ஒரு கோயிலும் இரண்டு பெண்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 10,238 
 
 

பிரகாரத்தை மூன்றாவது சுற்று சுற்றிக்கொண்டிருந்த அக்காவை இமைக்காமல் பார்த்தாள் ப்ரியா. அப்படியே இருக்கிாள். இந்த இரண்டு வருடங்களில் கொஞ்சமும் மாற்மில்லை. அமைதியான முகம், சின்னதாய் குங்குமப் பொட்டு, தலையில் கொஞ்சமே கொஞ்சம் மல்லிகை, கையில் பூஜைக்கூடை, அதில் கொஞ்சமும் வெளித்தெரியாது அழகாய் அமைத்த பூ மற்றும் பூஜைப் பொருட்கள், வேகமில்லாத நிதானமான நடை, வாயில் முணுமுணுக்கி ஸ்லோகம் என்று அக்கா மாவே இல்லை. அன்று பார்த்தது போலவே இருக்கிாள்.

கடவுளே இவளை எப்படி நான் அன்றைக்கு நினைக்காது போனேன்? என் நலம் தானே பெரிதாய்த் தெரிந்திருக்கிது. எனக்கு முன்னே கல்யாண வயதில் ஒரு அக்கா இருக்கிாளே. நான் இப்படி அவசரப்பட்டு காதலனோடு போய் கல்யாணம் செய்துகொண்டால் அவளுக்கு எப்படி கல்யாணம் நடக்கும்? ஊரில் என்ன பேசுவார்கள்? எதுவும் யோசிக்கத் தோன்றவில்லையே, எத்தனை சுயநலமியாய் இருந்திருக்கிறேன். நினைக்க நினைக்கப் ப்ரியாவுக்கு அழுகை வரும் போலிருந்தது. அக்கா குருக்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க அவள் பார்வையில் படாது இன்னும் ஒதுங்கி நின்றுகொண்டாள்.

அன்யை சூழலும் பதட்டமும் எல்லாவற்றையும் மக்க வைத்தது. காதல் விஷயம் பாலா வீட்டில் தெரிந்துபோய் அவன் அப்பா அவசர அவசரமாய் ஒரு பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட, உடனடியாய் கல்யாணம் செய்துகொள்வது தவிர்க்க முடியாத விஷயமாய் போனது. எதுவும் யோசிக்க நேரமில்லை. வீட்டில் லைப்ரரிக்கு போய்ட்டு வரேம்மா என்று சொல்லிவிட்டு எண்ணை வடிகி முகத்துடன் கிளம்பிப்போய் கல்யாணம் செய்துகொண்ட பெண் அநேகமாய் இவள் ஒருத்தியாகத்தான் இருப்பாள். இதோ கோயிலில் மூன்று நண்பர்கள் சுற்றி நின்று கைதட்ட திருமணம் இனிதே முடிந்தபோது எல்லா கவலைகளும் முடிந்துபோய்விட்டதாகத்தான் தோன்றியது.

ஆனால் இல்லை. அப்பா நடுக்கூடத்தில் நின்று கத்தினார். அம்மா பேசமாட்டாது சமையலுள் போய் விசித்து விசித்து அழுதுகொண்டிருக்க அக்கா இவர்களை உள்ளே கூப்பிடுவதா வேண்டாமா என்று குழப்பமாய் அப்பா முகத்தை பயப்பார்வை பார்த்தபடி நின்றிருந்தது இன்னும் ஞாபகம் இருக்கிது.

அப்போதும் தோன்றவில்லை. அக்காவுக்கு எத்தனை பெரிய துரோகம் இழைத்துவிட்டோம் என்று புரியவில்லை. அப்பா மேல் கோபம்தான் வந்தது. அவருக்கு சமாதானமாய் கத்தத் தோன்றின. ஆத்திரத்தை அடக்கி கொஞ்சநேரம் பொறுத்திருந்து விட்டு “வாங்க போலாம்’ என்று பாலாவின் கைப்பிடித்து வெளியே இழுத்து வந்துவிட்டாள்.

“மன்னிச்சிடுங்கப்பா’ என்று ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை. அன்றைக்கு வீட்டுக்கு வந்தபின் அதுதான் கவலையாயிருந்தது. ஆனால் இப்போது யோசிக்கிபோது அக்காவிடம் மன்னிப்புக் கேட்காததுதான் பெருங்குற்மாய்ப்படுகிது.

பாலாவின் வீட்டிலும் பெரிய சண்டைதான் நடந்தது. ஆறு நாளைக்கு பாலாவின் மேனேஜர் வீட்டில்தான் தங்கினார்கள். ஆாம் நாள் முடிவில் அவர்களாய் வந்தார்கள். “வீட்டு வந்துடுங்க,’ கோபம் குறைத்துக்கொள்ளாத முகத்துடன் சொன்னார்கள். இவர்களின் சந்தோஷக் குடித்தனம் அந்த வீட்டில் துவங்கியது.

இவள் வந்த அடுத்த வாரத்தில் பாலாவுக்கு இரட்டைச் சம்பளத்துடன் பதவி உயர்வு வந்தது. கம்பெனி கல்யாணப் பரிசாய் கார் கொடுத்தது. திருச்சி கிளைக்கு மொத்த பொறுப்பாய் இவனை நியமித்தது. பாலாவின் அப்பாவும், அம்மாவும் இவளை தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடினார்கள். எங்க மருமக வந்த நேரம். ஊரெல்லாம் சொன்னார்கள். இவளும் திருச்சிக்கு மாற்ல் கேட்டு வாங்கிக்கொண்டாள். இருவரும் திருச்சியில் குடியேறினார்கள். வீட்டைப் பிரிந்து வந்த சோகம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து வாழ்க்கையின் சந்தோஷத் தருணங்களை ஒவ்வொன்றாய் தரிசிக்க ஆரம்பித்தாள். உலகமே உற்சாகமாய்ச் சுழல்வதாய்த் தோன்றியது.

மூன்று மாதங்கள் கழித்து உஷாவை யதேச்சையாய் ரயில்வே ஸ்டேஷனில் பார்த்து அவளுடன் பேசிக்கொண்டிந்தபோதுதான் ப்ரியாவுக்கு தன் திருமணம் செய்திருக்கி விளைவுகள் புரிய ஆரம்பித்தது.

“”எனக்கே சொல்ல கஷ்டமாதான் இருக்கு ப்ரியா, ஆனா மறைச்சு என்ன ஆகப்போது சொல்லு. உங்கக்காவைப் பார்க்க வரவங்க எல்லாரும் உன் விஷயம் தெரிஞ்சதும் வந்த சுவடு தெரியாம மறைஞ்சு போயிடாங்க. உங்கம்மா பாதி உருவமாயிட்டாங்க, தமயந்தி எங்களோடெல்லாம் பேசறதை பழகறதையே நிறுத்திட்டா, உங்கப்பாவும் ரொம்ப கஷ்டப்பட்டு மாப்பிள்ளை வேட்டையாடிண்டிருக்கார், ஒண்ணும் பிரயோஜனமில்லை.”

உஷா சொல்லிக்கொண்டே போனாள். அதன்பின் அவள் சொன்னது எதுவும் ப்ரியா காதில் விழவில்லை. எத்தனை சிறுபிள்ளைத்தனமாய் ஒரு காரியம் செய்துவிட்டேன் என்று நொடிந்துபோனாள்.

அன்றைக்கு இரவு அழுததுபோல ப்ரியா என்றைக்கும் அழுததில்லை. கண்முன் அக்கா வந்து நின்று இப்படி செஞ்சுட்டியே ப்ரியா, இது உனக்கே நியாயமா என்று கேட்பது போலிருந்தது. பாலா எவ்வளவோ, சமாதானம் செய்தும் ப்ரியாவுக்கு நிம்மதியாகவில்லை. உடனே ரயில் பிடித்து சென்னை போய் அக்காவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் போலிருந்தது. அவள் தோளில் சாய்ந்து அழவேண்டும் போலிருந்தது. தான் செய்த தவறுக்கு விமோசனமே கிடையாது என்று தோன்றியது.

அக்காவுக்கு கடிதம் எழுதலாம் என்றால் வீட்டு வாசலிலேயே சேர் போட்டு அமர்ந்து காலை முழுக்க தினமணி வாசித்துக்கொண்டிருக்கி அப்பாவின் கண்ணில் படாமல் எந்த லெட்டரும் வீட்டுக்குள் போய்விடமுடியாது. வீட்டில் போனும் இல்லை. அடுத்த லீவிற்கு நேரில் போய் அவளைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டது அடுத்தடுத்து தள்ளிப்போய் இதோ ஒன்ரை வருடம் போல் ஓடிப்போய்விட்டது. போனவாரம்தான் பாலாவுக்கு மறுபடி சென்னை கிளைக்கே மாற்ல் வர இங்கேயே நிரந்தரமாய் வந்தாயிற்று.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவாமல் அக்கா இந்தக் கோவிலுக்கு வருவது ஞாபகம் இருந்தது. இன்று அவளைப் பார்த்து பேசிவிடுகி முடிவுடன் தைரியமாய்க் கிளம்பி வந்தாயிற்று. ஆனால் அவளைப் பார்த்த பிகு, அவள் முன் போய் நிற்கி தைரியம் சுத்தமாய்த் தொலைந்துபோயிற்று.

சுவர் மறைவில் ஒதுங்கி நின்று அவளைப் பார்க்க, செய்துவிட்ட பிழையை நினைத்து தன்னையே நொந்துகொள்ள நேரிட்டது. கடவுளே, அக்காவிடம் பேசுகிற தைரியத்தை எனக்குக் கொடு, மௌனமாய்ப் பிராத்தித்துக் கொண்டாள்.

அக்கா பிராத்தனைகள் முடித்து உண்டியில் காசுபோட்டு விட்டு கோயிலின் முன்புமிருந்த சிமெண்ட் மேடையில் சம்மணமிட்டு உட்கார்ந்தாள். அவள் முகம் எப்போதுமில்லாத அமைதியுடன் இருப்பது போலிருந்தது. இப்போது போய் பேசலாம் என்று தோன்றியது.

அவசரமில்லாது மெதுவாய் நடந்து சிமெண்ட் மேடையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த அக்கா முன் போய் நின்றாள். அக்கா இவளைக் கவனிக்கவில்லை. தலைகுனிந்து தரையில் ஏதோ வரைந்துகொண்டிருந்தாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. இதயம் துடிப்பது அவளுக்கே தெளிவாய்க் கேட்டது. அப்படியே திரும்பி ஓடிப்போய்விடலாமா என்று கூட குழந்தைத்தனமாய் யோசித்தாள்.

நிழல் பார்த்து அக்காவாய் நிமிர்ந்தாள். அதிர்ச்சியில் முகம் அப்படியே நின்றுபோனது. அனிச்சையாய் எழுந்துகொண்டாள் ப்ரியா.

மௌனமாய்த் தலையசைத்தாள் “எப்படிக்கா இருக்கே?’

அக்கா முகத்தில் சிரிப்பு தானாய் ஒட்டிக்கொண்டது. பிரிந்துபோன, இழந்துபோனதாய் நினைத்த ஆத்மசிநேகிதியை மறுபடி சந்தித்த பெண்ணாய் துள்ளினாள். “”ம்.. சந்தோஷமா இருக்கேன். ப்ரியா, நீதானா இது, இல்லை நான் ஏதாவது கனவு காணரனோ, எப்படிம்மா இருக்கே?””

“”ம்.. இருக்கேன்க்கா.””

“”என்னடி சுரத்தே இல்லாம பேசற?.. எவ்வளவு நாளைக்கப்பும் பார்க்கிறோம். இப்படியா இஞ்சி தின்ன எதுவோ மாதிரி முகத்தை வெச்சுப்பே. உட்காரு முதல்லே.” கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தாள். “”மருதாணி டிசைன் அழகா இருக்குடி, அப்போல்லாம் மருதாணி வெச்சுக்க மாட்டேன்னு எப்படி அடம் பிடிப்பே.. கட்டாயப்படுத்தி வெச்சுவிடுவேன். அதுக்கப்பும் எங்கேயாவது அதை அழிச்சிண்டு அரைகுறையா சிவந்த கையோட வந்து நிப்பே, ஒரு தடவை கூட உன் கை முழுசா சிவந்ததே இல்லை. எல்லாத்துலேயும் உனக்கு அவசரம்தான் ப்ரியா.”” அரண்ட நெஞ்சம், அக்கா என்ன அர்த்தத்தில் சொல்கிறாள் என்று சிந்தித்தது.

“”என்னடி பேசவே மாட்டேன்கிற? சொல்லு, எப்படி இருக்கார் உன் அவர்? ரெண்டு வருஷத்துக்கு பக்கமா ஆகப் போதே, எதுனா விசேஷம் உண்டா?” இவளால் எப்படி இத்தனைக் கலகலப்பாய்ப் பேச முடிகிறது.

வெளிப்படையாய் இப்படிப் பேசிவிட்டு உள்ளுக்குள் அழுதுகொண்டிருப்பாளோ? சபிப்பாளோ, உள்ளே குதர்க்கமாய் யோசனை ஓடியது.

“”அதெல்லாம் ஒண்ணுமில்லை அக்கா.”

“”அப்பும் என்னடி விஷயம், உன் முகத்தில சந்தோஷத்தையே காணோமே, எங்கிட்டே சொல்லும்மா, வீட்டிலே எதுனா பிரச்சினையா?”

“”இல்லைக்கா, நான் எப்பவும்போலதான் இருக்கேன், நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காதே.”” சிரிக்க முயன்றாள்.

“”அப்ப சரி”” என்று சொல்லிவிட்டு திரும்பி நவக்கிரகங்களைச் சுற்றிக்கொண்டிருந்த பெண்களை ஒரு பார்வை பார்த்தாள். பின் மீண்டும் இவளிடம் திரும்பி, “”இல்லை ப்ரியா, அன்னைக்கு நான் உன்னை வீட்டுக்குள்ளே கூப்பிடலை, உனக்காக அப்பாகிட்டே பேசலைன்னு உனக்கு கோபம், அதானே” என்றாள். கண்ணோரங்களில் நீர் துளிர்த்திருந்தது.

இன்னா செய்தாரை ஒறுத்தல் எதிராளிக்கு எத்தனை கொடுமை செய்யும் என்று இப்போதுதான் புரிந்தது. ப்ரியா அக்காவையே பார்த்தாள். இவள் முன் நானெல்லாம் எந்த மூலைக்கு? இத்தனை உயர்வான பெண்ணுக்கு இப்படி ஒரு துரோகம் இழைக்க என்னால் எப்படி முடிந்தது?

“”அக்கா நீயா ஏதாச்சும் நினைச்சுக்காதேன்னு இப்போதானே சொன்னேன். அதெல்லாம் ஒண்ணுமே இல்லை அக்கா. ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததாலே உனக்கு அப்படி தோணுது, அவ்வளவுதான்.”

இப்போதும் அவளிடம் மன்னிப்பு கேட்கி தைரியம் வரவில்லை.

“”இல்லை ப்ரியா, உன் கோபம் நியாயம்தான்.ஆனா அந்த நிலைமையிலே என்னால என்ன பண்ணமுடியும் சொல்லு, அப்பா முகத்தைப் பார்க்கவே பயமா இருந்தது. நீயா வாசல் படியிலே நிக்கற. அம்மாவும் பேச நிலைமையில இல்லை. நானா முடிவெடுக்க என்னால முடியலை ப்ரியா. அதனாலதான் அப்படியே நின்னுட்டேன். ஆனா நீ போனப்பும் அப்பாகிட்ட எவ்வளவு சண்டை போட்டேன். உன்னை திரும்பவும் வீட்டிலே சேர்த்துக்கச் சொல்லி எத்தனை கெஞ்சினேன்னு எனக்குத்தான் தெரியும். ஆனா என்னால முடியலைடி ப்ரியா, அப்பாவை சமாதானப்படுத்த என்னால முடியலை.” அக்கா பேசிக்கொண்டே போனாள். ஒவ்வொரு வார்த்தையும் ப்ரியாவை கன்னத்தில் அறைந்தது.

“”அக்கா ப்ளீஸ், நிறுத்து, நீ எதுவும் தப்பு பண்ணலை, எனக்கு உன் மேலே எந்த கோபமும் இல்லை போதுமா?” கண்களிடையே ஒரு நீர்த்துளி வழிந்தோடினதை அக்கா கவனிக்கவில்லை.

ஒரு நிமிடத்திற்கு இருவரும் பேசவில்லை. ட்யூப் லைட்டுகளில் பூச்சிகள் மோதுகி சப்தம் அபஸ்வரமாய்க்கேட்டது.

“”அப்போ சொல்லு ப்ரியா, நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே? உன் முகத்திலே அந்த பழைய துள்ளல் காணோமேம்மா, உன் அக்காகிட்ட பேச மாதியா நீ பேசú? யாரோ மூணாம் மனுஷிகிட்ட வேண்டாவெறுப்பா பேச மாதிரியில்லே இருக்கு உன் நடவடிக்கை.”” அக்கா முகத்தில் நிஜமான அக்கறை தெரிந்தது.

இதற்கு மேலும் தயங்குவது அபத்தம் என்று தோன்றிற்று.

“”சொல்கிறேன் அக்கா, முதல்ல நீதான் என்னை மன்னிக்கணும்” என்றாள்.

“”புரியலை.”

“”அக்கா, வெளிப்படையா நீ இப்படி பேசினாலும் உனக்குள்ளே எத்தனை ஆழமான காயம் இருக்குன்னு எனக்குத் தெரியும்க்கா, அதுக்கு நான்தான் காரணம்னும் எனக்குத் தெரியும். அதான் உன்கிட்டே மன்னிப்பு கேட்க வந்தேன். ஆனா உன்னைப் பார்த்தப்பும், உன்கிட்டே பேசினப்பும்தான் நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு எதிர்பார்க்கிது எவ்வளவு கேவலம்னு புரிஞ்சுகிட்டேன். ஆனாலும் கேட்கிறேன். என்னை மன்னிப்பியா அக்கா?”” கடைசி வாக்கியத்தில் முழுசாய் உடைந்துபோய் அக்கா மடியில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

அக்காவுக்கு ஒன்றும் புரியவில்லை. “”ஏய் ப்ரியா, என்ன சொல்ற நீ, எனக்கு ஒண்ணும் புரியலை, நீ எதுக்காக என்கிட்டே மன்னிப்பு கேட்கணும்? அப்படி என்ன தப்பு செஞ்சுட்டே நீ?” ப்ரியாவின் தாடைதொட்டு நிமிர்த்தினாள். ப்ரியாவால் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை. கண்ணீர் மறைந்தது. எதுவும் பதில் சொல்லாது தலை குனிந்துகொண்டாள்.

மனசு இப்போது லேசாகியிருந்தது. சுய இரககம் குறைந்து போயிருக்க அக்காவிடம் இயல்பாய்ச் பேச முடிந்தது. “”எப்படிக்கா இத்தனை பெரிய சோகத்தோட உன்னால இப்படி சிரிக்க முடியுது. உன் ஒவ்வொரு சிரிப்பும் என்னைக் கொல்லுது தெரியுமா? இத்தனை நல்ல பெண்ணோட வாழ்க்கையை இப்படி பாழாக்கிட்டியே, நீ நல்லா இருப்பியான்னு எனக்கு நானே சாபம் கொடுத்துக்கúன். பொண்ணுக்கு பொண்ணேதான் எதிரின்னு சொல்தெல்லாம் உண்மைதான் போலிருக்குக்கா, அப்பா என்ன செய்வார், அம்மா என்ன சொல்வாங்கன்னு எவ்வளவோ யோசிச்சேனே. ஒரு நிமிஷம் ஒரெயொரு நிமிஷம் உன்னைப் பத்தி, உனக்கு ஆகவேண்டிய கல்யாணத்தைப் பத்தி யோசிச்சிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?”

அக்கா வழக்கம்போல் சிரித்தாள். “”நீ இன்னும் குழந்தைதான் ப்ரியா.”

“”என்னக்கா இன்னும் இப்படியே பேசற. இதுக்கு பதிலா என்னை நாலு வார்த்தை திட்டிடேன். பளார் பளார்ன்னு கன்னம் கன்னமா அறைஞ்சிடேன். ஏன் இப்படி என்ன சிரிப்பாலே கொல்ற?”

“”ப்ரியா, நான் எதுக்கம்மா உன்னை திட்டணும். தீதும் நன்றும் பிறர் தர வாரா”

– பெப்ரவரி 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *