(1910ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.
அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24
22-ம் அத்தியாயம்
மயிலாபுரியில் நாலைந்து வேலி நிலத்தைத் தோட்டமாகக் கொண்ட ஓர் அரண்மனையை மிகவும் அலங்காரப்படுத்தி வருணங்கள் புதிதாக வைத்தும், அரண்மனையின் மேல்மெத்தையிலே கூடத்தின் பலவிடங் களிலும் வினோதமான படங்களை மாட்டியும், பலவருணமமைந்த சுடரொளி வட்டத்தீபங்கள் தொங்கவிட்டும், ஒரு பக்கம் மேடை ஏற் படுத்தி அதை மசமல் பட்டால் மூடி மூன்று நாற்காலிகள் போட்டும், அதற்கு எதிரில் அனேக நாற்காலிகளை வரிசை வரிசையாக அமைத்து இருபக்கத்திலும் அதிக இடம் காலியாக விட்டும், சிறிய மேஜைகளைச் சரிகைகளினால் விசித்திரமான வேலைகளமைந்த பட்டுத்துண்டுகளால் மூடி அவைகளில் நூதனமான பதுமைகளையும் யானைத்தந்தத்தினாற் செய்த அற்புதமான சாமான்களையும் கண்ணாடியால் செய்த வேடிக் சைச் சாமான்களையும் வெள்ளித்தட்டில் புஷ்பங்களை நிறைத்துக் காலியாக இருந்த இடத்தின் மத்தியில் இடைக்கிடை வைத்தும், மூலைக்கு மூலை புஷ்பத்தொட்டிகளை அமைத்தும், சந்தனக்கிண்ணங் களும் பன்னீர்ச்சொம்புகளும் தாம்பூலமும் கொண்ட தட்டுகளைப் பலபக்கங்களில் வைத்தும் அலங்கரித்திருப்பதை அரங்கராவ் பார்த்து இடையிடையே இங்குமங்கும் சீர்திருத்தும்படி கலியாண சுந்தர முத லியாரிடத்தும் விஸ்வநாத செட்டியாரிடத்தும் சொல்லிக்கொண்டிருந்து,சாப்பாடு விஷயம் எப்படியிருக்கிறதென்று கேட்டார்.
விஸ்வநாத ரெட்டியார். – சுவாமி! பிராமணர்கள் மடைப்பள்ளியில் நிறை ந்து பிராமண போஜனம் ஒரு பக்கமும் மற்றவர்களுக்கு வேறுபக்கமும் சமையல் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன்.
அரங்கராவ்.-ஐயா கலியாணசுந்தர முதலியார் ! பத்திரிகைகளை நான் சொன் னவர்களுக்கெல்லாம் அனுப்பியிருக்கிறீர்களா? அவைகள் எல்லாருக் கும் சேர்ந்திருக்குமா?
கலியாணசுந்தர முதலியார் – தாங்கள் உத்தரவு செய்தவர்களுக் செல்லாம் அனுப்பியதோடு நான் அறிந்தவர்களுக்கும் அனுப்பியிருக்கிறேன். வெளியூரிலிருந்து அனேகர் இவ்வூருக்கு வந்திருக்கிறதாகவுங் கேள்வி. அரங்கராவ் – நம்மூரில் நான் சொன்னவர்களன்றி யார் யாருக்குப் பத்திரிகைகளை அனுப்பி வரும்படி கேட்டுக்கொண்டீர்?
கலியாணசுந்தர முதலியார் – சோமசுந்தர முதலியார் என்னும் வாலிபன் என் குமாரனுக்குச் சினேகனானதால் அவனையும், புது ஊரிலிருக்கும் வைத்தியரையும், ஜெகநாத முதலியார் தங்கையையும், அவள் வீட்டில் வந்திருக்கும் நடராஜ முதலியார் என்னும் ஒரு பெரியவரையும், பூங்கா வனத்தையும் அவள் மகளையும் வரும்படி கேட்டுக்கொண்டேன்.
அரங்கராவ்.- நீர் பெண்பிள்ளைகளை வரவழைப்பதனால் பிரயோசனமில்லை யாயினும் அவர்கள் வருவது எனக்குச் சந்தோஷமே !
கலியாணசுந்தர முதலியார் – செழுங்கமலத்தை வரவழைக்காமற்போனால் பெரியவர் வரமாட்டார். பூங்காவனத்தை வரவழைக்காமற்போனால் செழுங்கமலம் வரமாட்டாளென்றே அவர்களையெல்லாம் வரவழைக்க எண்ணினேன்.
அரங்கராவ்.- நீர் சொல்வதைப்பார்த்தால் நடராஜ முதலியாரை வரவழை க்க வேண்டுமென்றே இவர்களை யெல்லாம வரவழைக்க எண்ணங் கொண்டீர் போல் காணப்படுகிறது. ஆனதால் நடராஜ முதலியார் பெரிய தனவந்தராக இருக்கவேண்டும்!
கலியாணசுந்தர முதலியார்.- அவர் தனவந்தரல்ல. அவர் ஏழைகளிலெல்லாம் ஏழையே.
அரங்கராவ்.- பின் அவரை வரவழைக்க வேண்டிய சாரணம் யாது?
கலியாணசுந்தர முதலியரர்.- அவர் சாமர்த்தியமாகப் பேசுந்திறமையுள்ளவர். என் மகன் ஒரு ரூபாய் கைக்கொண்டு என்னைவிட்டு நீங்கிக் கடி தம் எழுதாமலிருந்தான். இவைகளை ஆதாரமாகக்கொண்டு அனேக விஷயங்களைத் தீர்க்கதரிசிபோலச் சொன்னார். அவர் இருந்தால் இவ் விடம் வரப்போகும் தங்களுடைய சினேகரைச் சந்தோஷப்படுத்து வாரென்றே வரும்படி கேட்டுக்கொண்டேன்.
அரங்கராவ் – உம்முடைய விருப்பம் அவ்விதமானால் நான் சந்தோஷப்பட வேண்டியதே! அதோ ஜெகநாதமுதலியாரும் வந்து விட்டார். வாரும் வாரும் ஜெகநாத முதலியார்.
ஜெகநாத முதலியார்.- நமஸ்சாரம் சுவாமி! தங்களைச் சினேகமாகக் கொண்டு இப்பதியில் குடியேறப்போகும் தனவந்தர் மிக்க பாக்கியவா னென்றே சொல்லவேண்டும்!
அரங்கராவ்.- இனத்தை இனம் தேடுமாசையால் தனவந்தரைத் தன் வந்தரே தேடுவார்கள். எத்தனை தனவந்தர் இந்த ஊருக்கு வந்தாலும் உம்மைப்போல் தனவந்தனாகப் போகிறதில்லை.
ஜெகநாத முதலியார் – சுவாமி! நான் பெயருக்குமாத்திரம் தனவந்தனே யல்லது, உண்மையாகத் தனவந்தனல்லவே?
அரங்கராவ்.- ஜெகநாத முதலியார்! உம்முடைய தமையன் சொத்துக்கள் யாவும் உம்மைச் சேரும்படி நாளை உத்தரவாகப் போகிறது. இன்று என் சினேகன் இவ்விடம் வருவதால் நான் இங்குவர நேரிட்டது. அல்லா மற்போனால் இன்றே தீர்மானம் சொல்ல எண்ணியிருந்தேன். ஒரு நாள் தாமதமானதைக்குறித்து நான் அதிக வியசனப்படுகிறேன். இன்று வரப்போகும் தனவந்தனாகிய என் சினேகனுக்கு யாவும் நீரே நின்று நடத்த வேண்டுமென்று உர்மை மிகவும் கேட்டுக்கொள்ளுகிறேன். ஜெகநாத முதலியார் – சுவாமி! தங்களுடைய விருப்பம்போல் செய்யத் தடையில்லை. அவர் எப்பொழுது வருவார்?
அரங்கராவ்.- அவரை ஒவ்வொரு நிமிஷமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். (என்று தம்மோடு இருந்தவர்களைப் பார்த்து) நாம் செய்ய வேண்டியவைகளையெல்லாம் செய்துமுடித்துவிட்டோம். சேவகர் வரு கிறவர்களுக்கு மரியாதை செய்து உட்கார வைப்பார்கள். நாம் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்கலாம் வாருங்கள்.
கலியாணசுந்தர முதலியார்.- ஸ்வாமி! நானும் சேவகர்களோடிருந்து வருகிறவர்களுக்கு மரியாதை செய்துகொண்டிருக்கிறேன்.
விஸ்வநாத செட்டியார். – சுவாமி ! நான் மடைப்பள்ளியைப் பார்த்து வருகிறேன்.
அரங்கராவ் – ஜெகநாத முதலியார்! நாம் இருவருமே வேலையில்லாமல் இரு க்கிறோம். நாம் போய் உட்சாரலாம் வாரும். (என்று ஜெசநாத முதலி யாரை அழைத்துச்சென்று மேல்மெத்தைக்குப் போகும் படிகளுக்கு அருகிலுள்ள அறையில் உட்காரச்சொல்லித் தாமும் உட்கார்ந்தார்.)
ஜெகநாத முதலியார். – இங்கிருந்தால் வருகிறவர்களை யெல்லாம் பார்த்துக் கொள்ள முடியும். (என்று உட்கார்ந்து வருகிறவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.)
அனேகர் அவ்வழி வரவும் அவர்களுக்குப்பின்னால் செழுங்கமலமும், பூங் காவனமும், வனசாக்ஷியும், நடராஜமுதலியாரும் வரும்பொழுது, நட ராஜமுதலியார் செழுங்கமலத்தைப் பார்த்து, அம்மா! எனக்கு இவ்வி டத்திற்கு வரப்பிரியமில்லையென்று சொல்லிய என்னைக் கட்டாயப் படுத்தி அழைத்து வருகிறாயே! இதனால் உனக்கு என்ன பிரயோச னம் ? நாம் தனவந்தரோடு நின்று வார்த்தையாடப் போகிறோமா? இல்லையே ! நாம் வீட்டில் சாப்பிடாமல் வந்தது தப்பிதம். கலியா ணசுந்தரமுதலியாரும் வேலையில்லாமல் உனக்கும் எனக்கும் பத்திரி கையை அனுப்பிவிட்டார். நீயும் உன்மகளும் இந்த அரண்மனையி லிருந்து என்னை வரும்படி யழைக்க நேர்ந்தால் நான் வரவேண்டி யது கட்டாயம். அதை விட்டு, எவனோ வரப்போகிறான், அவனுக் காக அரங்கராவோ தொங்கராவோ படாத பாடெல்லாம் பட்டுத் தன் சினேகனைச் சந்தோஷப்படுத்த எண்ணங்கொண்டிருக்கிறானென்ற இடத்தில் நமக்சென்ன வேலையென்றெண்ணாமல் வந்து விட்டோமெ ன்றார். நடராஜமுதலியார் சொல்வதைக் கேட்டுக்கொண்டு வந்த கலி யாணசுந்தரமுதலியார் இதென்ன அநியாயமாக இருக்கிறது. அங்க ராவ் காதில் விழும்படி ஏதேதோ சொல்லுகிறாரே யென்று பெரியவ ரிடம் சென்று, ஐயா! தாங்கள் சொல்வதை அரங்கராவ் அவர்கள் கே ட்டுக்கொண்டிருக்கிறார். பேசாமல் போய் உட்காருங்களென்று அனு ப்பிவிட்டு, அரங்கராவ் இருந்த அறைக்குள் சென்றார். நடராஜ முதலி யார் பயந்து, அம்மா! செழுங்கமலம்! அரங்கராவ் அவர்கள் அங்கிரு க்கிறாரென்று நீயாகிலும் சொல்லக்கூடாதா? நான் என்னென்னவோ சொல்லி விட்டேனே! இந்த அவதிக்கு என்ன செய்கிறது? என்றார்.
செழுங்கமலம்.- அண்ணா அவரை நானறியேனாதலால் சொல்லவில்லை.
அறைக்குள் அரங்கராவோடு உட்கார்ந்திருந்த ஜெகநாதமுதலியார் நடராஜ முதலியார் சொல்லியவைகளைக் கேட்டு, பார்த்தீர்களா! இந்தக் கிழ வன் என்ன சொன்னான்? அவனை இவ்விடத்தில் இருக்கவிடாமல் துரத்திவிட உத்தரவளித்து வருகிறேனென்று எழுந்தார். அரங்கராவ் ஜெகநாத முதலியாரை நிறுத்தி அந்தப்பெரியவர் உம்முடைய தங்கை யோடு வந்திருப்பதால் நாமொன்றும் சொல்லக்கூடாது. அவரை ஏதா கிலும் சொன்னால் உம்முடைய தங்கைக்கு மனவருத்த முண்டாகும். கலியாணசுந்தரமுதலியாரும் அவர் விஷயத்தில் நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கிறாரென்றார். தன் பெயரைச் சொல்லியதைக் கேட்டு க்கொண்டு வந்த கலியாணசுந்தர முதலியார் என்னைக்குறித்து என்ன பேசுகிறீர்களென்று அறைக்குள் நுழைந்தார்.
ஜெகநாத முதலியார்.-ஐயா! நீர் வரவழைத்த கிழவன் நம்முடைய சுவாமி யவர்களைக் கேவலமாகப் பேசிப் போகிறான்.
கலியாணசுந்தர முதலியார் – சுவாமி! நான் அவரை வரவழைத்த குற்ற த்தை மன்னிக்கவேண்டும். உத்தரவானால் அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன்.
அரங்கராவ்.- முதலியாரே அவர் என்னைக் கேவலமாகப் பேசவில்லை. அவர் பேசியது எனக்குச் சந்தோஷமேயன்றி வருத்தமில்லை, நீர் எதற்காக இங்கு வந்தீர்?
கலியாணசுந்தர முதலியார் – ஸ்ரீஜீவாஸ ஐயங்கார் தங்களைப்பார்க்க வேண்டுமென்று ஆள் அனுப்பினார். என்ன சொல்லியனுப்புகிறது? அரங்கராவ்.- அவரை இங்கு வரச்சொல்லும்.
அப்படியே சொல்லியனுப்புகிறேனென்று கலியாணசுந்தர முதலியார் நீங் கிய சிலநேரத்தில் ஸ்ரீ சிவாஸ ஐயங்கார் ஒரு பிராமணனை அழைத்துக் கொண்டு அரங்கராவ் இருந்த அறைக்குள் வந்து நின்றார்.
ஜெகநாத முதலியார்.- அடா துன்மார்க்கா! பத்திரத்தைக்கொண்டுபோய் என் தங்கை செழுங்கமலத்திடம் சொடுக்கச் சொல்லியனுப்ப அதை எடுத்துக்கொண்டு ஓடிப்போன பாதசா! உன்னை இலேசில் விடக் கூடாது. (என்று ஸ்ரீநிவாஸ ஐயங்காரோடு வந்த பிராமணனை அடிக்க எழுந்தார்.)
அரங்கராவ்.- சற்று நிதானியும் ! அந்தப் பிராமணனை அடிக்கவேண்டாம்! ஓய்! ஐயரே! உமது பெயரென்ன? ஜெகநாத முதலியாரவாள் உம்மி டத்தில் பத்திரம் கொடுத்தேனென்பது உண்மையா?
பிராமணன் – சுவாமி! என்பெயர் குப்புசாமி ஐயன். என்னிடத்தில் முதலியாரவர்கள் பத்திரம் கொடுக்கவில்லை.
ஜெகநாத முதலியார் – என்ன சொன்னாய்? பத்திரத்தை என்னிடத்திலிருந்து வாங்கிக்கொண்டு போகவில்லையா?
ஸ்ரீநிவாஸ ஐயங்கார் – முதலியாரவர்கள் சொல்லுகிறது எந்தப் பத்திரம்? ஜெகநாத முதலியார் – என் தங்கையினுடைய நிலத்தை ஒற்றியாக வாங்கிய பத்திரத்தையே இவரிடம் கொடுத்தனுப்பினேன்.
ஸ்ரீநிவாஸ ஐயங்கார் – அந்தப் பத்திரத்தை எங்கிருந்து எடுத்துக்கொடுத்தீர்? நீர் கொடுக்கும்பொழுது மணி என்ன இருக்கும்?
ஜெகநாத முதலியார் – என் பெட்டியிலிருந்தே எடுத்துக்கொடுத்தேன்! மணி ஒன்பது இருக்கலாம்.(என்று கோபமாகச் சொன்னார்.)
ஸ்ரீநிவாஸ ஐயங்கார்.-ஐயா! உம்முடைய தங்கையின் நிலத்தை ஒற்றியாக யார் எழுதி வாங்கினது?
ஜெகநாத முதலியார் – குப்புசாமி ஐயரே எழுதி வாங்கிக்கொண்டார்.
ஸ்ரீநிவாஸ ஐயங்கார். – அந்தப் பத்திரம் தங்களிடத்தில் வரவேண்டியதென்ன?
ஜெகநாத முதலியார் திகைத்து நாம் குப்புசாமி ஐயனைக் கண்டவுடன் கோபித்து முன்பின் வருவதை யோசியாமல் கேட்டதால் ஸ்ரீ லிவாஸ ஐயங்கார் நாம் சொல்லியதை ஆதாரமாகக்கொண்டு உண்மையை வெளியாக்கப் பார்க்கிறார். நம்முடைய வார்த்தையினாலேயே நாம் அகப்பட்டுக் கொண்டோமென்று நினைத்து, ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அரங்கராவ் முன்னிலையில் சேட்பதால் பதில் சொல்லியே தீரவேண்டு மென்று ஸ்ரீ நிவாச ஐயங்காரைப்பார்த்து, பத்திரத்துக்குச் சேரவேண் டிய தொகையை நான் செலுத்தி வாங்கி வைத்திருந்த பத்திரத்தை இவரிடம் தந்து என் தங்கையிடம் கொடுக்கும்படி சொன்னேன் என்றார்.
ஸ்ரீநிவாச ஐயங்கார் – பணம் எப்பொழுது கொடுத்தீர்?
ஜெகநாத முதலியார்.– இந்தக் கேள்விகளெல்லாம் ஏன் கேட்கிறீர்?
ஸ்ரீநிவாஸ ஐயங்கார் – காரணம் இல்லாமல் கேட்கவில்லை. எப்பொழுது பணம் கொடுத்தீர்?
ஜெகநாத முதலியார் – அன்று காலையில் பணம் கொடுத்தேன்.
ஸ்ரீநிவாஸ ஐயங்கார் – உமக்குப்பணம் ஏது?
ஜெகநாத முதலியார் – ஐயங்காரே நீர் கேட்பது சிரிப்புக்கிடம் தருகிறது! எனக்குப் பணம் ஏதென்றால், அது வந்த வழியைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே!
ஸ்ரீநிவாஸ ஐயங்கார் – நீர் பத்திரத்துக்குப் பணம் கொடுத்து அன்று காலை யில் வாங்கி வைத்துக்கொண்டு, அன்றெல்லாம் பத்திரத்தைக் கொண்டு போய் உம்முடைய தங்கையினிடம் கொடுக்க ஆளகப்படாமல், இரவில் ஒன்பதுமணிக்குக் கொண்டுபோய்க்கொடுக்க இவர்தானா அகப்பட்டார்? சவாஸ்! இவரிடம் பத்திரத்தைக் கொடுக்குமுன் நீர் வெளியில் வந்து பார்த்தீரே, உமக்கு ஞாபகம் இருக்கிறதா? நீர் வெளியில் வந்து பார்த்த பொழுது ஒருவர் உம்முடைய கண்ணுக்குத் தட்டுப்பட்டு, அங்கு போகி றது யார் ? என்று நாகபூஷணத்தை நீர் கேட்ட பொழுது, நாகபூஷணம் யாரோ ஒருவன் யாசகத்துக்கு வந்தானென்று சொல்ல, நீர் நல்ல சமயம் பார்த்து யாசகத்துக்கு வந்தான், ஒருவரையும் உள்ளே விடவேண்டாம் என்று வீட்டுக்குள் சென்றீரே! இவைகளில் ஏதேனும் உமக்கு ஞாப கத்திலிருக்கிறதா
ஜெகநாத முதலியார் – இவைகளெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.
ஜெகநாதமுதலியார் மறுத்தவுடன் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் படிக்கட்டுக்கருகில் சென்று நாகபூஷணம் என்று கூப்பிட்டார். உடனே ஒருவன் ஏன் ஐயாவென்று ஒடிவந்தான். ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அவனை அழைத்துப் போய் அரங்கராவ் முன் விட்டு, நாகபூஷணம்!என்னை எப்பொழு தாகிலும் முதலியார் வீட்டில் பார்த்திருக்கிறாயா? என்று கேட்டார்.
நாகபூஷணம்.- சில மாதங்களுக்கு முன் குப்புசாமி ஐயரோடு தாங்கள் என் எஜமான் வீட்டுக்கு வந்தீர்கள்.
ஸ்ரீநிவாஸ ஐயங்கார் – அப்பொழுது என்ன நடந்தது? ஒன்றையும் விடாமற்சொல்.
நாகபூஷணம் – குப்புசாமி ஐயர் வீட்டுக்குள் போனவுடன் தாங்கள் நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். நானும் தங்களோ டுகின்று கேட்டிருந்தேன். எஜமான் வெளியில் வரப்போவதை யறி ந்து தாங்களும் நானும் அவ்விடத்தை விட்டு நீங்கினோம்.
அரங்கராவ்.- போதும், மற்றவைகளைச் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஒய் குப்புசாமி ஐயரே ! பத்திரத்தின் சமாசாரம் உமக்கென்ன தெரியும்?
குப்புசாமி ஐயர் – சுவாமி! செழுங்கமலத்தம்மாளுடைய நிலத்தை எனக்கு ஒற்றி வைத்ததாக என் பெயருக்குப் பத்திரம் எழுதி வாங்கிக் கொண் டவுடன் எனக்கு ஆயிரம் ரூபாய் இனாமாகக்கொடுத்ததுமன்றி, அதன் மாசூலைத் தண்டி முதலியாரவர்களிடத்தில் செலுத்தி வர எனக்கு மாதச் சம்பளம் நூறு ரூபாய் கொடுத்தும் வந்தார். பத்திரம் முதலியாரவர்களி டத்திலேயே இருந்தது. ஸ்ரீநிவாஸ ஐயங்கார் என்னைப் பயமுறுத்திப் பத்திரத்துடன் உண்மையான விஷயத்தைக் குறித்துக் கேட்ட பொ ழுது, நிலத்தை ஒற்றிவாங்கினது ஒப்புக்கேயன்றிப் பணம் ஒருவரும் கொடுக்கவில்லையென்று உண்மையைச்சொல்லி ஸ்ரீநிவாஸ ஐயங்காரி டம் போய் அவரோடு முதலியாரவர்கள் வீட்டுக்குச் சென்று பத்திரத் தைப்பெற்று ஸ்ரீநிவாஸ ஐயங்காரிடம் சென்றேன்.பத்திரம் என்னிடத்தி லிருக்கிறதைக் கொண்டு வந்தேன். (என்று அரங்கராவிடம் பத்திரத் தைக் கொடுத்தார்.)
குப்புசாமி ஐயர் சொல்லியதை முற்றிலும் கேட்டிருந்த ஜெகநாதமுதலி யார், பத்திரத்தின் உண்மையை அரங்கராவ் அறிந்து கொண்டதால் அது விஷயத்தை மறுத்து இன்னும் பேசுவது பிரயோசனத்தைத் தராதென்று மௌனமாயிருந்தார்.
அரங்கராவ்.- முதலியாரவர்கள் தம்முடைய தங்கையின் நிலத்தைக் கைப் பற்றி யிருந்தாரேயன்றி வேறொருவருடைய சொத்தையும் அபகரிக்க வில்லை யானதாலும், செழுங்கமலத்தம்மாள் தன் சகோதரன்மேல் குற் றம் சொல்லாமலிருக்கிறதாலும் நாம் அது விஷயத்தைக் குறித்துப்பேச நியாயமில்லை. நான் இந்தப் பத்திரத்துக்கு வேண்டியதைச் செய்து முதலியாரவர்களுடைய தங்கையிடம் சேர்த்து விடுகிறேன். நான் விரும் பிய யாவரும் வருகிறதால் நாம் கூடத்துக்குப் போகலாம் வாருங்கள். (என்று அலங்கரித்திருக்கும் இடத்திற் கழைத்து வந்தார்.)
சேவகர்கள் கூடத்தில் நின்று வருகிற பிராமணாளை ஒருபக்கமும் மற்றவர்களை ஒருபக்கமும் உட்காரவைத்து உபசாரம் செய்து கொண்டிருந்தார்கள். கலியாணசுந்தர முதலியாருடைய பெண்சாதி மீனாக்ஷியம் மாள் வருகிற பிராமணஸ்திரீசளை ஒரு பக்கமும் மற்றப் பெண்பிள்ளை களை வேறு பக்கமும் இரத்தினக் கம்பளத்தில் உட்காரும்படி உபசா ரம் சொல்லிக்கொண்டிருந்தாள். அரங்கராவ் அவ்விடம் வந்ததைக் கண்டயாவரும் எழுந்து நின்றார்கள். அவர்களை உட்காரும்படி அரங்க ராவ் யாவரையும் கேட்டுக்கொண்டபின், ஸ்ரீநிவாச ஐயங்கார் அங்கு நின்றிருந்த ஒருவரை அழைத்துவந்து அரங்கராவிடம்விட்டு, சுவாமி! இவர் சத்திரம் வேங்கடாசல முதலியார் என்றார். அரங்கராவ் அவரைச் சன்மானித்து உட்காரச்செய்து, யாவரும் வந்துவிட்டார். கள், முதலாளிதான் வரப்பாக்கியாக இருக்கிறார், அவர் வருமுன் நான்செய்ய வேண்டியவை சில உள. அவற்றை முடிக்க உத்தரவு கொடுங்களென்று வேங்கடாசல முதலியாருடைய சம்மதத்தைப்பெற்று ஜெகநாத முதலியாரோடு மேடைமேல் போட்டிருந்த நாற்காலியரு கில் நின்று-
பிரிய சினேகர்களே!
தங்களுக்கு அனுப்பிய பத்திரிகையால் நான் தங்களை வரவழைத்த காரணம் இன்னதென்று அறிந்திருப்பதால் மீண்டும் அதுவிஷயத்தைச்சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்னுடன் பள்ளியில் வாசித்தபாலிய சினேகன் இவ்வூரில் குடியேறப்போகிறதால் அவர் முதல் முதல் இவ்வூருக்குவரும்பொழுது என்னால் இயன்றதைச்செய்து என் சினே கனைக் கனப்படுத்தவேண்டுமென்று கலியாணசுந்தர முதலியாருடைய உதவியையும் விஸ்வநாதசெட்டியாருடைய உதவியையும் பெற்று இவ் வீட்டை என் சக்திக்கேற்க அலங்கரித்து வைத்திருக்கிறேன். என் னுடைய சினேகன் பெரிய தனவந்தனாதலால் அவரை நானே தனி யாக நின்று கனப்படுத்துதல் அழகாகாதென்று இவ்வூரில் யாவரிலும் மேன்மையாயிருந்து காலஞ்சென்ற வேலுமுதலியாருடைய குமாரர் அருணாசலமுதலியார் ஜெகநாதமுதலியார் என்ற இருவரில் மூத்தவ ராகிய அருணாசலமுதலியார் கப்பலேறிச்சென்று இறந்ததைக்கேட்டு ஆறுமாதம் வெளியில் வராமலும் ஒருவரோடும் வார்த்தையாடாமலும் தம் தமையனுக்காகத் துக்கப்பட்டிருந்த இப்புண்ணியவானாகிய ஜெக நாத முதலியாரவர்களை வருகிற என் சினேகனை எதிர்கொண்டழைத் துச் சன்மானிக்கக் கேட்டுக்கொண்டேன். இவரும் என் வேண்டு கோளுக்கொப்பினார். நான் செய்தது யாவருக்கும் சந்தோஷமாகவும் சம்மத மாகவும் இருக்குமென்று நம்புகிறேன்.
என்று உட்கார்ந்து ஜெகநாத முதலியாரையும் உட்காரும்படி வேண்டினார்.
அரங்கராவ் தம்முடைய கருத்தைத்தெரிவித்து உட்கார்ந்தவுடன் ஒருவன் எழுந்து, –
சுவாமிகளுக்கும் இங்கு வந்திருக்கும் கனதனவான்களுக்கும் நமஸ்காரம்! நியாயாதிபதி அரங்கராவ் அவர்கள் தம்முடைய சினேகன் நல்வரு கையை எதிர்நோக்கி இவ்வரண்மனையைப் பார்க்கிறவர்களுடைய கண்களைக்கவரும்படி அதிக சிறப்பாய் அலங்கரித்து, இந்தச்சாக்ஷி யைக் கண்டானந்திக்க மயிலாபுரியிலுள்ளவர்களையும் மற்ற ஊர்களி லுள்ளவர்களையும் வரவழைத்ததைக்குறித்து நாம் யாவரும் நன்றியறி தலான வந்தனத்தைச் செலுத்தவேண்டும். அருமையாக வரப்பெற்ற தம்முடைய சினேசன் அகமகிழ அலங்காரத்தைச்செய்து அவலக்ஷ ணத்தை முன்காட்டுவது அறியாயம். ஒருவன் குணத்தை அவன் சினேகரால் அறிவதுபோலவும் பானைச்சோற்றின்பதத்தை ஒரு கே ற்றினால் அறிவதுபோலவும் இவ்விடம் வந்திருப்பவர்கள் எத்தன்மை யானவர்களென்று வருகிறவர் எளிதிலறிய நற்குண நற்செய்கையுள்ள ஒருவரை நியமித்து அவரால் வருகிறவரைச் சன்மானிக்கச் செய்ய வேண்டியதேயன்றித், தன் தமையன் சொத்து நாளை தன்னைச் சேர்ந் தால் அடுத்த மூன்று தினத்திற்குள் தாசிகளுக்கும் துன்மார்க்கர்களுக் கும் பங்குபோடச் சர்வசித்தமாயிருக்கும் இந்தத் துன்மார்க்கனை அவ் வளவு பெரிய தனவந்தனை உபசரிக்க நியமிப்பது கூடாது. என்று சொல்லி உட்கார்ந்தான். அங்கு உட்கார்ந்திருந்த யாவரும் வெளிப் படையாக இவ்வளவு சொல்லியது கூடாதென்று முறுமுறுத்தார்கள்.
ஜெகநாத முதலியார் – அடா சோமசுந்தரம்! என்னசொன்னாய்? உன் வாய்க் கொழுப்பால் உளறியதெல்லாம் நாளை நியாயஸ்தலத்தில் அறிந்துகொள் ளுவாய்! என்னைத் துன்மார்க்கன் என்றதை நீ நாளை மெய்ப்பிக்கா மற்போனால் உன்னை விடமாட்டேன்.
சோமசுந்தரம் – அடா பாபி! தோஷி! எனக்கு நாளை பரியந்தமா தவணை கொடுக்கிறாய்! அது அனாவசியம்! இங்கு வந்திருப்பவர்கள் யாவரும் அறிய இப்பொழுதே மெய்ப்பித்துவிடுகிறேன். பார்.
என்று படிக்கட்டருகில் சென்று, காத்தன் ! சாத்தன் ! விரைவில் வாருங்கள் என்று அழைத்துவிட்டுத், தன் நாற்காலியில்வந்து உட்கார்ந்தான். காத்தனும் சாத்தனும் வந்தோம் வந்தோமென்று ஓடிவந்து சோமசுந் தரம் அருகில் நின்றார்கள். சோமசுந்தரம் எழுந்து நின்று காத்தனுக் கும் சாத்தனுக்கும் ஜெகநாத முதலியாரைக் காட்டி அங்கிருப்பவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டான்.
காத்தனும் சாத்தனும். -ஆம். எங்களுக்கு அவரை நன்றாய்த் தெரியும். அவருக்கு அனேக காரியங்கள் செய்திருக்கிறோம்.
சோமசுந்தரம்.- அவைகளில் மூர்கியமானதாக ஒன்று சொல்லுங்கள்.
காத்தன்.- அனைக வருடங்களுக்குமுன் ஒரு குழந்தையை எங்களிடம் கொ டுத்து அக்குழந்தையைக் கொண்டுபோய்க் கொன்று ஒருவரும் காணாத இடத்தில் புதைத்துவிடுங்களென்று சொல்லி எங்களுக்கு ஆளுக்கு ஐந் நூறு ரூபாய் கொடுத்ததுமன்றி முடித்துவந்தபின் ஆயிரம் ரூபாய் இனா மளிப்பதாகவும் சொன்னார்.
சோமசுந்தரம்.- நீங்கள் என்னசெய்தீர்கள்?
காத்தன்.- நாங்கள் இரவில் பத்துமணிக்கு இந்த ஊருக் கருகிலுள்ள காட் டுக்குள் குழந்தையைக் கொண்டுபோய் உயிரோடு புதைத்துவிட எண் ணங்கொண்டு காத்தன் குழிவெட்டும்பொழுது குழந்தை அழுதது. நான் கைவாளால் குழந்தையை வெட்டப்போன சமயத்தில் யாரோ ஒருவர் என் கையிலிருந்த வாளைத் தட்டிவிட்டு வாளின் பின் புறத்தினால் என் தலையில் அடித்து என்னை மூர்ச்சையாக்கினார்.
சாத்தன் – காத்தன் மூர்ச்சையாகி விழுந்தவுடன் நான்போய் அவரை வெட் டினேன். அவ்வெட்டையும் தட்டிவிட்டு நான் மூர்ச்சையாய் விழ என் னையும் அடித்தார். நாங்கள் இருவரும் நெடுநேரத்துக்குப்பின் எழுந்து குழந்தை இல்லாததைக்கண்டு இரகசியத்தை வெளிவிடாமல் குழந்தை யைக் கொன்றுவிட்டோமென்று இவரிடம் சொல்லி எங்களுக்குக் கொ டுப்பதாக வாச்களித்த இரண்டாயிரம் ரூபாயையும் பெற்று ஆளுக்காயி ரம் எடுத்துக்கொண்டோம்.
சோமசுந்தரம் – உங்களையடித்து மூர்ச்சையாக்கியவர் இன்னாரென்று தெரியுமா?
காத்தன் – எனக்குத் தெரியும், அவரை இரண்டு மூன்று தடவைகளில் பார் த்திருக்கிறேன். சாத்தனுக்குப் பின்புறமாக அவனை வந்து அடித்ததால் அவரை அவன் பார்க்கவில்லை.
சோமசுந்தரம்:- உங்களையடித்து மூர்ச்சையாக்கினவர் இந்தக் கூட்டத்திலிருக்கிறாரா?
காத்தன் அவ்விடத்தில் இருந்தவர்களையெல்லாம் பார்த்து, அவர் இங் கில்லை என்றான். சோமசுந்தரம் தன்னருகில் உட்கார்ந்திருந்தவரிடம் ஒரு சாவியைக்கொடுத்து மெதுவாகக் காதில் சில வார்த்தைகளைச் சொல்லி அவரை அனுப்பியபின், காத்தனைப் பார்த்து, நான் உன்னைக் கூப்பிடுமளவும் வெளியில் போயிருவென்று அனுப்பினான்.சோமசுந் தரத்திடம் சாவியைப் பெற்றுப்போனவர் திரும்பித் தன்னிடத்தில் வந்து உட்கார்ந்தவுடன் சோமசுந்தரம் காத்தனை யழைத்து, நீ இவ்வி டத்திலிருப்பவர்களை நன்றாய்ப் பார்த்துச் சொல்லவில்லைபோல் காண ப்படுகிறது, நன்றாய்ப் பார்த்துச் சொல்லென்றான். காத்தன் கவன மாய்ப் பார்த்து, அதோ விற்கிறார் என்று கலியாணசுந்தர முதலியா ரைக் காட்டினான்.
சோமசுந்தரம்.–(கலியாணசுந்தர முதலியாரைப் பார்த்து) ஐயா! தாங்கள் அனேக வருடங்களுக்கு முன் இரவில் இவ்விருவரையும் அடித்து மூர்ச் சையாக்கினீர்களாம்! ஏன் அவ்விதம் செய்தீர்கள்? உண்மையைச் சொல்லவேண்டியது இப்போது அவசியமாக இருக்கிறது.
கலியாணசுந்தர முதலியார் – எனக்கு விவாகஞ்செய்து கொடுக்கக் கொண் டுவந்த பெண்ணைத் திருடர்கள் கொண்டுபோக நான் அத்திருடர்களை அடித்துத் துரத்திவிட்டுக் காட்டுவழியாக வரும்பொழுது குழந்தையின் அழுகுரலைக்கேட்டு என் மனைவியை விட்டுப்போய்ப் பார்த்தபோது ஒரு வன் ஒரு குழந்தையை வெட்டப் போவதைக்கண்டு அவனையும் அவனோ டிருந்தவனையும் அடித்து மூர்ச்சையாக்கிக் குழந்தையைக் கொண்டு வந்தேன்.
சோமசுந்தரம்.-ஐயா! அக்குழந்தை உயிரோடிருக்கிறதா !
கலியாணசுந்தர முதலியார்.- அப்பா சோமசுந்தரம்! நான் நெடுநாள் மறைத் து வைத்திருப்பதை பலர்முன் சொல்லும்படி செய்துவிட்டாய்! இவர் கள் கையிலிருந்து நான் விடுவித்துக் கொண்டுவந்த குழந்தைதான் உன் சினேகன் விஜயரங்கம். (என்று கண்ணிறைய நீர் கொண்டார்.)
சோமசுந்தரம்.- சுவாமிகளே! காத்தனும் சாத்தனும் சொல்லியவைகளை ஐயா அவர்கள் கேட்டிருந்தார்களென்று குறை சொல்லாமலிருக்க, ஐயா அவர்களைப் பின் கட்டறையில் விட்டுப் பூட்டிக்கொண்டுவந்தும், குழந் தையை விடுவித்துக்கொண்டு போனவர் இங்கில்லையென்று சாத்தன் சொல்லிய பின், ஐயா அவர்கள் வருவதைக்கண்டு சொல்லாமலிருக்க அவனை வெளியில் போகச்செய்து, என்னருகில் இருக்கிறவரால் கத வைத் திறப்பித்து ஐயா அவர்களை அழைத்துவரச் சாவியைக் கொடுத்த னுப்பினேன். ஆனதால், குழந்தையைக் கொலைசெய்யச் சொன்னது உண்மையென்று ராக்ஷேபனையாய்க் காணப்படவில்லையா?
ஜெகநாத முதலியார் – இவைகளெல்லாம் கட்டுச்சதை ! நான் இந்தத் துஷ் டர்களை ஒருநாளாவது பார்த்ததில்லை. யாருடைய குழந்தையை இவர் கள் கொண்டுபோனார்களோ என்னவோ எனக்கொன்றுந் தெரியாது.
அரங்கராவ்.- ஜெகநாத முதலியாரவர்கள் சொல்வது முற்றிலும் நியாயமாகத் தோன்றுகிறது. சாத்தனும் சாத்தனும் குழந்தையைக் கொண்டுபோன தைக் கலியாணசுந்தர முதலியார் மெய்ப்பித்துவிட்டாலும் குழந்தையை ஜெகநாத முதலியார் கொடுத்தாரென்றது உண்மைப்படவில்லை. குழந் தையைக் கொலைசெய்யத் துணிந்தவர்கள் ஜெகநாத முதலியாரவர்கள் மேல் பொய்சொல்லப் பின்வாங்கமாட்டார்கள்.
சோமசுந்தரம் – சுவாமிகளே ! தாங்கள் சொல்லியது நியாயமே! தாங்கள் எதிர்பார்த்திருக்கும் தனவந்தர் இன்னும் வரவில்லை. அவர் வருமளவும் இப்படுபாவியின் கதையை நடத்திக்கொண்டிருக்க உத்தரவு கொடு க்கவேண்டும். காத்தனும் சாத்தனும் ஜெசநாத முதலியார் விஷயத்தில் சொல்லியதைத் தாங்கள் தள்ளிவிட்டால் தான் தப்பித்துக் கொள்ளலா மென்று நினைத்திருக்கிறான். ஐயோ பாவம்! (என்று அருகில் நின்றி ருந்த ஒரு சேவகனை அழைத்து) கீழே சுந்தரம் என்ற பெண்பிள்ளை இருக்கிறாள், அவளை அழைத்து வா. (என்றனுப்பினான். சிறிது நே ரத்தில் சுந்தரம் வந்து நின்றாள்.)
சோமசுந்தரம்.- சுந்தரத்தைப் பார்த்து) அம்மா! அங்கு நிற்கிறாரே! அவர் யார் தெரியுமா?
சுந்தரம்.- அனேக வருடங்களாகத் தெரியும்.
சோமசுந்தரம் – எவ்விதம் தெரியும்?
சுந்தரம்.- என் புருடன் இவர் தமையனுடைய புன்செய்நிலங்களை மேற் பார்வை செய்திருந்ததால் நானும் என்புருடனும் காட்டில் குடியானவர் களுக்கு அருகில் குடியிருந்தோம். இவர் தமையன் இறந்த சில மாதங் களில் என் புருடனும் இறந்தார். நான் அக்காட்டிலிருக்கும் பொழுது இவர் என்னிடம் வந்து என்னால் ஒருவேலை முடியவேண்டியதாயிருந்த தென்றும் தாம் சொல்லும் விதம் நடந்தால் எனக்கு வேண்டியவைக ளைச் செய்வதாகவும் சொன்னார். நான் இவர் கருத்தென்னவென்று கேட்டபோது, இவர் தம்மிடத்தில் ஒரு பெண்பிள்ளை இருப்பதாகவும், அவளை என்னிடத்தில் அனுப்புவதாகவும், அவளுக்குத் துணையாக இரு ப்பதோடு அவளை எங்கும் போகவிடாமல் வைத்துக்கொள்ளவேண்டிய தாசவும் சொல்லிப்போன மூன்றாம் நாள் இரவில் பூரணசருப்பமான ஒரு பெண் பிள்ளையை இங்கு நிற்கும் காத்தனும் சாத்தனும் கொண்டு வந்தார்கள். பூரண கருப்பமாயிருப்பவளை வண்டியிலேற்றலாமா? இந் நேரத்தில் கொண்டுவரலாமா? என்று காத்தனையும் சாத்தனையும் கேட்ட பொழுது அவர்கள் தங்களுடைய எஜமான் உத்தரவு பிரகாரம் விடிய ஒரு ஜாமத்துக்கு முன் வண்டியிலேற்றிப் பகலெல்லாம் நடந்து இரவில் கொண்டுவர நேரிட்டதென்றார்கள். நான் அப்பெண்பிள்ளையை உப சரித்துத் தேறுதல் சொல்லி வந்த சில தினங்களுக்குப்பின் அவள் சுந்தர மான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். அவளையும் குழந்தையையும் அதிக கவனத்தோடு பார்த்துவந்தேன். சில மாதங்களுக்குப்பின் ஒரு நாள் அவள் பின்புறத்தில் போயிருந்தபொழுது, நானும் குழந்தையை அணையாடையில் தூங்கவைத்து அவளோடு சென்றிருந்துவந்து பார்த்த காலத்துக் குழந்தை காணாமற் போனதைக்கண்டு நாங்கள் கொண்ட துக்கத்துக்கு அளவில்லை. தன் பிள்ளை போய்விட்டதால் தான் உயிரோ டிருப்பதிற் பயனில்லை யென்று அம்மாது இறக்கத் துணிந்தாள். நான் அவளுடைய எண்ணம் மாறப் பலவற்றைச் சொல்லிவந்தேன்.மூன்று மாதமானபின் இவர் (ஜெசநாத முதலியார்) நாங்கள் இருந்த இடத்திற்கு வந்து குழந்தை சாணாமற்போனதைக் கேட்டுக் குழந்தையை ஓ நாய்க் கோ நரிக்கோ கொடுத்துவிட்டோமென்று என்னைக் கோபித்து அப் பெண்பிள்ளையின் துக்கம் மாறச் சிலநேரம் பேசியிருந்து பின் அவளைத் தமக்கு மனையாட்டியாக இருக்கத் தொந்தரை செய்தபோது அவள் சம் மதப்படாததைச்சண்டு அவள் தனக்கு வசியப்படும்படி செய்து வைக்க வேண்டுமென்று எனக்கு உத்தரவு செய்தார். நான் இவ்விதத் தொழி லுக்கு உடன்பட மாட்டேனென்று கோபமாகச் சொன்னதைக் சேட் டுத், தம்முடைய உத்தரவைக் கடந்து நடந்தால் அக்குழந்தையை நானே கொன்று விட்டதாக மெய்ப்பித்து விடுவதாய்ப் பயமுறுத்தி எட்டுநாள் தவணை கொடுத்துப் போனவர் ஒன்பதாம் நாள்வந்து அப்பெண்பிள்ளை இறந்து புதைக்கப்பட்டிருக்கும் சமாதியைக்கண்டு அவள் போட்டிருந்த நகைகளை என்னை எடுத்துக்கொள்ளச் சொல்லிப் போய்விட்டார். சில வருடங்களுக்குப் பின் குழந்தையை நாங்களறியாமல் இவரே எடுத்துக் கொண்டு போனதாகவும் தாமே கொல்லத்துணியாமல் சாத்தனையும் காத் தனையும் தேடிக்கொடுத்து சொன்று விடும்படி சொன்னதாகவும் அறிந் தேன். அது முதல் இவரை நன்றாய் அறிவேன்.
ஜெகநாத முதலியார்.- இவைகளெல்லாம் இந்தச் சபையில் என்னை அவ மானப்படுத்த எண்ணங்கொண்டு உண்டு படுத்திய கட்டுக்கதைகள்.ஏன் றும் பிரயோசனப்படுமென்று நினைக்கவேண்டாம்.
சோமசுந்தரம். – இந்தப் படுபாவி தன்குற்றத்தையும் கெடுஎனைவையும் இலே சாக ஒப்புக்கொள்ளமாட்டான். சீர்படுபவனல்லவா குற்றத்தை ஒப்புக் கொள் ளுவான்! மனோரஞ்சிதம் என்னும் பெண் கீழே இருக்கிறாள். அவளை அழைத்துவா.(என்று சேவகனை அனுப்பினான். உடனே மனோ ரஞ்சிதமும் சோமசுந்தரத் தருகில் வந்து நின்றாள்.)
சோமசுந்தரம்.- அம்மா ! மனோரஞ்சிதம் ! மேடைமேல் சுவாமியவர்களோடு இருப்பவரைக் குறித்து உனக்கு ஏதேனும் தெரிந்திருந்தால் அதை இங் கிருப்பவர்கள் கேட்கச் சொல்லவேண்டும்.
மனோரஞ்சிதம்.- இவர் பெண்சாதிவழியில் நான் இருவருக்கும் மகள்முறை யாசவேண்டும். என்னுடைய இளமையில் என் தாய்தந்தை இறந்துவிட் டதால் என்னை ஆதரிப்போர் ஒருவருமில்லாமல் தன்தாய் வீட்டிலிருந்த இவருடைய மனைவியோடிருந்தேன். மூன்று வருடத்திற்குமுன் இவர் அங்கு வந்திருந்தபொழுது என்னைக்கண்டு யாரென்று விசாரித்து என் மேல் பரிதாபப்பட்டுத்தான் அழைத்துப்போய்த் தன் மகள்போல் பாவித் துத்தக்க இடத்தில் விவாசஞ்செய்து கொடுப்பதாக யாவருக்கும் சொல்லி அழைத்துவந்து ஒரு காட்டுக்குள் இந்தச் சுந்தரத்தம்மாள் இருந்த வீட் டில் விட்டுப்போய்ச் சிலநாள் பொறுத்துப் பலவித தின்பண்டங்களும் துணிகளும் கொண்டுவந்து கொடுத்தார். நான் தகப்பன் என்ற வாஞ்சை யோடு வாங்கிக்கொண்ட சிலநேரத்துக்குப்பின் தன் கெட்ட எண்ணத்தை வெளியிட்டார். நான் எதிர்பார்ச்சாத வார்த்தையைக் சேட்டதாலோ அல்லது திருவுளச்செயலாலோ எனக்கு நடுக்கம் உண்டானது. சமைய லறையிலிருந்து வந்த சுந்தரத்தம்மாள் என்தேகம் நடுங்குவதைக்கண்டு என்னை அழைத்துப்போய்ப் படுக்கவைத்தார்கள். உடனே குளிரும் காய்ச்சலும் வந்தன. அதனால் அனேக நாள் நலியாயிருந்து இந்த சுந்த ரத்தம்மாளால் காப்பற்றப்பட்டேன். நான் சொஸ்தமானபின் நெடுநாள் என்னைத் தேடிவராதிருந்தவர் சற்றேறக்குறைய இரண்டுமாதத்துக்கு முன் நாங்களிருக்கும் இடத்திற்கு வந்தார். இவரைப் பார்த்தவுடன் என் கர்ப்பம் கலங்கி நான் தனித்து இவர் கையில் அகப்படாமலிருப்பதைக் கண்டு, என்னையும் சுந்தரத்தம்மாளையும் அழைத்து, சிலதினத்தில் காத்த னும் சாத்தனும் ஒரு பெண்ணை இம்மார்க்கம் கொண்டு வருவார்கள், அவளைப் பக்குவமாகப்பார்த்துத் தன் தோட்ட வீட்டில் கொண்டுபோய் வைத்து அவளுக்கு வேண்டியதைச் செய்துகொண்டிருக்க வேண்டிய தென்றும், தோட்ட வீட்டில் தோட்டக்காரன் இருப்பதால் என்னை முன்னாக அங்கு போயிருந்து வேண்டியவைகளைச் சித்தப்படுத்தவேண் டியதென்றும், கொண்டுவரப்போகிற பெண் தன்மேல் அதிக ஆசை கொண்டிருந்தாலும் அவள் தன் சுற்றத்தாருக்குப் பயந்திருந்தாளென். றும், அவள் அவ்விடம் வந்தவுடன் சுந்தரத்தம்மாள் துணையாகப்போக வேண்டுமென்றும் சொன்னார். நான் அவ்விடத்தைவிட்டு நீங்கியபின் சுந்தரத்தம்மாளோடு சிலநேரம் பேசியிருந்துபோனார். நான் இவர் உத் தரவு பிரகாரம் வந்த வண்டியில் தனியாகத் தோட்டத்து வீட்டுக்குச் சென்றிருந்தேன். நான் அங்குபோன மறுநாள் கமலாக்ஷி யம்மாளைக் காத்தனும் சாத்தனும் சுந்தரத்தம்மாளோடு இரவில் கொண்டுவந்தார்கள் நான் கமலாக்ஷியம்மாளை அழைத்துப்போய் உபசரித்தும் அந்த அம்மாள் எங்களைத் தூஷித்து நாள்தோறும் இரண்டு வாழைப்பழங்களைச் சாப் பிட்டுக்கொண்டிருந்தார்கள். மூன்றாம் நாள் இப்புண்ணியவான் வந்து கமலாக்ஷியம்மாளைப் பார்த்தபொழுது, இவர் இஷ்டத்துக்கு உடன்படாமல் அந்த அம்மாள் இவரை நிந்தித்து,”காட்டிலிருக்கிற வீட்டில் ஒரு பிணத்தைப் புதைத்துவைத்துக் கொண்டதுபோல் தான் இருக்கும் வீட்டிலும் தன்னைப் புதைத்துவிட எண்ணங்கொண்டா?” என்றவுடன் இவர் பயந்து சுந்தரத்தம்மாளிடம் ஒடிவந்து, காட்டிலிருக் கிற வீட்டில் பிணம் புதைத்திருக்கிற சமாச்சாரம் கமலாக்ஷியம்மாளுக்கு எப்படித் தெரிந்ததென்று கேட்டு, தான் மூன்று நாள் தவணை சமலாக்ஷி யம்மாளுக்குக் கொடுத்து அதற்குள் அவள் யோசித்துத்தன்னை விவாகஞ் செய்து கொள்ளாத விஷயத்தில் கற்பையழித்து அவளை வைப்பாட்டி யாக வைத்துக்கொள்ளுவதாய்த் தெரிவித்து வந்ததாசச் சொல்லி நீங்கி மூன்றாம் நாள் காலையில் வந்தபோது அவருக்குக் கமலாக்ஷியம்மாளைப் புதைத்திருக்கும் இடத்தை நான் காட்டியபின் கமலாக்ஷியம்மாளைப்பற் றிய சமாசாரத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று போய்விட்டார்.
ஜெகநாதமுதலியார் – ஒரு வாலிபனோடு கமலாக்ஷி ஓடிப்போக அவள் குற் றத்தை மறைத்து என்மேல் குற்றம் சுமத்தவா துணிந்தீர்கள்? உங்க ளுடைய பிரயத்தனம் பிரயோசனப்படுமென்று நினைக்கவேண்டாம். கமலாக்ஷியை இழிவாக ஜெகநாதமுதலியார் சொல்லியதைக் கேட்டிருந்த செழுங்கமலமும் பூங்காவனமும் வனசாக்ஷியும் நடராஜ முதலியாரும் கண்களில் நீர்வடியத் துக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
சோமசுந்தரம். – சுவாமிகளே! இந்தப் படுபாவியை ஒரு துண்டு கடிதாசி யில் தன் பெயரை எழுதச்சொல்லி வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அரங்கராவ்.- ஜெகநாதமுதலியா ரவர்கள் கையொப்பம் என்னிடத்திலிருக்கிறது. அது எதற்காக?
சோமசுந்தரம்.- இத்துன்மார்க்கன் எழுதிய கடிதங்கள் சில என்னிடத்தி லிருப்பதால் அவைகள் தன்னுடைய தல்லவென்று அவன் மறுக்கும் பொழுது தன் கையெழுத்தைக் காட்டவே கையொப்பம் வேண்டுமென் றேன். (என்று தன்னிடத்திலிருக்கும் கடிதங்களில் ஒன்றை எடுத்துப் போய் ஜெகநாத முதலியாருக்குக்காட்டி, இது உம்முடைய கையெழுத் தல்லவா? என்று கேட்டான்.)
ஜெகநாதமுதலியார் – அது என்னுடைய கையெழுத்தைப்போல் எழுதி இருக்கிறதேயன்றி என்னுடைய கையெழுத்தல்ல.
சோமசுந்தரம்.- சுவாமிகளே! இந்தத் துன்மார்க்கன் தான் எழுதிய கடித த்தை அல்லவென்று மறுக்கிறான். இக்கடிதத்தில் அடங்கியதைக் கேட்டபின்னாவது ஒப்புக்கொள்ளுகிறானா பார்க்கலாம்! (என்று அடியிற் கண்டவிதம் அக்கடிதத்தில் எழுதியிருந்ததை வாசித்தான்.)
என் பிரிய மைத்துனரே!
என் தந்தை இறந்தபின் அவருக்குப் பதிலாக என் தந்தையைப்போல் என் னைக்காப்பாற்றிய என் தமையன் காலஞ்சென்றபின் நான் உலகத்தி லிருப்பது பிரயோசனமில்லையென்று நான் ஆறுமாதம் வேளைக்குச் சாப்பிடாமலிருந்தும் என்னுயிர் நீங்காமலிருக்கிறது. என் தமையனை யறிந்தவர்கள் எனக்குத் தைரியம் சொல்லி வந்தாலும் அவர்களைக் காணும்பொழுது என் தமையன் ஞாபகம் எனக்குதித்து மேலும் மேலும் என்னைத் துன்பத்திலழுத்துகின்றது. நீ என்னருகிலிருக் கும்பொழுது உம்முடைய பிரிய வசனங்களைக் கேட்டுக் கவலையுற் றிருக்கிறேன்.ஆனதால் நீர் சிலநாளென்னோ டிருக்கவேண்டும். இக் கடிதத்தை என் தங்கை செழுங்கமலத்துக்குக் காட்டிவரவும்.
இப்படிக்கு,
ஜெகநாதமுதலியார்.
கடிதம் வாசித்ததைக் கேட்ட ஜெகநாதமுதலியார் ஆம்! ஆம்! அந்தக் கடி தத்தை நானே எழுதினேன்; கடிதத்தை முற்றிலும் காட்டாமல் கையொப்பத்தைமட்டும் காட்டியதால் நான் நன்றாய்க் கவனித்துப் பார்க்காமல் என்னுடையதல்ல வென்றேன் என்றார்.
சோமசுந்தரம்.- நான் சாட்டிய கடிதம் உன்னுடைய துர்நடத்தையை வெ ளிக்குக் கொண்டுவரச் சாக்ஷியாக வந்ததோவென்று பயந்து என்னுடை யதல்லவென்று மறுத்தாய். இந்தக் கடிதத்திலிருக்கும் கையொப்பம் உம்முடையதா அல்லவா வென்று நன்றாய்ப் பார்த்துச் சொல். (என்று வேறொரு கடிதத்தைக் காட்டினான்.)
ஜெகநாத முதலியார்.-இது என்னுடைய கையொப்பமே ! காகிதமும் முன் வாசித்த காகிதம்போலிருப்பதுமன்றி என் முத்திரையும் கொண்டிருப்ப து உனக்குத் தெரியவில்லையா? அந்தக் கடிதமும் என் மைத்துனர் கே சவ முதலியாருக்கே எழுதியிருக்கவேண்டும்.
ரோமசுந்தரம்.-நீ இதை யாருக்கு எழுதியிருக்கிறாயென்று நொடியிலறியப் போகிறாய். (என்று அடியிற் கண்டதை வாசித்தான்.)
பிரியமான சோலையப்பனுக்குத் தெரிவிப்பது யாதெனில்:-
நீர் குறிப்பித்த காத்தனும் சாத்தனும் எனக்கு வேண்டியவைகளைச் செய்ததேயன்றி நான் உம்மிடம் சொல்லிய பிள்ளையின் பெயரெங்கும் இல்லாமலும் செய்துவிட்டார்கள். இனி என் தமையன் ஆஸ்தி என்னைச் சேரத் தடையில்லை. அது என்னைச் சேர்ந்தவுடன் உம்மை மறக்கமாட்டேன். என் மைத்துனன் கேசவமுதலியார் உலகில் உலாவிக்கொண்டிருப்பது எனக்குக் கெடுதியாயிருக்கிறது. அவர் என்னுடைய வீட்டைவிட்டு இரவில் போகும்பொழுது அவரைப் பிடித்துக்கொண்டு போய்க் காவலில் வைத்திருக்கவேண்டும். அவரை உயிரோடு வைத்திருக்க வேண்டியது அவசியமில்லையாயினும் அவரு டைய தமையனொருவன் தனவந்தனாயும் சந்ததியற்றவனாயு மிருப்ப தாலும், அவருடைய பூஸ்திதியெல்லாம் அவருக்குப்பின் கேசவ முதலியாரைச் கேரவேண்டியதாலும் அவ்விதம் நேரிட்டகாலத்தில் கேசவ முதலியாரைப் பயமுறுத்தி அதை நாம் கைக்கொள்ள முடியு மாகையால் அவரை உயிரோடு வைத்திருக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. கேசவமுதலியார் உம்மிடம் வந்து சேர்ந்தாரென்று கேள்விப்பட்டவுடன் உமக்குப் பெரிய வெகுமதி அனுப்புவேன். அவரைப் பாதுகாத்து வருகிறதற்காக வருடத்துக்கு ஐந்நூறு ரூபாய் அனுப்பிக்கொண்டிருப்பேன். அவர் தற்காலம் ஊரிவில்லை. அவர் வருவதற்குள் என் தந்தை மூடத்தனமாய் என் தங்கைக்குக் கொடுத்த நூறுவேலி நிலத்தையுங் கைப்பற்றி உமக்குத் தெரிவித்தபின் என் மைத்துனனைக் கொண்டுபோகவேண்டும். நம்முடைய சிநேகம் நீடித்திருக்கவேண்டும். இது நிற்க. உம்முடைய மனிதர் உமக்காகக் கொண்டுபோக எத்தனித்த மணப்பெண்ணைக் கொண்டுவர முடியா மற் போனதுமுதல் நீர் துக்கத்தோடிருப்பதாக அறிந்தேன். ஆனைக் கும் ஓர் சால் அடிசறுக்குமென்பதுபோல முடிந்தது. அதை நினைத்து நினைத்துத் துக்கப்படுவதை நான் நேரில் பார்த்ததேயன்றிப் பலரால் கேள்வியும் பட்டுக்கொண்டிருக்கிறேன். அது முடிந்து நாலைந்து வருடமாயும் இன்னும் அதை நினைவில் வைத்திருப்பது அழகல்ல. அதை மறந்து சந்தோஷத்தோடிருக்க வேண்டுமென்று விரும்புகிற
ஜெகநாதமுதலியார்.
சோமசுந்தரம் கடிதத்தை வாசித்து முடித்தவுடன் ஜெகநாத முதலியார் கைகால் நடுக்கத்தோடு, அடா பாதகா! என்னை முற்றிலும் கெடுக்க யோசித்து, எழுதாத காகிதங்களை என்னிடத்திலிருந்து திருடி அதில் என் கையெழுத்தைப்போல் எழுதித் தப்புக்கையெழுத்து செய்து கொண்டா வந்தாய்? பார்த்தீர்களா சுவாமி! (என்று அரங்கராவைப் பார்த்தார்.)
அரங்கராவ் – ஐயா சோமசுந்தர முதலியார்! நீர் ஜெகநாத முதலியார் மேல் கொண்டு வந்த குற்றங்களையெல்லாம் அவர் அல்லவென்று மறுத்துவிட் டதால் அது விஷயத்தில் இன்னும் காலத்தைப்போக்காமல் நாம் யாவ ரும் இவ்விடம் வந்திருக்கும் காரியத்தைக் கவனிப்பதே உத்தமம்.
சோமசுந்தரம். – சுவாமிகளே! ஜெகநாத முதலியார் கொடிய துன்மார்க் கன். அவன் பிள்ளையைக் கொல்லத் தூண்டியதற்கும், கற்புடைய பெண்களைக் கற்பழிக்கத்துணிந்து அவர்களைக்கொன்றதற்கும், தன் சொந்த மைத்துனனைக் கொண்டுபோய்ச் சிறையில் வைத்திருப்பதற்கும் சாக்ஷிகளாலும் அவன் எழுதிய கடிதங்களாலும் உண்மை காட்டிக் காட் டி நிரூபித்த பின்னும் தாங்கள் நம்பாமலிருந்தால் நான் என் செய்வேன்! இன்னும் யாரைநான் சாக்ஷியாகக் கொண்டுவருவேன்! இனி காட்டிலும் தோட்டத்திலும் இறந்தவர்களே சாக்ஷியாக வரவேண்டும். இறந்தவர் களை எழுப்பும் சக்தி எனக்கிருந்தால் அவர்களை எழுப்பிக்கொண்டு வர லாம். நான் இனி என்னசெய்ய இருக்கிறது? (என்று உட்கார்ந்தான்.)
ஜெகநாத முதலியார் – என்னைத் துன்மார்க்கனென்று வாய்பிதற்றிய துன் மார்க்கா! நீ இறந்தவர்களைக் கொண்டுவந்து மெய்ப்பித்தாலன்றி அதிக துன்பத்தை அனுபவிக்க நேரிடும். (என்று கோபத்தோடு நசைத்தார்.)
சோமசுந்தரம். – ஐயா ஜெகநாத முதலியார்! இறந்தவர்களைச் சாக்ஷிகோரி னால் உம்முடைய நடத்தை வெளிவரா தென்று நினைத்தீர்! உம்முடைய குற்றங்களை வெளிக்குக் காட்டாமல் மறைக்க இந்த சுவாமி அரங்சராவ் அவர்களுக்கு எண்ணமிருந்தாலும் உம்முடைய கொடுந்தொழில் இன் னும் நீடித்திருக்கத் தெய்வம் சம்மதியாது.
என்று சோமசுந்தரம் சொல்லும்பொழுது வண்டியொன்று வருகிற சந் தடி கேட்டுத் தனவந்தர் வந்து விட்டாரென்று யாவரும் எழுந்து பார்த் தார்கள்.
சோமசுந்தரம்.– ஐயா முதலியாரே! உம்முடைய குற்றங்கள் வெளியாகக் கடவுள் இறந்தவர்களுக்கு உயிர்கொடுத்தனுப்பவேண்டுமெனப் பிரார்த் தித்திருக்கிறேன். (என்று சொல்லி உட்கார்ந்தான்.)
கடவுள் எங்களுக்கு உயிர்கொடுத்தனுப்ப, இதோ வந்தோம் வந்தோம் என்று இரு பெண்பிள்ளைகள் ஓடிவந்து சோமசுந்தரத் தருகில் நின்றார்கள். வந்தவர்கள் யாரென்றுபார்க்க அவ்விடம் நாற்காலியிலிருந்தவர்களெ ல்லாம் எழுந்து நிற்க, அருகில் உட்சார்ந்திருந்த பெண்பிள்ளைகள் பார்வையை மறைத்துக் கொண்டார்கள். வந்த இருவரையும் சோம சுந்தரம் பார்த்து, ஆ ! இதென்ன அதிசயம்! நான் கடவுளைப் பிரார்த் தித்தால் இருவரும் உயிர்பெற்று வந்துவிட்டார்கள். பெண்மணிகளே! அங்கு மேடையிலிருக்கும் ஜெகநாத முதலியார் குணானுபவங்களை யாவரும் அறியச் சொல்லவேண்டுமென்று கேட்டுக்கொண்டான்.
இருவரில் மூத்தவள் ஜெகநாதமுதலியாரைப் பார்த்து, ஐயா! மைத்துன ரே! என் நாயகன் இறந்தபின் நான் பூரண கர்ப்பமாக இருந்ததைச் சிறிதும் எண்ணிப்பாராமல் என்னைக காட்டில் கொண்டுபோய்விட்டு எனக்கு ஆண் குழந்தை பிறக்க, அதை யொருவரும் அறியாமல் நீர் கொண்டுபோய்க் கொலைசெய்துவிடக்கொடுத்து என்னையும் பெண் டாளத்துணிந்தீர்! தெய்வம் உமக்கு நல்லவழிகாட்டுமா?நான் இந் தச் சுந்தரத்தம்மாளுதவியினால் என் கற்பைக் காப்பாற்றிக்கொண்டு நீங்கியபின் புண்ணியகோடி முதலியாரும் அவர் பெண்சாதியும் என்னை அன்னவஸ்திரத்துக்கு அலையவிடாமல் காப்பாற்றினார்கள். அவர்களென்னை ஆதரிக்காமல் கைவிடுவார்களானால் என்சதி என் னாகும்! அன்னியர்களுக்கிருந்த அன்பும் பரிதாபமுங்கூட உமக்கு இல்லாமற் போனதல்லவா! உமமுடைய தந்தையால் உமக்குக்கிடை த்த ஆஸ்தியையெல்லாம் தாசிகளுக்குக் கொடுத்துக் கையில் ஒன்று மில்லாமல் திரிந்த உம்மைக் கொண்டுவந்து உமக்கு விவாகம் முத லானவைகளைச் செய்து உம்மை மேன்மையாக வைத்து ஆதரித்த உமது தமையன் மனைவியை நடத்துவது இவ்விதம் தானா? என்றாள். அருகிலிருந்த பெண் – அத்தை ! இந்தப் பாவியைக் கண்டு வார்த்தை யாடலபா ? தன் னுடைய தமையன் குமாரன் உயிரோடிருந்தால் எல் லா ஆஸ்தியும் அவரைச்சேருமென்று அவரைச்சொல்ல எண்ணங் கொண்டார். தானொன்று எனைச்சத் தெய்வம் ஒன்று நினைக்கும் என் னும் பழமொழி பொய்க்குமா? என்றபின் ஜெகநாதமுதலியாரைப் பார்த்து, மாமா நீ எல்லாருடைய விஷயத்திலும் செய்தது போதா தென்று என்னையும் மோசம் செய்துகொண்டுபோய் என் சற்பைக் செடுக்கத் துணிந்தனையே! கொலைபாதகா ! நீ என்னைக்கெடுக்க எண்ணங்கொண்டதே உன் தலைக்குத் தீங்காய் முடிந்தது. உன் கெட்ட நடத்தை வெளியாக உன்னுடைய தமையன் பெண்சாதியையும் அவர் குமாரனையும் கடவுள் உதவியால் கண்டு பிடித்துக் கொண்டு வந்தேன். உன்னுடைய தமையன்மகன் வல்லமையினால் என் தந் தையும் வெளியானாரென்றாள்.
இந்த இரண்டு பெண்பிள்ளைகள் பேசுவதைக் கேட்டிருந்த பெண்பிள்ளை களின் கூட்டத்திலிருந்து ஒரு பெண்பிள்ளை ஓடிவந்து இரண்டாவது பேசிய பெண்ணைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, கமலாக்ஷி! கமலாக்ஷி! இந்தப் படுபாவி அண்ணனால் அதிக துன்பத்தை அடைந்தாயாமே! மகளே ! மகளே ! என்று அழுது அடிக்கடி முத்தங்கொடுத்துக்கொண்டிருந்தாள்.
கமலாக்ஷி.- தாங்கள் அண்ணியவர்கள் நிற்கிறார்களே ! அவர்களைப் பார்க்க வில்லையா?
செழுங்கமலம் கமலாக்ஷியோடு நின்றிருந்த பெண்பிள்ளையை அணைத்துக் கொண்டு பெண்பிள்ளைகள் நிற்கும் இடத்திற்கு அழைத்துச்சென் றாள். நடராஜமுதலியார் விரைவாயோடி, அம்மா! கமலாக்ஷி! உன் தாதாவை இத்தனைநாள் விட்டிருந்தது நியாயமாவென்று கமலாக்ஷி யின் கையைப் பிடித்துக்கொண்டார்.
கமலாக்ஷி. தாதா! நான் சொல்வதை முற்றிலும் கேட்டால் நான் தங்களை விட்டிருந்தது நியாயமென்று ஒப்புக்கொள்வீர்கள். (என்று நகைத்தாள்.)
பூங்காவனமும் வனசாக்ஷியும் வந்து கமலாக்ஷியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கமலாக்ஷியைப் பதில்சொல்லவொட்டாமல் அனேக சமாச் சாரங்களை மாறி மாறிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அரங்கராவோடிருந்த ஜெகநாத முதலியார் வியசனத்திலழுந்தி நாற்காலி யில் சாய்ந்து விழித்தகண் இமைக்காமலிருந்தார். அச்சமயத்தில் பெரிய கும்பலொன்று வரும் சந்தடிகேட்டு, எதிர்ப்பார்த்திருக்கும் தனவந்தர் வந்துவிட்டாரென்று, யாவரும் எழுந்து நின்றார்கள்.வந் தவர்களில் ஒருவன் ஜெகநாதமுதலியாரைப்பார்த்து, சிறிய தந்தை யே! நீர் என் விஷயத்திலும் என் தாய்விஷயத்திலும் செய்தசொடு மைகள் அதிகமாக இருந்தாலும் அவைகளை மன்னித்து விட்டே னென்றான். அவனோடிருந்த ஒருவர் ஜெகநாதமுதலியாரே! என் மனைவிக்குச் சொந்தமான நிலத்தைக்கொண்டதோடு என்னையும் சிறையிலிருக்கச் செய்தீர் ! இந்த வீரன் சோலையப்பன் முதலானவர் களை யமலோகம் குடிபுகுத்தி எங்களை விடுவித்துக்கொண்டு வந்தா ரென்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது, இருவர் ஜனங்களை விலக்கிக்கொண்டு வந்து முதற் பேசியவனைப் பிடித்துக்கொண்டு, அடா மகனே ! விஜயரங்கம் ! எங்களைத் துன்பத்தில் விட்டுப்போக மனந்துணிந்தாயே! இது உனக்குத் தருமந்தானாவென்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள். விஜயரங்கம் பேசச் சக்தியற்றுக் கண்களி லிருந்து தாரை தாரையாய் ஜலம்வடிய நின்றான். விஜயரங்கத்தோடு நின்ற வைத்தியர்-ஐயா, கலியாணசுந்தரமுதலியாரே! அம்மா மீனாக்ஷி! உங்கள் குமாரனைக் கொண்டுவருகிறேனென்று சொன்ன வாக்குப் பிரகாரம் கொண்டுவந்தேன், இனி சந்தோஷமாக இருங்களென்றார். கமலாக்ஷி விஜயரங்கத்தோடு நின்றிருந்தவரைப் பிடித்து அழைத் துக்கொண்டுபோய் தன் தாயிடம் விட்டு, அம்மா! இவர்கள் யாரென்று பாருங்களென்றாள். அவர் செழுங்கமலத்தைத் தழுவிக்கொண்டு செழுங்கமலம் உன்னைக் கைம்பெண் கோலத்தோடு பார்க்சவா இருந் தேனென்று குழந்தையைப் போல் அழுதார். செழுங்கமலத்தோ டிருந்தவரைப் பார்த்த சத்திரம் வேங்கடாசல முதலியார் அவரைத் தழுவிக்கொண்டு, தம்பி, கேசவா! என்று ஆனந்தக்கண்ணீர் சொரிந் தார். இவைகளையெல்லாம் பார்த்திருந்த அரங்கராவ் எழுந்துநின்று எல்லாரையும் உட்காரவேண்டிக்கொண்டு, தன்னுடைய சினேகன் வரும் நேரமானதால் அவர் வரும்பொழுது எதிர்கொண்டழைத்து உபசரிக்க யாரை நியமிக்கலாம்? இவ்விடத்திலுள்ள தனவந்தரில் ஒருவரைக்கேட்டுக்கொண்டால் மற்றவர்களுக்கு மனச்சலிப்பாயிருக் குமென்று யோசிக்கிறேன். இவ்விடத்திலிருக்கும் கனவான்கள் யோசித்து ஒருவரை நியமிக்கவேண்டுமென்றார்.
கமலாக்ஷி – (தன் தாயைப்பார்த்து) அம்மா! யாரோ தனவந்தர் மதுரையிலி ருந்து வரப்போகிறாரென்றார்களே! அவர் இன்னும் வரவில்லையா? அவர் வந்திருப்பாரென்றே நினைத்திருந்தேன்!
செழுங்கமலம்.–வரப்போகிறவரை எதிர்கொண்டழைக்கவே ஒருவரை ஏற்படுத்த யோசிக்கிறார்கள்.
அவ்விடம் இருந்த அன்னியனொருவன் எழுந்து நின்று, சுவாமிகளே! இவ் விடத்திலுள்ளவர்களுக்கு மனவருத்தம் தோன்றாமலிருக்க யாராகி லுமொருவிருத்தரை நியமித்தால் உத்தமமாக இருக்குமென்று நினைக் கிறேன். யாவருக்கும் சம்மதமானால் அந்தப் பெரியவரை நியமிக்க லாமென்று நடராஜமுதலியாரைக் காட்டினான். மற்றவர்களும் ஆம்! ஆம் எங்களுக்கு முழுச்சம்மதமென்று கைதட்டினார்கள். அரங்கராவ் இறங்கி நடராஜமுதலியார் கையைப்பற்றி அழைத்துவந்து மேடை யில்விட்டு, ஐயா! நீர் இவ்விடம் வரும்பொழுது அரங்கராவோ தொங் கராவோ என்றீரே! அது உமக்கு ஞாபகம் இருக்கிறதாவென்று கேட்டார். நடராஜமுதலியார் வரும்பொழுது அரங்கராவ் நியாயாதி பதியென்று சிறிதும் நினைக்காமல் பேசியதை அவர்குற்றமாகக் கொண்டுவிட்டார், இதற்குக்காரணம் நாமாக இருந்தோம் என்று கலி யாண சுந்தர முதலியார் துக்கப்பட்டார்.
நடராஜ முதலியார் – நான் வரும்பொழுது அரங்கராவோ தொங்கராவோ வென்று சொல்லியது உண்மையென்றே இவ்விடம் இருப்பவர்களுக்கு மெய்பிக்கப்போகிறேன், பார்த்துக்கொண்டிரு. (என்று விலகிநின்றார்.)
நடராஜமுதலியார் அரங்கராவ் அவர்களைக் கேவலமாகப்பேசியதோடு யாவ ருக்கும் மெய்பிக்கப் போகிறேனென்றுஞ் சொல்லுகிறாரே! என் னென்ன சொல்லிவிடுவாரோ! அவரை அவமானப்படுத்திப்பேசி னால் என்னசெய்கிறது! நடராஜமுதலியாரை வரவழைத்ததற்கு ரா யார் நம்மையல்லவா கோபிப்பார் ! பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடி ந்ததென்ற கதைபோலானதே! என்று சலியாணசுந்தரமுதலியார் இதை எவ்விதம் தடுக்கலாமென்று யோசித்துக்கொண்டிருந்தார்.
அரங்கராவ்.- என்னைத்தொங்கராவு என்று மெய்ப்பிக்குமுன்னம், நீ ஒரு திரு டன். சிலமாதங்களுக்குமுன் இவ்வூரில்வந்து ஒளிந்து கொண்டிருக்கிறா யென்று யாவரும் அறிய முதலில் நான் மெய்ப்பித்துவிட்டால் அப்பொ ழுது என்ன செய்வாய்?
நடராஜ முதலியார் – அப்பொழுது நான் உன்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நீயே என்பிரிய சினேகனென்று சொல்லுவேன். (என்று தழுவிய பிடித் துக்கொண்டார்.)
அரங்கராவ் நடராஜ முதலியாரை ஆலிங்கனஞ்செய்து அழுது, யாவரையும் பார்த்து,
நண்பர்களே !
இவர் இன்னாரென்று இன்னும் நான் சொல்லாமலிருப்பது நியாயமல்ல. இவரே நான் எதிர்ப்பார்த்திருந்த பாலிய சினேகர்! இவரே அருணா சல முதலியார்! இந்தப் படுபாவி ஜெகநாத முதலியாரால் இவர் தம் ஊரை விட்டு இருபது வருடங்களாக அனேக கஷ்டங்களை அனுப் வித்தார். இந்தப் புண்ணியவான் எனக்குப் பொருளுதவி செய்து தன் சகோதரனைப்போல் பாவித்து என்னை என் தற்கால நிலைமைக் குக் கொண்டுவந்தார். எனக்கின்னும் அதிகம் சொல்ல முடியவில்லை. (என்று திணறிக்கொண்டு நின்றார்.)
அருணாசலமுதலியார் அரங்கராவ் அவர்களை அணைத்துக்கொண்டு,
என்பிரிய சினேக இரத்தினமே! நீ என் விஷயத்தில் எடுத்துக் கொண்ட பிரயாசைக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறே னென்று அழுது அங்கிருந்து சென்று விஜயரங்கத்தைத் தழுவிக் கொண்டு, மகனே! என்னை இன்னானென்று அறியாமுன்னம் என் மேல் அன்புகாட்டி எனக்குப் பழவர்க்கம் கொண்டுவந்து கொடுத்த என் செல்வமே! என்று ஆனந்தக்கண்ணீர் சொரிந்து, உன்னை வளர்த்த தந்தைதாய் மனம் மகிழ நீ சிரஞ்சீவியா யிருக்கவேண்டு மென்று முத்தங்கொடுத்துக் கலியாணசுந்தர முதலியாரைப்பார்த்து, ஐயா! உம்முடைய குமாரன் உம்மைவிட்டு இனி எக்காலமும் நீங்கா னென்று கூறி, அவரருகில் என்றிருந்த வைத்தியரைத் தழுவிக் கொண்டு, ஐயா! நீர் எனக்கு நெருங்கிய சினேகராயிருந்து நான் ன்னானென்று அறியாமலே என்னைக் காப்பாற்றினீர், நீர் செய்த உபகாரத்தை என்றும் மறக்கமாட்டேன் என்றார். பிறகு கமலாக்ஷி கையைப்பிடித்துத் தலையிலும் கையிலும் முத்தங்கொடுத்து, என் கண்மணி! உன்னால் இவ்வளவு நன்மையும் விளைந்ததல்லவா? நான் ஆதறவற்று மரத்தடியில் விழுந்திருந்தபோது என்னைக்கொண்டு வந்து காப்பாற்றினையே! நானதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்! எது செய்தபோதினும் நீ காட்டிய அன்புச்கு மிகராகா தே யென்று, செழுங்கமலத்தைப் பிடித்துக்கொண்டு, அம்மா! நான் உன் தமையனென்றறியாமலிருந்தும் என்னை உண்மையான சகோ தரனைப்போல் நீ பாவித்தனையே ! இவைகளெல்லாம் மறக்கத் தக்கன வா? அம்மா பூங்காவனம்! அம்மா வனசாக்ஷி! உங்களை எப்பொழு தும் மறக்கமாட்டேனென்று, மீனாக்ஷியம்மாளைப் பார்த்து, அம்மா! உன்மகன் உன்னோடு எப்பொழுது மிருப்பான், நீ அவன் விஷயத்தில் செய்திருந்ததை நாங்கள் எக்காலமும் மறவோமென்று சொல்லி யபின், செழுங்கமலத்தோடு கைம்பெண்போல் நின்றிருந்தவளைத் தழுவிக்கொண்டு, சம்பூரணம் ! நான் உயிரோடு இருக்கும்பொழுது நீ இவ்வித கோலத்தோடு இருப்பதைப் பார்க்கவா இருந்தேன்! என்று அழுதார், சம்பூரணமும் தன் நாயகனைப்பிடித்துக் கொண்டு ஆனந்தக்கண்ணீர் சொரிந்தாள்.
கமலாக்ஷி – அம்மா ! அத்தையின் பெயர் தாயாரம்மாளென்றல்லவோ இருந்தேன்! மாமா வேறு பெயர் சொல்லி அழைக்கிறார்களே!
அருணாசல முதலியார். – அம்மா, கமலாக்ஷி ! நீ என்னை மாமாவென்று அழைக் கக்கூடாது, தாதா என்றே கூப்பிடவேண்டும். நீ என்னை ஏளனஞ் செய்துபேசியது ஞாபகத்திலிருக்கிறதா?
கமலாக்ஷி தன்மாமன் விஷயத்தில் ஏதோ குற்றம் செய்துவிட்டோமென்று பயந்து தேகம் நடுக்கத்தோடு நான் அறியாமல் ஏதாகிலும் குற்றம் செய்திருந்தால் மன்னிக்கவேண்டுமென்று வேண்டினாள். செழுங்கமலம்.- அண்ணா! கமலாக்ஷி அறியாமல் ஏதாகிலும் தங்கள் விஷ யத்தில் குற்றம் செய்திருந்தால் அதை மனதில் வைத்திராமல் மன்னிக்கவேண்டும்.
அருணாசலமுதலியார் – கமலாக்ஷி செய்த குற்றம் மன்னிக்கத் தகுந்ததல்ல. (என்று அருகில் நின்ற விசுவநாதசெட்டியாரைப் பார்த்து) ஐயா! தாங் கள் என் விஷயத்தில் செய்ததை எக்காலத்திலும் மறவேன். (என்று கையை நீட்டினார்.)
விசுவநாத செட்டியார் பக்கத்தில் தாங்கி மறைத்து வைத்திருந்ததைக் கொடுத்தார். அருணாசலமுதலியார் அதை வாங்கி, அம்மா கமலாக்ஷி! நான் மோராமாலையை உன் கழுத்தில் போட்டபொழுது, “தாதா! தங்கள் மகனுக்கென்னைக் கட்டிக்கொள்ளப் போகிறீர்களே! அப் பொழுது இந்த மோராமாலையைமட்டுமல்ல. இந்தப் பெட்டியி லடங்கிய நகைகளையெல்லாம் தாங்கள் சந்தோஷமடைய அணிந்து கொள்ளுகிறேன்.” என்றாய். அதற்கு உன் தாயாரும் செட்டியாரும் சாக்ஷியிருக்கிறார்கள். ஆனதால், அதுபோல இப்பொழுது அணிந்து கொள்ளவேண்டுமென்று பெட்டியைக்கொடுத்தார். கமலாக்ஷி நகை த்து, பெட்டியை இருகையாலும் வாங்கிக்கொண்டாள். வனசாக்ஷி மாமா கொடுத்த பெட்டியில் என்ன இருக்கிறதென்று வாங்கிப் பெட் டியிலிருந்த சாவியால் திறந்து, கமலாக்ஷி ! இதில் எல்லா நகைகளு மிருக்கின்றன வென்றாள்.
கமலாக்ஷி – ஆம் வனசாக்ஷி ! இந்தப் பெட்டியை இந்தச் செட்டியார் வீட் டுக்குக் கொண்டுவந்து, விற்கிற நகைகளென்று பொய்சொல்லி இதுபரி யந்தம் தம்மிடத்தில் வைத்திருந்தார்.
செழுங்கமலம்.- செட்டியாரே! தங்களை ஒன்று கேட்கவேண்டும்.(என்று அதிக கூட்டமில்லாத இடத்தில் விசுவநாத செட்டியாரை அழைத்துப் போய்) ஐயா! எங்களோடு இங்கிருந்தவர் இன்னாரென்று தங்களுக்குத் தெரிந்திருந்தும் எங்களுக்கு ஒரு வார்த்தையாகிலும் சொல்லாமல் இரு ந்தீரே! இது நியாயமா?
விசுவநாத செட்டியார்.- என்னை முதலில் தங்கள் வீட்டுக்கு விஜயரங்கம் அழைத்துவந்தபொழுது அருணாசல முதலியாரைக்கண்டு நான் ஆச்சரி யப்பட்டதை அவர் கண்டுகொண்டு, என்னைத் தோட்டத்துக்குள் அழை த்துப்போய் நான் யாரென்று உமக்குத் தெரியுமாவென்று கேட்டார். நான் பதில்சொல்லாமல் சிரித்தேன். அவரை நான் அறிந்து கொண்ட தை ஒருவருடனும் சொல்லாமல், அரங்கராவ் அவர்களிடத்தில்மட்டும் சொல்லி, அவர் தம்முடைய பெண்சாதி பிள்ளை விஷயங்களை நன்றாய் அறியுமளவும் இரகசியத்தை வெளிவிடாதிருக்கும்படி அவருக்கும் சொல்ல வேண்டுமென்றபின், இரத்தினத்தின் கடனைத்தீர்த்து அவ னைக் கடனிலிருந்து மீட்டுவிட்டால் அவன் நல்வழிக்கு வரமாட்டானா வென்று கேட்டார். அவனுடைய நடத்தை கெட்டதாதலால் அவனுக்கு என்ன செய்தபோதிலும் நல்வழிக்கு வரமாட்டானென்று நான் சொன் னபின் என்னை அழைத்துவந்தார். நான் அவர் சொல்லியவண்ணம் அரங் கராவ் அவர்களிடம் அருணாசலமுதலியார் தம் தங்கை வீட்டில் வந்திருக் கிறாரென்று சொன்னவுடன் அவர்கொண்ட சந்தோஷத்திற்களவில்லை. அருணாசல முதலியாருடைய இஷ்டத்துக்கு விரோதம் செய்யக்கூடா தென்று அவரும் என்னிடம் சொன்னதோடு, நிலத்தின் வரவுசெலவை என்னைப் பார்த்துவர உத்தரவுசெய்வதாக வாக்களித்ததுமன்றிச் சந்தே கம் நீங்க அவ்வாறே கட்டளையுமிட்டார். நாங்கள் அருணாசலமுதலியார் உத்தரவுக்கடங்கி நடந்ததேயன்றி வேறொரு அபிப்பிராயத்தோடு ஒன்றும் செய்யவில்லை.ஆனதால் தாங்கள் என்னைக் கோபிப்பது நியாயமல்ல. அருணாசல முதலியார் தமக்கு எதிரிட்டவர்கள் சந்தோஷமடைய அவர்களிடம் நன்மொழி புகன்று பின் அரங்கராவைப்பார்த்து, அப்பா! அரங் கராவ்! ஜெகநாதம் என் விஷயத்தில் செய்த கொடுமைகள் அதிகமா யிருந்தாலும் அவன் இன்றடைந்த அவமானம் போதுமானது. அவனை இன்னும் துன்பத்தில் அழுத்துவது நியாயமல்ல. நாம் அவனை மன் னித்ததாகச் சொல்லி வரலாம் வாவென்று கூற, அரங்கராவ் இஷ்ட மில்லாதிருந்ததை அறிந்தும் கையைப்பற்றி இழுத்து வந்து ஜெகநாத முதலியாரிருந்த இடத்தில் அவரில்லாததைக் கண்டு, எங்காகிலும் மறைந்திருப்பானென்று எண்ணி, சோமசுந்தரத்தை அழைத்து அவன் எங்கிருக்கிறான்? பார்த்துவா வென்று உத்தரவளித்தார். சத்திரம் வேங்டாசல முதலியார் தம் சகோதரர் கேசவமுதலியாரோடு விஜயரங்கத்திடம் சென்று, தம்பி விஜயரங்கம்! உன்னுடைய விஷயத்தில் நான் செய்த குற்றம் மன்னிக்கத்தகுந்ததல்ல. ஐயோ ! தம்பி ! நீ என்ன கஷ்டப்பட்டாயோ! நீ உன் தந்தை கலியாணசுந்தரமுதலி யாருடைய சம்மதமில்லாமல் வெளிப்பட்டேனென்ற உன் உண்மை யான வார்த்தையை நம்பாமல் நீ சொல்லியது யாவும் அபத்தமென்றே எண்ணினேன்.
விஜயரங்கம்.- தாங்கள் அபத்தமென்று நினைத்ததற்கு முக்கியமான காரணம் இருந்திருக்கக்கூடும்.
சத்திரம் வேங்கடாசல முதலியார் – நீ என்னிடத்தில் வருமுன்னம் உன்னு டைய தந்தை என்னிடத்தில் வந்து உனக்கு என்மகளைக்கொடுத்து விவா கம் செய்துவைக்கவேண்டுமென்ற விருப்பத்தைக் காட்டினார். நீ கண் டெடுக்கப்பட்ட குழந்தையென்று அவருடைய மைத்துனரால் கேள்விப் பட்டிருந்தவனாதலால் உன்னுடைய தந்தையைக் கோபித்துக்கொண் டேன். அவர் என் கோபத்தையும் கவனியாமல் நீரென்மகனை நேரில் பார்த்தால் கொடுக்கத் தடைசெய்யமாட்டீரென்று சொல்லிப்போன சில மாதங்களுக்குப்பின் நீ வந்ததால், நீ சொன்னதையெல்லாம் முதலில் நம் பியிருந்தவனாகிய நான் உன்னுடைய தந்தையின் பெயரை நீ சொன்ன வுடன் உன்னுடைய தந்தையே உன்னைச் சூதாக அனுப்பினாரென்றே ண்ணி உன்னை விட்டு நீங்கினேன். ஆனதால் என்னை மன்னிக்கவேண் டும்.(என்று விஜயரங்கத்தின் இரண்டு கரங்களையும் பிடித்துக்கொண்டு வேண்டினார்.)
விஜயரங்கம்.- மாமா! தாங்கள் இவ்விதம் சொல்வது அடாது. தாங்கள் எ ன்னிடத்திற்காட்டிய அன்பு மறக்கத்தக்கதல்ல. என் வினைப்பயனால் தங்களை விட்டுப்போக நேரிட்டதேயன்றி வேறல்ல.
கேசவழதலியார் – அண்ணா! தம்பி விஜயரங்கத்தை நிறுத்தியிருப்பீர்களாயின் எனக்கு விமோசனமாக நியாயமில்லையே!
அதற்குள் சபாபதிமுதலியாரும் சொக்கலிங்கமுதலியாரும் புண்ணியகோடி முதலியாரை அழைத்துக்கொண்டு வேங்கடாசல முதலியாரையும் கேசவமுதலியாரையும் பார்த்துச் சாப்பிட்டுவந்தபின் பேசிக்கொண்டி ருக்கலாம் வாருங்களென்று விஜயரங்கத்தோடு சென்றார்கள். ஸ்ரீகி வாச ஐயங்கார் அவ்விடம் வந்திருந்த பிராமணர்களையெல்லாம் அழை த்துச்சென்றார். மீனாக்ஷியம்மாள் அங்கிருந்த அம்மணியம்மாள், மரக தத்தம்மாள், அம்புஜத்தம்மாள், சிந்தாமணியம்மாள், மனோன்மணியம் மாள், மற்றுமுள்ள பெண்பிள்ளைகளை யெல்லாம் போஜனத்துக்கு அழைத்துச் சென்றாள்.சோமசுந்தரம் அருணாசலமுதலியார் சொல் லிய வார்த்தையைச் சிரமேற்கொண்டு ஜெகநாதமுதலியாரைத்தேடிப் பார்த்தும் அவர் இல்லாமையைக்கண்டு, வீட்டுக்குப்போய் விட்டதா கக் காணப்படுகிறதென்று அருணாசல முதலியாரிடம் சொல்லி விடைபெற்றுத் தானும் மற்றவர்களோடு சென்றான்.
23-ம் அத்தியாயம்
அரங்கராவ் அவர்களால் வரவழைக்கப்பட்டவர்களுக்கெல்லாம் தக்க மரியா தைசெய்து அவரவர்களை அனுப்பியபின் அவ்வரண்மனைக்கு விருந் தாளியாக வந்திருக்கும் ஆண்பிள்ளைகளை ஒரு பக்கமும் பெண்பிள் ளைகளை ஒரு பக்கமுமாக உட்காரச்செய்து அருணாசலமுதலியாரும் அரங்கராவும் தத்தம் ஆசனத்திலிருந்தபின், அருணாசலமுதலியார் விஜயரங்கத்தைப் பார்த்து, அப்பா விஜயரங்கம்! பெற்றபிள்ளையை விட மேன்மையாக உன்னை வளர்த்துவந்த தாய்தந்தையர் துன்பப் படும்படி அவர்களை விட்டுப்போன காரணமென்ன? அதைச் சொல் லவேண்டு மென்று கேட்டார்.
விஜயரங்கம்.- தந்தையே! என்னை வளர்த்துவந்த தாய்தந்தையர் என் பிறப்பு வளர்ப்பைச் சொல்லாமல் நான் எவ்விதத்திலும் சந்தேகங்கொள்ளாமலி ருக்க என்னை வளர்த்துவந்ததால், நான் என்னை வளர்த்தவர்கள் என்னைப் பெற்றோர்களல்லவென்று நினைக்க இடமுண்டாகாமலேயிருந்தது. ஒரு நாள் நான் நித்திரை செய்வதாக எண்ணி என்தாயார் என் தந்தையி டம் “நம்முடைய குமாரன் விஜயரங்கத்துக்கு இன்னும் விவாகம் செய் யாமலிருக்கிறது நியாயமா?” என்று கேட்டார்கள். அப்பொழுது நான் விழித்திருப்பதாக அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென்று எண் ணங்கொண்டேனாயினும், நான் என் தாயாரிடம் என் விவாகத்தைக்கு றித்து என் மனதிலுள்ளதைத் தெரிவிக்க எண்ணங்கொண்டிருந்தவ னாதலால் – அவர்கள் எண்ணத்தையறிய மௌனமாயிருந்தேன். நான் கண் டெடுக்கப்பட்டவனாதலால் இன்னகுலத்தானென்று அறியாமல் அவர் கள் என்னை வளர்க்குங்காரணத்தினாலே தங்கள் பந்துக்கள் ஒருவரும் தங்கள் வீட்டுக்கு வருகிறதில்லையென்றும் என் மாமன் என் தந்தையிடம் என்னைக் குறிப்பிட்டுக் கேவலமாகப்பேசி, குலமறியாதவனை வளர்ப்ப தால் தான் உங்கள் லீட்டுக்கு வருவதில்லையென்றும் சொல்லியதை என் தகப்பனார் தாயாரிடம் கூறித் துக்கப்பட்டார். நான் கண்டெடுக்கப்பட் டவனென்றும் என்னா லென் தாய் தந்தை தங்கள் பந்துக்களால் விலக்கப் பட்டிருந்தார்களென்றும் அறிந்தபின் அவர்களைத் துன்பத்திலிருக்க விடுவது நியாயமல்லவென்று அப்பொழுதே நீங்கினேன். நானிருக்கு மிடத்தைத் தெரிவித்தால் என்னை அழைத்துக்கொண்டுபோய் விடுவார் களென்று என்னிருப்பிடத்தைத் தெரிவிக்காமலிருந்தேன்.
அருணாசல முதலியார் – ஐயா கலியாணசுந்தரமுதலியார் ! நான் உம்முடைய குமாரன் கருத்தை அறியாமல் சொன்னவைகள் உண்மையாயின பார்த் தீரா! (என்று நகைத்தார்.)
வேங்கடாசல முதலியார் – அத்தான்! விஜயரங்கம் வீட்டைவிட்டு நீங்கிய பின் என்னைக்கண்டான். (என்று தான் அவன் விஷயமாகச் செய்த கொடுமைகளைச் சொல்லித் துக்கப்பட்டார்.)
கேசவ முதலியார் – அத்தான் ! தம்பி விஜயரங்கத்தை என் தமையன் துரத்தி விட்டதைக்குறித்து எனக்குத் துக்கமில்லை. எனக்குச் சந்தோஷமே! கலியாணசுந்தரமுதலியார். – விஜயரங்கம் கஷ்டத்தோடு வழி நடப்பதையும் பசியால் களைத்துப் போவதையும் பார்க்கவா உமக்குச் சந்தோஷமாக இருந்தது?
கேசவ முதலியார். – ஆம்! ஆம்! அவ்விதம் கஷ்டப்பட்டு, நானிருக்கும் இடம் வந்ததால்தான் நான் வெளிப்பட்டேன். அவ்விதம் முடியாமல் என் தமை யன் தம்முடன் வைத்துக்கொண்டிருந்தாராயின் என்கதி யென்னவாயி ருக்கும் ! சபாபதி முதலியார் கதி என்ன? எங்களை மீட்டுவரவே தம்பி விஜயரங்கத்தை என் தமையன் அனுப்பினார். (என்று தாம் மதுரைக் குப்போயிருந்து வந்தபின் தம் மைத்துனர் நிலத்தை அபகரித்ததைக் கேள்விப்பட்டதையும், தம்முடைய மைத்துனர் ஜெகநாத முதலியாரைப் பார்க்கப்போனபொழுது தமக்குச் சமாதானம் சொல்லியனுப்பியதையும், தாம் வரும்பொழுது தம்மைச் சோலையப்பன் ஆள்கள் மூலமாய்ப் பிடித் துக் கட்டிக்கொண்டுபோய் மூன்றாம்நாள் ஒரு அறையில்விட்டு அது முதல் அனேக வருடங்கள் சிறைப்பட்டிருந்ததையும் பின் விஜயரங்கம் சோலையப்பன் முதலானவர்களை ஒருவனாக நின்று வென்ற அதிசயத் தையும் யாவருங்கேட்டு ஆச்சரியப்படச் சொல்லிமுடித்தார்.)
அருணாசல முதலியார் – அப்பா விஜயரங்கம்! நீ சோலையப்பன் கையிலெவ்விதம் அகப்பட்டாய்?
விஜயரங்கம்.– தந்தையே! சோலையப்பன் இருந்த இடத்திற் கருகாமையிலுள்ள சாலைவழியாக நான் போகும்பொழுது ஒரு சந்நியாசி வந்திருக் கிறாரென்றும் அவரைப் பார்க்கப்போகிறவர்களுக்கு இரகசியங்களைச் சொல்லுகிறாரென்றும் கேள்விப்பட்டதால் என் பிறப்பை யறியலா மென்பதாகச் சென்றேன். (என்று தனக்கு நேரிட்டதை விளங்கக் கூறினான்.)
சபாபதி முதலியார் – தம்பி விஜயரங்கம் தான் செய்த யாவும் சொல்லவில்லை. (என்று தன்மனைவி கனகாம்புஜத்தினால் நேரிட்டவைகளும், தங்களை மீட்டபின் விஜயரங்கத்தைப் பரிக்ஷித்தபொழுது குற்றத்தைத் தானே ஏற்றுக்கொண்டு பேசியதுமாகிய விஷயங்களை மறைக்காமல்யாவ ருங் கேட்டு அதிசயப்படச்சொன்னார்.)
அருணாசல முதலியார் – ஜெகநாதமுதலியார் எழுதிய கடிதங்கள் சோமசுந்தரத்துக்கு எப்படி கிடைத்தன?
கேசவ முதலியார் – நாங்கள் வெளிப்பட்ட மறுநாள் அடுத்த கிராமத்தின் தாசில்தார் அனேக சேவகரோடு திருடர்கள் இருந்த விடத்திற்குச் சென்று கோயிலுக்கெதிரில் இறந்திருந்தவர்களை எடுத்து அடக்கஞ்செய் யத்தம்மோடு வந்தவர்களுக்கு உத்தரவளித்தபின், சோலையப்பன் அறை யிலிருந்த பெட்டிகளைத் திறந்து பார்த்தகாலத்திலே அளவற்ற திரவியத் தைத் தம்பி விஜயரங்கம் கண்டு, இந்த ஆலயத்தின் திருப்பணிக்கும் கும் பாபிஷேகத்திற்கும் நித்தியகட்டளைக்கும் வேண்டிய பொருளிருப்ப தால் தக்க ஏற்பாடுசெய்யலாமென்ற பொழுது, தாசில்தார் துரைத்தனத் தார் அனுமதிபெற்று அவ்விதமே செய்யலாமென ஒப்புக்கொண்டார். அவ்விடத்திலிருந்த திரவியத்தோடு அனேக கடிதங்கள் இருப்பதையுங் கண்டோம். நான் சிறைப்பட்டதுமுதல் ஜெகநாதமுதலியார்மேல் சந்தே கங்கொண்டிருந்தவனாதலால் அவருடைய கடிதம் ஏதாகிலும் அவைகளி லிருக்குமோவென்று பார்த்தபொழுது, நான் பிடிப்பட்டகாலத்தில் என் னிடத்திலிருந்தெடுத்துக்கொண்ட கடிதத்தோடு ஜெகநாதமுதலியார் என்னைக்குறித்துச் சோலையப்பனுக்கு எழுதிய கடிதங்கள் அனேகமிரு க்க அவைகளைத் தாசில்தார் உத்தரவுபெற்றுப் பின் சோமசுந்தரமுதலி யாரைக் கண்டபொழுது அவரிடம் கொடுத்தோம்.
அருணாசல முதலியார். – அம்மா கமலாக்ஷி! நீ உன் தாதாவையும் உன் தாயா ரையும் விட்டுப்போன காரணத்தையும் உனக்கு நடந்ததையும் சொல்ல வேண்டும்.
கமலாக்ஷி – மாமா, ஊம் தாதா! அத்தையவர்களுக்கு நேரிட்டதைக் கேட்ட பின் என்னைக்கேட்க வேண்டுகிறேன்.
அருணாசல முதலியார்.- அம்மா கமலாக்ஷி! நான் உங்கள் வீட்டுக்கு வந்தது முதல் இதுவரையிலே நீ சொல்வதெல்லாம் யாவருக்கும் வியப்பைத் தந்ததையும் அது நியாயத்தை அனுசரித்திருப்பதையும் அறிந்திருக்கி றேன். இப்பொழுதும், உனக்கு நேரிட்டதைப் பின் சொல்லுகிறேன். என்பதும் முக்கியமான காரணத்தைக்கொண்டே யிருக்கவேண்டும். ஆனதால் சம்பூரணம்! உனக்கு நேரிட்டதை முதலிற் சொல்லவேண்டும்.
சம்பூரணம். – அம்மா கமலாக்ஷி! என்னை. ..
கமலாக்ஷி – அத்தை ! நான் தங்களைக் கேட்கவில்லை. மாமா ! ஊம், தாதாவி டம் சொல்லாமல் என்னிடம் சொல்லுதல் அழகாகாது, தாங்கள் மாமா, ஊம், தாதாவிடம் சொல்லவேண்டும்.
கமலாக்ஷி சொல்லியதைக் கேட்டு யாவரும் நகைத்தார்கள். அருணாசல முதலியார் – கமலாக்ஷி சொல்லியது நியாயமே! என்னிடத்திலே
யே யாவும் சொல்லவேண்டும்.(என்று நகைத்தார்.)
அரங்கராவ்.- உன்னிடத்தில் சொல்லவேண்டிய அவசியமில்லை.அம்மா! நீ என்னிடத்தில் சொல்லலாம்.
சம்பூரணம்.- அண்ணா! என்னைத் தங்கள் சினேகர் விட்டு நீங்கும்பொழுது ஏழுமாதம் கருப்பமாயிருந்தேன். என் மைத்துனர் இரண்டுமாதம் என் பார்வைக்கு அகப்படாமல் இருந்தார். இரண்டுமாதத்துக்குப்பின் ஒரு நாள் விடிய ஒருஜாமத்துக்குமுன் காத்தனும் சாத்தனும் நான் படுத்திரு ந்த அறைக்குள் வந்து என்வாயில் துணியை வைத்துத் திணித்துக் கை களையுங் கால்களையுங் கட்டிப், பேசினால் கொன்று விடுவோமென்று ஒரு கத்தியைக்காட்டிப் பயமுறுத்தி வண்டியில்போட்டுக் காட்டுக்குள் வண்டி போனவுடன் என் வாயிலிருந்த துணியையெடுத்துக் கட்டை அவிழ்த்துக்கொண்டுபோய்ச் சுந்தரத்தம்மாளிடம் என்னை விட்டுப்போ னார்கள். சுந்தரத்தம்மாள் என்னைக்கண்டு பரிதாபப்பட்டு எனக்குத் தேறு தலைசொல்லி வந்தார்கள். நான் சுந்தரத்தம்மாளிடம்போன சில தினங்க ளுக்குப்பின் ஓர் ஆண்குழைந்தையைப் பெற்றேன். சுந்தரத்தம்மாள் குழந் தை சுந்தரமாக இருக்கிறதென்று சந்தோஷப்பட்டாலும், நான் சந்தோ ஷப்படாமல் துக்கப்பட்டு நம்மைக் காட்டில் கொண்டுபோய் விடும்படி செய்தவர் நம்முடைய மைத்துனராக இருக்கவேண்டும், கப்பலேறிச் சென்ற நம்முடைய நாயகன் வந்துவிடுவாரென்ற எண்ணம் அவருக்கிரு ந்தால் நம்மைக் காட்டில் கொண்டுபோய் விடத்துணியார், ஆனதால் நம் முடைய நாயகனுக்கேதோ கெடுதிசெய்ய எண்ணங்கொண்டிருக்கிறார் போல் காணப்படுகிறது, நம்முடைய நாயகனுக்குக் கெடுதிசெய்தபின் நம்முடைய குழந்தையை உயிரோடு வைத்திருக்கமாட்டாரே என்ற பயத்தோடிருந்கேன், சில மாதங்களுக்குப்பின் நானும் சுந்தரத்தம்மாளும் வீட்டுக்குப் பின்புறத்தில் போயிருந்து வந்து குழந்தையைக்காணாமல் திகைத்து மரணமூர்ச்சையானோம். சுந்தரத்தம்மாள் உதவியால் மூர்ச் சைதெளிந்து, நம்முடைய நாயகனும் பிரிந்தார், குழந்தையும்போனது, நாமும் இறக்கவேண்டியதென்றிருந்தேன். மூன்று மாதங்களுக்குப்பின் என் மைத்துனர்வந்து தாமொன்றும் அறியாதவர்போல் குழந்தையைக் கொண்டுவா என உத்தரவளித்துக் குழைந்தையின் விஷயத்தையறிந்து அதிக துக்கங்கொண்டவர்போல் நடித்து என்னிடம்வந்து, கப்பலேறிச் சென்ற தன் தமையனும் காலஞ்சென்றார், குழந்தையும்போனது என்று எனக்குத்தைரியம்சொல்லி, என்னைப் பெண்டாள எண்ணங்கொண்டார். நான் அவரை நிந்தித்து அனுப்பிவிட்டேன். அவர் நீங்கியபின் நான் சுந் தரத்தம்மாளிடம் என் நாயகனுக்கு நேரிட்டதைச் சொல்லித் துக்கப்பட்யதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு எனக் கித்தனைநாள் தேறுதலைசொல்லி இப்பொழுது இவ்விதம் கேட்பது தருமமா? என்றேன். சுந்தரத்தம்மாள் என்னைத் தன் தங்கையைப்போல் எண்ணியிருப்பதால் அந்தப்பாவி கையி லிருந்தென்னை விடுவிக்கவே தான்கேட்டதாகவும், நான் இறந்துவிட்ட தாகத்தான் அவருக்கு மெய்ப்பித்து விடுவதாகவும், எங்காகிலும் போய் மறைந்திராமல் உயிரோடு இருப்பதை அவர் அறிந்தால் தன்னுயிர் நில் லாதென்பதாகவும் சொல்லக்கேட்டு, அவளைத் தழுவிக்கொண்டு, அவளே என் தாயென்றும் கருதி, நான் இப்பொழுதே நீங்கி எங்காகிலும் மறை ந்திருந்து என் காலத்தைக் கழித்து விடுகிறேன், ஆயினும் நீ கான் இற ந்துவிட்டேனென்று எப்படி மெய்ப்பித்து விடுவாயென்று கேட்ட போது, அவள் அது ஒரு கஷ்டமல்ல, தோட்டத்தில் ஒரு குழிவெட்டி ஒரு கட்டையில் நான் கட்டியிருந்த சேலையில் ஒன்றைச் சுற்றிப் புதைத் துவிட்டால், அவர் தன் சொல்லை நம்பாமல் குழியைத் தோண்டிப் பார்த் தாலும் சேலையால் சுற்றப்பட்டிருக்கும் கட்டையைப் பார்த்து நம்பிக்கை கொண்டுபோவார் ; அல்லாமலும் தம்முடைய தமையன் சொத்தைக் கைக்கொள்ளப்போகிறவருக்கு எப்பக்கத்திலும் அனுகூலமாய் முடிந்த தைப்பற்றிச் சந்தோஷப்படுவாரேயன்றித் துக்கப்படமாட்டாரென்றுங் கூறி, என்னை இரவில் தனித்தனுப்பத் தனக்கு மனம் துணியவில்லை யென்று துக்கப்பட்டாள். நான் இரவில் போவதைவிட்டுப் பகலில் போக யோசித்தால் யாராகிலும் கண்டு அவரிடம் சொல்லிவிட்டால் இருவருக்குங் கெடுதியாக முடியுமே!நம்முடைய எண்ணம் கைகூடா பென்றதை ஒப்பி, என்னைச் சாப்பிடச்செய்து எனக்கு உத்தரவு கொடு த்து அனுப்பும்பொழுது, தான் ஒன்றை மறந்துவிட்டதாகவும்-அதாவது என்னைப் புதைத்துவிட்டேனென்று என் மைத்துனருக்குத்தான் சொன் னால் அவள் போட்டிருந்த நகைகளெங்கே என்றால் தான் என்ன சொல் லுகிறதென்று கேட்டாள். அவள் சொல்லுவது நியாயமே என்று நான் பூட்டியிருந்த தாலி முதலிய நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுத்தேன். அவைகளைச் சுந்தரத்தம்மாள் துக்கத்தோடு வாங்கிக்கொண்டு தன்னி டத்திலிருந்த பையொன்றைக் கொடுத்துப் பெற்றுக்கொள்ள என்னைக் கட்டாயப்படுத்தினாள். நான் மறுக்காமல் பெற்றுக்கொண்டு சுந்தரத்தம் மாளோடு வெளியில் சென்று அவள் காட்டியவழியாகச் சென்றேன். என்று சம்பூரணம் சொல்லிமுடித்தாள்.
சம்பூரணம் சொல்வதைக் கேட்டிருந்தவர்களோடு உட்கார்ந்திருந்த சுந்தரத் தம்மாள் எழுந்துவந்து, அம்மா கமலாக்ஷி! உன் அத்தையிடம் நான் பெற்றிருந்த இந்த நகைகளை உன் அத்தைக்கு அணியென்று ஒரு முடிச்சைக் கொடுத்தாள். முடிச்சைவாங்கிய கமலாக்ஷி,மாமா! ஊம் தாதா ! தருமர் அசுவமேதயாகம் செய்யவேண்டிக் குபேரனிடத்தில் கடன் கேட்ட காலத்தில், வாங்கும் பொழுதிருக்கும் சந்தோஷம் கொடுக்கும்போதிருந்தால் கொடுக்கத்தடையில்லை யென்றதைக் கேட்ட தருமர் யாவருக்கும் வாங்கும்பொழுது சந்தோஷமாகவும் வாங்கி யதைக் கொடுக்கும்பொழுது துக்கமாகவும் இருப்பது சகஜ மாதலால் அவ்விதம் சந்தோஷமாகக் கொடுக்கமுடியாதென்று கடன் வாங்காதிருந்தார். சுந்தரத்தம்மாள் வாங்கும்பொழுது துக்கப்பட்டதை யும் கொடுக்கும்பொழுது சந்தோஷப்பட்டதையும் பார்த்தீர்களா வெ ன்று, தன் அத்தைக்கு எல்லா நகைகளையும் அணிவித்துத் தாலியை யும் கழுத்தில் கட்டி, அத்தை ! தாங்கள் இப்பொழுது சிறு பெண்ணாய் விட்டீர்களென்று நகைத்தாள்.
சம்பூரணம். – ஆம் கமலாக்ஷி! உன்னால் நான் சிறு பெண்ணானேனென்பதற் குச் சந்தேகமில்லை. (என்று அரங்கராவைப் பார்த்து) அண்ணா! நான் சுந்தரத்தம்மாளைவிட்டு அன்றிரவெல்லாம் காட்டிலலைந்து அதிக கஷ்ட ப்பட்டு ஒரு சாலையைச் சேர்ந்து மறுநாள் பகலெல்லாம் நடந்து மாலை யில் ஒருசிறிய கிராமத்தை யடைந்து இரவைக் கழிக்க இடங்கேட்கலா மென்று அநேக வீடுகளருகில் சென்றாலும் கேட்பதற்கு அஞ்சி ஒவ் வொரு வீட்டையும் கடந்து போகும்பொழுது, ஒரு வீட்டின் வெளி யில் நின்றிருந்த புண்ணியகோடி முதலியார் என்னைப் பார்த்து, ”யா ரைத் தேடுகிறாய்? என்னவேண்டும்?” என்று கேட்டார். நான் வெட் கப்பட்டு ஒன்றும் சொல்லாம விருந்ததைக் கண்டு, தன் மனைவியை அழைத்து என்னைக்காட்டி, இந்தப் பெண்பிள்ளைக்கு என்ன வேண் டுமோ தெரியவில்லை, அதை விசாரியென்று வீட்டுக்குள் சென்றார். அவர் மனைவி அம்மணியம்மாள் என்னை வீட்டுக்குள் அழைத்து என் னால் யாவும் அறிந்தபின் தங்கள் வீட்டில் என்னை இருக்கும்படி வேண் டித் தன் தங்கையைப்போல் பார்த்து வந்ததோடு, என்னைக் குறித்து வினவுவோர்களுக்கெல்லாம் நான் தன் தங்கையென்று சொல்லியும் வந் தார்கள். நான் அவர்கள் வீட்டுக்குப் போகும்பொழுது அவர்களுக்குக் குழந்தைகளில்லாமலிருந்து பின் சொக்கலிங்கமும் மரகதமும் பிறந்தார் கள். கமலாக்ஷி யம்மாளை மரசதமும் சொக்கலிங்கமும் முதல் வீட்டுக் குக் கொண்டுவந்தபின் கமலாக்ஷி சுரத்தால் வாய் பிதற்றியபொழுது காத்தனையும் சாத்தனையுங் குறித்தும் விஜயரங்கத்தைக் குறித்தும் சொன்னவைகளைக் கேட்டு, கமலாக்ஷி சௌக்கியமானபின் அவள் சொல் லிய சங்கதிகளினால் விஜயாங்கமே என் மகனென்று மூர்ச்சையா னேன். விஜயரங்கத்தின் விஷயத்தில் இருந்த சந்தேகம் முற்றிலும் நீங்கக் கமலாக்ஷி வேண்டியதைச் செய்து என் மகனை எனக்குக் காட்டி இவ்விடம் கொண்டுவந்து என் நாயகனோடு சேர்த்தாள்.
அருணாசல முதலியார். – அம்மா கமலாக்ஷி! இனி உனக்கு நேரிட்டதைச் சொல்லலாம் அல்லவா?
கமலாக்ஷி – மாமா! ஊம் தாதா! தங்களைத் தாதாவென்றழைக்கச் சுலபத் தில் வரவில்லை. எனக்கு நேரிட்டதைச் சொல்லத் தடையில்லை. தாங்க ளும் அம்மாளும் என்னை விட்டு நீங்கியபின் ஒரு சிறுவன் இந்தக் கடிதத் தைக்கொண்டுவந்து கொடுத்தான். (என்று ஒரு கடிதத்தைக் கொடுத்தாள்.)
கமலாக்ஷி கொடுத்த கடிதத்தை அருணாசல முதலியார் யாவருங்கேட்க வாசி த்தபின், கமலாக்ஷி தனக்கு நேரிட்ட விஷங்களிலே, வைக்கோற்போ ரில் நின்று கனகாம்புஜம் வருமுன் விஜயரங்கம் தனியே பேசிக்கொ ண்டிருந்ததையும், கனகாம்புஜத்துக்கும் விஜயரங்கத்துக்கும் நடந்த சம்பாஷணையையும் சொல்லாமல், மற்ற முக்கியமான சங்கதிகளைச் சொல்லியபிறகு, மாமா! ஊம் தாதா! நான் அண்ணன் சோமசுந்தர முதலியாரைக்கண்டு, காத்தனையும் சாத்தனையும் தேடி விசாரிக்கச் சொன்னபடி, அவர் அவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்குப் பெரிய வெகுமதி கிடைக்கப்போகிறதாகச் சொல்லி, அவர்களை ஒன்றும் கேட்காமல் நான் இருந்த இடத்திற்கு அழைத்துவந்து என்னை நேரில் வைத்துக்கொண்டு கேட்டபோது, அவர்கள் பயந்து பதில் சொல்லாமலிருந்ததைக் கண்டு, அவர்கள் வண்டியில் பேசியதைச் சொல்லி, உண்மையைப் பேசினால் பெரிய வெகுமதி தருவதாக நான் வாக்களித்தபின், அவர்கள் ஒன்றையும் மறைக்காமல் சொன்னதேயன் றிச், சுந்தரத்தம்மாளுக்கும் இந்த இரகசியம் நன்றாய்த் தெரியுமென் றுங் கூறியபடியினால், காத்தன் சாத்தன் குறிப்பிட்ட இடத்திற்குச், சோமசுந்தரத் தண்ணன் சென்று சுந்தரத்தம்மாளையும் மனோரஞ்சித த்தையும் அழைத்துவந்து அவர்களை விசாரித்த பிறகு, பிள்ளையின் செய்தியைத் தான் முற்றிலும் அறிந்திருந்தும், பிள்ளையைப் பெற்ற புண்ணியவதி எங்கிருக்கிறாளோ, அவர்களுக்கென்ன நேரிட்டதோ? என்று சோமசுந்தரத்தண்ணன் துக்கப்பட்டுக்கொண்டிருந்தபொழுது, நாங்கள் வார்த்தையாடிக்கொண்டிருந்த அறையின் கதவு தட்டப் பட்டது. உடனே நான் கதவைத் திறந்தபொழுது, அத்தான் நின்றி ருந்ததைக் கண்டேன். அவர் கமலாக்ஷி ! உன் தந்தையை அழைத்து வந்தே னென்றார். உடனே அண்ணன் சபாபதி முதலியாரோடு நின்றிருந்த என் தந்தை என்னைப் பிடித்துக்கொண்டு, நான் சிறு குழைந்தையில் விட்டுப்போனே னென்று துக்கப்பட்டார். அவர் துக்கம் நீங்கியபின், எனக்குத் தந்தையைக் கொடுத்தவருக்குப் பிரதி யுபகாரம் செய்யாமலிருப்பது அழகல்லவென்று வீட்டுக்குள்ளோடி என் அத்தையைப் பிடித்துத் துரிதமாய் இழுத்துவந்தேன்; அவர் கள் எங்கு இழுத்துக்கொண்டு போகிறா யென்றதற்குப் பதில் சொல் லாமல் அத்தானிடத்தில் விட்டு, அத்தான்! தாங்கள் எனக்குத் தந்தையைக் கொடுத்தீர்கள்! நான் தங்களுக்குத் தாயைக்கொடுத்தேன் என் றேன். என் அத்தை தன் மகனைப் பிடித்தணைத்துக்கொண்டு கொஞ்சி குலாவி அழுதார்கள். சோமசுந்தரத்தண்ணனும் சுந்தரத்தம்மாளும் சொக்கலிங்கத்தண்ணனும் மற்றவர்களும் அடைந்த ஆச்சரியத்திற் களவில்லை.
அருணாசல முதலியார் – சம்பூரணம் விஜயரகத்தின் தாயென்று உனக்கு எப்படித்தெரியும்?
சமலாக்ஷி – மாமா! ஊம் தாதா! அத்தையவர்கள் அத்தானைக்குறித்து நான் பேசியபொழுது மூர்ச்சையானதாலும், அத்தையவர்கள் முகச்சாயல் அத் தானுக்கு இருப்பதாலும், அத்தையவர்களைத் தாங்கள் சிறுவயதில் விட் டுப் போனீர்களென்று அத்தையவர்களால் சொல்லக்கேட்டதாலும், அந்தானுடைய தாயென்றே அவர்களை எண்ணினேன். அத்தையவர் கள் தன் மகனைப்பார்த்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்துகொண்டுருப்ப தைக் கண்ட சுந்தரத்தம்மாளும் அத்தையவர்களைக் கண்டு ஆனந்தங் கொண்டார்கள். நாங்கள் யாவரும் சந்தோஷத்தோடிருக்கும்பொழுது சுவாமியவர்கள் அனுப்பிய பத்திரிகையைச் சொக்கலிங்கத் தண்ணன் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார். அப்பத்திரிகை எங்களுடைய எண்ணத்திற்கு அனுகூலமாய் முடியுமென்று கருத்தினோம். சுவாமி யவர்கள் மதுரையிலிருந்து வரும் சினேகிதரை மகிழ்விக்கச் சுவர்ண புரியிலிருந்து சில தனவந்தரை வரவழைக்க எண்ணங்கொண்டிருந்த தால், தாம் இருக்கும் ஊரிலுள்ள தனவந்தர்களை வரவழைக்காமலிரா ரென்றும், என் சிறிய மாமன் வந்திருந்தால் தான் கௌரவமாக எதற் கும் முன்னிடுவாரென்றும், அவர் முன்னிட்ட காலத்தில் அவருடைய செய்கையை வெளிக்குக் கொண்டுவர வேண்டுமென்றும் நாங்கள் யாவ ரும் பேசி முடிவுபடுத்தி யாவரையும் ஆச்சரியப்படுத்த இருந்தோம். எங்களிஷ்டப் பிரகாரம் யாவும் முடிந்ததோடு, நாங்கள் ஆச்சரியமும் ஆனந்தமும் அடையத் தாங்களும் வெளிப்பட்டீர்கள்.
கமலாக்ஷி சொல்லைக் கேட்டிருந்தவர்கள் யாவரும் கமலாக்ஷி பசியோடு கடைத்தெருவில் எலிகடித்த பழத்தை எடுக்கப்போனே னென்ற தையும், அக்கிராமத்தில் ஒரு கவளம் அன்னத்திற்கு வீடுவீடாய்த் திரிந்தே னென்றதையும் கேட்டுத் துக்கப்பட்டுப் பின் நடந்ததை யறிந்து பேரானந்தமடைந்தார்கள்.
செழுங்கமலம் தன் மகளைப்பிடித்துக்கொண்டு, கமலாக்ஷி! என்பாவி அண் ணனால் படாதபாடுபட்டுக் கையிலோர் காசுமில்லாமல் கடைத்தெரு வில் திரிந்தும், படுத்துறங்க இடமில்லாமல் வைக்கோற்போரில் படு த்துறங்கவுமா விதியிருந்ததென்று அழுதாள். செழுங்கமலத்தின் துக் கத்தை நீக்கவேண்டுமென்னு மெண்ணத்தோடு சம்பூரணம் கமலாக்ஷியைப்பார்த்து, அம்மா கமலாக்ஷி! நீ வைக்கோற்போரில் படுத்திருந்த பொழுது விஜயரங்கம் ஏதேதோ சொன்னானென்றதைக் கூறாமல் விட்டது யாது காரணம்?
அருணாசல முதலியார் – அம்மா கமலாக்ஷி! உனக்கு நேரிட்டதைச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டபோது, பாதியை மறைத்து வைத் துக்கொண்டது நியாயமா?
கமலாக்ஷி.- தங்களைத் தாதாவென்று அழைக்காமல் மாமாவென்றழைக்க உத் தரவுகொடுத்தால் அதைச் சொல்லுவேன். அல்லவென்றால் சொல்லேன். (என்று நகைத்தாள்.)
அருணாசல முதலியார். – இன்னும் இரகசியம் இருக்கிறதுபோல் சாணப்படு கிறது. உன்னிஷ்டபிரகாரம் அழைக்கலாம். நீ ஒன்றையும் ஒளிக் காமல் சொல்லவேண்டும்.
கமலாக்ஷி – தாதா! ஊம் மாமா! நான் தங்களைத் தாதா வென்ற வழக்கம் விடமாட்டேனென்கிறது. பார்த்தீர்களா?
அருணாசல முதலியார் – ஆம்! வழக்கப்பிரகாரம் தாதாவென்றழைக்கச்சொன் னபொழுது மாமாவென்று அடிக்கடி உன்வாயில் வந்துகொண்டிருந்தது. மாமாவென்றழைக்க எண்ணங்கொண்டபொழுது தாதாவென்ற வழக்கம் வருகிறது. ஆனதால் வழக்கத்தைக் கெடுக்காமல் தாதா வென்றழைப் பதே உத்தமம்.(என்று நகைத்தார். யாவரும் நகைத்தார்கள்.)
கமலாக்ஷி – இல்லை, இல்லை ! இனி தாதாவென்று சொல்லாமலிருக்க முய லுகிறேன். நான் வைக்கோற்போரில் படுத்திருந்தபொழுது நான் அவ் த்திலிருந்ததை அறியாமல் தங்கள் குமாரன் அவ்விடம் வந்து நின்று தன் மனதில் குடியிருந்த கள்ள எண்ணங்களை யெல்லாம் கொட்டி விட்டார். இவ்வித எண்ணங்கள் அவரிடத்தி லிருக்குமென்று நான் நினைக்கவில்லை.(என்று நகைத்தாள்.)
அருணாசலமுதலியார் – விஜயரங்கம் சொன்னதை இன்னதென்று கூறாமல் வீணில் அவன்மேல் குற்றஞ் சுமத்துவது நியாயமல்லவே!
கமலாக்ஷி – அவர் என்னைச் சகோதரியைப்போல் பாவித்துச் சகோதரவாஞ் சையோடு வார்த்தையாடிவந்து அந்தரங்கத்தில் என்ன எண்ணங் கொண்டிருக்கவேண்டும்!”நான் உன்னை விவாகஞ் செய்துகொள்ள எண்ணங்கொண்டு என் தாயாரை அனுப்பிக் கேட்க நினைத்திருந்தேன். என் தாயார் பெண்கேட்டு உன் தாயாரும் சம்மதப்படுவார்களானால் என்னை என்னவென்று அழைப்பாய்? இனி அவ்வாசை ஒழிந்ததால் நான் இனி ஒரு பெண்ணையும் விவாகஞ்செய்து கொள்ளாமல் பிரம சரியா யிருப்பேன்.” என்று சொல்வது நியாயமா? (என்று நகைத்தாள்.)
சம்பூரணம்.- கமலாக்ஷி! ஆம்! ஆம்! விஜயரங்கம் அவ்விதம் சொல்லியது முற்றிலும் தப்பிதம். விஜயரங்கத்தின் கருத்தை யறிந்தபின் நீயும் “விஜ யரங்கத்தண்ணனுக்கு விவாகம் நடவாது, அவருக்கு என்னைக் கொடுக்க என் தாயார் சம்மதிக்கமாட்டார்கள், ஆனதால் நானும் விவாகமில்லாம லிருக்கவேண்டியதே!” என்றாயே இது நியாயமா? என்று நகைத்தாள்.
அங்கிருந்த யாவரும் கல் என்று நகைத்தார்கள். விஜயரங்கமும் கமலாக்ஷி யின் அந்தரங்கக் கருத்தை அறிந்து அடங்கா மகிழ்வோடு புன்சிரிப்பு கொண்டான்.
அருணாசல முதலியார் – ஐயா மைத்துனரே! அம்மா செழுங்கமலம்! உங் கள் மகள் கருத்தை அறிந்தீர்களோ? விஜயரங்கத்துக்குத் தன்னைக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்த இருந்தது தெரிகிறதா! (என்று நகைத்தார்.)
கமலாக்ஷி – மாமா! தங்களை ஒருவர் சாப்பிடுகிறீர்களா என்ற பொழுது தாங்கள், வேண்டாம் இப்பொழுதான் சாப்பிட்டேன் என்றால், தாங்க ளின்னும் சாப்பிடவில்லை, ஆனதால் சாப்பிடப் பிரியம் யிருக்கிறதென் றும், ஒருவர் தங்களிடத்தில் வந்து “ஒரு பெண்பார்த்து விவாகம்செய் துகொள்ளுகிறீர்களா?” என்று கேட்டால், தாங்கள் ”எனக்கு விவாகம் வேண்டாம்” என்றால் தங்களுக்கு விவாகத்தின்மேல் இஷ்டமிருக்கிற தென்றே தாற்பரியம் கொள்ளவேண்டுமென்றும் சொல்வீர்களாயின் நான் சொல்லியதற்கும் எதிரிடையாகத் தாற்பரியம் கொள்ளவேண்டும். (என்று நகைத்தாள்.)
அரங்கராவ்.– அருணாசலம் ! நம்முடைய மருமகளைப் பேச்சில் வெல்ல நம்மால் முடியாத காரியம்!
புண்ணியகோடி முதலியார்.- ஐயா! தங்களுடைய மருமகள் வல்லமையை அறிய எவராலும் முடியாது. நானும் என்மகன் சொக்கலிங்கமும் அம் புஜத்தின்மேல் கொண்ட அருவருப்பும் நீங்க எங்களிருவரையும் வாக்குச் சாதுரியத்தினால் கட்டி எங்களிஷ்டத்தை மாற்றித் தன்னுடைய இஷ் டம்போல் நடக்கச்செய்து எங்கள் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்தாள். (என்று அம்புஜத்தின் விஷயத்தில் நடந்ததைச் சொல்லி யாவரையும் அதிசயப்படச் செய்தார்.)
அரங்கராவ்.- அருணாசலம் ! நீ மற்றவர்களைக் கேட்டதுபோல் நான் உன் னைக் கேட்கவேண்டியதாயிருக்கிறது. நீ இவ்வூரைவிட்டுப்போனது முதல் நடந்ததைச் சொல்லவேண்டும்.
அருணாசலமுதலியார் – எனக்கு நேரிட்டதைச் சொல்லவேண்டியது அவசி யமேயாயினும் என் சகோதரன் இன்று அடைந்த அவமானம் போதாதென்று, இன்னும் அவனை அவமானத்திலழுத்த வேண்டியதாயிருக்கு மென்றே இதுபரியந்தம் சொல்லாமலிருந்தேன். ஒருவனுக்கு வரும் அவமானத்தைக்கருதிப்பலருக்கும் மனச்சலிப்பை உண்டாக்குவது நியாமல்லவானதால் சொல்லுகிறேன்.
நானும் என் சகோதரன் ஜெகநாதனும் சிறுவர்களாயிருந்த பொழுது என் தந்தை ஜெகநாதத்தின்மேல் அதிக அன்பை வைத்திருந்தார். என் தந்தை யின் பூரண அன்பை அவன் கொண்டிருந்ததால் நான் சொல்வதைக்கிஞ்சி த்தும் கவனியாமல் எளியவர்களுடைய பிள்ளைகளை அடித்தும் துன் மார்க்கப் பிள்ளைகளோடு பழகியும் சகல துர்நடத்தைகளையுங் கற்றுத்திரி வதையுங் கண்டு நான், தம்பி ! இவ்விதம் செய்வது நன்றல்ல என்றால், அதை ஒன்றைப் பத்தாக்கி எங்கள் தந்தை தாயிடத்தில் சொல்லி அவர் கள் என்மேல் கோபங்கொள்ளும்படி செய்வான். நான் என் தந்தை தாயி டம் ஜெகநாதன் செய்தது இன்னதென்றும் அவன் செய்கையைக் கண் டித்ததால் என்மேல் கோபமுண்டாக உங்களிடத்தில் இல்லாததைச் சொன்னானென்றுங் கூறினால் என் வார்த்தையை அவர்கள் நம்பாமல் என்னையே கோபித்து, நான் ஜெகநாதனைக் கண்ணிற் காணவிடாமல் அடிக்கிறேனென்பார்கள். அவன் சிறுபொழுது செய்தவைகளில் ஒன்று சொல்லுகிறேன். அதனால் அவன் குணம் இப்படிப்பட்டதென்று கண்டு கொள்ளலாம் ஒருநாள் நான் போட்டிருந்த மோதிரத்தைக் குளித்த இட த்தில் வைத்து மறந்துவிட்டதால் அதை ஜெகநாதனெடுத்துத் தன் சினேகருடன் சென்று முப்பது ரூபாய் பெறுமானதை மூன்று ரூபாய் க்கு விற்றுத் தின்பண்டங்களை வாங்கி ஒரு குளக்கரையில் அவர்களோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தபொழுது, சிறுவர்களில் ஒருவன் தனக்கு அதிகம் கிடைக்கவில்லையென்றும் தானில்லாமற்போனால் மோதிரத்து க்குப் பணம் கிடைத்திராதென்றும் தனக்குச் சரியான பங்கு கிடைக் காமற்போனால் தான் அருணாசலத்திடம் நடந்ததைச் சொல்லி விடுவே னென்றும் கூறியதைக் கேட்ட ஜெகநாதன் முன்பின் யோசியாமல் குள த்தின் கைப்பிடிச் சுவரில் உட்கார்ந்திருந்தவனைக் குளத்தில் தள்ளிவிட் டான். அவனோடிருந்தவர்கள் துன்மார்ச்சர்களாயிருந்தும் தங்களில் ஒரு வன் குளத்தில் விழவும் சப்தம் போட்டு ஓடிவிட்டார்கள்.ஜெகநாதன் சிறுவனைக் குளத்தில் தள்ளியதை நான் தூரத்திலிருந்து பார்த்து ஓடி வருமுன்னர் அம்மார்க்கமாக வந்தவர்களிலொருவன் குளத்திற்குதித்து சிறுவனோடு கரை சேர்ந்தான். ஜெகநாதன் என்னைக் கண்டவுடன் வீட்டுக்கோடி எங்கள் தாய் தந்தையிடம், அண்ணன் கையிற் போட்டிரு ந்த மோதிரத்தை விற்றுச் சிறுவர்களோடு சண்டை போட்டு ஒருவனைக் குளத்தில் தள்ளியும், தம்பி தள்ளி விட்டானென்று உங்களிடத்தில் சொல்லவும் சிறுவர்களை ஏவி அவர்களிடம் பேசிககொண்டிருந்ததைக் கேட்டு உங்களிடம் நடந்ததைச் சொல்ல ஓடிவந்தேனென்று கூறி உட் கார்ந்திருந்தான். நான் வீட்டுக்குக் சென்றவுடன் என் தந்தை சோப மாக என்னைப் பார்த்து, எனப்பா! தம்பி ஜெகநாதன் தானே சிறுவ னைக்குளத்தில் தள்ளி விட்டான். கையிலிருந்த மோதிரம் எங்கே? தம்பி அறியாதவனாயிருந்தும் அவன் கையில் போட்டிருக்கும் மோதி ரம் இருக்கிறதே! என்று கோபித்துத் தம் கைசலிக்க என்னை அடித் துப் போனார். என் தாயாரும் நெருங்காமல் தூரத்திலிருந்தே பார்த் துப் போனார்கள். ஜெகநாதன் என்னிடம் வந்து நீ என்மேல் கோள் சொல்லு முன்னம் உனக்கு உதைவாங்கி வைத்தேன் பார்த்தாயா? என்றும், இனித் தன்மேல் கோள் சொல்லும் விஷயத்தில் ஜாக்கிரதை இருக்கவேண்டுமென்றும் பயமுறுத்தினான். பாம்பின் குட்டிக் குப் பிறக்கும் பொழுதே விஷம் உண்டாகி அது வளர வளர விஷமும் அதிகரிப்பது போல் ஜெகநாதனுக்கும் எனக்கும் வயது பத்தும் பன் னிரண்டுமாக இருந்த பொழுதே ஜெகநாதனுக்கு அவ்விதமான குணம் இருந்து நாளுக்கு நாள் அவனுடைய துர்க்குணம் விருத்தியாய் வந் நான் ஜெகநாதனைக் கவனிக்காமல் அவன்மேல் வெறுப்பைக் கொண்டிருந்தேனென்று எண்ணிய என் தந்தை தனக்குப்பின் நான் அவனைப்பராமரிக்க மாட்டேனென்று தன் ஆஸ்தியில் செழுங்கமலத்துக் குக் கொடுக்க எண்ணங் கொண்டிருந்ததை அவள் பெயர்க்காக்கி மற்ற நிலத்தை எங்கள் இருவருக்கும் பங்கு ஏற்படுத்தினாலும் நல்ல நிலமெல்லாம் என்தம்பியைச் சேரவே ஏற்பாடுசெய்து எழுதிவைத் துச் சில வருடங்களுக்குப்பின் காலஞ்சென்றார். என் தாயும் அவருக் குப்பின் நெடுநாளிராமல் மரணமானாள். தாய்தந்தையர் காலஞ்சென்ற பின் என் தந்தை எழுதிவைத்த பிரகாரம் என்சகோதரனுக்குக் கொடுத்து எனக்குக் குறிப்பிட்டிருந்தை மகிழ்வோடு ஒப்புக்கொண்டேனென்று சொல்லித் தனியே வந்துவிட்டேன். நாங்கள் பாகம் பிரித்துக்கொண்ட சில வருடங்களுக்குள் என்சகோதரன் தன்கையிலிருந்த பொருளையெல் லாம் செலவழித்துவிட்டு நிலத்தை விற்கமுயன்றான்.நான் அதை வெளி யிற் போகவிடாமல் அயலாரைக்கொண்டு விலைக்கு வாங்கிக்கொண்ட பின் என் தங்கைக்கு விவாகத்தை முடித்து நானும் விவாகஞ்செய்து கொண்டேன். சில அசந்தர்ப்பத்தால் என்மனைவியை என் தங்கை பார் க்காமலிருக்க நேரிட்டது. என் சகோதரன் தன் கையில் உள்ளதை யெல்லாம் அழித்துவிட்டு நிராதரவாய் இருந்ததைக்கண்டு நான் அழை த்துவந்து என்னோடு வைத்துக்கொண்டு அவனுக்கு விவாகம் முடித்து வைத்தேன். என் மனைவி ஏழுமாதகர்ப்பமாக இருந்தபொழுது ஒருநாள் சிலரோடு வார்த்தையாடிக்கொண்டிருந்த காலத்து, கப்பலேறிப் பிற தேசங்களைப் பார்த்துவருவதைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்க நேர்ந் தது. எனக்கும் அது விஷயத்தில் பிரியமுண்டென்று சொன்னேன். என்னோடு வார்த்தையாடிக்கொண்டிருந்தவர்களிலொருவர் தங்களுக்குப் பிரியம் அவ்விதமிருந்தால் இன்னும் சில தினத்தில் நமது துறைமுகத் தைவிட்டு ஒரு கப்பல் நக்குவரத் தீவுக்குப்போய்த் தேங்காய்களை ஏற்றி மோல் மீனுக்குச்சென்று அவைகளை விற்றுத் தேக்குமரங்களை ஏற்றிக் கொண்டு வரப்போகிறது; அதில் போய்வரலாமென்று அவர் சொன்ன தைக் கேட்டவுடன் எனக்கு ஆசையதிகரித்துப் பிரயாணத்துக்கு வேண் டியதைச் சித்தப்படுத்திக் கொண்டிருந்தேன். நான் சொண்ட எண்ணத் தைக்கேட்ட ஜெகநாதன் என்னிடம் வந்து, தாங்கள் முன்பின் யோசி யாமல் கப்பலேறிப்போக எண்ணங்கொண்டீர்களே, இது என்ன அ யாயம்? தாங்கள் கப்பலேறிப்போகவேண்டிய அவசியமென்ன? கப்ப லேறிப்போவது அதிக கஷ்டமென்றுசொல்லுகிறார்களே! தாங்கள் கப்ப லேறிச்சென்று தங்களுக்கோர் கெடுதி நேரிட்டால் என் கதியென்ன? எனக்கு வேறுகதியில்லையென்று துக்கப்பட்டான். நான் அவன் துக் கத்தை நீக்கி, நான் கப்பலேறிப்போய்ப் பற்பல தேசங்களைப்பார்த்துவர வேண்டுமென்கிற எண்ணம் எனக்கு நெடுநாளாக இருப்பதால் அதைத் தடுக்கவேண்டாமென்றும், நான் இரண்டொருமாதத்தில் வந்துவிடுவதாக வும் வாக்களித்துச் சம்பூரணத்துக்குத்துணையாக அவன்மனைவியை அழை த்துவந்து வைக்கும்படி கேட்டுக்கொண்டு அவனுக்குவேண்டிய புத்திமதி களைச்சொல்லி, என்னோடு துணையாய்ப்போக இருவரைச் சித்தப்படுத்தச் சொல்லிச்சிலதினத்தில் யாவரிடத்தும்விடைபெற்றுக் கப்பலேறினேன். கடலில் கொந்தளிப்புகாரணமாகக் கப்பல் ஆடிக்கொண்டிருந்ததால் நான் வாந்தி எடுத்து மயங்கி நித்திரைபோனேன்.மறுநாள்காலையில் என க்கு மயக்கம் சிறிது நீங்கி எழுந்தபொழுது ஜெகநாதன் என்னெதிரில் வரக்கண்டு “கப்பல் அதிக ஆட்டங்கொடுக்கிறதே! நீ கரைக்குப்போக வில்லையா ?” என்று நான் சேட்ட பொழுது, என்னை மயக்கத்தில்விட்டுப் போகத் தனக்கு மனத்துணிவு வரவில்லையென்று சொன்னதைக்கேட்டு, மேல்தட்டில் வந்து நான் பார்த்தபொழுது கப்பல் பாய்விரித்து ஓடுவதை யும் கரைத்தெரியாமலிருப்பதையுங்கண்டு,”என்னவேலை செய்துவிட் டாய்? தம்பி ! உன்னை வீட்டிலிருந்து நான் வரும் பரியந்தம் வேண்டிய தைச் செய்துகொண்டிருப்பாய் என்று நான் எண்ணியிருக்க என்னோடு வந்துவிட்டாய்”! என்று கேட்டபொழுது, நான் கப்பலேறியவுடன் மயக்கத்தால் இருப்பதைக்கண்டு என்னை விட்டுப்போகத் தனக்கு மனம் தைரியப்படாததால் மயக்கம் தெளிந்தபின் போகலாமென்றும், மயக்கம் தெளியாமலே இருந்ததாகவும் அவன் சொன்னான். அவன் என்மேல் அதிக அன்புகொண்டிருந்ததால் இவ்விதம் செய்தானென்று எண்ணி யிருந்தேன்.காற்றனுகூலத்தால் நாலாம்நாள் நக்குவரத்தீவைச் சேர்ந்து கப்பலில் தேங்காய்களைக் கொண்டுவந்து ஏற்றிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நாள்தோறும் கரைக்குப்போய்ச் சமையல்செய்து சாப்பிட்டுப் பகலைக்கரையில் கழித்துவந்தோம். மூன்றாம் நாள் மாலையில் சமையல் செய்ய அதிக நேரமாய்விட்டது. நாங்கள் சாப்பிட்டு ஓடத்திலேறி வழக் ஐப்பிரகாரம் இருவர் துடுப்பால் நீரைத்தள்ளவும் ஜெகநாதன் சுக்கான் பிடிக்கவும் ஓடத்தைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். நான் அங்குமிங் கும் பார்த்துக்கொண்டிருந்து, கப்பலைக்கண்டு கப்பல் ஒரு பக்கத்திலிரு க்க நீங்கள் வேறொரு பக்கம் போகிறீர்களே யென்று கேட்டபொழுது, ஜெகநாதன் சுக்கான் திரும்பாமலிருக்கிறதென்று அதைத்தான் சரிப்படு த்துவதாகச் சுக்கானைப் பிடித்து என்னென்னவோ செய்துகொண்டிருந்தான். துடுப்பைக் கொண்டிருந்த காத்தனும் சாத்தனும் நிறுத்தாமல் தள் ளிக்கொண்டிருந்ததால் ஓடம் அதிக தூரம் போய்விட்டது. நான் அந்தக் காத்தனையும் சாத்தனையும் பார்த்துத் தள்ளவேண்டாமென்றபொழுது சாத்தன் கைப்பற்றியிருந்த துடுப்பைத் தண்ணீரில் விட்டுவிட்டான். துடுப்பு எங்கள் கைக்குக்கிட்டும் விதம் மற்றவன் தள்ளிக்கொண்டிருந் தான். துடுப்பு எனக்கருகில்வர நான் எட்டி எடுக்கப்போனபொழுது சாத்தனும் என்னருகில் வந்து தான் எடுப்பதுபோல் தாவிக்கொண்டிரு ந்து திடீரென்று என்னைக் கடலில் தள்ளியதோடு துடுப்பையும் எடுத் துக்கொண்டான். உடனே ஜெகநாதன் சுக்கானைத்திருப்பிக் கப்பலுக்கு நேராக ஓடத்தைச் செலுத்தினான். எனக்கு நீந்த நன்றாய்த் தெரிந்திருந் ததால் ஓடம் திரும்பி என்னருகில் வர நான் சுக்கானைப்பிடித்தேன். ஜெகநாதன் கையிலிருந்த நீண்ட கயிற்றால் என்னை அடித்தான்.நான் கயிற்றடி பட்டும் விடாமலிருந்ததைக்கண்டு நாங்கள் சமையலுக்குக் கொண்டுபோன கட்டையொன்றை எடுத்து என் பொறிகலங்கத் தலையி லடித்தான். நான்பட்ட அடியால் சுக்கானைவிட்டுக் கடலில் முழுகிச் சில நேரத்தில் சமாளித்து ஓடம் அதிக தூரம் போய் விட்டதைக்கண்டு எனக்கருகாகத் தெரிந்த திட்டின் பக்கந்திரும்பி அதிக சஷ்டத்தோடு நீந்திக்கரை சேர்ந்து மூர்ச்சையாய் விழுந்திருந்தேன். நான் மூர்ச்சை தெளிந்து எழுந்து பார்த்தபொழுது காலை ஏழுமணியானதையும் நாங் கள் ஏறிவந்தகப்பல் இல்லாமலிருந்ததையுங் கண்டு பயங்கொண்டேன். நான் இருந்தது சிறிய தீவாகவும் அதில் மனித சஞ்சாரம் இல்லாமல் இருப்பதையுங் கண்டபின் எனக்கிருந்த தைரியம் என்னை விட்டு நீங்க, அருகிலிருந்த தீவுகள் ஒரு மைல் இரண்டு மைல் தூரத்திலிருந்ததால் அவ்வளவு தூரம் நீந்த முடியாதென்று துக்கப்பட்டு, நாமென்ன வேலை செய்தோம்! தனக்கிருந்த சொத்தை யெல்லாம் வேசியர்களுக்குக் கொடுத்துப் பின் வயிற்றுக்குச் சோறில்லாமலிருந்தவனைக் கொண்டு வந் ந்து வைத்துக்கொண்டோம். அவன் நமக்கு யமனாகத் தோன்றிக் கொல்லத் துணிந்தானென்று சில நேரம் துக்கப்பட்டபின், அவனை வெறுப்பது நியாயமல்ல; நாம் முன் போந்த ஜன்மத்தில் செய்தவைக ளின் பலன் இதுவோ எனக்கருதியும்,
“கூறுநாவே முதலாகக் கூறுங்கரணமெல்லாம் நீ
தேறும்வகை நீ திகைப்பு நீ தீமைநன்மை முழுதும் நீ
வேறோர் பரிசிங்கொன்றில்லை மெய்ம்மையுன்னை விரித்துரைக்கில்
தேறும்வகையென் சிவலோகா திகைத்தால் தேற்றவேண்டாவோ”
என ஸ்ரீமணிவாசகர் கூறிய அமுதவசனம் ஞாபகத்துக்குவர மனந்தேறியும்,
இரண்டு நாளை யவ்விடம் சழித்து மூன்றாம் நாள்,நாம் இங்கிருந்து இறப் பதைவிட நீந்தி மற்றொரு தீவை அடைந்தாவது நீந்தச் சக்தியற்றுக் கடலில் இறந்தாவது போவதே உத்தமமென்று கடலுக்கருகில் வந்த பொழுது, திக்கற்றவனுக்குத் தெய்வம் துணையாவது திண்ண மாதலின், அதிக தூரத்தில் ஒரு கட்டுமரம் வருவதைப் பார்த்திருந் தேன். அக்கட்டுமரம் நான் இருந்த தீவுக்கருகாமையில் போவதைக் கண்டு இருவரைக் கூப்பிட்டழைத்தும் அவர்கள் வராமல் போவதைக் கண்டு கடலில் விழுந்து நீந்தித் தெப்பத்தைப்பிடித்து ஏறிக்கொண்டு என்னைக் காப்பாற்றுங்களென்று வேண்டினேன், அவர்கள் இத்தீ வில் ய-ராகிலுமிருக்கிறார்களாவென்று கேட்க, அவர்கள் தமிழ் பேசியதைக்கேட்டுச் சந்தோஷப்பட்டு நான் ஒருவரும் தீவிலில்லை யென்று எனக்கு நேரிட்டதைச் சொன்ன தன்மேல், அவர்கள் பரிதா பப்பட்டுச் சில தின்பண்டங்களைக் கொடுத்துச் சாப்பிடச் செய்து அவர்களிடம் இருந்த சட்டை யொன்றைக் கொடுத்து என்னைப் போட்டுக்கொள்ளச் செய்து எனக்குத் தைரியம் வரப் பலவற்றைச் சொல்லியபின், இத்தெப்பத்தில் ஏறி எங்குபோக எண்ணங் கொண் டிருக்கிறீர்களென்று நான் அவர்களைக் கேட்டபோது, அவர்கள் எங்காகிலும் ஒருகரையைச் சேரவேண்டுமென்கிற ஆசையோடு போகிறோம், ஆயினும் நக்குவரத் தீவில் இறங்கப் பிரயோசன மிரா தென்று என்னிடம் சொல்லி எனக்கு நேரிட்டதைக் குறித்துப் பேசி க்கொண்டே நக்குவரத்தைக் கடந்தோம். மறுநாள் காலையில் எங்க ளுக்கெதிராக நீராவி மரக்கலம் ஒன்று வரக்கண்டு நான் சந்தோஷப் பட்டிருந்தேன். என்னோடிருந்த இருவரும் என்னைப்போல் சந் தோஷப்படாமல் அதிக துக்கப்பட்டுக்கொண்டிருந்ததை நான் கண் டேன். சில நேரத்துக்குப்பின் ஓடம் ஒன்று நீராவி மரக்கலத்திலி ருந்து இறக்கப்பட்டு எங்களுக்கருகில் வந்து எங்களை ஓடத்திலேறக் கட்டாயப்படுத்திக் கப்பலுக்குக் கொண்டுபோய் மீகாமனிடம் விட்ட தில், அவன் எங்களைப்பார்த்து ஒன்றுங் கேட்காமல் எங்களைப் பத்திர மாக ஓரிடத்தில் வைத்திருக்கச்செய்து மறுநாள் ஒரு தீவை யடுத்து எங்களை ஓரிடத்திலிறக்கிக் கரைக்குக் கொண்டுபோய் அங்கிருந்த வர்களிடம் எங்களை விட்டுவர உத்தரவு செய்தான். உடனே எங்க ளைக் கரையில் கொண்டுபோய் விட்டவுடன், கரையிலிருந்தவர்கள் எங்களைப் பார்த்துக் கேவலமாகப் பேசினார்கள். அவர்களில் ஒரு வன் எங்களை அழைத்துப் போய் ஒரு அதிகாரியிடத்தில் விட்டு, ஐயா! ஒருவாரத்துக்குமுன் ஓடிப்போன மூவரும் அகப்பட்டு வந்து நிற்கிறார்களென்றான். அதிகாரி எங்களைப்பார்த்துக் கோபித்து, இவர் களைக் கொண்டுபோய்ச் சிறைச்சாலையில் அடைத்துவிடு என்று உத் ரவு செய்தான். நான் அதிகாரியை வணங்கி, ஐயா! நான் எங்கிரு தும் ஓடவில்லையே! என்னைச் சிறைச்சாலையில் அடைக்க உத்தரவு செய்தது என்ன காரணமென்று சொல்லியதைக்கேட்காமலே அவன் என்னைப் பேசாமலிருக்க அதட்டி எஙகளைக் கொண்டுபோய் ஒரு அறையில் விட்டு மூடிப்போனான்.நான் என்னோடிருந்த இருவரைப் பார்த்து, நாம் எங்கிருந்து ஓடிப்போனோம்? நம்மைச் சிறைச்சாலையில் வைத்திருக்கவேண்டிய காரண மென்ன வென்று கேட்டபொழுது, அவர்கள் என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்டு,”ஐயா! நாங்கள் குற் றஞ் செய்து மரண பரியந்தம் இத்தீவிலிருக்கத் தண்டனை பெற்றிருந் தோம். இத்தீவிலிருந்து மரண பரியந்தம் துன்பப்பட்டுக் கொண் டிருப்பதைவிட ஓடிப்போவது உத்தமமென்று ஒருவருக்கும் தெரியாமல் ஒரு தெப்பங்கட்டி மூன்று பேர் தடபித்துச் சென்றதி ஒருவன் தெப்பத்திலிருந்து தன் சட்டையை அவிழ்த்து வைத்துக் குளித்துக்கொண்டிருந்தவன் தவறிக் கடலில் விழுந்து மீனுக்கு இரையாகவும்,நீர் துணியில்லாமலிருந்ததால் அவன் போட்டிருந்த சட்டையை உமக்குக் கொடுத்தோம். குற்றவாளிகள் இலக்கத்தைக் கொண்ட சட்டையை நீர் போட்டிருப்பதால் உம்மையும் குற்றவாளி யென்றே அதிகாரி எனைத்து விட்டார் என்றார்கள். நான் குற்றவா ளிகள் போடும் சட்டையைப் போட்டிருந்தாலும் ஒருவரைப் பார் த்து மற்றொருவனாக எண்ணுவது முடியாத காரியம் அல்லவாவென்ற பொழுது, அவர்கள் “அது உண்மையேயாயினும் எங்களோடு ஓடிப் போனவன் உம்முடைய சாயலைக் கொண்டிருந்தான். உம்மைத் தீவில் கண்டபொழுது கடலில் விழுந்திருந்த நடராஜனே உயிர்பெற்று வந்தானென்று எண்ணியிருந்தோம்! நாங்களே அவ்விதம் நினைக்க இடமிருந்தால் அவணை அறியாதவர்கள் என்ன நினைக்க வேண் டும்! அவன் இத்தீவில் இருபது வருடங்கள் இருக்கத் தண்டனை பெற்றிருந்ததால் நீர் அவனுக்குப் பதிலாக அந்த இருபது வருடங்க ளும் இருக்கவேண்டும். இத்தீவில் நாலாயிரத்துக்கதிகம் குற்றவா ளிகள் இருப்பதால் அதிகாரிகள் ஒவ்வொருவருடைய சாயலையும் கண்டு கொள்வது முடியாத காரியம். நடராஜன் இத்தீவுக்கு வந்த மூன்றாம் நாளே எங்களோடு நீங்கினவனாதலால் அவனை அறி ந்தவர்கள் அதிகமில்லை. ஆயினும் நீர் அதிகாரியைக் கண்டு உம் முடைய வரலாற்றைச் சொன்னால் விடுதலை செய்து விடுவார் என்று எனக்குத் தைரியம் சொன்னார்கள். என்வினை இவ்விதம் இருந்தால், அதைத் தடுக்க ஒருவராலும் முடியாது. கடலில் இருப் பதைவிடச் சிறையிலிருப்பது விசேடமென்றும் சமயம் வாய்த்தகால த்தில் அதிகாரியைக் கண்டு பேசலாமென்றுமிருந்தேன். பின் எங்களுக்குச் சாப்பாடு கொண்டுவந்த பிராமணனிடம் என் வரலாற் றைச் சொல்லி அதிகாரியைப் பார்க்கும்படி செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டதில், அவன், நான் சொல்லும் கதை வேடிக்கையாய் இருக்கிறதாயினும் இதை அதிகாரியாவது மற்றவர்களாவது நம்பார் கள், இவ்விதமான கதைகள் அனேகம் கேட்டிருக்கிறோமென்று நகை த்துச் சென்றான். நம்மை இவ்வித துன்பத்துக் காளாக்கவோ ஜெக நாதன் நம்மோடு கப்பலில் வந்தான் ! பொருள்மேல் ஆசை கொண்டு நம்மை முடித்துவிட எண்ணங்கொண்டதால், நாம் கர்ப்பத்தோடு விட்டுவந்த சம்பூரணத்தை என்ன செய்வானோ ! உயிரோடு வைக்க மாட்டானென்ற துக்கத்தோடு சிலநாளைக் கழித்தேன். ஒரு வாரத்தி ற்குப்பின் நான் இருந்ததீவில் இரவிலே அதிக சந்தடி உண்டானது. உடனே ஒருவன் நாங்கள் இருந்த அறையின் கதவைத் திறந்து பார்த் தான். நான் சந்தடி என்னவென்றதில் அவன் அதிகாரியையும் அவ ரோடிருந்த சிலரையும் குற்றவாளிகள் கொன்றுவிட்டார்கள் என்று சொல்லி நீங்கினான். பின் சிலவாரங்கள் பொறுத்து வெளியூரிலிருந்து ஒரு அதிகாரி வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவனும் குற்ற வாளிகளைப்பார்த்து என்னிடத்தில் வந்தபொழுது என் வரலாற்றைச் சொன்னேன். அவன் நான் சொன்னவைகளைக்கேட்டு நகைத்து நல்ல கதை கட்டிவிட்டாயென்று சொல்லிப்போன சிலதினத்தில் அத்தீவிலிருந்த குற்றவாளிகளை ஒன்றாய் வைக்கக்கூடாதென்று வெவ் வேறு தீவுகளிலும் போயிருக்கும்படி உத்தரவு செய்தான். நான் யாரி டத்தில் என்னசொன்னபோதிலும் என் வார்த்தையை எவரும நம் பாமலிருந்தார்கள். இனி என் விருத்தாந்தத்தைச் சுருக்கிச்சொல்லவே ண்டுமாயின், எனக்கு நேரிட்டதை நினைந்து வருந்தாமல் என் மன தைத்தேற்றி நான் போய்ச் சேர்ந்த தீவில் எனக்குக் கிடைத்த விலத் திலே காய்கறிகளை உண்டாக்கி விற்றும் சில பசுக்களைக் கடனாக வாங் கிப் பால் விற்றும் நான் கழிக்கவேண்டிய இருபது வருடத்தையும் கழித்தபின் என்னை இக்கரையில் கொண்டுவந்து விட்டார்கள். நான் அத்தீவில் தேடியபொருளோடு நாகைக்கு வந்தவுடன் அரங்கராவ் மயி லாபுரியில் நியாயாதிபதியாக இருப்பதையறிந்து, அவருக்கு நான் உயிரோடிருக்கிறேனென்றும், நேரில் நான் விருத்தாந்தத்தைச் சொல்வ தாசவும், நான்வந்து என்கருத்தை அறியுமுன்னம் என் வருகையை இரகசியத்தில் வைத்திருக்க வேண்டுமென்றும் எழுதியனுப்பி, க்கு நடராஜ முதலியாரென்று கடிதம் எழுதக் கேட்டுக்கொண்டேன். அரங்கராவ் எனக்குப்பதிலெழுதி என்னை இவ்வூருக்கு உடனே வர வேண்டுமென்று வேண்டியபடி நான் இவ்வூருக்கு வந்த பொழுது இருபது வருடம் பொறுத்து என் சொந்த ஊரைப் பார்த்து என் மனை வியையும் மற்றவர்களையும் நினைத்துத் துக்கப்பட்டுக்கொண்டு மரத் தடியில் உட்கார்ந்திருந்தபோது அதிக தூரம் நடந்துவந்ததாலும் பசியாலும் களைப்பட்டு மூர்ச்சையானேன். கமலாக்ஷியும் வனசாக்ஷி யும் என்னை வீட்டுக்குக் கொண்டுவந்தார்கள். நெடுநேரத்திற்குப் பின் என் மூர்ச்சை தெளிந்து செழுங்கமலத்தைக் கண்டவுடன் என் தங்கை யென்றும் நான் அவர்கள் வீட்டில் இருப்பதாகவும் கண்டுகொ ண்டாலும் நான் இரகசியத்தை வெளியிட அது தருணமல்ல வென்றி ருந்தேன். என்னை நன்றாயறிந்த வைத்தியரும் என் தங்கையும் என் னைக் கண்டுகொள்ளாமற் போனது என்னுடைய எண்ணத்துக்கு அனு கூலமாய் முடிந்ததென்றிருந்தேன். சில தினங்களுக்குட்பின் நான்விஜ யரங்கத்தைக் கண்டவுடன் அவன் சம்பூரணத்தின் சாயலை முற்றிலும் பெற்றிருந்ததால் அவன்மேல் அன்பு எனக்கதிகமுண்டானது போல் காணப்பட்டது. அவனும் என்மேல் அதிக அன்புகொண்டிருந்தான். விஜயரங்கத்துக்கு விவாகமாகாத காரணத்தினால் அவன்மேல் சந்தே கம் உண்டாகி, அவன் அழைத்துவந்த விசுவநாதசெட்டியார் என்னைக் கண்டவுடன் என்னை இன்னானென்று அவர் அறிந்து கொண்டா ரென்று அவரைத் தனித் தழைத்துப்போய் என்வரவை இரகசியத் தில் வைத்திருக்கவும் அரங்கராவினிடத்தில் மட்டும் சொல்லவும் நான் கேட்டுக்கொண்டதோடு, அவர் மூலமாக எனக்கும், அரங்க ராவுக்கும் பேச்சு அந்தரங்கமாய் நடந்துகொண்டிருந்தது.நான் விஜயரங்கத்தின் சமாசாரம் ஏதாகிலும் என்தங்கைக்குத் தெரிந்திருக் மாவென்று செழுங்கமலத்தோடு சம்பாஷித்தபொழுது என் தங் கைக்கு ஒன்றும் தெரியாமலிருந்ததைக் கண்டு விஜயரங்கம் நீங்கிய பின் கலியாணசுந்தரமுதலியாரால் என் சந்தேகம் ஒழிந்தது. என்னை ஜெகநாதன் நேரில் கண்டும் நான் கடலிலிருந்தேனென்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் கண்டுகொள்ளாமற் போனான். நான் வயதா லும் அதிக கஷ்டங்களை அனுபவித்ததாலும் உருமாறியதால் என்னை யறிந்தோர் யாவரும் கண்டுகொள்ளாமலிருந்தார்கள். என் எண்ணம் முடிவுபெறக் கமலாக்ஷியும் அவளுக்குத் துணையாகச் சோமசுந்தரமும் நின்று என் காரியத்தைப் பூர்த்திசெய்தார்கள். இவைகளுக்கெல்லாம் அனுகூலம் செய்து இவ்வளவு தொந்தரவு எடுத்துக்கொண்ட அரங்க ராவுக்கு என்ன செய்யப்போகிறேனென்று தன்வரலாற்றைச் சொல்லி முடித்தார். அரங்கராவ்.– அருணாசலம்! நீ என் விஷயத்தில் செய்ததை யோசித்தால் உன்னை நான் தந்தையென்று சொல்லுகிறதா? சினேகனென்று சொல் னக் லுகிறதா? அல்லது இன்னும் வேறென்ன சொல்லுகிறதென்று என் குத்தெரியவில்லை. நான் தாய்தந்தையில்லாமல் என்னுடைய சிறிய தாயாருடைய தந்தையால் ஆதரவிலிருந்தபொழுது என் சிறிய அனேக கொடுமைகளை அனுபவித்துச் சாப்பாட்டுக்குத் துன்பப்பட்டு வருங்காலத்தில் எனக்கு தந்தையைப்போல் வந்து என்னை ஆதரித்து உனக்குக் கிடைக்குங் காசுகளைச் சேர்த்துவைத்து என்னுடைய செல் வுக்கும் உபாத்தியாயருக்குக்கொடுக்கவேண்டிய சம்பளத்துக்கும் உத விசெய்து வந்தாய். புத்தகங்கள் வாங்கவேண்டியதாயிருந்தால் நீபோ ட்டிருக்கும் நகைகளைக் கொதுவை வைத்து எனக்குப் பணம் வாங்கிக் கொடுத்து உன்தந்தையிடத்தில் அடிபட்டுவந்தாய். நான் துக்கப்படுங் காலத்தில் என்னோடு பிறந்த சகோதரனைப்போல் நீயும் துக்கப்பட்டாய். நான் நலியாயிருந்தால் சினேகனைப்போல் எனக்குவேண்டியதைச் செய்து கொண்டிருந்தாய். உன் தாய்தந்தை காலஞ்சென்றவுடன் நீ விவாகம் செய்துகொள்ளுமுன் எனக்கு விவாகம் முடித்துவைத்து என்னுடைய குடும்பச்செலவுக்கு நிலபலத்தைக்கொடுத்ததோடு எனக்கு எப்பக்கத்தி லும் குறைவுவராமலிருக்கவும் பார்த்துவந்து ஆதரித்த உத்தமா! நீ என்விஷயத்தில் செய்ததை மறக்கலாமா ? நீ இவ்வூரை விட்டுப் போன வுடன் நான் உத்தியோகம்பெற்று வெளியூருக்குப்போக நேர்ந்ததாலும் ஜெகநாதன் உன்விஷயத்தில் கெடுதிசெய்வா னென்று எண்ணாததாலும் உன்னுடைய குடும்பத்தின் க்ஷேமத்தைக் கவனியாமலிருந்தேன் நான் நியாயாதிபதியாய் இவ்விடம் வந்தவுடன் ஜெகநாதனைக் கண்டபொ ழுது நீ ஓடத்திலிருந்து தவறியதுடுப்பை எடுக்கப்போய்க் கடலில் விழு ந்து உடனே ஒரு பெரியமச்சம் உன்னை இழுத்துக்கொண்டுபோனதைத் தடுக்கமுயன்றும் பிரயோசனப்படாமல் போனதென்றும், உன்னுடைய மரணத்தைக்கேட்ட உன் மனைவி அதே வியாகூலமாகவிருந்து கர்ப்பத் தோடு இறந்தாளென்றும் அவன் அதிகதுக்கத்தோடு சொல்லியதைக் கேட்டு, அவன் சொல்லிய யாவும் உண்மையென்று நம்பியிருந்தேன். அதிக துக்கத்தோடு சொல்லியவன் வியசனம் க்ஷணத்தில் மாறித்தன் னுடைய தமையன்சொத்து தன்னை விரைவில்சேர உத்தரவு செய்ய வேண்டுமென்று என்னைவேண்டியதால் அவன்மேல் சந்தேகங்கொண்டு அவன் விரும்பியவண்ணம் முடியாமலிருக்கத் தடுத்துக்கொண்டுவந்தேன். தங்கை செழுங்கமலத்தைக்கண்டு வார்த்தையாடினால் அவர்கள் மேல் ஜெகநாதன் சந்தேகங்கொள்ளுவானென்றே செழுங்கமலத்தைப் பார்க்காமலிருந்தேன். உன்னுடையகடிதம் எனக்குக் கிட்டியவுடன் நான் அடைந்த சந்தோஷத்தைச் சொல்லமுடியாது. உன்னை எப்பொழுது காணுவேனென்ற ஆவலோடிருந்து நீ இவ்வூருக்குவந்தவுடன் விசுவ நாதசெட்டியாரால் கேள்விப்பட்டு உன்னுடைய துக்ககரமான விர்த்தாந் தத்தை யறிந்தபின் என் சினேகர் ஸ்ரீநிவாஸ ஐயங்காரால் குப்புசாமி ஐயரை வரவழைத்து நான்மறைவிலிருந்து யாவையும் கேட்டுப் பத்திரம் குப்புசாமி ஐயர்சையில் கிடைக்கச்செய்தேன். ஜெகநாதன் தண்டனை யடைய வேறுவழியில்லாமற்போனால், செழுங்கமலத்தை மோசஞ்செய்ய ஏற்படுத்திய பத்திரத்தால் தண்டிக்கலாமென்று குப்புசாமி ஐயரையும் பத்திரத்தோடு வைத்திருந்தோம். பின் சோமசுந்தரமுதலியார் என்னைக் கண்டு ஜெகநாதத்தின் குற்றங்களைப்பற்றிச் சொன்னதைக்கேட்டு உள் ளுக்குள் சந்தோஷப்பட்டும் வெளிக்குக் காட்டாமல் அவருடைய சாக்ஷி களோடு இங்குவரும்படி சொல்லியிருந்தேன். யாவும் உன்னுடைய இஷ்டம்போலவே தெய்வானுகூலத்தால் சந்தோஷகரமாக முடிவுபெற்றன.
அருணாசல முதலியார். – என்னுடைய மனைவியும் மசனும் அகப்பட்டார்களேன்று என்னிடத்தில் ஏன் சொல்லவில்லை?
அரங்கராவ் – சோமசுந்தரமுதலியார் என்னிடத்தில் அதுவிஷயம் ஒன்றும் சொல்லவில்லை. அம்மா கமலாக்ஷி! உன்னிடத்திலிருந்து நகைகளைக் கொண்டுபோனவர்கள் பெயரின்னதென்று தெரியுமா?
கமலாக்ஷி – தெரியும் சுவாமி! கறுப்பன் வீரன் என்றே அவர்கள் வார்த்தையாடிக்கொண்டார்கள்.
அரங்கராவ்.- அந்தக் கறுப்பனுக்கும் வீரனுக்கும் மரணதண்டனையாய்விட் டது. நகைகள் துரைத்தனத்தாரிடத்தி லிருக்கின்றன. அவைகளை அனு ப்பிவிடச்செய்கிறேன். உன் தாயாருடைய நிலத்தின்சீட்டும் என்னிடத் திலிருக்கிறது. இன்று தெய்வானுகூலத்தால் யாவும் நன்மையாகவே முடிந்ததால் யாவரும் கடவுளின் திவ்யதிருநாமங்களைத் துதித்துக்கொ ண்டிருக்கவேண்டும். ஆனதால் இன்றிரவில் அடியார்களுடைய சரித்தி ரத்தை வாசித்துப் பிரசங்கம் செய்ய ஒருவரை அழைக்கவேண்டும். அருணாசலமுதலியார் – ஒரு காலக்ஷேபம் இன்று வைக்கவேண்டியது அவசியமே!
சபாபதிமுதலியார். – நான் அதை உத்தேசித்து ஒரு பிரசங்கியாரை அழை துவரச் சொல்லியிருக்கிறேன். பிரசங்கத்துக்கு வேண்டியவைகளைச் சித்தப்படுத்த எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும்.
கலியாணசுந்தரமுதலியார் – உம்முடைய இஷ்டம்போல் செய்யலாம்.
சோமசுந்தரமுதலியார் அருணாசலமுதலியாரைப்பார்த்து, அண்ணா! நான் காத்தனையும் சாத்தனையும் அழைத்துப்போய் அவர்களுக்குக் கமலாக்ஷி யம்மாள் வாக்களித்தவண்ணம் பரிசுகொடுத்தனுப்பிவிட்டு வருகிறே னென்று உத்தரவுபெற்று நீங்கினான்.
அன்றிரவில் ஸ்ரீ மணிவாசகப்பெருமானது திவ்ய சரித்திரத்தைப் பிரசங் கிக்கக்கேட்டு ஆனந்தத்தை அடைந்திருந்தவர்கள் பிரசங்கியாருக்கு வயது சிறிதாயினும் மிகு சமர்த்தரென்று பேசிக்கொண்டிருந்தார்கள். சோமசுந்தரம் வெளியிலிருந்து கேட்டிருந்து பிரசங்கம் முடிந்த பின் பிரசங்கியார் யாரென்று சமீபித்துப்பார்த்து, ஆ! சிவப்பிர காசம்! நீரா இங்கிருந்தவர்களையெல்லாம் ஆனந்தக்கடலில் முழுகும் படி செய்தவர்! என்று தழுவிக்கொண்டு, இவர் என் மைத்துனர், நெடுங்காலம் தம் ஊரைவிட்டுப் போயிருந்தார் என்று யாவருக்கும் தெரிவித்தான்.
அருணாசலமுதலியார் -நம்மினத்தாரில் கல்வியிலே வல்லவராய் ஒருவர் இரு
ப்பது நமக்கெல்லாம் பெருமையே. (என்று மகிழ்ந்தார்.)
24-ம் அத்தியாயம்
அருணாசலமுதலியார் அரண்மனையில் குடியேறிய இரண்டு வாரத்துக்குப் பின் அரங்கராவ் அவர்கள் அவ்விடம் வந்து உட்கார்ந்து, அருணாசலம்! நீ இன்னும் துக்கப்பட்டுக்கொண்டிருப்பது நியாயமல்ல. அவன் உன் விஷயத்திலும் உன் மனைவி மகன் விஷயத்திலும் செய்தது யாவரும் அறிந்தார்கள். இந்த அவமானத்தைத் தாங்கி இருப்பதைவிட அவன் இறந்ததே மேலென்று நினைக்காமல் அவனிறந்து அவனுக்கு எல்லாக்கிரியையும் கிரமமாக நடத்தியபின்னும் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கிறது தகாதென்றார்.
அருணாசலமுதலியார் – ஜெகநாதன் என் விஷயத்தில் செய்ததெல்லாம் பொருளை நாடியே யல்லாமல் வேறொரு காரணத்தாலு மல்லவே! ஆனதால் அவனுக்கு வேண்டிய தனத்தைக்கொடுத்து அனுபவிக்கச் செய்யவேண்டுமென்று எண்ணியிருந்த எண்ணத்தை அவன் புண்ணாக் கிப் பாஷாணத்தை உண்டு இறந்ததே எனக்கு வருத்தத்தைத் தரு கிறது. (என்று துக்கப்பட்டார்.)
அரங்கராவ் அவர்கள் அருணாசலமுதலியார் துக்கம் நீங்க அனேக விஷயங்களைச்சொல்லி நீங்கினார்.
சில நாள்களுக்குப் பின் புண்ணியகோடிமுதலியாருடைய வேண்டுகோ ளின்படி அருணாசலமுதலியாரும் கலியாணசுந்தரமுதலியாரும் தங் கள் குடும்பத்தோடு சுவர்ணபுரிக்குச் சென்று அங்கு தருமலிங்க முத லியாருக்கும், மரகதத்துக்கும், சொக்கலிங்கமுதலியாருக்கும் அம்புஜத் துக்கும் நடந்தேறிய விவாக மகோற்சவங்களுக்கிருந்து, கமலாக்ஷியம் மாள் செய்கிற பாவனையாக வரிசை முதலானவைகளைச் செய்தும், பூங்காவனத்தின் சம்மதத்தால் வனசாட்சியைச் சிவப்பிரகாசத்துக்குக் கொடுத்து விவாகத்தை முடித்துப் பெண் வீட்டோடு இருக்கச்செய் தும், மனோஞ்சிதத்தைச் சபாபதிமுதலியாருக்குக் கொடுத்து விவா கத்தை முடித்தும், சத்திரம் வேங்கடாசலமுதலியார் புத்திரியைப் பஞ்சநாத முதலியாருக்குக் கொடுத்து நடந்த விவாகத்துக்கு யாவரும் சென்று வேண்டிய மரியாதைகளைப் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் செய் தும், விவாகம் முடிந்தவுடன் சத்திரம் வேங்கடாசல முதலியாரை அழைத்து விஜயரங்கத்துக்குப் பெண்வேண்டுமே யென்ன சொல்லு கிறீரென்று கலியாண சுந்தரமுதலியார் கேட்டபொழுது, அவர் நகை த்து முன் பெண் கேட்டபொழுது கொடுக்கச் சம்மதமில்லாதிருந் தேன்; இப்பொழுதும் அவ்விதம் சொல்ல முடியுமா? விஜயரங்கத் துக்கென்றிருக்கும் என் சகோதரன்மகள் கமலாக்ஷியம்மாளைக் கொடு க்கத் தடையில்லை, நீங்கள் வேண்டாமென்றாலும் உங்களை விடமாட் டேனென்று நசைத்தார். அவர் சொல்லியதைக் கேட்டிருந்த அருணா சலமுதலியாரும் மற்றவர்களும் நகைத்தார்கள். கேசவ முதலியார் தம் தமையன் சொன்னதை மறுத்துச் சொல்ல ஒருவருமில்லையென்று தங்களூருக்கு வந்தபின் விவாகத்துக்கு வேண்டியதைச் சித்தப்படுத்தி யும் வீட்டை யலங்கரித்தும் அநேக ஊர்களிலிருந்து தாசிகளையும் வாத்தியங்களையும் வரவழைத்தும் நல்ல சுபதினத்தில் கமலாக்ஷி யம்மாளுக்கும் விஜயரங்கத்துக்கும் விவாக மஹோற்சவத்தை நிறை வேற்றினார்கள். மாங்கலியதாரணம் ஆனவுடன் பிள்ளையும் பெண் ணும் அரங்கராவ் அவர்களையும் அவர் மனைவியையும் வணங்கி ஆசீர் வாதம்பெற்றும் ஸ்ரீநிவாஸ ஐயங்காரையும் அவர் மனைவியையும் வண ங்கி ஆசீர்வாதம்பெற்றும், அருணாசலமுதலியாரையும் அவர் மனைவி யையும் கலியாணசுந்தர முதலியாரையும் அவர் மனைவியையும் வேங் கடாசல முதலியாரையும் அவர் மனைவியையும் வணங்கி ஆசீர்வாதம் பெற்றபின்பு கேசவ முதலியாரையும் அவர் மனைவியையும் வணங்கி கியபொழுது, கேசவ முதலியார் ஆசீர்வதித்து மாப்பிள்ளையைத் தழு விக்கொண்டு, தம்பி விஜயரங்கம்! என்னை அன்று விடுவித்தபொழுது நான் வாக்களித்த வண்ணம் என் செல்வப் புத்திரியை உனக்குக் கொடுத்தேனென்று முத்தங்கொடுத்து மகளைப்பார்த்து, அம்மா கம லாக்ஷி! உன் அத்தான் மனங்கோணாமல் நடந்துகொள் என்றார். செழு ங்கமலம் தன் மருமகனையும் மகளையும் பார்த்துத் தேகம் பூரித்து ஆசீர் தித்து அனுப்பினாள். அருகில் நின்ற வைத்தியர் தம்மையும் தம்மனை வியையும் வணங்கிய மாப்பிள்ளையையும் பெண்ணையும் ஆசீர்வதித் தனுப்பிச் செழுங்கமலத்தைப்பார்த்து, அம்மா செழுங்கமலம்! மாப் பிள்ளையைக் கண் இமையாமல் பார்த்திருந்தால் கண் திருஷ்டி யுண் டாகுமென்று நினைக்கவில்லையா? என்று நகைத்தார். செழுங்கமலமும் நகைத்து, இல்லை அண்ணா! தாங்கள் என்மகளைப் பார்த்ததாலுண்டா கிய திருஷ்டிக்கு என்ன சாந்தி செய்கிறதென்று யோசித்துக்கொண் டிருக்கிறேன் என்று வேடிக்கையாகச் சொன்னாள். அருணாசலமுதலி யாரும் அவர் மனைவியும் பிள்ளையையும் பெண்ணையும் பார்த்துச், சில மாதங்களுக்கு முன் நமக்கொன்று மில்லாமலிருக்க இப்பொழுது நம க்கு மகனும் மருமகளும் கிடைத்தார்கள்.
“எல்லா முன்னடிமை, எல்லா முன்னுடைமை,
எல்லா முன்னுடைய செயலே.”
என்னும் ஸ்ரீதாயுமானவருடைய அருமை வாக்கை நினைந்து நினைந்து இணையில் ஞான பூரணராகிய ஜசதீசரைத் துதித்துக்கொண்டிருந்தார் கள். கலியாணசுந்தரமுதலியாரும் அவர் மனைவியும் தங்கள் எண்ணம் பூர்த்தியானதென்று ஆனந்தத்தில் மூழ்கி யிருந்தார்கள். மாப்பிள்ளை யும் பெண்ணும் ஏனைய பெரியோர்களையும் வணங்கி ஆசீர்வாதம்பெற் றார்கள். விவாகச்சடங்கு ஐந்துநாள் நடந்தேறியபின் விவாகத்துக்கு வந்திருந்தவர்களெல்லாம் ஒரு அரசனுக்கும் இவ்வளவு சிறப்பு நடக் காதென்று அதிசயப்பட்டார்கள். விவாகத்தை யுத்தேசித்து வந்தவர் களுக்குச் செய்யவேண்டிய மரியாதைகளைச் செய்யும்பொழுது, சத்தி ரத்திலிருந்து வந்த அண்ணாமலைக்குமயாவரும் மதிக்கத்தகுந்த வெகு மதிகொடுத்தனுப்பியபின் சத்திரம வேங்கடாசலமுதலியார் மாப்பிள் ளையையும் பெண்ணையும் அழைத்துப்போய் அவாகளுக்குச் செய்ய வேண்டிய மரியாதையைச்செய்து தன்னுடைய ஆஸ்தியில் பாதியைக் கமலாக்ஷியம்மாளுக்குச் சீதனமாகக்கொடுத்தனுப்பினார். புண்ணிய கோடி முதலியாரும் சபாபதி முதலியாரும் சோமசுந்தர முதலியாரும் மாப்பிள்ளையையும் பெண்ணையும் தங்கள் தங்கள் வீட்டுக்கழைத்துப் போக அருணாசல முதலியாரையும் அவர் மனைவியையும் கேட்டபொ ழுது, எங்களைக்கேட்கவேண்டாம், மாப்பிள்ளையின் தந்தை கலிணயா சுந்தர முதலியாரைக்கேட்க வேண்டுமென்று அவரிடமனுப்பிக் கலி யாணசுந்தர முதலியாருடைய மனமும் அவர் மனைவியின் மனமும் சந்தோஷமடையும் விதம் செய்துகொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை யையும் பெண்ணையும் அழைத்துக்கொண்டு போக எண்ணியவர்க ளெல்லாம் கலியாணசுந்தர முதலியார் உத்தரவு பெற்று மாப்பிள்ளை யையும் பெண்ணையும் அழைத்துப்போய் விருந்தளித்து அனுப்பினார் கள். மாப்பிள்ளையும் பெண்ணும் வீடு சேர்ந்தபின் விஜயரங்கமும் கமலாக்ஷியும் பெரும்பாலும் கலியாணசுந்தர முதலியார் வீட்டில் தங் கள் வாழ்நாளைக் கழித்துவந்தார்கள். அருணாசல முதலியார் வைத்தி யரைத் தம்மோடு எப்பொழுதும் இருக்கவேண்டி அவருடைய சம் ரட்சணைக்குப் பூஸ்திதியைக் கொடுத்து ஆதரித்தார் சிந்தாமணி ஆண் பிள்ளை வேடத்தோடு சொல்லியதுபோல் சோமசுந்தர முதலியாருக் கும் மனோன்மணிக்கும் சுந்தரமான ஆண் குழந்தை யொன்று பிறக்க, அதைச் சிந்தாமணியம்மாள் அதிக அன்போடு வளர்த்துவந்தாள். சில வருடங்களுக்குப் பின் கமலாக்ஷி வாக்களித்த வண்ணம் அதிக திரவி யத்தைப் பெற்றுப்போன காத்தனும் சாத்தனும் தங்களுடைய பழைய தொழிலைக் கைக்கொண்டிருந்ததால் துரைத்தன அதிகாரிகளிடம் அகப்பட்டு மரணபரியந்தம் சாவலில் இருக்கத் தீர்ப்புப்பெற்று அலே கவருடங்களுக்குப் பின் காலம் சென்றார்கள். சுந்தரத்தம்மாள் தன் முடிவு பரியந்தம் கமலாக்ஷியம்மாளை விட்டுப்பிரியாமலிருந்தாள்.சோ மசுந்தரம் தன் சினேகன் விஜயரங்கத்தை விட்டுப் பிரியாமலிருந்து ஒரு நாள் தன் சினேகன் விஜயரங்கத்தைப் பார்த்து இன்று என்னு டைய வீட்டுக்குச் சிந்தாமணியின் புருடன் தன்கையிலுள்ளவைகளை யெல்லாம் தாசிகளுக்குத் தத்தஞ்செய்துவிட்டு ஒரு பிட்சைக்காரனைப் போல் வந்தான், அவனைக் கண்டவுடன் சிந்தாமணி கொண்ட து கத்துக்களவில்லை, அவனுக்கென்ன செய்யலாமென்று கேட்கவந் தேன், உன் கருத்தென்னவென்றான். வந்தவர்களை ஆதரித்து அவர் களை வேறுகுடும்பமாக வைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டியதே நம்முடைய கடமை என்ற விஜயரங்கத்தின் சொல்லைக்கேட்டு அவ்வா றே சோமசுந்தரம் நடந்தான். மரசதம் அடிக்கடி கமலாக்ஷியை வந்து பார்த்துப்போவதும் மரகதத்தை அழைத்துப்போக அவள் நாயகன் வருவதுமாக இருந்தார்கள். வழக்கப்பிரகாரம் மரசதம் வந்திருக்க அவளை அழைத்துப்போகத் தருமலிங்கம் வந்து விஜயரங்கத்தோடு வெளித்திண்ணையிலிருந்து அம்புஜம் வளர்த்துவந்த குழந்தை இற ந்துபோய் விட்டதென்று பேசிக்கொண்டிருந்த பொழுது, ஒரு ஏழை வீட்டுக்கெதிரில் நின்றிருப்பதைக்கண்டு விஜயரங்கமும் தருமலிங்க ஓம் அவனைப்பார்த்துக் கமலாக்ஷியை அழைத்து இங்கு நிற்கிறவன் யாரென்று தெரிகிறதா பாரென்றார்கள்.கமலாக்ஷி பார்த்துத் திகைத்து இவருக்குத் தன் சிறிய தந்தையால் பொருள் கிடைத்ததென்று வைத் தியரால் கேள்விப்பட்டேனே என்றாள், தருமலிங்கம் கமலாக்ஷியைப் பார்த்து, இந்தத் துன்மார்க்கன் இரத்தினத்தின் பொருளும் இவனு டைய சினேசனுக்கிருந்த ஆஸ்தியும் இவர்களைவிட்டு நீங்க நானே வேண்டிய சூழ்ச்சி செய்தவன்; தன் கையிலிருந்ததையெல்லாம் கொ டுத்துப் பிட்சை எடுக்கத்தலைப்பட்டார்களென்று கோபத்தோடு சொன் னான். அவனுடைய கோபம் நீங்கக் கமலாக்ஷி நயவசனம் சொன்ன தன்மேல், தன் கோபத்தைவிட்டு அவனை அழைத்துப்போய் அவனு டைய பொருளை அவனிடம் கொடுத்தும், மாணிக்கத்தைக்கண்டுபிடி த்து அவனுடைய சொத்தோடு சிறிது சேர்த்துக்கொடுத்தும் இனி யாகிலும் கிரமமாய் இருங்களென்று தருமலிங்கம் அவர்களுக்குப் புத் திமதிகளைச் சொல்லியனுப்பினான். இரத்தினமும் மாணிக்கமும் கம லாக்ஷியை வாழ்த்திக்கொண்டிருந்தார்கள்.
சில வருடங்களில் கமலாக்ஷியம்மாளுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உண்டாக அக்குழந்தைகளை அருணாசல முத லியாரும் கலியாணசுந்தர முதலியாரும் கேசவமுதலியாரும் ஒவ்வொ ருகுழந்தையை அழைத்துக் கொண்டுபோய் வைத்துக்கொண்டிருந் தார்கள். ஜெகநாத முதலியார் இறந்த பொழுது வந்திருந்த அவர் மனைவி அருணாசல முதலியாருடையவீட்டிலிருந்தகுழந்தையை அதிக கவனமாக வளர்த்து வந்தாள். விஜயரங்கம் ஒரு நாள் கடைவீதி வழி யாகப் போகும் பொழுது தான் வீட்டை விட்டுப் போனகாலத்தில் வழியிலே தனக்குக் கட்டமுது கொடுத்த்வனும் சத்திரத்தில் உபசா ரஞ்செய்ய அன்னமிட்ட பிராமணனும் வார்த்தையாடிக் கொண்டிருந் ததைக்கண்டு அவர்களிருவரையும் அழைத்துவந்து அருணாசல முதலி யாரிடம்விட்டு அவர்கள் தனக்குச் செய்ததைச் சொன்னவுடன் அவர் இருவருடைய க்ஷேம இலாபத்தை விசாரித்து அவர்கள் தரித்திரம் அதமாகிச் சுகத்தோடிருக்கப் பெரும் நிதியைக் கொடுத்தனுப்பினார். கமலாக்ஷியின் சிறுவர்களுக்கு வயது பன்னிரண்டும் பத்தும் எட்டும் ஆனகாலத்தில் அருணாசல முதலியார் அடிக்கடி சிறுவர்களை ஒன்று சேர்த்து உட்காரவைத்துத் தன் மனைவியோடிருந்து முத்துக்குமார முதலியாருக்கும் பேச்சியாயிக்கும் காளியாயிக்கும் நேரிட்டதை உங்களுக்குத் தெரியும்படி சொல்லுகிறேனென்று சொல்லி, அவர்கள் அடாதகாரியத்தைச் செய்ததால் படாத பாடுபட்டு இறந்தார்கள், உங் சள் தாய் தந்தையர் நற்குணத்தை நீங்களும் கொண்டிருந்தால் மேன் மையாக மதிக்கப்படுவீர்களென்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப் பதை விஜயரங்க முதலியாரும் கமலாக்ஷியம்மாளும் கேட்டுப் பு னகை நாட்டிச் சந்தோஷ மடைந்திருந்தார்கள்.
விஜயரங்கம் கண்ணபுரியில் கேட்டானந்தித்த பிரசங்க விசேஷத்தால் பெரியோர்களியற்றிய அனேக ஞான நூல்களிற் கசடறப் பயின்றும் சாதுக்கள் சங்கம் மருவிச் சிறந்த கேள்வியாதிகளினால் பேரறிவால் னாயுமிருந்து,
“பரிந்தோம்பிக்காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினு மஃதே துணை.”
என்னும் அரிய வாக்கினைக் கடைப் பிடித்து ”செயற்கரிய செய்வார் பெரியர்” என்னும் கட்டளைக்கு நிதரிசனமாய் ஒழுகிவந்தான்.
“அன்னை தயையு மடியாள்பணியு மலர்ப்
பொன்னினழகும் புவிப்பொறையும் – வன்னமுலை
வேசிதுயிலும் விறன்மந்திரிமதியும்
பேசிலிவை யுடையாள் பெண்.” என்றும்,
“கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாளூர் நாணியல்பினா–ளுட்கி
இடனறிந்தூடி யினிதி லுணரு
மடமொழி மாதராள் பெண்.” என்றும்,
மேலோர் கூறிய இலக்கணங்களைக் கமலாக்ஷி பூரணமாகப்பெற்றுத் தன்னரிய நாயகனுக்கு.
“ஈதலறந் தீவினை விட்டீட்டல் பொருளெஞ்ஞான்றுங்
காதலிருவர் கருத்தொக்க வாதரவு
பட்டதேயின்பம் பரனை நினைந்திம் மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.”
என்ற இலக்ஷணத்துடன் வாழ்க்கைத் துணைவியாயிருந்தனள். புருஷரத் தினமும் பெண்மணியுமாகிய இவ்விருவரும் பிரமசாரி, வானப்பிரஸ் தன், சந்நியாசி என்னும் மூவர்க்கும், துறந்தார், துவ்வாதவர், இறந் தார் இவர்க்கும் துணையாக நின்று, தென்புலத்தார், தெய்வம், விரு ந்து, ஒக்கல் இவர்களைவழாது போற்றியும்,
“அறனெனப்பட்டதே இல்வாழ்க்கையஃதும்
பிறன்பழிப்பதில்லாயினன்று.”
என்று செந்நாப்புலவர் சிகாமணியாகிய திருவள்ளுவநாயனார் கூறியபடி இல்வாழ்க்கையுந்தை வளர்த்தும், சிந்தையுமனமுஞ்செல்லா நிலைமைத்தாய அந்தமிலின்பத்தழிவில் விட்டின் பயன்துய்க்குமார்வத் தால், பண்ணுமின்னிசையும் போலொளிரும் உமாமஹேசுவரரை நித்தலும் வழிபட்டு வந்தனர்.
சுபம்.
முற்றிற்று.
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் ஐந்தாவதாக இடம்பெற்ற நாவல்.
– கமலாக்ஷி சரித்திரம் (நாவல்), இரண்டாம் பதிப்பு: 1910, தாம்ஸன் அண்ட் கம்பெனி, மினர்வா அச்சுக்கூடத்தில் பதிப்பித்தது, சென்னை.