அத்தியாயம் -15 | அத்தியாயம்-16 | அத்தியாயம் -17
கதவை அப்படியே திறந்து விட்டு விட்டு உள்ளே வந்து வெறுப்புடன் தன் ‘பெட் ரூமுக்கு’ப் போய் விட்டான் நடராஜன்.கமலா எப்போ ஆ·பீஸ் போவாள், நாம் ராணீயை முழு விவரமும் கேக்கலாம் என்று காத்து கொண்டு இருந்தான் நடராஜன்.அவன் பொறுமையாக இருந்து வந்தான் கமலா ஆ·பீஸ் கிளம்பும் வரையில்.ஒரு வழியாக கமலா ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு,தன் ஹாண்ட் பாக்,ஸ்கூட்டர் சாவி, ஆ·பீஸ் சாவி எல்லாம் எடுத்துக் கொண்டு ‘ஆ·பீஸ்க்கு’க் கிளம்பினாள்.
அவன் உடம்பில் ஒரு பதை பதைப்பு தெரிந்தது.நாளாக நாளாக ராணீயின் வேதனை அதிகமாகியது.அடுத்த நாள் கடவுளை வேண்டிக் கொண்டு டாக்டர் ரூமுக்குள் போனாள் ராணீ.நடராஜன் சொன்னதை டாக்டா¢டம் மெதுவாக தட்டி தடுமாறிச் சொன்னாள் ராணீ.டாக்டர் உடனே ”இதோ பாரும்மா.நீ சொல்றது போல எல்லாம் நான் இந்த கர்ப்பத்தை எல்லாம் கலைக்க முடியாது.உன் புருஷன் சம்மதம் எனக்கு வேணும்மா.அவர் வந்து இந்த பாரத்தில் கையெழுத்துப் போட்டு ‘இந்த கர்ப்பத்தைக் கலைக்க நான் முழு சம்மதம் தரேன்’ன்னு சொல்லணும்.நீ அவரை என் கிட்டே கூட்டிக் கிட்டு வா.நான் அவருக்கு இந்த விஷயத்தை புரிய வைக்கிறேன் “என்று சொல்லி ராணீயை அனுப்பி விட்டார்.‘என்ன பண்ணுவது’ என்று தெரியாமல் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் ராணீ.
ரெண்டு நாள் கழித்து நடராஜன் வீட்டில் இருந்தான்.கமலா வேலைக்குக் கிளம்பிப் போன பிறகு ராணீ ஹாலுக்கு வந்து “நான் முந்தா நாளு அந்த லேடி டாகடா¢டம் போய் நீங்க சொன்ன மாதிரி சொன்னேங்க”என்று சொல்லி விட்டு அழுது கொண்டே டாகடர் சொன்ன விஷயத்தை அப்ப்டியே சொன்னாள்.“அப்படியா சொன்னாங்க. அங்கே வந்து ‘நான் தான் உன் புருஷன்’ ன்னு எப்படி ராணீ நான் சொல்ல முடியும் என்று புரியவில்லையே ” என்று சொல்லி அவன் கவலை பட்டு யோசித்தான்.அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.தரையில் போட்ட மீனைப் போல் துடித்தான். “சரி ராணீ,இந்த டாக்டர் நமக்கு சரிப் படமாட்டாங்க.என் கூட நீ வா” என்று சொலி விட்டு ராணீயை அழைத்துக் கொண்டு ஒரு லேடி டாகடர் கிட்டே போய் நடந்த எல்லா விஷயத் தையும் சொல்லி ‘இந்த கர்ப்பத்தை நீங்க தயவு செய்து கலைக்க ஆபரேஷன் பண்ண வேண்டும்.நான் அதற்கு என்ன பணம் வேணுமானாலும் தறேன்” என்று கெஞ்சினான் நடராஜன்.எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு விட்டு “சார் இது திருட்டு உறவு கர்ப்பம்.இதை நான் கலைக்க வேண்டுமானா நீங்க எனக்கு நிறைய பணம் தர வேண்டி இருக்கும்.இதை நான் போலீஸ்க்கு தெரியாம வேறே பாத்துக் கொள்ளணும்.தவிர நீங்க என் எதிரில் இந்த பாரத்தில் ‘நான் இந்த ‘கர்ப்ப கலைப்புக்கு’ ‘சமமதம் தருகிறேன்’ என்று எழுதி, இந்த பெண்ணின் கணவன் என்ற இடத்தில் நீங்க கை எழுத்துப் போட்டு தர வேண்டும்” என்று சொல்லி விட்டாள்.”சரிங்க”என்று சொல்லிவிடு டாக்டர் கொடுத்த பேப்பா¢ல் கை எழுத்து போட்டு விட்டு ராணியை டாகடர் இடம் விட்டு விட்டு ரூமை விட்டு வேளியே வந்தான் நடராஜன்.கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தான்.
அந்த லேடி டாக்டர் ராணீயை பா¢சோதனைப் பண்ணி பார்த்தாள்.பிறகு வெளியில் நின்றுக் கொண்டு இருந்த நடராஜனை தன் ரூமுக்கு வரச் சொன்னாள் அந்த லேடி டாகடர்.லேடி டாக்டர் நடராஜனிடம் ”இவங்க கர்ப்பம் தா¢ச்சு நாலு மாசத்துக்கு மேல் ஆகி இருக்குங்க.குழந்தையும் நல்லா வளந்து இருக்கு.இந்த நிலையில் நான் இவங்களுக்கு இந்த ஆபரேஷன் பண்ணினா இவங்க உயிருக்கு ஆபத்தாப் போவலாம்.அதனால் நான் இந்த ஆபரேஷன் பண்ண மாட்டேங்க”என்று சொல்லி பா¢சோதனை ‘·பீஸ்’ ஆறு நூறு ரூபாய் மட்டும் வாங்கி கொண்டாள் அந்த ‘லேடி’ டாகடர். அந்த லேடி டாக்டர் சொன்னதைக் கேட்டு நடராஜன் ஆடிப் போய் விட்டான். அவனுக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை.இருவரும் வெளியே வந்தார்கள்.
“அழாதே ராணீ.நாம இன்னொரு லேடி டாகடரைப் பாத்து கேக்கலாம்” என்று சொல்லி விட்டு தி.நகரில் இருந்த இன்னொரு லேடி டாகடா¢டம் ராணீயை காட்டினான்.அந்த லேடி டாகடரும் முதல் லேடி டாகடர் சொன்னது போலவே சொல்லி விட்டாள்.தலையை தொங்கப் போட்டு கொண்டு நடராஜனும் ராணீயும் டாக்டர் ருமை விட்டு வெளியே வந்து வீட்டுக்கு வந்த் சேர்ந்தார்கள்.
ராணீ யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். ”நீங்க அழாதீங்க.நான் இந்த நிலைமையை சமாளிச்சு ஒரு நல்ல வழி பண்றேன்..நான் இந்த விவகார த்தை யாருக்கும் தொந்தரவு இல்லாம பாத்துக்கிறேன்.ஒன்னு நிச்சியங்க.என் கழுத்தை அறுத்தாலும் சரி,நீங்க தான் இந்த குழந்தைக்கு காரணம் என்று நான் யாருக்கும் சொல்ல மாட்டேங்க.இது சத்தியங்க.நான் இந்த குழந்தையே பெத்துக்கப் போறேனுங்க” என்று சொல்லி நடராஜைன் எழுந்துப் போய் குளித்து விட்டு வரச் சொன்னாள் ராணீ.ராணீ சொன்னதைக் கேட்ட நடராஜன் ”என்ன சொல்றே ராணீ.உனக்குப் பயித்தியமா பிடிச்சி இருக்கு.எப்படி நீ இந்த குழந்தையைப் பெத்துக்க முடியும் ராணீ”என்று குழப்பத்துடன் கேட்டான் நடராஜன்.“ஆமாங்க, நான் திண்டிவனம் போய் என் அம்மாவோடு இருந்து கிட்டு இந்த குழந்தையைப் பெத்துக்கப் போறேங்க.நான் இப்போ வூட்டுக்குப் போய் வரேணுங்க.நீங்க கவலைப் படாம இருந்து வாங்க” என்று சொல்லி விட்டு கிளம்பினாள் ராணீ. அவள் போவதையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான் நடராஜன்.
அடுத்த நாள் கமலா வேலைக்கு வந்தாள்.கமலா ஆ·பீஸ் கிளமபிப் போனவுடன் ராணீ “நடந்தது நடந்துப் போச்சுங்க.நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேங்க.நான் இன்னும் ஒரு மாசம் தாங்க இங்கே வேலை செய்யப் போறேன், செய்ய முடியுங்க.இன்னும் ஒரு மாசம் போனா என் வயிறு தெரிய ஆரம்பிக்கும்.நம்ம அம்மா என்னே ‘என்ன ராணீ,உன் வயிறு கொஞ்ச முன்னே வந்து இருக்கு.நீ முழுவாம இருக்கியா’ ன்னு நிச்சியம் கேப்பாங்க.நான் அதுக்கு நான் என்ன பதில் சொல்வதுங்க அதனால் என் வயிறு தெரிய ஆரம்பிக்கும் போது நான் ‘எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.நான் ஊருக்குப் போய் என் அம்மாவைப் பாத்து விட்டு வரேனுங்க’ என்று சொல்லி விட்டு நான் திண்டி வனம் போய் விடப் போறேங்க.அங்கேயே இருந்து வந்து இந்த குழந்தையை பெத்துக் கிட்டு, இந்த குழந்தயை வளக்கப் போறேனுங்க.என் மீதி காலத்தே நான் சந்தோஷமா கழிச்சு வருவேணுங்க” என்று மூச்சு விடாமல் சொன்னாள் ராணீ.சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் தளும்பியது. ராணீ சொன்னதைக் கேட்டு நடராஜன் அசந்துப் போய் விட்டான்.மௌனமாக இருந்தான் அவன்.சிறிது நேரம் போனதும் “நீ அடுத்த மாசம் இந்த வேலையை விட்டு விட்டுப் ஊருக்குப் போனதும் நான் தவறாம உனக்கு உன் திண்டிவன அட்ரஸ்ஸ¤க்கு மாசா மாசம் ஆறு நூரு ரூபா மணி ஆர்டர் பண்ணறேன் ராணீ.நீ அதை மறுக்காம வாங்கிக்க.தயவு செஞ்சு மறுக்காதே ராணீ” என்று அவள் கையை பிடித்துக் கேட்டுக் கொண்டான் நடராஜன்.”சரிங்க நான் மறுக்காம அந்த பணத்தே வாங்கிக்கிறேனுங்க” என்று சொன்னாள் ராணீ நன்றி உணர்வோடு. ராணீயின் திண்டிவன அட்ரஸ்ஸை தன் ¨டா¢யில் எழுதிக் கொண்டான் நடராஜன்.
தினமும் மனதில் ஒரு சுமையோடும் வயித்தில் ஒரு சுமையோடும் வேலை செய்து வந்தாள் ராணீ.அவளை தனியாய் சந்திக்கும் போது “ஊருக்குப் போனா முதல் வேலையா ஒரு நல்ல டாகடர் கிட்டே உன் உடம்பைக் காட்டி ‘செக் அப்’ பண்ணிக்கோ ராணீ” என்று ஆதங்கத்துடன் சொன்னான் நடராஜன் “சரிங்க,நான் திண்டிவனம் போனதும் ஒரு நல்ல டாக்டர் கிட்டே என்னைக் காட்டி ‘செக் அப்’ பண்ணிக்கிறேங்க.நீங்க கவலைப் படாம இருந்து வாங்க” என்றாள் ராணீ சிரித்துக் கொண்டே. ஒரு நாள் வாரம் போனதும் ராணீ வீட்டுக்குப் போகும் போது நடராஜனிடம் “இனிமே நான் என் வயிறெ ம¨றைக்க முடியாதுங்க.இன்னிக்கே நம்ம அம்மா அடிக்கடி என் வயித்தையே பாத்துக் கிட்டு இருந்தாங்க. நாளைக்கு காலையில் நான் வந்து ஏதோ காரணம் சொல்லிட்டு திண்டிவன த்துக்குப் போய் விடப் போ¢றேங்க “ என்று சொல்லும் போதே ராணீ கண்ணில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.நடராஜன் கண்ணிலும் நீர் முட்டியது.
அடுத்த நாள் ராணீ வேலைக்கு வீட்டுக்குள்ளே வந்ததும் தயங்கியபடியே “அம்மா, ஊரிலேந்து எங்க சித்திக்கு தெரிஞ்சவங்க இங்கே வந்து இருக்காங்க.அவங்க ‘என் அம்மாவுக்கு உடம்பு ரொம்ப மோசமா இருக்குதுன்னு,சொல்லி என்னே என் அம்மா உடனே ஊருக்கு வரச் சொன்னாங்க’ ன்னு தகவல் சொன்னாங்க.நான் ஒரு நாலு நாளு என் ஊருக்குப் போய் என் அம்மாவைப் பார்த்து விட்டு வரேன்ம்மா.என் அம்மாவை டாக்டர் கிட்டே காட்டி மருந்து வாங்கிக் குடுத்து விட்டு ரெண்டு நாள் அவங்க கூட இருந்து விட்டு,அவங்க உடம்பு குணம் ஆனதும் நான் சீக்கிரமா மறுபடியும் இங்கே வேலைக்கு வரேம்மா” என்று சொன்னாள் ராணீ.“அப்படியா ராணீ,நீ ஊருக்குப் போய் உன் அம்மாவுக்கு மருந்தெல்லாம் வாங்கிக் குடுத்து விட்டு,அவங்க சுகம் ஆனதும்,நீ மறுபடியும் இங்கே வேலைக்கு வா ராணீ.இந்தா, உன் செலவுக்கு இந்த பணத்தை வச்சுக்க” என்று சொல்லி ராணீயிடம் முன்னூறு ரூபாய் கொடுத்தாள் கமலா.உடனே நடராஜன் ஹாலுக்கு வந்து “உங்க அம்மா உடம்பு நல்லா ஆனதும் சீக்கிரமா இங்கே வந்திடு ராணீ” என்று சொன்னான். கமலாவிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு “சரிங்க நான் போயிட்டு வரேணுங்க.நான் எவ்வளவு சீக்கிரமா வர முடியுமோ அவ்வளவு சீக்கிரமா வேலைக்கு வரேணுங்க” என்று கமலாவிடம் சொல்லி விட்டு நடராஜ னுடன் கண்ணாலேயே ‘இது தாங்க நாம கடைசியா ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிறதுங்க.நான் போய் வரேனுங்க. நீங்க நல்லா இருக்கணுங்க’ என்று மனதில் சொல்லிக் கொண்டு வீட்டு வேலைகளை எல்லாம் வேகமாக செய்து முடித்தாள் ராணீ.வேலைகள் எல்லாம் செய்து முடித்தவுடன் ”நான் போய் வரேணுங்க” என்று சொல்லி விட்டு அவர்கள் இருவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள் ராணீ.மனதுக்குள் அழுதான் நடராஜன்.‘ராணீ கிளம்பிப் போனதும் ”ரொம்ப நல்ல பொண்ணுங்க அந்த ராணீ.மூஞ்சே சிணுங்காமே நான் சொன்ன வேலை எல்லாம் செஞ்சி வந்தா.நான் சொல்லாத வேலை எல்லாமும் செஞ்சி வந்தா அவ.நான் குடுத்த கம்மி சம்பளத்துக்கு வேறு எந்த வேலைக்காரியும் இவ்வளவு வேலைங்களே செய்ய மாட்டாங்க.இப்போ அவ ஊருக்குப் போய் வர வரைக்கும் என் பாடு தாங்க கஷ்டம்.நீங்களும் மதியம் சாப்பாட்டுக்கு கஷ்டப் படுவீங்க” என்று சொல்லி வருத்தப் பட்டாள் கமலா.“ஆமாம் கமலா ,ராணீ மிகவும் நல்ல பொண்ணு தான்” என்று மொட்டயாக சொன்னான்.
கீழே வந்த ராணீ அந்த ‘·ப்ளாட்டை’ மேலே உத்து உத்துப் பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.‘இந்த ·ப்ளாட்டில் வேலை,இந்த சம்பளம்,இந்த சென்னை வாழ்க்கை,இவை எல்லாவற்றையும் நாம் நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டும் என்று எவ்வளவு ஆசைப் பட்டோம்.இந்த எட்டு மாசத்தில் எல்லாம் பறிபோய்,நாம் மறுபடியும் அந்த திண்டிவன வாழ்க்கைக்கே போக வேணும்ன்னு அடிடுச்சே.இந்த குழந்தையை நான் பெத்துக் கிட்டு, மறுபடியும் இந்த சென்னை வாழ்க்கையை அடைஞ்சே தீரப் போறேன்..அந்த திண்டிவன வாழக்கை எனக்கு இந்த குழந்தை பொற வரைக்கும் தான்” என்று ராணீ தன் மனதில் ஒரு சபதம் எடுத்துக் கொண்டாள்.அந்த ‘·ப்ளாட்டின்’ கீழே இருந்து ஒரு சிட்டிகை மண்ணை கையில் எடுத்தாள்.‘நான் என் குழந்தை பொறந்ததும்,மறுபடியும் சென்னைக்கு வந்து இந்த மாதிரி ஒரு ‘·ப்ளாட்டுக்கு’ வேலைக்கு நிச்சியமாக வருவேன்.வந்து இப்போது சம்பாதிச்சது போல மறுபடியும் சம்பாதிப்பேன்.இந்த சென்னை வாழ்க்கையை மறுபடியும் நான் அனுபவிப்பேன். இது சத்தியம்’ என்று சொல்லி அந்த மண்ணை கோபமாகக் காற்றில் ஊதினாள் ராணீ
போன் மணி அடிக்கவே போனை எடுத்து கமலா பேசினாள்.“கமலா, நான் தான்ம்மா உன் அம்மா பேசறேன்.நீங்க ரெண்டு பேரும் சௌக்கியமா இருக்கீங்களா.நீ உடம்பு ஒன்னும் இல்லாமல் இருந்து வரயா” என்று சொல்லி சரோஜா போனில் அவர்களின் நலத்தை விசாரித்தாள்.“நாங்க சௌக்கியமா இருக்கோம்மா.வேலைக்காரி பொண்ணு ராணீ அவ அம்மா உடம்பு சுகமில்லைன்னு சொல்லிட்டு இன்னிக்கி திடீரென்று ஊருக்குக் கிளம்பிப் போயிட்டா.பாவம் அவர் தான் பகல் சாப்பாடு ஹோட்டலில் சாப்பிட வேண்டியதா இருக்கு.நான் சீக்கிரமாக இன்னொரு வேலைக்காரி ஏற்பாடு பண்ணி அவளை சமைக்கச் சொல்லணும்.அது வரைக்கும் அவருக்கு ஹோட்டல் சாப்பாடு தான் சாப்பிட்டு வரணும்” என்று கமலா சொல்லி முடிப்பதற்குள் “கமலா,நானும் அப்பாவும் இங்கே சும்மா தான் இருந்து வரோம்.நீ இன்னொரு வேலைக்காரி கிடைச்சு வேலைக்கு வச்சுக்கற வரைக்கும் நான் அங்கே வந்து மாப்பிள்ளைக்கு சமையல் செஞ்சு போடறேன்.அவருக்கு ஹோட்டல் சாப்பாடு வேண்டாம்மா. அவர் உடம்பு கெட்டுப் போகும்” என்று சொன்னாள் சரோஜா.“சரிம்மா,நீ வந்தா எனக்கும் ரொம்ப சௌகரியமா இருக்கும்.வேறே வேலைக்காரி கிடைக்கிற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்து இருங்க” என்று சொல்லி போனை வைத்து விட்டாள் கமலா.
அடுத்த நாள் ராணீ வேலைக்கு வீட்டுக்குள்ளே வந்ததும் தயங்கியபடியே “அம்மா, ஊரிலேந்து எங்க சித்திக்கு தெரிஞ்சவங்க இங்கே வந்து இருக்காங்க.அவங்க ‘என் அம்மாவுக்கு உடம்பு ரொம்ப மோசமா இருக்குதுன்னு,சொல்லி என்னே என் அம்மா உடனே ஊருக்கு வரச் சொன்னாங்க’ ன்னு தகவல் சொன்னாங்க.நான் ஒரு நாலு நாளு என் ஊருக்குப் போய் என் அம்மாவைப் பார்த்து விட்டு வரேன்ம்மா.என் அம்மாவை டாக்டர் கிட்டே காட்டி மருந்து வாங்கிக் குடுத்து விட்டு ரெண்டு நாள் அவங்க கூட இருந்து விட்டு,அவங்க உடம்பு குணம் ஆனதும் நான் சீக்கிரமா மறுபடியும் இங்கே வேலைக்கு வரேம்மா” என்று சொன்னாள் ராணீ.“அப்படியா ராணீ,நீ ஊருக்குப் போய் உன் அம்மாவுக்கு மருந்தெல்லாம் வாங்கிக் குடுத்து விட்டு,அவங்க சுகம் ஆனதும்,நீ மறுபடியும் இங்கே வேலைக்கு வா ராணீ.இந்தா, உன் செலவுக்கு இந்த பணத்தை வச்சுக்க” என்று சொல்லி ராணீயிடம் முன்னூறு ரூபாய் கொடுத்தாள் கமலா.உடனே நடராஜன் ஹாலுக்கு வந்து “உங்க அம்மா உடம்பு நல்லா ஆனதும் சீக்கிரமா இங்கே வேலைக்கு வந்திடு ராணீ” என்று சொன்னான். கமலாவிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு “சரிங்க நான் போயிட்டு வரேணுங்க.நான் எவ்வளவு சீக்கிரமா வர முடியுமோ அவ்வளவு சீக்கிரமா வேலைக்கு வரேணுங்க” என்று கமலாவிடம் சொல்லி விட்டு நடராஜனுடன் கண்ணாலேயே ‘இது தாங்க நாம கடைசியா ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிறதுங்க.நான் போய் வரேனுங்க. நீங்க நல்லா இருக்கணுங்க’ என்று மனதில் சொல்லிக் கொண்டு வீட்டு வேலைகளை எல்லாம் வேகமாக செய்து முடித்தாள் ராணீ.வேலைகள் எல்லாம் செய்து முடித்தவுடன் ”நான் போய் வரேணுங்க” என்று சொல்லி விட்டு அவர்கள் இருவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள் ராணீ.மனதுக்குள் அழுதான் நடராஜன்.‘ராணீ கிளம்பிப் போனதும் ”ரொம்ப நல்ல பொண்ணுங்க அந்த ராணீ.மூஞ்சே சிணுங்காமே நான் சொன்ன வேலை எல்லாம் செஞ்சி வந்தா.நான் சொல்லாத வேலை எல்லாமும் செஞ்சி வந்தா அவ.நான் குடுத்த கம்மி சம்பளத்துக்கு வேறு எந்த வேலைக்காரியும் இவ்வளவு வேலைங்களே செய்ய மாட்டாங்க.இப்போ அவ ஊருக்குப் போய் வர வரைக்கும் என் பாடு தாங்க கஷ்டம்.நீங்களும் மதியம் சாப்பாட்டுக்கு கஷ்டப் படுவீங்க” என்று சொல்லி வருத்தப் பட்டாள் கமலா.“ஆமாம் கமலா,,ராணீ மிகவும் நல்ல பொண்ணு தான்” என்று மொட்டயாக சொன்னான்.
கீழே வந்த ராணீ அந்த ‘·ப்ளாட்டை’ மேலே உத்து உத்துப் பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.‘இந்த ·ப்ளாட்டில் வேலை,இந்த சம்பளம்,இந்த சென்னை வாழ்க்கை,இவை எல்லாவற்றையும் நாம் நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டும் என்று எவ்வளவு ஆசைப் பட்டோம்.இந்த எட்டு மாசத்தில் எல்லாம் பறிபோய்,நாம் மறுபடியும் அந்த திண்டிவன வாழ்க்கைக்கே போக வேணும்ன்னு அடிடுச்சே.இந்த குழந்தையை நான் பெத்துக் கிட்டு, மறுபடியும் இந்த சென்னை வாழ்க்கையை அடைஞ்சே தீரப் போறேன்..அந்த திண்டிவன வாழக்கை எனக்கு இந்த குழந்தை பொற வரைக்கும் தான்” என்று ராணீ தன் மனதில் ஒரு சபதம் எடுத்துக் கொண்டாள்.அந்த ‘·ப்ளாட்டின்’ கீழே இருந்து ஒரு சிட்டிகை மண்ணை கையில் எடுத்தாள்.‘நான் என் குழந்தை பொறந்ததும்,மறுபடியும் சென்னை க்கு வந்து இந்த மாதிரி ஒரு ‘·ப்ளாட்டுக்கு’ வேலைக்கு நிச்சியமாக வருவேன்.வந்து இப்போது சம்பாதிச்சது போல மறுபடியும் சம்பாதிப்பேன்.இந்த சென்னை வாழ்க்கையை மறுபடியும் நான் அனுபவிப்பேன். இது சத்தியம்’ என்று சொல்லி அந்த மண்ணை கோபமாகக் காற்றில் ஊதினாள் ராணீ
போன் மணி அடிக்கவே போனை எடுத்து கமலா பேசினாள்.“கமலா, நான் தான்ம்மா உன் அம்மா பேசறேன்.நீங்க ரெண்டு பேரும் சௌக்கியமா இருக்கீங்களா.நீ உடம்பு ஒன்னும் இல்லாமல் இருந்து வரயா” என்று சொல்லி சரோஜா போனில் அவர்களின் நலத்தை விசாரித்தாள்.“நாங்க சௌக்கியமா இருக்கோம்மா.வேலைக்காரி பொண்ணு ராணீ அவ அம்மா உடம்பு சுகமில்லைன்னு சொல்லிட்டு இன்னிக்கி திடீரென்று ஊருக்குக் கிளம்பிப் போயிட்டா.பாவம் அவர் தான் பகல் சாப்பாடு ஹோட்டலில் சாப்பிட வேண்டியதா இருக்கு.நான் சீக்கிரமாக இன்னொரு வேலைக்காரி ஏற்பாடு பண்ணி அவளை சமைக்கச் சொல்லணும்.அது வரைக்கும் அவருக்கு ஹோட்டல் சாப்பாடு தான் சாப்பிட்டு வரணும்” என்று கமலா சொல்லி முடிப்பதற்குள் “கமலா,நானும் அப்பாவும் இங்கே சும்மா தான் இருந்து வரோம்.நீ இன்னொரு வேலைக்காரி கிடைச்சு வேலைக்கு வச்சுக்கற வரைக்கும் நான் அங்கே வந்து மாப்பிள்ளைக்கு சமையல் செஞ்சு போடறேன்.அவருக்கு ஹோட்டல் சாப்பாடு வேண்டாம்மா. அவர் உடம்பு கெட்டுப் போகும்” என்று சொன்னாள் சரோஜா.“சரிம்மா,நீ வந்தா எனக்கும் ரொம்ப சௌகரியமா இருக்கும்.வேறே வேலைக்காரி கிடைக்கிற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்து இருங்க” என்று சொல்லி போனை வைத்து விட்டாள் கமலா.
வீட்டுக்கு வரும் வழியில் இருந்த ஒரு கடையில் ஒரு தாலிக் கயிற்றை வாங்கினாள்.வீட்டுக்கு வந்து அந்த தாலி சரட்டை நல்லா தண்ணியிலே கொஞ்சம் நேரம் தேய்த்து அலம்பி அதை கொஞ்சம் பழையது போல் ஆக்கி வெய்யிலில் காய வைத்தாள்.காய்ந்ததும் அந்த தாலி சரட்டில் தான் வாங்கி வந்த ‘கில்ட் தாலியை’ கோத்து முடித்தாள். பிறகு தன் பையில் அதை மறைத்து வைத்துக் கொண்டாள்.சித்தி வீட்டுக்கு வந்ததும் “சித்தி, நான் உங்களிடம் ஒன்னு சொல்லப் போறேன்.நீங்கப் பதட்டப் படாதீங்க. கொஞ்சம் பொறுமையா கேளுங்க.நான் இப்போ ஐஞ்சு மாசமா முழுகாவ இருக்கேன். .நான் திண்டிவனம் போய் என் அம்மா கூட இருந்துக் கிட்டு இந்த குழந்தை யைப் பெத்துக்கப் போறேன்.நீங்க இவ்வளவு மாசமா எனக்கு சோறு போட்டு,இருக்க இடம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சித்தி” என்றாள் ராணீ.”என்னடி இது புதிசா இருக்கு நீ சொல்றது.நீ கல்யாணம் ஆகாதவ.நீ என்ன பொண்ணுடீ.எனக்கு ஒன்னுமே புரியலேயேடீ நீ பேசறது ராணீ” என்று மறுபடியும் கோவத்தோடு கேட்டாள் ஜோதி. “இதுக்கு மேலே என்னை ஒண்ணும் கேக்காதீங்க சித்தி” என்று தீர்மாமனாமக சொல்லி விட்டாள் ராணீ. கொஞ்ச நேரம் ஆனதும் ” ராணீ,முத்தம்மா கேட்டா நீ என்ன சொல்வே” என்று கேட்டாள் ஜோதி.“நான் அங்கே போய் நிதானமா அம்மா கிட்டே சொல்லி புரிய வக்கிறேன் சித்தி” என்று ராணீ சொன்னாள்.”இந்த சமயம் பார்த்து வாசலில் விளையாடிக் கொண்டு இருந்த பக்கத்து வீட்டுப் பையன் மீது ‘ஸ்கூட்டா¢ல்’ வேகமாகப் போன ஒரு ஆள் கீழே தள்ளி விட்டுப் போய் விட்டான்.கீழே விழுந்த பையனுக்கு உடம்பு பூராவும் பலத்த அடி.உடனே ஜோதி தன் வீட்டுக்குள்ளே வந்து “ராணீ நான் பக்கத்து வீட்டு பையனை ஆஸ்பத்திரிக்கு எடுத்து கிட்டுப் போறேன்” என்று சொல்லி விட்டு பககத்து வீட்டு அம்மாவுடன் ஆஸ்பத்திரிக்கு ஓடினாள் ஜோதி.இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டாள் ராணீ.தன் துணி மணிகளை எல்லாம் ஒரு பாக்கில் போட்டு எடுத்துக் கொண்டாள் ராணீ.ஒரு காகிதத்தில் ”சித்தி நான் திண்டிவனம் கிளம்பிப் போறன்” என்று எழுதி அதை மேஜையின் மேல் வைத்து விட்டு,வீட்டை நன்றாக பூட்டி சாவியை எதிர் வீடு அம்மா கிட்டே கொடுத்து விட்டு “அக்கா,என் சித்தி அடிபட்ட பையனை எடுத்துக் கிட்டு பக்கத்து வீட்டு அம்மா வோட ஆஸ்பத்திரிக்குப் போய் இருக்காங்க.அவங்க ஆஸ்பத்திரியில் இருந்து வந்தவுடன் தயவு செஞ்சி இந்த வீட்டு சாவியை அவங்க கிட்டே கொடுத்திடுங்க.ரொம்ப ‘தாங்க்ஸ்ங்க’” என்று பதட்டத்துடன் சொன்னாள் ராணீ.பிறகு ஒரு ஆட்டோ பிடித்து கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்தாள் ராணீ.அங்கு வந்து திண்டிவனம் போற பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாள் ராணீ.ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்த ஜோதியிடம் எதிர் வீட்டு அக்கா சாவியைக் கொடுத்து ராணீ சொன்னதைச் சொன்னாள்.சாவியை வாங்கிக் கொண்டு பூட்டைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள் ஜோதி. கடிதத்தை பிரித்து படித்தாள் ஜோதி.கடிதத்தை கையில் வைத்துக் கொண்டு நெடு நேரம் யோஜனை பண்ணினாள் ஜோதி.ராணீ வாழ்க்கை இப்படி அநியாயமா ஆகி விட்டதே என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டாள் ஜோதி.
– தொடரும்