கற்பகம் முதியோர் இல்லம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 8,602 
 

ரமணா: என்னடா ஐயப்பா ராகினி மேடம் இல்லத்திற்குள்ளே இல்லையா என்றார்.

இல்லைன்னு நினைக்கிறேன் சுதாவை கூட்டிண்டு வெளியே போனா என்றார்

ஐயாகண்ணு நீ பார்த்தியோ என்றார்

ராகினி அம்மா கிராமத்துக்குள்ளே போயிருக்கிறாங்க என்றான்

கவிதாவை கூட்டிட்டு வரத்துக்கா என்றார்

ஆமாங்க ஐயா என்றார் ஐய்யாகண்ணு

அங்க பசங்க உட்கார இடத்தை சுத்தம் செய்தியா என்றார் ரமணா

சுத்தம் செஞ்சுட்டேன் என்றான்

கவிதா மற்றும் அனாதை பிள்ளைகளையும் அழைத்து வந்தனர் சுதாவும் ராகினியும்.

அங்கிருக்கும் முதியவர்களை பார்த்து ஆரம்பிக்கலாமா என்றார்.

நாங்க ரெடி என்றனர்.

ஒவ்வொரு முதியவரிடமும் ஒரு பிள்ளைகள் பாடம் கேட்க அமர்ந்தனர் அவர்கள் அருகில் ஒரு கல்லூரி மாணவர்களும் அருகமர்ந்தனர்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டே உட்கார்ந்தார் அசோக் இப்ப என்ன பண்ண போறீங்க என்றார்.

முதியவர் பிள்ளைக்கு தன் திறமையை வெளிபடுத்தி பாடம் எடுக்கலானார் அவர்களுக்கு புரியாததை அருகில் உள்ள கல்லூரி மாணவன் விளக்க ஆரம்பித்தான். இச்செயலால் மாணவனுக்கு அறிவு நன்றாக வளர்ச்சியடைந்தது எனலாம்.

ஒரு மணி நேரம் முடிந்தவுடன் அப்பிள்ளைகளுக்கு பலகாரங்கள் வழங்கப்பட்டன.

அசோக் ரமணாவிடம் கேட்டார் இது என்ன ஏற்பாடு என்றார்

ஞாயிறு ஒரு மணி நேரம் பள்ளிகூட பசங்க பாடம் படிக்க வரதால பெரியவர்களுக்கு பயன்னுள்ளதா பொழுது போகிறது அவங்க கூட பள்ளியில நடந்ததை பற்றி கேட்பதால் அவர்கள் தன்னை மறந்து சிரிக்கிறார்கள் பிள்ளைகளின் அன்பு முதியவர்களின் தனிமையை சில மணி நேரம் போக்கறாங்க

அது மட்டுமல்லாம பிள்ளைகள் பாட சந்தேகங்களை இங்க நிவர்த்தி செஞ்சுகிறதால அவங்க பள்ளியிலே பாடத்தை ஒழுங்கா படிக்கிறார்கள் புரிந்து கொள்ள கல்லூரி மாணவர்கள் உதவுவதால் நன்றாக படிக்க முயற்சி செய்யறாங்க என்றார்.

எங்க முதியோர் இல்லத்தில் தாய் தந்தை நல்ல வேலையில் இருந்தவங்க பசங்க வெளிநாடுகளுக்கு செல்வதால் இங்கே கொண்டு விட்டுவிட்டு போகிறார்கள் தனிமையின் கொடுமையிலிருந்து தன்னை போக்கிக் கொள்ள தான் இந்த முயற்சி என்றார்.

அவங்க இந்த வேலையை இஷ்டத்தோடு செய்றாங்களா என்றார் அசோக்

அவங்க இஷ்டத்துக்கு மட்டும் இதை செய்யறதில்லை நாட்டுக்கு தன் பங்களிப்பாகவும் இதை செய்யறாங்க தன் திறமை படிப்பு அனுபவத்தை பிற்கால சந்ததியருக்கு கொடுக்க நினைக்கிறார்கள் என்றார்

பசங்கங்களை அவங்க இடத்திலே விட்டுவிட்டு வந்துரு ஐய்யாகண்ணு என்றார்

கண்கள் தெரியாத மாணவர்கள் அழைத்து வந்தார் ஒரு முதியவர்.

வாங்க மானோகர் இவங்களுக்கும் பாடம் சொல்லித்தாங்க என்றார் ரமணா

அவர்களுக்கும் பாடம் செவிவழி மூலம் பாடம் ஆரம்பித்தனர்

இவங்களுக்கு எப்படி இந்த முதியவர்கள் உதவாங்க என்றார் அசோக்

நாம வேதத்தையே செவிவழியாக கத்துக்கிட்டோம் ஒலிகள் வித்தியாசத்தின் நாம் வேதத்தை பயில்கிறோம். கண்கள் இல்லாதவர்களுக்கு பயிலும் முறையை இம்முதியவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளோம் அதன் வாயிலாக பயிற்சி அளிக்கின்றனர் என்றார்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் செல்ல சொற்பொழிவு செய்ய ஓரு முதியவர் சிறந்த பேச்சாளர் தன் உரையை தொடங்கினார் இப்போது முதியவர்கள் சொற்பொழிவு கேட்கும் ரசிகர்களாக மாறினர்.

சொற்பொழிவை ரசித்தனர் அவர்கள் அதன் பகுதிகளை பற்றி ஓரு மணி நேரம் விவாதம் செய்தனர். நாட்டு நடப்புக்கள் அலசப்பட்டன.

பின்னர் ஒரு மணிநேரம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பஜனை நடந்தது அதிலும் இம்முதியோர்கள் பங்கு இருந்தது.

இரவு 8 மணிக்கு உணவு வழங்கப்பட்டன உணவு உண்டு தன் ஓய்வரைக்கு செல்கின்றனர்.

இதை பார்த்துக்கொண்டிருந்த அசோக் சார் நானும் வயதான காலத்தில் இங்கேயே வந்திடுகிறேன். இதை எல்லாம் பார்க்க மனம் ரொம்ப சந்தோஷமாயிருக்கு என்றார்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *