்னகை. ‘என் சாக்கு எப்படி?என்கிற மாதிரி, சரேலென்று போய் விட்டாள். 

அம்மன் புறப்பாடு அலங்காரம் போல் பின்னழகுகள் பிதுங்கின. 

நின்றவிடத்தில் ஸ்தம்பித்து நின்றேன். அப்போ நான் நினைத்தது என்னென்ன? எல்லாம் இப்போ நினைவுக்கு உடனே வரவில்லை. ஆனால், ஒரு பாலடைக்கட்டி மட்டும் மேலாக மிதக்கிறது. 

“என் அம்மன், எனக்குக் காத்திருக்கிறது.’ 

நாம் எப்பவுமே அசடுகள்தான். பீடத்தில் ஏற்றி வைத்துவிட்டு, நாமே தள்ளினாலும் சரி, அது தானே விழுந்தாலும் சரி, தாளாமல் துடித்துப் போகும் அஞ்ஞானி கள். தெளிவு கொண்டவர் பெண்டிர் தாம். வேளையின் கவிதை மாயத்தில் அவர்கள் மயங்குவதில்லை. சமயத் துக்குத் தாயம் போட்டுக் கொண்டு, தங்கள் சௌகரியம் குன்றாமல் பிழைக்கத் தெரிந்த யதார்த்திகள். 

”சொய்சூஞ்-‘ தோசையின் இனிய வார்ப்போசை. 

“சாமி அப்போ பட்டணம் போ வேண்டாமா?” 

“ஹும்”. 

“சாமி போனால் திரும்பி வருமா? இல்லை அப்படியே -அங்கேயே-” 

புன்னகை புரிந்த வண்ணம் என்னைப் பார்க்கிறாள். 

ஓ..இது இன்னொரு சங்கடம் இருக்கா? 

“கிழக்குச் சீமையை ஞான் கண்டதேயில்லை…” 

தனக்குள்ளே உர்ஸ் முனகிக் கொண்டாள். அவளைப் பொறுத்தவரை வெறும் உரத்த சிந்தனைதான். 

ஆனால், சட்டென எனக்கு ஒரு யோசனை ‘சுர்ரென’ வத்தி கிழித்தது. 

”உர்ஸ், நீ என்னோடு வரயா?” 

அங்கு என்னை அவள்- அவர்கள் கட்டிப் போட வழி யில்லாமல் திரும்புவதற்கு இவள் ஒரு திடமான காரணம் ஆவாள். அழைத்துப் போனால் செலவு கூடத்தான்; ஆனால், இந்த சமயத்தில் செலவைப் பார்த்தால் முடியுமா? 

அவள் என்னை வியப்புடன் பார்த்தாள். “சாமி களிபறையறதா?” 

“களியுமில்லை, கஞ்சியுமில்லை;” எனக்கு உற்சாகம் மூண்டுவிட்டது. ”மெய்யாகத்தான்’ உடனே எனக்கு ஸ்வரம் இறங்கிற்று. ”ஆனால், உன் அப்பா சம்மதிப் பாரோ இல்லியோ?” 

“அச்சனைக் சரியாக்கிடலாம்” அவள் கண்களில் பேராசையின் குறு குறுப்பு ஏறிற்று. 

“அம்மை?” 

அலக்ஷியமாகச் சூள் கொட்டி விட்டு வெளியே ஓடினாள். 

– தொடரும்…

– கேரளத்தில் எங்கோ… (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1988, ஐந்திணை பதிப்பகம், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *