கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 9, 2019
பார்வையிட்டோர்: 7,396 
 
 

அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 | அத்தியாயம்-22

‘இவங்க ரெண்டு பேரும் ஏதோ பேசிக்கிட்டு இருக்காங்களே ஒழிய கமலாவும் ‘எங்க வூட்டு வேலை செய்யறயான்னு’ கேக்கலேயே,ராணீயும் ‘நான் பழையபடி இந்த வூட்லே வேலை செய்யட்டுமா ங்கன்னும் ‘கேக்கலேயே. குழந்தை ‘பிஸ்கெட்’ சாப்பிட்டு கிட்டு இருக்கு.கொஞ்சம் நேரம் ஆனா கமலாவுக்கு முதுவலி வந்தா அவள் படுக்கப் போய் விடுவா.’நான் வரேணுங்க’ ன்னு ராணீ சொல்லிட்டு குழந்தையை எடுத்துக் கிட்டு போயிட்டாள்ன்னா நாம என்ன செய்யறது’ என்ற கவலை வந்து விட்டது நடராஜனுக்கு. அவன் சட்டென்று “ராணீ,நீ பழையபடி இந்த வூட்லே வேலை செய்யறயா” என்று கேட்டு விட்டான்.”நீங்க எனக்கு இங்கே வூட்டு வேலைக் குடுத்தா¡ நான் செய்யறேங்க” என்றாள் ராணீ.நடராஜனுக்கு மனதுக்குள் மிகுந்த சந்தோஷம்.அதை வெளிக் காட்டிக் கொள்ளாம “கமலா,ராணீ நமக்கு ரொம்ப பழக்கப் பட்டவ.நாம் பழைய படி ராணீயை நமப வூட்டு வேலைக்கு வச்சுக்கலாமா” என்று கேட்டான் நடராஜன்.“நானே ராணீயை கேக்கலாம்ன்னு தான் இருந்தேங்க நீங்க அதுக்கு முன்னாலே கேட்டுட்டீங்க” என்று சொல்லி விட்டு “ராணீ, நம்ம வூட்லே பழையபடி நீ வேலை செய்யேன்.நீ செய்யயறயா” என்று கேட்டாள் கமலா.“சரிங்க நான் நம்ப வூட்டு வேலை செய்யறேங்க” என்றாள் ராணீ.”அப்போ நீ நாளைக்கு காலையிலே இருந்து வேலைக்கு வா ராணீ.முன்னே வந்துக் கிட்டு இருந்தாப் போலவே காலையில் ஏழு மணிக்கெல்லாம் வேலைக்கு வந்து விடு என்ன” என்று கேட்டாள் கமலா.“சரிங்க” என்று சொல்லி விட்டு பிஸ்கெட் தின்றுக்கொண்டு இருந்த தன் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் ராணீ.

சந்தோஷத்துடன் தன் வீட்டை நோக்கி நடந்து வந்தாள் ராணீ. வீட்டுக்கு வந்ததும் ராணீ”சித்தி எனக்கு ஒரு வூடு வேலைக்கு கிடைச்சிடுச்சி இருக்கு. நாளையிலே இருந்து வேலைக்கு வரச் சொல்லி இருக்காங்க” என்றாள் ராணீ.“அப்படியா பரவாயில்லையே.நீ போய் வா.ஆனா கம்மி சம்பளத்துக்கு ஒத்துக் காதே.முதல்லே கேக்கும் போதே கொஞ்சம் அதிகமாக கேளு என்ன” என்றாள் ஜோதி.“சரி சித்தி,நீங்க சொன்ன மாதிரியே நான் சம்பளத்தே அதிகமா கேக்கறேன்” என்று பதில் சொன்னாள் ராணீ.

அடுத்த நாள் காலையில் ஏழு மணிக்கே தன் வீட்டை விட்டு குழந்தையுடன் கிளம்பி நடராஜன் வீட்டு வேலைக்கு வந்து ‘காலிங்க பெல்லை’ அழுத்தினாள் ராணீ.கமலா தான் கதவைத் திறந்தாள்.குழந்தையுடன் உள்ளே வந்ததாள் ராணீ.குழந்தையை ஒரு ஓரத்தில் விட்டு விட்டு அதுக்கு விளையாட தான் கொண்டு வந்து இருந்த ரெண்டு மூனு விளையாட்டு சாமான்களை குழந்தை எதிரில் போட்டு அதை விளையாட விட்டு விட்டு உள்ளே போய் பத்து பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள் ராணீ.இந்த நேரம் பாத்து கமலா வீட்டிலே வேலை செய்து கிட்டு இருந்த பழைய வேலைக்காரி அம்மா வந்து ‘காலிங்க பெல்லை’ அழுத்தினாள்.கமலா கதவைத் திறந்தாள். அந்த அம்மாவைப் பாத்து ”இதோ பாருங்க அம்மா,இப்போ வேலை செய்யுதே இந்த பொண்ணு ராணீ,இவ தான் இந்த வூட்லே முதல்லே வேலை செஞ்சுகிட்டு இருந்தா.நடுவிலே அவ அம்மா உடம்பு சுகம் இல்லேன்னு அவ ஊருக்குப் போனா.இப்போ மறுபடியும் திரும்பி வந்திருக்கா.நான் அவளையே மறுபடியும் வேலைக்கு வச்சுக்கலாம்ன்னு இருக்கேன்.மாசம் முடிய இன்னும் மூனு நாள் தான் இருக்கு.நான் உனக்கு இந்த மாச பூராத்துக்கும் சம்பளம் கொடுத்திடறேன். நீ நாளையில் இனிமே இங்கே வேலைக்கு வர வேண்டாம்” என்று சொன்னாள் கமலா.“சரிங்க” என்றாள் அந்த வேலைக்காரி. அந்த பழைய வேலைக்காரி அம்மாவுக்கு அந்த மாச பூரா சம்பளத்தைக் கொடுத்தக் கமலா. சம்பளத் தை வாங்கி கிட்டு அந்த பழைய வேலைக்கார அம்மாவும் போய் விட்டாள்.உடனே நடராஜன்” நீ சொல்றது ரொம்ப சரி கமலா” என்று சிரிச்சிக் கிட்டே சொன்னான்.

அந்த அம்மா போனவுடன் கமலா ராணீயைப் பாத்து “நீ நி¢ம்மதியா இனிமே வேலை பண்ணலாம் ராணீ. பழைய வேலைக்காரி சண்டை போடுவாளோன்னு பயந்து கிட்டு இருந்தேன்.நல்ல வேளை அவ ஒன்னும் சண்டை போடாம போயிட்டா.நான் முதலில் கொஞ்சம் பயந்தேன். நம்ம ஐயாவும் வுட்லே இருந்ததினலே அந்த அம்மா மாச சம்பள பணத்தை வாங்கிக் கிட்டு,சண்டை ஏதும் போடாம போயிட்டாங்க.நான் அவங்களுக்கு குடுத்தாப் போல உனக்கும் நான் மாசம் ஆயிரம் ரூபாய் சம்பளம் தரேன்.நீ இங்கே எனக்கும் ஐயாவுக்கும் சமையலும் செஞ்சி வைக்க ணும் என்ன.உனக்கு சம்மதம் தானே” என்று கேட்டாள் கமலா.“எனக்கு சம்மதம்ங்க.நீங்க சொன்ன படியே குடுங்க. நான் எல்லா வேலைகளையும் செஞ்சி சமையலையும் செஞ்சி வக்கிறேனுங்க” என்றாள் ராணீ.அவளுக்கு மிகுந்த சந்தோஷம்.பிறகு மத்த வேலைகளை எல்லாம் செய்து முடித்து விட்டு சமையல் செய்ய போனாள் ராணீ.தன் குழந்தை விளையாடிக் கொண்டு இருந்த புது பொம்மைகளை ராணீயின் குழந்தைக்கு கொடுத்தாள் கமலா.சமையலை முடித்து விட்டு ராணீ கமலா கொடுத்த புது பொம்மைகளையும் குழந்தையையும் எடுத்துக் கொண்டு “நான் நாளை காலையிலேயே நான் ஏழு மணிக்கு வேலைக்கு வரேம்மா” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்..

ராணீ கிளம்பிப் போனவுடன் ”ஏங்க குழந்தை எவ்வளவு அழகா,‘துறு’ ‘துறு’ ன்னு இருக்குது பாத்தீங்களா” என்றாள் கமலா. நடராஜன் மொட்டையாக “ஆமாம் கமலா. குழந்தை ரொம்ப அழகா ‘துறு’ ‘துறு’ன்னு” என்று சொன்னான்.சிறிது நேரம் போனதும் “நல்ல பொண்ணுங்க அந்த ராணீ.அவ மறுபடியும் நம்ப வூட்டு வேலைக்கு வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்ங்க. நான் அவ பின்னாலே நின்னுக் கிட்டு இருக்க வேண்டாம்ங்க.எல்லா வூட்டு வேலைங்களையும் அவ ‘பளிச்’சுனு பண்ணி வைப்ப ¡ங்க.முக்கியமா அவ கிட்டேதிருடு இருக்காதுங்க.அதிக நேரம் அவ பின்னாலே நிக்காம நிறைய நேரம் ‘ரெஸ்ட்’ எடுத்து வர முடிதுங்க.நான் என் ‘முதுகு பயிற்சி ‘நிறைய நேரம் செய்ய முடிதுங்க.எவ்வளவோ சௌகரியம் இருக்குதுங்க ராணீவூட்டு வேலை செய்யறதாலே” என்றாள் கமலா சந்தோஷத்துடன்.“எப்படியோ கமலா. நீ நல்லா ‘ரெஸ்ட்’ எடுத்துகிட்டு வந்து, உன் முதுகு பயிற்சி யை நிறைய நேரம் பண்ணி வந்து நீ பழைய படி ஆவணும் கமலா.அது தான் எனக்கு முக்கியம் கமலா” என்றான் நடராஜன்.“கவலைப் படாதீங்க,நான் நிச்சியம் பழையபடி நல்லா ஆகி விடுவேனுங்க. கவலைப் படாதீங்க.நீங்க நிம்மதியா இருந்து வாங்க” என்றாள் கமலா.பிறகு இருவரும் உட்கார்ந்துக் கொண்டு ஒன்றாய் சாப்பிட்டார்கள்.ராணீ செய்த சாப்பாட்டை மிகவும் ரசித்து சாப்பிட்டார்கள் நடராஜனும் கமலாவும்.

‘ராணீயும் அவ குழந்தையும் நம் கண் முன்னே வந்து விட்டாங்க.நாம் கவலைப் பட வேணாம். நாம நினைச்ச படி ராணீ மாச சம்பளம் குடுத்து,அவங்க ரெண்டு பேரையும் நல்ல முறைலே கவனிச்சு வரலாம்’ என்று எண்ணி சந்தோஷப் பட்டான் நடராஜன்.கடவுளுக்கு தன் நன்றியைத் தொ¢வித்தான் நடராஜன்.

வீட்டுக்கு வந்தததும் “சித்தி எனக்கு ஒரு வீடு வேலை செய்ய கிடைச்சிடுச்சி. அவங்க வீட்லே பெருக்கி துடைச்சி, துணி தோச்சு, பாத்திரம் தேச்சு ,சமையலும் பண்றதுக்குன்னு என்னே வேலைக்கு வச்சு இருக்காங்க” என்றாள் ராணீ.“சரி சம்பளம் எவ்வளவு பேசினே” என்று கேட்டாள் ஜோதி.“அவங்களெ எனக்கு ஆயிரம் ரூபாய் குடுக்கிறேன்னு சொன்னாங்க சித்தி” என்றாள் ராணீ. “சித்தி, என் சம்பளத்திலே பாதியை நான் வச்சு கிட்டு மீதி பாதியை உங்க கிட்டே தரேன்.வீட்டு வாடகை குடுக்க உங்களுக்கு உபயோகமாய் இருக்கும் சித்தி” என்று சொன்னாள் ராணீ.“சரி ராணீ அப்படியே செய்” என்று சொன்னாள் ஜோதி.‘நாமும் கூடிய சீக்கிரம் டேவிடை கல்யாணம் செஞ்சுக்கப் போறோம்.நமக்கும் கல்யாண செலவுக்கு பணம் வேண்டி இருக்கும்.ராணீ தரும் பணத்தில் நாம் நமக்கு கொஞ்சம் புது ‘டிரஸ்’ வாங்கிக் கொள்லலாமே’ என்று அவள் மனதில் கணக்குப் போட்டாள்.

அடுத்த நாள் காலை மணி ஏழுகெல்லாம் ராணீ வேலைக்கு வந்ததும் தன் குழந்தையை ஒரு மூலையில் விட்டு விட்டு,தான் கொண்டு வந்து இருந்த இரண்டு மூனு விளையாட்டு சாமாங்க¨ளை குழந்தை முன்னால் போட்டு விட்டு தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.“ராணீ,இன்னிக்கு இட்லி சுட்டு,சட்டினி அரைச்சிடு நாஷ்டாவுக்கு” என்றாள் கமலா. ராணீ£யும் கமலா சொன்னது போல் இட்டிலியும் சட்டினியும் தயார் செய்து விட்டு மத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.நாஷ்டாவை சாப்பிட்டுக் கொண்டே“ ராணீ முன்னே இருந்ததை விட நீ மெலிஞ்சு இருக்கியே, ஏன் ராணீ.உன உடம்பு சரி இல்லையா” என்று விசாரித்தாள் கமலா.“ஆமாங்க இந்த குழந்தை பிறந்து பிறவு என் உடம்பிலே ஏதோ கோளாறு இருக்குங்க.நான் சென்னைக்கு வந்த அப்புறம் டாக்டர் கிட்டே இன்னும் காட்டலீங்க” என்றாள் ராணீ.உடனே நடராஜன் “அப்படி இருக்கக் கூடாது ராணீ.ஒரு நல்ல டாக்டராகப் பாத்து உன் உடம்பை சீக்கிரம் காட்டிக்க” என்றான் நடராஜன்.”சரிங்க” என்று சொல்லி விட்டு தன் வேலைகளை செய்யப் போனாள் ராணீ. மீதம் இருந்த மூனு இட்லிகளை ராணீக்கு கொடுத்தாள் கமலா.அந்த மூனு இட்டிலியை ராணீ சாப்பிடவே அவளுக்கு அரை மணிக்கு மேல் ஆகியது.”ஏன் இவ்வளவு மெதுவாக சாப்பிடுறே ராணீ” என்று கேட்டாள் கமலா.“வேகமாமச் சாப்பிட்டா என் தொண்டைலே அடைக்குதுங்க.அதான் நான் மெதுவா சாப்பிடுகிறேங்க” என்றாள் ராணீ.“இந்த உடம்பே டாக்டருக்கு நீ காட்டாணும் ராணீ”என்றான் கமலா.”எனக்கு நேரமும் இல்லே,கையிலே பணமும் இல்லேங்க” என்றாள் ராணீ.கமலா ராணீகுழந்தையை அடிக்கடி கொஞ்சி வந்தாள்.வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, ராணீ சமையலையும் செஞ்சு வச்சுட்டு, குழந்தையை எடுத்துக் கிட்டு தன் வீட்டுக்கு வந்தாள்.

ராணீ வேலைக்கு வந்து ரெண்டு மாசம் ஆகி ரெண்டு மாசம் சம்பளமும் வாங்கி விட்டாள். இந்த ரெண்டு மாசமும் கமலா தன் முதுகு பயிற்சியை தவாறாமல் செய்து வந்து நல்ல ‘ரெஸ்ட்டும்’ எடுத்து வந்ததில் அவளுக்கு இப்போது முதுகு வலி ஏற்படுவது நன்றாக குறைந்து விட்டது.’வலி கொல்லி’ மாத்திரைகளை அவள் இப்போது அதிகமாக உபயோகப் படுத்துவதே இல்லை.இதை கமலா சொன்ன போது நடராஜனுக்கு மிகவும் சந்தோஷப் பட்டான். ராணீ வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்குப் போகும் போது ”உனக்கு அடுத்த மாசத்திலே இருந்து நாங்க உன் சம்பளத்திலே இன்னும் எரனூரு ரூபா சேத்து தரோம் ராணீ” என்றாள் கமலா.“ரொம்ப சந்தோஷங்க எனக்கு. நீங்க எனக்கு சம்பளம் ஒசத்தி குடுத்ததுக்கு” என்றாள் ராணீ.“இந்த பணத்லே நீ உன் உடம்பை டாக்டர் கிட்டே காட்டி மருந்து வாங்கி சாப்பிடு ராணீ நான் அதுக்குத் தான் உனக்கு சம்பளம் ஒசத்தி தந்து இருக்கேன் நான் சொல்றது புரிதா” என்று சொன்னாள் கமலா.“சரிங்க, நான் டாக்டர் கிட்டே காட்டி மருந்து வாங்கி சாப்பிடறேங்க” என்று சொல்லி விட்டு வீட்டுக்குக் கிளம்பிபாள் ராணீ.

டாக்டரிடம் போய் தன்னைக் காட்டிக் கொள்ளவே இல்லை ராணீ.யார் கேட்டாலும் ‘நான் டாக்டர் கிட்டே காட்டி மருந்து சாப்பிட்டு வறேங்க’ என்று சொல்லி விடலாம் என்று அவள் தீர்மானித்தாள்.அவளுக்கு டாகடரிடம் தன்னைக் காட்டிக் கொள்ளவே விருப்பம் இல்லை. வேலைக்கு வந்த ராணீயைப் பார்த்து “என்ன ராணீ,உன் உடம்பை டாக்டர் கிட்டே காட்டினியா” என்று கேட்டாள் கமலா”“நேத்து நான் டாகடர் கிட்டேஎன் உடம்பே காட்டினேங்க. அவரு என்னை நல்லா ‘டெஸ்ட்’ பண்ணினாருங்க.அப்புறமா எதோ மாத்திரைங்க எனக்கு எழுதிக் குடுத்து இருக்கிறாரு.நான் அதை வாங்கி வந்து சாப்பிட்டு வரப் போறேனுங்க” என்று சென்னாள் ராணீ.

ஒரு மாதம் ஓடி விட்டது.ராணீயின் உடம்பு மிகவும் மெலிந்து இருந்ததை கவனித்த வந்த நடராஜன் ராணீயும் கமலாவும் பேசுவதை கேட்டு ஹாலுக்கு வந்தான். ’ஏன் இப்படி ராணீயின் உடம்பு மெலிந்து இருக்கு.எவ்வளவு வாளிப்பா இருந்தா ராணீ இங்கே வேலை செஞ்சிகிட்டு இருக்கும் போது.குழந்தை பிறந்த பிறவு என்ன உடம்பு வந்து இருக்கும் அவளுக்கு’ என்று எண்ணமிட்டான் நடராஜன்.வருத்தப் பட்டான் அவன்.

ராணீ வேலைக்கு வந்து மூன்று மாதமாகி விட்டது.இந்த மூன்று மாதத்தில் கமலா தன் முதுகு பயிற்சியை தவறாமல் செய்து, நல்ல ‘ரெஸ்ட்டும்’ எடுத்து வந்ததில் அவள் முதுகு வலி பூராவும் குறைந்து விட்டது.அவள் உடம்பு பழைய நிலைக்கு வந்து விட்டது போல் அவள் உணர்ந்தாள். உடனே கமலா நடராஜனிடம் “எங்க, என் உடம்பு இப்போ பழைய நிலைக்கு வந்து விட்டதுங்க. இப்போது எனக்கு முதுகு வலியே இல்லீங்க” என்று சொன்னாள்.இதைக் கேட்டதும் நடராஜன் அளவிலா சந்தோஷப் பட்டான். தன் உடம்பு பூரணமாக தேவலை ஆகி விட்டதால் கமலா மிகுந்த சந்தோஷத்துடன்அடிக்கடி ராணீயின் குழந்தை ராஜ்ஜிடம் நிறைய விளையாடி வந்தாள்.

ஒரு நாள் டேவிட் ஜோதியை பார்க்கில் சந்தித்த போது “ ஜோதி,அப்பா ‘சர்ர்ச்சில்’ பாதரைப் பாத்து நம் கல்யாணத்துக்கு ஒரு நாள் பார்த்து தரச் சொன்னார்.பாதரும் இந்த ஞாயித்துக்கிழமை ரெண்டு கல்யாணம் இருக்கு. அதனால் அடுத்த ஞாயித்துக்கிழமைக்கு நம் கல்யாணம் பண்ணி வைக்க ஒத்துக்கிட்டு இருக்காறர்” என்று சந்தோஷத்துடன் சொன்னான் டேவிட்.“ரொம்ப சந்தோஷமாய் இருக்குங்க எனக்கு” என்றாள் ஜோதி. அடுத்த நாள் டேவிட் சரியான நேரத்திற்கு வந்து ஜோதியை தன் வீட்டுக்கு அழைத்துப் போஉ அவன் அப்பா அம்மாவுகு அறிமுகப் படுத்தினான்.அவர்கள் இருவரும் ஜோதியுடன் நன்றாக பழகி கா·பி,’டி·பன்’ எல்லாம் கொடுத்தார்கள் பிறகு கொஞ்ச நேரம் எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.நேரம் ஆகி விடவே ஜோதி அவர்களுக்கு வணக்கம் சொல்லி விட்டுக்கு கிளம்பினாள். அன்று இரவு இருவரும் படுத்துக் கொண்டார்கள்.ராணீ தூங்கி விட்டாலே ஒழிய ஜோதிக்கு தூக்கமே வரவில்லை.அவள் தன் கல்யாண நாள்,கல்யாணம் ஆன பிறகு டேவிட்டுடன் தன் மண வாழ்க்கையை சந்தோஷமாக ஆரம்பிப்பது போன்ற வட்டை பற்றி யோஜனை பண்ணிக் கொண்டு படுத்துக் கொண்டு இருந்தாள்.

சனிக் கிழமை சாயங்காலம்.அடுத்த நாள் ஜோதிக்கும் டேவிடுக்கும் கல்யாணம். ஜோதியும் ராணீயும் வீட்டில் உட்காந்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள்.ஜோதி நிறைய நேரம் குழந்தையோடு விளையாடிக் கொண்டு இருந்தாள்.சற்று நேரம் கழித்து ”ராணீ,எனக்கு வாழ்க்கை ரொம்ப வெறுமையா இருக்கு.சேகரும் ஜெயிலில் இருக்காரு.அவர் ‘கேஸ்’ எப்போ முடியும்ன்னு தொ¢யலே.எப்போ வெளியே வருவாருன்னும் யாருக்கும் தொ¢யலே. எனக்கும் வயசாகிகிட்டே போவுது. எனக்கு இந்த சின்ன வயசே நல்லா,சந்தோஷமா அனுபவிக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு.நானும் குழந்தைங்கப் பெத்துக்கினு அவங்களை நல்லா வளக்குனும் ன்னு ரொம்ப ஆசைப் படறேன். எத்தினி நாள் இப்படி தனிக் கட்டையாய் நான் இருந்து வருவது ராணீ…..” என்று சொல்லும் போது ஜோதியின் கண்களீல் நீர் தளும்பியது.“எனக்கு உங்க கஷ்டம் நல்லா புரிது..நீங்க ஆசை படறது ரொம்ப நியாயமானது தான். உங்களுக்கும் இன்னும் சின்ன வயசு தானே..நினைச்ச ரொம்ப வருத்தமா இருக்கு. உங்களுக்கும் ஒரு கல்யாணம், குழந்தைங்க வேணு§..இப்படி நீங்க எத்தினி வருஷம் தனியா இருந்து வர முடியும் சித்தி” என்று ஜோதி சொன்னதை ஆமோதித்தாள் ராணீ.

சற்று நேரம் கழித்து “இப்போ நான் ஒரு ஆறு மாசம ‘டேவிட்’ ன்னு ஒரு டிரைவரை மனசார காதலிக்கிறேன். அவரும் என்னை ரொம்பவும் காதலிக்கிறாரு.அவர் நான் வேலை செய்யற ‘·ப்ளாட்லே’ தான் கார் டிரைவராக வேலை செஞ்சு வறார்.ரொம்ப நல்லவரு.அவங்க அப்பா எங்க கல்யாணத்துக்கு உடனே சம்மதம் குடுத்துட்டாங்க. எங்க ரெண்டு பேருக்கும் நாளைக்கு சர்சிலே கல்யாணம் ராணீ” என்று சொன்னதும் “எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமாய் இருக்கு. நீங்க கல்யாணம் கட்டி கிட்டு சந்தோஷமா இருந்து வாங்க சித்தி” என்று சொல்லி தன் சந்தோஷத்தை சொன்னாள் ராணீ.”“ராணீ நான் கல்யாணம் கட்டிக்கிட்ட அப்புறம் அவரோட அசோக் நகரில் இருக்கிற அவர் வீட்டுக்கு போய் விடுவேன்.நான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தப்போ நான் மூனு மாச வீட்டு வாடகை ‘அடவான்ஸ்’ ஆக அந்த வூட்டுக்கார அம்மா கிட்டே குடுத்து இருக்கேன் ராணீ.அவங்க இங்கே பக்கத்து வீட்டிலே தான் இருக்காங்க.நீ மாசம் முன்னுறு ரூபாய் வாடகை குடுத்தா போதும்.நீ எப்போதாவது இந்த வீட்டைக் காலி பண்ண நினைச்சா அந்த மூனு மாச வாடகை ‘அட்வான்ஸ்’ பணத்தே அந்த அம்மா கிட்டே இருந்து நீ திருப்பி வாங்கிக்க ராணீ.வா,நான் அவங்க கிட்டே இதை சொல்லிட்டு, உன்னே அவங்களுக்குக் காட்டித் தரேன்.எழுந்து வா ராணீ அவங்க வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்லி ராணீயை பக்கத்தில் இருக்கும் அந்த வீட்டுக்கார அம்மாவிடம் அழைத்துப் போனாள் ஜோதி.

அந்த அம்மா கதவைத் திறந்துக் கொண்டு வந்ததும் “இவ என் அக்கா பொண்ணு ராணீங்க. இவ என் கூடத் தான் இது வரைக்கும் தங்கி இருந்தா.இனிமே இந்த வீட்டில் இவளும் இவ குழந்தையும் மட்டும் தான் இருப்பாங்க. நான் கல்யாணம் கட்டிகிட்டு அசோக் நகர் போய் விடப் போகிறேங்க.இவ உங்களுக்கு மாசா மாசம் முன்னூறு ரூபாய் வாடகை தவறாம குடுப்பா.அவ வீட்டை காலி பண்ணும் போது நான் குடுத்த மூனு மாச ‘அட்வான்ஸ்’ பணத்தே இவ கிட்டே தயவு செஞ்சி குடுத்திடுங்க” என்றாள் ஜோதி.”சரிங்க” என்று சொன்னாள் அந்த அம்மா.சற்று நேரம் கழித்து ஜோதி தன் துணி மணிகளை எல்லாம் ஒரு பாக்ஸில் எடுத்து வைத்துக் கொண்டாள் ஜோதி. அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை.ஜோதிக்கு கல்யாண நாள்.ஜோதி காலையிலேயே எழுந்து விட்டாள் அவள் குளித்து விட்டு ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு தான் வாங்கி வந்த புது கல்யாண ‘டிரஸ்ஸை’ ராணீக்குக் காட்டினாள்.மிக அழகாக இருந்தது அந்த ’டிரஸ்.’பிறகு “ராணீ நான் போய் வறேன்.எனக்கு சமயம் கிடைக்கும் போது நான் உன்னையும் ராஜ்ஜையும் இங்கே வந்து பாக்கறேன்.நான் நல்ல ‘செட்டில்’ ஆனதும் உன்னையும் ராஜ்ஜையும் நான் வந்து என் வூட்டுக்கு அழைச்சுப் போறேன் ராணீ.உன் உடம்பு பழையபடி சீக்கிரம் நல்லா ஆவணும்.உன் உடம்பை நல்லா கவனிச்சுக்கோ. ராஜ்ஜை நல்லா வளத்து வா”என்று சொன்னாள் ஜோதி.பிறகு வாசலுக்கு வந்து காலியாய் போய்க் கொண்டு இருந்த ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டாள் ஜோதி.ஜோதி அந்த ஆட்டோவில் ஏறீ கிளம்பினாள். ஜோதியின் ஆட்டோ கண்ணில் இருந்து மறையும் வரை வாசலிலிலேயே நின்றுக் கொண்டு கையை ஆட்டிக் கொண்டு இருந்தாள் ராணீ.பிறகு குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு தன் சித்தியை மனதில் நினைத்துக் கொண்டு அவளுக்கு மனதார நன்றி சொன்னாள் ராணீ.

குழந்தையை எடுத்துக் கொண்டு வேலைக்குக் கிளம்பினாள் ராணீ.நடராஜன் தான் கதவைத் திறந்தான்.இரவு பூராவும் தூங்காததாலும்,படி ஏறி வந்த ராணீக்கு மூச்சு வாங்கி கொண்டு இருந்தது. “என்ன ராணீ,இப்படி மூச்சு வாங்குது உனக்கு.கண்ணெல்லாம் சிவந்து இருக்கு. ராத்திரி நீ சரியா தூங்கலையா” என்று கேட்டான் நடராஜன். ராணீ “ஆமாங்க.என் கூட இருந்த சித்தி இன்னிக்கு காலெலே கல்யாணம் செஞ்சு கிட்டு அசோக் நகர் போயிட்டாங்க .நான் இரவெல்லாம் அவங்களை நினைச்சு கிட்டு இருந்தேங்க.அவங்க தான் என்னை சென்னைக்கு இட்டு வந்து,சோறு போட்டு, இருக்க இடம் கொடுத்தாங்க.அவங்க பண்ண இந்த உதவியே ரா பூரா நான் நினைச்சுக் கிட்டு இருந்தேங்க.அதனால் ராத்திரி நான் சரியாவே தூங்கலேங்க.தவிர இப்பல்லாம் மாடிப்படி ஏறினாலே இப்படித் தான் எனக்கு மூச்சு வாங்குதுங்க” என்று சொல்லி விட்டு ராணீ குழந்தை ராஜ்ஜை கீழே விளையாட விட்டு விட்டு வேலைகளை செய்யத் தொடங்கினாள்.“இப்படி மூச்சு வாங்கக் கூடாது ராணீ.அம்மா சொன்ன மாதிரி நீ டாக்டரை ஏன் போய் பார்க்காம இருக்கே.உடனே பாத்து நல்ல மருந்தா வாங்கி சாப்பிடு ராணீ” என்று சொன்னான் நடராஜன்.ராணீ மொட்டையாக “சரிங்க” என்று சொன்னாள் ராணீ.

ராணீ தன் வேலைகளை நிதானமாக செய்துக் கொண்டு இருந்தாள்.இந்த மூச்சு வாங்குவது அவளுக்கு இன்னும் இருந்துக் கொண்டு தான் இருந்தது.ஒரு அரை மணி நேரம் ராணீ வேலை செய்த பிறகு தன் குழந்தை பார்க்க வருவது போல் வந்து அவன் பக்கத்தில் ஒரு பத்து நிமிஷம் பக்கம் உக்காந்து கொஞ்சம் மூச்சு வாங்கி விட்டு,பிறகு எழுந்து போய் மீதி வேலைகளை செய்து வந்தாள் அவள்.அவளால் முன்னே மாதிரி வேகமாக வேலைகள் எல்லாம் செய்ய முடியவில்லை.இதை கவனித்து வந்தாள் கமலா. ராணீ கிளம்பிப் போன பிறகு கமலா ”ஏங்க, ராணீ முன்னே போல் சேந்தாப் போல வேகமாக வேலை செய்யறதில்லீங்க.இதை நீங்க கவனிச்சீங்களா.அவளால் வேகமாக வேலை செய்ய முடியலேங்க.அவ உடம்பை டாக்டர் கிட்டே போய் காட்டிக்கன்னு சொன்னா,அவ போகாதிருக்கா. ஏன்னு எனக்குப் புரியலேங்க” என்று நடராஜனிடம் சொன்னாள்.“நான் கூட இதை கவனிச்சேன் கமலா.நாம் என்ன பண்ண முடியும்.அவ தானே டாக்டர் கிட்டே போய் அவ உடம்பைக் காட்டிக்கணும்.நாம சொல்லத் தான் சொல்ல முடியும்.பணம் கூட தர முடியும் கமலா.ஆனா அவ டாக்டர் கிட்டே போகலீன்னா நாம் என்ன பண்றது கமலா”என்று சொல்லி வருத்தப் பட்டான் நடராஜன்.“அடுத்த இரண்டு நாட்களுக்கு நடராஜன் ‘மார்னிங்க் டியூட்டிக்கு’ப் போய் இருந்தான்.கமலா அந்த வார பத்திரிக்கை ஒன்றைப் சுவாரசியமாகப் படித்துக் கொண்டு இருந்தாள்.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை.ஜோதிக்கு கல்யாண நாள்.ஜோதி காலையிலேயே எழுந்து விட்டாள் அவள் குளித்து விட்டு ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு தான் வாங்கி வந்த புது கல்யாண ‘டிரஸ்ஸை’ ராணீக்குக் காட்டினாள்.மிக அழகாக இருந்தது அந்த’டிரஸ்.’பிறகு “ராணீ நான் போய் வறேன்.எனக்கு சமயம் கிடைக்கும் போது நான் உன்னையும் ராஜ்ஜையும் இங்கே வந்து பாக்கறேன் “ என்று கண்களில் கண்ணீருடன் சொன்னாள் ஜோதி..

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *