காலம் ரொம்ப மாறிப் போயிடுத்து…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 4,590 
 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

அவள் மனம் பின்னோக்கி ஓடியது

குறுக்கே ஒரு நாய் ஓடியதால் ‘சடன் ப்ரேக்’ போட்டாள் மேரி.

அவள் ‘ஸ்கூட்டரி’ன் பின்னால் ரொம்ப நெருக்கமாக வந்த மகேஷ் சற்று தாமதமாக பிரேக் போட்டதால் மேரி ‘ஸ்கூட்டரி’ன் பின் பக்கம் மோதி விட்டான்.
மேரி ‘ஸ்கூட்டரி’ன் ‘மட்கார்டும்’ பின்னால் இருந்த விளக்குகளும் சுக்கு நூறாக உடைந்து விட்டன.ஸ்கூட்டரை தெரு ஓரமாக போய் நிறுத்தினாள் மேரி.

தன் ‘ஸ்கூட்டரை’ அவள் பின்னாலேயே தள்ளிக் கொண்டுப் போய் நிறுத்துனான் மகேஷ்.

தன் ‘கூலிங்க் க்லாஸை’ அசால்ட்டாக கழட்டி விட்டு “மேடம் ரொம்ப சாரி.தப்பு என்னுடையது தான்.நான் தான் கொஞ்சம் லேட்டா ‘பிரேக்’ போட் டேன். உங்களுக்கு ஆ§க்ஷபம் இல்லேன்னா, தயவு செஞ்சி என் கூட இந்த தெரு கோடியிலே இருக்கிற ‘சர்விஸ் செண்டருக்கு’ வாங்க.நான் என் செலவிலே உடைஞ்ச எல்லா ‘பார்ட்ஸையும்’ புதிசா என் செலவிலே மாத்தி தறேன்” என்று மிகவும் பவ்யமாக சொன்னான்.

சொன்ன வாலிபனைப் பார்த்த மேரி அசந்து விட்டாள்.நல்ல ஆணழகன் போல அவன் இருந் தான்.அவனையே கொஞ்ச நேரம் ஆசை தீரப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மேரி.

அந்த வாலிபன் மேரியைப் பார்த்து மேரியைப் பார்த்து “என்ன மேடம், நான் சொன்னது உங்க ளுக்குப் பிடிக்கலையா.நீங்க போலீஸைக் கூப்பிட்டு என் மேலே ஒரு ‘கேஸை’ப் போடப் போறீ£ங்களா” என்று கெஞ்சும் குரலில் கேட்டான்

அந்த வாலிபன் கேட்டதும் மேரி தன் நிலைக்கு வந்தாள். “அப்படி எல்லாம் நான் பண்ண மாட்டேன் சார்.உங்களே பாத்தா ரொம்ப ‘டீஸண்டான பர்ஸன்’ போல இருக்கீங்க.நீங்க சொல்றபடியே செய்யுங்க.நீங்க சொன்னதே கேட்டதும் என் கோவமெல்லாம் ஒரு நொடிலே மறைஞ்சிடுச்சி” என்று சொல்லி சிரித்தாள் மேரி.

தன்னை ஒரு ‘டீஸண்டான பர்ஸன்’ என்று புகழ்ந்ததையும்.’என் கோவம் எல்லாம் ஒரு நொடி லே மறைஞ்சிடுச்சி’ என்று சொல்லி விட்டு பளிச்சென்று சிரித்ததையும் நினைத்து சந்தோஷப் பட்டான் அந்த வாலிபன்.

மேரி அந்த வாலிபனுடன் ‘சர்விஸ் சென்டருக்கு’ப் போய் தன் ‘ஸ்கூட்டரி’ன் பின் பக்கம் உடைந்த பாகங்களை எல்லாம் புதியதாக மாற்றிக் கொண்டாள்.

இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு நண்பர்களாக பிரிந்தார்கள்.

ஒரு வாரம் தான் ஆகி இருக்கும்.

மகேஷ் ஆனந்த பவனில் ‘காபி’ சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.அவன் ‘டேபிளி’ன் எதிரில் வந்து உட்கார்ந்தாள் மேரி.

தன் தலையைக் குனிந்துக் கொண்டே அவள் ஒரு ‘காபி’ ஆர்டர் பண்ணினாள்.பிறகு தன் தலையை நிமிர்ந்து பார்த்தாள் மேரி.

“வாட் எ சர்ப்ரைஸ்” என்று சொல்லி மகேஷ் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.அப்போது தான் மேரி மகேஷை கவனித்தாள்.

”ஹாய் இட்ஸ் ரயலி எ சர்ப்ரைஸ்” என்று சொல்லி மகேஷிடம் பேசினாள்.

நாளடைவில் இவர்கள் சந்திப்பு காதலாக மாறியது.

ஒருவரை பற்றி மற்றொருவர் முழுக்கத் தொ¢ந்துக் கொள்ள ஆசைப் பட்டு இருவரும் ஒரு நாள் மறுபடியும் ஆனந்த பவனில் வந்து உட்கார்ந்துக் கொண்டார்கள்.

மகேஷ் ‘டேபிளு’க்கு வந்த சர்வா¢டம் இரண்டு மசால் தோசை ‘ஆர்டர்’ பண்ணினான்.

தான் முதலில் தன் முழு கதையை சொல்ல ஆரம்பித்தான்.

“மேரி,என் பேர் மகேஷ்.நான் ஒரு பிராமண ஜாதியை சேர்ந்தவன்.மூனு வருஷத்துக்கு முன் னாடி நான் சென்னையிலே வேலைப் பாத்து வந்தேன்.அப்போ எனக்கும் ரஸியா என்கிற ஒரு முஸ் லிம் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலி ச்சோம்.நான் என் அப்பா அம்மா கிட்டே என் காதலை சொல்லி,’நாங்க கல்யாணம் செஞ்சுக்க போறோ ம்’ன்னு சொன்னேன்” என்று சொல்லி விட்டு சர்வர் கொண்டு வந்து வைத்த மசால் தோசையை விண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
மேரி மகேஷ் சொல்லிக் கொண்டு இருக்கும் விஷயத்தைக் ஆவலாகக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

பாதி மசால் தோசையை காலி பண்ணி விட்டு மகேஷ் தொடர்ந்தான்.

“என் அப்பா அண்ணா நகா¢ல் ஒரு அட்வகேட்டாக வேலை பண்ணி வந்தார்.அவருடைய பேர் அனந்த கிருஷ்ணன்.அவரும் என் அம்மாவும் ‘இந்த இன்டர் காஸ்ட் மேரேஜை’ நாங்க ஒத்துக் கொள் ளவே மாட்டோம்,இந்த விட்டு வாசல் படியை மிதிக்காதே’ன்னு தீர்மானமா சொல்லி விட்டா” என்று சொல்லி விட்டு மீதி மசால் தோசையை சாப்பிட ஆரம்பித்தான்.

மேரி மகேஷ் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

மொத்த மசால் தோசையைக் காலி பண்ணி விட்டு மகேஷ் சர்வா¢டம் ரெண்டு காபி ‘ஆர்டர்’ பண்ணினான்.

அடுத்து மகேஷ் என்ன சொல்லப் போறான் என்று அவர் வாயையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மேரி.

“வேறு வழி இல்லாம நானும் ‘இனிமே அந்த வீட்லே நாம் இருக்கக் கூடாது’ன்னு தீர்மானம் பண்ணி,என் கம்பனி மானேஜர் இடம் எனக்கு பெங்களுருக்கு வேலே மாத்தம் கேட்டுக் கொண்டு நான் பெங்களுர் வந்து விட்டேன்.ரஸியாவும்,என்னுடன் அவ வேலேயே ‘ரிசைன் பண்ணி விட்டு, பெங்களுருக்கு வந்து,இங்கே இருக்கும் ஒரு காலேஜ்லே ஒரு ‘லெக்சரர’ வேலேயே வாங்கிக் கிட்டா. ஒரு வாரம் ஆனதும் நானக் ரெண்டு பேரும் ‘ரெஜிஸ்டர் ஆபீஸ்’ க்குப் போய் ‘ரெஜிஸ்டர் மாரேஜ்’ பண்ணிக் கிட்டோம்” என்று சொல்லி நிறுத்தினான்.

அதற்குள் சர்வர் ‘காபி’ கொண்டு வந்து வைக்கவே மகேஷ் “எனக்கு காபியே நல்லா சூடாத் தான் குடிக்க பிடிக்கும்.ஆனா ரொம்ப ‘கூல் பர்ஸன்’ தான்” என்று சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே காபியை சூடாகக் குடித்தான்.

மகேஷ் சொன்னதைக் கேட்டதும் மேரி “உங்களே பாத்தாவே நல்லா தொ¢தே” என்று சொல்லி அவளும் சிரித்தாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் மகேஷ் முகத்தில் ஒரு வாட்டம் தொ¢ந்தது.’இது வரைக்கும் சந்தோஷ மா இருந்த இவர் முகத்தில் ஒரு வாட்டம் தொ¢தே’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந் தாள் மேரி.

சற்று நேரம் கழித்து “என் அப்பா அம்மா சாபமா,இல்லே என் போறாத வேளையா தொ¢யலே மேரி,நாங்க இருவரும் காரில் கூர்க் ‘ரிஸா¡ர்ட்டுக்கு’ ஹனி மூனுக்கு போய் கிட்டு இருக்கும் போது, ரஸியாவுக்கு திடீரென்று நெஞ்சை மிகவும் வலித்தது.உடனே நான் கார் டிரைவரை காரை ரஸியாவை அருகில் இருந்த ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ப் ஓட்டிப் போகச் சொன்னேன்.’நர்சிங்க் ஹோமில்’ இருந்த டாக்டர ரஸியாவை நன்றாக பா¢சோதனைப் பண்ணி விட்டு,‘மாஸிவ் ஹார்ட் அட்டாக்’ வந்து பத்து நிமிஷம் முன்னால் தான் இறந்து விட்டாங்க’ ன்னு சொன்னார்.நான் அழுதுக் கொன்டே ரஸியாவை அவர்கள் ஜாதி வழக்கப் படி அடக்கம் பண்ணீனேன்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண் ணீரைத் துடைத்துக் கொண்டான் மகேஷ்.

”உங்க சோக கதையை எனக்கு கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்குங்க. உங்க வருத்தம் எனக் கு நல்லா புரிது மகேஷ்” என்று அவனுக்கு ஆறுதல் சொன்னாள் மேரி.
தன் ‘காபி’யை முழுக்க குடித்து முடித்து விட்டு மேரி தன் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

“மகேஷ்,என் பேர் மேரி.எனக்கு அப்பா கிடையாது.அவர் நான் நான்கு வயசா இருக்கும் போது ஒரு ஸ்கூட்டர் விபத்தில் இறந்திட்டாரு.அன்னியிலே இருந்து என் அம்மா தான் அவங்க சம்பளத்தி லே என்னை வளத்து ஆளாக்கி இருக்கா ங்க.நான் எம்.ஏ சயன்ஸ் படிச்சு விட்டு வெலிங்டன் கல்லூ ரியில் ஒரு ‘லெக்ச்சரராக’ வேலை செஞ்சு கிட்டு வரேன்” என்று தன் கதையை சொல்லி நிறுத்தினாள் மேரி.

சற்று நேரம் பேசி இருந்து விட்டு இருவரும் பிரிந்து போனார்கள்.

ஒரு ஆறு மாதம் இருவரும் பழகி கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள்.

பழைய எண்ணங்களில் மூழ்கி இருந்த மேரி,அதிலே இருந்து விடுபட்டு இன்றைய நினைவு களுக்கு வந்தாள்.

‘நம் கணவா¢ன் கலப்பு திருமணத்தை ஏற்க மறுத்த அட்வகேட் அனந்த கிருஷ்ணனிடமா நம்ம பையன் ‘ஜூனியரா’ வேலேக்கு சேந்து இருகான்.’கடவுளே,அந்த அட்வகேட்டுக்கு நம்ப குடும்ப உண்மை சமாச்சாரம் தொ¢ஞ்சா, அவர் ரொம்பக் கேவபப்படுவாரே.உடனே பீட்டரை ‘ஜூனியர்’ வேலைலே இருந்து வெளியே அனுப்பி விடுவாரே’ என்று நினைத்து பயந்தாள் மேரி.

‘நம் கணவரும் பீட்டர் அட்வகேட் அனந்த கிருஷ்ணன் கிட்டே ஒரு ‘ஜூனியரா’ வேலேக்கு சேந்து இருக்கான்னு சொன்னா விரும்ப மாட்டாரே’ என்று யோஜனைப் பண்ணீனாள்.
’சரி,இப்போதைக்கு மகேஷ் கிட்டே பீட்டர் அட்வகேட் அனந்த கிருஷ்ணன் கிட்டே ஒரு ‘ஜூனியரா’ வேலேக்கு சேந்து இருக்கான்’ என்கிற விஷயத்தை சொல்லாம இருகிறது தான் நல்லது’ என்று தீர்மானம் பண்ணி, மகேஷ் இடம் ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்து வந்தாள்.

தாத்தா ரூமுக்கு வந்து போகும் தேவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருப் பான் பீட்டர்.

நல்ல நிறமும்,வாளிப்பான அவள் உடல் அமைப்பும் அவனை கிறங்க வைத்தது.கண் பார்வை யில் இருந்து வந்த அவர்கள் சந்திப்பு நாளா வட்டத்தில் காதலாக மலரத் தொடங்கியது.

தேவி தன் காதலை முதலில் தன் பாட்டியிடம் சொன்னாள்.

உடனே பாட்டி “என்னடி இது. நாம இந்து.அந்த பையன் ஒரு கிருஸ்தவ ஜாதியை சேர்ந்தவன் இந்த கல்யாணம் எப்படி நடக்கும் தேவி.உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு.உங்க தாத்தா இந்த கல்யாணத்தே ஒரு போதும் ஒத்துக் கொள்ள மாட்டாரேடி.அவனை மறந்து விடு தேவி” என்று சொல்லி தேவியைக் கோவித்துக் கொண்டாள் பாட்டி வசந்தா.

தேவி பாட்டியை கட்டிக் கொண்டு “பாட்டி,பாட்டி எப்படியாவது நீங்க தான் தாத்தாவையும், என் அப்பா அம்மாவையும் ஒத்துக் கொள்ள வைக்கணும். இந்த ஜென்மத்தில் நான் கல்யாணம்ன்னு ஒன்னு பண்ணிண்டா,பீட்டரைத் தான் பண்ணிக் கொள்வேன்.வேறே யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்” என்று தீர்மானமாக சொல்லி விட்டாள் தேவி.

பாட்டிக்கு என்ன பண்ணுவது என்றே தொ¢யவில்லை.

அந்த வாரமே சென்னையில் நடக்கும் ஒரு கல்யாணத்திற்கு தேவியின் அப்பாவும் அம்மாவும் வந்து இருந்தார்கள்.

பாட்டி மெல்ல தன் கணவனிடம் “தேவி,பீட்டரை காதலிக்கறாளாம்.கல்யாணம் பண்ணீண்டா பீட்டரைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்.வேரே யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாளாம். அவ பிடிவாதம் பிடிசுண்டு வறா” என்று ரகசியமாகச் சொன்னாள்.

வசந்தா சொன்ன சமாசாரத்தைக் கேட்ட அட்வகேட்டுக்கு தான் பிடிவாதம் பிடிச்சு வந்து,தன் ஒரே மகனை காலம் பூராவும் இழந்த சோக சம்பவம் ஞாபகம் வந்தது.
கொஞ்ச நேரம் யோஜனை பண்ணி விட்டு “பாக்கலாம்.ரேவதியும் அவ ஆத்துக்காரரும் தேவி சொல்றதைக் கேட்டு என்ன சொல்றான்னு கேப்போம்” என்று சொல்லி விட்டு சகஜமாக வேறு பேச்சை பேச ஆரம்பித்தார்.

பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது.

அன்னைக்கு சாயங்காலமே தன் பெண் ரேவதியை தனியாக அழைத்து “ரேவதி,உன் பொண் ணு தேவி நம் அப்பாகிட்டே ஜூனியரா வேலை பண்ணும் பீட்டரை மனசார காதலிக்கறாளாம். அவ னைத் தான் பண்ணிக் கொள்வேன்னு பிடிவாதம் பிடிக்கிறா.வேரே யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றாளே.நீ கொஞ்சம் அவளை கொஞ்சம் கூப்பிட்டு கேளேன்.அந்த பையன் பீட்டர் ஒரு கிருஸ்தவ பையனாச்சே ,நீயும்,உன் ஆத்துக்காரரும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதம் தருவேளா” என்று பயந்துக் கொண்டே தேவி காதல் விவகாரத்தை சொன்னாள் வசந்தா.

மகள் ரேவதி துளிக்கூட பதட்டப் படவில்லை.

“அம்மா இந்த காலத்து பொண்ணுங்க அவாளுக்கு பிடிச்ச பையனை அவாளே பாத்து கல்யா ணம் பண்ணிக்கிறது ரொப சகஜமாயிட்டது.இது ஒன்னும் புதிசு இல்லேம்மா” என்று சொல்லி விட்டு சிரித்தாள் ரேவதி.வசந்தாவுக்கு ‘சப்’பென்று போய் விட்டது.

ஊருக்கு போகும் முன் ரேவதியும் அவள் கணவரும் தங்கள் பெண் தேவியைப் பார்த்து “தேவி உனக்கு அந்தப் பையன் பீட்டரை பிடிச்சு இருக்காம்மா.அவனுக்கும் உன்னை பிடிச்சு இருக்காம்மா” என்று கேட்டதற்கு தேவி “ஆமாம்.நாங்க ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிரா காதலிக் கிறோம்” என்று சொன்னவுடன் ஹாலில் இருந்த அட்வகேட்டிடம் பீட்டரைப் பற்றி விசாரித்தார்கள்.

அட்வகேட் அனந்த கிருஷ்ணன் பீட்டரைப் பத்தி மிகவும் புகழச்சியாய் பேசினார்.

உடனே இருவரும் மகள் கல்யாணத்திற்கு சம்மதம் தொ¢வித்து விட்டு,அட்வகேட்டைப் பார்த்து “நீங்கோ பீட்டரின் அப்பா அம்மாவை சென்னைக்கு வரச் சொல்லுங்கோ.இந்த கல்யாணத்துக்கு அவா சம்மத்தை கொஞ்ச கேளுங்கோ” என்று சொல்லி விட்டு மதுரைக்குக் கிளம்பிப் போய் விட்டார் கள் ரேவதியும் சுந்தரும்.

உடனே அட்வகேட் பீட்டரைக் கூப்பிட்டு “பீட்டர், நீ உடனே உங்க அப்பா அம்மாவை சென் னைக்கு வரச் சொல்லு.எனக்கு அவா சம்மதம் தொ¢யணும்” என்று சொன்னார்
உடனே ”பீட்டர்,சார் நான் இந்த ஞாயித்துகிழமை பெங்களுருக்குப் போய் என் அம்மா அப்பா வை சென்னைக்கு வந்து உங்க கிட்டே எங்க கல்யாண விஷயத்தே பேசச் சொல்றேன்” என்று சந்தோ ஷமாகச் சொன்னான்.

அந்த வார ஞாயிற்றுக் கிழமையே பீட்டர் பெங்களூர் கிளம்பிப் போனான்.

பீட்டர் அவன் அம்மாவிடம் “அம்மா,நான் அட்வகேட்டின் பேத்தி தேவியை மனசாரக் காதலி க்கறேன்.தேவியும் என்னே மனசாரக் காதலிக்கறா.இந்த விஷயம் அட்வகேட்டுக்கு தொ¢ஞ்சு இருக்கு. அவர் போன வாரம் புதன் கிழமை என்னைக் கூப்பிட்டு ‘பீட்டர்,உடனே உங்க அப்பா அம்மாவையும் சென்னைக்கு வரச் சொல்.’நான் அவங்க சம்மதத்தேக் கேக்கணும்’ன்னு சொன்னாரும்மா. நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் சென்னைக்கு வந்து என் அடவகேட் கிட்டே பேசி விட்டு,உங்க சம்மதத் தை சொல்லி எங்க கல்யாணத்தே குடிச்சு வையுங்கம்மா” என்று அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண் டு கெஞ்சினான்.

பீட்டர் சொன்னதைக் கேட்டு மேரிக்கு ஆச்சரியமாய் இருந்தது.

யோஜனை பண்ணி கொண்டு இருந்த அம்மாவைப் பார்த்து பீட்டர் “என்னம்மா நான் கேட்டு கிட்டு இருக்கேன்,ஆனா நீங்க எங்கோ பார்த்துக் கிட்டு என்னமோ யோஜனைப் பண்ணிக் கிட்டு இருக்கீங்க.வாங்கம்மா சென்னைக்குப் போய் அவர் கிட்டே பேசிட்டு வரலாம்” என்று மறுபடியும் அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான் பீட்டர்.

தன் யோஜனையில் இருந்து வெளியே வந்த மேரி “சரி,நான் உன் அப்பா எப்போ அவர் வேலை யே முடிச்சி கிட்டு பெங்களுர் திரும்பி வறார்ன்னு ‘போன்லே’ கேட்டுட்டு,அப்புறமா நான் முடிவு பண்றேன்” என்று சொன்னதும் “ரொம்ப தாங்க்ஸ் அம்மா” என்று அம்மாவை ‘தாங்க்’ பண்ணீனான் பீட்டர்.

மனதை திடப் படுத்திக் கொண்டு ராஜஸ்தானில் இருக்கும் தன் கணவன் மகேஷ்க்கு ‘போன்’ பண்ணி மகேஷ் காதல் விவகாரத்தை விவரமாய் சொல்லி “நீங்க எப்போ பெங்களுருக்கு திரும்பி வரு வீங்க.அவங்க நம்ம ரெண்டு பேரையும் சென்னைக்கு வந்து பேசக் கூப்பிட்டு இருக்காங்க” என்று கேட்டாள் மேரி.

உடனே மகேஷ் “மேரி,என் வேலை ரொம்ப உச்ச கட்டத்லே இருக்கு.நான் இப்போ பெங்களுர் வருவது கஷ்டமா இருக்கும்.நான் பெங்களுர் திரும்பி வர இன்னும் இருபது நாளைக்கு மேலே ஆகும். நான் வர வரைக்கும் நீ காத்துக் கிட்டு இருக்காதே.நீ பீட்டருடன் சென்னை போய் அவங்களே சந்தி ச்சு எல்லா விவரமும் கேட்டுக் கிட்டு வா” என்று சொன்னான்.

மேரி “சரிங்க,நான் பீட்டர் கூட சென்னைகுப் போய் எல்லா விவரமும் கேட்டுக் கிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு ‘போனை’’ கட்’ பண்ணினாள்.

மேரியும் பீட்டரும் சென்னைக்கு வந்து அடவகேட் வீட்டிற்கு வந்தார்கள்.“வாங்க வாங்க” என்று வாய் நிறைய வரவேற்றார் அட்வகேட்டும்,வசந்தாவும்.எல்லோரும் சோபாவில் உட்கார்ந்தார்கள்

“உங்க கூட பையன் அப்பா வரலையா” கேட்டார் அட்வ்கேட்

“அவர் ராஜஸ்தான்லே ஒரு மின் உற்பத்தி ‘பாக்டரி’யிலே வேலை பண்ணி வறார்.பாய்லர் நிர் மாணம் உச்ச கட்டத்லே இருப்பதாலே,அவர் வர இன்னும் இருபது நாள் ஆகும்.அவர் என்னைப் சென்னைக்குப் போய் உங்க கிட்டே பேசி வரச் சொன்னார்” என்று சொல்லி நிறுத்தினாள் மேரி.

“ஓ அப்படியா.நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்” என்றார் அட்வகேட்.

சற்று நேரம் கழித்து அடவகேட்”என் பேத்தி தேவியும்,பீட்டரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்கிறா.உங்களுக்கு ஆ§க்ஷபணை இல்லேன்னா,நீங்கோ இவா கல்யாணத்துக்கு சம் மதம் தர முடியுமா” என்று கேட்டு மேரியின் முகத்தை உற்று கவனித்தார்.

அவர் கண்களில் கண்ணீர் தளூம்பியது.கை குட்டையை எடுத்து கண்ணை துடைத்துக் கொண்டார் அடவகேட்.

சற்று நேரம் கழித்து “இருபத்தேழு வருஷத்துக்கு முன்னாடி,நாங்க ஒரு பொ¢ய தப்பே பண்ண தாலே இன்னைக்கு என் ஒரே பையனை நானும் இவரும் இழந்து நிக்கறோம்.என்னைக்காவது ஒரு நாள் நிச்சியமா அவன் திரும்பி வருவான்னு நாங்க ரெண்டு பேரும் எதிர்பாத்துண்டு இருந்தோம். ஆனா அவன் இன்னிக்கு வரைக்கும் திரும்பியே வரலேம்மா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் வசந்தா.

கண்களைத் துடைத்துக் கொண்டு வசந்தா “அது நடந்து போன கதைம்மா.இவன் தான் என் பேத்தி தேவி.பீட்டர் தேவி கலப்பு கல்யாணத்துக்கு உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் பூரண சம்ம தா” என்று கேட்டாள்.

மேரி சோபாவில் வந்து உட்கார்ந்த தேவியைப் பார்த்தாள்.

தங்க விக்ரகம் போல் இருந்த தேவி பீட்டருக்கு நல்ல ‘மாட்ச்’ போல இருந்தது மேரிக்கு.

மேரி உடனே “எங்க இருவருக்கும் ஒரு ஆ§க்ஷபணையும் இல்லே.எனக்கும் என் கணவருக்கும் இந்த கல்யாணத்லே முழு சந்தோஷங்க” என்று சொன்னாள்.

எல்லோரும் மதிய உணவு அருந்தினார்கள்

எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு மேரி பீட்டரை விட்டு விட்டு,பெங்களூர் வந்து சேர்ந் தாள்.இருபது நாள் ஆனதும் மகேஷ் வேலையை முடித்துக் கொண்டு பெங்களூர் வந்து சேர்ந்தான்.

மேரி எல்லா விவரமும் மகேஷிடம் சொன்னாள்.

“ உங்க அப்பா பீட்டர் கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டு விட்டு,கண்களில் வந்த கண்ணீரைத் துடைச்சுக் கிட்டு இருந்தாரு.உங்க அம்மா ‘இருபத்தேழு வருஷத்துக்கு முன்னாடி,நாங்க ஒரு பொ¢ய தப்பே பண்ணதாலே இன்னைக்கு என் ஒரே பையனை நானும் இவளும் இழந்து நிக்கறோம்.என்னை க்காவது ஒரு நாள் நிச்சியமா அவன் திரும்பி வருவான்னு நாங்க ரெண்டு பேரும் எதிர்பாத்துண்டு இருந்தோம்.ஆனா அவன் இன்னிக்கு வரைக்கும் திரும்பியே வரலேம்மா’ன்னு சொல்லி கண்களைத் துடைச்சுக் கிட்டாங்க.எனக்கு அவங்க ரெண்டு பேரையும் பாக்க ரொம்ப கஷ்டமா இருந்திச்சிங்க” என்று சொல்லி வருத்தப் பட்டாள் மேரி.

மேரி சொன்னதைக் கேட்ட மகேஷ்க்கு ஆச்சரியமாகவும் அதே சமயத்தில் ரொம்ப துக்கமாக வும் இருந்தது.

அவன் மனம் வேதனைப் பட்டது.கொஞ்ச நேரம் கழித்து “மேரி,உனக்கு அவங்களே பிடிச்சு இருக்கா.அந்த பெண் தேவி நம் பையன் பீட்டருக்கு நல்ல ‘மேட்சா’ ” என்று மேரியைப் பார்த்துக் கேட்டான் மகேஷ்.

உடனே மேரி “அந்த பெண் நம் பீட்டருக்கு நல்ல ‘மேட்சா’ இருக்காங்க.அந்த அட்வகேட்டும் அவங்க சம்சாரமும் ரொம்ப நல்லங்களா பழகினாங்க” என்று சொல்லவே மகேஷ் மனதுக்கு இதமாய் இருந்தது.

“நாங்க மூனு பேரும் வர ஞாயித்து கிழமே பெங்களூர் மெயில்லே சென்னைக்கு வந்து உங்க கூட பேசலாம்ன்னு இருக்கோம். உங்களுக்கு இது சரிப்படுமா” என்று அட்வகேட்டுக்கு ‘போன்’ பண்ணிக் கேட்டாள் மேரி.

”ரொம்ப சந்தோஷம்ங்க.நாங்கள் ஒரு பொ¢ய காரை எடுத்துண்டு உங்களே சென்ட்ரல் ஸ்டேஷ ன்லே ‘மீட்’ பண்ணி,உங்களே எங்க ஆத்துக்கு அழைச்சுண்டு வறோம்.உங்க ‘கோச்சையும்’,’சீட்’ நம்ப ரையும் எனக்கு ‘போன்’ பண்ணிச் சொல்லுங்கோ” என்று சந்தோஷமாய் சொன்னார் அட்வகேட்.

மேரி அவர்கள் வரும் ‘கோச்’ நம்பரையும், ‘சீட்’ நம்பரையும் ‘போன்’பண்ணிச் சொன்னாள்.

உடனே அடவ்கேட் மதுரைக்கு போன் பண்ணீ எல்லா விஷயத்தையும் விவரமாகச் சொல்லி விட்டு,ரேவதியையும்,சுந்தரையும் சென்னைக்கு வரச் சொன்னார்,
ரெண்டு நாள் ஆனதும் ரேவதியும்,சுந்தரும் சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள்.

அடவகேட்டும்,வசந்தாவும்,ரேவதியும் மாப்பிள்ளையும் தேவியும் பெங்களுர் மெயில் வரும் ‘ப்லாட்பாரத்தில்’ மேரி சொன்ன ‘கோச்’ வந்து நிற்கும் இடத்தில் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

பீட்டர் ‘பேக்’கை எடுத்து கொண்டு,அம்மாவுடன் முதலில் வண்டியை விட்டு இறங்கினான்.

“வாங்க வாங்க” என்று கணீர் குரலில் மேரியையும் பீட்டரையும் வரவேற்றார் அட்வகேட்.”உங்க ‘ஹஸ்பெண்ட்’ எங்கே” என்று கேட்டது மகேஷ் காதில் விழுந்தது.“’சூட் கேஸை’ எடுத்துக் கிட்டு இருகாரு.இதோ வந்துடுவார்” என்றாள் மேரி.

மனதில் ஒரு வித பயத்துடனும்,ஏக்கத்துடனும்,’சூட் கேஸை’ எடுத்துக் கொண்டு மெல்ல வண்டியை விட்டு வண்டி வாசலுக்கு வந்தான் மகேஷ்.வண்டியின் வாசலில் நின்ற மகேஷைப் பார்த்த ததும் அட்வேட்டுக்கும் வசந்தாவுக்கும் ‘தாங்கள் காண்பது கனவா’ நனவா என்று ஒரு நிமிஷம் புரியவில்லை.தங்கள் பையன் மகேஷை ஆச்சரியத் தோடு பார்த்தார்கள் இருவரும்.ரேவதிக்கும் தன் அண்ணாவைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது.

”வாடா மகேஷ்.இந்த ஜென்மத்லே உன்னை மறுபடியும் பார்பமோ, மாட்டோமோன்னு நானும் உன் அம்மாவும் தினம் ஏங்கிண்டு இருந்தோம்.தினமும் அந்த பகவானே வேண்டிண்டு வந்துண்டு இருக்கோம்.எங்கள் வேண்டுதல் வீண் போகலே.அந்த பகவான் உன்னே எங்க கிட்ட கொண்டு வந்து சேத்துட்டார்.நீ ஆத்துக்கு வா” என்று சொல்லி மகேஷை கட்டி அணைத்துக் கொண்டார் அட்வகேட். அட்வகேட்டின் ‘ஷர்ட்டை’ மகேஷின் கண்களில் இருந்து விழுந்த கண்ணிர் நனைத்தது.

பீட்டரும்,தேவியும் வைத்த கண் வாங்காமல் ஒருவரை ஒருவர் சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்

வீட்டிற்கு வந்ததும் மகேஷ் தான் வீட்டை விட்டு போனதில் இருந்து மேரியை கல்யாணம் பண் ணிக் கொண்ட விவரம் பூராவும் சொன்னான்.“நீ சரியா தான் பண்ணி இருக்கே மகேஷ்.நீ பெங்களூர் லே மேரியை கல்யாணம் பண்ணிண்டதாலே தான் எனக்கு பீட்டரே போல ஒரு நல்ல ‘ஜூனியர்’ கிடைச்சு இருக்கான்” என்றார் அட்வகேட் சந்தோஷத்தில்.
உடனே மகேஷ் “அப்பா,இந்த பீட்டரால் தான் எனக்கு மறுபடியும் என்அம்மாவும்,அப்பாவும், உங்களுக்கு மறுபடியும் உங்க பிள்ளையும் கிடைச்சு இருக்கான்” என்று சொன்னான்.”உங்க மூளை எப்படியோ,அப்படியே உங்க பீள்ளையோட மூளையும் இருக்கு.வக்கில் ரத்த மாச்சே.எங்கே போகும் அந்த வக்கீல் ரத்தம்” என்று வசந்தா சொன்னதும் எல்லோரும் “ஆமாம், ஆமாம்” என்று சொல்லி வசந்தா சொன்னதை ஆமோதித்தார்கள்.

எல்லாவற்ரையும் கேட்டுக் கொண்டு இருந்த சுந்தர் தன் மாமனாரையும், மாமனாரையும் பார் த்து “நீங்க வாழ்ந்து வந்த காலத்லே தான்,இந்த ஜாதி,மதம் எல்லாம் பாத்து கல்யாணங்களே எல்லாம் பண்ணீண்டு வந்தா.ஆனா எங்க ‘ஜெனரேஷன்லேயே’ காலம் ரொம்ப மாறிப் போயிடுத்து.எல்லா பையன்களுக்கும்,பெண்களும் அவா மனசுக்குப் பிடிச்சாவாளைத் தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறா.எனக்கு என்னவோ மகேஷ் பண்ணது தப்புன்னு தொ¢யலே” என்று மகேஷ்க்கு சாத கமாப் பேசினான்.
அப்போது தான் முதல் முதலே தன் தங்கையின் கணவரைப் பார்த்த மகேஷ் “சாரி,நான் உங்க கல்யாணத்துக்கு இல்லே.நீங்கோ ரேவதியே கல்யாணம் பண்ணிடதுக்கு என் ‘பிலேடட் கங்கிராஜுலே ஷன்ஸ்’.நீங்கோ சொன்னது போல,நான் எனக்குப் பிடிச்ச பொண்ணே கல்யாணம் பண்ணிக்கிறதிலே தீவிரமா இருந்து வந்து,எங்க அம்மா அப்பாவை விட்டுட்டு போயிட்டேன்.தேவி பீட்டரை கல்யாணம் பண்ணீக்கறதாலே,இப்போ நாம சம்மந்திகளா ஆயிட்டோம்.நான் என் அம்மா அப்பாவோடவும்,தங் கையோடவும் மறுபடியும் சேர முடிஞ்சது இதுக்காக நான் தேவியையும் பீட்டரையும் ரொம்ப ‘தாங்க்’ பண்ணனும்” என்று சொல்லி விட்டு,தன் கண்களில் வழிந்த கண்ணரைத் துடைத்துக் கொண்டு அப்பா அம்மா காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணினான்.

தேவியையும் பீட்டரையும் கட்டிக் கொண்டு “நீங்க ரெண்டு பேரும் ‘Made for each other’ நல்ல ‘மாட்ச்’.என்னுடைய ‘அட்வான்ஸ் கங்கிராஜுலேஷன்ஸ்’ உங்க ரெண்டு பேருக்கும்.நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணீண்டு வந்து ரொம்ப வருஷம் சந்தோஷமா இருந்துண்டு வரணும்” என்று கண்களில் கண்ணீர் மல்க வாழ்த்தினான் மகேஷ்.ரேவதியும்,சுந்தரும் சந்தோஷப் பட்டார்கள்.

முற்றும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *