காபியில் சர்க்கரை போடவில்லை என்ற சிறிய காரணத்துக்காக வேலைக்காரி முன்னால் தன்னை கணவன் அவ்வளவு அநாகரிகமாகத் திட்டுவான் என்று கயல் எதிர்பாரக்கவே இல்லை.
அதிர்ச்சியோடு கணவனைப் பார்க்க, ‘பின்ன என்ன பின்ன…ஆபிஸ் போற புருஷனுக்கு ஒஒழுங்கா ஒரு காபி போட்டுக் கொடுக்கக் கூட தெரியலை. பொழுதினிக்கும் மெகா சிரியல் நினைவாகவே இரு..’
கோபத்தோடு சொல்லிவிட்டு பைக்கில் அமர்ந்து கிக்கரை உதைத்தான் தீபக்.
கயலின் விழிகளில் கண்ணீர் துளிகள்
இரவு
‘’ஸாரி…கயல்..காலைல நான் வேணுமின்னே உன்கிட்ட அநாகரிமா நடந்துகிட்டேன். யோசிச்சுப் பார்…நம்ம வீட்டு வேலைக்காரி கவிதா
தினமும் அவளை அவ கணவன் அநாகரிமா திட்டி அவமானப்படுத்தறான்னு உன்கிட்ட நியாயம் சொல்லி அழறா…
நான் உன்னைத் திட்டினதைப் பாத்தப்ப எல்லா ஆம்பளைங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான்ற முடிவுக்கு வந்திருப்பா…அதனால அவ மனபாரம் ஓரளவு குறைஞ்சிருக்கும். நம்ம வீட்டு வேலைக்காரி ரொம்ப நல்லவங்கிறதால இப்படி செஞ்சேன். தப்புன்னு நீ நினைச்சா
…ஐ ஏம் ஸாரி.!
கணவனை மதிப்போடு பார்த்தாள் கயல்
– இரா.வசந்தராசன் (ஜனவரி 2013)