தனது பதினைந்து வயதில் ஊரை விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டான் அருள். இருப்பதியோரவது வயதில் தனது நண்பனை காண மீண்டும் அவவூருக்கு செல்கிறான்.
அப்படியாக பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் போது பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து மஞ்சப்பையை வீசி விட்டு நண்பனுடன் விளையாட சென்றது. தினமும் அம்மா கொடுக்கும் இரண்டு ரூபாவை அனைவரும் தீனி வாங்கி சாப்பிடும் போது அவன் மட்டும் சாப்பிடாமல் பத்திரமாக வைத்து மாலை அரைமணி நேரம் 1ம் நம்பர் சைக்கிள் எடுத்து தெருவை சுற்றியது.
அருள் என்று தெரிந்ததை விட இந்த சைக்கிளில் பறப்பானே அவன் தான என்று தெருவில் பேமஸ் ஆகியது. கிரிக்கெட் விளையாடி எதிர் வீட்டு கண்ணாடியை உடைத்தது. நடைசாத்திய பின் கோவில் இரும்பு கேட்டில் ஏறி குதித்து மாங்காய் திருடியது.
விடுமுறை நாளில் காலை விளையாட சென்று மாலை வீடு திரும்பியது. காக்க மாறி இருக்க என்று அம்மா திட்டியது. கொட்டும் மழையில் ஐஸ்கட்டிரஸ்னா வாங்கி குடித்தது, மறுநாள் காய்ச்சலில் விழுந்தது. நாய்க்குட்டி வளர்க்க ஆசைப்பட்டு எடுத்து வந்து அம்மா திட்டி இரண்டே நாளில் கொண்டு போய் விட்டு வந்தது.
ஹிந்தி டியூஷன் சேர்ந்து பாதியில் ஓடி வந்தது. சொந்தமாக சைக்கிள் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டது. இரவு நிலாவை பார்த்து கொண்டே சோறு சாப்பிட்டது. என்னை பார்த்து அக்கம் பக்கம் வீட்டினரும் நிலாவை ரசிக்க வந்தது.
மொட்டைமாடியில் கதை பேசிக்கொண்டே உறங்கியது. பரீட்சை விடுமுறை வந்தால் எனது பாட்டி வீட்டில் அனைவரும் கூடி விடுமுறையை கழித்தது. என்று தனது சிறு வயது சேட்டைகளை எண்ணி கொண்டு இருக்கிறான்.
என்னதான் போனை பார்த்து கொண்டு சாப்பிட்டாலும் அந்த நிலா சோற்றுக்கு இணையில்லை. விடுமுறை என்றால் அவரவர் குடும்பம் மட்டும் தனியாக ஊரை சுற்ற கிளம்பினாலும் அந்த பாட்டி வீட்டில் கிடைக்கும் சந்தோசம் கிடைப்பதில்லை. போலியாக நடித்து கொண்டு இருக்கிறோம் என நினைத்துக் கொண்டே நிஜமான சந்தோசத்தை தேடி தன் ஊரை நோக்கி செல்கிறான் அருள்…