பாட்டிமார்கள் அனேகமாக பழமையில் ஊறினவர்கள். என் அம்மாவின் தாய் கண்மணியை சுருக்கி “கிறனி கண்மணி” என்றே ஊரில் பலர் அழைப்பார்கள். கிறனி (Granny) என்ற ஆங்கில வார்த்தை பாட்டியைக் குறிக்கும் அவளுக்கும் அது பிடிக்கும். நான் ஆரம்பத்தில் கொழும்பில் அவள் இருக்கும் பொது கண்மணி பாட்டியை அம்மம்மா என்று சொன்னது அவளுக்கு பிடிக்கவில்லை
“ எடேய் சுந்தரம் அப்படி என்னைக் கூப்பிடாதே இங்கை கொழும்பிலை கிறனி என்று தான் எல்லோரும் என்னை கூப்புடுவினம். ஊரோடு நீ ஒத்து போக வேண்டும். அவர்கள் என்னை கூப்பிடுவது போல் நீயும் என்னை கிறனி கண்மணி என்றே கூப்பிடு. உன் அப்பாவின் அம்மாவை அப்பம்மா என்று கூப்பிடு. இருவரையும் பாட்டி என்று கூப்பிடாதே”: என்று எனக்கு கட்டளை இட்டாள்.. அவள் விருப்பப்படியே அன்று முதல் அவளை கிறனி கண்மணி என்றே அழைக்க தொடங்கினேன்
கிறனி கண்மணி பாட்டி பிறந்தது 1933 ஆம் ஆண்டு ஜனவரி முப்பதில். அன்று தான் ஹிட்லர் ஜெர்மனிநாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். அதை பெருமையாக அவள் பேசுவாள். இப்போது அவளுக்கு வயது எண்பத்தி நான்கை (84) தாண்டி விட்டது அவளின் கணவர் ராஜேந்திரன் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் போலீசில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் . அவரின் மேலதிகாரி ஜான் ஹட்சன் என்பவர் பறங்கி இனத்தவர் .கதையை தொடரமுன் இலங்கை பறங்கியர் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வேண்டும். இலங்கை பறங்கியர் இந்தியாவின் அங்கிலோ இந்தியர் (Anglo Indians) போன்றவர்கள்
***
இலங்கையின் மக்கள்தொகையின் 0.30 விகிதம் பறங்கியர்கள் எனப்படும் சிறுபான்மையினத்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர், ஆங்கிலமும் சிங்களமும் பேசுபவர்கள். புகையிரத திணைக்களத்தில் புகையிரதம் ஓட்டும் சாரதிகளாகவும், போலீசிலும் பல பறங்கியர் ஒரு காலத்தில் வேலை செய்தனர்.
ஸ்ரீலங்காவில் “பறங்கியர் கோட்டைக்குப் போன மாதிரி” என்று பேச்சு வாக்கில் சொல்லும் சிங்கள வசனம் பிரபல்யமானது. அதன் அர்த்தம் “சுற்றி வளைத்து பேசாதே நேரடியாக விஷயத்துக்கு வா” என்பதாகும். போர்ததுக்கேயர் கொழும்பு துறைமுகத்தில் வந்தறங்கிய போது, அவர்கள் ரொட்டி சாப்பிடுவiதுயும் வைன் குடிப்பதையும் கண்டு உள்ளுர் வாசிகள் வியந்தனர். இதென்ன வெள்ளை நிறக்கல்லைத் தின்று இரத்தத்தைக் குடிக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டு பேசிக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் தங்கள் சூழ்ச்சியால் இலங்கையின் பெரும்பகுதிகளை ஆட்சிபுரியப் போகிறார்கள் என்பது உள்ளுர்வாசிகளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. தங்களை கோட்டை இராஜதானியை ஆண்ட மன்னனிடம் அழைத்துப் போகும் படி போர்த்துக்கேயர் கேட்டபோது மன்னனின் அரண்மனை இருந்த கோட்டை என்ற இடம் அண்மையிலிருந்தபோதும் வெகு தூரத்தில் இருக்கிறது என்று காட்டுவதற்காக அவர்களை உள்ளுர் வாசிகள் பல வழிகளால் சுற்றி சுற்றி அழைத்துச்சென்றதாக ஒரு கதையுண்டு. இந்த பரங்கியர்கள் யார். எவ்வாறு இவர்கள் காலப்போக்கில் இலங்கையில் சிறுபான்மையினமானார்கள் என்பது வேறு சரித்திரம். ஐரோப்பியர்களும் ஆசியர்களும் கலந்த இனம் என்பதை அது குறிக்கும். இலங்கைக்கு பறங்கியர்கள் ஜெர்மன் மரபுவழிவந்தவர்கள். 1948 லண்டனில் நடந்த ஒலம்பிக்கில் முதன் முதலில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலங்கைக்கு டங்கன் வையிட் (Duncan White) என்ற பறங்கியர் வெள்ளிப் பதக்கம் பெற்று கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது
***
ராஜேந்திரன் குடும்பத்துக்கும் ஜான் குடும்பத்துக்கு நெருக்கம் அதிகம். காரணம் கொழும்பில் உள்ள கொள்ளுப்பிட்டியில் இருவர் வீடுகளும் பக்கத்து வீடுகள். கிறனி கண்மணி ஜோனின் மனைவி கிளாராவின் சினேகிதியானாள். கிளாரா சொல்லித் தான் தன்னை கிறனி கண்மணி என்று என்னை கூப்பிடும் படி சொன்னாள். அவளுக்கு ஆங்கிலம் மொழி மிகவும் பிடித்துக் கொண்டது. தமிழ் குடும்பங்களோடு பேசும் பொது அடிக்கடி ஆங்கில வார்த்தைகளை பாவிப்பாள் அடிக்கடி தங்கியூ, பிலீஸ், தயவு செய்து குறிப்பிட வேண்டாம் (Don’t mention please)
என்று சொல்லுவாள். ஆங்கிலம் பேசுவதை பெருமையாகக் கருதினாள். கிளாராவிடம் இருந்து ஆங்கிலம் பேசக் கற்றாள்.
கிளாரா தன் வீட்டில் இசைதட்டுகளை கிராமபோனில் போட்டு மேற்கத்திய இசையை இரசித்து கேட்பதைப் பார்த்து கிறனி கண்மணிக்கு மேற்கத்திய இசை மேல் ஆசை. ஏற்பட்டது என்று என் அம்மா சொன்னாள் . டிம் ஜோன்ஸ், எல்விஸ் பிரெஸ்லி,, பிங் கிராஸ்பி, சமி டேவிஸ் போன்ற பாடகர்களின் இசை மேல் காதல்கொண்டாள் . மனைவி எதைக் கேட்டாலும் மறுக்காமல் வாங்கி கொடுப்பர் ராஜேந்திரன் . கிறனி கண்மணிக்கு இசை கெடக் விடுப்பம் இருப்பதை கண்டு அவளுக்கு ஓரரு கிராமபோன் பாட்டுப் பெட்டி அவள் விரும்ப்பி மேற்ற்கதிய பாடகர்களின் பாடல்களை கேட்க வாங்கி கொடுத்தார்
என் அம்மாவுக்கு கர்நாடக இசை மேல் மோகம். இரு இசைகளும் வீட்டில் மோதி கொண்டதை நான் சிறுவனாக இருக்கும் போது கேட்டேன். அவள் சாப்பிடும் போது முள்ளுக் கரண்டியும் கத்தியும் பாவிக்கும் பழக்கத்தையும் கிளாராவிடம் இருந்து கற்றுக் கொண்டாள் சேலை அணிவதை படிப் படியாக வெறுந்தாள். கவுன் அணிவது அவளுக்கு பிடித்துக் கொண்டது . போலீஸ் இலாக்கா பார்ட்டிகளுக்கு கவுன் அணிந்து செல்வாள் . கணவனை கட்டிப் பிடித்து போல் ரூம் (Ball Room) நடனம் கூட ஆடுவாள். அங்கு கிளாராவோடு சேர்ந்து அவள் வைன் குடித்ததாக அம்மா சொல்லிக் கேள்வி.
****
யாழ்பாணத்தில் உள்ள கந்தர்மடத்தில் கிறனி கண்மணிக்கு சொந்த வீடு இருந்தது. கிறனியின் தந்தை, என் பட்டனர் பாலசிங்கம் ரயில்வேயில் என்ஜினியராக இருந்தவர். அவர் வேலை செய்தது தெற்கில் உள்ள ஸ்டேசன்களில். . அப்போது அவர் கந்தர்மடத்தடியில் கட்டிய வீடி தான் “கண்மணி பவனம்” . அதை கிறனி கண்மணி என் அம்மாவுக்கு சீதனமாக் கொடுத்து விட்டாள். கிறனியின் ஆரம்பக் கல்வி இந்து மகளிர் கல்லூரியில். அதன் பிறகு கொழும்பில் படித்தாள். . என் அம்மா அவளுக்கு ஒரே மகள் கந்தர்மடத்தடி வீட்டை கொழும்பார் வீடு என்ற அடைப் பெயர் வைத்து அழைப்பார்கள் . அது கிறனி கண்மணிக்கு அவளின் அப்பா சீதனமாக கொடுத்த வீடு என்றாலும் அவள் வாழ்வில் பெரும்பாலும் வாழ்ந்தது கொழும்பில். அதனால் சிங்களம் ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுவாள். அவள் போர்த்துகேய சொற்கள் கலந்த சிங்களமும் தமிழ் பேசுவது எனக்கு புரியாது. சம்பலை வங்கடி சம்பல் என்பாள். உருளைக் கிழங்கை அருத்தாப்பலக் கிழங்கு என்பாள். வேலைக்காரியை ஆயா என்று அழைப்பாள். மாசு சம்பலை உம்பலாகட சம்பல் என்பாள். அந்த காலத்தில் ஓரு முட்டை இரண்டு சதம். ஒரு தேங்காய் மூன்று சதம். ஒரு சாப்பாடு வெளியில் கடையில் வாங்கினால் இருபத்தைந்து சதம். இப்ப இருபது மடங்கு விலை . உன் தாத்தாவுகு ஸ்டேர்லிங் பவுனில் தான் சம்பளம். குதிரை வண்டியில் தான் ஸ்டேசனில் இருந்து கந்தர்மடத்தில் உள்ள வீட்டுக்கு வருவோம். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கரிக் கோச்சியில் பதின்ரெண்டு மணித்தியாலம் பயணம். இப்படி கடந்த கால வாழ்கையை பற்றிக் கதை கதையாய் சொல்லுவாள்.
ஒரு நாள் அவளை பார்த்து “கிறனி , தாத்தாவுக்கு என்ன நடந்தது”? என்று கரிசனனையோடு கேட்டேன்,
அவள் கணகளில் கண்ணீர் வந்தைக் கண்டேன். உனத்குத் தெரியுமா அவர் அழுத்கடை சண்டியன் ஷண்முகத்தை பிடிக்க அழுத்கடைக்கு இரண்டு போலீஸ்காரரோடு போன பொது அவனிடம் சூடு வாங்கி அந்த இடத்திலேயே செத்துப் போனார் அவருக்கு போலீசில் வீரப் பதக்கம் கிடைத்தது. அவரின் மரணத்துக்கு பின் நான் உன் அம்மாவோடு யாழ்ப்பாணம் வந்திட்டன்”
“அழுத்கடை ஷண்முகத்துக்கு பிறகு என்ன நடந்தது கிறனி “? நான் கேட்டேன்
“ ஷண்முகத்தை பிறகு போலீஸ் பிடித்தது. அவனுக்கு வழக்கு நடந்தது மரணதண்டனை கிடைத்தது வெலிக்கடை ஜெயிலில் தூக்கிலிடப்பட்டான்”
:”அப்போ உங்க; சினேகிதி கிளராவுக்கு என்ன நடந்தது கிறனி”? :
“இலங்கைக்கு 1948 சுதந்திரம் கிடைத்து மூன்று வருடங்களில் அவள் குடும்பம் அவுஸ்திரேலியாவுக்கு போய்விட்டது. போன புதுசில் எனக்குக் கடிதம் போடுவாள். பிறகு அவளிடம் இருந்து கடிதம் வருவதே இல்லை.” என்றாள் . கிறனி :
கிறனி கண்மணி கணவனைப் பிரிந்து கந்தர்மடம் வந்தபின் படி படியாக அவளின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்ற்பதது. அவள் அவ்வளும் சூழல் அந்த மாற்றத்தை கொண்டுவந்தது . சேலை அணிந்து . . நல்லூர் முருகன் கோவில் எங்கள் வீட்டில் இருந்து அரை மைல் தூரத்தில் இருப்பதால் அடிகடி கோவிலுக்குப் போகத் தவற மாட்டாலள். கோவில் திருவிழா நாட்களில் விரதம் இருபாள். படிப்படியாக் மாமிசம் உண்பதை நிறுத்தி விரல்களை பாவித்து உண்ணத தொடங்கினாள். . எபோதும் திருப்புகழும் இராமாயணமும் படிப்பாள் . ஒரு நாள் கியாரணி எம் எஸ் சுப்புலட்சுமியின் “காற்றினிலே வரும் கீதம், பாடலை கேட்டு இரசித்து கொண்டிருந்தாள். என் அம்மா என்னை பார்த்து கண் சிமிட்டி சிரித்தாள். காலப் போக்கில் கண்மணி பவனத்தில் பாரதியார் பாடல்கள் ஒலித்தன..
லஷ்மி, கல்கி, அகிலன் வரதராசனார் நூல்கள் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் அம்மா கொண்டுவந்து கொடுத்த “அம்புஜம் பாட்டி” என்ற நாவலை வாசித்து விட்டு அதில் வரும் அம்புஜம் கதாப்பாத்திரத்தோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்தாள். அவளிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டது . பக்கத்துக்கு வீட்டு ஐயர் அம்மாவிடம் மடிசார் புடவை கட்ட பயின்றாலள். அதன் பின் ஒரு காலத்தி தான் போட்ட கவுனை மறந்தாள் அவளிடம் பெரும் மாற்றம் ஏற்பட்து . என் அம்மாவுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி
ஒரு நாள் என்னை அழைத்து “ சுந்தரம் இங்கை வா உன்னோடு ஓன்று பேச வேண்டும்” என்றாள் .
”என்ன கிறனி வேணும்”? நான் அவளை கேட்டேன்
“ சுந்தரம் இனி என்னை கிறனி என்று கூப்பிடாதே. இன்று முதல் நீ என்னை கண்மணி பாட்டி என்று கூப்பிடு என்ன? என்றாள்.
வாழும் சூழல் எப்படி ஒரு மனிதனை மாற்றுகிறது என் நினைத்து நான் திகைத்துப் போனேன்.
(யாவும் புனைவு )