(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விடிந்தால் மகளுக்குத் திருமணம். ஆனால் அந்த அன்னையின் முகத்தில் வேதனை விளை யாடியது. எல்லோரும் குறட்டை விட்டுத் தூங்கும் நேரத்தில் அந்த அன்னைமட்டும் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு விழிகளில் நீரைப் பெருகிக் கொண்டிருந்தாள். ஏன்? ஏன்?
இரவு மணி பன்னிரெண்டு இருக்கும். கீச் என்ற சப்தம் கூட இல்லாமல் அந்த ஊரே நிசப்தத்தில் ஆழ்ந்து கிடந்தது. பகலெல்லாம் உழைத்து ஓய்ந்துபோன களைப்பால் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தனர் அந்த எஸ்டேட் மக்கள். ஆனால் தெய்வானை மட்டும் வாசலில் உட்கார்ந்து கொண்டு வெறிச்சோடிக் கிடந்த வானத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். சந்திரன் தன்னைச் சூழ்ந்த கருமேகங்களை விலக்கிக் கொண்டு உலகுக்கு ஒளி உமிழ்ந்துகொண்டு, ஆகா யத்தை வலம் செய்துகொண்டிருந்தான். அந்த வெளிச் சத்தில் தன் இரு கரங்களையும் மாறி மாறிப் பார்த் தாள். உள்ளங் கைகளைத் திரும்பத் திரும்பப் பார்த் தாள். அவள் தன் உள்ளங்கைகளை, தன் கடந்தகால வாழ்க்கை எனும் உலகை ஊடுருவிக் காணும் ஒரு பூதச் கண்ணாடியென்றே எண்ணினாள். இல்லை-அப்படித் தோன்றியது அவளுக்கு. வானத்தில் முகில்களைக் கிழித்துக் கொண்டு சந்திரன் சென்று கொண்டிருந்தது போல, அவளின் கற்பனை எனும் வானத்தில் சிந்தனை எனும், நிலவு எண்ணங்கள் எனும் முகில்களைக் கிழித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தன.
இருபது ஆண்டுகளுக்கு முன்னே ஒரு நாள் நண்பகல் மணி பத்து இருக்கும். முருகன் தன் மனைவி தெய்வானையைக் கூப்பிட்டு பிள்ளையைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றார். முருகன் ஜோதிபுரித் தோட்டத்தில் ஒரு லோரி டிரைவர். அதிகாரிகளின் ஆணைப்படி அருகி லிருக்கும் பட்டணத்திற்கு ஏதோ ஒரு காரியமாக லோரி ஒட்டிக் கொண்டு போனார். போன காரியம் முடிந்த வுடன் திரும்பவும் எஸ்டேட்டை நோக்கி வந்தார், எதையோ சிந்தனை செய்தவராக லோரி ஓட்டிக் கொண்டு வந்த அவர் ‘பாம் பாம்’ என்ற ‘ஹாரன்’ சத்தத்தைக் கேட்டதும் திடுக்கிட்டு எதிர்ப்புறத்தில் நோக்கினார். அங்கே… எதிர்பாராத விதமாக ஒரு இரட்டை வளைவில் வெகு வேகமாக வந்துகொண்டிருந் தது இன்னொரு மர லோரி. முருகனுக்கு என்ன செய்வ தென்றே தெரியாமல், தன் லோரியின் வேகத்தைக் குறைத்து வேறு திசையில் திருப்புதற்குரிய முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய காலம் பொல்லாததோ என்னவோ! முயற்சி பலனளிக்கவில்லை! ‘டணார்’ என்று இரண்டு லோரிகளும் மோதுண்டன. அவ்வளவு தான் தெரியும் முருகனுக்கு.
வைத்திய மனையில் அவர் அசைய முடியாத நிலை யில் உடல் பூராவும் ரணக்கட்டுகளுடன் தாங்க முடியாத வேதனையோடு படுத்திருந்த போதுதான் கண்களைத் திறந்து பார்த்தார். அம்மா…! அம்மா…! என்ற தீனக் குரலை எழுப்ப முடிந்ததே தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை அவரால். பொறுக்க முடியாத உடல் வலியால் வருந்தும் அவர், தான் இந்த நிலையிலிருந்து சுகமாகாமல் இறந்துவிட்டால்… என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தார். கோவென்று கதறி அழ வேண்டும் போலிருந்தது அவருக்கு. இப்போது அவரது உடல் வலியோடு உள்ள வேதனையும் சேர்ந்துகொண்டு அடக்குதற்கியலாத துன்பத்தைக் கொடுத்தது. பாவம். அவருக்கு உடல் வலியைவிட உள்ள வலியே மேலோங்கி நின்றது.
திருமணம் செய்தது முதல் இன்றுவரை வேலைக் கென்று போயறியாத தன் மனைவியுடன் இரு குழந்தை களையும் ஆக நான்கு உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்தது முருகனுடைய சம்பாத்தியம்தான். சேமித்து வைப்பதற்கில்லா விட்டாலும் கடன் படாமல் காலத்தைப் போக்க வேண்டும் என்ற அளவில் சிக்கன மாகக் குடும்பத்தை நடத்தி வந்தார் முருகன். இன்று வரை வீட்டிற்கு வேண்டிய சகல பொருட்களையும் வாங்குவது முதல் வரவு செலவு பார்ப்பதுவரையுள்ள எல்லாக் குடும்பப் பொறுப்புகளையும் முருகனே நடத்தி வந்தார். ‘பத்துக் காசு கொடுங்கள்’ என்று கை நீட்டி வாங்கி அறியாத தன் மனைவி, தான் இந்த நிலையில் கிடப்பதை அறிந்ததும் என்ன பாடுபடுகிறாளோ? எப்படித் துடிக்கிறாளோ? எந்தவிதமாய் யாரிடம் கேட்டு வாங்கிக் கொண்டு வருவாளோ? கடைசியாக தன் மனைவியையும், பிள்ளைகளையும் பார்க்க முடியுமோ முடியாதோ? இனி எந்த நிலையில் குடும்பம் நடத்தப் போகிறாளோ? அனாதையாய் விட்டுச் செல்கி றோமே? என்று எண்ணியதும் -அந்தோ பரிதாபம்! முருகன் தன்னை மறந்து ஐயோ! மறந்து ஐயோ! கடவுளே! என்று வைத்தியமனையே கிடுகிடுக்கும்படி கூவிவிட்டார்.
ஜோதிபுரித் தோட்டத்தில் முருகனின் வீட்டில் அழுகுரல் கேட்டது. அத் தோட்டத்து மக்கள் வியந் தனர்; வினவினர்; அறிந்தனர். என்ன செய்வதென்றே தெரியவில்லை தெய்வானைக்கு. அழுது கொண்டிருந் தால் மட்டும் போதுமா? கணவனைப் போய்ப் பார்க்க வேண்டாமா? கையிலோ காசில்லை.
அந்த நிலை நீடிக்கவிடாமல் முருகனின் ஆத்ம நண்பர் அங்கு வந்தார். இப்போதுதான் கேள்விப் பட்டேன். ஓடோடியும் வருகிறேன், நீங்கள் இன்னும் போகவில்லையா என்று மூச்சு விடாமல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார் அங்கு வந்த முருகனின் நண்பர் மணியம். அவர் உதவியால் மருத்துவமனை சென்றாள் தெய்வானை.
வைத்தியமனைக்குள் சென்றதும் தன் கணவன் அபாயகரமான நிலையில் படுக்கையில் கிடந்ததைக்கண்ட தெய்வானை கலங்கினாள்-கதறினாள் — கத்தினாள் அடித்துப் புரண்டு அழுது துடித்தாள். ஏங்கினாள் மனம் வீங்கினாள்-விம்மினாள்-விழுந்தாள். மணியம் அந்த சோகத்தைத் தாங்க முடியாதவராய் தலையைத் தாழ்த்திக் கொண்டே விம்மும் நெஞ்சுடன் முருகனின் மதலைகளும் தலையைக் கோதிக் கொண்டிருந்தார். மனங்குமுறி வீறிட்டலறிக் கொண்டிருந்தன. அந்த அழுகை நீண்ட அழுகையாக போகும் வகையில் முருகன் மரணமுற்றார். நினைத்தவாறே முடிந்ததென வருத்தப் பட்டாள். அங்கே அவள் இதற்கு முன்பே ஒரு முறை வந்திருக்கிறாள். தன் வாழ்வு சாவுப் பிரச்சினையாக இருந்த முதல் பிரசவத்துக்கு அவள் அதே ஆஸ்பத்திரிக்குத்தான் வந்திருந்தாள். அந்த ஆஸ்பத்திரி தான் தனது கணவர் உள்ளது என்று நினைத்ததுமே- தனக்கு ஓர் அபசகுனம் விளைந்ததாகவே கருதினாள்.
‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்… இந்த செய்யுளைத்தான் திரு. மணியம் ஆறுதலாகக் கூறினார் தெய்வானைக்கு. காலம் காத்திருக்கவில்லை காலம் என்ற மரம் பூத்தது காய்த்தது-வருடம் என்ற கனியொன்றை உதிர்த்தது. அனாதை ரட்சகன்—ஆபத் பாந்தவன் என்று கூறிப் புகழுதற்குரிய மனிததெய்வமும் இதுவரை அவளின் குடும்பத்தைக் காத்துவந்தவருமாகிய மணியம் தன் நண்பனின் இறுதி ஆசையைப் பூர்த்தி செய்தார். விளங்கக் கூறினால் விதவா விவாகம் செய்து கொண்டார் தெய்வானையை. மணியம் – தெய்வானை தம்பதிகளாயினர், முருகனின் வீடு மணியத்தின் வீடு என்றாயிற்று. மணியமும் தெய் வானையும் வாழ்விலோர் புதுத்திருப்பம் கண்டனர். இன்பக்கடலில் தவழ்ந்து அன்புச் சிப்பி எடுத்தனர். அந்த அன்புச் சிப்பி இரண்டு முத்துக்களை உதிர்த்தது. தெய்வானை மகிழ்வு நிரம்பிய மனத்தினளாய் தன் மூன்று செல்வங்களோடும், கணவனோடும் வாழ்க்கை எனும் வண்டியேறி உலகம் என்ற பெரும்சாலையிலே இன்னிசைக் கீதம் பாடிக் கொண்டு சென்றாள்.
முதல் கணவர் முருகனுக்குத் தெரியாது வைத்தி ருந்த இரகசியத்தைத் தன் இரண்டாவது கணவர் மணியத்துக்கும் கூறாமல் வைத்திருப்பதைப் பற்றி அவள் அடிக்கடி எண்ணினாள். கூற வேண்டிய அவசிய மில்லை எனவும் அவளுக்குப் பட்டது. மேலும் அதற்கு அவசியமே இல்லாமல் இரண்டாவது கணவர் மணியமும் காச நோயால் பீடிக்கப்பட்டு இறந்தார்.
தெய்வானையினுடைய வாழ்க்கை வண்டியின் காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருந்தது. மூன்று குழந்தைகளும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தனர். மும்மணிகளாக- முத்தமிழ் வீரர்களாக இப்போது முதலாவது மகளும் இரண்டாவது மகளும் சம்பாதிக்க முற்பட்டனர். கடைசி மகள் படித்துக் கொண்டிருந்தாள். கல்லூரி யிலல்ல-ஆரம்பப் பள்ளியில்தான்.
பூவானது, முகையாகி, மொட்டாகி. போதாகி, அலராகி, மலர்ச்சியடைந்து ‘மலர்’ என்றாவது போல தெய்வானையின் முதல் மகள் லீலா மலர்ந்து மணம் பரப்பும் மலருக்கொப்பாகி விட்டாள்.
ஜோதிபுரித் தோட்டத்து மக்கள், ‘ஒருவயசுப் பொண்ணை ரொம்ப நாளைக்கு வச்சிருக்காதே தெய்வானை காலங்கெட்டுக் கிடக்குது. நல்ல மாப்பிள்ளையா பார்த்து காலா காலத்திலே ஒருத்தனுக்குக் கட்டிக்கொடுத்துடு’ என்று ஆலோசனை கூறினார்கள். அந்த அன்னை தெய்வானைக்கு அந்த ஆலோசனை சரியெனப் பட்டதால் உடனே திருமண ஏற்பாடும் மும்முரமாக நடந்தது.
விடிந்தால் மகளுக்குத் திருமணம். ஆனால் அந்த அன்னையின் முகத்தில் வேதனை விளையாடியது— சோகம் தாண்டவமாடியது. எல்லோரும் குறட்டை விட்டு தூங்கும் நேரத்தில் அந்த அன்னை மட்டும் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருந்தாள். ஏன்?
நாளை நடக்கவிருக்கும் மகள் லீலாவின் திருமணத் திற்கு அவளின் தகப்பனாரான முருகன் இல்லையே! அது மட்டுமா? கண்ணுக்கு கண்ணாகப் பேணி வளர்த்த தன் இரண்டாம் கணவர் மணியமும் இல்லையே!
தன் கடந்தகால ‘கசங்கிய வாழ்க்கை’யை ஒருமுறை தன் உள்ளங்கை எனும் பூதக் கண்ணாடியின் உதவி கொண்டு கண்ணோட்டம் விட்டாள்-கலங்கினாள்.
ஆம்! அவளின் முதல் மகளாக அன்று கல்யாணம் செய்து கொள்ள இருப்பவள் அவளின் சொந்த மகள் அல்ல. அவளின் முதல் கணவன் முருகன் இறந்த ஆஸ்பத்திரிக்கு அவள் முதல் பிரசவத்துக்குப் போயிருந் தாள். பிள்ளை கிடைக்கும் என்று அவளும் முருகனும் ஆவலாய் எதிர்பார்த்த நேரம் அந்தோ அவளுக்குப் பிள்ளை பிறந்து இறந்து விட்டது. அதே நேரத்தில் பக்கத்து படுக்கையில் இருந்தவள் பிள்ளையைப் பெற்று விட்டு இறந்து விட்டாள். இறந்த அவளின் உயிர்ப் பிள்ளையை தெய்வானை அப்போது பிள்ளை ஆசை யால் தன் பிள்ளையாக்கிக் கொண்டாள். அன்று முதல் அந்த ரகசியத்தை எவருமே அறியார். அவள் சொன்னால் தானே! அதுவே அவள் மனத்தைக் குடைந்த வேதனை.
கொட்டு மேளம் இசை முழங்கிற்று – முன்னாளைய முருகனின் – இடைக்கால மணியனின் – இப்போதைய தெய்வானையின் வீட்டில், லீலாவின் கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறியது. ஆனந்தக் கண்ணீர் வடித்த வண்ணம் மணமக்களுக்கு ஆசி நல்கினாள் அந்த அன்னை.
– 24-11-1957, தமிழ் முரசு.
– சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: 1988, விஜயா சபரி பதிப்பகம், சென்னை.