கருமேகமலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2024
பார்வையிட்டோர்: 747 
 
 

புதுசா கல்யாணம் ஆன ஜோடி அன்புவும் தீபாவும் ரெண்டு பேரும் ஹனிமூன்  எந்த ஊரு  போலாம் அங்க போலாமா இங்க போலாமான்னு மாத்தி மாத்தி கேட்டுட்டு  ஒரே கன்பியூசன்ல  இருக்காங்க.  சரி தீபா நீயே எதாவது நல்ல இடமா யோசி நான் வெளிய போய்டு வரேன் என சொல்லிட்டு கிளம்பினான் அன்பு. ஏங்க வரும்போது ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல சரின்னு தலையாட்டிவிட்டு  கிளம்புறான்.  அவன் வேலைய முடிச்சுட்டு அப்படியே வரப்ப  ஒரு பேக்கரியில் நிறுத்தி உள்ளே போய் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு இருக்கான். என்னடா புதுமாப்ள ஹனிமூன்லாம் முடிஞ்சா என கேட்கிறான் அருண்.  அட நீ வேற ஏன்டா,  நடந்தத சொல்றான் அன்பு.  எங்களுக்கு சொந்தமா ஒரு எஸ்டேட் இருக்கு நாங்க போனா தங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கு  பக்கத்துல  சுத்தி பாக்க நிறைய இடம் இருக்கு மலைப்பகுதினால  கிளைமேட் ஜில்லுன்னு இருக்கும்.  

நீ அங்க போறியா என கேட்கிறான். அது எப்படி  சரியா இருக்கும் அருண்.  ஏன் சரி வராது நான்  எப்பையாவது போய் அங்க தங்கி ரிலாக்ஸ் பண்ணுவேன்.  அத பாத்துக்க ராமைய்யான்னு ஒருத்தர் இருப்பாரு சமையல் எல்லாம் அவரு  பாத்துப்பாரு நீங்க மட்டுந்தான் இருக்க போறீங்க. நீங்க போனா மட்டும் போதும், மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்.  அன்பு யோசிக்குறான் நீ உன் வீட்ல கேட்டு சொல்லு என சொல்லிட்டு கிளம்பி விட்டான் அருண்.  அன்பு ஸ்நாக்ஸ் வாங்கிட்டு  வீட்டிற்கு வந்ததும்  அருண் கூறியதை தீபாவிடம் சொல்கிறான் அன்பு. தீபாவிற்கு எக்சைட்மெண்ட் தாங்கல, போலாம் என உடனே கூறிவிட்டாள். ஆமா எங்க இருக்கு என கேட்கிறாள் தீபா.  நானே அத கேக்க மறந்துட்டேன்  இரு போன் பண்றேன், என  அருண்க்கு போன் பண்றான்.  சொல்லு அன்பு வீட்ல என்ன சொன்னாங்க என கேட்கிறான்.   ஓகே சொல்லிட்டாங்காடா ஆமா எங்க இருக்கு எஸ்டேட்  கருமேகமலை என  கூறினான் அருண். பேரே ஒருமாறி பயமா இருக்கே பெயரை கேட்க பயமா தான் இருக்கும் ஆனா ஊரு  சூப்பரா இருக்கும் என  கூறிவிட்டு வைத்துவிட்டான். இவன் தீபாவிடம் சொல்ல இந்த பயணம் கொஞ்சம் த்ரில்லாவும் இருக்கும் போல  என கூறுகிறாள்.

மறுநாள் காலை சார் என ஒருவர் அழைக்கும் சத்தம் வாசலை நோக்கி வந்தான் அன்பு.  கார் டிரைவர்  அவர்களை அழைக்க அருணே  காரை அனுப்பிட்டான் போல என் பேரு கணேசன்,  அருண் சார் அனுப்புனாரு ரெடியா இருக்கிங்களா போலாமா  என கேட்கிறான்.  பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க என சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.  இருவரும் ஏறினார்கள் கார் புறப்பட்டது.  நீங்க அந்த ஊருக்கு போய்ருகீங்களா  கணேசன் என அன்பு கேட்கிறான்.  ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அருண் சார் கூட போனேன்.  எப்படி இருக்கும் ஊரு.  அவர விட்டுட்டு நான் வந்துருவேன், அவரு திரும்ப கூப்பிடும் போது போவேன்.  சுத்திலாம் பாத்ததில்ல  சார் என்கிறான். அன்பு  தூங்கிட்டான்.  தீபா ஹில்ஸ வேடிக்க பாத்துட்டு வர. கருமேகமலை என்ற நேம் போர்ட்டு கண்ணில்பட  இதான் சார் எஸ்டேட் இதுக்கு கொஞ்சம்  தள்ளிதான் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு என்றான்.  அடுத்த சில நிமிடங்களில் பெரிய  வீடு தென்பட்டது அதன் முன் கார் நின்றது.  

இருவரும்  காரை விட்டு இறங்கினார்கள்.  லக்கேஜ் எடுத்து கீழே வைத்துவிட்டு கணேசன் நீங்க உள்ளே போங்க சார் நான் கார பார்க்கிங்ல விட்டுட்டு வரேன் என்று சொல்லிட்டு சென்றான்.  லக்கேஜை எடுத்துக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர்.  ராமைய்யா ராமைய்யா என அன்பு அழைக்க சொல்லுங்கைய்யா பயணம்லாம் வசதியா இருந்துச்சா, நல்லா இருந்துச்சு ஆமா எங்க ரூம் எது.

எதிரில் இருக்கும் அறையை காட்டிய ராமைய்யா நீங்க அங்க போய் ஓய்வெடுங்க. காப்பி போட்டுட்டு உங்கள கூப்பிடறேன் என சொல்லிட்டு கிச்சனை  நோக்கி சென்றார்.  இவரு ஏன் வித்தியாசமா இருக்காரு என்கிறாள் தீபா.  மலைக்கிராம  மக்கள் இப்படித்தான் இருப்பாங்க நீ வா நாம போவோம் என்கிறான் அன்பு.  இருவரும் ரூமுக்கு சென்று பிரஸ் ஆயிட்டு வெளிய வந்தாங்க.  கணேசனுடன் ராமையா வந்தார்.  பயணம்லாம்  வசதியா இருந்துச்சா தம்பி என ராமையா கேட்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி  கேட்டீங்கள  என்கிறான் அன்பு.  கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியா  இல்ல சார் நான் கார் நிறுத்த போனப்ப  தோட்டத்துல காய்கறிக்கு  தண்ணி விட்டுட்டு இருந்தாரு.  அவருக்கு கூட பேசிட்டு ரெண்டு பேரும் இப்பதான் வந்தோம் என்கிறான் கணேசன்.  அப்ப முன்னாடி வந்தது யார்? 

தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *