ஒரு விடியலில் – சில இழப்புகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 197 
 
 

(1984 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உற்சாகம் கரைபுரள வந்ததும், வராததுமாய் மனை வியை அழைக்கிறேன். என்னில் ஏற்பட்ட வழமைக்கு மீறிய மாற்றத்திற்கு விடை காணும் ஆவலில், ஈரக் கைகளை புடவை விளிம்பில் துடைத்தவாறு ஆர்வத்துடன் விரைகிறாள் அவள். ‘நாளைக்கு விடிய ஆறுமணிக்கு பிளைட்!’ கையில் பளபளக் கும் விமான டிக்கட்டை அவளது விழிகள் விழுங்கப் பார்க்கின் றன. ஆச்சரியமும், ஆனந்தமுமாய் அந்த முகத்தில் ஆயிரம் வெளிச்ச மின்னல்கள். நாணத்தில் மட்டும்தான் பெண்ணின் முகத்தில் செம்மை படரும் என்று யார் சொன்னது? இரை யைக் கொத்திக் குஞ்சுகளை அழைக்கும், தாய்க் கோழியின் பாசக் கொக்கரிப்பாய், அவள் குரல் வீடெங்கும் ஒலிக்கிறது.

கைநிறையக் காசுடன் எப்போதோ எல்லோரும் மகிழ்ச்சி யாகக் கழித்த ஒரு பெருநாளின் ஞாபகம் இனிமையாய் நெஞ்சில் கலக்க, அந்த ஞானக் குளியலின் சுகத்தில், மெல்லப் பூரிக்கிறேன் நான். ‘வாங்க… சாப்புட…!’ பாசமொழுகும் அன்பழைப்பு! அசுர யமப்பசி, ஆளை வாட்டினாலும், மனை வியின் இந்த இனிய அழைப்பிற்காக, எத்தனை கணங்களும் காத்திருக்கலாம். அது ஒரு சுகமான அனுபவம்.

சிறிதும் பெரிதுமாய் வீட்டை நிறைக்கும் ஐந்து வாரிசுகள். துள்ளிப் படையெடுத்து எங்களைச் சுற்றி அணிவகுக்கிறது. என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவள், திடீரென அருகில் வந்து என் முகத்தில் அப்பியிருந்த தூசியை உள்ளங்கையால் அழுத்தித் துடைக்கிறாள் பாசத்தோடு. இச் செய்கை, அதுவும் பிள்ளைகள் எதிரில், கூச்சமாக மட்டுமில்லை , சங்கடமாகவும் இருந்தது எனக்கு.

அவளது அமைதியான தோற்றத்திலும், மென்மையான புன்னகையிலும் ஓரு ஆழமான அர்த்தம் இருந்தது. இன்பமோ, துன்பமோ இரண்டையும் அவசரமின்றி எதிர் கொள்வதில் என்னை மிஞ்சக் கூடியவள். இதை பல அனுபவங்கள். மூலமாய் எனக்கு உணர்த்திய ஆளாயிற்றே.

மூட்டை சுமக்கும் நாட்டாமைத் தொழிலாளியின் மாறாத முதுகுத் தழும்பாய், அவள் இதயத்தில் தடம் பதித்த அந்த ஊமைக் காயங்கள் எல்லாம் உருத்தெரியாமல் அழிந்தொழியப் போகும் இந்த வேளையிலாவது அவசர ஆர்ப்பரிப்புகள் அவளைப் பற்றியிழுக்காதா? என்ற தேடலில், எனக்கு நிச்சயம் தோல்விதான். தாய்ப் பறவையின் மென்மையான மகிழ்ச்சி ரேகையிலும், குஞ்சுகளின் ஆனந்த ஆரவாரங்களிலும், ஒரு கணம் மனம் கனிந்து போனாலும், கடந்த காலத் துயரச் சுழிகள் என்னுள் ஆர்பரிக்காமலில்லை. நீண்டதொரு பெருமூச்சே நெஞ்சை விட்டு அகல்கிறது.

செய்த தொழிலில் நானே மண்ணைப் போட்டுக் கொண்டு, ஈ.பி.எப்., சேவிஸ் பண்ட், இத்தியாதி பலவற்றைப் பிடுங்கிக் கொண்டு, அந்த நிறுவனத்திலிருந்து அவசரமாய் வெளியேறி, இன்னும் பெண்டு பிள்ளைகளின் காது கழுத்துக் களை வெறுமையாக்கி விட்டு, இன்னும் போதாமல், கௌர வப் பிச்சையாகப் பலரிடம் கடன் வாங்கி, அந்த முகவர் நிலையத்திற்கு, தாரை வார்த்திருந்தேன்.

இந்த ஆறுமாதங்களாக குடும்பம் அரை பட்டினியோடு தள்ளாட, பாலைவனப் பசுமைகளைக் கனவில் மட்டும் கண்டு, அலையாய் அலைந்ததிற்கு பலன் கிட்டிய இவ் வேளை. எதைப் பேசுவது என்று இருவரது உதடுகளும் உற்சாகமிழந்து துடித்தாலும், மனங்கள் மௌனத்தை மண்டி யிட சில கணங்கள் கரைகின்றன. திடீரென வெடித்துச் சிதறும் மகிழ்ச்சியிலும் சோகங்களிலும், வார்த்தைகள் ஏன் வலுவி ழந்து போகின்றன? ஓ. உணர்வுகளின் மௌன ஊர்வலத்தில் சத்தியங்கள் தவமாய் சக்தி பெற்று ஆராதிக்கின்றனவோ? மௌனங்களை வெல்லும் ராகங்களே, இசைச் சுருதிகளால் மனித மனங்களை தாலாட்டுங்கள்! எப்போதோ படித்த புதுக்க / விதையொன்று நெஞ்சில் புரள வானொலியை திருப்புகிறேன். என்ன அற்புதமான குரல் ஞானம்! இசையென்னும் நதியில் விழுந்து – அளைந்து – குழைந்து மகிழ்ந்த, அனுபவ வெளிப் பாடுகள் இவர் குரலில் தேனாய்ப்பொழிகிறதோ.

ஆயிரம் பேர் ராகமிசைக்கட்டும், இந்த பாலமுரளி கிருஷ் ணாவுக்கு ஈடாகுமா என்ன? தேனாய் பொழிந்து நாடி நரம்பு களை மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் இசைத் தொட்டிலில் மெல்லத் துயில்கிறது மனக்குழவி. ‘கலை நிலா ஆடினாள் – கயல்விழி மாது – நதியினில் ஆட – கரும்பினில் வில்லேந்தி காமன் செய்த லீலையாய் – கலைநிலா…! நித்திரா தேவியின் பரிபூரண அணைப்பில் பிள்ளைகள் தங்களை மறந்திருந்த வேளை. இரண்டறக் கலந்திருந்த நாமிருவரும், மிக அருகாமை யில். உறக்கக் காற்று இமைச் சிறகுகளை தழுவாதா என்ற ஏக்கத் துடிப்பு இருவர் உள்ளங்களிலும்.

மனம் ஒரு நிலையில்லாத போது அது எங்கனம் சாத்திய மாகும்? சோக இருள் மூட்டம் மனதை ஆட்கொள்ள அதை வெளியில் காட்டாது, அவள் முகத்தை ஆவலோடு வெறிக்கி றேன். கூரை முகட்டையே சுற்றிக் கிறங்கும் அந்த வண்டு விழிகளுக்குள் பொலிந்த காந்தக் கவர்ச்சி, இருளிலும் துல்லிய மாய் தெரிந்தது. நான் பல பொழுதுகளில் அசந்து போன துண்டு. வாழ்வுத் தொல்லையின் அசுரத் தாக்கங்கள், இவ ளைப் பலமாகத் தாக்கும் பொழுதுகளிலும் கூட கருணையும் கவர்ச்சியும் இந்த மதிமுகத்தை விட்டு மறையாதிருப்பதின் தாற்பரியம் என்னவாக இருக்குமென்று.

மனிதனுக்கு ஆயிரம் அவஸ்தைகள் வரட்டுமே, அதனா லென்ன? எல்லாத் துயரங்களையும் பொறுமையோடு தாங்கிக் கொள்ளும் ஒரு மனைவி அருகில் இருக்கும் வரை… அந்தத் துன்பங்களெல்லாம் தூசாய் பறக்க மகிழ்ச்சி வந்து மனங்களை ‘நிறைக்காதா என்ன? அதே சமயம், வாய்த்தவர் அதிர்ப்தியை யும் வெறுப்பையும் வெளிப்படையாகவே கொட்டித் தீர்க் கின்ற சர்ப்பமாக வாய்த்துவிட்டால் வாழ்க்கையே நரகந்தான்.

இந்த பத்து வருட வாழ்க்கையில் இவள் என்ன பெரிய சுகத்தை அடைந்து விட்டாள். வேதனையையும், விரக்தியையும் தவிர, அப்படியிருந்தும், தேவைகளை அடைந்து மகிழ் வது மட்டும் தான் வாழ்க்கை என்று மருள்கிற சராசரிப் பெண்களிலிருந்து விலகி நின்று தேவைகளை இழப்பதும், துயரங்களில் மகழ்வதும் கூட வாழ்க்கை தான். அது மட்டுமா? ஆணின் அவசரங்களையும், சுடு சொற்களையும் தாங்கிக் கொள்ள முடியாதவள் குடும்பப் பெண்ணாய் இயங்கவே முடியாது என்று திண்ணமாய் பறை சாற்றி நிற்கிறாளே இவள்.

வாழ்வே இருண்டு விட்டதைப் போன்றும், நாடி நரம்பு கள் ஓய்ந்து நெஞ்சை அடைப்பது போலவும், பொருளாதாரச் சிக்கல்களால் அவதியுறும் போதெல்லாம், இந்தப் பொலிவும் புன்சிரிப்பும் ஆறுதல் மொழிகளும்தான் மீண்டும் என்னை இருபது வயது வாலிபனாக்கி சுறுசுறுப்பாய் இயங்க வைக் கும். இத்தனை ஆண்டுகளில் தொடர்ந்தாற் போல் ஒரு பத்துநாட்களை இவளை விட்டு பிரிந்திராத நான், இருபத்தியி ரண்டு மாதங்களை வெளிநாட்டில் எப்படி கழிப்பேன்.

பிற புருஷனை நாடாமை மட்டும்தான் பத்தினித்தனம் என்பதில்லை . பசியிலும் அவலத்திலும் கூட கணவனின் மனம் கோணாமல் நடப்பவளும் பத்தினிதான். எங்களைப் போன்றவர்களுக்கு பசியும் இல்லாமையும் பழகிப் போன சங்கதிகள் தான். என்றாலும், எங்கள் மனமொத்த தாம்பத்திய உறவுகளுக்கு மட்டும் எந்தக்கட்டுப்பாடும் தடையும் இருந்த தில்லை. விடிந்தால் ஐந்து சதத்திற்குக்கூட வழி இல்லாமல் இருக்கும். ஆனால் இரவுகள் எப்போதும் போல் இனிமையாக இருக்கும். ஓ…! துயரங்களும் வாழ்க்கைதான் என்ற தத்து வத்தை எந்தப் பல்கலைக் கழகத்தில் கற்றுத் தேறினாளோ இவள்?

என் நண்பன் ஒருவனுக்கு எக்கச்சக்கமான குழந்தைகள். வருஷம் தப்பினாலும் இந்தப் பாக்கியம் தப்பாது. ஒரு நாள் அவனிடம் கேட்டேன். ‘இவ்வளவு வறுமையிலும் இது எப்படி சாத்தியமாகிறது’ என்று. ‘என்னதான் செய்ய? வறுமை, நோய், பசி, பிரச்சினை, இத்தனை கெடுபிடிக்குள்ளும் இரவு நித்திரையே வராது. யோசித்து யோசித்து இறுதியில் சம்சார சாகரத்தில் முழுசாக மூழ்கி விடுவேன். பிறகு உடல் அசதியில் நிம்மதியாக உறக்கம் வந்துவிடும்’ என்று.

நினைவுகளோடு போராடும் இவ்வேளையில் நண்பனின் கூற்றை எண்ணி மனதிற்குள் சிரிக்கிறேன். வாழ்க்கை ஒவ்வொ ருவருக்கும், ஒவ்வொரு கோணத்தில், அர்த்தமுள்ளதாக, அர்த் தமற்றதாக, பரிணமிக்கின்றது. என்றாலும் வாழ்வது ஒரு போராட்டம் தான். நினைவலைகளில் நீந்திய நான் மீண்டும் அவள் முகத்தை வாஞ்சையோடு பார்க்கிறேன். எந்தச் சலனமு மில்லை. ஒரு வேளை தூங்கி விட்டாளோ? உரிமையோடு கன்னத்தைத் தடவிய எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. முகம் – கழுத்து – நெஞ்செல்லாம் கண்ணீர் மழையில் தெப்பமாக நனைந்த குளிர்ச்சி. இதுகாறும் இவள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தாளா?

இரு கரங்களுக்குள் மென் உடலைச் சிறை எடுத்து ஆறுதல் கூறினேன். வெடித்துக் குமுறும் விம்மலுக்கிடையே,

ஒங்களை… ப்….. பிரிஞ்சி, நான் எப்படியிருப்பேன். ஆத்திரமும் அழுகையும் அவளைப் பேசவிடாது தடுக்கிறது. ஆறுதல் கூறும் திராணியற்ற நிலையில் நான் ஒரு பாட்டம் அழுது தீர்க்கிறேன். காலம் கணங்களை பின்தள்ளி கடுகதியில் விரைகிறது.

‘எழும்புங்கோ …! எயர்போர்ட் போக நேரமாச்சு! இந்த… கோப்பியைக் குடிங்க!’ குரல் கேட்டு விழிக்கிறேன். மீண்டும் அவள்,

‘இண்டைக்கு மட்டுந்தான் எண்ட கையால கோப்பி. இனி… ரண்டு வருஷம்… கழிச்சுத்… தான்!’ வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கித் தடுமாற, நெஞ்சை உலுப்பும் விம்மல் ஒலி. நான் ஏன் கோழையைப் போல் கேவிக் கேவி அழுகி றேன்? சிறிது நேரத்தில் பிள்ளைகளும் என்னைக் கட்டிக் கொண்டு கதற வீடு அழுகைச் சத்தத்தால் நிறைந்து வழிகிறது.

வாசலில் கார் வந்து நிறுத்தும் ஓசை கேட்கிறது.

கெட்டிங் லேட். சீக்கிரமா புறப்படுங்கோ !’ மாமாவின் குரல் மண்டையில் அடிப்பதைப் போல் பலமாக ஒலிக்கிறது.

மல்லிகை, 1984 டிஸம்பர் – மீறல்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடு, முதற்பதிப்பு: நவம்பர் 1996

பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் - 12 May 2013 மு.பஷீரின் ‘இது நித்தியம்’ என்ற சிறுகதைத் தொகுதி அவரது நாலாவது சிறுகதைத் தொகுதியாக அவரது சொந்த கல்ஒழுவைக் கிராமத்தில் வெளியிடப்படுவது இலக்கிய உலகுக்கும் கல்ஒழுவைக் கிராமத்திற்கும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகும். ஏற்கனவே மீறல்கள் (1996), தலைமுறை இடைவெளி (2003), நிஜங்களின் வலி (2005) என்று ஒரு சீரான இடைவெளியில் அவரது தொகுப்புக்கள் வெளிவந்து 4வது வெளியீடாக ‘இது நித்தியம்’…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *