கல்யாண மண்டபத்தில் மணப்பெண் அதிகாலையில் தன் காதலனுடன் ஓடி விட்டாள் என்ற செய்தி எங்கும் பரவியது.
இரு வீட்டாருக்கும் மானப் பிரச்சினையானது. உடனடியாக மணப்பெண்ணின் தங்கையை சம்மதிக்க வைத்து திருமணம் முடிந்தது.
அதே நேரம் தன் காதலனுடன் மணப்பெண் ரிஜிஸ்தர் ஆபிஸில்.
“இருந்தாலும் நீ செய்தது துரோகம் மாலா” என்று காதலன் கேட்கவே,
“நான் இப்ப ஓடி வந்ததாலேதானே, என்னோட தங்கச்சிக்குத் திருமணம் நடந்திருக்கு. இதுக்கு முன்னால நான் உங்களை கலப்புத் திருமணம் செய்துகிட்டேன்னு தெரிஞ்சா என் தங்கச்சியை யாரு கல்யாணம் செய்துக்குவா?.
ஒரு வகையில் இது தப்பா இருந்தாலும் என் தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்திட்டேனே!” என்று தன் காதலன் கைப்பிடிக்க திருமணப் பதிவு செய்யப்பட்டது.
– மு.சிவசுப்பிரமணியன் (12-5-10)