(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஓடுகாலி…! ஓடுகாலி…!”
அதோ போய்க்கொண்டிருக்கிறாளே ஒரு ‘அப்சரஸ் “ அவளைப் பார்த்துத்தான் எல்லோரும் இப்படிச் சொல் கிறார்கள். அவள் காதில் பட்டும் படாமலும், கண்டும் காணாமலும் காதில் இப்படிச் விழும்படியாகவும் சொல்லி வந்தவர்கள் இப்போது வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். யார் யாருக்கோ என்னன்னவோ பட்டங்கள் கிடைக்கின்றன. இதுவும் ஒரு பட்டமளிப்புத்தானே! ஏதோ நாலு பேர் சேர்ந்து கொண்டு கூட்டம் போட்டுக் கும்மாளம் அடித்துவிட்டுச் சென்றுவிட வேண்டியது. அப்புறம் அவர்தான் புகழேந்தி- கவிச்சக்கரவர்த்தி- கலையரசு- சர்வகலா விற்பன்னர் எல்லாம். ஆனால் இந்தச் சிறப்புப் பட்டம் அந்தச் சிற்றூர் மக்கள் எல்லோரும் ஏகோபித்த மனத் தோடு அவளுக்குக் கொடுத்ததாயிற்றே! வந்து வந்து அவள் தம் உண்மைப் பெயரையே அந்த சிற்றூர் மக்கள் மறந்து போய் விட்டார்கள் என்றால் அந்தப் பட்டப் மவுசு என்று நீங்களே பெயருக்குத்தான் எத்தனை ஊகித்துக் கொள்ளுங்களேன்…
அலைபாயும் கருங்கூந்தல்! கலைச்சுருள் கூந்தலைக் கணக்காக வளைத்து வளைத்து முழுவட்ட வடிவத்தில் ஒரு வடைக் கொண்டை! முழு வட்டத்தில் உள்வட்டம் முழுமையும் வண்ணக் கலவையிலான ஹேர் பின் எக்கச் சக்கமாக செருகப்பட்டு மலராத மல்லிகை மொட்டுப் போல் காடசியளிக்கும் வெளிவட்டம். முழுமையும் கூந் தலில் பந்தலிட்டதுபோல், மணக்காத மல்லிகைச் சரம் கொத்தாக வைக்கப்பட்டிருக்கும் அரை வட்டப் பிறை நெற்றியில் ஆச்சரியக்குறி ஜிகினாப் பொட்டு! வட்டவில் போன்ற புருவங்களுக்கும் ஆரம்போல் அமைந்திருக்கும் கண்களுக்கும் ஐடெக்ஸ் எனும் கரீயமை மொத்தமாக முகத்தில் கொஞ்சும். மொத்தமாகவே மஞ்சளும் மாவும் உடலைப் போர்த்தியிருந்தது. நைலக்ஸ் சேலை அதுவும் அடிவயிறு தெரியும் அமைப்பில்! கை கால் விரல்களுக்கு கியூடெக்ஸ் என்ற பொய் மருதானைப் பூச்சு! களிப்புத் தரும் கதுப்புக்க கன்னம்! செக்கச்சிவந்த கிளிமூக்கு! சிங் காரப் பார்வை சிந்தும் சிருங்கார ஒளிவிழிகள்! கன்னல் பாகுதரும் சின்னக் கனியுதடு! ஓட்டை உடைசல் இல் லாத உயர் முத்துக் கொத்தான பல் வரிசை! சிந்தை கவர்ந்திழுக்கும் வண்ணம் சிரித்து சிரித்துப் பேசும் செம் பவளச் செவ்வாய். நெடிய-ஆனால் கொஞ்சம் சதைப் பிடிப்புள்ள உடலமைப்பு. அதற்காகத் தூலம் பெருத்த அமைப்பு என்று முடிவு கட்டிவிடாதீர்கள்! மொத்தத்தில் சொல்லப் போனால் யாரும் ஒரு நிமிடம் கண் போடா மல் இருக்க முடியாது. அவள் நடையைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேனே! பின்னழகு பேசுவது தெரி யலையா? அன்ன நடை!
கொஞ்சம்தான் இயற்கை தந்த எழில். எஞ்சியவை இவள் தந்த மெருகு! மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபத் தைந்து வயதுதான் மதிக்க முடியும். இதற்குள்……! இதற்குள்…!!
அன்றிரவு பத்து பத்தரை ஆகியிருக்கும். அந்தக் குடி சைகள் நிறைந்த சிற்றூர் முழுதும் ஒரே கிசுகிசுப்பு :
எவரைப் பார்த்தாலும் முதல் பேச்சின் தொடர் ‘அந்த ஓடுகாலி இருக்கிறாளே…’ என்று தான் தொடங்கினார் கள். என்ன என்ன? என்று ஆர்வம் காட்டிவிட்டால் போதும். அவள் வரலாறு பல சப்புக் கொட்டலுக்கும், சலிப்புக் கொட்டலுக்கும் இடையே கதையாக மலரும். நீட்டி முழக்கி அபிநயம் பிடித்து அவர்கள் கதை சொல்லி முடிப்பதற்குள் நமக்குப் போதும் போதும் என்றாகி விடும். இருந்தாலும் கேட்டுத் தொலைக்க வேண்டுமே உம். கொட்டாவிட்டால்தான், முகம் உம் என்று ஆகி விடுமே. அத்தோடு விட்டுவிட்டால்தான் பாதகமில் லையே! நாங்கல்லாம் சொன்னா நீங்கல்லாம் கேட்பீங் களா? என்று முகம் ஒரு முழம் நீண்டு சுருங்குமே. அவர் களுக்கு சொல்லித் தீரவேண்டும் என்ற ஆர்வம். நமக்குக் கேட்டுத் தொலைக்க வேண்டும் என்ற பெரும் தலை எழுத்து அவ்வளவு தான்!
பட்டினமா பட்டணமா? பட்டினத்தில் ஒரு குட்டிப் பட்டணம். ஆமாம். சிங்கப்பூர் பட்டினத்தில் ஒரு சின்ன ஒரு பட்டணம். ஒரு மைல் அல்லது ஒன்றரை மைல் தொலைவில்தான் இருந்தது அந்தச் சிற்றூர். குடியிருப்பது என்னவோ குடிசையில்தான். ஆனால் மேதா விலாசம் மட்டும் சிங்கப்பூர். பேரு பெத்த பேரு. இன்னும் என்னவெல்லாமோ சேர்த்துத் தெலுங்கு மொழியில் பழமொழியொன்று சொல்லக் கேள்விப்பட் டிருக்கின்றேன். அப்படித்தான் இந்த மேல் விலாசம் எல்லாம் ஏன் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்? அது ஒரு ரூரல் போர்டு ஏரியா…
அதாவது, கிராமப் புறம் என்பதுதான் உண்மை இருந்தாலும் பட்டண வாழ்க்கைதானே. பகட்டு கொஞ் சம் இருக்கத்தான் செய்யும்.
வீட்டில் பட்டினி கிடந்தாலும் வெளியே யாருக்கும் தெரியாது. வெளியே போகும் போது, நாலு பேரைப் போல நாமும் வெள்ளையும் சள்ளையுமா இருக்க வேண்டும்… என்ற சித்தாந்தம் ஓரளவுக்குத் வாழ்க்கை யில் கடைப்பிடிக்க உகந்ததாக இருக்க வேண்டும்.
அந்தத் தத்துவார்த்த சத்துவத்தையே அலாதி யாகக் கொண்டு விட்டால் அப்புறம் மனிதத் தத்துவத் துக்கு மகத்துவம் இல்லாமல் ஆகிவிடும். இது தெரிந்தோ தெரியாமலோ பட்டண வாழ்க்கையில் மையல்கொண்டு மதிமோசம் போய்விடுகிறார்கள்.
சிங்கப்பூர் செழிப்பான நாடுதான். அதற்காக அனைவரும் ஒரே வாழ்க்கை நடத்துவதற்குரிய வகையில் வருமானம் வருவதற்கு அல்லது தருவதற்கு தருவதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் ‘கஜானா’ என்ன அமுதசுரபியா? விரலுக்குத் தக்க வீக்கம் இருக்கத் தானே செய்யும். தராதரம் என்றொன்று இருக்கின்றதே அதில் ஐயப்பாடு கொள்வதற்கு என்ன இருக்கிறது? காடி கழுவி, சம்பாதிப் பவன் கூட, காடி வைத்திருக்கிறான் என்றால் காடி கழுவுவது கேவலமில்லை. அதுவும் ஒரு தொழில்தான் என்று உடல் வளைந்து வேலை செய்கிறான், சம்பாதிக் கிறான். அத்துக் கூலிக்கு வேலை செய்துவிட்டு வந்து அலுத்துக் கொண்டால் அப்புறம் ராஜயோகம் நினைக்கலாமா?
தொழிலாளி மகன் தொழிலாளியாகவே இருக்கக் கூடாது. தொழில் அதிபராக வரவேண்டும். பாட்டாளி மகன் பட்டாளியாக வேண்டும் என்று காலம் காலமாக அரசியல் தலைவர்கள் முதல் சமுதாயத் தொண்டர்கள் வரை அனைவரும் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். அதைக் கேட்டுவிட்டு எங்கப்பன்தான் என்னை படிக்கவைக்கல, மாடு மேய்க்கப் போயிட்டேன் என்று பெற்றோரை நொந்து கொண்டு ஒரு சிலரும், எங்கப்பா எங்கம்மா படிக்க வைச்சாங்க நான்தான் ஊரு சுத்தித் திரிஞ்சிட்டு படிக்காத மூடனாயிட்டேன் என்று தங்களைத் தாங்களே நொந்து கொண்டு ஒரு சிலரும் தங்கள் சந்ததிகளுக்குச் சொல்லிக்காட்டி, நான் பட்டினி கிடந்தாச்சும் உன்னைப் படிக்க வைக்கிறேன். படி, நல்லாப்படி என்று அவர்கள் வாழ்க்கை தந்த படிப் பினையை உணர்ந்து சொல்லுகிறார்கள். ஆனால் வாரிசுகள் படிக்க வேண்டுமே? மூனாம் வகுப்பு படிக்கும் போது முத்து முத்தாக எழுதுவான் எம்மவன் எம்மா அழகா எழுதுறான்…? என்று அவன் கையெழுத்து பிர மாதம் பற்றி ஒரு பெரிய தம்பட்டமே அடித்து விடும் பெற்றோர்கள், ஏனோ அவன் தலையெழுத்தை நிர்ண யிக்கும் பொறுப்புணர்ந்து அதை ஒருமுகப்படுத்து வதற்கு ஒருப்படுவதே இல்லை. அவனும் உருப்படுவதே இல்லை.
முருகன். ஆம், கோவிந்தன் என்பவரின் மகன் முருகன் கோவிந்தன் ஒரு தொழிலாளி. நகர சுத்தித் தொழி லாளர்களிலே அவரும் ஒருவர். தெருக்களைச் சுத்தப் படுத்திக் குப்பைகளைக் குவிக்கும் போது உலகத்தில் தானும் ஒரு தள்ளப்பட்ட குப்பையாகிவிட்டதாகக் கருதிக் கொள்வார்.
அதிகாரிகளின் ஆணைக்குரல் ஒலிக்கும் போது கூனிக் குறுகிக் கைகட்டிச் சேவகம் செய்யும் ஒவ்வொரு வினாடி யும், வளர்ந்து வரும் தன் வாரிசும் இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகக் கூடாது என்று எண்ணிச் சோர்வார். ரொம்பப் பெரிசா இல்லாவிட்டாலும், அட்லீஸ்ட் இந்த நகரசுத்தித் தொழிலகக் கிராணியாகவாவது வந்துடணும் என்று எண்ணிப் பார்ப்பார். எதுக்கும் ஒரு எபவுட் போட்டுப் பேசணுங்க என்று என்னவோ தானும் ஆங்கிலத்தில் பேசிவிட்டதாகப் பெருமிதம் கொள்வார். ஒன் றிரண்டு ஆங்கிலச் சொற்களை எப்படியோ புரிந்து வைத்துக் கொண்டிருந்த கோவிந்தன் விஷயம் சரியோ, தப்போ சந்தர்ப்பம் வரும்போது விளாசித் தள்ளுவார். அதிலிருந்து ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போது, படிக்காமல் இருந்ததன் அவஸ் தையை இப்போது அனுபவிக்கிறார் என்பதுதான் அது.
ஏட்டறிவைவிடப் பட்டறிவு நல்ல பலன் தரும் என்பது என்னவோ ஒரு பெரும் உண்மைதான். எதிரும் புதிருமாக எதையாவது பேசித் தன் அறியாமையைப் பிறரிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் பிரகிருதிகள், தம் தன்மான உணர்ச்சி தலை தூக்கி நின்றாலும் மன சாட்சி உறுத்திக் காட்டத்தானே செய்யும். ஆகவேதான் தன் மகனைச் சான்றோனாக்கிப் பார்க்கக் கோவிந்தன் பள்ளியில் தந்தையுள்ளம் துடித்தது. முருகனுக்குப் சேரும் பருவம் வந்தது.
முருகனை இப்போதெல்லாம் அரைக்கால் சிலுவா ரில் பார்ப்பது அரிதாகிவிட்டது. முக்கால் கால் சிலுவார் அதுவும் வகை வகையான ரகம் உயர்ந்த துணியில்தான். டாம்டாம். சட்டைதான் தலைமறைவாக சிகரெட் புகைத்த மாறி விட்டான். தலைகீழாக முருகன் மட்டாவது மரியாதையாவது, ‘சிகரெட் பிளீஸ், கேட் பான்; கொடுப்பான். மின்னல் வேக முன்னேற்றம் என்று சொன்னால் பொருந்தும்,
இப்போதெல்லாம் எப்படியோ அனுபவித்து வந் தான். எப்படி என்பது எவராலும் எடுத்துச் சொல்ல நாட்கள் உள்ளே; சில முடியாததாயிருந்தது. பல நாட்கள் வெளியே…இப்படியே காலச் சக்கரம் சுழன்று கொண்டேயிருந்தது. ஆதியோடந்தம் என்ற ஒரு சொல்லே தமிழில் இருக்கும்போது அதன் பொருள் புலனாக வேண்டாம்? முருகன் ஆதியின் ஆதிக்கத்தில் இருந்து வந்தான். இயற்கைத் தாய் இப்போதுதான் தன் உச்சாட்டத்தைத் தொடங்கியிருந்தாள்.
ஒருநாள் திரைப்படக் கொட்டகையில் ஏதோ கலாட்டா! இருபெரும் குழுக்களின் கைகலப்பு! அரங்கில் பொதுமக்களின் அமைதிக்கும் பங்கம் விளைவித்த குற்றச்சாட்டு! போலீசார் அகப்பட்டவர்களை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். சிகப்பு நிறப் போலீஸ் வண்டி உறுமிக்கொண்டு பறந்தது! கலாட்டாவின் காரணகர்த்தாக்களில் கண்ணும் கருத்துமாக இருந்த வர்கள் சிலர் மறைந்துவிட்டனர்! காரணமே, ஏன்? சம்பவமே இன்னதென்று தெரியாத சிலர் கைவிலங்கு பெற்றனர். தப்பியது தம்பிரான் புண்ணியம் – அந்தப் பட்டியலில் முருகனும் ஒருவன்! அன்றைய அந்த நிகழ்ச்சி, பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகப் பிரசுரமா யிருந்தது! அது பெரியதொரு பரபரப்பையே உண்டு பண்ணியிருந்தது. அரங்குக்குச் சொந்தக்காரர் இனிமேல் தமிழ்ப் படமே திரையிடுவதில்லை என்றதொரு முடிந்த முடிவுக்கு வந்துவிட்டார் என்றால் அந்த நிகழ்ச்சி எத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும் என்பதை நீங்களே கொஞ்சம் கருதிப் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மடியில் கனமிருந்தால் வழியில் பயம் என்ற பழமொழி, நிகழ்ச்சியின் நிலைக்களனா யிருந்தவர்களின் நினைவுக்கு வந்திருக்கவேண்டும். புலன் விசாரணை ஆரம்பமாவதற்குள் புறப்பட்டுவிட வேண்டும்….. என்ற முடிவுக்கு வந்து எட்டாக் கைக்குப் போய்விட எத்தனித் தார்கள்! எத்தனிப்பதென்ன? எட்டேகால் மணிக்கு சிங்கப்பூரிலிருந்து புறப்படும் மெயில் வண்டியில் ஏறிப் பயணமாகிவிட்டார்கள்!
சிங்கப்பூர் முருகன் சீலாட் தோட்டத்தின் தவ ரனைக் காட்டில் வேலை செய்து கொண்டிருந்தான்! பழக்கம் யாரை விட்டது? சீட்டியடித்தான்! செவுளு பிஞ்சுப்போவும்! ஜாக்கிரதை என்று எச்சரித்துச் பேசி னார்கள் இளம் பெண்கள்! பாட்டு பாடிக் காட்டினான்! பல்லு உதுந்துடும் பார்த்துக்கோ என்று பாதக்குறடு எடுத்துக் காட்டினார்கள், பருவமங்கையர்கள்! பிரிக்கப் பிரிக்கக் கூடுகட்டும் சிலந்தியின் கதையும் பதினேழு முறை படையெடுத்த “கஜனி முகமது” கதையும் அவன் சிந்தனைக்கு வந்தன. எல்லோரும் ஒரே மாதிரியா… முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்”–பழமொழி யையும் நினைத்துக்கொண்டான். எல்லோரும் போலவே பழமொழிகளையும் கதைகளையும் தனக்குச் சாதக மாக்கிக் கொண்டு சிந்தித்தான். இப்போது சிரித்துக் கொண்டான் முருகன்.
அவன் சிரித்த சிரிப்புக்குப் பலன் இல்லாமல் போக வில்லை. சிரித்தான். சிரிக்கவைத்தான். அவள் சிரித்தாள். சிந்திக்கவில்லை. சிந்திக்கவில்லையோ, சிந்தை பறி கொடுத்தாளோ அது நமக்குத் தெரிய வேண்டாம். ‘பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்’ என்ற பாட்டை எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருந்தவள் சிங்கப்பூருமச்சான் என்ற பாட்டை சின்னக்குரலை பாடிப் பார்த்துச் சிரித்துக்கொள்ளத் தொடங்கினாள். ஒரு வேளை பாட்டு பழையதாகி விட்டதோ என்னவோ சீசன் பாட்டு பாடிக் காத்திருக் கலாம். ஏதோ ஒன்று சிந்தை கவர்ந்துவிட்டது. சிக்கன கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டது. வளர்ந்து விட்டது அது.
சாந்தம்மாள். ஆம். அதுதான் அவள் அடையாளக் கார்டு சொல்லுகின்ற பெயர். பெற்றோர் பெயரிட்டதற்குச் சிறப்புக் காரணம் எதுவும் இல்லை. சாந்தி வேண்டும் என்பதுதான் சாந்தமாளின் விருப்பம். நினைத்ததும் நடக்கிறது. நினைக்காததும் நடந்துவிடு கிறது. அவளுக்கு இப்போது ஆத்மசாந்தியே கிடைத்தது. இருவருக்கும் ஒரே இங்கிலீசு மோகம். காலம் நகர்ந்தது.
மாலை மயங்கிக்கொண்டிருந்த நேரம். சாந்தியும் ஏதோ சிந்தனை மயக்கத்தில் இருந்தாள். கொஞ்சம் தொலைவிலிருந்து ஒரு சேவல், ஒரு பெட்டைக் கோழி யைத் துரத்திக்கொண்டு வந்தது. குக் குக் குக் இது சேவல். கெக் கெக் கெக் இது பெட்டை. ஊடுதல் படலம் தானோ என்னவோ? இப்போது சேவல் இரண்டு சிறகு களையும் படபடத்துக் கொண்டு கொக்கரக்கோ என்று குரல் கொடுத்தது. மகிழ்ச்சிக் கூவல் அது. பெட்டை தன் இரண்டு சிறகுகளையும் ஒருமுறை சிலிர்த்து சிலுப் பிக்கொண்டது. கோழிகள் இரண்டும் இப்போது இரை பொறுக்கிக் கொண்டு தின்று கொண்டு மருவி நின்றன.
படிக்கவைத்தால் ஆங்கிலப் பள்ளியில்தான் படிக்க வைப்பது என்றாலே, ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புவது தான் என்ற தீர்க்கமான ஒரு நிலை ஏற்பட்டு விட்டிருக் கின்ற இந்தப்பட்டண வாழ் சமுதாயத்தில் அவர்மட்டும் என்ன விதிவிலக்கா? முருகனும் பள்ளிக்கு சென்று வந்தான். எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போயிருக் காரு என்று பெருமிதம் பற்றிக் கூறும் வார்த்தைகள் முருகனைப் பொறுத்தவரை மிகவும் பொருத்தமாக இருந்தது.
புழுதி மேட்டில் நாள் முழுதும் வெய்யோனின் வெப் பக் கொடுமையில் படாதபாடுபட்டு வரும் கோவிந்தன் மாலை மறைந்து இரவாகும்போது ஏதோ தின்றுவிட்டு படுக்கைக்குச் செல்வார். இயந்திர வாழ்க்கைதானே!
இப்போதிருக்கின்ற வாழ்க்கைதான் அவருக்கு கசந்த கரும்பாக இருக்கிறதே. இலட்சிய வாழ்க்கையை எதிர் பார்த்து காலத்தின் வேகமான ஓட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லும்போது, முருகா எனக்கு நல்ல வழி காட்டப்பா என்று சொல்லிக்கொண்டேதான் படுப்பார். அதுதன் மகன் முருகனிடம் அபயக் குரல் எழுப்புவது போன்று இருக்கும்.
முதலாம் வகுப்பில் சேர்ந்த முருகன் இப்போது 6ஆம் வகுப்பில் அமர்ந்திருந்தான். இப்போதுதான் படிக்கிறார்களோ இல்லையோ, வருடந்தோறும் வகுப்பு மாற்றி உட்காரவைத்துவிட வேண்டுமே.
அடையாளக் கார்டு எடுத்தாயிற்று: 7 வயது முருகனுக்கும் 13 வயது முருகனுக்கும் என்ன வித்தியாசம்? அறிவில் முதிர்ச்சி இருந்ததோ இல்லையோ அனுபவ முதிர்ச்சி இருந்தது என்பதை ஒப்புக்கொண்டு தானாக வேண்டும். தின்பண்டம் வாங்கி சாப்பிடக் கொடுத்த காசுக்கு, இப்போது திரி பைவ் சிகரெட் வாங்கிப் புகைத்தான். சீட்டி அடிப்பதிலும் சிகரெட் புகைப்பதிலும் சினிமா பாட்டை சந்தர்ப்பத்துக்கேற்பப் பாடுவதிலும் சிலிப்பர் தேயும் ஒருவகை நடைநடப் பதிலும் நல்ல அனுபவம் பெற்றிருந்தான். மாணவர் களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்வு ஒன்று வந்தது. ஆம். அதுதான் 6ஆம் வகுப்பு தேர்வு நடை பெற்றது. தேர்வு முடிவுகள் பள்ளியில் அறிவிக்கப் பட்டன. முருகன் சூப்பர் நேடடட் என்ற ரிசல்ட் பொறிக்கப்பட்ட ரிப்போர்ட் கார்டை கொண்டு வந்து மிகவும் அனாயாசமாக தன் அன்னையிடம் கொடுத்து விட்டு நின்றான். கோவிந்தனின் கற்பனைக் கோட்டை கள் இடிந்து தூள் தூளாகியது. எல்லாம் முடிந்து விட்டது. இனி எனன சொல்லி என்ன ஆகப்போகிறது?
முருகா என் எண்ணத்திலே மண்ணப் போட்டுட்டி யேப்பா? கோவிந்தன் குமுறினான். திருமால் மருமகனை’ திட்டினாரா? அல்லது தன் திவ்விய மகனை திட்டி தீர்த் தாரா என்பது தெரிந்து கொள்ள முடியாத சிலேடையாக இருந்தது?
முன்பாவது பள்ளிக்கூடம் போய் வரவேண்டும் என்ற ஒரு கட்டாயம் இருந்தது. இப்போது அதுவு மில்லை. சாப்பாட்டு நேரத்துக்கு மட்டும் வீட்டில் ஆஜராகி விடுவான். அதுவும் அந்த கொஞ்ச நாட்கள். தான். அதற்கப்புறம் அவன்வந்த நேரம்தான் சாப்பாட்டு. நேரம். தெளிவாகச் சொன்னால், எப்போதோ வந்து எப்படியோ கொட்டி வயிற்றை நிரப்பிக்கொள்வான்.
கோவிந்தனுக்கு அலுத்துப் போய்விட்டது. கண்டிப்பூ என்பதற்கு விலையில்லாமல் ஆகிவிட்டது. கட்டுக்குள் அடங்காத நிலை ஏற்பட்டுவிட்டது. அறிவுரைகளும் அனுசரணை வார்த்தைகளும் விரயமாகி விட்டன. வீண் முயற்சி என்ற விரக்தி தோன்றிவிட்டது. கோவிந்தன் என் மண்டை உருண்டு போகிறவரைக்கும் தானே’ அதுக்கு மேலே எப்படியோ ஆயிட்டுப் போவுது, என்ற முடிவுக்கு வந்து விட்டார். முருகன் கட்டறுந்த காளை யானான்.
மூக்கணாங் கயிறு இருக்கும் போதே மூர்க்கத்தனம் செய்யும் காளை அதே இல்லாதபோது கேட்கவா வேண்டும்…? முருகன் வீட்டுக்கு எப்போது வருகிறான்- எப்போது போகிறான் என்பதே அவர்களுக்குத் தெரி யாது. பேய் உறங்கும் நேரத்தில் கூட அவன் உறங்க மாட்டான் என்றாகிவிட்ட போது, பேயாக அலைந்து பாடுபட்டு வரும் கோவிந்தன் கண்விழித்துக் காத்திருக்க முடியுமா? அவன் தாயாரும் நாலு வீடு சென்று துணி துவைத்துச் சம்பாதித்து நல்லது கெட்டது பார்க்கக் கூடியவர்களாய் இருக்கும் போது, இவனுக்காக இரவு பகல் என்று ஏங்கிக் கொண்டிருக்க முடியுமா, என்ன? தலைக்கொசந்திட்டான் தறுதலை; இவனையும் ஒரு பிள்ளைன்னு பெத்துப் போட்டேனே… என்று தலையி வடித்துக் கொண்டு வேதனைப்படும்போது பக்கத்து வீட்டு பாழாய்ப்போன ரேடியோவிலும் உன்னையும் ஒருத்தி பெத்துப் போட்டாளே… என்று பாடும் பாட்டு அலறும். நின்றெரியும் செந்தீயில் நெய்க்குடம் சாய்ந் தாற்போல என்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்னது அங்கே பளிச்சிட்டு மிளிரும். வேதனைத் தீயில் வெந்து கருகினார்கள்.
வேறோர் திசையிலிருந்து மற்றொரு சேவல் ஓடி வந்தது. சேவல்கள் இரண்டும் ஒன்றோடொன்று பார்வையால் முட்டி மோதிக் கொண்டன. புதிதாக வந்த சேவலுடன் அந்தப் பெட்டை ஜோடியாகச் சென்று கொண்டு இருந்தது. வந்த சேவல் வழிபார்த்து நின்று கொண்டிருந்தது. சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் பாடல் வான் வழி ஒலித்துக் கொண்டிருந்தது. முற்றத்து வாயிலில் தலைசாய்த்துக்கொண்டு நின்ற சாந்தி சிரித்துக்கொண்டாள். பாட்டின் பொருளுக்காகவா?
பெற்றோர் இட்ட பெயர் சாந்தம்மாள். இட்டுக் கொண்ட புனைபெயர் சாந்தி. இட்டுக்கட்டிய பெயர் பிஞ்சில பழுத்தது. ஆமாம் அந்தத் தோட்டத்திலுள்ள வர்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டார்கள். அவ ளுக்கு மூன்று பெயர். மும்முனைப் பெயர். முத்தரப்புப் பெயர். மூன்றாவது பெயர்தான் பிரபலமாக விளங் கிற்று.பலர் எழுப்பும் குரலல்லவா? பட்டம் பெற்றிருந்தது.
முருகன் ஆயலோட்டிய வள்ளியைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக சிவபெருமானுக்கு அறிவித்தாரோ என்னவோ? முருகன் தன் ஆவலைத் தந்தைக்கு எழுதியிருந்தான். மறுப்பு வரவில்லை. கோவிந்தன் இரண்டு காரணங்களைத் தன் மனைவி யிடம் சொல்லிக்கொண்டிருந்தார். முருகனுக்குச் சிங்கப் பூரில் பெண் கிடைக்காது. தமிழகப் பண்பாடு தவறாம லிருக்கும் சூழலில் வளர்ந்த பெண் வாழ்வாள்; வாழவைப்பாள்!
மனைவியால் மறுக்கமுடியாத காரணங்களைக் சொல்லிவிட்டதிலே கோவிந்தன் பூரித்துப் போயிருந்தார்.
சாத்திர சம்பிரதாய அடிப்படை பிறழாமல் முருகன் – சாந்தி திருமணம் நடைபெற்று முடிந்தது.
அன்றுதான் அவர்களுக்குச் சாந்தி முகூர்த்தம். சாங்கிய அமைப்புகளைப் பார்த்து சாந்தி சாந்தி சிரித்துக் கொண்டாள். ஏன்? குறிப்பிட்ட நேரம் வந்துவிட்டது. குனிந்து நடந்தாள்; அது சம்பிரதாயம். உணர்வு… நண்பரின் கட்டாயத்துக்காகப் பார்த்த திரைப்படத் தையே மூன்றாவது முறையாகப் பார்க்கச் செல்லும் அலட்சியம் இருந்தது. விடிந்தது பொழுது. காற்றுப் போன பிஸ்கட்டைத் தின்ற குழந்தையின் காப்பான பாங்குதான் சாந்தியின் முகத்தில் பிரதிபலித்திருந்தது
முருகன் பிறந்த இடம் தேடி வந்துவிட்டான், பிழைத்துக் கொள்ளலாம் எப்படியும் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான். ஒண்டிக்கட்டையா? அனல் சிந்தும் அந்த பெருமூச்சில் அர்த்தம் பொதிந்துகிடந்தது. அடைக்கலம் தந்தான் அப்பன். பேசாமல் இருக்க முடியுமா?
கட்டியா சாப்பிடறத கஞ்சியாக் குடிப்போம்; கனிவு பிறந்தது தாய்க்கு! கோவிந்தனின் சிறிய வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது. முருகன் வேலைக்கு முயன்றான். கிடைக்க வேண்டுமே! கிடைக்குமா? பேர் போன முருகன் வேலை கிடைக் காமல் பேதலித்தான். கண்டராக்ட் வேலை அவ்வப் போது கிடைத்தது. அந்த அம்மாளின் வருவாய் சந்தைச் செலவுக்குச் சரியாக இருந்தது.
சாந்திக்கு வாழ்க்கை சலித்துவிட்டது; திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் மட்டும்தான் ஆகியிருந்தன. முருகனிடம் பேசுகின்ற பாங்கில் பழைய சுதாரிப்பு இல்லை போராட்டம் செய்யத்தகும் அளவுக்கு சக்தி யற்றிருந்த தனது நிலை அவனுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இப்போது தெரிந்து என்ன ஆகப்போகிறது? அனுபவித்தானே, அப்போது தெரிந் திருக்க வேண்டும். குழுப் பேராளராக ஜெயிலுக்குப் போய்வந்தபோது கிடைத்த பரிசுகள் முருகனை இப்போது உருக்குலைக்கத் தொடங்கியிருந்தன. வேலை யும் கிடைக்கவில்லை. வேளையும் வரவில்லை. வாய்ப்பும் வரவில்லை, வசதியும் கிடைக்கவில்லை. மொத்தத்தில் வறட்சி அவனை வாட்டியது. வளம் அவனைப் பிடுங்கித் தின்றது. சாந்திக்கு சாந்தியே இல்லை. சாந்தி செய்ய சக்தியற்ற நிலை முருகனுக்கு. வீரிய விருத்தி லேகிய விளம்பரங்களாகத் தேடித்தேடிப் படித்துக் கொண்டிருந்தான்.
நாளாவட்டத்தில் ஆலாய்ப் பறந்தான் முருகன், அருகு போல் வேரோடினாள் சாந்தி.
ஆமாம் வேலை தேடி அலைந்தான் அவன். புதுப்புது முகங்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தாள் அவள்.
எப்படியோ காலம் கனிந்து கொண்டிருந்தது.
சிங்கப்பூரிலுள்ளவர்களை திருமணம் செய்து கொண்ட சீலாட் தோட்டப் பெண்கள் சிலர் அவ்வப் போது பிறந்தகம் வரும்போது சொல்லும் உல்லாச வாழ்க்கையை உருப்போட்டுப் பார்த்தாள். வேலைக் குப் போக வேண்டியதில்லை; வீட்டிலேயே இருக்கலாம். நாகரிக வாழ்க்கை நாடகம், சினிமா, கூத்து, இப்படி யான பொழுதுபோக்கு!
அம்மம்மா… இந்த சுகம் அப்பப்பா… எப்ப வரும்? என்று பாடிப் பார்த்தாள். சிந்தனை சிறகடித்துப் பறந்து தான், ‘சிங்கப்பூரு மச்சான்’ பாடினாள். அந்த எதோ ஒன்று இதுதான். மற்ற பெண்களுக்குப் பெற்றோர்களே புளியங்கொம்பாகப் பார்த்து முடித்து வைத்தார்கள். இவளுக்கு வாய்த்தது, முருங்கைக் கொம்பாக இருந்தது. முறியும் தரமானது என்ற சிந்தனையில்லாததால் சாந்தி இப்போது முறிந்த பாலாக மாறியிருந்தாள்.
இரண்டு வருடம் ஆகிவிட்டது. சாந்திக்கு சாந்தி ஏற்பட்டிருந்தது. அவள் எந்த ஒன்றை நினைத்து முருகன் வலையில் சிக்கினாளே அந்த அது இப்போது கிடைத்தது. பகட்டுப் பொருள்கள்! பலரகப் பட்டுப் புடவைகள்! இன்னும் என்னவெல்லாமே! எப்படி? முருகன் கேட்டே விட்டான்.
உங்களுக்குத்தான் முடியவில்லை என்றால் .. இன்னும் ஏதோ சொல்ல வந்தவள் தொடராமல் மென்று விழுங்கிக் கொண்டாள்.
இப்போது கோவிந்தனின் குடும்பத்தில் ஓர் அங்கத் தினர் அதிகமானார். கோவிந்தன் வீட்டுப் புதிய அங்கத் தினரின் பிறப்புப் பத்திரத்தில் தந்தையார் பகுதிக் குறிப்புக்களில் முருகனின் அடையாளக் கார்டு அப்படியே பதிவாகியது. குழந்தைக்கு வாய்ப்பு இருந்தது. முருகன் இப்போதும் எப்படி? என்றே கேட்டுக் கொண்டிருந் தான் நெஞ்சுக்குள்.
ஆடம்பர வாழ்க்கைக்கும் அவள் ஒரு புது வாய்ப் பினை ஜோடித்துச் சொல்லியிருந்தாள். முருகன் முடி வுக்கு வந்தானா?
நாலு நம்பர் குதிரைப் பந்தயம் அடித்ததாகச் சொன்னதுதான். அந்த ஜோடனைப் பொருள்புரியாமல் எதுக்கும் எபவுட் போட்டுப் பேசும் கோவிந்தன், இப்போது அர்த்த புஷ்டியோடு அந்த வார்த்தையைச் சொல்லிப் பார்த்துக் கொண்டார். பேரன் பிறந்த அதிர்ஷ்டம் என்று நம்பிக்கொள்ள வேண்டும் என்பது தான் சாந்தியின் அபிலாசை. அந்த வகையில் சாந்தி எந்த அளவுக்கு வெற்றி பெற்றாள் என்பதுதான் அறுதி யிட முடியாத ஒன்றாக இருந்து வந்தது.
சாந்தி ஜோடித்துச் சொன்னாளே குதிரைப் பந்தயம் அந்த ஜோடனையை அடிக்கடி சொல்லக்கூடிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆசைக்கு அளவேது? இரட்டை வகை இலாபத்தை இழக்கத் தயாராக இல்லை அவள். பெரிய கிரிமினல் கேஸ் இரகசியங்களே காலப்போக்கில் புலனாகி விடும்போது, சாந்தியின் ஒப்பனைகள் மட்டும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் . ? சாமர்த்தியத் துடன் இருந்து வந்த சாந்தி, சாக்குப் போக்கு சொல்லக் கூடாத அளவுக்குத் தன் ஒப்பனையில் கோட்டை விட்டு விட்டாள். அவள்தன் அந்தரங்கம் உள்ளங்கை நெல்லிக் கனியாகி விட்டது. அவளும் இனி மறைப்பதாக இல்லை. கோவிந்தன் கோப வெறிக்காளானார். முருகன் மூர்க்கனானான். இருபுறமும் அடிதாங்கும் மத்தளமாக நின்றார், முருகனின் தாயார். சாந்தி… அவளுக்கென்ன-? சீலாட் தோட்டத்து சேவல் காட்சி அவள் நினைவலை யில் வந்து மோதிச் சென்றது. அன்றைக்குப் போலவே இன்றும் சிரித்துக் கொண்டாள்.
சாந்தி வீடு மாறினாள். இல்லை வேறொருவரின் வீட்டுக்காரியானாள் சாந்தி, இப்போது மூன்று குழந் தைக்குத் தாயாகிருக்க வேண்டும்! மூன்றாவது முறை யாகக் கருக்கலைப்பு. கருக்கலைத்தாள் உருக்குலைந் தாளா கட்டுக்குலையாமல் கனபாடியாகவே இருந் தாள். வலிவிருந்ததோ இல்லையோ, பொலிவு மட்டும் குறையவில்லை. காரணம் கேட்டான் ராமன்! ஆம்; அதுதான் சாந்தியின் இப்போதைய எடுத்துக்கிட்டவரு. இப்போதெல்லாம் சாந்தி சலித்துக் கொண்டு, இவருக்கு அவரு தேவலாம். முணுமுணுத்தாள்! அவள் சொன்ன அவரு முருகனையா?
சாந்தி கோழிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருந் தாள். அடைகாத்த பருவம் நீங்கிய பெட்டைக் கோழி ஒன்றை இரண்டு மூன்று சேவல்கள் வளைந்து கொண் டிருந்தன. இரவு வேலையிலிருந்து திரும்பிய ராமன் வீடு அல்லோல கல்லோலமாய்க் கிடந்ததைப் பார்த்தான். இராவணன் யார்? என்பதுதான் ராமனின் கேள்வி?
நாள் செய்வதை நல்லவர்கள் கூடச் செய்வதில்லை. அந்தச் சிற்றூர் மக்களின் ஆர்ப்பரிப்பும் அங்கலாய்ப்பும் அடங்கியபாடில்லை. இன்னும் ஒரு வாரம் கூட ஆக வில்லை! ஒரு கடற்கரையோரத்தில் ‘சாந்தம்மாள் என்ற பெண் கண்டதுண்டமாக வெட்டப்பட்டுக் கிடந்தாள்! பரிதாபகரமான சாவு’ என்று பத்திரிகைச் செய்திகள் பிரசுரமாகியிருந்தன.
புலன் விசாரணையில் முருகன், இராமன் இருவருமே இல்லையென்று புலனாகி விட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது. சீலாட் தோட்டத்துக்கும் செய்தி பரவி விட்டது. பத்திரிக்கைச் செய்திதானே…பேரைக் கெடுத் துக் கிட்டிருந்தவ பேரு இல்லாமயே போயிட்டாளாம்! சீலாட் தோட்டத்துத் தவரனைக் காட்டில் பேசிக் கொண்டார்கள். ‘உலைவாயை மூடலாம்-ஊர் வாயை மூட முடியுமா? கதைபேசிக்கிட்டிருக்காதிங்க காரியத்தைக் கவனிங்க’ என்று ஆரியக்கூத்து கங்காணி எல்லோரையும் அதட்டிக் கொண்டிருந்தார்.
– தமிழ் முரசு, 21-12-1970.
– சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: 1988, விஜயா சபரி பதிப்பகம், சென்னை.