அத்தியாயம் 4 | அத்தியாயம் 5 | அத்தியாயம் 6
“வாட்? அப்ப ராஜேஷ் சேலத்த விட்டு வெளியவே போகலயா?”
“ஆமாம் மேடம். உங்கள கேட்காமயே இன்னும் சில விஷயங்கள் சேகரிச்சேன். அதுல சில புது விஷயங்கள் கூட கிடைச்சு இருக்கு”
“அது என்ன?”
“ராஜேஷோட லாஸ்ட் 6 மன்த்ஸ் கால் டீடெயில்ஸ் வாங்குனேன் மேடம். அதுல கடைசி 3 மாசம் அவர் ஃபோன் கால்ஸ் ரொம்ப அதிகமாகி இருக்கு. அதுவும் 4 பேருக்கு தான் ஃப்ரீக்வண்ட் கால்ஸ் போய் இருக்கு. ஒரு ஆள ஆல்ரெடி நமக்கு தெரியும். நம்ம கதிர் சார். இன்னொரு ஆள் ஒரு வட்டி தொழில் பண்ற நபர். பேர் நந்தா. அவர் எதோ ஒரு அரசியல் பிரமுகரோட ப்ளாக் மணி டீல் பண்ற ஆள்னு ஒரு டாக் இருக்கு. எந்த அரசியல்வாதினு தெரியல. மூணாவது அவரோட ஆடிட்டர் சுந்தரமூர்த்தி. இவங்க கூட தொழில் பண்றவங்க எதிர்வீட்டுக்காரங்க இப்படி எதாவது காரணம் சொல்லலாம். ஆனா நாலாவது ஒரு பொண்ணு. பேர் நந்தினி. இந்த பொண்ணுக்கும் ராஜேஷுக்கும் என்ன சம்மந்தம்’னு தெரியல மேடம். ஆனா திங்கட்கிழமை ராத்திரி பூரா ராஜேஷ் சிம் கார்ட் & நந்தினி சிம் கார்ட் இரண்டும் ஒரு ஏரியால தான் இருந்து இருக்கு. அந்த ஏரியால தான் நந்தினி வீடும் இருக்கு”
“So இரண்டு பேரும் ஒண்ணா இருந்து இருக்காங்க. ஸ்மார்ட் வொர்க் மணி. நம்ம நெருங்கிட்டோம்னு தோணுது”
“அப்புறம் மேடம் இந்த யுவராணி & உமா மகேஸ்வரி அவங்க 2 வீட்டுலயும் ஓரே வேலைக்காரி தான். அவங்க மூலமா சில விஷயங்கள் தெரிஞ்சது. உமா மகேஸ்வரிக்கு அவங்க பொண்ணு ஜெயந்திய ராஜேஷ்க்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசை. ரேவதியால குழந்தை பெத்துக்க முடியாதுங்கிறத வெச்சு அவங்க ஆசைய நிறைவேற்ற பார்த்து இருக்காங்க. ஆனா ராஜேஷ் பிடி குடுக்கலாம். அவங்களுக்கு ரேவதி மரணத்துல லாபம் இருக்கு. ஆனா யுவராணிக்கு இந்த மரணத்தால எந்த பலனும் இருக்குறதா தெரியல. ஏன்னா அந்த பொம்பள ஒரு பணப் பேயாம். ஆதாயம் இல்லாம எதையும் செய்ய மாட்டாங்களாம். அவங்களுக்கும் இந்த மரணத்துக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இல்ல”
“உமாவுக்கு இதுல தொடர்பு இருக்க வாய்ப்பு இல்ல”
“எப்படி மேடம் சொல்றீங்க?”
“ராஜேஷ் அம்மா ரேவதிய ஃபோன்ல டார்ச்சர் பண்றதுக்கு தகவல் தர இருக்க ஒரே தொடர்பு உமா தான். அவங்களும் மருமக கர்ப்பமா இருக்கான்னு தெரிஞ்சு தான் ஊர்ல இருந்து வந்து இருக்காங்க. In case அவங்க உமாவுக்கு ஃபோன் பண்ணி ரேவதி கர்ப்பம்’ன்ற விஷயத்த சொல்லி அதனால உமா ரேவதிய கொலை பண்றதா இருந்தாலும் அந்த லெட்டர் அபத்தம் ஆகிடும். அதனால அவங்களும் இல்ல. So Interrogationஅ கதிர் கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம்”
“அப்புறம் இன்னொரு டீடெயில் இருந்தா விசாரணைக்கு சௌகரியமா இருக்கும்”
“என்ன டீடெயில்?”
“கதிர் சாரோட லீவ் டீடெயில்ஸ்”
“ஹ்ம்ம். ரைட். ஸ்டேசனுக்கு வா. அதையும் பார்த்துடலாம்”
“ஓகே மேடம்”
போலீஸ் ஸ்டேஷனில் கவிதா கதிரவனிடம் விசாரணையை ஆரம்பித்தார்.
கவிதா:
“கதிர் சார் ஒரு கேள்வி கேட்டா உண்மையா பதில் சொல்வீங்களா?”
கதிரவன்:
“கேளுங்க மேடம்”
கவிதா:
“இந்த கேஸ்ல யாரையாவது காப்பாத்த முயற்சி பண்றீங்களா?”
கதிரவன்:
“மேடம். அப்படிலாம் எதுவும் இல்ல மேடம்”
கவிதா:
“நீங்களா சொல்லிட்டா நல்லா இருக்கும்”
கதிரவன்:
“மேடம் உண்மையிலேயே நீங்க என்ன சொல்றீங்கனு புரியல”
கவிதா:
“மணி நீ கலெக்ட் பண்ண டீடெயில்ஸ அவருக்கு புரியிற மாதிரி சொல்லு”
மணிகண்டன்:
“மேடம் இவரோட கடைசி 3 மாசத்தோட ஃபோன் கால் டீடெயில்ஸ்படி இவர் ராஜேஷ் கூட அடிக்கடி பேசி இருக்காரு. குறிப்பா வீக்எண்ட் ட்யூட்டிய நிறைய தவிர்த்து இருக்காரு. அந்த நாட்கள்ல ராஜேஷ்க்கு மட்டும் தான் கால் பண்ணி இருக்காரு. அது மட்டுமில்லாம அடிக்கடி வேலை விஷயமா வெளியூர் போறதா வீட்டுல சொல்லி இருக்காரு. ஆனா அந்த நாள் எல்லாம் இவரோட லீவ் டேட்ஸ் கூட மேட்ச் ஆகுது. இந்த எல்லா நாள்லயும் இவருக்கும் ராஜேஷ்க்கும் ஃபோன் கான்டாக்ட்ஸ் அதிகமா இருக்கு. இதுல 2 தடவை ஃபோன் ரீசார்ஜ் பண்ணி இருக்கார். ஒண்ணு மதுரைல. இன்னொன்னு வேலூர்ல. இந்த 2 ஊருக்கும் இவர் புரொஃபைலுக்கும் எந்த தொடர்பும் இல்ல”
கவிதா:
“இது போதுமா இல்ல”
கதிரவன்:
“மேடம் நீங்க நினைக்கிற மாதிரி இதுக்கும் ரேவதி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல”
கவிதா:
“நீங்க நடந்தத மட்டும் சொல்லுங்க. சம்மந்தம் இருக்கா இல்லையாங்கிறத நாங்க முடிவு பண்ணிக்குறோம்”
கதிரவன்:
“ஒரு 3 மாசத்துக்கு முன்ன ராஜேஷ் எனக்கு ஃபோன் பண்ணி தனக்கு வேண்டிய பொண்ணு ஒண்ணு அரசியல் சொல்வாக்கு உள்ள ஒரு ஃபைனான்சியர் கிட்ட கடனுக்கு ஜாமீன் கொடுத்து மாட்டிகிட்டதாவும் அந்த ஏமாத்துன நபர கண்டுபிடிக்க என்னோட உதவி வேணும்னும் ஃபோன் பண்ணாரு. இத லீகலாவே டீல் பண்ணலாமேனு கேட்டேன். அதுக்கு அது ஒரு பெரிய அரசியல் தலைவரோட ப்ளாக் மணினும் அதனால லீகலா போக விட மாட்றாங்கனும் சொன்னாரு. பிரச்சினைல சிக்கி இருக்க பொண்ணு பேரு நந்தினி. ராஜேஷோட எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட். அதுவும் அவங்க ஊர்ல உள்ள காலேஜ்ல UG படிக்கும் போது லவ் பண்ணி இருக்காங்க. இவங்க லவ் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருந்து இருக்காங்க. ஆனா அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சிடுச்சு. ராஜேஷ PG படிக்க டெல்லி அனுப்பிட்டு நந்தினி குடும்பத்த மிரட்டி ஊர விட்டு விரட்டி இருக்காரு. அதுக்கு அப்புறம் ராஜேஷ் ஊருக்கு போனப்ப அந்த பொண்ணு யாரோடயோ ஊரவிட்டு ஓடிட்டதாவும் அவமானத்தோட அவங்க அம்மா இந்த ஊர்ல இருக்க பிடிக்காம வீடு நிலத்த வித்துட்டு எங்கயோ போய்ட்டாங்கன்ற தகவல் மட்டும் தான் கிடைச்சிருக்கு. அவரும் அவங்க காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் மூலமா நிறைய தேடி இருக்காரு. நந்தினிய கண்டுபிடிக்க முடியல. அப்புறம் தான் ரேவதிய கல்யாணம் பண்ணி இருக்காரு”
கவிதா:
“இதெல்லாம் நீங்களே விசாரிச்சு தெரிஞ்சிக்கிட்டீங்களா?”
கதிரவன்:
“இல்ல மேடம். இதெல்லாம் ராஜேஷ் எனக்கு சொன்னது”
கவிதா:
“சரி மேல சொல்லுங்க”
கதிரவன்:
“4 மாசத்துக்கு முன்னாடி தான் ராஜேஷ் சேலத்துல வெச்சு நந்தினிய பார்த்து இருக்காரு. அப்ப தான் நந்தினிக்கு அவரோட அப்பா செய்த கொடுமைகள் தெரிஞ்சி இருக்கு. இப்ப நந்தினிக்கு அம்மாவும் இல்ல. அதனால அவரோட ஃப்ரெண்ட்ஸ் மூலமா டெல்லில வேலை வாங்கி தர்றதா ராஜேஷ் ப்ராமிஸ் பண்ணி இருக்காரு. நந்தினி யார் கூடவோ ஓடிப் போய்ட்டதா நம்பிட்டு இருந்ததால் கல்யாணத்துக்கு அப்புறம் ரேவதி கிட்ட அவரோட கடந்த காலத்த பத்தி சொல்லாம விட்டுட்டாரு ராஜேஷ். நந்தினி சீக்கிரமே டெல்லில செட்டில் ஆகப் போறதால ரேவதிக்கு சொல்லவே வேண்டாம்னு முடிவு பண்ணி இருக்காரு. அப்ப தான் நந்தினி இந்த பணப் பிரச்சினைல மாட்டி இருக்காங்க. இதுவரைக்கும் சொன்ன எல்லாமே ராஜேஷ் எனக்கு சொன்னது. இதுக்கு அப்புறம் தான் பணம் ஏமாத்திட்டு ஓடிப்போன நபர தனிப்பட்ட முறையில தேடி தர முடியுமான்னு கேட்டாரு. என் பொண்ணோட படிப்புக்கு அவர் நிறைய உதவி பண்ணி இருக்காரு. அதனால நானும் செய்து தர்றதா ஒத்துகிட்டேன். அந்த டைம்ல பண்ண ஃபோன் கால்ஸ் லிஸ்ட் தான் நீங்க வெச்சு இருக்குறது”
கவிதா:
“சரி. நீங்க தேடிப் போன ஆள கண்டுபிடிச்சிட்டீங்களா?”
கதிரவன்:
“அது ஒரு பொண்ணு மேடம். நந்தினி வீட்டு பக்கத்துல தான் குடி இருந்து இருக்கா. நம்ம டிபார்ட்மெண்ட் நண்பர்கள வெச்சு விசாரிச்ச வரை அவ பெரிய ஃபிராடு மேடம். இது மாதிரி ஏகப்பட்ட இடத்துல சீட்டிங் பண்ணி இருக்கா. எல்லாமே ப்ளாக் மணி டீலிங் தான். ஸ்கெட்ச் போட்டு கரைக்டா அடிச்சு இருக்கா. ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொரு பேர். ஒவ்வொரு அடையாளம். இங்க லாவண்யா. இந்த பொண்ணு அவள நம்பி தன்னோட வீட்டு பத்திரத்த கொடுத்து மாட்டி இருக்கு. அப்புறம் இன்னொரு விஷயம் (சற்று மெல்லிய குரலில்) இந்த பணம் மினிஸ்டர் கார்த்திகேயனோடது. நந்தா’னு ஒரு லோக்கல் ரௌடி ஃபைனான்ஸ் கம்பெனி நடத்திட்டு இருக்கான். அதுல புழங்குற ப்ளாக் மணி பூரா மினிஸ்டர்து தான். வெளி உலகத்துக்கு அவன் சாதாரண மிடில் க்ளாஸ் ஆள் மாதிரி தான் இருப்பான். ஆனா அவனுக்கு ஒண்ணுனா மினிஸ்டர் லெவல்ல பிரஷர் வரும். நான் இந்த மேட்டர உங்க கிட்ட மறைச்சதுக்கு காரணமே இதுதான். இத எங்கயாவது கேஸ்ல கோர்த்து விட்டு வேலைக்கு உலை வெச்சிராதிங்க மேடம்”
கவிதா:
“So ராஜேஷ் தன்னோட எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட டெல்லில செட்டில் பண்ணிட்டு அவ கூட இருந்த அஃபயர அங்க கண்டினியூ பண்ண முடிவு பண்ணி இருக்கான். ஆனா பணப் பிரச்சினை குறுக்க வந்ததால எல்லாம் சொதப்பிடுச்சு”
கதிரவன்:
“மேடம் நீங்க நினைக்கிற மாதிரி அவங்களுக்குள்ள அஃபயர்லாம் இல்ல”
கவிதா:
“எல்லாத்தையுமே அவசரப்பட்டு கன்க்ளூட் பண்ணாதீங்க கதிர் சார். நீங்க சொல்றது உண்மைனா இந்த கேஸ்ல உங்களுக்கு தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கு”
– தொடரும்….