கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 6,419 
 
 

அத்தியாயம்-23 | அத்தியாயம்-24

நடராஜனுக்கு கமலா போ¢ல் இன்னும் நம்பிக்கை வரவில்லை.’இவள் இப்படித் தான் சொல்லுவா.நாமும் ஏமாந்து போய் உண்மை காரணத்தை சொல்லி விடுவோம்.உண்மை காரணம் தொ¢ஞ்சவுடன் பூகம்பம் தான் வெடிக்குமே ஒழிய, இவள் குழந்தையை வளக்க ஒத்துக் கொள்ள மாட்டா.நாமே ஏமாந்துப் போய் இவ கிட்ட மாட்டிப் போம்.இவ கேப்பதை உண்மைன்னு நம்பி நாம் உண்மையை சொன்னா வேறே வினையே வேணாம்.உண்மைக் காரணத்தை சொல்லாமல் இருந்து வருவது தான் சரி’ என்று எண்ணி மனதில் யோஜனைப் பண்ணினான் நடராஜன்.

கொஞ்ச நேரம் கழித்து “நான் உண்மை காரணத்தைச் சொன்னா மட்டும் என்ன கமலா,நீ உன் எண்ணத்தை மாத்திக்கப் போறயா என்ன.நான் உண்மை காரணத்தை சொன்னா மட்டும் நீ அடிக்கடி சொல்லுவியே ‘அந்த குழந்தை ‘வேலைக்கரியின் குழந்தை’ என்பது தான் மாறப் போவுதா. இல்லையே.நான் உண்மை காரணததை சொல்லி முடித்த பிறகு உன் முடிவு மாறும்ன்னு எனக்குத் தோணலே கமலா” என்றான் நடராஜன் விரக்தியுடன்.கமலா “சரிங்க,நீங்க சொல்லாட்டி போங்க. எனக்கு ஒன்னும் இல்லீங்க.அந்த குழந்தையை நாமே வளக்க உங்க கிட்டே எதோ காரணம் இருக்கும் ன்னு நினைச்சு தாங்க நான் உங்க கேட்டேன்.ஒரு வேளை அந்த காரணம் எனக்கும் சரின்னு பட்டுச் சுன்னா நாம் அந்த குழந்தையை வளக்க சம்மதிக்கலாமேன்னு தாங்க நான் கேட்டேங்க. அவ்வளவு தானுங்க” என்று சொல்லி விட்டு குழந்தையை தூங்க வைத்து,படுக்கைப் போட்டு தலையனை வைத்து அதில் குழந்தையை விட்டாள்.

பிறகு எழுந்துப் போய் தன் படுக்கைக்களை எல்லாம் சரி செய்த்தாள்அவள் படுக்க தயாராகி விட்டாள் என்பதை நடராஜன் கவனித்தான்.’இனிமே நாம் சும்மா இருக்கக் கூடாது.அவள் படுத்தா சீக்கிரமே தூங்கி விடுவா.நாம நாளைக்கு வேலைக்குப் போயே ஆவணும்.வேலைக்குப் போவாம இருந்து வர நாம் என்ன காரணம் கமலாவுக்குச் சொல்வது.இன்னைக்குத் தனக்கு தலை வலின்னு ஒரு பொய்யை நாம் சொன்னோம்.இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக்கூடாது.நாம் உண்மை காரணத்தை சொல்லி விடலாம்’ என்று எண்னினான் நடராஜன்.ஒரு பத்து நிமிஷம் யோஜனைப் பண்ணினான் நடராஜன்.

கமலாவே கேக்கறதாலே நாம உண்மைக் காரணத்தை சொல்லலாம்.அந்த காரணத்தை கேட்ட பிறகு கமலா ‘இப்படியா சமாசாரம்.நான் ஒருத்தி இப்படி குத்துக்கல்லு போல உங்களோடு இருக்கும் போது ,எப்படிங்க எனக்கு துரோகம் பண்ண உங்களால் முடிஞ்சுது.இப்படி நடந்துக்க உங்களுக்கு வெக்கமா இல்லீங்களாங்க.எனக்கு இப்ப உங்க வாயாலேயே ‘அந்த உண்மை காரணம்’ தொ¢ஞ்சுப் போச்சுங்க.இந்த காரணத்தாலே தான் நீங்க இந்த குழந்தையை அனாதை இல்லத்தில் விட மாட்டேன்ன்னு சொல்லி வறீங்களா’ ன்னு ‘ஓ’ன்னு சத்தம் போட்டு விட்டு ‘இந்த குழந்தையை நான் நிச்சியமாக வளக்கவே மாட்டேன்’ன்னு சொல்லிட்டா,நாம என்ன பண்றது.அப்ப வேறு வழி இல்லே நாம நேரே இந்த குழந்தையை நம்ம அம்மா கிட்டே கொண்டு போய் விட்டுட்டு,நடந்தததை எல்லாம் விவரமாகச் சொல்லி,மன்னிப்பு கேட்டு ‘அம்மா,கமலா இந்த குழந்தையை தான் வளக்க மாட்டேன்னு சொல்லிட்டா. நான் ராணீக்கு கொடுத்த வாக்கை காப்பாத்த நீங்க தான் எனக்கு உதவி பண்ணனும். இந்த குழந்தையே தயவு செஞ்சி நீங்க வளத்து வாங்கமா.இது என் குழந்தைம்மா’ ன்னு சொல்லி குழந்தையை நம் அம்மாவிடம் விட்டு விட்டு வர வேண்டியது தான்.நம் அம்மா இந்த உதவியை நமக்கு நிச்சியம் செய்வாங்க,நமக்கு வேறு வழி ஒன்னும் தொ¢ய வில்லயே’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டான் நடராஜன். பிறகு ‘நாம் உண்மை காரணத்தைச் சொன்ன பிறகு கமலா தன்னோடு வாழ விரும்பினா வாழட்டும்.இல்லை ‘நீங்க எனக்கு வேணாம்ங்க.நான் தனியாவே இருந்து வறேன்னு’ என்று சொல்லி விட்டா ‘நாமும் தனியே வாழ்ந்து வரலாம்.அம்மாவிடம் வளந்து வரும் நம் குழந்தை கொஞ்சம் பொ¢யவனாக ஆனப் புறம்,அவனை நம்மோடு வச்சுக் கிட்டு நாம் வாழ்ந்து வருவோம்.சாகும் போது நாம் கமலாவுக்குக் குடுத்த வாக்கை காப்பாத்துவோம்.நாம் கமலாவை வேணாம்ன்னு சொல்லலே.அவளே என்னை வேணான்னு சொல்லி தனியாகப் போக விரும்பினா, ‘என்னை தனியா தவிக்க விட்டுட்டு போவாதே கமலா’ என்று கெஞ்சிப் பாப்போம்.அதையும் மீறி அவ தனியாகப் போக முடிவு பண்ணினா,அவள் போகட்டும். நான் ஒன்னும் செய்ய முடியாதே.நாம் ராணீயின் குழந்தைக்காக வாழ்ந்து வரணும்.அது நம் கடமை வேண்டியது தான்’ என்று முடிவு பண்ணினான் நடராஜன்.‘சரி, நாம் உண்மைக் காரணத்தை கமலாவிடம் சொல்லலாம்.அவள் என்ன பண்ணினாலும் பண்ணட்டும்” என்று முடிவு பண்ணினான் நடராஜன்.

“கமலா வா இங்கே உக்காரு.நாம் கொஞ்ச நேரம் கழிச்சு தூங்கப் போவலாம்.” என்று கூப்பிட்டான். “சரிங்க,இதோ நான் வரேனுங்க” என்று சொல்லி விட்டு தான் செய்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு நடராஜன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் கமலா.“என்னங்க எதுக்குக் கூப்பிட்டீங்க” என்று கேட்டாள்.”கமலா நான் கடவுள் சத்தியமா நீ கேட்ட உண்மை காரணத்தை உனக்கு சொல்றேன்.அதை கேட்ட பிறவு நீ குழந்தையை நாமே வளக்கலாம்ன்னு சொல்லுவியா கமலா.இல்லே எது உண்மை காரணமா இருந்தூலும் நீ குழந்தையை ‘நான் வளக்க மாட்டேன்’னு சொல்லனும்ன்னே நீ தீர்மானம் பண்ணி இருக்கியா.அப்படி நீ முடிவு பண்ணி இருந்தியான்னா நான் உனக்கு உண்மைக் காரணத்தை சொல்லியும் ஒன்னும் பிரயோஜனம் இல்லே கமலா” என்று இழுத்தான் நடராஜன்.”நீங்க உண்மை காரணத்தே சொல்லுங்க.நீங்க கேக்கறதுக்கு நான் இப்போ பதில் ஒன்னும் சொல்ல முடியாது.அப்புறமா நீங்க சொன்னப் பிறவு தான் நான் பதில் சொல்ல முடியும்.பதில் எப்படியும் இருக்கலாமுங்க” என்றாள் கமலா தீர்மானமாக. ‘என்ன இப்படி சொல்றாளே இந்த கமலா’ என்று நினைத்து வருத்தப் பட்டான் நடராஜன்.‘இனிமேலும் நாம சொல்லாம இருக்கக் கூடாது.என்ன ஆவுதோ ஆவட்டும்.நாம பாத்துக் கொள்லலாம்’ என்று தீர்மானம் பண்ணினான் நடராஜன்.“சரி,உன் இஷடம் கமலா.நான் உண்மை காரணத்தை கடவுள் சத்தியமா சொல்லப் போறேன்.நீ என்ன பதில் சொன்னாலும் நான் அதை ஏத்துக்குகிறேன் கமலா” என்று சொல்லி விட்டு எழுந்துப் போய் ஒரு டம்ளர் தண்ணியை குடித்து விட்டு வந்து உட்கார்ந்தான் நடராஜன்.

“கமலா என்னை நீ மன்னித்து விடு.நான் ஒரு பொ¢ய தப்பு பண்ணிட்டேன். பண்ணக் கூடாத தப்பு பண்ணிட்டேன்.நான் ராணீயோடு கள்ளத் தொடர்பு வச்சு கிட்டேன்.அந்த தொடர்பால் வந்த ‘பா¢சு’ தான் இந்த குழந்தை.இந்த ‘வெக்கக் கேடான சமாசாரத்தை’ நான் உன்னிடம் சொல்லாம இத்தனை நாளா மறைச்சு வச்சு இருந்தேன்.வெறுமனே உண்மை காரணத்தை சொல்லாம வந்து, இந்த குழந்தையை நாம் வளத்து வரலாம்ன்னு சொல்லி வந்தேன்.நான் தப்பு கணக்கு போட்டேன். இது எனக்கு பொறந்த குழந்தை தான் கமலா.இது தான் உண்மைக் காரணம்.இப்பவாவது நாமே இந்த குழந்தையை வளத்து வரலாம்ன்னு சொல்லு கமலா” என்று சொல்லி விட்டு நடராஜன் தேம்பி தேம்பி ஒரு குழந்தையைப் போல் அழுதான்.அவள் காதுகளை அவளால் நம்ப முடியவில்லை.

“கமலா என்னை நீ மன்னிக்க மாட்டியா.என் குழந்தையை நீ வளக்க மாட்டாயா” என்று சொல்லி கமலாவின் கால்களில் விழுந்து கெஞ்சினான் நடராஜன்.கமலாவின் கால்கள் ஈரத்தால் நனைந்தது.அவள் கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்தாள்.நடராஜன் அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.அவன் கண்கள் அழுத வண்னம் இருந்தது.கொஞ்ச நேர மௌனத்திற்குப் பிறகு “எழுந்திருங்க.கண்¨ணைத் துடைங்க நான் இந்த குழந்தையை நிச்சியமா வளத்து வர சம்மதிக் கிறேங்க.நீங்க நிம்மதியா இருங்க” என்று சொல்லி அவன் தோளைத் தொட்டு எழுப்பினாள் கமலா. நடராஜனுக்கு அவன் காதுகளையே நம்ப முடியவில்லை. ‘கமலா சொல்லுவது கனவா இல்லை நனவா’ என்று தன்னை கிள்ளிக் கொண்டு பார்த்தான்.சட்டென்று நடராஜன் எழுந்து “கமலா,நீ நிச்சியமா தான் சொல்றயா கமலா.நீ இந்த குழந்தையை வளக்கக்கறதுக்கு ஒத்திக்கிட்டாயா கமலா.நான் கேப்பது நிஜம் தானா.நீ உண்மையிலேயே ‘க்ரேட்’ கமலா. ‘யூ ஆர் டூ க்ரேட் லேடி”என்று சொல்லி சந்தோஷத்தில் குதித்தான். நடராஜன் கமலாவைக் கட்டிக் கொண்டு அலாக்காகத் தூக்கினான் நடராஜன்.

“கீழே விடுங்க.உங்க வாயாலே இந்த உண்மையை வரவழைக்கத் தாங்க நான் இந்த நாடகம் ஆடினேங்க. உங்களுக்கும் ராணீக்கும் ‘கள்ள தொடர்பு’ இருக்குமோன்னு நன் சந்தேகப் பட்டேங்க. நம்ம வூட்லே நீங்களும் ராணீயும் கண் ஜாடை காட்டுவதை நான் பல முறைப் பாத்து இருக்கேங்க. ஆனா நீங்க என் போ¢லேயும்,என் அப்பா, அம்மா,போ¢லேயும் ரொம்ப அன்பா இருந்து வந்தீங்க. அவங்க ரெண்டு பேரையும் நீங்க உங்க அப்பா, அம்மாவைப் போலவே எண்ணி வந்து அவங்களுக்கு நிறைய செலவு எல்லாம் பண்ணி வந்தீங்க.எனக்கு உங்க போ¢லே நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்து வந்திச்சுங்க.நான் சும்மா இருந்து ட்டேங்க.ஆனா ஒரு நாள் உங்க ‘பாண்ட்டை’ல் இருந்த ‘பர்சை’ தொறந்து பாத்தேன். நீங்க ராணீக்கு ஆறு நூரு ரூபாய் அனுப்பிய மணி ஆர்டரில் ராணீ கை எழுத்து போட்ட ‘ஒப்புதல் படிவங்களே’ நான் பாத்தேனுங்க.என் சந்தேகம் வலுத்தது.’ஏன் இவர் ராணீக்குப் பணம் மணி ஆர்டர் பண்றார்.அதையும் ராணீ எப்படி வாங்கிக் கிட்டு கை எழுத்து போட்டு வாங்கிக் கிட்டு இருக்காளே.இதை ஏன் நம்மிடம் அவர் சொல்லாம மறைச்சாரு’ன்னு யோஜனை செஞ்சேனுங்க. நடுவில் நீங்க ஒரு நாள் ’என் நண்பன் கருணா என் ‘செக்ஷன் யூனியன்’ ‘லீடர்’.அவனை மானேஜ்மெண்ட் ‘சஸ்பெண்ட்’ பண்ணி இருக்காங்க.நாங்க எட்டு பேர் சேந்து அவனுக்கு ஆளுக்கு தலா ஆறு நூரு ரூபாய் கொடுக்கப் போறோம்’ன்னு நீங்க சொன்னீங்க. நான் அது வரைக்கும் அது உண்மையா தான் இருக்கும்ன்னு நம்பினேனுங்க.ஆனா உங்க நண்பர் ஒருவரை ஒரு நாள் நான் கடைத் தெருவி லே பார்த்தேனுங்க.அவரை நான் இந்த ‘சஸ்பெண்ட்’ விஷயம் பத்தி கேட்டப்ப அவர் ‘அந்த மாதிரி எல்லாம் யாரும் ‘சஸ்பெண்ட்’ ஆவவே இல்லையே. நாங்க யாரும் யாருக்கும் பண உதவி பண்ணி வறலையே’ என்று சொன்ன போது தான் நீங்க சொன்னது ஒரு ‘அப்பட்டமான பொய்’ ன்னு எனக்கு தொ¢ஞ்சதுங்க.உங்களை நான் உடனே கேக்கலாம் ன்னு தான் நான் நினைச்சேங்க.நாம கேக்க வேணாம், அவரா எப்போ சொல்றா சொல்ல ட்டும் பாப்போம்ன்னு நான் சும்மா இருந்து வந்தேங்க.என்று சொல்லி நிறுத்தினாள்.நடராஜன் தன் தலைய குனிந்த வண்ணம் கமலா சொல்வதை மௌனமாய் கேட்டுக் கொண்டு இருந்தான்.

‘கமலா இவ்வளவு விஷயங்கள் நம்மைப் பத்தி தொ¢ஞ்சுவச்சு கிட்டு இருக்காளா’ என்று மனதுக்குள் யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தான்.கமலா மறுபடியும் தன் பேச்சைத் தொடர்ந்தாள்.

“நீங்க தான் ராணீயை கடைத் தெருவிலே அவ குழந்தையுடன் இருப்பததைப் பாத்து நம்ம வூட்டுக்கு மறுபடியும் வேலைக்கு வரச் சொல்லி இருப்பீங்க’ ன்னு நான் சந்தேகப் பட்டேனுங்க. அப்படி நீங்க அவளை நம்ம வூட்டுக்கு வரச் சொல்லி இருக்காட்டா எந்த ஒரு பொண்ணும் உங்க மூலமா ஒரு குழந்தையை பெத்துக் கிட்டு,நான் உயிரோடு இருக்கும் போது என் எதிரிலே இவ்வளவு ¨தா¢யமா நம்ப வூட்டுக்கு வேலைக்கு வர மாட்டாங்க.நீங்களே அவளை நம்ம வூட்டு வேலைக்கு வரச் சொல்லி இருக்கும் போது,அவளை நான் ஒன்னும் சொல்ல முடியாதுன்னு அவளுக்கு நல்லா தொ¢யும்ங்க.நானும் அவளும் பேசிக்கிட்டு இருக்கும்போது நீங்க தான் அவசர அவரசரமா ‘ராணீ நம்ம வூட்லே மறுபடியும் வேலை செய்யறயா’ ன்னு கேட்டீங்க. அதையும் நான் கவனிச்சேங்க. எல்லாத்துக்கும் மேலாக ‘அந்த’க்‘ குழந்தை உங்க ஜாடையாக வேறு இருந்துச்சுங்க.நீங்க வூட்லே ராணீயைப் பத்தி பேசும் போதெல்லாம் நீங்க அவளுக்கு மிகவும் ஆதரவா பேசி வந்ததையும் நான் கவனிச்சேனுங்க.ஒரு வேலைக்காரியா அவ இருந்து இருந்தா, நீங்க இவ்வளவு ஆதரவா பேசி வந்து இருக்க மாட்டீங்க” என்று கமலா ஆவேசமா சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவ குரல் கம்மியது.தண்ணீர் குடித்து விட்டு வந்து மறுபடியும் கமலா பேச ஆரம்பித்தாள்.

“நீங்க ஆஸ்பத்திரியில் ராணீ இறக்கும் தறுவாயில் அவளுக்கு சத்தியம் பண்ணிக் குடுத்து என்னையும் ‘சரிங்க’ ன்னு சொல்லும் படி ஒரு இக்கட்டான நிலைமையை உண்டு பண்ணி என்னை குழந்தையை நாமே வளத்து வர ஒத்துக்க வச்சீங்க.ராணீ க்கும் நீங்க போய் அவ ‘கடைசி’ காரியத் தையும் செஞ்சி விட்டு வந்தீங்க. எல்லாத்துக்கும் மேலே ஆஸ்பதிரிலே இருந்து நீங்க வந்ததில் இருந்து,நான் எத்தனை தடவை மறுத்து வந்தாலும், நீங்க இந்த குழந்தையே ‘நாமே வளக்கலாம்’ ன்னு பிடிவாதம் பிடிச்சு வந்தீங்க.அப்படி இந்த குழந்தை உங்களை விட்டு போகா திருக்க நீங்க என்ன வெல்லாமோ யோஜனை எல்லாம் சொன்னீங்க.அப்பவே இந்த குழந்தைக்கும் உங்களுக்கும் ‘எதோ ஒரு பிரிக்க முடியாத உறவு’ இருக்கும்ன்னு நான் நிச்சியமா நம்பினேங்க.இந்த குழந்தை உஙளுக்கும் ராணீக்கும் பிறந்ததா இருக்கும் ன்னு நான் நிச்சியம் பண்ணி விட்டேனுங்க.இப்ப நீங்களே இப்ப உங்க வாயாலே அதை ஒப்புக்குக் கிட்டு விட்டீங்க” என்று சொல்லி கமலா நடராஜன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.சிறிது நேரம் கழித்து ”எனக்கு உங்க கிட்டே இருந்து இந்த உண்மை யைத் தெரிஞ்சுக் கொள்ள வேறு எந்த வழியும் தெரியவில்லைங்க. ராணீ செத்துட்டா.அவ கிட்டே இந்த உண்மையை நான் கேக்க முடியாது.உங்க வாயால் இந்த உண்மையை வர வழைச்சா தான் உண்டுன்னு முடிவு பண்ணினேன். நீங்க என்ன சொன்னாலும் நான் இந்த குழந்தையை ‘நிச்சியம்‘ வளக்க மாட்டேன்னு’ பிடிவாதம் பிடிச்சாத் தான் வேறு வழி இல்லாம நீங்க நிச்சியமா இந்த ‘உண்மையை’ ஒத்துக் கொள்ளுவீங்கன்னு எனக்குப் பட்டதுங்க. நீங்க இப்போ அந்த ‘ரகசியத்தே’ ஒத்துக் கிட்டீங்க.உங்க வாயாலே நீங்க ஒத்துக் கிட்டதாலே என் சந்தேகம் இப்போது தீர்ந்திச்சுங்க” என்று சொல்லி கம்பீரமாக நின்றாள் கமலா.கண்களில் கண்ணீர் வழிய எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்த நடராஜன்.

கொஞ்ச நேரம் போனதும் “வாங்க நாம ரெண்டு பேரும் ‘உங்க’ குழந்தையை, இல்லை சாரி ‘நம்ம’ குழந்தையே கட்டிலில் விட்டு தூங்கப் பண்ணலாம்” என்று சொல்லி குழந்தையை எடுத்துக் கொண்டு ‘பெட் ரூமுக்குள்’ நுழைந்தாள் கமலா.சந்தோஷமாக. நடராஜன் கமலாவை பின் தொடர்து ‘பெட் ரூமுக்கு’ப் போனான்.குழந்தையை கட்டிலின் நடுவில் விட்டுக் கொண்டு இருவரும் படுத்தார்கள். நீண்ட நேரம் யோஜனை பண்ணினான் நடராஜன்.

பிறகு “கமலா,நாம ரெண்டு பேரும் காதலிச்சு ஒருவரை ஒருவர் மிகவும் பிடிச்சு கல்யாணம் பண்ணிக் கட்டி கிட்டோம்.கடவுள் நமக்கு குழந்தையே ரொம்ப வருஷம் குடுக்கலே.இந்த சூழ் நிலையில் நம் வாழ்க்கையில் ‘ராணீ’ ன்ற பொண்ணு வந்தா.இவ்வளவு பெரிய சென்னையில் அவ நம்ம வூட்டுக்கு வேலைக்கு வந்தா.நம்ம ரெண்டு பேருக்கும் அவளைப் மிகவும் பிடிச்சு இருந்ததிச்சு. நாங்க ரெண்டு பேரும் ‘செய்யக் கூடாத தப்பைப்’ பண்ணிட்டோம்.நமக்கு பொறந்த ஒரு அழகான ஆண் குழந்தையெ நாம் வளத்து வர கடவுள் நமக்கு அருள் புரியலே.அந்த குழந்தையை தன் கிட்டே அவர் அழைச்சுக் கிட்டார்.நமக்கும் அந்த குழந்தைக்குப் பிறகு குழந்தையே பொறக்காது என்கிற நிலையும் வந்திச்சு” என்று சொல்லும் போது நடராஜன் குரல் கொஞ்சம் கம்மியது.கொஞ்ச நேரம் ஆனந்தும் அவன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு “நானும், நீயும் நம் குடும்பத்தில் ஏற்பட்ட அடுத்த,அடுத்த கஷ்டங்களுக்கு நாம் இருவரும் ஈடு கொடுத்து கிட்டு வந்தோம்.திண்டிவனத்திலே குழந்தையை பெத்துக் கொண்ட ராணீ அப்புறமா அவ குழந்தையுடன் இவ்வளவு பொ¢ய சென்னையில் கடைத் தெருவில் என் கண்ணிலா பட வேண்டும்.நான் அவளை கேட்டதுக்கு அவ ஒத்துக் கிட்டு,சம்மதிச்சு,,நம்ம வூட்டுக்கா அவ மறுபடியும் வேலைக்கா வரணும்.வேறு எங்காவது கண் காணாத இடத்துக்கு அவ வேலைக்குப் போய் இருக்கக் கூடாதா.அப்படியே நம்ம வூட்டு வேலைக்கு வந்த அவளுக்கு இந்த தீராத வியாதியா வரணும்.அவ நம்ம வூட்டிலேயா இந்த குழந்தையை விட்டுட்டு சாவணும்.இந்த இடத்தில் தான் நான் அந்த ஆண்டவன் அருளை நினைச்சு சந்தோஷப் படறேன். நமக்கு குழந்தை பாக்கியம் இனிமேல் இல்லேன்னு ஆகிப் போன இந்த நேரத்திலே நமக்கு ஒரு குழந்தையை தர வேணும் என்பதற்காகவா அவர் ராணீயை இந்த நம்ப வூட்டுக்கு அனுப்பி,அவளை ஒரு ‘இரவல் தாயாக’ நம்மிடம் இருக்க வச்சு நம்மிடம் இந்த குழந்தை யே குடுத்து விட வச்சாரு.கடவுள் ராணீயை நம்ம கிட்டே அனுப்பிய வேலை முடிந்ததும்,அந்த ‘இரவல் தாயை’ தன்னிடம் மறுபடியும் அழைச்சுக் கிட்டு விட்டாரு”அப்படி செய்யாம இருந்தா நாம் காலம் பூராவும் குழந்தை இல்லாதவங்களாத் தானே இருந்து வந்து இருப்போம் இல்லையா சொல்லு கமலா” என்று வேதாந்தமாகப் பேசினான் நடராஜன்.

கமலாவும் ”ஆமாங்க நீங்க சொல்றது ரொம்ப சரிங்க. அந்தப் பொண்ணு ராணீ, உங்க மூலமாக நமக்கு இந்த குழந்தையை பெத்துக் குடுக்கவே தான் கடவுள் அவளை இந்த உலகத்துலே பிறவி எடுக்க வச்சு, நம்ம வுட்டுக்கு வேலைக்கு அனுப்பி வச்சாரு போல எனக்கும் தோணுதுங்க” என்றாள்.

கமலா “இது ஆனந்தக் கண்ணீருங்க.எனக்கு இந்த ஜென்மத்திலே ஒரு குழந்தையை வளத்து எனக்கு ராஜ் கிடைச்சு இருக்கிற சந்தோஷமுங்க” என்று சொல்லி தன் கண்களை துடைத்துக் கொண்டாள். சந்தோஷத்தில் இருவரும் தூங்கிக் கொண்டு இருக்கும் குழந்தையின் தலையை ஆசையில் வருடினார்கள் .இருவரும் கடவுளுக்கு தங்கள் நன்றியைத் தொ¢வித்தார்கள். இருவரும் குழந்தையைக் கட்டிக் கொண்டு ராணீ ஆதமா சாந்தி அடைய கடவுளை வேண்டிக் கொண்டார்கள்.

— முற்றும் —

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *