கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 5,950 
 
 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 |

திடீரென்று ஒரு நாள் அவன் அம்மாவிடம் இருந்து அவனுக்கு ஒரு போன் வந்தது.“நடராஜா நம்ம பவானிக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு நாங்க முடிவு பண்ணி இருக்கோம்.என் தம்பி பையன் ராஜூவுக்கு தான் பண்ணலாம் ன்னு முடிவு பண்ணி இருக்கோம்.நாங்க எல்லாம் இங்கு ஏற்பாடு பண்ணிவிட்டு உனக்கு தகவல் தரோம்.நீ ஒரு வாரம் முன்னாலே கல்யாணத்துக்கு வா” என்று சொன்னாள்.நடராஜனுக்கு ஆச்சா¢யமாக இருந்தது.‘அவன் அம்மா நிதான மாக” நான் என்ன பண்ணுட்டும் நடராஜா.பவானியும் ராஜுவுன் ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் ரொம்ப விரும்பு கிறாங்களாம்.உங்க சின்ன மாமா தான் வந்து சொன்னாரு.நமக்குள்ளாற உறவு விட்டுப் போவக் கூடாதுன்னு சொல்லி ரொம்ப வற்புறுத்தினார்.நானும் உன் அப்பாவும் பவானியைக் கேட்டோம்.உன் ‘ப்ளானையும்’ அவளுக்கு ஞாபகப் படுத்தினோம்.அவ ‘நான் அவரை மனசார காதலிக்கிறேன்ம்மா எனக்கு அவரை கல்யாணம் பண்ணி வைம்மா” ன்னு தீர்மானமா சொல்லி விட்டா நடராஜா.நாங்க என்ன பண்ண முடியும் சொல்லு. வேறு வழி இல்லாமா நானும் உன் அப்பாவும் அவ கல்யாணத்துக்கு சம்மதம் குடுத்தோம் நடராஜா” என்று பூரா விவரத்தையும் சொன்னாள் பார்வதி. “அப்படியா அம்மா சமாசாரம். அப்படின்னா ரொ¡ம்ப சந்தோஷம். பவானியே இந்த கல்யாணத்தைக் கேட்டா நாம ஒன்னும் பண்ன முடியாதும்மா.நீங்க கல்யாணத் துக்கு எல்லா ஏற்பாடெல்லாம் பண்ணி விட்டு எனக்கு போன் பண்ணுங்க.நீங்க சொன்னாப் போலவே நான் கல்யாணத்துக்கு வந்துடறேன்” என்று சொன்னான் நடராஜன்.அவன் தன் தங்கை ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையை குழி தோண்டி புதைத்து விட்டு மேலே ஆக வேண்டியதை கவனிக்க ஆரம்பித்தான்.

ஒரு மாதம் ஆச்சு.அவன் அம்மாவிடம் இருந்து பவானியின் கல்யாண தேதி பற்றின போன் வந்தது.நடராஜன் ரொம்ப சந்தோஷம்.உடனே கடைக்குப் போய் தன் தங்கை பவானிக்கு வந்த பட்டுப் புடவை, தங்க நகை, மேக்கப் சாமான்கள்,நிறைய கல்யாணப் பரிசுகள்,அப்பா, அம்மா இருவருக்கும் ஜவுளி,தனக்கும் பாண்ட் ஷர்ட் எல்லாம் வாங்கினான்.ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு அரியலூருக்குப் போனான் நடராஜன்.தன் தங்கை பவானிக்கு சென்னையில் இருந்து வாங்கி வந்த பட்டுப் புடவை, தங்க நகை, மேக்கப் சாமான்கள்,நிறைய கல்யாணப் பரிசுகள் எல்லாம் கொடுத்தான் தன் அப்பா அம்மாவுக்கு தான் வாங்கி வந்த ஜவுளியையும் கொடுத்தான் நடராஜன். தான் கொண்டு வந்து இருந்த பணத்தை தன் பெற்றோர்களிடம் குடுத்து பவானி கல்யாண செலவுக்கு வைத்துக் கொள்ளச் சொன்னான்.

கல்யாணத்தை விமா¢சையாக செய்து முடித்தார்கள் பரமசிவமும் பார்வதியும்.இந்த கல்யாணத்தில் எல்லா உறவுக்காரர்களுக்கும் மிகவும் சந்தோஷம்.எல்லோரும் ‘மண மக்களை’ ஆசீர்வாதம் பண்ணி தங்கள் சந்தோஷத்தைச் சொன்னார்கள் .இரண்டு நாள் தன் பெற்றோர்களுடன் இருந்து விட்டு சென்னைகுத் திரும்பினான் நடராஜன்.

இந்த பழைய நினைவுகள் எல்லாம் அவன் மணக் கண்ணில் ஓடிக் கொண்டு இருந்தது.இரவு முழுவதும் வேலை செய்த களைப்பு, அவன் நினைவுகளையும் ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டு அவனை கண் அயர வைத்தது.நன்றாகத் தூங்கி விட்டான்.

எப்போது திங்கள் சாயங்காலம் என்று கமலாவும் நடராஜனும் ஏங்கிக் கொண்டு இருந்தார்கள்.

சிவலிங்கம் நிதானமாக“எனக்கே ஒன்னும் புரியலே சரோஜா. நம்ம பணம் எல்லாம் கரைஞ்சிக் கிட்டு இருக்கு.என்ன பண்ரதுன்னே தெரியலே”என்றார் சிவலிங்கம் விரக்தியாக.” எனக்கு உங்க கஷ்டம் நல்லா புரியுதுங்க. பாக்கலாங்க.மனசே தளர விடாதீங்க”என்று ஆறுதல் சொன்னாள் சரோஜா.

சற்று நேரம் கழித்து சிவலிங்கம் ”கமலா,நீ உன் சம்பளத்தை ஜாக்கிறதையாக பாத்து செலவு பண்ணு. உன் கல்யாணத்திற்கு செலவு பண்ண நமக்கு பணம் சேரணும்.வர மாப்பிள்ளை வீட்டார் என்ன என்ன கேப்பாங்களோ தெரியாது.அதனால் நீ சிக்கனமா இருந்து வாம்மா.உன் சம்பள பணத்தை நீ சேத்து வச்சுக்கம்மா.என்னிடம் இருக்கிற பணம் கொஞ்சம் கொஞ்சமா செலவு ஆகி விட்டு வருது” என்று சொல்லி நிறுத்தினார்.கமலா “சா¢ப்பா” என்று சொல்லி விட்டு அவள் வேலையை கவனிக்கப் போய் விட்டாள்.

திங்கட்கிழமை வந்தது.கமலா நன்றாக டிரஸ் பண்ணிக் கொண்டு ஆஸ்பீஸ் கிளம்பினாள். அவள் மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.எப்போ சாயங்காலம் வரும்,நாம் நடராஜனை சந்திச்சு பேசலாம் என்று ஆவலாக இருந்தாள் கமலா.அன்று பார்த்து ஆஸ்பீஸில் செம வேலை.கமலாவுக்கு கோவம் கோவமாக வந்தது.நாம் இப்போ பொறுமையாகத் தான் இருக்கணும் என்று எண்ணி எல்லா வேலைகளையும் செய்து முடித்தாள்.மெல்ல ஆஸ்பீஸ் முடிந்தது.கமலா ‘டாய்லெட்’ போய் தன்னை இன்னும் கொஞ்சம் அழகுப் படுத்த்¢க் கொண்டாள்.

‘லன்ச்’ பாக்சை கையில் எடுத்துக் கொண்டு ஆஸ்பீஸை விட்டு வெளியே வந்தாள். நேரே சரவண பவனை நோக்கி நடந்தாள்.அவள் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது.’நடராஜனுடன் நிறைய பேசணும்,நிறைய கேள்விகள் கேக்கணும்.எப்படியாவாது பேசி தன் காதலை கைகூட முயற்சிக்க வேணும்” என்று எண்ணினாள் கமலா.அதற்கு தேவையான ¨தா¢யத்தை தனக்குத் தருமாறு கடவுளை வேண்டிக் கொண்டாள் கமலா.நடராஜன் நன்றாக ‘ட்ரஸ்’ பண்ணிக் கொண்டு வந்து சரவண பவன் வாசலில் கமலாவுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.கமலா வேகமாக ஹோட்டலை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாள். தூரத்திலேயே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதால் இருவரும் கையை ஆட்டினார்கள்.இருவர் உள்ளமும் சந்தோஷத்தில் திளைத்தது.கமலா நடந்து வரும் அழகையும்,அவள் உடல் அழகையும் ரசித்துக் கொண்டு இருந்தான் நடராஜன்.இருவரும் சந்தோஷமாக ஹோட்டலுக்குள் சென்று காலியாக, அதிக கூட்டம் இல்லாத இடமாகப் பார்த்து உடார்ந்துக் கொண்டார்கள்.

“என்ன சாப்பிடுறே கமலா” என்று நடராஜன் கேட்ட போது இருவருக்கும் நாம் ஒருவரை ஒருவர் நெருங்கி வந்த உணர்வு இருந்தது.“லைட்டாவே சாப்பிடலாங்க.இங்கே ‘ஹெவியாக’ சாப்பிட்டு விட்டு வீட்டுக்குப் போனா வீட்டுலே பசி எடுப்பதுல்லே.நான் ஏதேதோ பொய் காரணம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்குங்க, ‘ப்ளீஸ்ங்க’ ” என்றாள் கமலா.“சா¢ கமலா ‘லைட்டாவே’ சாப்பிடலாம்.உன் கஷ்டம் எனக்கு நல்லாவே புரியுது கமலா.உனக்கு எந்த கஷ்டமும் குடுக்க நான் விரும்பவில்லை கமலா”என்று அக்கறை யோடு சொல்லி சர்வா¢டம் “இரண்டு ப்ளேட் போண்டா குடுங்க” என்று ஆர்டர் பண்ணி விட்டு “அன்னைக்கு உங்க வீட்டுலே ஏன் ‘லேட்டு’ன்னு கேட்டு ஏதாச்சும் உன்னை கஷ்டப்படுத்தினாங்களா கமலா” என்று மிகவும் சுவாதீனமாகக் கேட்டான் நடராஜன்.கமலா தன் பெற்றோர்கள் கவலைப் பட்டதையும் தான் என்ன, என்ன பொய்கள் சொல்லி நிலைமையை சமாளித்தேன் என்றும் சொன்னாள்.“குட், நல்ல பதில் சொல்லித் தான் சமாளித்து இருக்கே” என்று சொல்லி முடிப்ப தற்குள் சர்வர் போண்டாவை கொண்டு வந்து வைத்தான்.

உடனே “ரெண்டு காப்பி கொடுங்க” என்றும் சொல்லி விட்டான் நடராஜன். இருவரும் போண்டாவை ரசித்து சாப்பிட்டனர். சாப்பிட்டுக் கொண்டே “இன்னைக்கு உனக்கு ‘லேட்’ ஆகாமல் நான் உன்னை அன்னைக்கு ‘ட்ராப்’ பண்ண இடத்தில் மறுபடியும் ‘ட்ராப்’ பண்ணி விடுகிறேன் கமலா.நீ கவலை இல்லாம நிதானமா சாப்பிடு கமலா.நாம கொஞ்ச நேரம் நாம் பேசி விட்டுப் போவமா கமலா” என்றான் நடராஜன்.கமலாவுக்கும் நடராஜன் சொன்னது சா¢ என்று பட்டது.“சா¢ங்க,நாம கொஞ்ச நேரம் பேசிட்டே போகலாங்க’ என்று சொன்னாள் கமலா.போண்டாவை கடித்துக் கொண்டே “எனக்கு வயசு இருபத்து ஏழு ஆவுது கமலா.உனக்கு என்ன வயசு ஆவுது கமலா” என்று கேட்டு பேச்சைத் துவக்கினான் நடராஜன்.

“எனக்கு இருபத்திரெண்டாவதுங்க” என்றாள் கமலா.கொஞ்ச நேரம் இருவரும் சும்மா இருந்தார்கள்.“நம் இருவருக்கும் நல்ல வயசு பொருத்தம் இருக்குது கமலா, இல்லையா கமலா” என்று ஏதோ சொல்லி பேத்தினான் நடராஜன்.கமலா சிரித்துக் கொண்டு சும்மா இருந்தாள்.அவள் ஓன்னும் பேசவில்லை.நடராஜனுக்கு கொஞ்சம் கவலையாய் இருந்தது.’நாம் அவசரப் பட்டு பொருத்தம் வயசு பொருத்தம் அது, இது என்று எல்லாம் பேசி இருக்கக் கூடாதோ,இன்னும் பொறுமையாக இருந்து இருக்க வேண்டுமோ,கமலா என்ன நினைத்துக் கொண்டு இருப்பாளோ’ என்று எல்லாம் நினைத்து கவலைப் பட்டான்.

சற்று நேரம் கழித்து ¨தா¢யத்தை வர வழைத்துக் கொண்டு “கமலா,நாம் ஹோட் டலில் இந்த மாதிரி சந்திக்கும் போது அதிக பக்ஷம் ஒரு அரை மணி நேரம் தன் பேச முடிகிறது.அதுவும் வாரத்தில் ரெண்டு நாளோ அல்லது மூனு நாளோ தான் நாம் ‘மீட்’ பண்ண முடிது.ஒரு மூனு மணி நேரமாவது பேசினாத் தான் கமலா நாம் மனம் விட்டு பேச முடியும்.நீ என்ன நினைக்கிறே கமலா.அப்பத் தான் நாம ஒருவரை ஒருவர் நல்லா புரிஞ்சுக்க முடியும்ன்னு நான் நினைக்கிறேன்” என்று சொல்லி அவள் முகத்தை கூர்ந்து கவனித்தான் நடராஜன். உடனே அவளும் “நானும் அப்படித் தான் நினைக்கிறேனுங்க” என்றாள் கமலா.அவளுக்கு அவன் சொன்னது மிகவும் பிடித்து இருந்தது.ஆனால் ‘என்ன பண்ணுவது,எப்படி பண்ணுவது’ன்னு அவளுக்கு தெரியவில்லை..அவள் யோசித்தாள்.அவன் ஏதாவது வழி சொல்கிறானா என்று அவன் முகத்தையே ஆவலோடுப் பார்த்துக் கொண்டு இருந்தாள் கமலா.

நடராஜன் தான் பேச ஆரம்பித்தான்.”நான் மார்னிங்க் டியூட்டி பண்ற நாள்ள மதியம் ரெண்டு மணியில் இருந்து இரவு வரை ‘ஸ்ப்¡£யா’ இருப்பேன்.’ஈவினிங்க் டியூட்டி’ இருந்தா காலையிலே மணி பன்னண்டு வரை நான் ‘ஸ்ப்¡£யா’ இருப்பேன்.நைட் டியூட்டி இருந்தா ‘டே’ புராவும் ‘ஸ்ப்¡£’ தான். உனக்கு தினமும் பத்திலிருந்து ஐந்தரை வரை ஆஸ்பீஸ்.அப்புறம் நமக்கு கிடைக்கும் நேரமோ ஒரு மணி கூட இல்லே.தவிர நாம் இங்கே பேசுவதும் கஷ்டம்.தனியா ஒரு பார்க்கோ,இல்லை பீச்சோவா,இருந்தா நாம சாவகாசமா நிறைய நேரம் பேசலாம்.நீ என்ன சொல்றே கமலா.நான் வந்ததில் இருந்து நானே தான் பேசிக்கிட்டு இருக்கேன்,நீ சும்மா கேட்டுகிட்டு த் தான் இருக்கே. ஒன்னும் சொல்லாமலே இருக்கே கமலா” என்றான் நடராஜன்.“நான் நீங்க சொன்னதை எல்லாம் கேட்டுக் கிட்டு தாங்க இருக்கேன்.கூடவே நான் யோசிச்சிகிட்டு இருந்தேங்க”என்று கமலா சொல்லி விட்டு “ நீங்க தான் ஏதாச்சும் ஒரு ஐடியா சொல்லுங்க” என்று கேட்டாள் கமலா.யோஜனை பண்ணின கமலா ஒரு முடிவுக்கு வந்தவளாய் சட்டென்று “இந்த சனிகிழ்கமை உங்களுக்கு என்ன டியூட்டி”என்று கேட்டாள் கமலா.“நான் வெள்ளிக் கிழமை ‘நைட் டியூட்டி’ பண்ணினேன்னா சனிக்கிழமை பூராவும் நான் ‘ப்¡£‘தான்.இரவு ஒன்பது மணிக்கு நான் சாப்பிட்டு விட்டு அன்னிக்கு ‘நைட் டியூட்டிக்கு’ போவணும் அவ்வளவு தான்” என்று சொல்லி நிறுத்தினான் நடராஜன்.”சா¢ங்க,நல்லதா போச்சு ங்க.நான் என் வீட்டிலே நான் என் தோழி வீட்டுக்கு போய் வரேன்னு சொல்லிட்டு, நான் இந்த சரவண பவனுக்கு வந்து விடறேன்..நீங்களும் வந்து விடுங்க.நாம் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு பீச்சுக்கு போய் நிதானமா பேசலாங்க. என்ன சொல்றீங்க” என்று சொன்னாள் கமலா ¨தா¢யத்தை வரவழைத்துக் கொண்டு.உடனே “ ’எக்ஸலண்ட்’ ஐடியா,கமலா ‘ரேட் ஐடியா’ நீ சொன்னது.நான் சா¢யா இங்கே நாலு மணிக்கு வந்திடறேன்.நீயும் வந்திடு.நாம காப்பி சாப்பிட்டு விட்டு பீச்ச்சுக்கு போய் பேசலாம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது கமலா மணியை பார்த்தாள்.

“நீ மணியைப் பாத்தாலே நன் புரிஞ்க்சிகுவேன் கமலா.இதோ நான் ரெடி கமலா. கிளம்பு, இன்னும் இருபது நிமிஷத்திலே நீ கே. கே. நகர்லே இருப்பே” என்று சொல்லி விட்டு பில்லுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு வெளியெ வந்து தன் ‘டூ வீலரை’ உதைத்து ஸ்டார்ட் பண்ணினான் நடராஜன்“ஏறிக்கோ கமலா” என்று சுவாதீனமாக கமலாவை அழைத்தான் அவன்.கமலாவும் உடனே அவன் ‘டூ வீலா¢ல்’ ஏறிக் கொண்டான்.தன் ‘டூ வீலரை’ வேகமாக ஓட்டிக் கொண்டு இருந்தான் நடராஜன்.போன தடவை அவன் ‘டூ வீலா¢ல்’ அவள் போனதை விட இப்போது போவது இன்னும் சந்தோஷத்தைக் கொடுத்தது கமலாவுக்கு. அவனுடன் இருந்த நெருக்கத்தை அவள் இன்னும் அதிகப் படுத்திக் கொண்டாள்.இதை நடராஜனும் கவனித்தான்.அவளை கே.கே.நகர்லே முன்னே விட்ட இடத்தில் இறக்கி விட்டான் நடராஜன்.இருவரும் பிரிய மனம் இல்லாமல் பிரிந்தார்கள்.

செருப்பை கழட்டி வைத்து விட்டு ‘லன்ச் பாக்ஸை’ தேய்க்கப் போட்டு விட்டு கை கால்களை எல்லாம் கழுவி கிட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தால் கமலா.அவள் முகம் தினத்தை விட இன்று சந்தோஷமாய் இருந்தது.கமலா வேலைக்கு சேர்ந்து அன்றோடு ஒரு வருஷம் ஆகி இருந்தது.சிவலிகங்கம் தன் பெண்ணை பார்த்து “ எப்படி இருக்கிறதும்மா வேலை எல்லாம்”என்று விசாரித்தார். “ஒன்னும் ‘ப்ராப்லெம்’ இல்லேப்பா நல்லா போய்க் கிட்டு இருக்குது” என்று பதில் சொன்னாள் கமலா.“உன் மேலே ‘கம்ப்லெயிண்ட்’ ஒன்னும் இல்லாம,’பனிஷ்மெண்ட்’ ஒன்னுமில்லாம நீ அடுத்த ரெண்டு வருஷமும் நல்ல ரிப்போர்ட் வாங்கி வந்தா உன்னை, இந்த வேலையில் ‘நிரந்தரம்’ பண்ணுவாங்கம்மா.என் நாளில் எல்லாம் இந்த ‘நிரந்தரம்’ ரெண்டு வருஷத்துலேயே பண்ணி விடுவாங்க.இப்போ இன்னும் ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ கூடுதலாக ஆவும்ன்னு நான் நினைக்கிறேன்.பாக்கலாம்.நம் கையில் ஒன்னுமில்லை.அந்த முருப் பெருமான் கடவுள் அருள் இருக்க வேண்டும். எல்லாம் நல்ல படியா நடக்க” என்று சொல்லி பெருமூச்சு விட்டார் சிவலிங்கம்.

கமலா உள்ளே போனதும் சரோஜா தன் கணவனிடம் “ உங்க மனசு எனக்கு நல்லா புரியுதுங்க.நாமோ ‘ரிடையர் ‘ஆயிட்டோம்.’ரிடையர்’ ஆன பணத்தை ஒன்னும் பண்ண முடியாம இப்படி மாட்டிகிட்டு இருக்கோம். உமாவுக்கு வேறு மாதா மாதம் பணம் தருவதாய் சொல்லி இருக்கோம்.கையில் இருக்கும் பணமும் கரைந்ஞ்சு கிட்டு வருது. இந்தப் பெண்ணுக்கு சீக்கிரம் ‘நிரந்தரம்’ ஆக வேணுமேன்னு கவலைப்படறீங்க.கவலைப் படாதீங்க.கடவுள் அருளால் எல்லாம் சா¢யாய் போகும்ங்க” என்று கணவனுக்கு சொன்னாள் சரோஜா

வெள்ளி கிழமை கமலா ஆஸ்பீஸில் இருந்து வீட்டுக்கு வந்தாள்.செருப்பை கழட்டி வைத்து விட்டு ‘லன்ச்’ பாக்ஸை தேய்க்கப் போட்டு விட்டு சோபாவில் வந்து உட்கார்ந்தாள்.“அம்மா நான் ஆஸ்பீஸ் விட்டு வரும் போது வழியில் என் கல்லூரி தோழி சரளாவைப் பாத்தேன்.அவளுக்கு நா¨ளைக்கு ‘பர்த்டே’ வாம்.‘நான் பார்ட்டி வச்சு இருக்கேன்,நீயும் கண்டிப்பா வரணும்’.நான் உனக்கு போன் பண்ணனும்ன்னு தான் இருந்தேன்,நல்ல வேளை, உன்னை நான் நோ¢ல் பாத்துட்டேன். நிச்சியமா நீ வரணும் தெரியுமா” என்று என் கையை பிடித்துக் கொண்டு சொன்னா.நாளைக்கு ஆஸ்பீஸ் அரை நாள் தான்.அது முடிஞ்சதும் நான் வீட்டுக்கு வந்து விட்டு ‘டிரஸ்’ மாத்திக்கிட்டு உடனே போகப் போறேன்ம்மா. வர கொஞ்சம் லேட்டானலும் நீங்க கவலை படாதீங்க” என்றாள் கமலா.“சா¢ போய் விட்டு வா.ரொம்ப லேட்டாக்கி எங்களை கவலைப் படும்படி பண்ணி விடாதே” என்றாள் சரோஜா.

அன்று சனிக்கிழமை.கமலா ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு ஆஸ்பீஸ் கிளம்பினாள்.அவள் மனம் பூராவும் இன்று ஆஸ்பிஸ் முடிந்து வீட்டுக்கு வந்ததும் நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு போய் நடராஜனுடன் சந்தோஷமாய் ‘டைம் ஸ்பெண்ட்’ பண்ண வேண்டும் என்று துடித்தது.அவளுக்கு ஆஸ்பீஸில் வேலையே ஓடவில்லை.மணி எப்ப ஒன்னடிக்கும்,நான் ஆஸ்பீஸ் விட்டு வீட்டுக்குப் போய் டிரஸ் பண்ணிக் கொண்டு போய் நடராஜனுடன் பேசுவோ
என்று ஆசைப் பட்டுக் கொண்டு இருந்தது.

அன்று ஆஸ்பீஸ் முடிந்ததும் கமலா இருந்து வீட்டுக்கு வந்து, நன்றாக குளித்து விட்டு ஒரு நல்ல டிரஸ் போட்டுக் கொண்டு தன் ஹாண்ட் பேக்கையும் எடுத்துக் கொண்டு, “அம்மா, நான் போயிட்டு வரேன்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் வந்திடறேன்.நீங்க கவலைப் படாதீங்க” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.“ஜாக்கிரதையா போய் வா” என்று சொல்லி கமலாவை அனுப்பி வைத்தார்கள் சிவலிங்கமும் சரோஜாவும். கமலா வீட்டை விட்டு கிளம்பி ஒரு பஸ் பிடித்து சரவண பவனுக்கு கிளம்பினாள்.சரவண பவன் வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்தான் நடராஜன்.மணி நாலே கால் ஆகி விட்டது.இன்னும் கமலாவைக் கானோம்.தவித்துப் போனான் நடராஜன்.

தூரத்தில் வேக வேக மாக வந்த கமலாவை கவனித்து விட்டான் நடராஜன்.அவளைப் பார்க்காதவன் போல் நின்றுக் கொண்டு இருந்தான் நடராஜன்.கிட்டே வந்து “சாருக்கு என் மேலே கோவமா, சாரி” என்றாள் கமலா. அப்போது தான் நடராஜன் அவளை கவனித்தது போல் ” ‘வாவ், யூ லுக் வொ¢ பியூட்டிஸ்புல்’ கமலா,இந்த டிரஸ்ஸ்லே.எனக்கு உன்னை அடையாளமே தெரியலே.நீ ரொம்ப அழகா இருக்கே. எனக்கு உன் மேலே கோவம் இல்லே கமலா.உன்னை திடீர்னு பார்க்கனும்ன்னு தான் நான் வேணும்ன்னு வேறு எங்கேயோ பாத்துக்கிட்டு இருந்தேன்” என்று சொல்லி மழுப்பினான் நடராஜன்.இருவரும் காலியாக இருந்த டேபில் உட்கார்ந்துக் கொண்டு லைட்டாக டிபன் சாப்பிட்டு விட்டு பிறகு பீச்சுக்கு பைக்கில் பறந்தார்கள்.பீச்சுக்கு வந்து காலியாக இருந்த ஒரு இடத்தில் இருவரும் உட்கார்ந்துக் கொண்டார்கள். இருவரும் சிறிது நேரம் மௌனமாய் இருந்தனர்.

‘நாம் தான் முதலில் பேசுவோமே’ என்று எண்ணி நடராஜன் தான் முதலில் பேச ஆரம்பித்தான்.“கமலா,நாம் இருவரும் இதுவரை மூன்று தடவையாக ஒன்னா சந்த்திச்சு பேசிக்கிட்டு இருந்து இருக்கோம்.ஆனா மனசு விட்டு பேச முடியலே.காரணம் அது ஹோட்டல்.தவிர நீ வீட்டுக்கு வேற போற அவசரம்.இப்போ நாம நிதானமாப் பேசலாம்.நம் ரெண்டு பேருக்கும் வயசுப் பொருத்தம் தான் இருக்கு.மனப் பொருத்தம் இருக்கா நம்ம காதல் நிறைவேறுமான்னு நாம ரெண்டு பேரும் தெரிஞ்சிக்க வேணாவா,சொல்லு. அப்படிதெரிஞ்சாத் தானே நாம் இருவரும் பழகி வருவதில் ஒரு அர்த்தம் இருக்கு.நீ என்ன சொல்றே கமலா.” என்று சொன்னான் நடராஜன்.“ஆமாங்க” என்று மொட்டையாகாச் சொன்னாள் கமலா.அதற்கு மேலே அவள் பேசலே.அவன் என்ன சொல்லப் போகிறான் என்று கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.“நாம் ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்பறோம்.நாம மேலே பேசி,நம்ப ரெண்டு பேர் குடும்பத்தை பத்தியும்,நம் விருப்பு வெறுப்பு, பத்தியும் நம் ஆசைகள்,நம்ம எதிர்பார்ப்புகள் போன்ற பல விஷயங்களை எல்லாம் நாம் பேசி தொஞ்சுக் கொள்ள வேணும்ன்னு நான் ஆசை படுகிறேன் கமலா” என்று சொல்லி நிறுத்தினான் நடராஜன்.“நீங்க சொல்றது ரொம்ப சா¢ங்க.நானும் இதையே தான் நினைக்கிறேன் நீங்களும் என்னை மிகவும் விரும்புகிறீங்க.நானும் உங்களை ரொம்ப விரும்புகிறேனுங்க” என்று சொல்லும் போதே அவள் முகம் குப்பென்று சிவந்தது. இதை கவனித்தான் நடராஜன்.

“ரொம்ப தாங்க்ஸ் கமலா,நீ இந்த பதில் சொன்னதற்கு.நம்ம ரெண்டு பேரும் இனி மனம் விட்டு பேச வேண்டும் கமலா.நான் முதலில் என் குடும்பத்தைப் பற்றி எல்லா விவரமும் சொல்றேன்” என்று சொல்லி தனக்கு விவரம் தெரிந்த நாள் தன் குடும்பததை பற்றின எல்லா விவரமும் முதலில் சொன்னான் நடராஜன்.பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தாள் கமலா.“பாவங்க உங்க அக்கா.அவங்க தற்கொலை பண்ணிகிட்டாங்கன்னு கேக்கவே எனக்கு ரொம்ப கஷடாமா இருக்குதுங்க.கூடவே உங்க அப்பாவும் இப்படி கை கால் சுவாதீனம் இல்லாமல் இருக்க வேண்டிய நிலையை நினைச்சா மனம் ரொம்ப வேதனைப் படுதுங்க.நீங்க இந்த சின்ன வயசிலே ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சுட்டு இருக்கீங்க. பாவங்க நீங்க” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு அவள் சொன்ன போது அவள் கண்களின் ஒரத்தில் நீர் துளித்தது.”என்ன பண்ணுவது கமலா.நானும் என் அம்மாவும் இந்த ரெண்டு சம்பவத்துக்கும் மனம் கஷ்டப்பட்டது அந்த தெய்வத்துகு தான் தெரியும்.இப்போ அதை எல்லாம் நாங்க மறந்து, எங்களுக்கு ஒரு நல்ல காலம் வரும் என்று எதிர் பார்த்து வாழ்ந்துக் கிட்டு வறோம் கமலா” என்று சொல்லி நிறுத்தினான் நடராஜன்.

“எங்க குடும்பமும் ரொம்ப சாதாரண நடுத்தர குடும்பம் தானுங்க.நீங்க உங்க குடும்பத்தை இவ்வளவு வெளிப் படையா எல்லாவத்தையும் சொன்னீங்க.அதே போல் நானும் எங்க குடும்பத்தைப் பத்தி எல்லா விஷயமும் வெளிப் படையா சொல்லி விடறே ங்க.நமக்குள்ள்ளே எந்த ஒளிவு மறைவு இருக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேங்க” என்று சொல்லி விட்டு தன் வீட்டு கதையையும் முழுக்கச் சொன்னாள் கமலா.”பாவம் உங்க அப்பா கமலா.உங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் உங்க அண்ணன் குமார் தலை எடுத்து இந்த குடும்பத்தைக் காப்பாத்துவான்னு எதிபார்த்து இருந்துப்பாங்க.ஆனா அவன் வீட்டை விட்டே ஓடிப் போனது அவங்களுக்கு ரொம்ப ஏமாத்தமா போய் இருக்கும். கூடவே உங்க மாமா குடும்ப கதையை கேக்கவும் ரொம்ப கஷ்டமா இருக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *