கல்யாணமும் காட்சியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 10,096 
 
 

வாடிநக்கையின் சஞ்சாரத்தில் ஒளியாடீநு கைக் கோர்த்து நகர்வது சுகம் தான். அதுவும் தலைவனின் கண்ணாக தலைவியும், தலைவியின் மனதாக தலைவனும் இருந்தா வழியெங்கும் முட்கள் கூட மலராகும். இன்ப துன்பங்களில் ஒன் பை டூ என்ற முழுமையான பந்தம் தான் திருமணம். என்றுமே ரசம் போகாத வாடிநக்கைக் கண்ணாடியில் பிம்பங்களாக, பேரன்பின் பெயர்களாக, “கணவன் – மனைவி”அவர்களின் விட்டுக் கொடுத்தல் தான் மகத்துவம்.

ஆரோக்கியமான நாட்கள் காலண்டரையும் தாண்டும். இந்தக் கதையில் வரும் கணவனும் மனைவியும் அப்படியே சாம்பாரில் கரையும் உப்பைப் போல கண்ணணுக்கு தெரியாத மகிடிநச்சியை, மனிதத்தைக் கொடுக்கும் உருவங்கள், கணவன் – மணி, மனைவி -ரூபா.

அவர்கள் பயணத்தினூடே செல்லும் நிலவின் ஒளி எந்நாளும் படரும் மகிடிநச்சியின் துளி. அவர்களின் புரிதல்கள் கணிதத்தில் இடம் பெறாத புது தோற்றம். அதுவே அன்பின் ஏற்றம்.

வானை வில்லாக வளைத்தார்களா? – இல்லை
மணலைக் கயிறாக திரித்தார்களா? – இல்லை
அப்படி என்னதான் செடீநுதார்கள்?
வாடிநந்தார்கள்…
அவர்களின் நொடிகள் உங்களுக்காக…

திருமணப் பயணத்தின் 6 மாதங்களில்….

கணவன் மணி, வங்கி ஊழியர். மாதம் நிதானமான சம்பளம். அவன் மனைவி ரூபா வீட்டைப் பார்த்துக் கொள்கிறார். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த முதல் நாளிலே புது தம்பதியினர் போல தெரியவில்லை. வெகு நாட்களாக புரிந்து பழகி வாடிநந்தவர்களாக தெரிந்தார்கள். கல்யாணத்தின் போது மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் சில விளையாட்டுக்களை உறவினர்கள் நடத்தினார்கள். அதில் ஒன்று மோதிரம் தேடுதல். பாதி தண்ணீர் நிறைந்த குடத்தில் இரண்டு கிராம் மோதிரத்தை போட்டு குடத்தில் கையை விட்டுத் தேடச் சொன்னார்கள்.

“இரண்டு பேரில் யாரு கண்டு படிக்கிறாங்கன்னு பார்ப்போம்”. என்றார் உறவினர் ஒருவர்.

இருவரும் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் துழாவிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த எல்லோருக்கும் சந்தேகம் எழுந்தது.

“அட என்னப்பா! மோதிரம் இருக்கா இல்லையா? என்று குரல் எழும்ப.”

ஒருவர் அந்த பானையில் கைவிட்டார். இரண்டு வினாடிகளில் மோதிரம் அகப்பட்டது. அதன் பிறகு புலப்பட்டது எல்லோருக்கும், ஒருவர் எடுக்கட்டும் என்று இன்னொருவர் விட்டுக் கொடுத்து நேரம் கடத்தினார்கள் என்று.

“புதுசுல்ல! போகப்போக தான் சாயம் போகும்”. என்று பகடி செடீநுதனர் சிலர். இதை மணியும் ரூபாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தங்களது பயணத்தின் தொடக்கத்திலே புரிதலின் சாலையைக் கண்டறிந்தனர்.

மணி, நான்கு நாட்கள் மட்டுமே திருமணத்திற்காக விடுப்பு எடுத்திருந்தார். மணி வேலைக்குச் செல்ல, ரூபா சமைத்துக் கொடுப்பாள். தினமும் ஒவ்வொரு விதமான, சுவையான சாப்பாட்டை தயார் செடீநுது கொடுத்திருந்தாள் ரூபா. இதில் கணவனின் உடன் வேலை புரிவோருக்கும் சேர்த்து ஒரு டப்பாவும் கட்டிக் கொடுப்பாள்.

ஒரு நாள் படம் பார்க்கலாம் என்று திட்டம் போட்டார்கள். ரூபா மிகுந்த ஆசையுடன் இருந்தாள். மணியும் அதற்காக ஒரு நாள் அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் அனுமதி கேட்டார். அந்த வங்கியில் இதுவரை தடுக்க யாருமில்லை இருந்தாலும் நியாயமாகவும், நேர்மையாகவும் திகழும் ஜீவன் அவர். அது வெள்ளைக்கிழமை மாலைப் பொழுது. பொன் போல வெயில் படற தனது RX100ல் மனைவி ரூபாவை அழைத்துக் கொண்டு சினிமா தியேட்டருக்குச் சென்றார்.

“எந்தப் படத்துக்கு போகலாம்” என்றார் மணி. “புதுப் புது அர்த்தங்கள் போலாமாங்க” என்றாள் ரூபா.

“சரி ” என்று டிக்கெட் எடுக்க விரைந்தார் மணி. அன்று அந்தப் படத்தின் முதல் நாள் கூட்டம் வழிந்தோடியது. அப்படியும் மணி ரூபாவை வண்டியின் அருகே நிற்க செடீநுது, டிக்கட் கவுண்டர் வரிசையில் நின்றார். எல்லோருக்கும் முந்திக்கொண்டிருக்க, ஒரு கரும்பலகை, “ழடிரளந கரடட” என்று வைக்கப்பட்டது கூட்டம் கலைய மணி ரூபாவிடம் வந்தார்.

“House Full லா, பிளாக்ல வாங்கவா?”

“அப்படியெல்லாம் படம் பார்க்க வேண்டாம்ங்க, பீச்சுக்கு போகலாமா?”

“சரி வா! இங்க இருந்து பக்கம் தான் போகலாம்,” என்று கடற்கரைக்கு வண்டியை ஓட்டினார். இருவரும் மணல் திட்டில் அமர்ந்தனர். கடலில் அலையை ரசித்துக் கொண்டேயிருக்க, மெல்ல நிலவு எழுந்தது. அதன் ஒளி கடலைப் போர்த்தியது. மணி சுண்டல் வாங்கினார். இருவரும் பகிர்ந்தனர்.

“இந்த ஆறு மாசத்துல இப்பத் தான் முதல் தடவையாபடத்துக்கு வந்தோம், ஆனா! என்று மணி சொல்ல”

“A.C காத்துல, பாட்டும் காட்சிய பாக்கிறதவிட, இந்த பீச் காத்துல, நிலா வெளிச்சத்துல உங்க கிட்ட பேசுற காட்சி அலாதிங்க” என்றாள் ரூபா.

“நீ எவ்வளவு ஆசையாயிருந்த? சரி… நாளைக்கு போலாமா?” என்று மணி கேட்க,

“என்னங்க கையளவு ஆசையிருந்தா, கடலளவு மகிடிநச்சியிருக்கும்ங்க!” கடற்கரையின் காற்றில் மேனி குளிர, மணிக்கு மனம் குளிர்ந்தது.

திருமணப் பயணத்தின் 14 ஆண்டுகளில்….

P.T. உஷாவை விட காலம் வேகமானது, ரூபாவும் மணியும் தங்களது திருமண பந்தத்தின் 14 வது ஆண்டில் இருக்கிறார்கள். இவர்களுக்கு எழில் என்ற மகனும் ஏஞ்சல் என்ற மகளும் உள்ளனர். எல்லா மதமும சம்மதம் என்ற நிலைப்பாட்டுடன் வாழும் குடில் அது. அதே சுஓ100 ல் தான் பயணம் தொடர்கிறது. மணிக்கு, அற்புதமான பிள்ளைகள், எதையும் எதிர்பாரா மனைவி என்று காலம் இன்பமாடீநு நகர்கிறது. மணி புதிதாக வண்டி வாங்க வேண்டுமென திட்டமிட்டு சீட்டிப் போட்டார். அது மனைவி ரூபாவுக்கும் தெரியும்.

அது முப்பதாயிரம் ரூபாடீநு சீட்டு மாதமும் கடந்தது. மணி ரூபாவிடம், “சீட்டை எடுக்க போறேன், ஆனா புது வண்டி விலை ஜா°தி, போதுமானு தெரியல.” என்று ஐயத்துடன் கூறினார்.

“எக்ஸசேன்ஞ் ஆபர்ல வண்டி வாங்களாங்க” என்று ரூபா கூற,

“பார்க்கலாம்!” என்று நகர்ந்தார் மணி.

ரூபாவின் தனது பழைய தங்கச் சங்கிலியைப் புதுப்பிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை, அத்துடன் பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்ற கனவும் இருந்தது.

இதுவரை தனக்குள் இருந்த தங்கச் சங்கிலி சமாச்சாரத்தை மணியிடம் சொன்னதேயில்லை. ஆனால், பல முறை பிள்ளைகளைன் படிப்பைப் பற்றி அவ்வப்போது சொல்லிருக்கிறாள்.

மணி, சீட்டை ஒரு வழியாக எடுத்தார். இருபத்தியொன்பது ஆயிரத்து நானூறு ரூபாய் கிடைத்தது மூன்று தள்ளுக்கு முன்பு. தன் மனைவியை அழைத்து வண்டி வாங்கலாம் என எண்ணி பணத்துடன் கிளம்பினார். அன்று மிகவும் அதிக வாகன நெரிசல். அமைச்சர் வருகையினால் சாலைகளில் ஈ போல வாகனங்கள் மொடீநுத்துக் கொண்டிருந்தன. மணிக்கு தன் வண்டியை மெதுவாக ஓட்ட, வழியில் உள்ள நடை பாதையில் வளையல்களும், கவரிங் நகைகளும் விற்பனைக்கு இருந்தன.

அதைப் பார்த்தவுடன் இதுவரை தன் மனைவிக்கு இது போல் கவரிங் நகைகள் கூட கேட்டதில்லை; இவ்வளவு அசலாக இருந்திருக்கிறாளே என்று நெகிடிநந்தார் மணி. ரூபாடீநு ஆயிரம் செலவிட்டால் தனது வண்டியை சரி செடீநுயலாம், எதற்கு புதிது என்று தீர்மானம் செடீநுதார் ஒரு நாள் ரூபாவிடம் கூட சொல்லாமல் 15 ஆயிரம் ரூபாவிற்கு 4 சவரனில் தங்க சங்கிலி வாங்கினார்.

வண்டியின் சத்தம் கேட்டு எழிலும், ஏஞ்சலும் வெளியே ஓடி வந்தார்கள். பிள்ளைகளுக்கு திண்பண்டங்கள் வாங்கி இருந்தார். தனது வேலைப் பையையும், திண்பண்டப் பையையும் பிள்ளைகளிடம் கொடுத்தார். அதை எடுத்து உள்ளே சென்றார்கள் பிள்ளைகள்.

“ஏதுங்க இந்த சுவிட்° எல்லாம்.” என்றாள் ரூபா. “சீட்டெடுத்தேன்,

இருபத்தியொன்பதாயிரத்து நானூறு கிடைச்சது, நல்ல தள்ளு! அதான் எடுத்துட்னேன்,

சொன்னா கோவப்படாதே, உனக்கு செயின் வாங்கிட்டேன் 15 ஆயிரத்துக்கு. மீதி பசங்க படிப்பு செலவுக்கு வெச்சுக்கலாம்,” என்றார் மணி.

“அப்போ வண்டி???” என்றார் “ஆயிரம் ரூபாடீநு வெச்சா சரி ஆயிடும், சரி உன்னோட பழைய செயின் எங்க? கழுத்துல காணோம்?”

“கோவப்படாதீங்க, உங்க புது வண்டிக்கு காசு மேல தேவைப்படுமுன்னு சொன்னீங்கல அதான் வித்துட்டேன். நம்ப பக்கத்து வீட்டு பத்மா தான் வித்து கொடுத்தா, இந்தாங்க காசு” என்றார்.

“சரி! அதையும் பசங்க படிப்புக்கு வெச்சிக்கலாம்,” என்றார் மணி புன்சிரிப்புடன். “செயின் ரொம்ப அழகா இருக்குங்க! ச்ச… வண்டி வாங்கனும்னு ஆசையா இருந்தீங்களே!!” மகிடிநச்சியும், கலக்கமும் கலந்து சொன்னாள் ரூபா.

“கைளவு ஆசையிருந்தா, கடலளவு மகிடிநச்சியிருக்குமில்லையா” – இது மணி யின் மறு பதில்.

திருமணப் பயணத்தின் 28 ஆண்டுகளில்….

வசதி குறையாயிருந்தாலும் அசதியில்லாமல் பயணத்தைக் கடக்கிறார்கள் இருவரும். தங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியளவிற்கு வந்துவிட்டார்கள். எழில் பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறான். ஏஞ்சல் மேற்படிப்பு படிக்கிறாள். மணி இருவருக்கும் நல்ல கல்வியினைக் கொடுத்தார். ரூபா தன்னம்பிக்கை கொடுத்தாள். ரூபாவும் மணியும் சேர்ந்து அன்பைக் கொடுத்தார்கள்.

எழிலுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். ஒரு நல்ல வரன் வந்தது. குடும்பத்தோடு பெண் பார்க்க சென்றார்கள். எல்லோருக்கும் குடும்பத்தையும், பெண்ணையும் மிகவும் பிடித்தது.

மேற்கொண்டு பேச ஆரம்பித்தார் மணி.

“எங்களுக்கு எந்த வரதட்சணையும் வேண்டாம்! கல்யாணத்துக்கு சரிபாதி செலவு பகிர்ந்துக்கலாம். எனக்கு இத வாங்கி கொடுங்க! அத வாங்கி கொடுங்க! என உங்கள கேட்கிறதுல உடன்பாடு இல்லைங்க. எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சு இருக்குங்க, உங்க எல்லோர் விருப்பமும் கேட்டு சொல்லுங்க, நாங்க கிளம்புறோம்,” என்றார் மணி.

வீட்டிற்கு திரும்பினார்கள் எல்லோரும். மணி சட்டென்று எல்லோரையும் அழைத்தார்.

“எழில்! அப்பா எதாவது தப்பா பேசிட்டேனா பா??? நீ ஏதாதவது எதிர்…..” என்று கலக்கமாடீநு கேட்டார் மணி.

“என்னப்பா நீங்க! இப்படி கேக்குறீங்க, நீங்களும் அம்மாவும் ஏதாவது எதிர்பார்த்து இருந்திருக்கீங்களா?? நான் மட்டும் எப்படிப்பா!! என்றான்” எழில்.

“இது இல்லைப்பா….”.

“அப்பா! எனக்கு நீங்களும் அம்மாவும் சொல்லாம நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்து இருக்கீங்க! விட்டுக்கொடுத்து வாழ்றது, அறம், புரிதல்ன்னா என்ன, ன்னு அப்புறம் எதிர்பாரா அன்பு, இப்படி பார்த்த எனக்கு நீங்க எது செடீநுதாலும் சரியாத் தான் இருக்கும், எனக்கு வரதட்சணைல உடன்பாடு இல்லப்பா!!”

கண்ணின் ஒரத் துளிகளுடன், “சரிப்பா, நீ ஏதாவது ஆசப்படுவ இல்லையா!!!”

“கையளவு ஆசையிருந்தா, கடலளவு மகிடிநச்சியிருக்கும்பா!!” ரூபாவும், மணியும் மனம் நெகிடிநந்தார்கள். இதை எல்லாம் மௌனமாக கவனித்தாள் ஏஞ்சல்.

“அப்பா!! சொல்ல மறந்துட்டேன் ஆபீஸ் கார் இனி தரமாட்டாங்க, உங்க பைக் RX100 ரெடி பண்ணி ஓட்டுறேன் பா!! நீங்க கல்யாண வேலையை ஆரம்பிங்க, ” என்றான் எழில்.

பரஸ்பரம், அன்புள்ள தங்களின் வாடிநக்கைப் பயணத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா மூட்டையைப் போல பல நல்ல குணங்களைக் கொண்டு கடக்கிறார்கள் ரூபாவும், மணியும், மனைவியின் மனசை கேட்கும் காது சில கணவர்களுக்கு உண்டு. கணவனின் மனசை பார்ப்பது சில மனைவிமார்களுக்கு உண்டு. இது தான் பேரன்பின் பரிணாமங்கள்.

கணவனாக மனைவியும்,
மனைவியாக கணவனும் வாடிநவதே ஒரு தவம்.
இப்படியே அவர்களின் வாரிசுகளின் பயணமும் தொடர்கிறது.
அவர்கள் பயணம் தொடரும் ……….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *