ஓ..நானும் காப்பாற்றுவேன்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 16, 2021
பார்வையிட்டோர்: 4,340 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“மரீனா, நீ இனிப் பிச்சை எடுக் கப் போகக்கூடாது. நான் உனக்கும் சேத்துப் பிச்சை எடுத்து உழைக் கிறேன்.” என்று மனைவியைக் கட் டுப் படுத்தினான் காசின் பாவா .

“…. நம்மட புள்ளை தலைப்பட்டா அவளுக்கு ஒரு கல்யாண மென்டு வீடென்டு கைக்கூலியென்டு குடுக்கத் துக்கெல்லாம் ஆருக்கிட்டப் போறது?” என்று மரீனா விவாதித் தாள்.

‘மரீனா நீ …. இவ்வளவுகாலமும் பட்ட கஷ்டமெல்லாம் போதும் அல்லா நமக் கொரு வழிகாட்டாமே வுட மாட்டான். நீ பிச்சை எடுக்கப்போனா, நாலு காடயனுகள் ஒன்ன மானபங்கப் படுத்தி, ஒன்ட கற்பக் கெடுத்துப் போட்டா …’

”… என்ன சொல்றே ?”

ONanum-pic2

தனது பொன்னிதழ்களை மலர்த்தும் பொழுது மரீனாவின் தலைசுற்றியது. அவளின் கடந்த காலத்து நினைவுகள் இரைமீட்டிக்கொண்டிருந்தன.

மரீனாவின் தந்தை, மீன் பிடிக்க வலையும், தூண்டிலும் கையுமாகக் கல் லாற்று ஓடை, ஆறு, குளம், கடலுக் கெல்லாம் சென்று உழைத்து ஜீவியம் நடாத்திக் கொண்டிருந்தார். தனது ஒரே ஒரு மகளை, குர்ஆன் மவ்லுது பாத்திஹா வெல்லாம் ஓதுவித்தார். எட்டாம் வகுப்புவரை படிப்பித்தார்.

சிறுவயதிலேயே பேச்சுப்போட்டி கள், குர் ஆன் மனனப் போட்டிகளி லும் பல பரிசுகள் பெற்றிருந்தாள் மரீனா. தன் பதினான்கு வயதிற்குள் கல்முனைத் தொகுதி மக்களின் வாய் களில் ‘மரீனா மரீனா’ என்று முணு முணுக்கும் படி பெயர் பெற்று விளங் கிக்கொண்டிருக்கிறாள் மரீனா.

”படித்ததும், பாடசாலையும். புக ழும் உனக்குப் போதும். இனிக் குடும் பமாக வேணும்” என்று மரீனாவின் பெற்றோர் விரும்பினர். மரீனாவும் இசைந்தாள்.

மரீனாவுக்குப் பொருத்தமான நல்ல அழகு மாப்பிள்ளை தேடி அவளின் பெற்றோர்கள் அலையவில்லை.

“மரீனாவை நான் முடிக்கிறேன். கைக்கூலி , சீதனம் எதுவுமே தேவை யில்லை. நான் முந்தி நீ முந்தி” என்று பல பணக்கார மாப்பிள்ளைகள் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர்.

”இந்த மாப்பிள்ளைகளில், உனக்கு ஆரவிருப்பம் மகளே?” என்று பெற் றோர்கள் வலிந்து கேட்டனர்.

”அல்லாஹ்வின் நாட்டப்படி, உங் களின் விருப்பப்படி… எதுக்கும் இப்ப என்ன அவசரம்?” என்று மரீனா அடக்கமாகப் பெற்றோருக்குப் பதில் கூறி னாள்.

கல்யாணப் பேச்சுக்கள் வரும்போ தெல்லாம் இரத்தினச் சுருக்கமாக மரீனா கூறுவாள். எனினும் அவள் தன்னைப்போல் ஒரு ஏழை மீனவனைக் கல்யாணம் முடிக்கவேண்டுமென்றே ஆசைப்பட்டாள்.

அவளின் மாமி மகன் முகையதீன் மரீனாவுடன் கூடிப்பழகியவன். இரு வரும் நல்ல பொருத்தமான ‘சோடி’ என்பதைப் பெற்றோரும் அறிவர். ஆனால் மானா முகையதீனை விரும்பு வாளா? என்று அவர்கள் தமக்குள் ஆலாபனம் செய்து கொண்டிருந்த போதுதான் –

ஒரு நாள்-

இரவு, ஏழு மணி. பூரணை நிலவு கருங்கடலில் மிதந்து எழும் நேரம். ‘புஸ் ‘ஸெனத் தென்னை இளங்கீற்றி னூடாகத் தென்றல் தவழ்ந்து கொண்டிருந்த கடற்கரைக் ‘குலனிக் குடிசை களில் மீனவர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்;

மரீனா தன் படிப்பறையில் சிமினி விளக்கொளியில் நாயக வாசகம் படித்துக்கொண்டிருந்தாள்.

”மகள் … என்ன மகள் புத்தகத்தை வெச்சிக்கி யோசிக்கிறாய்? என்று தந்தை மகளைப் பார்த்து கேட்டவாறு வலை முடித்துக்கொண்டிருந்தார்.

‘ஒன்றுமில்லை வாப்பா? ‘ ஈமா னுக்கு அசல், மௌனம்.” 317 நாயக வாசகம் இப்படிக்கூறுகின்றது. இன் னொரு இடத்திலே , சீமானைப் பார்க் கினும், வறுமையானுக்கு இருக்கிற சிறப்பு, எனக்கு எல்லாச் சிருஸ்டி களைப் பார்க்கினுமிருக்கிற சிறப்பைப் போலிருக்கிறது” என்று 234வது நாய்கவாசகம் கூறுகிறது வாப்பா’ என்று ஆழ்ந்த கருத்தை மரீனா வாப்பாவிடம் கூறினாள்.

”எங்களுக்கு ஒன்ட படிப்புகள் ஒன் டும் விளங்குதில்லை. ஒரு மாப்பிளைய ளுக்கும் சம்மதப்படாமே ஒரே படிப் பென்டு படிச்சிக்கிட்டே இரிக்காய்?”

மரீனாவின் உம்மா நச்சரிப்புக் கொட் டியவாறு குசினியுள் கரிமீன் பொரித்துக்கொண்டிருந்தாள்.

‘….. ஆமாம் உம்மா . நான், என் னைப் போலே வறுமையான, முகை யதீன் மச்சானைக் கலியாணம் முடிக்க விரும்பி இரிக்கன். ஆனா நீங்கல் லாம்….

”…. இன்னா லில்லாஹி …. இவ்வளவு காலமும் நாங்க அந்தப் பொடியன் முகையதீனை ஒனக்குக் கலியாணம் பேசுவம் என்டு யோசிச்சுத்தான் இரிந்தம். நீ விரும்புவாயோ என்டெ லவா இரிந்தம்?”

பெற்றோர்கள் அங்கலாய்த்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

***

மரீனாவுக்கும் முகையதீனுக்கும் ஆடம்பரமின்றி அன்பாகக் கல்யாணம் நடந்தது. நாட்கள் நகர்ந்தன. திடீ ரென முகையதீனுக்குக் காய்ச்சல் வலி கள் வந்தன. வாரங்களாகி, மாதங் களாகியும் நோய் வாய் தீர்ந்தபா டில்லை. மருந்து மருந்தென்று மரீனா வின் பெற்றோர்கள் பணத்தை வாரி வாரி விரையமாக்கினர். பொருள் பண்டங்களை விற்றுச் செலவிட்டும் முகையதீனின் நோய் கூடியதே தவிரப் பயனில்லை. உடல் மெலிந்து உளம் நலிந்து உயிரும் பிரிந்துவிட்டது. மரீனா கதறினாள். அழுதாள் தொழு தாள். ஆயினும், மரீனா இத்தா இருக் கும்போது ஒரு குழந்தையும், பெற் றாள்.

மருமகன் மௌத்தான துக்கத்தில் மாமனார் நோய்வாய்ப்பட்டார். மருந்து மருந்தாக இருந்த மண்குடி சையை விற்றும் பயனில்லை. புருச னும் மௌத்தாகிவிட்டார். தாயும் மகளும் ‘இத்தா’ இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆணுதவியற்ற அந்த அபலைகளுக்கு ஆதரவாக இருந்த ஒரே ஒரு மண்குடிசையை விற்ற பணமும் காலியாகிவிட்டது.

ONanum-pic

மரீனா உழைக்க முயற்சித்தாள். பாய் பின்னி உழைத்தாள். வருவாய் போதா மல் நெசவு செய்யப்பழகினாள்.

மகள், பிள்ளை பெற்ற பெருங்காயக் குடலோடு பாடுபட்டு உழைப்பதைப் பார்த்துப் பார்த்து மனம் வருந்தி வருந்திக் கிழவியும் நோய்வாய்ப்பட்டது. இறுதி இனி அவளால் ஒன் றும் செய்யமுடியாது.

பசி, பட்டினி, வறுமை பேயாகத் தலை தூக்கி நின்றாடியது. மரீனாவுக்குப் பாய்பின்னவும் நூல் இழைக்கவும், நெசவவும் தெரிந்தும், யாரும் தொழிற் கொடுக்க மறுத்தனர்.

‘ஓரிரு வரிசத்துக்குள்ளே. வாப்பா வயும் தின்டு புரிசனையுந் தின்ட வளே? ஒனக்குத் தொழில் தந்தா . நாங்களும் ஒன்னப்போலே தெருவில் பிச்ச எடுக்கத்தான் போக வேணும். போபோ …’

எல்லோரும் மானாவைத் தூரப் போக்கி நகைத்துக்கொண்டிருந்தனர்.

எங்கு சென்றாலும் அவளுக்கு எவ ரும் தொழில் கொடுக்கவில்லை. சிலர் ஏதேனும் எச்சிச் சோறு போட்டார் கள். மரீனா பிச்சை எடுத்துக் காலம் கடத்திக்கொண்டு , மர நிழல்களிலும், ஒட்டு விறாந்தைகளிலும் கிழவியுட னும் குழந்தையுடனும் உறங்கிக் காலம் கழித்து வந்தாள். சில சமயங் களில், தெருவோடிகளிற் சிலர் மரீனாவின் பெண்மையைச் சூறையாடவும் முனைந்தனர். அச்சமயங்களில் அவள் கூச்சலிட்டு விரட்டியும் இருக்கிறாள்.

ஒரு நாள், மிகவும் களைப்புடன் பகற் சாப்பாடற்று அலைந்து கொண்டி ருந்தாள். பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது. குழந்தை பசி பசி யென்று பதறித்துடிதுக் கொண்டிருந் தது. கிழவியை நினைத்தால் பரிதாப மாக இருந்தது.

”மகளே … அல்லா நம்மை என்னத் துக்குத்தான் இப்பிடிப் பசியோடே படச்சானோ தெரியல்லே.” அவள் களைப்போடு இருந்த சமயம் அந்த வழியினால் ஒரு பிச்சைக்காரன் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு அதிக வயதில்லை. ஆனால் ஏழ்மை அவனை முதுமையாகக் காட்டிற்று. பல தடவை அவனை அவள் கண்டி ருக்கிறாள்.

”ஓ நீயா புள்ளை . மரீனா… எனும்மா ஒரு மாதிரி ஒயிச்சிக்கி இரிக்க? பகச்சோறு கிடக்கல்லையா?” வந்தவன் கேட்டான்.

‘இல்ல காக்கா . ஏந்தான் நம்மள யெல்லாம் அல்லா படச்சானோ நமக் கெண்டாத் தெரியல்லே”

‘நீ இருந்துக்கம்மா புள்ளை. நான் போய் அந்தா தெரியிற கடயில் ஏதும் சாப்பாடு வேண்டியா றன்.”

”நல்ல மனிசன் காசிங் காக்கா. எப்பவும் என்னக் கண்டா நல்ல இரக் கந்தான்.” அவள் தனக்குள் அவனது அன்பால் நெகிழ்ந்து கொண்டிருந் தாள். நாலெட்டில் நடந்து சென்று தேனீ ரும் சாப்பாடுமாகப் பறந்து வந் தான் காசின் பாவா.

‘சை … அஞ்சி மணியாப்போச்சி. ஒரு மனிசனாவது ஒனக்கும் ஒம்புள்ளக்கிம் ஒருப்பம் கஞ்சித் தண்ணியாவது ஊத் தல்லையே. என்ன உலகண்டா . இதைப் படைச்சானே அந்த ஆண்ட வன் அவன் கட்டேலே போக!”

அனுதாபு கீர்த்தியுடன் தேனிரை மரீனாவிடம் நீட்டினான். நல்லா வயிறு நிறயக் குடிபுள்ளே?” அன்பாகக் கூறியவாறு மரநிழலிற் சாய்ந்தான்.

திடீரென்று அவன் சொன்ன சொல் அவளைத் திடுக்கிடவைத்தது.

“இந்தா பத்து ரூபா…”

”பத்து ரூவாவா …? எதுக்காம்? அல்லாவே என்னக் கர்ப்பாத்து” ”அல்லாவா?….” ஓ! நானும் காப்பாத்துவன் … ஒன்னைப்போல் இள வயசுப் பொண்ணு ஏன் பிச்சை எடுக் கணும். நான் ஒண்ணு சொல்றேன் கேக்கிறியா?

நானுன்னை நாலு பேரறியக் கலி யாணம் முடிச்சிக்கிறன். நீ என்னை நம்புவாயா?” அவன் கெஞ்சினான்.

”…. நம்பவா …?” மரீனா ஆச்சரியப் பட்டுக் கொண்டே மெல்ல எழுந்து யோசிக்கலானாள்.

– அஞ்சலி மாத சஞ்சிகை – ஜூன் 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *