ஒரு மரம் நிழலைத் தேடுகிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2024
பார்வையிட்டோர்: 219 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எங்கள் ஆபீஸ் அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆபீஸ் மட்டுமா? ஆபீஸில் பணியாற்றும் எல்லோரும் ‘ஐம்’ மென்று டிரஸ் செய்து கொண்டு எப்போதும் நீல நிற ஷர்ட்டை அணிந்து வரும் காஷியர் கூடத் தூய்மையான தும்பைப் பூ நிறச் சட்டையுடன் அன்று ஜொலித்தார். காற்று புக இடம் அளிப்பதாகக் கூறிக் கொண்டு தன் கட்டான (மயில் நிரம்பிய) மார்பு தெரியக் கழுத்திலுள்ள பொத்தானைத் திறந்து விடும் பழக்கமுடைய ராஜகோபால்கூட அன்று கழுத்துப் பொத்தானை மூடி இந்தப் பூனையும் பால் குடிக்குமா என அப்பாவிபோலக் காட்சியளித்தார்.

சிரித்துக் கும்மாளமடிக்கும் ஜேம்ஸ் அன்று வாய் பேசா மடந்தையானார். காலையில் வந்தவுடன் முதல் வேலையாகக் காப்பிக்கு ஆர்டர் கொடுக்கும் லிம் அன்று காப்பியை மறந்து தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். எப்பொழுதும் “லோ கட் ஜாக்கெட்” டும் ‘ரவிக்’கும் ‘லிப்ஸ்டிக்” குமாகச் சினிமா நட்சத்திர பாணியில் வரும் மேரி அன்று வாயல் புடவையும் ரவிக்கையுமாக அடக்கத்துடன், ஸிம்பிளாக டிரஸ் செய்திருந்தாள். ஆனால் எப்பொழுதும் ‘கைத்தறிப் புடவையில் எளிமையாகத் தோனறும் ‘டைப்பிஸ்ட்’ பாமா அன்று நைலக்ஸில் காட்சியளித்தாள். இந்த வினோதத்தைப் பார்த்து எல்லோரும் மூக்கின் மேல் விரல் வைத்துக் கொண்டிருந்தோம். இந்த மாற்றங்களும் மாறுதல்களும் ஏற்படும் அளவுக்கு அன்று என்ன விசேஷம்?

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டுப் பிறகு அமெரிக்காவில் “பிஸினஸ் மானேஜ்மெண்ட் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷனில்” டிப்ளமோ வாங்கிய சத்தியமூர்த்தி என்ற புது மானேஜர் எங்கள் ஆபீசுக்கு வருகிறார். அவர் முதலாளிக்கு நெருங்கிய உறவினர் என்றும் அவர் சொல்லும் வார்த்தையைத் தேவ வாக்காகக் கொண்டு செயல்படுவார் முதலாளி என்றும் விஷயமறிந்த வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்பட்டது.

சுவரில் தொங்கிய கடிகாரம் “டாண்… டாண்…” என்று ஒலிக்க ஆரம்பித்தது. மணி பத்து அதே சமயத்தில் வாசலில் கார் சத்தம் புது மானேஜர் வந்துவிட்டார். அமெரிக்கா ரிட்டர்ன்ட்டா, கொக்கா? பங்க்சுவலாகப் பத்து மணிக்கு வந்திறங்கினார் சத்யமூர்த்தி எல்லோரும் வாசலுக்கு ஓடி வரவேற்றோம். புது மானேஜரைப் பார்க்கம் ஆவல் அனைவரது முகத்திலும் பிரதிபலித்தது.

ஆனால்… ஆனால்… அவரைப் பார்த்த மாத்திரத்தில் நான் அதிர்ச்சிக்குள்ளாகிப் போனேன். அது… அது.. சத்தியாதானே? என்னுள் இனந்தெரியாத பூகம்பமும், எரிமலையும் பொங்கி எழுந்து போராடின. “சத்தியா நீங்களா?” இதற்குமேல் என்னால் எதுவும் நினைக்க முடியவில்லை. ஆபீஸ் முதலாளி புது மானேஜருக்கு ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைத்தார். “ஹலோ” ,”குட்மார்னிங்”, “வணக்கம்” என ஒவ்வொருவரும் அவருக்குச் சலாம் போட்டது யாவும் காதில் மங்கலாக விழுந்தது. போகப் போக அந்த மங்கலும் மறைந்து எதுவுமே என் காதில் விழாத அளவுக்கு சூன்யம் என்னுள் பரவியது.

“ஆச்சு வந்தாச்சு” எல்லோரையும் அறிமுகப்படுத்திய முதலாளி என் முறை வந்தபோது,” இவங்க மிஸ் ராதா. சீனியர் டைப்பிஸ்ட்..” என்று அவர் அறிமுகப்படலத்தை முடித்தபோது என்னைக் கூர்ந்து பார்த்தார் சத்யமூர்த்தி அந்த பார்வையில் ஆயிரம் தேள் கொட்டியதுபோல நான் கூனிக் குறுகிப் போனேன்.”மிஸ் ராதா” என்ற என் பெயரைப் புது மானோஜர் மீண்டும் உச்சரித்தார். அந்த உச்சரிப்பில் இருந்த ‘மிஸ்’ என்ற அந்தச் சொல் வாழ்க்கையில் நான் எதையோ ‘மிஸ்’ பண்ணியது போல் இருந்தது, ‘ கிலட் டு மீட்யூ’ எனச் நீட்டினார் நான் வணக்கம் என இரு கைகளைக் கூப்பி வணங்க. எண்ணினேன். ஆனால் ஏனோ என் கைகள் வலுவிழந்து செயலற்றுப் போயின.

அதற்குள் முதலாளி சத்யமூர்த்தியைத் தனி அறைக்குள் அழைத்துச் சென்றார். போகும் முன் சத்யமூர்த்தி ‘ஸ்டைலுடன் என்னைக் கடந்து சென்றது எனக்கு என்னவோபோல் இருந்தது “சத்தியா…சத்தியா… நான் உங்களை இப்பவா சந்திக்க வேண்டும்.அதுவும் இந்த நிலையிலா சந்திக்க வேண்டும்?” என என் உள்ளம் ஒவென்று ஓலமிட சுவர்க்கடிகரத்தைப் பார்த்தேன். மணி பன்னிரண்டு எனக் காட்டியது. எப்பொழுதும் முயல் நகர்ந்தது மதிய உணவு வேளை வந்தது. எல்லோரும்’ வேகத்தில் ஓடும் நேரம் அன்று ஏனோ ஆமை வேகத்தில் சாப்பிடச் சென்றனர். எனக்குச் சாப்பாட்டில் அன்று நாட்டமில்லை. பாமா கூப்பிட்ட போது தலைவலி என்று அவளுடன் செல்ல மறுத்துவிட்டேன்.

‘லஞ்சு’ க்குச் சத்யமூர்த்தி சாப்பிடச் செல்வார் எதிர்பார்த்தேன். அவரும் ஏதோ வேலை என அறையை விட்டு வெளியே தலைகாட்டவில்லை. ஆபீஸ் பாய் மட்டும் காப்பி ‘கூல் டிரிங்க்ஸ்’ என அவர் அறைக்கு இருமுறை விஜயம் புரிந்தான். இருப்புக் கொள்ளாமல் நான் அனலில் இட்ட புழுபோல் துடித்துக் கொண்டிருந்தேன்.’ ல்ஞ்’ எல்லோரும் ஒருவர்பின் ஒருவராகத் திரும்பிக் கொண்டிருந்தனர். இரண்டு மணியானதும் வேலையில் சூடு பிடித்தது எல்லோரும் வழக்கம்போல செய்யும் அரட்டைகளை விட்டுவிட்டு. தான் உண்டு தன் வேலை உண்டு என வேலையில் மும்முரம் காட்டினர்.

வேலை மும்முரத்திலும் பாமா மட்டும் அவ்வப்போது ‘புது மனேஜர் எப்படி?பார்த்தா நல்லவர் மாதிரிதான் இருக்காரு ஆனா வேலையில் எப்படியோ?” என என்னிடம் தொண தொணத்துக் கொண்டிருந்தாள். நான் அவள் கேட்பதற்கெல்லாம் பட்டும் படாமலும் “ஆமாம்…இல்லை… தெரியாது…’ என ஏதேதோ சொல்லி மழுப்பினேன். அவளிடம் இப்படி உளறிக் கொட்டினேனே தவிர என் உள் மனத்தில் இந்த நரகத்தை விட்டு எப்போது வெளியேற முடியும் என்று தவம் செய்தேன்.

“டாண்…டாண்…’ எனச் சுவர்க்கடிகாரம் ஐந்து முறை ஒலி எழுப்பியது. “அப்பாடா! இந்த நரகத்திலிருந்து இப்போதைக்கு விடுதலை” என்று எண்ணியபடி புறப்பட்டேன்.ஆபீஸ் வாயிலைக் கடந்து செல்லும்போது என் கண்கள் ஏனோ புது மானேஜர் இருந்த அறைப் பக்கம் கண்ணோட்டமிட்டன. அறைக்கதவு இன்னும் மூடிய நிலையில் இருந்தது. அவர் மனக்கதவைப் போல, “சே! இது என்ன விபரீத எண்ணம் அவரைப் பற்றி நினைக்க நான் யார்? எனக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று எண்ணமிட்டபடி என்னையே நான் சமாதானம் செய்தேன். எப்படியோ ஒரு வழியாகப் பேருந்து எடுத்து வீடு வந்து சேர்ந்தேன். சோபாவில் தொப்பென்று விழுந்தேன். “அக்கா… அக்கா… வந்துட்டீங்களா? வரும்போதே… சாந்தி….. சாந்தின்னு கூப்பிடுவீங்க…ஏன் கூப்பிடலை?” என நீட்டி நிமிர்ந்து அவள் சொல்வதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது அவளுக்கு வாய்க் கோண முகம் சுழித்து நாக்கைப் பிதுக்கி அவள் என் மீது வினாத் தொடுத்த விதம் எனக்கு அவள் மேல் இரக்கத்தை ஏற்படுத்தியது. செய்யகூடாத தப்பைச் செய்துவிட்டது போன்றதோர் உணர்வு “ஒன்னுமில்லைம்மா சாந்தி! அக்காவுக்கு ரொம்ப களைப்பு… அதான்…” அதற்கு மேல் என்னால் அவளிடம் பொய் பேச முடியவில்லை. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்களே.. அந்தத் தெய்வத்திடம் பொய் சொல்லலாமா?” என ஏதோ என்னைத் தடுத்தது. “போக்கா… சாப்பிடும் நேரத்துல போன் போடுவீயே… ஏன் போன் போடுலே இன்னிக்கி…? நான்… நான்…” அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்ததோ அல்லது அது அவளுடைய இயல்போ என்று என்னால் ஊகிக்க முடியவில்லை “ரொம்ப சாரிம்மா.. ஆபீசுல அக்காவுக்குத் தலைக்கு மேல வேலை. அதான் போன் போட முடியலை என்னை மன்னிச்சிடுமா என் கண்ணுல… என் மூக்குல…” எனக் கொஞ்சினேன். என் கெஞ்சலிலும் கொஞ்சலிலும் மதி மயங்கியவளாய்க் சொக்கிப் போனாள். எனக்கோ அது ஆறுதலாக இருந்தது. பின் தான் பொம்மைகளுடன் விளையாடப் போவதாகக் கூறிவிட்டு வழக்கம் போல் தன் அறையில் சரணடையத் “தந்தித் தவழ்ந்து” சென்றான் சாந்தி. அவள் போவதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சாந்தி வேறு யாருமல்ல, என் உடன்பிறந்த ஒரே தங்கை பதினெட்டு வயது கொண்ட பருவ மங்கை என் அருமைத் தங்கை ஆனால் அந்த வயதிற்கு ஏற்ற மன வளர்ச்சியோ, மூளை வளர்ச்சியோ அவளுக்கு இல்லை. இரண்டு வயதில் அவளுக்கு ஏற்பட்ட கடும் ஜூரக் காய்ச்சல் காரணமாக அவள் இளம்பிள்ளை வாதத்திற்கு ஆளானாள். எவ்வளவோ வைத்தியம் செய்தும் அவளின் நோய் தீர்க்க முடியாத நிலையில் இருந்தது. மகளின் இந்த அவல நிலையைக் கண்ட பெற்றோர். மனம் பொறுக்காதவர்களாய் ஒவ்வொரு நாளும் அனலிலிட்ட புழுபோல் வெந்தனர். மேற்கொண்டு இந்தக் கண்றாவியைச் சகிக்க முடியாத அவர்கள் ஒருவர் பின் ஒருவராக இயற்கை எய்தினர்.

என் தாய் சாந்தியை என்னிடம் ஒப்படைத்துக் கண் மூடியபோது சாந்திக்குப் பத்து வயதிருக்கும். எனக்கும் சாந்திக்கும் எட்டு வயது வித்தியாசம் தான் இருக்கும். ஆனால் அவளை ஒரு கைக்குழந்தையாக என்னால் பார்க்க முடிந்தது. பல இன்னல்களைக் கடந்து எப்படியோ இன்று அவளை ஒரு பருவ மங்கையாக வளர்ந்து விட்டேன். அந்தச் சின்ன வயதிலேயே சாந்தி என்னிடம் ஒப்படைக்கப்பட்டதால் அவளைத் என்ற முறையியல் நான் பராமதித்தை விட என் மகளாவே அவளை வளர்த்து ஆளாக்கினேன். அந்த அளவுக்கு என் மனம் பக்குவமடைந்திருந்தது. இத்தகைய மனம் பக்குவமடைந்த நிலையிலும் என்னுள் சஞ்சலத்தையும் சபலத்தையும் ஏற்படுத்திய அந்தச் சம்பவம்… அதற்குக் காரணமாக அமைந்தவர்…ம் இதற்கு மேல் என்னால் எதையும் நினைத்துப் பார்க்க் முடியவில்லை. ஏதோ ஒரு விரக தாபத்தில் இருப்பதைப் போன்றதோர் உணர்வு.

“அக்கா…அக்கா…பசிக்குது சாப்பாடு…” எனச் சாந்தி என்னைத் தட்டிக் குலுக்கினாள். ஆ…என்னம்மா சோறா? எனக் கேட்டதற்கு ஆமாம் எனத் தலையை ஆட்டினாள். அப்போதுதான் இரவுச் சாப்பாட்டைக் கவனிக்காத அளவுக்கு அப்படி என்ன யோசனை? என என்னையே நான் நொந்து கொண்டேன்.”இதோ ஒரு நொடியில் ஆயிடும்மா” எனக் கூறியபடியே சமையலறைக்கு விரைந்தேன். ஃபிரிச்சில் இருந்த நேற்று வைத்த கறியைச் சூடு காட்டினேன். அதன் பின் ஒரு குவளை அரிசியைக் கலைந்து பிரஸ்ஸர் குக்கரில் போட்டேன். ஒரு வழியாக இரவுச் சாப்பாட்டை செய்து முடித்தேன். சாந்திக்கு ஊட்டிய பிறகு ஒப்புக்காக நானும் கொஞ்சம் சாப்பிட்டேன். கழுவ வேண்டிய பாத்திரங்களைக் கழுவியபின் சமையலறையைச் சுத்தம் செய்தேன்.

வழக்கம்போல் சாந்தியின் அறைக்குச் சென்றேன். அங்கே அவள் கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடினாள். அறை முழுவதும் விளையாட்டுப் பொருள்கள் தாறுமாறாகக் கிடந்தன. அவற்றையெல்லாம் பொறுக்கி அதற்குரிய ஒரு பெரிய பெட்டியில் வைத்தேன். பின் சாந்தியின் பக்கம் திரும்பிச் “சாந்திம்மா நேரமாகுதுல ம்… வா படுக்கலாம்” என்றேன். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவாள். அவளோ விளையாட்டின் தீவிரமாய் இருந்தாள். “இங்கே பாரும்மா அக்கா நாளைக்கு வேலைக்குப் போகணும். நேரத்தோட தூங்கினாதான் நாளைக்கு வேலைக்கு நேரத்தோட போக முடியும்” என அவளிடம் கூறி அவளைப் படுக்கைக்கு அழைத்துச் சென்றேன். அவளும் மகுடி ஓசையைக் கேட்ட நாகம்போல் என்னைப் பின் தொடர்ந்தாள்.

அவளைப் படுக்கையில் மெல்ல சாய்த்தி ஒரு கையால் சாந்தியின் தலை முடியைக் கோதிவிட்டேன். மறு கையால் அவள் மார்பைத் தட்டித் தூங்க வைத்தேன். அவள் மெல்லக் கண்ணயர்ந்தாள். “நாளை நேரத்தோடு வேலைக்குப் போகணுமே…. அங்கே… அங்கே… சத்தியமூர்த்தியைப் பார்க்க நேருமே…?” என்ற நினைப்பு வந்ததும் என்னுள் இனந்தெரியாத ஒருவித வேதனை ஆட்கொண்டது. சத்யமூர்த்தியின் உருவம் விஸ்வரூபம் எடுத்து என்னை ஏளனைச் சிரிப்பு செய்வதுபோல இருந்தது.

“சத்தியா…. சத்தியா… உங்களை நான் மறுபடியும் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே. இல்லை. ஏன் என் வாழ்க்கையில் நீங்கள் குறுக்கிட மீண்டும் வந்தீங்க. என் அமைதியைக் குலைக்கவா இவ்வளவு நாள்களுக்குப் பிறகு அவதரித்தீங்க. இப்படி ஆயிரமாயிரம் வினாக்கள் என் உள்ளத்தில் தொடுக்கப்பட்டன. ஆனால் அதற்கு விடை தெரியாமல் உள்ளம் புழுங்கினேன். “சத்தியா உங்களைப் பார்க்கவே விரும்பாத நானா ஒரு காலத்தில் உங்கள் திருமுகத்தைக் காணத் தவமிருந்தேன்? வழிமேல் விழி வைத்து உங்கள் வருகைக்காகக் காத்திருந்த அந்த ராத எங்கே…? சத்தியா சத்தியானு உங்களையே வலம் வந்த அந்த ராதா எங்கே…? எங்கே…? என என்னையே நான் கேட்டுக் கொண்டேன். சத்தியாவுடன் பழகிய அந்த இனிய நாள்கள் என் மனத்திரையில் திரைப்படம்போல் காட்சியளித்தன.

சத்தியாவை நான் சந்தித்தது ஒரு சுவையான சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த சம்பவத்தை இப்பொழுது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பு வரும். “சீனியர் கேம்பிரிஜ்’ எழுதி முடித்த கையோடு அதன் ‘ரிசல்ட்’டு தெரியும் வரை சும்மா இருக்க வேண்டாம் என்ற நோக்கில் அக்கம் பக்கத்துப் பிள்ளைகளுக்கு டியூசன் கொடுத்து வந்தேன். கொஞ்ச நாளிலேயே ‘டியூஷன் டீச்சர்’ எனப் பட்டப்பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்குச் சுற்று வட்டாரத்தில் எனக்கு நல்ல மதிப்பு. அந்த வகையில் என் பக்கத்து வீட்டுக்காரியான ஜானகிம்மா கொடுத்த முகவரிக்குப் பாடம் கற்பிப்பதற்காக அந்தச் ‘சேமி டிட்டேஜ்’ வீடுகள் கொண்ட வட்டாரத்திற்குச் சென்றேன். இதுதாள் வரை என் இல்லம் தேடி மாணவப் கொடுக்கும் வழக்கம் எனக்கில்லை. நான் வெளியே படைகள் வருவார்களே ஒழிய வீடு சென்று பாடம் சொல்லிக் போதெல்லாம சாந்தியைய ஜானகியம்மாவின் பராமரிப்பில் விட்டுச் செல்வேன்.அந்த அளவுக்கு ஜானகியம்மா எனக்கு மிக ஒத்தாசையாக இருந்திருக்கிறார். நல்லது கெட்டது எது நடந்தாலும் எனக்கிருக்கும் ஒரே துணை. ஆதரவு எல்லாம் அந்த ஜானகியம்மாள்தான்.

அவர் வேண்டிக் கொண்டதற்கு இணங்கியே அவரது தூரத்து உறவினர் ஒருவர் மகனுக்கு டியூஷன் சொல்லி கொடுக்க நான் அங்குச் சென்றேன். மனத்தில் ஒரு தயக்கம் முன்பின் அறிமுகமில்லாத இடம். ஏதோ ஒரு நடுக்கம். இத்தனையும் ஒன்று சேர ‘கோலிங் பெல்’ லை அழுத்தினேன். “நீங்க…நீங்க…” என்ற வினாவைத் தொடும்படி ஒரு நடுத்தர வயது பெண் கதவைத் திறந்தபடி கேட்டாள். “என்னை ஜானகியம்மா அனுப்பி வைச்சாங்க. டியூஷன் விஷயமா வந்தேன்” எனப் பதிலளித்தேன். “அப்படியா உள்ளே வாங்க. அம்மகிட்டே சொல்றேன். அவங்க வருவாங்க” என்று கூறியவள் என்னைச் சோப்பாவில் உட்கார வைத்துவிட்ட் மாடிக்சு சென்றாள். அப்பொழுததான் அவள் அந்த வீட்டு வேலைக்காரி என நான் அறிந்து கொண்டேன்.

அமர்ந்த இடத்தில் இருந்தபடியே வீட்டை நோட்டமிட்டேன். வசதியான குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு வரவேற்பறையில் சுற்றி இருந்த விலைமதிப்புள்ள பொருள்கள் பறைசாற்றின. மூக்கின் மேல் விரல் வைக்கா குறையாக அவற்றையெல்லாம் ஏக்கத்துடன் பார்த்தேன். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது. அதன் பின் காலடியோசை… வீட்டினுள் நுழைந்தவர். என்னைப் பார்த்ததும் “அடடே நீங்களா ?அதற்குள் எனப் புன்னகைத்தபடி கேட்டார். “ஆமாங்க வேற இடத்துக்குப் போகணும் அதான் வந்தேன்” எனத் தட்டுத்தடுமாறிக் கூறினேன்.

“ஆமாம் ஆமாம்… அப்பா காலையில் போன் போட்டார் நீங்க வருவீங்கன்னு சொன்னார். இந்தாங்க ‘ஏர் டிக்கெட்’ என்று கூறியபடி ஒரு ‘கவரை’ என்னிடம் நீட்டினார். நான் விளங்காதவளாக “வந்து…வந்து…” எனப் பேந்தப் பேந்த விழித்தேன். அப்போது, “டேய் சத்தியா… டியூஷன் சொல்லிக் கொடுக்க வந்திருக்கற பொண்ணுகிட்டே என்னடா வம்பு’ என்றபடி மாடியிலிருந்து ஒரு வயதான அம்மா வந்திறங்கினார். அவருடன் அந்த வேலைக்காரியும் வந்தார். “அப்படியா நீங்க மிஸ்டர் தாமோதரனின் மகள் இல்லையா?” எனச் சத்தியா என்னைக் கேட்டார். இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையை மாறி மாறி ஆட்டினேன். அவர் ‘ஆஹாஹா…” எனப் பெரிதாகச் சிரித்தார். நான் அசடுவழிய நின்றேன். “டிராவல் ஏஜன்ஸியாக இருக்கும் சத்தியா தன் நண்பர் தாமோதரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அமெரிக்கா செல்லும் இரு டிக்கெட்களை ‘ரிசர்வ்’ செய்திருந்தார். அவர் தன் மகளை அனுப்பி வைப்பதாகவும் அவளிடம் டிக்கெட்டைக் கொடுத்து அனுப்பும்படியும் கூறியிருந்தார். அது தான் இந்த மாறாட்டம் எனக் கூறி என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதன் பின் சத்யாவின் தம்பி முரளிக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக நான் அமர்த்தப்பட்டேன். இதனால் வாரத்திற்கு இரு முறை நான் அங்கு செல்வேன்.

என் வருகைக்காக காத்திருப்பவர் போல் சத்தியா வரவேற்பறையில் காத்திருந்தார் என்னைப் பார்த்த பிறகே அவர் தன் அறைக்குச் செல்வார். வீட்டிற்குப் போகும் போதும் அப்படித்தான்.ஏதோ படிப்பது போல் பாச்சாங்கு செய்து நான் போவதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார். ஆரம்பத்தில் இதை நான் ஒரு பெரிய விஷயமாகவே நினைக்கவில்லை. ஆனால் படிப்பில் மந்தமாக இருந்த தன் தம்பி முன்னேற்றம் . கண்டிருப்பதாகக் கூறியபடி கைக்கடிகாரத்தை அன்பளிப்பாக அவர் தந்த அந்தச் சம்பவம்தான் என்னைத் திக்குமுக்காடச் செய்தது.

அதன்பின் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது .”உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணக் கூடாது” என்பதற்காக நான் அவர் பார்வையிலிருந்து விலகியே இருந்தேன். ஆனால் அவரோ தைரியமாக என்னிடம் தனிமையில் பேசவும் துணிந்தார். அது மட்டுமா? சினிமா வசனங்களையும் அள்ளி பொழிந்தார். பணக்கார வாலிபர்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுது போக்கு என நான் கூறியபோது என்னை மணப்பதாகக் கூறிக் கைமீது சத்தியம் செய்தார்.

அவர் கொடுத்த சத்தியமும் கொடுத்த வாக்குறுதியும் அவர்பால் எனக்கிருந்த ஈடுபாட்டை அதிகரித்தது. தெளிந்த நீரோடையாக இருந்த என் மனத்தில் சஞ்சலமும் சலனமும் ஏற்பட்டது. என் வயதும் பருவமும் அதற்கு ஏற்றாற்போல் ஒத்து ஊதின. எங்கள் காதல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது, மலர்ந்தது. மணம் பரப்பியது. தந்தையை இழந்த சத்தியா வீட்டிற்கு மூன்றாவது பிள்ளை.மூத்த அக்காள்மார்கள் இருவருக்கும் மணமாகி விட்டது.அவர்கள் பெரிய இடத்தில் வாழ்க்கைப்பட்டிருப்பதாக அவர் கூறினார். தங்கை புவனா புகுமுக வகுப்பில் படிக்கிறாள். தம்பி முரளி ஆறாம் வகுப்பு மாணவன்.

சத்தியா தன் குடும்பப் பெருமைகளைக் கூறும் போதெல்லாம் நம் காதலுக்கு அவர் குடும்பத்தினர் தடை விதிப்பார்களே என நான் அஞ்சும் போதெல்லாம், “கல்யாணம் பண்ணிக்கப் போறவன் நான், என் விருப்பத்திற்கு யாரும் தடை சொல்லமாட்டார்கள்” எனக் கூறி என் வாயை அடைத்தார்.

ஒரு நாள் நாள் டியூஷனுக்காக அவர் இல்லம் சென்றபோது, வீட்டில் யாரும் முகம் கொடுத்துப் பேசவில்லை. என்னை ஏளனமாக எல்லோரும் பார்த்தனர். சத்தியா மட்டும் எப்போதும் போல் என்னிடம் நடந்து கொண்டார். அவர் பேச்சிலிருந்து நம் காதல் விஷயம் அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிந்துவிட்டது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. அதற்கு மேலும் அங்கிருக்க என் மனம் இடந்தரவில்லை.ஏதோ ஒரு சாக்குச் சொல்லி அங்கிருந்து வெளியேறினேன்.

அதன் பிறகு நான் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. என் அறையில் எப்போதும் முடங்கிக் கிடந்தேன். சத்தியா மட்டும் என்னை காணாது என் இல்லம் தேடி வந்தார். அவரிடம் நம் காதலுக்கு வழி என்ன என்று நான் வினவியபோது. “நீ எதுக்கும் கவலைப்படாதே ராதா. உன் மேல நான் வைச்ச காதல் புனிதமானது, தெய்வீகமானது”. என ஏதேதோ சினிமா வசனத்தை அளந்ததார்.

அப்போது அவர் பேசியது எனக்குச் சினிமாவைப் பார்ப்பது போல் இருந்தது. ஆனால் சத்தியாவோ தான் கொண்ட காதலில் மிக உறுதியாக இருந்தார் என்பது மறுமுறை என்னைக் காண வந்தபோது எனக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கியது. சத்தியாவின் வீட்டைச் சேர்ந்தவர்கள் அவருடைய பிடிவாதத்தினால் ஒரு நிபந்தனையின் பேரில் இந்தக் காதலுக்கு எங்கள் திருமணத்திற்குப் பச்சைக்கொடி காட்டினர்.

தான் வென்று விட்ட பூரிப்பில் காதல் கைகூடிய மகிழ்ச்சியில் சத்தியா என்னைத் தேடி வந்தார். “ராதா அம்மா நம் திருமணத்திற்கு சம்மதித்தை விட என் அக்காள்மார்கள் சம்மதித்ததுதான் பெரிய காரியம். எப்படியோ நம் காதல் கானல் நீராப் போகாம கல்யாணத்தில முடிஞ்சதே அதுவே எனக்குப் போதும்” என ஏதேதோ கூறினார். எனக்கு ஆகாயத்தில் பறப்பதைப் போன்றதோர் உணர்வு. நான் ஆனந்தத் தேரில் சிறகடித்து பறந்தேன்.

பெண் பார்க்கும் படலம் சம்பிரதாயத்தின் பேரில் நடந்தது. என் சார்பில் ஜானகியம்மாள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார். எந்தவிதத் தடையுமின்றி எல்லாமே சுமுகமாகச் சென்றது. பத்திரிகை அடிக்கவும் கொடுத்துவிட்டார்கள். மணநாளை எண்ணி நான் ஆவலோடு எதிர்பாரத்த நாள்கள் போய், சத்தியாவோடு குடும்பம் நடத்தும் அளவுக்கு என் கற்பனைகளை நான் வளர விட்டிருந்த சமயத்தில் தான் அப்படி ஒரு கேள்வி கேட்டு என் கற்பனைக் கனவுகளைத் தரைமட்டமாக்கினார் ஜானகியம்மாள்.

“ஏனம்மா ராதா கல்யாணம் நடக்க இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு. இன்னும் நீ சாந்தியை உடல் ஊனமுற்ற இல்லத்துக்கு அனுப்பல…” என அவர் கேட்டபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் விழிப்பதைக் கண்ட அவர் “என்னம்மா சத்தியா ஒன்னும் சொல்லலையா? சாந்தி உன் கூடப் பிறந்தவனு சொன்னா பெண் வீட்டைப் பத்தி அவங்க வீட்டில உள்ளவங்க கேவலமா பேசுவாங்களாம்.அவங்க வீடுடனா சொந்தக்காரங்களைச் சொல்றேனம்மா. நீ சாந்தியை ஊனமுற்றவங்க இல்லத்துக்கு அனுப்புறதா சொல்லித்தானே இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாங்க…..” என ஜானகியம்மாள் சொன்ன ஒவ்வெரு வார்த்தையும் எனக்கு தேளாகக் கொட்டியது.

அதற்கு மேல் அங்கிருக்க விருப்பம் இல்லாம் உண்மையை அறியச் சத்தியாவை பார்க்கச் சென்றேன். “ப்பூ! இதுக்குத்தான் இவ்வளவு தூரம் வந்தியா ராதா? இது சாதாரண விஷயம். நாம என்ன உன் தங்கையைச் சாவடிக்கவா சொல்றோம். ஸ்பெஸ்டிக் சென்டருக்கு அனுப்பத்தானே சொல்றோம் .மாதம் மாதம் பணம் கட்டுவோம்.அவளை அவங்க நல்லா பார்த்துக்குவாங்க. நீ எப்பநினைச்சாலும் போய்ப் பார்த்துட்டு வரலாம். எங்க ‘சுசைட்டி’ கொஞ்சம் கெளரவமா வாழ்ந்த ‘சுசைட்டி’ இப்படினு தெரிஞ்சா கேவலமா பேசுவாங்க…. எனச் சத்தியா சர்வ சாதாரணமாகக் கூறினார். எனக்குப் பற்றி கொண்டு வந்தது.

“நம்ம கல்யாணத்துக்கு ஒரு நிபந்தனையின் பேரில் உங்க குடும்பத்தினர் சம்மதிச்சதா சொன்னது இந்த நிபந்தனைதானா?” என ஆவேசத்துடன் கத்தினேன். “ராதா டேக் இட் ஈசி, எல்லாம் உன் நன்மைக்குதான். நாளைக்கு யாராவது உன் பிறப்பைப் பத்திக் கேவலமா பேசினா என்னால தாங்கிக்க முடியுமா? நம்ம கல்யாணத்துக்கு என் வீட்டுல இருக்கிறவங்க சம்மதிக்காட்டி இந்தச் சொத்து சுகத்தை துறக்க நான் தயாராக இருந்தேன். நீ எனக்காக உன் தங்கச்சியை விட்டுக் கொடுக்கக் கூடாதா?” எனக் கெஞ்சினார். ‘இல்லை சத்தியமா நீங்க வேணாம்னு சொல்லி ஒதுக்க நினைச்சது உயிரில்லாத உணர்ச்சி இல்லாத பொருள். ஆனா என் சாந்திக்கு உயிர் இருக்கு.உணர்வு இருக்கு. அவ என் தங்கக்சி…….” இதைக் கூறும்போதே என்னையறியாமல் கண்ணீர் பெருகியது. சுற்றுப்புறச் சூழ்நிலையை மறந்து கதறிக் கதறி அழுதேன். என் கண்களிலிருந்து கண்ணீர் நீரூற்றாகப் பொங்கி வழிந்தது.

அதைச் சிறிதும் சட்டை செய்யாத சத்தியா, “உன்னோட முடிவால் உன் வாழ்க்கையை நீயே அழிச்சிக்காதே ராதா. நான் உன்னை விரும்புறது உண்மை…. ஆனா அதுக்காக உன் நொண்டித் தங்கச்சியையும், ‘சப்போர்ட்’ பண்ணனும்னு என்ன தலையெழுத்தா? அதுக்கு வேற ஆளைப்பாரு” என வாய்க்கூசாமல் கூறினார். அத்துடன் ‘நீ என் வழிக்கு இருந்தா பெரியவங்க நிச்சயித்த தேதியில நம்ம கல்யாணம் நடக்கும். இல்லைன்னா. ‘என் கல்யாணம்’ நிச்சயம் நடக்கும். ஆனா அது உன்னோட இல்லை. மணமகளா வேற ஒருத்தி இருப்பா” என்றபடி என் தலையில் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டார். அவர் ஆண் நெஞ்சில் ஈரமில்லாமல் சொல்லி விட்டார். ஆனால் நான்…?

இருப்பினும் ஏதோ ஒரு வேகம் ஆட்கொள்ள, “என்னையும் என் தங்கயையும் வாழ வைக்கும் ஒரு நல்ல இதயம் இந்த உலகத்தில் இல்லாமலா போய்விடும்” என் வீராப்புடன் கூறினேன். அதைக் கேட்டு அவர் விழுந்து விழுந்து சிரித்தார். அந்தச் சிரிப்புக்கான அர்த்தம் எனக்கு அப்போது புரியவில்லை. காலப்போக்கில் எவ்வளவு பெரிய உண்மை இருந்ததை நான் உணர்ந்தேன்.

“பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா தங்கச்சி….” என என்னைப் பெண் பார்க்க வந்தவர்கள் என்னைத் தட்டிக் கழித்த விதம்….அப்பப்பா! ஜானகியம்மா மூலம் சத்தியா திருமணம் செய்து கொண்டதைக் கேள்விப்பட்டேன். ‘சட்டை மாற்றுவதைப் போல அவர் மனச்சாட்சியில்லாமல் மனத்தை மாற்றிக் கொண்டார்.” அக்கா… அக்கா…….” எனத் தூக்கத்தில் சாந்தி விம்மிய குரல் கேட்டு என் பழைய நினைவிலிருந்து விடுபட்டேன். தூக்கத்தில் கூட சாந்தி என் கையை இறுகப் பற்றிக் கொண்டிருந்தாள். அந்தப் பிடிப்பு, “அக்கா என்னைக் கைவிட்டுவிடாதே” என வாஞ்சையுடன் கேட்டதுபோல இருந்தது. “இல்லைம்மா என் உயிரே போனாலும் நான் உன்னைக் கைவிடமாட்டேன். அதேசமயம் சத்தியா கிட்ட போட்ட சவாலுலேயும் நான் தோற்க மாட்டேன். நம்ம நிலைமையைப் புரிஞ்சிட்டு நமக்குப் பாதுகாப்பு அளிக்ககூடிய ஒரு நல்ல ஆன்மாவை நான் இன்னும் தேடிக் கொண்டிருக்கேனம்மா” என அவள் காதருகே கிசுகிசுத்தேன். என்னை ஆசீர்வதிப்பதுபோலச் சிரித்தது அந்தக் ‘கள்ளமில்லாக் குழந்தை’ அந்தச் சிரிப்பில் நான் மெய்ச் சிலிர்த்தேன்.

– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *