ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2020
பார்வையிட்டோர்: 3,351 
 
 

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7

சொன்னாரே ஒழுய குப்புசாமி மனதில் மங்களம் நினைக்கிறாப் போல ‘ஒன்னும்’ ஆகாம இருக் கணுமே என்கிற பயம் இருந்து தான் வந்தது.

அடுத்த இரண்டு வருஷமும் மங்களம் தன் பள்ளீப் பாடங்களை எல்லாம் மிகவும் கஷ்டப் பட்டு படித்து வந்தாள்.அம்மா,அப்பா சொன்னது போல என்னைக்காவது திருவண்ணாமலையிலே அமர் க்களமா இருந்த அன்றும்,மங்களம் இருக்கிற கிராமத்துக்கு வர ‘பஸ்’ ஒரு நாளைக்கு லேட்டானாலோ, மங்களம் தன் அத்தை,மாமா,வீட்டிலே பத்திரமாக இருந்து வந்தாள்.அந்த மாதிரி நாட்களில் ராமசாமி யும்,விமலாவும் உடனே குப்புசாமிக்கும், மரகத்ததுக்கும் ‘டெலிபோன்’ பண்ணி ‘மங்களம் பத்திரமாக இருந்து வருகிறாள்’ என்கிற விவரத்தை சொல்லி வந்தார்கள்.

குப்புசாமியும், மரகதமும் அவர்களுக்கு தங்கள் நன்றியை ‘·போனில்’ சொல்லி வந்தார்கள்.

ராமநாதன் பத்தாவது ‘பாஸ் பண்ணினவுடன் திருவண்ணாமல்யில் இருந்த ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் ‘இண்டர்மீடியட்’ சேர்ந்து படித்து வந்தான்.ராமசாமியும்,விமலாவும் அவர்கள் இடம் இருந்து பணத்தை செலவு பண்ணிக் கொண்டு வந்தார்கள்.வீட்டு வாடகையும்,வீட்டு செலவும், ராமநாதன் படிப்பு செலவும் அவர்களை கஷ்டத்தில் ஆழ்த்தி வந்தது.

இரண்டு வருடம் ஆனதும் மங்களம் பத்தாவது முதல் “க்ளாஸிலே” “பாஸ்” பண்ணினாள். அவள் எல்லா ‘சப்ஜெக்ட்களிலும்’ 90%க்கு மேலே மார்க வாங்கி,அவள் படித்து வந்த ‘ஹை ஸ்கூலில்’ ரெண்டாவது மாணவியாக வந்தாள்.

அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த எல்லா ஆசிரியர்களும் மங்களத்தை வெகுவாக புகழந் தார்கள்.மங்களத்துக்கு ரொம்ப பெருமையாய் இருந்தது. ’நாம இவ்வளவு நன்னா படிச்சு வறோமே, நாம ஏன் திருவண்னாமலைக்குப் போய் ‘இண்டர்மீடியட்’ படிச்சு விட்டு,ஒரு ‘டிகி¡£ கோர்ஸ்’ சேர்ந்து படிக்கக் கூடாது’ என்று எண்ணம் இட்டாள் மங்களம்.
அவளுக்கு மேலே படிக்க வேண்டும் என்கிற ஆசை ரொம்ப இருந்தது.ஆனால் அம்மா அப்பா விடம் எப்படி சொலவது என்று தான் புரியவில்லை.

மங்களம் பத்தாவது ‘பாஸ்’ பண்ணீன அன்றைக்கே,மரகதம் அவளை கட்டிக் கொண்டு “மங்க ளம்,அந்த அம்பாள் அனுக்கிஹத்தாலே தான் உனக்கு ‘ஒன்னும்’ ஆகாம நீ பத்தாவது பாஸ் பண்ணி இருக்கே.நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் தினமும் உன்னே திருவண்ணாமலைக்கு படிக்க அனுப்பிட்டு, நான் என் வயத்லே நெருப்பைக் கட்டிண்டு வந்தேன்னு உனக்கு தொ¢யுமோ தொ¢யாது. அந்த அம்பாளுக்கும்,உங்க அப்பாவுக்கும் நன்னா தொ¢யும்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

மங்களம் தன் குடும்ப நிலைமையை கொஞ்சம் யோஜனைப் பண்ணினாள்.

’அப்பா ஏற்கெனவே தனக்குப் பொறந்த ஒரே புருஷப் பையன் நன்னா படிச்சு வரலையேன்னு நினைச்சு துக்கப் பட்டுக் கொண்டு வறார்.நாம திருவண்ணாமலைக்குப் போய் ஒன்பதாவது படிச்சு வறேன்னு சொன்னப்ப,அவா ரெண்டு பேரும் ‘எதுக்கு’ பயந்தான்னு எனக்கு நன்னா தொ¢ஞ்சு இருந் தும்,நான் ஒரு குருட்டு ¨தா¢யத்லே பிடிவாதம் பிடிச்சு வந்தேன்.’மேலே படிக்கணும்’என்கிற ஆசை எனக்கு ரொம்ப இருந்தது.நான் கேட்டேன்.என் அதிர்ஷ்டம்.அந்த கோவில் ‘ஸ்னேகிதி சரஸ்வதி மாமி புண்யத்லே,அம்மா தன் மனசே மாத்திண்டு என்னை படிக்க திருவண்ணாமலைக்கு அனுப்பினா. நாமும் அந்த பிள்ளையார் அனுக்கிரஹத்தாலே, பத்தாவதிலே எல்லா சப்ஜெக்ட்டிலும் 90 % மார்க் வாங்கி அந்த பள்ளிகூடத்லே ‘செகண்ட் ராங்க்’ வாங்கி இருக்கோம்.இப்ப நாம மறுபடியும் பிடிவாதம் பிடிச்சி மேலே படிக்கப் போகப் போறேன்னு கேட்டு வந்தா,ஒரு வேளை அம்மாவும் அப்பாவும் ‘நாம ரொம்ப நன்னா படிக்கிறோமே,அவ மேலே படிக்கட்டும்’ன்னு ஒத்துண்டு என்னை திருவண்ணாமலை க்கு அனுப்பி படிக்க வைப்பா. பாதி படிப்பின் நடுலே எனக்கு ஏதாவது ‘ஏடா கூடமா’ நடக்ககூடாது நடந்துட்டதுன்னா,இந்த ‘தாளாத துக்கத்தே’ அவ ரெண்டு பேராலேயும் காலம் பூராவும் தாங்கிண்டு வர முடியாதே.வேண்டாம் இந்த விஷப் பரிக்ஷ. அப்பா அம்மா சந்தோஷம் தான் ரொம்ப முக்கியம். இந்த ஜென்மத்திலே நாம இந்த பத்தாவது ‘பாஸ்’ பண்ணினது போதும்.அடுத்த ஜென்மத்திலே நாம ஒரு புருஷ பையனா பொறந்தா மேலே படிக்கலாம்’ என்று தன் மனதை கல்லாக்கிக் கொண்டு மேலே படிக்கும் ஆசையை தன் மனதுக்குள் ஆழ போட்டு விட்டு புதைத்து விட்டு, அதை அறவே மறந்து விட்டு வாழ்ந்து வந்தாள் மங்களம்.

குப்புசாமியும், மரகதமும் தன் பெண் மங்களம் பத்தாவதில் எல்லா ‘சப்ஜெக்டிலும்’ 90 % மார்க் வாங்கி,அவள் படித்து வந்த பள்ளிக் கூடத்திலே ‘ரெண்டாவது ராங்கில்’ பாஸ் பண்ணினதை நினை த்து மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

நாலாம் வகுப்பு வரை ரகுராமன் படித்து வந்த ‘எலிமெண்டரி’ பள்ளிகூடத்தில் வருடாந்திர பரி ¨க்ஷகள் இல்லாது இருந்ததால் அவன் எல்லா வகுப்பிலேயும் படித்து விட்டு,அந்த வருடம் ஏழாவது படித்து முடித்தான்.

ரகுராமன் அந்த வருஷம் எட்டாவது சேர்ந்து படித்து வந்தான்.

எட்டாவதிலே அவனுக்கு எல்லா பாடத்துக்கும் பரிஷைகள் இருந்தது. எல்லா பாடங்களிலும் அவன் ‘பாஸ்’ பண்ணினால், பள்ளிகூடம் அவன் திருவண்னாமலைக்குப் போய் ஒன்பதாவது சேர்த்துக் படிக்க முடியும்..

ரகுராமனுக்கு அவன் கணக்கு வாத்தியாரும், இங்கிலிஷ் வாத்தியாரும் நடத்தி வந்த பாடங்கள் ஒன்னும் அவன் மனதில் ஏறவில்லை.மற்ற பாடங்கள் அவனுக்கு ஓரளவு நன்றாக புரிந்து வந்தது.

பள்ளீக் கூடம் முடிந்து ரகுராமன் வீட்டுக்கு வந்து தன் அப்பாவை பார்த்து “அப்பா ‘க்ளாஸ்லே’ என் கணக்கு வாத்தியாரும்,இங்கிலிஷ் வாத்தியார் பாடங்கள் ஒன்னும் என் மனசிலே ஏறவே இல்லே. இந்த வருஷ கடைசியிலே எல்லா பாடங்களிலும் பரிஷை இருக்கும்.எல்லா பரி¨க்ஷயிலும் நான் ‘பாஸ்’ பண்ணீனாத் தான்,நான் திருவண்னாமலைக்குப் போய் ஒன்பதாவது சேர முடியும்.நான் எட் டாவது ‘பாஸ்’ பண்ணுவேன்னு எனக்குத் தோணலே” என்று சொல்லி அழுதான்.

குப்புசாமி உடனே மங்களத்தைக் கூப்பிட்டு “இதோ பார் மங்களம்.எனக்கு வெளீயே போய் வர நிறைய ஜோலி இருக்கு. அப்படி நான் போய் வந்தாத் தான் நம்ப நிலங்களிலே என்ன விளைச்சல்ன்னு பாத்துண்டு வர முடியும். நான் வெளியே போகாம இருக்க முடியாது.உங்க அம்மாவும் நிறைய படிக்கலே. நீ பத்தாவது படிச்சுட்டு ஆத்லே சும்மா இருந்துண்டு வறே, நீ அவனுக்கு அவன் கணக்கு பாடங்க ளையும்,இங்கிலிஷ் பாடங்களையும் கொஞ்சம் சொல்லிக் கொடேன்.அவன் அவைகளை நன்னா கத்துண்டு எட்டாவது ‘பாஸ்’ பண்ணட்டுமே” என்று மங்களத்தைப் பார்த்து சொன்னார்.

உடனே மங்களமும்” நான் ரகுராமனுக்கு கணக்கும் இங்கிலிஷ¤ம் சொல்லித் தறேன்ப்பா” என் று சொல்லி விட்டு தினமும் ரகுராமன் பள்ளிகூடம் முடிந்து வீட்டுக்கு வந்ததும்,அவனுக்கு அவன் கணக்கு பாடங்களையும்,இங்கிலிஷ் பாடங்களையும் சொல்லிக் கொடுத்து வந்தாள்.

ரகுராமனும் அக்கா சொல்லிக் கொடுக்கும் போது மிகவும் கவனமாக கவனித்து வந்தான்.

அன்று இரவே குப்புசாமி தன் மணைவி மரகத்துடன் தனியாக இருந்த போது “மரகதம்,நாம மங்களத்தே திருவண்ணாமலைக்குப் போய் மேலே படிக்கக் கூடாதுன்னு சொல்லி அவளை மேலே படிக்க வக்காம இருதோம்ன்னா,இன்னைக்கு மங்களம் ரகுராமனுக்கு அவன் கணக்கு பாடங்களை யும், இங்கிலிஷ் பாடங்க¨ளையும் சொல்லிக் குடுக்க முடியாம இருந்து இருக்குமே.நல்ல வேளை அந்த அம்பாள் தான் நம்ப ரெண்டு பேருடைய மனசிலேயும் பூந்து,அவளை மேலே படிக்க வைக்க புத்தி குடுத்து இருக்கா. எப்படியோ மங்களம் ரகுராமனுக்கு கணக்கு பாடங்களையும்,இங்கிலிஷ் பாடங் களை யும் சொல்லிக் குடுக்கற வேளை,ரகுராமன் அவைகளை நன்னா கத்துண்டு மெல்ல எட்டாவது படிச்சு முடிச்சா.நாம ரகுராமனை திருவண்ணாமலைக்கு அனுப்பி மேலே படிக்க வக்கலாம்.நீ என்ன சொல்றே” என்று கேட்டார்.

உடனே மரகதம் “நீங்க சொல்றது நுத்துக்கு நூறு நிஜம்.நல்ல வேளை நாம ரெண்டு பேரும் பயந்துண்டு மங்களத்தே எட்டாவது படிச்சது போதும்னு சொல்லி அவளை ஆத்லேயே வச்சுண்டு இல்லாம,அவளை மேலே படிக்க அனுப்பினது,இப்போ ரகுராமனுக்கு உபயோகமா இருக்கு.எல்லாம் அந்த அம்பாள் கடாக்ஷம் தான்” என்று சொல்லி தன் கன்னங்களில் போட்டுக் கொண்டாள்.

ரகுராமன் மிகவும் கஷ்டப் பட்டு படித்து வந்தும்,அந்த வருடாந்திர பரி¨க்ஷயிலே பெயில் ஆகி விட்டான்.

குப்புசாமியும்,மரகதமும்,மங்களமும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

அடுத்த வருடம் அந்தப் பள்ளிகூடம் திறந்தவுடன் குப்புசாமி தன் மகன் ரகுராமனை அழைத் துக் கொண்டு பள்ளிகூடதிற்குப் போய் ‘ஹெட் மாஸ்டரை’ சந்தித்து,பெயில் ஆன தன் மகனை, மறு படியும் எட்டாவது சேர்த்துக் கொள்ளக் கேட்டார்.

ஆனால் அந்த ‘ஹெட் மாஸ்டர்’ “என்னால் உங்க பையனை மறுபடியும் எட்டாவது சேத்துக் கொள்ள முடியாது.அவன் ஒரு தடவை எட்டாவது படிச்சு கணக்கிலேயும், இங்கிலிஷிலேயும் ரொம்ப கம்மி மார்க் வாங்கி பெயிலாகி இருக்கான். மத்த ‘சப்ஜெக்ட்’களிலும் ரொம்ப சுமாரான மார்க் வாங்கி “பாஸ்” பண்ணி இருக்கான்” என்று சொல்லி ரகுராமனை மறுபடியும் எட்டாவது படிக்க சேர்த்துக் கொள்ளவில்லை.

குப்புசாமிக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்த்து.அவர் கொஞ்ச நேரம் சும்மா இருந்தார்.

குப்புசாமி அவரைப் பார்த்து “சார், நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.நான் இல்லேன்னு சொல்லலே. இவன் எனக்கு ஒரே பையன் சார்.நான் ஒரு சாதாரண விவசாயி பிராமணர். மழை பெய்யற வருஷத்திலே விவசாயம் பண்ணி வந்து நானும் என் குடும்பமும் பிழைச்சி வறோம். என் பொண்ணு ரொம்ப நன்னா படிச்சு போன வருஷம் தான் திருவண்ணாமலை ‘ஹை ஸ்கூல்லே’‘டென்ந்த்’ ‘பாஸ்’ பண்ணா அவ கல்யாணம் பண்ணிண்டு வேறே ஆத்துக்குப் போற பொண்ணு, என் பிள்ளை ரகுராமன் ஒரு பத்தாவதாது படிச்சாத் தான், அவனை திருவண்ணாமலையிலே ஏதாவது ஒரு சின்ன வேலையிலே சேத்து, அவனுக்கு ஒரு கல்யாணத்தே பண்ணி வச்சி, நானும் என் ஆத்துக்காரியும் எங்க கடைசி காலத்தே கஷ்டப் படாம கழிச்சு வரமுடியும்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

குப்புசாமி சொல்வதைக் கேட்ட ‘ஹெட்மாஸ்டருக்கு’’ இவர் ஏன் இவர் வீட்டு கதை எல்லாம் என் கிட்டே சொல்லிக் கிட்டு அழறார்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்.குப்புசாமி இன்னும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.

கண்களைத் துடைத்துக் கொண்டு குப்புசாமி “நான் என் குடும்ப புராணத்தே உங்க கிட்டே சொன்னதுக்கு நீங்க என்னை மன்னிக்கணும்.நீங்க கொஞ்சம் தயை காட்டி என் பையனுக்கு மறுபடி யும் எட்டாவதிலே படிக்க கொஞ்சம் அனுமதி குடுங்க” என்று தன் கண்களில் கண்ணீர் மல்க கெஞ்சினார்.

உடனே அந்த ‘ஹெட் மாஸ்டர்’ “நான் உங்க பையனை மறுபடியும் எட்டாவதிலே சேத்துக்க முடியாது.ரகுராமன் கூட படிச்ச எல்லா மாணவர்களும் பாஸ் பண்ணி இருக்கா. ரகுராமனும்,இன்னும் ஒரு பொண்னும் தான் பெயில் ஆகி இருக்கா.தவிர ரகுராமன் எல்லா ‘க்ளாஸ்’லேயும்,கணக்கிலேயும், இங்க்கிஷ்லேயும் பெயிலாயிண்டு வந்து இருக்கான்.உங்க மேலே அனுதாபப் பட்டு,நான் ரகுராமனை மறுபடியும் படிக்க அனுமதிச்சா,பெயிலான அந்த பொண்ணையும் படிக்க அனுமதிக்கணும். எங்க பள்ளிகூடத்லே எல்லா வகுப்பிலேயும் மொத்தம் நாப்பது பேர் தான் படிச்சு வர டேபிள் ‘பென்ச்சு’ கள் போட்டு இருக்கோம்.இந்த வருஷம் ஏழாவது வகுப்பில் இருந்து எட்டாவது வகுப்பு படிக்க நாப்பது பேரும் வருவா.நான் உங்க பையன் ரகுராமனையும்,அந்த பெயிலான பொண்ணையும் படிக்க அனு மதி அளிச்சா, மொத்தம் நாப்பத்திரண்டு பேர் ஆயிடுவாளே.அவா எல்லாரும் உக்கார இடம் இருக்கா து.நாங்க ‘பெயிலான’ எந்த மாணவணையும், மாணவியையும் எட்டாவதிலே மறுபடியும் சேத்துண்ட தே கிடையாது” என்று தீர்மானமாக சொல்லி விட்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “நீங்க வேணா ஒன்னு பண்ணுங்கோ.உங்க பையன் ரகுராமனை திரு வண்னாமலையிலே பணம் கட்டிப் படிக்கற ஒரு ‘எலிமெண்டரி’ பள்ளிக் கூடத்லே சேத்து படிக்க வையுங்கோ.அங்கே அவன் எட்டாவது ‘பாஸ்’ பண்ணினா,அப்புறமா அவன் அந்தப் பள்ளிக் கூடத் லே ஒன்பதாவது பத்தாவது படிச்சு “பாஸ்’ பண்ணி வரலாமே.நீங்கோ அப்படி பண்ணலாமே. என்னா ல் இப்போ ஒன்னும் பண்ண முடியாது ரொம்ப சாரி” என்று ஒரு பெரிய ‘லெக்சரே’ கொடுத்தார்.

குப்புசாமி ரகுராமனை வருத்ததுடன் வீட்டுக்கு அழைத்து வந்து மணைவி மரகதத்திடமும், பொண்ணு மங்களத்திடமும் அந்த ‘எலிமெண்டரி’ பள்ளி கூட ‘ஹெட்மாஸ்டர்’ சொன்னதை சொன்னார்.

உடனே மரகதம்”அவர் அப்படியா ‘நிர்தாட்ஷன்யமா’ சொல்லிட்டார்.போனாப் போறது விட்டுத் தள்ளுங்கோ.நாம ரகுராமனை திருவண்னாமலையிலே பணம் கட்டிப் படிக்கற அந்த‘எலிமெண்டரி’ பள்ளிக்கூடத்லே சேத்து படிக்க வைக்கலாம்.அந்த ‘ஹெட்மாஸ்டர் சொன்னா மாதிரி ரகுராமன் எட்டா வது ‘பாஸ்’ பண்ணிட்டானா,அப்புறமா அவனை ஒன்பதாவது,பத்தாவது படிக்க வச்சி, அப்புறமா இன் னும் மேலே படிக்க வைக்காலம்” என்று சொன்னாள்.

உடனே குப்புசாமி “மரகதம்,நீ சொன்னபடியே நான் பண்ணிடறேன்.அவன் ஒரு புருஷ பைய ன்.அவன் இப்படி எட்டாவது ‘பெயிலா’கி வீணா ஆத்லே சும்மா இருந்து வரக் கூடாது” என்று சொல் லி விட்டு,அடுத்த வாரமே ரகுராமனை திருவண்னாமலைக்கு அழைத்துக் கொண்டுப் போய், அந்த ‘எலிமெண்டரி’ பள்ளி கூட’ஹெட்மாஸ்டரை’ப் பார்த்து ரகுராமனை பற்றின எல்லா விவரத்தையும் சொல்லி பணம் கட்டி எட்டாவதிலே சேர்த்தார்.

இப்போஅவர் மனம் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, ரகுராமனும் சந்தோஷப்பட்டு “நான் கஷ்டப் பட்டு படிச்சுண்டு வறேன்ப்பா” என்று சொன்னான்.

’இவ்வளவு தூரம் வந்து இருக்கோமே,நம்ம அக்கா அத்திம்பேரைப் பாத்துட்டு வரலாமே’ என்று நினைத்து குப்புசாமி,ரகுராமனையும் அழைத்துக் கொண்டு தன் அக்கா அத்திம்பேரை அவர்கள் வீட் டுக்குப் போய் பார்த்தார்.

அந்த வீட்டின் மின்பு ஒரு கூர்க்கா நின்றுக் கொண்டு இருந்தான்.உடனே குப்புசாமி “பரவாயி ல்லையே,நம்ம அக்கா,அத்திம்பேர் ரொம்ப பணக்காரா ஆயிட்டாப் போல இருக்கே.வாசல்லே ஒரு கூக்காவை காவலுக்குப் போட்டு இருக்காளே’ என்று கொஞ்சம் பொறாமையும்,கொஞ்ச அதிசியமும் பட்டுக் கொண்டே அந்த கூக்காவைப் பார்த்து “நான்,இந்த வீட்டுக்கார அம்மாவுக்கு தம்பி.நான் உள்ளே போகட்டுமா” என்று கேட்டதும் அந்த கூர்க்கா குப்புசாமியை ஏற இறங்கப் பார்த்தான்.

அவன் உடனே சிரித்துக் கொண்டு “சாப்,இங்கே இருக்கிற அம்மா ஒரு ‘சேட்’ பொம்பளே. உங்களே பாத்தா ஒரு ஐயர் மாதிரி இருக்கு.உங்க உறவுக்காரங்க யாரும் இந்த பங்களாவிலே இல்லே. இந்த பங்களா ஓனர் ஒரு நகை கடை சேட்.நீங்க வீடு தப்பா வந்து இருக்கீங்க.உங்க உறவுக்காரருங்க எங்கே இருக்கார்ன்னு,இங்கே அக்கம் பக்கத்லே வேறே யார் கிட்டேயாவது போய் விசாரிங்க.இப்போ வழியே விடுங்க.பெரிய சேட் இப்போ வெளியே போற நேரம்.அவர் கார் இப்போ வரும்” என்று சொல்லி க் கொண்டு இருக்கும் போது ஒர் பெரிய கார் கேட்டின் வாசலுக்கு வந்தது உடனே குப்புசாமியும்,ரகுராமனும் தள்ளி தூர நின்றார்கள்.

அந்த கூக்க்கா சொன்னது போல ஒரு பெரிய சேட் தொந்தியேப் போட்டுக் கொண்டு அந்த பங் களாவிலே இருந்து வெளியே வந்தார்.உடனே அந்த கூர்க்கா அந்த சேட்டுக்கு ஒரு பெரிய ‘சல்யூட் அடித்து’ விட்டு காரின் கதவைத் திறந்து பவ்யமாக நின்றுக் கொண்டு இருந்தான்.

பெரிய சேட் ஏறிக் கொண்டதும் அந்த கார் வேகமாக கிளம்பிப் போயிற்று.

கூர்க்கா சொன்னதைக் கேட்டு குப்புசாமி ஒரு நிமிஷம் பயந்துப் போனார்.அவர் கொஞ்ச நேரம் கழித்து அந்த கூக்காவைப் பார்த்து “இந்த பங்களாவிலே தானே என் அத்திம்பேர் துணிக் கடை சொந் தக்காரர் ராமசாமி இருந்து வந்தார்” என்று மறுபடியும் சொன்னதைக் கேட்ட அந்த வழியிலே போய்க் கொண்டு இருந்த ஒருவர் குப்புசாமியைப் பார்த்து “நீங்க துணிகக்டை ராமசாமிக்கு சொந்தக்காரரா” என்று கேட்டார்.

உடனே குப்புசாமி “ஆமாம் சார்.துணிக் கடை ராமசாமி என் அத்திம்பேர் சார்” என்று சொன்ன தும் அவர் உடனே “உங்களுக்கு விஷயமே தொ¢யாதா.அவர் கடையிலே வியாபாரம் குறைஞ்சி வந்து, அவரால் ‘பாங்கு’’லோன்’ திருப்பி கட்ட முடியலே.அதனால்லே ‘பாங்கு’ இந்த வீட்டை வித்துட்டாங்க. அவர் இப்போ ஒரு சின்ன வீடாப் பாத்து வாடகைக்கு இருந்து வராரு.அவர் வாடகை வீடு இந்த ஊர் கடைசியிலே எங்கோ இருக்குதுன்னு,எனக்கு ஒருத்தர் சொன்னாரு.நீங்க அங்கே போய் அவர் வீடு எங்கே இருக்குன்னு விசாரியுங்க”என்று சொல்லி விட்டுப் போனார்.

அவர் சொன்னதை கேட்டதும் குப்புசாமிக்குத் தூக்கி வாரிப் போட்டது.

’என்னடா இது.நம்ப அத்திம்பேர் துணிகடை வியாபாரம்,இப்படி நஷ்டத்லே போய்,அவர் பாவம் துணிகடையையும், இவ்வளவு பெரிய ஆத்தையும் வித்துட்டு ஊர் கோடியிலே ஒரு சின்ன வாடகை ஆத்லே இருந்துண்டு வறாராமே.நானும் மரகதமும் அவாளைப் பாத்து ரொம்ப பொறாமை பட்டோமே. அது அவாளை ரொம்ப தாக்கி இருக்குமோ.அதான் அவர் துணிக்டையை நஷ்டத்திலே போய் இருக் குமோ’ என்று வருத்தப் பட்டுக் கொண்டு,குப்புசாமி அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவரைப் பார்த்து” ரொம்ப நன்றி சார்.நான் நீங்க சொன்னா மாதிரி இந்த ஊர் கோடிக்குப் போய் விசாரிக்கறேன்” என்று சொல்லி விட்டு ரகுராமனையும் அழைத்துக் கொண்டு ஊர் கோடிக்குப் போய் அங்கு இருந்த சிலா¢டம் கேட்டு ராமசாமி ஒரு வழியாக அத்திம்பேர் இருந்து வந்த வீட்டை கண்டு பிடித்தார்.

அந்த வீடு மிகவும் சிறியதாய் இருந்தது.

’இந்த ஆத்லேயா நம்ம அத்திம்பேரும்,அக்காவும் இருந்துண்டு வறா’ என்று நினைக்கும் போது அவர் கண்களில் நீர் துளித்தது.தன் தோள் மேலே போட்டு கொண்டு இருந்த துண்டினால் துடைத்துக் கொண்டார்.

மெல்ல ¨தா¢யத்தை வரவழைத்துக் கொண்டு குப்புசாமி அந்த வீட்டின் முன்பு போய் கதவை மெல்ல தட்டினார்.

கதவைத் திறந்துக் கொண்டு விமலா மெல்ல வெளியே பார்த்த்தாள்.

அவளுக்கு தன் தம்பி குப்புசாமியையும்,அவன் பையன் ரகுராமனையும் பார்த்ததும் ஆச்சரியமா க இருந்தது.ராமசாமியும் பின்னாலே வந்துப் பார்த்தார்.

ரெண்டு பேரும் குப்புசாமியை வீட்டுக்குள்ளே வரவேற்றார்கள்.

“வா குப்புசாமி,எங்கே இவ்வளவு தூரம் வந்து இருக்கே.ஆத்துக்கு ஏதாவது வாங்க வந்து இருக்கியா.என் தங்கை மரகதம் சௌக்கியமா இருந்து வறாளா.மங்களம் பத்தாவது “பாஸ்” பண்ணினதுக்கு அப்புறமா அவளை மேலே படிக்க வக்கலையா.ரகுராமன் இந்த வருஷம் எட்டாவது ‘பாஸ்’ பண்ணி இருப்பானே” என்று கேட்டார் ராமசமி.
இருவரையும் பார்த்த குப்புசாமிக்கு அழுகையே வந்து விட்டது.

அவர்கள் இருவரும் மிக மிக சாதாரண ‘டிரஸ்’ போட்டுக் கொண்டு இருந்தார்கள்.அக்கா காதுகளிலே போட்டுக் கொண்டு இருந்த வைரத்தோடு இல்லாமல் ஒரு சாதாரண ‘ஸ்டட்’ தான் போட்டுக் கொண்டு இருந்தாள்.கழுத்திலே வெறும் தாலிச் சரடு மட்டும் தொங்கிக் கொண்டு இருந்தது.

அவர் தன் கண்களைத் துடைத்துக் கொண்டே“என்ன அத்திம்பேர்.நீங்க ரெண்டு பேரும் இந்த சின்ன ஆத்லே இருந்துண்டு வறேள்.என் அக்கா காதுகள்ளே இருந்த வைரத் தோடுகள் இப்போ இல்லேயே.கழுத்லே வெறும் தாலி சரடு மட்டும் தான் இருக்கு….” என்று சொல்லிக் கொண்டு இருக் கும் போது அவர் மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டார்.
ராமசாமி குப்புசாமியை அழைத்துக் கொண்டு அந்த ஆத்லே போட்டு இருந்த ஒரு மரச் சோ¢ல் உட்கார வைத்தார்.ராமசமியின் கண்களில் நீர் துளித்தது.

பிறகு ராமசாமி “குப்பு,என் துணிகடை வியாபாரம் நாளுக்கு நாள் ரொம்ப குறைஞ் சுண்டு வந்துண்டு இருந்தது.என் கடைக்குப் பக்கத்லே சென்னை,காஞ்சீவரம், மதுரைலே இருந்து நிறைய பணக்காரா பெரிய,பெரிய,கடை எல்லாம் போட்டுண்டு வந்தா.நானும் அவா கடை மாதிரி என் கடை யும் இருக்கணும்ன்னு நினைச்சு,என்னுடைய பாங்குக்குப் போய் பாங்கு மானேஜரைப் பாத்து ‘சார், என் துணிக்கடை வியாபாரம் ரொம்ப மந்தமாகப் போயிண்டு இருக்கு.நான் என் துணிக்கடையிலே முழுக்க ஏ.ஸி.போட்டு,மிக பிரகாசமான மின் விளக்குகள்,நிறைய முகம் பார்க்கும் கண்ணாடிகள் எல்லாம் போட்டு,நிறைய புது புது ‘·பாஷன்’ டிரஸ்களை எல்லாம் வாங்கி வச்சு,என் கடை வியாபாரத் தே அதிகப் படுத்தலாம்ன்னு நினைக்கிறேன்.நான் என் ஆத்து பத்திரத்தை கொண்டு வந்து இருக்கே ன்.அந்த பத்திரத்தின் பேர்லே எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் ‘லோன்’ தர முடியுமா’ன்னு கேட்டேன்” என்று சொல்லும் போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழித்துக் கொண்டு இருந்தது.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு “அந்த மானேஜர் என் ஆத்து பத்திரத்தை நன்னா பாத்து ட்டு, நிறைய ‘·பாரங்களிலே’ என் கை எழுத்தை வாங்கிண்டு,எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் ‘லோன்’ குடுத்தார்.நான் அந்த ‘லோன்’ பணத்தை வாங்கிண்டு வந்து,என் துணிகடையை ஒரு பதினைஞ்சு நாளைக்கு மூடிட்டு,அவா பண்ணா மாதிரி யே நானும் பண்ணேன்.கடையே புதுப்பிக்கற செலவு ரொம்ப ஓடிப் போயிடுத்து.நான் மறுபடியும் ‘பாங்கு’ க்குப் போய்,இன்னும் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் ‘லோன்’ வாங்கிண்டு வந்து,நிறைய புது புது ‘·பாஷன்’ டிரஸ்களை எல்லாம் வாங்கி வச்சு,அப்புறமா ஒரு வாத்தியாரை அழைச்சுண்டு வந்து,ஒரு நல்ல நாளாப் பாத்து என் துணிக் கடையே தொறந்தேன்” என்று சொல்லி விட்டு தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.

குப்புசாமிக்கு ‘அவர் அத்திம்பேர் ஏன் கண் கலங்கிறார்’ என்று புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டு ராமசாமி மறுபடியும் சொல்ல ஆரம்பித்தார்.”குப்பு,மூனு மாசம் என் கடையிலே நல்ல லாபம் வந்தது.நானும் விமலாவும் ரொம்ப சந்தோஷப் பட்டோம்.ஆனா மூனு மாசம் போனதும் என் கடையிலே கொஞ்ச,கொஞ்சமா நஷ்டம் வர ஆரம்பிச்சது.என்னால் ‘பாங்கு’ வட்டியே மாசா மாசம் சரியா கட்ட முடியலே.விமலா வைரத் தோடுகளையும்,தங்க செயின்க ளையும் வித்துட்டு எல்லா செலவையும் சமாளிச்சு வந்தோம்.என் கடை வியாபாரம் அதிகம் ஆகாம நஷ்டத்லே போயிண்டு இருந்தது.நான் ‘பாங்கு’ வட்டியே கட்டாததைப் பாத்து ‘பாங்கு’ மானேஜர் வேறே வழி ஒன்னும் இல்லாம,அந்த ‘ஆத்தை’ வித்துட்டு,’பாங்கு’ மானேஜர் பூரா பாக்கி வட்டியை யும்,அசலையும் எடுத்துண்டுட்டு,மீதி பணத்தே என் கிட்டே குடுத்தார்.நான் அவா குடுத்த மீதிப் பணத்தே வச்சுண்டு,என் துணிக் கடையையும்,மீதி துணிகள் எல்லாத்தையும் வித்துட்டு,அதிலே வந்த பணத்தையும் வச்சுண்டு,இந்த சின்ன ஆத்தை வாடகைக்கு எடுத்துண்டு ஆத்லே சும்மா இருந் துண்டு வறேன்”என்று சொல்லி மறுபடியும் தன் கண்களைத் துடைத்து க் கொண்டு இருந்தார்.

அத்திம்பேர் சொன்னதைக் கேட்ட குப்புசாமி உடனே “அடப் பாவமே.அப்படி ஆயிடுத்தா அத் திம்பேர். எனக்கு கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.அந்த பகவான் ஏன் உங்களே இப்படி சோதனை பண்றார்.துணிகடை வியாபாரம் நன்னா நடந்து வரக் கூடாதோ” என்று சொல்லி அவர் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
விமலா “எல்லாம் எங்க போராத காலம் குப்பு.என்ன நடக்கணுமோ அது நடந்தே தான் தீரும். அதே மாத்த யாராலும் முடியாது” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் விமலா கொஞ்சம் நார்மலாகி,குப்புசாமியைப் பார்த்து “குப்பு.எங்கே இவ்வளவு தூரம் வந்து இருக்கே.அத்திம்பேர் கேட்டா மாதிரி மங்களத்தே மேலே படிக்க வக்கப் போற து இல்லையா.ரகுராமன் இந்த வருஷம் எட்டாவது “பாஸ்’ பண்ணி இருக்கணுமே.அவனை மேலே படிக்க திருவண்ணாமலைக்கு அனுப்பப் போறயா” என்று மூச்சு விடாமல் விசாரித்தாள்.

அக்காவும் அத்திம்பேரும் ரகுராமனைப் பற்றிக் கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் துளித்தது.

தன் தோள் மேலே போட்டுக் கொண்டு இருந்த துண்டினால் துடைத்துக் கொண்டார்.

குப்புசாமி தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.

விலலாவும் ராமசாமியும் ‘நாம கேட்டதுக்கு ஏன் குப்புசாமி தன் கண்களைத் துடைச்சுண்டு இருக்கான்’ என்று புரியாமல் குப்புசாமியை ரகுராமனையும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் குப்புசாமி தன்னை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு “ரகுராமன் ஒழுங்கா,நன்னா படிச்சு வந்து இருந்தான்னா எனக்கும்,மரகதத்துக்கும் இந்த கஷ்டம் எல்லாம் இரு ந்து இருக்காதே.அவன் இந்த வருஷம் எட்டாவது ‘பெயிலாகி’ இருக்கான்.நான் அவன படிச்சு வந்த ‘எலிமெண்டரி ‘ஹெட்மாஸ்டரைப் பார்த்து ‘இவனை மறுபடியும் எட்டாவது சேத்து படிக்க வையுங்கோ’ ன்னு ரொம்ப கெஞ்சிக் கேட்டுண்டேன்.ஆனா அவர் ‘நிர்தாட்ஷன்யமா’ முடியாதுன்னு சொல்லிட்டார் அதனால்லே நான் திருவண்ணாமலைக்கு வந்து பணம் கட்டி ஒரு ‘எலிமெண்டரி ஸ்கூல்லே’ சேத்து இருக்கேன்.இந்தப் பள்ளிக் கூடதிலே படிச்சாவது ரகுராமன் எட்டாவது “பாஸ்” பண்ணனும்.அப்படி அவன் பண்ணினான்னா,அப்புறமா அவனை மேலே படிக்க வைக்கலாம்ன்னு,நானும் மரகதமும் முடி வு பண்ணி இருக்கோம்” என்று சொல்லி விட்டு,மறுபடியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

விமலாவும் ராமசாமியும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் விமலா “கவலையை விடுடா குப்பு.இந்த ‘எலிமெண்டரி ஸ்கூல்லே’ பாடங்களே ரொம்ப நன்னா சொல்லிக் குடுப்பா.ரகுராமன் நிச்சியமா இந்த வருஷம் எட்டாவது ‘பாஸ்’ பண்ணிடுவான்.அப்புறமா நீ அவனை மங்களம் படிச்ச ‘ஹை ஸ்கூல்லே’ சேத்து பத்தாவது வரை படி க்க வச்சு வரலாம்”என்று தம்பி குப்புசாமிக்கு ஆறுதல் சொல்லி விட்டு “ஆமாம் குப்பு,நீ மங்களத்தே மேலே படிக்க வக்கப் போறது இல்லையா” என்று மறுபடியும் கேட்டாள்.

உடனே குப்புசாமி “இல்லேக்கா,நானும் மரகதமும் அவ பத்தாவது “பாஸ்” பண்ணினது போ தும்ன்னு நினைச்சு அவளை வெறுமனே ஆத்லே வச்சுண்டு வரலாம்ன்னு தீர்மானம் பண்ணி இருக் கோம்” என்று சொன்னார்.

பிறகு விமலா கொடுத்த ‘டி·பன்’ கா·பியைக் குப்புசாமியும், ரகுராமனும் சாப்பிட்டார்கள்.ஒரு மணி நேரம் குப்புசாமி அக்கா அத்திம்பேர் வீட்டில் இருந்து விட்டு,அவர்களிடம் சொல்லிக் கொண்டு ரகுராமனை அழைத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார்.

ராமசாமியும்,விமலாவும் ரகுராமனைப் பார்த்து “ரகுராமா,இங்கே எல்லா பாடங்களும் ரொம்ப நன்னா சொல்லி குடுப்பா.நீ ¨தா¢யமா படிச்சு வா.நீ நிச்சியமா ‘பாஸ்’ பண்ணிடுவே” என்று ‘கோர ஸாக’ சொன்னார்கள்.உடனே ரகுராமனும் அவர்களைப் பார்த்து “நான் நன்னா படிச்சு வறேன்,மாமா, அத்தே” என்று சொன்னான்.

குப்புசாமி அக்கா அத்திம்பேரை ‘தாங்க்’ பண்ணி விட்டு ரகுராமனை அழைத்துக் கொண்டு, ’பஸ் ஸ்டாண்டு’க்கு வந்து “பஸ் ‘பிடித்து தன் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்.
வீட்டிற்கு வந்து குப்புசாமி ரகுராமனை அந்த ‘எலிமெண்டரி ஸ்கூல்’லே எட்டாவது சேர்த்தது பற்றியும்,அக்கா விமலா,அத்திம்பேர் ராமசாமி வீட்டிற்கு போனதையும்,சொல்லிக் கொண்டு இருந்த போது அவரை அறியமல் அவர் கண்கள் குளம் ஆயிற்று.

தன் கணவன் அழுவதைப் பார்த்த மரகதம் “இப்ப நம்ம ரகுராமனை திருவண்ணா மலையிலே இருக்கிற ‘எலிமெண்டரி ஸ்கூல்’லே எட்டாவது சேர்த்துட்டு வந்து இருக்கேள்.அக்கா,அத்திம்பேர் ஆத்துக்குப் போய் வந்து இருக்கேள்.எதுக்காக நீங்க இப்போ அழறேள்.ஏன் என்ன ஆச்சு.அவா உங்களே ஏதாவது அவமானப் படும் படி பேசிட்டாளா.நீங்க மனசு கஷ்டப் படும் படிஎன்னையும் மங்களை த்தை பத்தி ஏதாவது தப்பா சொன்னாளா” என்று கேள்விகள் மேலே கேள்விகள் கேட்டாள்.

மங்களமும் ‘அப்பா,ஏன் இப்ப அழறார்’ என்று ஒன்றும் புரியாதவாளாய் வருத்தப் பட்டுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *