குட்டி மேஜிக்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 7,593 
 

“இந்த ஓரப்பார்வை எதுக்கு…”

“என்னமோ என்னோட கண்ணு ஒன்றக்கண்ணா மாறிட்டு வருது. நிரந்தரமா ஓரப் பார்வை வந்துருமோ…”

“ஓரப்பார்வைதா கிளுகிளுப்புக்கு உகந்தது.”

“அங்கதா கிளுகிளுப்பு ஆரம்பம்.”

“உதட்டுலே ஏதாச்சும் ஒரு சொல் சொல்லப்படாம தொக்கி நிற்கும் அப்புறம்…”

“மன்மத லீலையை வென்றார் உண்டா…”

“இந்த சினிமாக்காரங்க ஹிரோயின்க எல்லாம் கல்யாணம் பண்ணின ஆம்பளைக எதுக்கு தேடித் தேடித் கல்யாணம் பண்ணிக்கறாங்க.”

“சின்ன வயசுப் பையன்களை விட முதிர்ந்த ஆண் தர்ர நீடித்த இன்பம்தா. சின்ன வயசுன்னா பொசுக்குன்னு கூடப் போயிரும். முத்துன முருங்கைக்காய்க்கு வெறப்பு அதிகம்.”

“நான் இப்போ வீசறது தாமரை… உடம்பில பட்டிருச்சா… இப்போ அசோகமரப்பூக்கள் உதடுகள் மேல சரியா வுழுந்திருக்கு. முல்லை கண்கள் மேல விழுது. அப்புறம் இப்போ வீசறது மாமரப்பூ. தலையில வுழுகுது. அப்புறம் குவளை மலர்கள் நாபிக்கமலத்திலெ… இப்போ உடம்பு உன்மத்தம் ஏறிருச்சா…”

“தவிக்குது உடம்பு…”

“வில்லுக்கு பலியாயிருச்சு உடம்பு. கரும்பு வில்லுக்கு…”

“கரும்பு வில்லு வேண்டா… முருங்கைக்காய்…”

“காமதகனம்.”

“தகனமாகறது காமமா?”

“காமம் எப்பிடி தகனமாகும்… பீனிக்ஸ் மாதிரி மறுபடியும் மறுபடியும் எந்திரிச்சுகிட்டே இருக்கும்.”

“எங்காதை வுட்டுறு. எதுக்கு இந்தக் கடி கடிக்கிறே…”

“காது நூபிக்கமலம் மாதிரி உன்மத்தம் கிளம்புற எடம்.”

“கொஞ்சம் நாக்காலை துழாவி கொஞ்சம் உஷ்ஷ்ன்னு காத்தை உட்டா போதும். ஒடம்பு நிலை குலஞ்சு ஆடுமே.”

“அதுக்குதா என் காதெ ரொம்பவும் அக்கறையோட குளிக்கறப்போ, உடம்பை துவட்டறப்போ கவனிக்கிறியா.”

“காது என்னமோ கறுத்துக் கெடக்குதுன்னு காதுக்குள்ள பேர் அண்ட் லவ்லி போடறதென்ன… தொடைக்கறதென்ன. அப்புறம் பட்ஸ் வேற. காதுக்கு கவனிப்பு தனிதா…”

“ஒடம்பைத் தளர்த்தறமா… இறுக்கறமா”

“தளர்த்தி இறுக்கறம்.”

“உடம்பு சொன்ன பேச்சு கேக்க மாட்டீங்குது.”

“கேக்காது திமிறி அடங்கி ஓயற வரைக்கும். காமதகனம் முடியறவரைக்கும்…”

“காமம் தகனமாகாது. நேரமும், ஒடம்போட தெனவும்தா பஸ்பமாகும்…”

“இது எது வரைக்கும்.”

“கடைசி சொட்டு இருக்கறவரைக்கும். மனசு ஆரோக்யமா இருக்கற வரைக்கும்.”

அன்றைக்கு பேருந்தைவிட்டு இறங்கியபோது பழங்களை வாங்கி நிரப்பிக் கொண்டான்.

“என்ன மா பலா வாழைன்னு… முக்கனி…”

“ஆமா முக்கனிக. என்னவோ எதேச்சையாத்தா…”

“பழங்களோட புருஷன் வருவார். புடிக்கும் அது…”

“அந்த ஆளப் பத்தி இப்போ என்ன”

“தொடச்செறிஞ்சிற முடியுமா அது…”

“அதுக்காக இம்சைப் படுத்தறதுக்குன்னு.”

“சாரி…”

“இன்னிக்கு வேலைக்கு போகலையா…”

“அஞ்சு நாள் கழிச்சு வந்திருக்கீங்க… கவனிக்க வேண்டாமா…”

“நான் வேலைக்கு போலாம்ன்னுதா வந்தன். ரொம்பவும் டயர்டா இருக்கு. ரெஸ்ட் எடுக்கலாமுன்னு தோணுது…”

“எனக்குந்தா…”

“அப்புறம் சம்பளம் கட்…”

“ஆமா பெரிய சம்பளம்… வேலைக்கு போனா சம்பளம். இல்லீன்னா கட். தினக் கூலி மாதிரி. கொத்தடிமை…”

“ஆனா சம்பளமும் முக்ய மில்லையா…”

“பத்தாம் கிளாஸ் படிச்சது. இதுக்கு எவன் அள்ளிக்குடுப்பான். இதுக்கு மேல தாண்டாதுன்னு ஆயிப் போயிருச்சு. நாயிப் பொழப்பு. நக்கி நக்கி குடிக்க வேண்டியிருக்கு.”

“வேற வேலைக்கு பாக்கறது…”

“செய்யாத வேலையா… ஒவ்வொரு எடமா மாத்தி மாத்தி. ஒரு எடத்தில பாரம் அதிகமாகுன்னு இன்னொரு எடத்துக்கு போறது ரிலாக்சேசன் மாதிரி ஆயிப் போச்சு…”

“அப்போ இன்னிக்கு ரிலாக்சேசன்தா…”

“ரிலாக்ஸாடா இருப்போம்…”

கதவு ஜன்னல்களை மூட காற்று இல்லாதது போல இறுக்கமாகி விட்டது. உடம்பு வியர்த்து களைத்து விழுந்தார்கள்.

“ஒண்ணு சொல்லணும். பக்கத்தில இருக்கறவங்க பார்வை கொடுமை. அஞ்சு நாள் நீங்க இல்லெ… பார்க்கற பார்வையும், கேட்கற கேள்வியும் உடம்பு கூசுது. அஞ்சு நாளா வூட்டுக்காரர் இல்லே. இனி திரும்பி விடுவாரா. காணாமப் போயிட்டாரா. வருவாரா வருவாரான்னு திரும்பத் திரும்ப கேக்கறாங்க. சொந்தக்காரர் எழவுன்னா நீயும் போக வேண்டியதுதானே. உனக்கு சொந்தமில்லையா. ஒண்ணும் வுட்டுட்டு ஓடிப் போயிர்லியேன்னு கேள்வி வேற கொடுமை. அதுவும் நாப்பெத்தெட்டு மணி நேர பந்த்துன்னு சாயப்பட்டறை பிரச்னைக்காக. வெளியில போக முடியலே. பஸ் எதுவும் ஓடலே… எங்க போறது போனா ஹாஸ்டலுக்குத்தா போகணும். பிரன்ட்ஸைப் பாக்கலாம். வேற என்ன பண்றது. பஸ் இல்லே. வீட்லெ மொடங்கிக் கெடந்தன். நேத்து சாயந்திரம் பொழுது போகலின்னு சௌண்டியம்மன் கோவில் போனன். நாலஞ்சு பொம்பளைக சுத்தி வளச்ச மாதிரி பேச ஆரம்பிச்சாங்க. என்ன ஜாதி. அவங்கதா இங்க வருவாங்கன்னு. நானும் கன்னடம் பேசறவன்னு பேசுனன். அப்புறம் ஒரு பொம்பள சர்வசாதாரணமா நீ அந்த ஜாதியான்னா டக்குன்னு கேட்டுட்டா. நான் சொந்தம் கொண்டாடறதுக்கு அங்க போகலே. பொழுது போகலைன்னு போனன். சங்கடமாப் போச்சு…”

“ஆமா ஜாதித் திமிர் உனக்கு இருக்கறதை கவனிச்சிருக்கன்…”

“கன்னடம் பேசுனாலும் தெலுங்கு பேசினாலும் ஜாதி ஜாதிதா ”

“வீண் பெருமை…”

“பெருமை எங்க ஜாதிக்கு எப்பவும் உண்டு…”

“அன்னிக்கொருநாள் இந்த ஊர் தொழில் ஒத்துமைக்கு காரணம் அவங்கதா. நசிவுக்கும் காரணம் அவங்கதா… ஜாதி ஆதிக்கம் ஒழியணும்ன்னு சாதாரணமா பேசிகிட்டிருந்தன். எங்க ஜாதி பத்தி மட்டமா பேசுனா மரியாதை போயிரும்ன்னே. உங்க ஜாதிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.

“எதுவாயிருந்தாலும் ஜாதிதா …”

“பொல்லாத ஜாதி இவனுக உங்களை ஜாதிதா மதிக்க மாட்டாங்க. பேரை வெச்சுட்டு என்ன பண்றது”

“பேர்லதா எல்லாம்… இருக்கும்.”

“அந்த ஜாதிப் பேரு ஒரு புண்ணாக்கும் போடாது.”

“போடும்”

“ஒரு கை சாணியும் போடாது…”

“போடும்…”

“செரி எதுக்கு இது ஜாதியா சோறு போடப் போகுது.”

“போடும்…”

“இது வேண்டா வுட்டுரு…”

“உட முடியாது. உடம்பில ரத்தத்தில ஊறுனது.”

“செரி அப்புறம் கோயில்ல என்ன நடந்துச்சு. அது அவங்க கோவில். வேற கோயில் இருக்கறதை கண்டுபுடிக்க வேண்டியதுதானே!”

“ஊர் பூராவும் அவங்க கோயில்தா…”

“செரி செரி… சொந்தம் கொண்டாடு…”

“கொண்டாடுவம்…”

“இப்போ சாயப்பட்டறை பிரச்னை பெரிசாகுது. உள்ளூர்ல எல்லாம் சாயப்பட்டறைச் மூடியிருக்க நாமக்கல், சேலம், பெங்களூர்ன்னு சாயம் போட போயிட்டிருக்காங்க. பேச்சு வார்த்தையாப்போ இதுக்கு எதிரா இருக்கற விவசாயிக கிட்ட பனியன் கம்பனிக்காரங்க சொன்னாங்களாம். நாம எல்லாரும் ஒண்ணு. சாதி ஒண்ணு எதுக்கு பெரிசாக்கிட்டு சுமூகமா போயிர்லாமுன்னு…”

“போயிர்லாம்”

“என்னதா இருந்தாலும் பணக்காரன் ஒரு தனி ஜாதிதானே!”

“நாம இப்போ தனி ஜாதி”

“என்ன ஜாதி…”

“படுத்திட்டே இருக்கற ஜாதி.”

“பகல்லியும் படுத்துக் கெடக்கற ஜாதி.”

“பக்கத்தில் இருக்கறவங்க பகல்லே என்ன சாத்திட்டுன்னு கிண்டல் அடிக்கறாளுக. பகல்லே எடம் மாற்றப்போ தனியா இருக்கற வூடா பாக்கணும்…”

“நாம குடுக்கற வாடகைக்கு இந்த மாதிரி ஒத்தை டாப்பு வீடுதா கெடைக்கும்.”

“முன்னேறவே முடியாது…”

“நீயே பத்தாம் வகுப்பு படிப்புக்கு என்னமா அள்ளியா குடுக்கப் போறான்னு சொன்னே. நான் கட்டிங் மாஸ்டர். தினக் கூலி இதுக்கு மேல சம்பாதிக்க முடியுமா?

“மேஜிக் ஏதாச்சும் நட்க்கணும்.”

“உடனே ரெண்டு மேஜிக் நடந்தாகணும்.”

“என்ன…”

“ஒண்ணு… சாயப்பட்டறை பிரச்னை முடியணும். ரெண்டு விவாகரத்துக்கு வழி கிடைக்கணும்…”

“வீடு மாத்திட்டு எங்காச்சும் போறது கூட சின்ன மேஜிக்தா…”

“போன தரம் ஷெரீப் காலனில ஒரு வீடு பாத்தம் அன்னிக்கு காதலர் தினம். காலியா கெடந்த வீட்டுக்குள்ள போயி பாத்துட்டு இருட்ல முத்தம் குடுத்துட்டம். என்னமோ ஞாபகத்தில கர்சீப்பும், சுவீட் பாக்சும் குடுத்தன். சட்டுன்னு வாங்குவதை திருப்பி குடுத்துட்டு ஒண்ணும் பேசலே மறுபடியும் நான் திருப்பிக் குடுத்தப்போ சுவீட் பாக்ஸ் வாங்குனே.”

“அதுதா அப்புறம் சொன்னன்… கர்சீப் குடுத்தா வாங்குனா உறவு நீடிக்காதுன்னு…”

“நான் ஆபீசுக்குப் போறப்போ சில சமயம் சட்டை போண்ட் மாட்டிட்டு கர்சீப் காணம்ன்னு கேட்டிருக்கன். எடுத்துக் குடுத்திருக்கே.”

“அய்யய்யோ… அப்பிடியா. நானும் அவசரக் கோலத்தில நடந்திட்டிருப்பன்.”

“உறவு வுட்டுப் போயிரும்…”

“எப்பிடி வுடும். எவ்வளவோ பிரச்னைகளை பாக்க வேண்டியிருக்கு.”

“எவ்வளவோ மேஜிக் நடக்க வேண்டியிருக்கு.”

“மேஜிக் நடக்கலீன்னா கஷ்டந்தா…”

“செரி… இப்போ ஒரு குட்டி மேஜிக்கு தயாராவோம்…”

அவன் உடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமானான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *