ஒரு சின்ன தவறு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 9,961 
 
 

சற்றே பெரிய சிறுகதை

சின்ன தவறு-தான். செய்தது, திரு–வாளர் நீலகண்டன் சுப்ரமணியன். ஆனால், அதற்கு அவன் கொடுத்த விலை மிகப் பெரியது. ஆறு டிஜிட் டாலர் சம்பளம் கொடுத்தும், அவனுடைய வக்கீ-லால் ஜெயிக்க முடியவில்லை.

பத்து மாதங்களுக்கு முன்னால்…

கலிபோர்னியாவில், பெரும் பணக்கார ஹாலிவுட் நட்சத்-திரங்கள் வசிக்கும் ‘பெல் ஏர்’ என்கிற இடத்தில் இருக்கிறது அந்த மாளிகை. ஒரு நாள் மாலை ஐந்து மணி சுமாருக்கு, நந்தினி & அதாவது, திருமதி நீலகண்டன் சுப்ர-மணியன் &இரண்டரை மில்லியன் டாலர்கள் பெறுமான தனது அந்த அரண்மனை மாதிரி-யான வீட்டில் தனியாக உட்கார்ந்திருந்தாள்.

வழக்கம்போல் வாரம் இரு முறை வந்து, வீட்டைத் துப்புரவு செய்யும் மெக்ஸி-கன் மெய்ட் லிஸ்ஸி வந்துவிட்டுப் போன சிறிது நேரத்தில், அவளுடைய மச்சினன் குமார் வந்தான். அவன் தன் புது மனைவி த்ரிஷாவுடன் தனிக்–குடித்தனம் போய் ஆறு மாதம்தான் ஆகிறது. அதுவரை இதே வீட்டில் ஒன்றாக இருந்தவன்-தான்.

‘‘ஹாய் அண்ணி… ஏன் இருட்டில் உட்கார்ந்திருக்-கீங்க?’’ என்று கேட்டுவிட்டு, விளக்கு ஸ்விட்சைப் போட்ட-வன், பளீரென்ற வெளிச்-சத்தில், அவளது கண்ணுக்குக் கீழே கரு ரத்தம் கட்டியிருந்-ததைக் கவனித்தான். ஆனால், எதுவும் கேட்க-வில்லை.

நந்தினி எழுந்து போய், அவனுக்கு வந்திருந்த கடி-தத்தை எடுத்துக் கொடுத்-தாள்.

‘‘ஸாரி அண்ணி! வீடு மாறின பிறகு தபால் ஆபீஸில் என்னுடைய புது அட்ரஸ் கொடுத்-திருக்கேன். ஆனா, டி.எம்.வி.க்கு (டிபார்ட்மென்ட் ஆஃப் மோட்டார் வெஹிக்-கிள்) சொல்ல மறந்துட்-டேன். அவங்ககிட்டேர்ந்து-தான் வந்திருக்கு!’’ என்று சொல்லிக்-கொண்டே அதைப் பிரித்தான்.

‘‘வாவ்… டெக்னாலஜி எவ்வளவு முன்னேறி-யிருக்கு?’’ என்றபடி, தன் கையில் இருந்த புகைப்-படத்தைக் காட்டினான். அதில், டிரைவர் சீட்டில் குமார் உட்-கார்ந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது.

‘‘எதுக்கு டி.எம்.வி–&யி-லிருந்து உன் போட்டோ அனுப்பியிருக்காங்க?’’ & நந்தினி சந்தேகமாகக் கேட்டாள்.

‘‘போன வாரம் ஆபீஸ் விட்டு வரும்போது லேட் ஆயிடுச்சு. ரொம்பவே டயர்டா இருந்ததா… பக்கத்திலே வேற எந்தக் காரும் இல்லை; போலீ-ஸ§ம் இல்லை. ஸ்டாப் சைன்ல நிக்காமலே வந்துட்டேன். முன்னெல் லாம், அப்படிச் செய்யவே இல்லைன்னு கோர்ட் டுக்குப் போய் வாதாட-லாம். இப்ப அது முடியாது. கண்ணுக்குத் தெரியாம கேமராவை ஒளிச்சுவெச்சு க்ளீனா போட்டோ பிடிச்சு, ‘இதோ பார். நீதான்’னு காட்டறாங்க. அறுபது டாலர் தண்டம்!’’ என்றவன், ‘‘அண்ணா இன்னும் ஆபீஸ்லேர்ந்து வரலையா அண்ணி?’’ என்றான்.

‘‘வர்ற நேரம்தான். இருந்து சாப்பிட்-டுட்டுப் போயேன்!’’

‘‘இல்லை. த்ரிஷா காத்திருப்பா. நான் கிளம்ப-றேன்’’ என்றவன், அவள் எதிரே வந்து நின்றான். அவள் முகத்தை ஒரு நொடி உற்றுப் பார்த்துவிட்டு, ‘‘அண்ணி, போன வாரம் கையிலே அடி. அதுக்கு முன்னால வாய்ப் பக்கம் கிழிஞ்சு ரத்தம் கொட்ட, எமெர்-ஜன்ஸிக்குப் போனீங்க. இப்படிப்பட்ட லைஃப் தேவையா?’’ என்ற-வன், தன் கோட் பாக்கெட்டி-லிருந்து ஒரு கார்டை எடுத்தான். ‘‘இந்தாங்க… இது என் ஃப்ரெண்ட் வில்லியம்ஸோட விசிட்டிங் கார்ட். வெரி குட் லாயர்! கூப்-பிட்டுப் பேசுங்க. கிடைக்-கலைன்னா, என்கிட்ட ஒரு வார்த்தை சொல்-லுங்க. நான் அப்பா-யின்ட்மென்ட் வாங்கித் தரேன்!’’ என்று சொல்லி, அதை அருகே இருந்த காபி டேபிள் மீது வைத்துவிட்டுப் போனான்.

திருச்சிராப்பள்ளியில், ஒரு மத்திமக் குடும்-பத்தில் பிறந்து வளர்ந்-தவள் நந்தினி. நீலகண்ட-னுக்குத் தஞ்சாவூர் அருகே நன்னி லம். அப்பா மிராசுதார். நிறைய நிலபுலம். பரம் பரைப் பணம். அசாத்திய மூளை. கம்ப்யூட்டர் விஞ்ஞானம் படித்துவிட்டு, சென்னையில் ஒரு சாதா-ரண வேலை-யில்தான் இருந்தான். நந்தினியின் அழகில் மோகித்துத் திருமணம் செய்து-கொண்ட பிறகுதான், கலிபோர்-னியா வர வாய்ப்பு வந்தது. பானை பிடித்த-வள் பாக்கிய-சாலி. அமெரிக்க நண்பன் டேவிட் பண முதலீடு செய்தான். நீலகண்ட-னின் மூளையும் அதோடு சேர்ந்தது. டாட் காம் ஒன்று ஆரம்-பிக்க, டாலர் மழை கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்ட ஆரம்பித்து-விட்டது.

பாஸடீனாவில், இரண்டு பெட்ரூம் அப்பார்ட்மென்ட்டில் இருந்தவர்கள், அடுத்த மூன்றே வருடத்தில், பணக்கார நடிக, நடிகைகள் வசிக்கும் ‘பெல் ஏர்’ பகுதிக்குக் குடி வந்தனர். நந்தினிக்கு மட்டும் லெக்ஸஸ், மெர்ஸிடிஸ் பென்ஸ் என இரண்டு கார்கள்.

முதல் இரண்டு வருடங்கள் சுமுக-மாகத்தான் போயிற்று. பணம், பலம் இரண்டும் வேகமாக அதி-கரிக்க, நீலகண்டனுக்குக் குடிப் பழக்கம் வந்தது. நிறையப் பெண்கள் ‘நீல்… நீல்…’ என்று அவனைச் சுற்றிப் படர்ந்துகொண்-டார்கள். நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்புவது வழக்கமாயிற்று. இப்-போது அவன், தன் பெர்சனல் செக்ரெட்டரி-யான இத்தாலியப் பெண் ஜூலியோடு ஊர் சுற்று கிறான் என்று கேள்வி.

நேற்றிரவு அப்படித் திரும்பியவன், நேராகப் படுக்கையில் வந்து விழுந்-தான். நன்றாகக் குடித்து விட்டு வந்திருந்தான்.

‘‘இன்னிக்கு ஆபீஸ் முடிஞ்சு நீங்க போயிருந்த பாரிலேயே உங்க வாலெட்டை வெச்சுட்டு வந்துட்டீங்-கன்னு உங்க செக்ரெட்டரி ஜூலி போன் பண்ணிச் சொன் னாள். நாளைக்கு ஆபீஸ் போறதுக்கு முன்னால ஞாபகமா எடுத்துக்-கிட்டுப் போங்க’’ என்-றாள் நந்தினி.

அவ்வளவுதான்… நீல-கண்டனுக்கு நெற்றிக்கண் திறந்துகொண்டது. ‘‘நான் ஆபீஸ் முடிஞ்சு எங்கே போறேன், யாரோட போறேன்னு வேவு பார்க்கக் கிளம்பிட்டியா? எத்தனை தடவை சொல்லியிருக்கேன்… எவ்வளவு பெரிய கம்பெனி என்னுடையது? எவ்வ-ளவு ஸ்ட்ரெஸ்? குழந்தை, குட்டின்னு எந்த பாரமும் கிடை-யாதே… அதனால நீ ஒரு வேலையும் இல்-லாம வீட்டிலே சொகுசா டி.வி. பார்த்துக்கிட்டு சும்மா உட்கார்ந்-திருக்கே. அதான், இப்படி நடந்துக்கிறே!’’ – அவன் கோபத்தில், தன் கையில் இருந்த ப்ரீஃப் கேஸைத் தூக்கி எறிய, அது சரியாக அவள் முகத்தில் வந்து விழுந்தது. அந்த வேகத்-தில் அவள் தடுமாறிக் கீழே விழுந்தாள். கண்ணுக்கு அடியில் கரு ரத்தம் கட்டிக்-கொண்டது. அவள் சுதாரித்து எழுமுன், அவன் படுக்-கையில் சரிந்தான். தூங்கி-விட்டான்.

இது இன்று நேற்று நடப்பதில்லை. வாரம் ஒரு முறை குடித்துவிட்டு வரு-வதும், அவளை அடிப்பதும் வாடிக்கை-யான விஷயம்தான். நந்தினியோ யாரிடமும் எதுவும் சொல்லமுடி-யாமல், வெளியே சிரித்து, உள்ளே அழுது-கொண்டு இருந்தாள்.

ஏழு மணி சுமாருக்கு, நீலகண்டன் வீட்டுக்கு வந்தான். நேரே மாடிக்குப் போய்க் குளித்துவிட்டு, இறங்கி வந்தவனைப் பார்த்தாள் நந்தினி. பிஸினஸ் என்றால், இப்படிக் காஷ§வ-லாக உடை அணியமாட்டான் என்பது நந்தினிக்குத் தெரியும்.

‘‘எனக்கு டின்னர் வேண்டாம் நந்தினி. ஜப்பானிலிருந்து வந்திருக்கிற ஒருத்தரோட பிஸினஸ் விஷயமா மீட்டிங் இருக்கு. போயிட்டு வர நேர-மாகும். காத்திருக்காதே!’’ என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, வெளியே நிறுத்தி-வைத்திருந்த தன்னுடைய ஸ்போர்ட்ஸ் மாடல் பீ.எம்.டபிள்யூ வைக் கிளப்பினான். ஆபீஸ§க்கு அணியும் த்ரீ பீஸ் சூட் இல்லாமல், இறுக்கமான ‘ராங்லர்’ ப்ளூ ஜீன்ஸ், மெரூன் நிறத்தில் ‘ப்ராடா’ ஷர்ட். அவனோடு ‘போலோ’ கலோனின் வாசனையும் வந்தது. நிச்சயமாக ஆபீஸ் விஷயம் இல்லை.

அவன் வெளியே கிளம்பிப் போன சில விநாடிகளிலேயே போன் மணி அடித்தது. அவள் அதை எடுத்துக் காதில்வைத்து, ‘ஹலோ’ சொல்லுமுன், ‘‘டார்லிங்… உனக்காக எத்தனை நேரம்தான் காத்திருக்கிறது? சரியா ஏழு மணிக்கு என்னை டின்னருக்குக் கூப்பிட்டுப் போறேன்னு சொன்னே! ஐ யம் வெயிட்டிங் ஃபார் யூ..!’’ என்று தேன் குரலில் ஓர் இளம் பெண்ணின் குரல். நந்தினி எதுவும் சொல்லாமல் ரிசீவரை வைத்தாள்.

நீலகண்டன் ஆபீ-ஸ§க்கு அணிந்து போன உடைகளை க்ளாசட்டில் மாட்டப் போனபோது கவனித்தாள்… ஷர்ட் காலரில் சிவப்புச் சாய முத்திரை. பேன்ட் பாக்கெட்டில், ரொம்பவே செக்ஸியான சிவப்பு நிறத்தில், பெண்ணின் அந்தரங்க உள்ளாடை! நந்தினி ஒரு முடிவுக்கு வந்தவளாக, குமார் வைத்துவிட்டுப் போன பிஸினஸ் கார்டை கையில் எடுத்து, அதில் இருந்த எண்ணைச் சுழற்றினாள்.

அன்றிரவு எட்டு மணிக்கு, லாயர் வில்லியம்ஸ் வந்தார். அவரிடம் வெகு நேரம் பேசினாள். அவர் திருப்பித் திருப்பி ஒன்றையேதான் சொன்னார்… ‘‘விவாக ரத்து பண்ணுவது சுலபம் மிஸஸ் நீலகண் டன். ஆனால், வழக்கைத் தன் பக்கம் சாதகமாக உங்கள் கணவர் ஆக்கிக்கொண் டால், உங்களுக்கு ஒரு பென்னிகூட வராது. அதை நினைவில் வைத் துக்கொள்ளுங்கள்…’’

‘‘அப்படியானால், அவர் வேறு பெண் களோடு தொடர்பு கொண்டு இருக்கிறார் என்று எப்படித்தான் கோர்ட்டில் வழக்குத் தொடர முடியும்?’’

‘‘ஆதாரம் வேண்டும். போட்டோ அல்லது தொலைபேசி-யில் அவர்கள் பேசிக்கொள்-வதை டேப் பண்ணுவது. சில மனைவிகள் இதற்-காகவே பிரைவேட் டிடெக்டிவ்வை நிய-மிப்பது உண்டு. ஆனால், ஒன்று மட்டும் சொல்லு-வேன்… உங்கள் கணவர் ரொம்பப் பவர்ஃபுல் பர்சனா-லிட்டி. அதிபுத்தி-சாலி. என்ன தப்பு செய்தாலும், அவரால் அதை மறைக்க-முடியும். அதற்கான மூளையும், பண பலமும் அவரிடம் இருக்கிறது. ஆகவே, வலுவான ஆதாரத்தைத் தயார் பண்ணவேண்டி யது உங்கள் பொறுப்பு. அப்போதுதான் நீங்கள் ஜெயிக்கமுடியும். உங்க-ளுக்கு ஆதாயமாக விவாகரத்து வாங்கலாம். இல்லையெனில், நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய ஃபீஸ்கூட தர இயலாமல் நடுத் தெருவில் நிற்கிற ஆபத்து இருக்கிறது!’’

அன்றிரவும் நீல கண்டனுக்காகக் காத் திருந்தாள் நந்தினி. இரவு ஒரு மணிக்கு வந்தவன், நேராகப் படுக்கை அறைக்-குள் நுழைந்த-போது, அவள் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். அவன் அவளை ஒரு தடவை ஏறெடுத்துப் பார்த்துவிட்டுப் பேசா-மல் படுக்க வந்தான். அவனிடமிருந்து வழக்க-மான ஸ்காட்ச் வாடை வரவில்லை என்பது தெரிந்த பிறகே, அவள் தொண்டையை லேசாகக் கனைத்துக்-கொண்டுவிட்டு, ‘‘நான் உங்களுடன் கொஞ்சம் பேசணும்’’ என்றாள்.

‘‘டயர்டா இருக்கு. நாளைக்குப் பேசலாம்’’ என்று திரும்பிப் படுத்துக்கொண்டான்.

‘‘ம்ஹ¨ம்… நாளை வரை காத்திருக்க எனக்குப் பொறுமை இல்லை. நான் சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம். இப்-போ-தைக்கு உங்கள் பெர்சனல் செக்ரெட்டரி ஜூலி… அதுக்கு முன் வேறொருத்தி… இப்படி நாளுக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்ட்னு உறவு வைத்துக் கொள்கிறீர்கள். தன்மானம் உள்ள எந்தப் பெண்ணாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. விவாகரத்து தவிர, எனக்கு வேறு வழி இல்லை. நான் ஒரு டிவோர்ஸ் லாயரோடு பேசியிருக்கிறேன்…’’

அவன் திரும்பி அவளை நேராகப் பார்த் தான். எகத்தாளமாகச் சிரித்தான். ‘‘தெரியும். ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் நீ இந்த முடிவுக்கு வருவேன்னு தெரியும். ஆனா, ஞாபகம் வெச் சுக்கோ… நான் இல்-லாட்டா உனக்கு இந்த மாதிரி வீடு, கார், வேலைக்-காரின்னு சொகுசான வாழ்க்கை கிடையாது. வேலைக்-குப் போகவும் உனக்கு அனுபவம் கிடையாது. நீ டிவோர்ஸ் கோர்ட் டுக்குப் போனா, என்கிட்டேர்ந்து உனக்கு எதுவும் கிடைக்-காது. ஒரு-வேளைச் சோத்துக்கே நீ நடுத் தெருவில் நிக்கவேண்டி வரும். உன்னாலே, உன் லாயராலே என்னை எதுவும் பண்ண -முடியாது.’’

‘‘அதை மட்டும் கனவுலகூட நினைக்-காதீங்க. இந்த வீடு, பென்ஸ் கார். அதோட மாசாமாசம் அலிமொ-னின்னு வாங்கிப்பேன்.’’

‘‘சவால்விடறியா? என்னன்னு சொல்லி வழக்குப் போடுவே? ஆதாரம் வேண்டாமா?’’

‘‘வேற பெண்களோட உங்களுக்குத் தொடர்பு இருக்குன்னு சொல்லு வேன். இதோ, என் முகத்திலே இருக்கிற காயம் ஒரு ஆதாரம். ஃபிஸிகல் அப்யூஸ். ஜட்ஜ் கண்ணை மூடிக்கிட்டு எனக்குச் சாதகமா தீர்ப்பு சொல்லிடுவார்!’’

அவன் இப்போது எழுந்து உட்கார்ந்து கொண்டான். அவன் கண்களில் கோபம் மின்னியது.

‘‘யூ பிட்ச்! ஐ யம் பவர்ஃபுல். என்னால எந்த வெற்றியையும் பணத்தைக் கொடுத்து வாங்க முடியும். உலகமே என்னை ஜீனியஸ்னு கொண்டாடுறது, உனக்குத் தெரியாதா? தெரிஞ்சுக்கோ… தப்பு செய்வேன். ஆனா, மாட்டிக்க மாட்-டேன். உன்னால ஆனதைப் பார்த்துக்கோ!’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்து-விட்டான். அவள் மட்டும் தூங்காமல் விழித்துக்கொண்டு இருந்தாள்.

இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அன்றிரவுக்குப் பிறகு, அவள் மேல் அவன் கை படவே இல்லை. அதனால் ‘ஃபிஸிகல் அப்யூஸ்’ என்று சொல்ல அவன் இடம் கொடுக்கவே இல்லை. ஜூலியோடு ஜாலியாக இருந்துவிட்டு வருகிறான் என்பது அவனிடமிருந்து வருகிற ‘ஷார்லி’ சென்ட்டிலிருந்து தெரிகிறது. ஆனால், எப்படி நிரூபிப்பது? வில்லியம்ஸ் சொன்னது மாதிரி, ஏதாவது டிடெக்டிவ் கம்பெனியைத் தேட வேண்டியது-தானா? அவளுக்குப் புரியவில்லை.

ஒரு மதியம் வந்த தபால்களை வழக்கம் போல் பார்த்துக்கொண்டு வந்தவள், டி.எம்.வி. அலுவல-கத்திலிருந்து மறுபடியும் ஒரு கடிதம் வந்திருந்ததைப் பார்த்தாள். குமார் ஏன் இப்படி அடிக்கடி தண்ட-மாகப் பணம் கட்டும்படி நடந்துகொள்கிறான் என்று மனதுக்குள் வியந்தபடியே அதைப் பிரித்தவள், திகைத்துப்போனாள். கவரின் மீது இருந்த விலாசத்தை இன்னொரு முறை பார்த்தாள். தவறுதலாக நீலகண்டனின் தபாலைப் பிரித்தது புரிந்தது. அதையே பார்த்துக்கொண்டு இருந்தவள், பல நாட்களுக்குப் பிறகு வாய்விட்டுப் பகபக-வெனச் சிரித்தாள்.

வக்கீலைக் கூப்பிட்டாள். ‘‘மிஸ்டர் வில்லி-யம்ஸ்! வலுவான ஆதாரம் கிடைத்து விட்டது. நீங்கள் வழக்குத் தொடரலாம்’’ என்றாள்.

டி.எம்.வி.யின் நோட்டீஸில் பதிவாகியிருந்த புகைப்படத்தைப் பார்த்தாள். ‘தப்பு செய்வேன்; ஆனா, மாட்டிக்க மாட்டேன்’ என்று சவடால் விட்ட நீலகண்டன், காரில் பயணம் செய்யும்-போது, சிவப்பு விளக்கில் இடது புறம் திரும்பி-யிருக்கிறான். பக்கத்தில் அமர்ந்திருந்த ஜூலி, கொஞ்சலாக அவன் மடியில் தவழ்ந்து சரிந்து, அவன் உதடுகளில் முத்தம் கொடுப்பதை, மறைந்-திருந்த கேமரா கச்சிதமாக வண்ணக் கோலத்தில் பதிவு செய்திருக்கிறது.

நீலகண்டன் தெரிந்து செய்த பெரிய தப்பு-களுக்குத் தண்டனை இல்லை. ஆனால், அவன் தெரியாமல் செய்த ஒரு சின்ன தவறினால் இழந்தது மனைவியை மட்டும் அல்ல; நஷ்ட ஈடாக பெல் ஏர் வீடு, கார்கள்… அதைத் தவிர, மாதா மாதம் செலவுக்கு அவளுக்கு நாலாயிரம் டாலர் அளிக்கவேண்டும் என பெவெர்லி ஹில்ஸ் நீதிமன்றம் நீலகண்டனுக்கு உத்தர-விட்டது.

வெளியான தேதி: 30 ஜூலை 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *