கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 5,812 
 
 

அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21

“நான் சந்தேகப் பட்டது சரியா போச்சுங்க.அந்த வேலைக்காரி அம்மா தான் திருடிக்கிட்டுபோய் இருப்பாங்க. அவங்களுக்கு பதினெட்டு வயசிலும்,இருபது வயசிலும் ரெண்டு பையன்ங்க இருக்காங்கன்னு அந்த அம்மா எனக்கு வூட்டு வேலைக்கு வந்த அன்னைக்கு சொன்னாங்க.வரட்டும் இன்னைக்கு வேலை க்கு.நான் அந்த வேலைகாரி அம்மா கிட்டே கேக்கப் போறேங்க” என்று கருவினாள் கமலா.

அடுத்த நாளே நடராஜன் போஸ்ட் ஆபீஸ் போய் ராணீக்கு ஆறு நூறு ரூபாய் மணி ஆர்டர் பண்ணினான்.

அடுத்த நாள் வேலைக்காரி வேலைக்கு வந்ததும் ”எங்க ஐயா ‘டீ ஷர்ட்’ ரெண்டு காணோமே நீங்க அந்த ‘டீ ஷர்ட்டுங்களே’ பாத்தீங்களா”என்று முகத்தை கொஞ்சம் கோவமாக வைத்து கொண்டு கேட்டாள் கமலா.“நான் எல்லா துணிகளையும் நல்ல தோச்சு, காஞ்சசதும்,அவைகளை மடிச்சு பீரோவிலே தாங்க வச்சுட்டுப் போனேன்.நான் ஒன்னும் உங்க ‘டீ ஷர்ட்டுகளை’த் திருடி கிட்டு போவலேங்க” என்று கோவமாக பதில் சொன்னாள் வேலைக்காரி.‘சரி,நாம இனிமே இந்த அம்மா பின்னாலேயே போலீஸ்காரன் போல இருந்துக் கிட்டு வந்து,அந்த அம்மா ஒரு பொறுளையையும் திருடிக் கிட்டு போவாம இருக்காளான்னு கவனிச்சு பார்த்து விட்டு,அவங்க வேலையை முடிச்சி விட்டு வூட்டை விட்டுப் போன பிறவு தான் நாம் முதுகு பயிற்சியும்,’ரெஸ்ட்டும் எடுத்துக் கிட்டு வரணும்’ என்று முடிவு பண்ணினாள் கமலா.நடராஜனைப் பார்த்து ”எங்க குடும்பத்துக்கு நிறைய செல்வு பண்ணி இருக்கேங்க.நானும் இபோ வேலைக்குப் போய் ஒன்னும் சம்பாதிக்காம இருந்து வறேங்க எல்லா குடும்ப செலவும் பாவம் நீங்கலே தாங்க செஞ்சு வா£ங்க”என்று சொன்னாள்.“கவலைப் படாதே கமலா.இப்போ உன் உடம்பு தான் முக்கியம்.பணம் முக்கியம் இல்லே.டாக்டர் சொன்னா மாதிரி நீ உன் உடம்புக்கு முதுகு பயிற்சி பண்ணி நல்லா ‘ரெஸ்ட்’டும் எடுத்து வா.உன் உடம்பை நல்லா கவனிச்சு வா.நாளடைவில் உன் உடம்பு பழைய நிலைக்கு வந்திடும்.அப்புறமா நாம சந்தோஷமாய்னேலைகுப் போய் வரலாம்” என்று சொல்லி கமலாவுக்கு பதில் சொல்லி விட்டு அன்றைய நாளிதழை படிக்க ஆரம்பித்தான் நடராஜன்.

கமலா தான் வேலைக்காரியுடன் இருந்து வந்து ‘ரெஸ்ட்’ எடுக்க முடியாமல் கஷடப்பட்டு வந்தாள்.தவிர இந்த வேலைக்காரி அம்மா அடிக்கடி ‘லீவும்’ போட்டு வந்தாள்.திடீரென்று ‘என் பையனுக்கு ஜுரமா இருக்குங்க. நான் இன்னைக்கு வேலைக்கு வரலீங்க’ என்று போனில் சொல்லி வேலைக்கு வரமாட்டா.ஒரு வாரம் கழிச்சு ‘எங்க வீட்டுக் கிட்டே ஒரு சாவுங்க.நான் இன்னிக்கு வேலை க்கு வரமுடியாதுங்க’ என்று போனில் சொல்லி வேலைக்கு வராமல் இருந்தாள்.அடிக்கடி ‘நான் இன்னைக்கு கோவிலுக்குப் போறேங்க,இல்லே இங்கே அம்மனுக்கு கூழ் ஊத்தணுங்க, இல்லை தனக்கு உடம்பு சரி இல்லேன்னு,இப்படி ஏதாவது காரணம் சொல்லி லீவு எடுத்துக் கொண்டு வந்தாள் கமலாவால் இந்த வேலைகாரியை வச்சுக்கவும் முடியலை,நிறுத்தி விடவும் முடியாலே.அவள் மிகவும் கஷ்டப் பட்டாள். அவளால் தவறாமல் முதுகு பயிற்சியையும்,‘ரெஸ்ட்டும் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தாள்.வேறு நல்ல வேலை க்காரியும் கிடைக்கவில்லை கமலாவுக்கு.

முத்தம்மாவுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி மார்பு வலி வந்துக் கொண்டு இருந்தது. ராணீ எவ்வளவு சொல்லியும் முத்தம்மா டாக்டா¢டம் வர மறுத்து வந்தாள்.நெஞ்சு வலியோடு இருந்து வந்தாள் முத்தம்மா.ராணீ தன் வேலைகளை முடித்து கொண்டு வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்தாள்.தூரத்தில் வரும் போதே குழந்தை ராஜ் அழுதுக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டது.‘ஏன் ராஜ் அழுதுக் கிட்டு இருக்கான்.அம்மா இல்லையா.எங்காவது பக்கத்து வூட்டுக்கு போய் இருக்காங்களா’என்று எண்ண மிட்டவாறு வீட்டுக்குள் நுழைந்தாள் ராணீ.முத்தம்மா குழந்தை பக்கத்தில் மல்லாக்காக படுத்துக் கொண்டு இருந்தாள்.’நம்ப அம்மா இப்படி மல்லாக்காக படுத்து நாம பாத்ததே இல்லையே. எப்பவும் ஒருக்களிச்சுத் தானே படுப்பாங்க அம்மா’ என்று யோஜனைப் பண்ணக் கொண்டே “அம்மா, அம்மா” என்று குரல் கொடுத்தவாரே ஓடி வந்து அம்மாவை தொட்டு எழுப்பினாள்.அவள் அம்மா உடம்பு ‘ஜில் ‘என்று இருந்தது.தீயைத் தொட்டது போல் இருந்தது ராணீக்கு.“அம்மா, அம்மா” என்று கத்தி அவளை உலுக்கி எழுப்பினாள்.முத்தம்மா எழுந்தரிக்கவே இல்லை.”என்னைஇப்படி அனாதையா தவிக்க விட்டு விட்டுப் போய் விட்ட யேம்மா.இனிமே எனக்கு யார்ம்மா இருக்காங்க இந்த உலகத்திலே.நான் எத்தினி தடவை ‘வா உன் உடம்பை டாக்டர் கிட்டே காட்டி மருந்து வாம்கிக்கலாம்ன்னு’ சொன்னேனே.நீ அதை கேக்காம ‘எனக்கு வைத்தியம் வேணாம்’ன்னு பிடிவாதம் பிடிச்சி வந்தே.இப்போ பார் நான் வூட்டு வேலை செஞ்சிட்டு வறத்துகுள்ளார,நீ இதோ பொணமா படுத்து கிடக்க§ற்” என்று சொல்லி ‘ஓ’வென்று கதறி அழுதாள்.சற்று நேரம் கழித்து தன்னை சுதாரித்துக் கொண்டாள் ராணீ.

ராணீ தன் சித்தக்கு போனில் முத்தம்மா இறந்து போன செய்தியை சொன்னாள்.ஜோதி “என்ன ஆச்சு ராணீ,ஏன் முத்தம்மா இறந்திட்டாங்க” என்று கேட்டாள்.ராணீ ஜோதியிடம் நடந்ததை எல்லாம் அழுது கொண்டேசொன்னாள்.“சரி, நான் அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு உடனே திண்டிவனம் வரேன்” என்று பதில் சொன்னாள் ஜோதி.வீட்டுக்கு வந்ததும் தன் அக்கா முததம்மா வை கட்டிக் கொண்டு ‘ஓ’ வென்று கதறி அழுதாள்ஜோதி.கொஞ்ச நேரம் ஆனதும் ராணீ ஜோதியை தனியா அழைத்துக் கொண்டு போய் “சித்தி,நான் சென்னையை விட்டு ஊருக்கு வந்ததும் என் சமாசாரம் கேட்டு விட்டு ‘இந்த ஊர் என்னை கண்டபடி பேசாம இருக்கணும் என்பததுக்காக அம்மா தான் இந்த தாலியை எனக்கு கட்டி விட்டாங்க.அப்புறம் எல்லோர் கிட்டேயும் ‘கல்யாணம் கட்டிகிட்டவன் தூபாய்க்கு வேலைக்குப் போய் இருக்கான்.வர ரெண்டு வருஷம் ஆகும்ன்னு சொல்லு’ ன்னு ஒரு பொய்யைச் சொல்லச் சொன்னாங்க சித்தி. அதான் இந்த தாலி சித்தி” என்று சொல்லி தன் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும் தாலியைக் காட்டினாள் ராணீ.“அப்படியா.முத்தம்மாவா அப்படி சொல்லச் சொன்னா.அவ அப்படி சொன்னா அதில் ஏதோ காரணம் இருக்கும் ராணீ.நம்ப குடும்ப கௌரவத்தை மனசிலே வச்சு தான் முத்தம்மா அப்படி உன்னே சொல்ல சொல்லி இருப்பாங்க. நீ அத்தோடவே இரு ராணீ.இப்போ உனக்கு குழந்தையும் பிறந்திடுச்சி.அது தான் நல்லது” என்று சொல்லி விட்டு ஜோதி ராணீயின் குழந்தையைப் பார்த்தாள்.பிறகு குழந்தையைப் பார்த்து ”நல்ல இருக்கானே இந்த சுட்டிப் பய.நல்ல கண்ணுங்க,வட்டமான முகம்.என்ன பேர் வச்சு இருக்கே ராணீ.நீ சொன்னது எனக்கு மறந்து போச்சு” என்று கேட்டாள் ஜோதி.“அவனுக்கு ராஜ்ன்னு பேர் வச்சு இருக் கேன் சித்தி” என்றாள் ராணீ.தன் சித்தியை வைத்துக் கொண்டு முத்தம்மாவின் ஈம காரியங்களை எல்லாம் செய்து முடித்தாள் ராணீ.

அடுத்த நாள்.ஜோதி பகல் உணவு சாப்பிட்டு விட்டு ராணீயோடு தனியாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள்.“சித்தி,சித்தப்பாவைப் பத்தி ஏதாச்சும் விவரம் தெரிஞ்சிச்சா.எப்போ அவங்களே ஜெயிலில் இருந்து வெளியே விடுவாங்க”என்று கேட்டாள் ராணீ.“ஒன்னும் தெரியலே ராணீ.இன்னும் ’கேஸ் ‘நடந்துக் கிட்டு இருக்கு. ரொம்ப நாளாகும் ராணீ அந்த ‘கேஸ்’ முடிஞ்சி அவர் ஜெயிலில் இருந்து வெளியே வர” என்று சொல்லி நிறுத்தினாள் ஜோதி.அப்போது ஜோதிக்கு தான் டேவிட்டை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்ல ஆசை.பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று அதை பத்தி ஒன்னும் சொல்லவில்லை.ஜோதிக்கு ‘நாம் வந்த வேலை முடிஞ்சு விட்டதே, இனிமே இங்கு இருந்து நாம் என்னப் பண்ணப் போறோம்’ என்று தோன்றியது.மெல்ல ராணியிடம் “ராணீ நான் ரொம்ப நாள் லீவு போட முடியாது.நான் சென்னைக்குக் கிளம்பட்டுமா” என்று கேட்டாள் ராணீயைப் பார்த்து.ராணீக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சும்மா இருந்தாள்.சற்று நேரம் கழித்து “இனிமே நீ இங்கு இருந்து என்ன பண்ணப் போறே ராணீ.என் கூட சென்னைக்கு வந்துவிடேன் அங்கே நீ நாலு வூடு வேலை செஞ்சி நீ உன் ராஜ்ஜை நல்லா படிக்க வச்சு,ஒரு நல்ல வேலைக்கு அவனை அனுப்பி விட்டு நீ அவனோடு இருந்து வாயேன்” என்றாள் ஜோதி. “நானும் அப்படித்தான் நினைச்சுகிட்டு இருக்கேன் சித்தி.அம்மா போன பிறவு எனக்கு இந்த குடிசையிலே இருக்கப் பிடிக்க லே சித்தி எப்பவும் அம்மா நினைப்பே வந்துகிட்டு இருக்கும்.என்னால் அம்மாவை மறக்க முடியாம கஷடப் படுவேன்” என்றாள் ராணீ.தன் சித்தியை துணைக்கு வைத்துக் கொண்டு தன் அம்மாவின் குடிசையை வித்தாள் ராணீ. அந்த பணத்தில் முத்தம்மாவுக்கு இருந்த கடன்களை எல்லாம் அடைத்து விட்டு மீதி பணத் தையும்,தன் துணி மணிகளையும், தன் குழந்தை துணிமணிகளையும், குழந்தையையும் எடுத்துக் கொண்டு தன் சித்தியோடு சென்னைக்குப் புறப்பட்டு வந்து விட்டாள் ராணீ.

அந்த மாதம் நடராஜன் ராணீக்கு அனுப்பிய பணம் ‘டெலிவா¢’ ஆகாமல் திரும்பி வந்து விட்டது என்று ‘போஸ்ட் ஆ·பீசில்’ இருந்து நடராஜனுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது.அந்த கடிதத்தைப் படித்து விட்டு நடராஜன் ‘போஸ்ட் ஆ·பீஸ்’ போய் கேட்கப் போனான்.அவன் அனுப்பிய மணி ஆர்டர் ·பார்மில்’ ’விலாசத்தில் யாரும் இல்லை அதனால் பணத்தை கொடுக்க முடியவில்லை’ என்று எழுதி இருந்தது. பணத்தை ‘போஸ்ட் மாஸ்டரிடம்’ இருந்து திரும்பி வாங்கிக் கொண்டான் நடராஜன்.அவன் மனம் வேதனை பட்டது.ராணீயும் அவளுக்கு பிறந்து இருக்கும் குழந்தை எங்காவது சந்தோஷமாய் இருந்து வர அவன் கடவுளை வேண்டிக் கொண்டான்.

ராணீ சென்னைக்கு வந்ததும் ரெண்டு நாள் சித்திக்கும் தனக்கும் சமையல் பண்ணி வந்தாள். அன்னைக்கு சாயங்காலம் சித்தி ராணீயோடு ஏதோ ஊர் கதை பேசிக் கொண்டு இருந்தாள்.“சித்தி நானும் ரெண்டு வூடு வேலைக்குப் பாத்துக்கிடலாம்ன்னு இருக்கேன் சித்தி.எனக்கும் கொஞ்சம் பணம் வந்தா தானே நானும் என் குழந்தையும் இந்த சென்னையில் நல்லா இருந்து வர முடியும்.நீங்க வேலை செய்யற இடத்திலே கேட்டு பாருங்க சித்தி.நானும் கோவிலுக்குப் போய் யார் கிட்டேயாவது வூட்டு வேலைக்குக்கேட்டுப் பாக்கறேன் சித்தி” என்றாள் ராணீ.“ஆமாம் ராணீ, நீயும் ரெண்டு வூடு வேலை செஞ்சு வந்தா தான் உன் கையிலும் கொஞ்சம் பணம் சேரும்.சரி நானும் கேட்டுப் பாக்கறேன் ராணீ.வேலை கிடைச்சுடும் பயப் படாதே.அது வரை நீ இங்கேயே இரு.உனக்கும் உன் குழந்தைக்கும் நான் சாப்பாடு போடறேன்.கவலை படாதே” என்று சொல்லி விட்டாள் ஜோதி.தன் சித்தீக்கு நன்றி சொன்னாள் ராணீ.

அன்று ‘ஆ·ப் நாள்’ நடராஜனுக்கு.கடைக்குப் போய் காய்கறி வாங்கி வரலாம் என்று எண்ணி நடராஜன் கமலாவிடம் சொல்லி விட்டு பையை எடுத்துக் கொண்டு கடைத் தெருவுக்குப் போனான். காய்கறிக் கடையில் கொஞ்சம் கூட்டமாய் இருந்தது.‘சரி முன்னே இருப்பவர்கள் காய்களை வாங்கிக் கொண்டு வெளியே வரட்டும்’ என்று சற்று பின்னால் நின்றுக் கொண்டு இருந்தான் நடராஜன்.

அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை.ராணீ தன் தோளில் குழந்தையே போட்டுக் கொண்டு ஒரு ‘பிளாஸ்டிக் பையில்’ கொஞ்சம் காய்களுடன் அந்த கூட்டத்தில் இருந்து வெளியே வந்தாள்.ஆச்சரியப் பட்டான் அவன்.சட்டென்று நடராஜன் ”யாரு ராணீயா,என்னால் நம்பவே முடியலே.இந்த ஜென்மத்திலே நான் உன்னே மறுபடியும் பாப்பேன்னு கனவிலும் நினைக்கலே ராணீ” என்று ஆச்சரியத்துடன் சொன்னான் நடராஜன்.ராணீ மெதுவாக “எனக்கும் ரொம்ப ஆச்சரிய மா இருக்குங்க” என்றாள் ராணீ ஆச்சரியத்துடன். பிறகு ராணீயை கொஞ்சம் தள்ளி ஜன சந்தடி இல்லாத இருந்த ஒரு மரத்தடிக்கு அழைத்துப் போனான் நடராஜன்.“ராணீ,நீ ஊரிலே இருந்து சென்னைக்கு எப்ப வந்தே.உனக்கு சுகப் பிரசவம் ஆச்சா. நான் அனுப்பின பணம் உனக்கு போந்திச்சா. உன் உடம்பு ரொம்ப இளைச்சு இருக்கே ராணீ.உன் உடம்பு.உன் அம்மாவுக்கு உடம்பு இப்போ தேவலாமா.இது தான் உனக்கு பிறந்த குழந்தையா” என்று மூச்சு விடாமல் கேட்டான் நடராஜன்.ராணீ£ சிரிச்சுக் கிட்டே”இது என் குழந்தை தானுங்க.நீங்க அனுப்பின பணம் ரொம்ப உபயோகமா இருந்திச்சுங்க.எனக்கு சுகப் பிரசம் ஆச்சுங்க.இப்போ ஒரு மாசத்துக்கு முன்னே தான் என் அம்மா மாரடைப்புலே இறந்திட்டாங்க.அப்புறமா நான் திண்டிவனத்தே வுட்டுட்டு என் சித்தியோடு போன வாரம் தான் இங்கே வந்தேங்க” என்றாள் ராணீ.நடராஜன் குழந்தையைப் பார்த்தான்.குழந்தை கன்னத்தைத் லேசாகத் தட்டி விட்டு ”என்ன பேர் வச்சு இருக்கே ராணீ இவனுக்கு” என்று கேட்டாள் நடராஜன். ‘ராஜ்’ ன்னு வச்சி இருகேங்க “ என்றாள் ராணீ.

”சற்று நேரம் கழித்து “அம்மா எப்படி இருக்காங்க.அவங்களுக்கு என்ன குழந்தை பிறந்தி ச்சுங்க”என்று கேட்டாள் ராணீ.நடராஜன் தன் தொண்டையை கனைத்துக் கொண்டு கமலவுக்கு குழந்தை பிறந்ததில் இருந்து போன மாதம் அவள் முதுகு’ ப்ராப்லெம்’ வரை எல்லா விஷயங்க ளையும் விவரமாக சொன்னான்.“அப்படிங்களா எனக்கு கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குங்க. கவலைப் படாதீங்க.அவங்க உடம்பு சீக்கிரமா குணம் ஆயிடுங்க” என்றாள் ராணீ.கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணினான் நடராஜன்.‘ராணியிடம் சொல்லலாமா, வேண்டாமா,அவள் என்ன நினைச்சுப்பாளோ தன்னை தப்பாக எடுத்துக் கிட்டு விடுவாளோ’ என்று எல்லாம் எண்ணி பயந்தான் நடராஜன்.சற்று நேரம் கழித்து மெல்ல ¨தா¢யத்தை வரவழைத்துக் கொண்டு ராணீ “நான் சொல்றதை நீ தப்பா மட்டும் எடுத்துக்கலீன்னா நான் ஒன்னு உனக்கு சொல்லட்டுமா” என்று சொல்லி நிறுத்தி அவள் முகத்தை கவனித்தான் நடராஜன்.“சொல்லுங்க” என்று ராணீ கேக்கவே “ராணீ நீ மறுபடியும் எங்க வீட்லே வேலை செய்ய வரயா.நான் இதை எந்த தப்பான எண்ணத்தோடும் சொல்லலே ராணீ. நான் உன்னை தொடக் கூட மாட்டேன் ராணீ.நான் கடவுள் மேலே சத்தியமா சொல்றேன்.என்னை நம்பு ராணீ.கமலா இப்போது வேலைக்குப் போவாம வூட்டிலே தான் இருந்து வரா.நீ பழையபடி வந்து என் வீட்டில் வேலை செஞ்சா உன் வேலை கமலாவுக்கு ரொம்ப பிடிச்சு அவள் சந்தோஷமா இருந்து வருவா. கமலாவுக்கு நிறைய ‘ரெஸ்ட்டும்’ கிடைக்கும்.முதுகு பயிற்சியும் அவளால் செஞ்சு வர முடியும்.பேச்சு கொடுத்துகிட்டு இருந்தா அவ தனிமை கொஞ்சம் குறையும்.அவ முதுகு வலி கொஞ் சம் சீக்கிரம் குணமாக வாய்ப்பு இருக்கும் ராணீ.எனக்காகவும் கமலாவுக்காகவும் இந்த உதவியே நீ பண்ணு வியா ராணீ.உன்னே நான் ரொம்ப கெஞ்சி கேட்டுக்குறேன்.என்னை நம்பு ராணீ ப்ளீஸ்’ “ என்று கெஞ்சினான் நடராஜன்.கொஞ்சம் நேரம் ராணீ ஒன்னும் பேசவில்லை.“எனக்கு ரெண்டு நாள் எனக்கு அவகாசம் கொடுங்க.நான் யோஜனைப் பண்ணி சொல்றேனுங்க” என்று சொல்லி கிளம்பத் தயாரானாள் ராணீ.

“சரி, ராணீ.நீ ரெண்டு நாள் ‘டயம்’ எடுத்துக்க.நான் வேணாங்கலே.ஆனா உன் முடிவு நல்ல பதிலாக இருக்கணும் ராணீ£.எங்க வூட்டு வேலைக்குநீ நிச்சியமா வரணும் ராணீ.நிச்சியம் வரணும் ராணீ” என்று அவளை கட்டாயப் படுத்தினான் நடராஜன்.பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே போய் விட்டாள் ராணீ.பிறகு கமலா சொன்ன காய்களை எல்லாம் வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தான் நடராஜன்.வழி நெடுக யோஜனை பண்ணிக் கொண்டு போனான் நடராஜன்.‘தன் வீட்டுக்கு வந்த ராணீ காய் பையை ஒரு ஓரத்தில் வைத்து விட்டு ‘நாம் சமையலை கொஞ்சம் நேரம் கழிச்சு செய்யலாம்’என்று எண்ணி குழந்தைக்கு ரெண்டு பிஸ்கெட்டு களை சாப்பிட கொடுத்து விட்டு,ரெண்டு விளையாட்டு சாமான்களை விளையாட அவன் முன்னால் போட்டு விட்டு உட்கார்ந்துக் கொண்டு யோஜனைப் பண்ணினாள்.

‘அந்த நல்ல மனுஷன் சத்தியம் பண்ணி இருக்காரு.தவிர அந்த அம்மா வூட்டிலேயே இருக்காங்க. அவங்களுக்கு முதுகு வலி.வேலைக்கு வேறே இன்னும் போவலே.இனிமே முன்ன மாதிரி அந்த மனுஷன் நம்மிடம் ‘தப்பு’ பண்ண வழி இல்லே.நாமும் தைரியமா வேலை செஞ்சி கிட்டு வரலாம்.நம்ம கையிலே கொஞ்சம் பணம் சேரும். நம்ம கிட்டே இருக்கிற பணம் தீந்து போச்சுன்னா நமக்கும் குழந்தைக்கும் சாப்பிட பணம் வேணுமே.ராஜ் கொஞ்சம் பெரியவனா ஆனதும் நாம பக்கத்திலேயே இன்னும் ஒன்னோ ரெண்டோ வூடுங்க வேலைக்கு கிடைச்சா செய்யலாம். இப்போதைக்கு இந்த ஒரு வூடு போதும் ‘என்று முடிவு பண்ணினாள் ராணீ.

அன்று வெள்ளிக் கிழமை.ஜோதி வேலைக்குக் கிளம்பிப் போனாள்.ஜோதி வேலைக்குப் போனதும் ராணீ தன் குழந்தையையும் எடுத்துக் கொண்டு அந்த தெரு கோடியிலே இருந்த மாரி அம்மன் கோவிலுக்குப் போய் ”அம்மா தாயே,நான் இன்னிலேந்து வூட்டு வேலைக்குப் போகலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன் உன் தயவால எல்லாம் சரியாய் போய், நானும் நல்லா இருந்து,என் குழந்தையும் நல்லா படிச்சு,முன்னுக்கு வரணும்” என்று அம்மனை வேண்டிக் கொண்டு அவள் அம்மனை மூன்று சுற்று சுற்றி வந்து விட்டு அம்மனுக்கு நமஸ்காரம் பண்னினாள் ராணீ. பிறகு யோஜனைப் பண்ணிக் கொண்டு அந்த வீட்டின் தெருக் கோடிக்கு வந்தாள் ராணீ.அவளுக்கு சட்டென்று ஒரு ஐடியா மனதில் உதித்தது.அந்த ஐயா உபயோகப் படுத்தும் ‘பைக்’ அவளுக்கு ஞாபகம் வந்தது.’நாமஅந்த ‘·ப்ளாட்டின்’ கீழே போய் பாக்கலாம்.அங்கு அவரின் ‘பை’க் நின்னுக் கிட்டு இருந்தா,அந்த ஐயா வூட்லே இருக்காரு ன்னு அர்த்தம்.இல்லீன்னா அவர் வூட்லே இல்லே ன்னு அர்த்தம்.அவர் ‘பைக்’ இருக்கும் போது தான் நாம் அங்கே வேலைகுப் போக வேணும்’ என்று முடிவு பண்ணினாள் ராணீஅவளுக்கு இப்போ நல்ல தைரியம் வந்தது.மெல்ல நடந்து வந்து ராணீ அந்த ‘·ப்ளாட்டுக்கு’ வந்தாள்.‘·ப்ளாட்டில் ‘பைக்குகள் நிறுத்தி வைக்கும் இடத்திற்கு வந்தாள். அவள் கண்களை அவளால் நம்பவே முடியவில்லை.‘அவர்’ பைக் அங்கே நின்றுக் கொண்டு இருந்தது. ‘இதே ‘·ப்ளாட்டின்’ கீழே நின்னு கிட்டு தானே நாம ஒரு சிட்டிகை மண்னை எடுத்து ஊதி அவள் செய்த சபதம் அவளுக்கு ஞாபகம் வந்தது.

தன் குழந்தையை எடுத்துக் கொண்டு மாடிப் படி ஏறி அவள் நடராஜன் வீட்டின் முன் போய் நின்றாள்.அவள் மனம் ‘திக் ‘திக் என்று அடித்துக் கொண்டு இருந்தது. சாசலில் இருந்த ‘காலிங்க் பெல்லை’ மெல்ல அழுத்தினாள் ராணீ.‘காலிங்க் பெல்’ சத்தம் கேட்டதும் கதவைத் திறந்தாள் நடராஜன்.அவன் கண்களை அவனால் நம்பவே முடிய வில்லை.ராணீ தன் குழந்தையுடன் நின்றுக் கொண்டு இருந்தாள்.“வா, ராணீ வா.ஏன் இத்தனை நாளா நீ வேலைக்கு வரலே.ஊருக்குப் போய் எட்டு மாசத்துக்கு மேலாயிடிடுச்சே” ன்னு நடராஜன் கேட்டுக் கொண்டு இருக்கும் போது கமலா பின்னாலே வந்து ”யாரு,நம்ப ராணீயா” என்று கேட்டு விட்டு ராணீயைப் பார்த்து “என்ன ராணீ,நீ ஊருக்குப் போயிட்டு உன் அம்மா உடம்பை சுகப்படுத்தி விட்டு வரேன்னு போனே,அப்புறம் உன்னே கண்ணிலே காணோம். இவ்வளவு மாசம் கழிச்சி வந்திருக்கே.யார் இந்த குழந்தை” என்று கேள்வி மேல் கேள்விகள கேட்டாள் கமலா. நடராஜனுக்கு வேர்த்து வேர்த்து கொட்டியது.என்னடா கமலா இப்படி ராணீயைப் பாத்து திடீர்ன்னு ‘யார் இந்தக் குழந்தை ன்னு கேக்கறாளே.ராணீ என்ன பதில் சொல்லப் போறாளோ” என்று நினைத்து ராணீ வாயையே பாத்துக் கிட்டு பயத்தோடு நின்றுக் கோண்டு இருந்தான் நடராஜன்.ராணீ மெல்ல உள்ளே வந்தாள்.

“ஆமாம்மா, நான் அப்படித் தான் சொல்லிட்டு ஊருக்குப் போனேன். நான் ஊருக்குப் போய் என் அம்மாவுக்கு வைத்தியம் பண்ணினேனுங்க.ஆனா அவங்க உடம்பு சரியாவமேயே ,ஒரு நாள் அவங்க மாரடைப்பாலே இறந்திட்டாங்க” என்று சொல்லும் போது அவ கண்ணிலே கண்ணீர் முட்டியது.தன் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள் ராணீ.”அடப் பாவமே அவங்க மாரடைப்பாலே இறந்திட்டாங்களா” என்று துக்கம் விசாரித்தாள் கமலா.சற்று நேரம் போனதும் “இந்த குழந்தை என்னுடையது தாங்க.நான் இங்கே வேலை செஞ்சுகிட்டு இருக்கும் போது ஒரு நலலவர் கிட்டே நெருங்கிப் பழகினேங்க. அவர் இந்த குழந்தையை எனக்குக் கொடுத்திட்டா ரும்மா.அவரு ஏற்கெனவே கல்யாணம் ஆனவருன்னு எனக்கு அப்புறமா தாம்மா தெரிஞ்சுது.என்ன பண்றது.நான் ஊருக்குப் போய் இந்த குழந்தையைப் பெத்துக் கிட்டேம்மா”என்று சொல்லி கீழே இறங்கத் துடிக்கும் தன் குழந்தையை கீழே இறக்கி விட்டாள் ராணீ.நடராஜன் தேள் கொட்டினவன் போல் ஒன்றும் பேசாமல் சும்மா நின்றுக் கொண்டு இருந்தான். மனதுக்குள் ராணீக்கு தன் நன்றியை சொன்னான் நடராஜன்.”அடப் பாவமே, கல்யாணம் ஆன ஒரு ஆம்பிளே உன்னை இப்படி செஞ்சு விட்டு உன்னை ஏமாத்தி இருக்கக் கூடாது ராணீ.நீ தீர விசாரிக்காம ஏன் ராணீ அந்த ஆம்பளையோடு பழகினே.நீ வயசு பொண்ணு இல்லே.நீ தான் ரொம்ப ஜாக்கிறதையா இருந்து இருக்கணும் ராணீ” என்று கமலா ஒரு பெரிய லெக்சரே கொடுத்தாள் கமலா.“நீங்க சொல்றது ரொம்ப சரிம்மா.நான் ‘தப்பு’ பண்ணிட் டேம்மா” என்று ராணீ சொன்னதும் கமலா அந்த பேச்சை விட்டு விட்டாள்.“குழந்தைக்கு என்ன பேர் வச்சு இருக்கே ராணீ” என்று கேட்டாள் கமலா.”அவன் பேர் ‘ராஜ்’ங்க” என்றாள் ராணீ.“நல்ல பேர் தான்.குழந்தையும் நல்லா ராஜா மாதிரி தான் இருக்கான் ராணீ” என்றாள் கமலா.“ஏதாச்சும் சாப்பிடறயா ராணீ,குழந்தைக்கு ‘பிஸ்கெட்’ தரட்டுமா ராணீ” என்று கேட்டுக் கொண்டே கமலா பிஸ்கெட் டப்பாவைத் திறந்து ரெண்டு ‘பிஸ்கெட்டை’ குழந்தைக்கு கொடுத்தாள் கமலா.குழந்தையும் பிஸ்கெட்டை வாங்கிக் கொண்டது. ”எனக்கு ஒன்னும் வேண்டாங்க” என்றாள் ராணீ.நடராஜன் பேசாமல் இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான். அவனுக்கு கவலை வந்து விட்டது.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *