அல்சய்மர் என்னும் முதுமறதி வியாதியினால் கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கும் என் மனைவியை பார்க்கும்போது என் இதயம் உடைகிறது.
சில சமயம் வீட்டில் பாத்ரூம் எங்கே இருக்கிறது என்பதை கூட மறந்து விடுகிறாள்.
அத்தனை கஷ்டத்திலும் அவள் நல்ல நல்ல புத்தகங்களில் மனதை செலுத்துவதை பார்த்து சிறிதாக ஆறுதல் அடைகிறேன்.
அவள் படுக்கைக்கு அருகில் நாலைந்து புத்தகங்கள்.
ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்க்கிறேன்.
திவ்யா சுப்ரமண்யம் எழுதிய புகழ் பெற்ற நாவல்.
நான் கண்ணீரை அடக்கிக் கொள்கிறேன்.
அவள் தான் திவ்யா சுப்ரமண்யம்.