ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 4,198 
 

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

ராமநாதனுக்கு பதினோரு வயது ஆனதும் ராமசாமியும் விமலாவும் அவனுக்கு ‘உபநயனம் போட முடிவு பண்ணினார்கள்.வாத்தியாரைக் கூப்பிட்டு ‘உபநயனத்துக்கு’ வேண்டிய எல்லா வைதீக சாமான்களையும் வாங்கிக் கொண்டு வரச் சொல்லி,கூடவே காலை ‘டிபனு’க்கும் மத்தியானம் ஒரு கல்யாண சாப்பாட்டுக்கும் ஒரு நல்ல சமையல் காரணையும் ஏற்பாடு பண்ணச் சொன்னார் ராமசாமி.

வாத்தியார் எல்லாம் செய்வதாய் ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாளே ராமசாமியும் விமலாவும் கிராமத்திற்குப் போய் குப்புசாமி குடும்பத்தை ராமநா தன் ‘உபநயனத்துக்கு’ அழைத்து விட்டு வந்தார்கள்.குப்புசாமியும் மரகதமும் மிகவும் சந்தோஷப் பட்டு ராமநாதன் ‘உபநயனத்துக்கு நிச்சியம் வருவதாக சொன்னார்கள்.

சொன்னபடியே குப்புசாமி தன் குடும்பத்தை திருவண்ணாமலைக்கு அழைத்துக் கொண்டு வந்து,ராமநாதன் ‘உபநயன’ விழாவில் கலந்துக் கொண்டு, அவர்கள் போட்ட ‘டிபனை’யும்,மத்தியான சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு ராமநாதனை ஆசீர்வாதம் பண்ணிவிட்டு கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்.

சென்னையிலே,மதுரையிலே,காஞ்சீபுரத்துலே இருந்த பிரபல துணிக்கடைக்காரர்கள் திருவண் ணாமலையில் பெரிய துணிகடைகள் திறந்து மிகவும் ‘பாஷன்’’ டிரஸ்’களை எல்லாம் விற்று வர ஆரம் பித்தார்கள்.அவர்கள் கடை பூராவும் ஏ.ஸி.போட்டு,மிக பிரகாசமான மின் விளைக்குகளையும், நிறைய முகம் பார்க்கும் கண்னாடிகளையும் அமைத்து இருந்தார்கள்.கடையின் விளம்பரங்களை எல்லா இடங் களீலும் வைத்து இருந்தார்கள்.இதைத் தவிர ‘ஆடித் தள்ளுபடி,’ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’, மூன்று வங்கினால் நாலு இலவசம்’ போன்ற விளம்பரங்களையும்,பொது மக்கள் கண்படும் இடங்களில் வைத்து இருந்தார்கள்.

இதனால் திருவண்ணாமலையில் இருந்த மக்கள் அந்த மாதிரி பிரபலமான கடைகளுக்குப் போய் தங்களுக்கு வேண்டிய ஜவுளீகளை எல்லாம் வாங்கி வர ஆரம்பித்தார்கள்.அந்த மாதிரி வரும் பொது மக்களுக்கு,அங்கு இருந்த சிப்பந்திகள் இலவசமாக ‘காபி’,’டீ’, ஆரங்க் ஜூச் எல்லாம் கொடு த்து அவர்களை சந்தோஷப் படுத்தி வந்தார்கள்.

இதனால் ராமசாமியின் ஜவுளிக் கடைக்கு வரும் மக்கள் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டு வந்தார்கள்.அவர் கடை வியாபாரம் கொஞ்ச கொஞ்சமாக மந்தமாக வரத் தொடங்கியது.

அவர் துணிக்கடையில் புடவைகளும்,வேஷ்டிகளும் விற்பனை ஆகாமல் மிகவும் தேக்கமாக இருந்து வந்தது.அவர் கடையிலே போட்ட முதலே அவருக்கு வராமல் தினமும் வருத்தப் பட்டுக் கொ ண்டு வந்தார் ராமசமி.அதனால் ராமசாமி,அவர் கடையில் இருந்த ‘சூப்ப்ர்வைசரை’க் கூப்பிட்டு “சுந்தரம், நம்ம கடையிலே வியாபாரம் நாளுக்கு நாள் குறைஞ்சிண்டே வறதே. வியாபாரத்தே அதிகம் ஆக்க நாம என்ன பண்ணலாம்” என்று கவலையுடன் கேட்டார்..

உடனே சுந்தரம் ”சார்,இப்போ திருவண்ணாமலைலே நிறைய பெரிய பெரிய கடைகள் எல்லாம் வந்து இருக்குன்னு உங்களுக்கு நல்லா தெரியும்.அந்த கடைங்கள்ளே ஏ.ஸி, பிரகாசமான மின் விளக் குகள்,வரவங்க போறவங்க எல்லாம் ‘காபி’, ‘டீ’,’ஆரஞ்ச் ஜூஸ்’ எல்லாம் இலவசமா தறாங்க.அதனா ல்லே எல்லா ஜனங்களும் அந்த மாதிரி பெரிய கடைகளுக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க.நம்ம கடை யிலே வியாபாரம் அதிகம் ஆவனும்ன்னா,நீங்களும் நம்ம கடைலே பூரா ஏ.ஸி.பண்ணி,நிறைய முகம் பாக்கற கண்ணாடி வச்சு, ’ஆடித் தள்ளுபடி’,இலவசமா ‘காபி’, ‘டீ’,’ஆரஞ்ச் ஜூஸ்’ எல்லாம் குடுக்க ணுங்க.அதைத் தவிர நிறைய புது புது பாஷன் ‘டிரஸ்கள்’ எல்லாம் வாங்கி வக்கணும்ங்க.அப்படி பண்ணா நம்ம கடை வியாபாரம் அதிகம் ஆக வாய்ப்பு இருக்குங்க”என்று சொன்னான்.

சுந்தரம் சொன்னதைக் கேட்டு சந்தோஷப் பட்டார் ராமசாமி.

உடனே ராமசாமி “சரி சுந்தரம்,நானும் நம்ம கடையிலே அந்த பெரிய கடைக்காரங்க பண்ணி இருக்காப் போல பூரா ‘ஏ.ஸி’.பண்ணி,நிறைய முகம் பாக்கும் கண்ணாடிகள்,’ஆடித் தள்ளுபடி’ இலவசமா ‘காபி’, ‘டீ’,’ஆரஞ்ச் ஜூஸ்’ எல்லாம் குடுக்க ஏற்பாடு பண்றேன்.அதைத் தவிர நிறைய புது,புது, ‘பாஷன்’ ‘டிரஸ்கள்’ எல்லாம் வாங்கி வக்கிறேன்.அப்படி பண்ணா நம்ம கடைலே வியாபார ம் அதிகம் ஆகும்ன்னு எனக்கும் படுது” என்று சொல்லி விட்டு சுந்தரத்தை அனுப்பினார்.

ராமசாமி ராத்திரி தன் கடையை மூடி விட்டு,கவலைப் பட்டுக் கொண்டே வீட்டுக்கு வந்தார்.

ராமசாமி சுந்தரம் சொன்னது போல தன் கடையிலே ‘எல்லாம்’ செய்து எப்படியாவது தன் வியா பாரத்தை பெருக்க வேண்டும் என்று மிகவும்ஆசைப் பட்டார்.’தன் ஆசையை மணைவிடமும் பிள் ளையிடமும் சொல்லலாம்’ என்று நினைத்து இருவரையும் தன்னிடம் அழைத்தார்.

“விமலா,ராமநாதா நம்ம கடை வியாபாரம் ரொம்ப குறைஞ்சுண்டே வறது.அக்கம் பக்கத்லே நிறைய பெரிய பெரிய பணக்காரா துணிக் கடையைப் போட்டு ,நிறைய ‘பாஷன்’’ டிரஸ்’களை எல் லாம் வித்துண்டு வறா.அவா கடை பூராவும் ஏ.ஸி.போட்டு,மிக பிரகாசமான மின் விளக்குகள்,நிறைய முகம் பார்க்கும் கண்னாடிகள் எல்லாம் வச்சு இருக்கா.கடையின் விளம்பரங்களை எல்லா இடத்திலே யும் வச்சு இருக்கா.இதைத் தவிர அந்தக் கடைக்காரா ‘ஆடித் தள்ளுபடி,’ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’,மூன்று வங்கினால் நாலு இலவசம்’ போன்ற விளம்பரங்களையும், பொது மக்கள் கண்படும் இடங்கள்ளே வச்சு இருக்கா.கடைக்கு வறாவாளுக்கு எல்லாம் இலவசமா ‘காபி’, ‘டீ’,’ஆரஞ்ச் ஜூஸ்’ எல்லாம் குடுக்கறா.அதைத் தவிர நிறைய புது புது ‘பாஷன்’ டிரஸ்களை எல்லாம் வித்துண்டு வறா. நானும் என் கடையிலே அவா கடையிலே இருக்கிறா மாதிரி எல்லாம் பண்ணி,புது புது ‘பாஷன்’ ‘டிரஸ்’களை எல்லாம் வாங்கி வச்சுண்டு என் கடை வியாபாரத்தே அதிகப் படுத்தலாம்ன்னு இருக்கே ன்” என்று சொன்னார்.

உடனே விமலாவும்” நானும் கோவிலுக்குப் போகும் போது அந்த பெரிய பணக்காரா வச்சு இரு க்கிற கடைகளை பாத்தேன்.நிறைய இடத்லே அவா வச்சு இருக்கிற விளம்பரங்களையும் பாத்தேன். அவா கடையிலே எப்பவும் கூட்டம் ரொம்பி வழியறது” என்று சொன்னாள்.

ராமநாதனும் ”ஆமாம்ப்பா,அந்த கடைகள் தொறக்கறதுக்கு முன்னாலேயே வாங்க வறவா,வந்து நின்னுண்டு இருக்கறதே நான் ‘ஸ்கூல்’ போகும் போது பாத்து இருக்கேன்” என்று சொன்னான்.

இவர்கள் இருவரும் சொல்லி முடிச்ச பிறகு ராமசாமி ”நான் என் கடையிலே இருக்கிற ‘சூப்பர் வைஸர்’ சுந்தரத்தை கூப்பிட்டுக் கேட்டேன்.அவரும் நான் சொன்னது தான் நல்ல ஐடியான்னு சொன்னான்.அதனால் நான் நாளைக்கு காத்தாலே ‘பாங்கு’க்குப் போய் நம்ம ஆத்தின் பேர்லே ஒரு லக்ஷ ரூபா ‘லோன்’ வாங்கிண்டு வரலாம்ன்னு இருக்கேன்.அந்த பணத்திலே நான் சொன்னதே எல்லாம் பண்ணி கடை வியாபாரத்தே எப்படியாவது அதிகப் படுத்தப் போறேன். கடையிலே அந்த பெரிய கடைக்காரா பண்ணி இருக்கிற மாதிரி பண்ணனும்ன்னு எனக்கும் ஆசையா இருக்கு.எப்படியாவது எல்லாம் பண்ணி நம்ம கடை வியாபாரத்தை அதிகப் படுத்தியே ஆகணும். உங்களுக்கு என் ‘ஐடியா’ பிடிச்சு இருக்கா. உங்க கிட்டே வேறே ‘ஐடியா’ எதாவது இருக்கா.இருந்தா சொல்லுங்கோ. நீங்க சொன்னா அதையும் பண்றேன்.நாம எதையாவது புதுசா பண்ணித் தான் கடை வியாபாரத்தே அதிகப் படித்தி ஆகணும்” என்று கேட்டு விட்டு இருவர் முகத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தார்.

உடனே விமலா ”நீங்க என்ன சொல்றேன்.ராமநாதன் படிப்பு இன்னும் முடியலே.அவன் ‘இண் டர்மீடியட்’ முடிச்சு ஒரு ‘கிராஜுவேட்டாவது’ ஆகணும்.இப்ப இந்த ஆத்து பத்திரத்தே ‘பாங்கிலே’ அடகு வச்சு,நீங்க ஒரு லக்ஷ ரூபாய்க்கு கடன் வாங்கினா,அந்த கடன் ‘வட்டியே’ நாம மாசா மாசம் அடைச்சுண்டு வரணும்.அசலே மாசா மாசம் கட்டணும்.ஆத்து செலவை சமாளிக்கணும்.ராமநாதன் படிப்பு செலவு வேறே.இதை எல்லாம் நீங்க நன்னா யோஜனை பண்ணேளா.நேக்கு என்னவோ ரொம் ப பயமா இருக்கு” என்று அலறினாள் விமலா.

“நான் நன்னா யோஜனைப் பண்ணிட்டுத் தான் சொல்றேன்.இப்ப ஒன்னும் பண்ணாம சும்மா இருந்து வந்தா,அப்புறமா வியாபாரம் இன்னும் குறைஞ்சிண்டு வந்து,நாம் இந்த ஆத்தையே விக்க வேண்டி இருக்கும்.ஆம் வித்து வர பணத்லே தான் நாம ராமநாதன் படிப்பையும்,ஆத்து செலவையும் பண்ணிண்டு வரணும். நான் ஆத்லே சும்மா உக்காந்துண்டு வரணும்.ராமநாதன் ஒரு ‘கிராஜுவேட்’ ஆயி,அவன் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு தான் ஆத்லே பணம் நடமாட்டம் இருக்கும். அது வரைக்கும் என் கையிலே இருக்கிற முழுக்க செலவு ஆகாம ஆத்து செலவையும்,ராமநாதன் படிப்பு செலவையும் கவனிச்சுண்டு வரணும்.ராமநாதன் படிப்பு முடிஞ்சு அவன் உடனே வேலே கிடைச்சு அவன் சம்பாதி க்க ஆரம்பிக்கணும். அப்படி ஆனா நாம் ரெண்டு பேரும் அவன் சம்பளத்லே சாப்பிட்டுண்டு வரலாம். நான் இப்போ ஒன்னும் பண்ணாம இருந்து வரட்டுமா சொல்லு” என்று கேட்டார் ராமசாமி.

கணவன் கேட்டதற்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள் விமலா.

கொஞ்ச நேரம் ஆனதும் விமலா பயந்து போய்,“சரி ,நீங்க சொல்றபடியே பண்ணுங்கோ .எனக்கு வேறே ஒன்னும் சொல்லத் தோணலே. அந்த அம்பாள் தான் அவ கண்ணேத் தொறந்து நீங்க சொல்றா மாதிரி வியாபாரம் நன்னா ஆயி,அப்புறமா ‘பாங்லே’ வாங்கின கடனுக்கு அசலையும்,வட்டியையும் அடைச்சுட்டு, அடகு வச்சு இருக்கிற ஆத்து பத்திரத்தே ஆத்துக்கு கொண்டு வந்து நீங்க என் கையி லே குடுத்து,அதை நான் மறுபடியும் அம்பாள் பாதத்திலெ வச்சுட்டு,அப்புறமா பீரோவிலே வக்கணும். நான் தினமும் அந்த அம்பாளை நன்னா வேண்டிண்டு வறேன்” என்று சொன்னாள்.

அடுத்த நாளே ராமசாமி தன்னுடைய பாங்குக்குப் போய் பாங்கு மானேஜரைப் பார்த்து “சார், என் துணிக்கடை வியாபாரம் ரொம்ப மந்தமாப் போயிண்டு இருக்கு.நான் என் துணிக் கடையிலே ஏ.ஸி.போட்டு,மிக பிரகாசமான மின் விளக்குகள்,நிறைய முகம் பார்க்கும் கண்னாடிகள் எல்லாம் போட்டு,நிறைய புது புது ‘பாஷன்’ டிரஸ்களை எல்லாம் வாங்கி வச்சு,என் கடை வியாபாரத்தே அதிக ப் படுத்தலாம்ன்னு நினைக்கிறேன்.நான் என் ஆத்து பத்திரத்தை கொண்டு வந்து இருக்கேன்.அந்த பத்திரத்தின் பேர்லே எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் ‘லோன்’ தர முடியுமா” என்று கண்களில் கண்ணீர் துளிக்கக் கேட்டார்.

பாங்கு மானேஜர் ராமசாமி வீட்டுப் பத்திரத்தை வாங்கி நன்றாக படித்து பார்த்து விட்டு,நிறைய ‘பாரங்களில்’ ராமசாமியின் கை எழுத்தை வாங்கிக் கொண்டு ஒரு லக்ஷ ரூபாய்க்கு ‘லோன்’ கொடுத்தார்.

ராமசாமி அந்த ‘லோன்’ செக்கை ‘பாங்கில்’ இருந்து வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.அவர் மனம் இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

வீட்டுக்கு வந்து “விமலா எனக்கு பாங்கிலே இருந்து ஒரு லக்ஷ ரூபாய்க்கு ‘லோன்’ கிடைச்சு இருக்கு. இந்தா அந்த ஒரு லக்ஷ ரூபாய் ‘செக்’. இதே அந்த அம்பாள் பாதத்திலே வச்சு வேண்டிண்டு வந்து என் கிட்டே குடு” என்று சொல்லி ‘பாங்க்’ மானேஜர் கொடுத்த ‘செக்கை’ விமலாவிடம் கொடுத்தார்.

உடனே விமலாவும் அந்த ‘செக்கை’அம்பாள் பாதத்திலே வைத்து நன்றாக வேண்டிக் கொண்டு விட்டு,அந்த ‘செக்கை’ எடுத்துக் கொண்டு வந்து தன் கணவனிடம் கொடுத்தாள்.
“விமலா,நான் நம்ம கடையை ஒரு பதினைஞ்சு நாளைக்கு மூடி விட்டு,கடையிலே நான் சொ ன்னதே எல்லாம் பண்ணி விட்டு,அப்புறமா என் கடைக்கு வழக்கமா சரக்கு போடற ‘கம்பனிக் காரர்’ இடம் என் கடைக்கு இப்போ ‘லேடஸ்ட்டா’ வந்து இருக்கிற ‘பாஷன்’ புடவைகள், ‘பாஷன்’ ‘டிரஸ்’ களையும் போட சொல்லப் போறேன்.லாபம் வறா மாதிரி எல்லா ‘டிரஸ்’களுக்கும் ‘டாக்’ கள் போட்டு வியாபாரத்தை பெருக்கலாம்ன்னு இருக்கேன்.நான் சொன்னதே எல்லாம் பண்ணிட்டு,‘பாஷன் ’ புடவைகளையும்,’டிரஸ்களையும்’ நிறைய வாங்கி வச்சு,கடைக்கு வறவாளுக்கு எல்லாம், அவா குடுக் கறா மாதிரி காபி,டீ,ஆரஞ்ச் ஜூஸ் எல்லாம் குடுத்து வறப் போறேன்.இப்படி பண்ணா நிறைய பேர் ஜவுளி வாங்க என் கடைக்கு வருவா.என் கடை வருமானம் அதிகம் ஆகி வந்தா,நான் சீக்கிரமாவே அந்த ஒரு லக்ஷ ரூபாய் ‘லோனை’ அடைச்சிடுவேன்” என்று சந்தோஷமாக சொன்னார் ராமசாமி.

கணவர் சொன்னதைக் கேட்டு விமலா சந்தோஷப் பட்டு ”உங்க எண்ணம் படி எல்லாம் நன்னா ஆயி,நீங்க சீக்கிரமா அந்த ‘பாங்கு லோனை’ அடைச்சிட்டு,ஆத்து பத்திரத்தை ‘பாங்கிலே’ இருந்து, ஆத்துக்குக் கொண்டு வரணும்.நான் மறுபடியும் அந்த பத்திரத்தே பீரோவிலே வச்சு பூட்டணும்.அது க்கு அந்த அம்பாள் அனுக்கிரஹம் பண்ணனும்.நான் தினமும் அந்த அம்பாளை நன்னா வேண்டிண் டு வறேன்.எனக்கு என்னமோ இதே தான் திரும்பி திரும்பி சொல்லத் தோன்றது.அப்படி நடக்கற வரைக்கும் என் மனசு அலை பாய்ஞ்சுண்டே தான் இருக்கும்” என்று சொன்னாள் விமலா.

ராமசாமி விமலா கிட்டே இருந்து ‘செக்கை’ வாங்கிக் கொண்டு,அந்த செக்கை தன் ‘அக்கவுண் ட்டில்’ போட்டு விட்டு தன் கடைக்குப் போனார்.

கடைக்குப் போய் கடையிலே வேலை செய்து வந்த ‘சூப்ப்ர்வைஸர் சுந்தரம்,மற்ற எல்லா சிப்ப ந்திக¨ளையும் கூப்பிட்டு “நான் இந்த துணிக் கடையை ஒரு பதினைஞ்சு நாளைக்கு மூடிட்டு, கடை யிலே ஏ.ஸி.போட்டு,மிக பிரகாசமான மின் விளக்குகள்,நிறைய முகம் பார்க்கும் கண்னாடிகள் எல்லா ம் போட்டு,நிறைய புது புது ‘பாஷன்’ டிரஸ்களை எல்லாம் வாங்கி வச்சு,என் கடை வியாபாரத்தே அதிகப் படுத்தலாம்ன்னு நினைக்கிறேன்.உங்க எல்லாருக்கும் அந்த பதினைஞ்சு நாளைக்கு நான் சமபளம் தறேன்.கடையிலே எல்லா வேலையும் ஆன பிற்பாடு ஒரு நல்ல நாள் பாத்து ஒரு வாத்தியா ரை அழைச்சு வந்து கடையை மறுபடியும் தொறக்கலாம்ன்னு இருக்கேன்” என்று சொன்னார்.

உடனே எல்லாரும் “சரி முதலாளி, நீங்க கடை வேலை எல்லாம் முடிஞ்சி,எப்போ கடையை தொறக்கறேங்கன்னு சொல்லுங்க.அப்போ நாங்க மறுபடியும் கடைக்கு வேலைக்கு வறோம்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்கள்.

ரகுராமனுக்கு பதினோரு வயது ஆனதும் குப்புசாமியும்,மரகதமும் அவனுக்கு ‘உபநயனம் போட முடிவு பண்ணினார்கள்.வாத்தியாரைக் கூப்பிட்டு ‘உபநயனத்துக்கு’எல்லா ஏற்பாடுகளும் பண்ணச் சொன்னார் குப்புசாமி.சமையல் கார பாலுவை அழைத்து காலை ‘டிபனு’க்கும் மத்தியானம் ஒரு கல்யாண சாப்பாட்டுக்கும் ஏற்பாடு பண்ணினார் குப்புசாமி.

அடுத்த நாளே குப்புசாமியும்,மரகதமும் திருவண்ணாமலைக்குப் போய் ராமசாமி குடும்பத்தை ரகுராமன் ‘உபநயனத்துக்கு’ அழைத்து விட்டு வந்தார்கள்.ராமசாமியும்,விமலாவும் மிகவும் சந்தோஷப் பட்டு ரகுராமன் ‘உபநயனத்து’க்கு நிச்சியமாக வருவதாக சொன்னார்கள்.அப்போது ராமசாமியும், விமலாவும் அவர்கள் எடுத்து இருக்கும் முடிவைப் பற்றி ஒன்னும் சொல்லவில்லை.

சொன்னபடியே ராமசாமி தன் குடும்பத்தை குப்புசாமி இருந்து வந்த கிராமத்துக்கு அழைத்துக் கொண்டு ரகுராமன் ‘உபநயன’ விழாவில் கலந்துக் கொண்டு,அவர்கள் போட்ட ‘டிபனை’யும்,மத்தி யான சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டு ரகுராமனைஆசீர்வாதம் பண்ணி விட்டு திருவண்ணாமலைக் கு வந்து சேர்ந்தார்.
அந்த வருஷம் ராமநாதன் ‘டெந்த்’ படித்து வந்தான்.

ராமசாமி ஒரு ‘கன்ட்ராக்கரை’க் கூப்பிட்டு கடையில் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் சொன்னார்.உடனே அந்த ‘‘கன்ட்ராக்கர்’ ராமசாமி சொன்ன எல்லா வேலைகளையும் செய்து முடிப்ப தாகச் சொல்லி விட்டு,ராமசாமி இடம் இருந்து ஒரு ஐம்பது ஆயிரம் ரூபாய் ‘அடவான்ஸாக’ வாங்கிக் கொண்டு போனார்.

ராமசாமி சொன்ன எல்லா வேலைகளையும் கடையிலே முடித்து விட்டு,ராமசாமியைக் கூப்பிட்டு காட்டினார் அந்த ‘கன்ட்ராக்கர்’.அவர் தான் சொன்ன எல்லா வேலைகளையும் சரியாக செய்து இரு ப்பதைப் பார்த்து மிகவும் சந்தோஷப் பட்டார் ராமசாமி.

அந்த ‘கன்ட்ராக்கர்’ ராமசாமியைப் பார்த்து “சார்,நீங்க சொன்ன வேலை எல்லாம் நான் செஞ்சு இருக்கேன். உங்களுக்கு என் வேலை திருப்தியா இருக்கா” என்று கேட்டதும் ராமசாமி சந்தோஷப் பட்டு “எல்லா வேலைங்களையும் நான் சொன்னா மாதிரி செஞ்சு இருக்கீங்க.எனக்கு ரொம்ப திருப்தி சார்” என்று சொன்னார்.

உடனே அந்த ‘கன்ட்ராக்கர்’ “மொத்த வேலைக்கும் நீங்க குடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பத்த லே.இப்போ சாமாங்க விலை எல்லாம் அதிகம் ஆயிடுச்சி.’லேபர்’ கூலியும் ரொம்ப அதிகம்.அதனாலே செலவு ரொம்ப ஓடிப் போச்சு.இன்னும் நீங்க எனக்கு ஒரு இருபத்தி ஐஞ்சு ஆயிரம் ரூபாய் தரணும்” என்று சொன்னதும் ராமசாமி ஆடிப் போய் விட்டார்.
“என்ன சார்,நான் நீங்க எல்லா வேலையையும் அந்த ஐம்பதாயிரம் ரூபாய்க்கு உள்ளே முடிச் சிடுவீங்கன்னு நினைச்சேன்.இப்போ செலவே ரொம்ப ஓட்டிடீங்களே” என்று அழ மாட்டாத குரலில் கேட்டார்.உடனே அந்த ‘கன்ட்ராக்டர்’ “அதான் நான் சொன்னேனே சார்.சாமாங்க விலை அதிகம், ’லேபர் ‘கூலி அதிகம்.செலவு ரொம்ப ஓடிப் போச்சுன்னு.நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க”என்று சொல்லி சும்மா நின்றுக் கொண்டு இருந்தார்.

வேறு வழி ஒன்னும் இல்லாததால் ராமசாமி அந்த ‘கன்ட்ராக்கர்’க்கு இன்னும் ஒரு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு ‘செக்’கைக் கொடுத்து அவரை அனுப்பினார்.

ராமசாமி தான் சொன்ன கடை வேலை எல்லாம் செய்து முடிக்க இவ்வளவு பணம் செலவு ஆகு ம் என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.

அவர் வீட்டுக்கு வந்தவுடனே “விமலா, நான் சொன்ன எல்லா கடை வேலைகளும் செஞ்சு முடிக்க அந்த ‘கன்ட்ராக்கர்’ என் கிட்டே இருந்து, நான் குடுத்த ஐம்பதாயிரத்துக்கும் மேலே இன்னும் இருபத்தி ஐஞ்சாயிரம் ரூபாய் வாங்கிண்டுப் போனார்.கேட்டா, நான் என்ன பண்ணட்டும் சாமான்க விலை எல்லாம் அதிகம்,’லேபர்’ கூலி அதிகம்,ஆனதாலே செலவு ரொம்ப ஓடிப் போச்சு’ ன்னு சொன் னார்.வேறே வழி இல்லாமே நான் அவருக்கு இன்னும் ஒரு இருப த்தி ஐஞ்சாயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கைக் குடுத்தேன்” என்று வருத்ததுடன் சொன்னார்.

உடனே விமலா ”என்ன சொல்றேள்.கடையை புதுப்பிக்கவே எழுபத்தி ஐஞ்சாயிர ரூபாய் ஆயி டுத்தே.மீதி இருபத்தி ஐஞ்சாயிரம் தானே இப்போ கையிலே இருக்கு.எப்படி நீங்க இந்த பணத்லே கடைக்கு வழக்கமா சரக்கு போடற ‘கம்பனிக்காரர்’ இடம் என் கடைக்கு இப்போ ‘லேடஸ்ட்டா’ வந்து இருக்கிற ‘பாஷன்’ புடவைகள், ‘பாஷன்’ டிரஸ்களையும் போட சொல்லப் போறேள்.அது எல்லாம் ஒரு ஐம்பாயிரம் ரூபாயாவது ஆகுமே.அதிகப் படி ஆகும் பணத்துக்கு என்ன பண்னப் போறேள்.எனக் கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு.நீங்க ‘அகல கால் வச்சு’ இருக்கேளோன்னு தோன்றது.சித்தே நன்னா யோஜனைப் பண்ணிப் பண்ணுங்கோ” என்று அலறினாள்.

விமலா சொன்னதுக்கு ராமாசாமிக்கு என்ன பதில் சொல்றது என்றே புரியவில்லை.அவர் ஒரு நிமிஷம் யோஜனைப் பண்ணினர்.

பிறகு அவர் நிதானமாக “ஆமாம் விமலா,நான் ஒத்துக்கறேன்.இப்போ ஒன்னும் பண்ண முடியா து.பகவான் மேலே பாரத்தே போட்டுட்டு பண்றேன்.நீ சொன்னா மாதிரி மீதி இருக்கிற பணத்லே ‘லேடஸ்ட்டா’ வந்து இருக்கிற ‘பாஷன்’ புடவைகள், ‘பாஷன்’ டிரஸ்கள் எல்லாம் வாங்கறது ரொம்ப கஷ்டம்.அதனால்லே நான் பாங்கு மானேஜரைப் பாத்து இன்னும் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் ‘லோன்’ கேட்டு வாங்கிண்டு வந்து கடைக்கு சரக்கு போடறவர் கிட்டே ஆர்டர் தறேன்.அந்த சரக்குகள் எல்லாம் வந்ததும்,ஒரு நல்ல நாளாப் பாத்து வாத்தியாரைக் கூப்பிட்டு கடையை மறுபடியும் தொறக்கறேன். நான் இப்போ ‘பாங்கு’க்குப் போய் வறேன்” என்று சொல்லி விட்டு ‘பாங்கு’க்குக் கிளம்பினார்.
ராமசாமி இன்னும் ஐம்பதாயிரம் ரூபாய் ‘லோன்’ கேட்டவுடன் அந்த பாங்கு மானேஜர் ராமசாமி யை ப் பார்த்து ”சார்,நான் இந்த ஐம்பதாயிரம் ரூபாய் ‘லோன்’ குடுத்தா,உங்க வட்டி சுமை ரொம்ப அதி கம் ஆயிடும்.உங்க வீட்டு பத்திரத்து மேலே நான் மொத்தமா ஒரு லக்ஷத்து ஐம்பதாயிரம் ரூபாய் தான் ‘லோன்’ குடுக்க முடியும்.அந்த முழுப் பணத்தேயும் நான் உங்களுக்கு குடுத்துட்டேன். நீங்க ‘லோன்’ வட்டிப் பணம் சரியா கட்டா விட்டா,நான் உங்க வீட்டை ஏலத்லே விட வேண்டி இருக்கும்.இதை நான் உங்க கிட்ட இப்பவே சொல்லிடறேன்.அப்புறமா நீங்க என்னேப் பாத்து ‘ஏன் சார்,நீங்க எனக்கு அந்த ஐம்பதாயிரம் ரூபாய் ‘லோன்’ குடுக்கறதுக்கு முன்னாடி சொல்லலேன்னு சொல்லக் கூடாது” என்று எச்சரித்து சொன்னதும் ராமசாமி கொஞ்சம் பயந்து விட்டார்.

‘பாங்கு’ மானேஜர் சொன்னதை புரிந்துக் கொண்டு ராமசாமி ”சாரி,நான் மாசா மாசம் என் வட்டி ப் பணத்தே சரியா கட்டிட்டு,சீக்கிரமா அசலையும் கட்ட முயற்சி பண்றேன்” என்று சொல்லி விட்டு அவா¢டம் இருந்து அந்த ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ‘செக்கை’ வாங்கிக் கொண்டு, அந்த ‘செக்கை’ தன் ‘அக்கவுண்ட்டில்’ போட்டு விட்டு,தன் கடைக்கு வழக்கமாக சரக்கு போடுகிறவர் கிட்டே தன் கடை க்கு ‘லேடஸ்ட்டா’ வந்து இருக்கிற ‘பாஷன்’ புடவைகள், ‘பாஷன்’ ‘டிரஸ்’கள் எல்லாம் போட ஒரு ஆர்டர் கொடுத்தார்.
வீட்டுக்கு வந்து ‘பாங்கு’ மானேஜர் சொன்ன எல்லா சமாசாரத்தையும் மணைவி இடமும், பிள்ளை இடமும் கவலையுடன் சொன்னார் ராமசாமி.

அடுத்த வாரமே அவர் ஆர்டர் கொடுத்து இருந்த எல்லா ‘லேடஸ்ட்டா’ வந்து இருக்கிற ‘பா ஷன்’ புடவைகள்,‘பாஷன்’ ‘டிரஸ்’கள் கடையில் ‘டெலிவா¢’ ஆகி விட்டது. ராமசாமி அந்த ஆர்டருக் கு வந்த ‘பில்லில்’ ஒரு பாதி பணத்துக்கு அந்த கம்பனிக் காரருக்கு ஒரு ‘செக்’காகக் கொடுத்தார். ராமசாமி தன் ஆத்து வாத்தியாரை கூப்பிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து,ஒரு சின்னபூஜையை பண்ணி விட்டு கடையை மறுபடியும் திறந்து வியாபாரம் பண்ண ஆரம்பித்தார்.

முதல் ரெண்டு மாசம் கடையிலே நல்ல வியாபாரம் ஆகி வந்தது.ராமசாமி மிகவும் சந்தோஷப் பட்டார்.கடையிலே வியாபாரம் நன்றாக நடந்து வருவதைப் பார்த்த விமலாவும் ராமநாதனும் சந்தோ ஷப் பட்டார்கள்.

ராமசாமி ‘பாங்க்’ வட்டிப் பணத்தை சரியாக குறிபிட்ட நாளுக்கு சரியாக கட்டி வந்தார்.அவர் தன் மனதில் ‘கடை வியாபாரம் இப்படியே கொஞ்சம் கொஞ்சமா அதிகம் ஆகி வந்தா,நாம சீக்கிரமா பாங்கு அசலையும் அடைச்சுட்டு,ஆத்து பத்திரத்தை ‘பாங்லே’ இருந்து மறுபடியும் வாங்கிக் கொண்டு வந்து விமலா கிட்டே குடுத்திடலாம்’ என்று ஆசைப் பட்டார்.

அன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்ததும் ராமசாமி தன் மனதில் ஏற்பட்ட ஆசையை விமலா இடமும் ராமநாதன் இடமும் சொல்லி சந்தோஷப் பட்டார்.
‘சூப்ப்ர்வைஸர்’ சுந்தரத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பன் ராமானுஜம்.

இருவரும் நகையும் சதையுமாக பழகி வருபவர்கள்.ஒருவர் கஷ்டத்தை மற்றவர் இடம் சொல்லி பகிர்ந்து கொண்டு வந்து இருந்தார்கள்.அன்று இரவு கடை மூடின பிறகு இருவரும் சந்தித்து கொஞ்ச நேரம் தனிமையில் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

”ராமா,நாம ரெண்டு மாசம் முதலாளிக்கு வியாபாரத்தை நல்ல விதமா செஞ்சு வந்து அவருக்கு லாபம் வர வச்சோம்.ஆனா நமக்கு ஒன்னும் லாபம் இல்லையே.ரெண்டு மாசமா கை ரொம்ப வறண்டுப் போய் இருக்கு ராமா.அப்பாவுக்கு ஆபரேஷன் வேறே ஆகி இருக்கு.வீட்லெ செலவு ரொம்ப ஜாஸ்தி ப்பா.வீட்லே திட்டறாங்க.நாம மெல்ல பழையபடி துணிங்களே திருடி வந்தாத் தான் புழைக்க முடியும் போல் இருக்கு.அதனால்லே நாம இந்த மாசத்லே இருந்து பழையபடி பண்ணி வரலாம்ன்னு நினைக் கிறேன்.நீங்க என்ன சொல்றீங்க ராமா” என்று கேட்டான் சுந்தரம்.

“தலைவா,நான் இதிலே சொல்றதுக்கு என்ன இருக்கு.சம்பளம் அதிகமா வர உங்களுக்கே கஷ் டமா இருக்குங்ளே.உங்களை விட எனக்கு சம்பளம் குறைவு.எனக்கு மூனும் பொட்டை பிள்ளைங்க. நானும் தான் ரொம்ப கஷ்டப் பட்டுக் கிட்டு வறேன்.நீங்க சரின்னு சொன்னா நாம பழையபடி ஆரம்பி க்க வேண்டியது தான்” என்று சொல்லி சுந்தரம் சொன்ன ‘ஐடியா’வுக்கு பச்சைக் கொடிக்கு காட்டி னான் ராமானுஜம்.

“நாம அடுத்த வாரத்லே இருந்து பழையபடி செஞ்சு வரலாம்.ஆனா ரொம்ப ஜாக்கிரதையா இரு ந்து வரணும்.முதலாளி கண்லே படாம இருந்து வரணும். கவனம் இருக்கட்டும். மாட்டிகிட்டா கம்பி எண்ண வேண்டி இருக்கும்”என்று சொல்லி எச்சரித்தவுடன் ராமானுஜம் ”நான் ரொம்ப ஜாக்கிறதை யா இருந்து வறேன் தலைவா.நீங்க கவலைப் படாம இருந்து வாங்க” என்று சொல்லி விட்டு இருவரும் சிரித்துக் கொண்டே வீட்டுக்குக் கிளம்பிப் போனார்கள்.

சுந்தரம் தன் நண்பன் ஒருவனைக் கடைக்கு வரச் சொல்லி,அவனை புடவை வாங்குவது போ ல வாங்கச் சொல்லி,அவன் புடவை ‘பில்லில்’ ரெண்டு புடவையை விலையைப் போட்டு விட்டு,புட வை ‘பாக்’ பண்ணும் போது,அதில் ஆறு,ஏழு புடவைகளை போட்டு அனுப்பி விட்டு,கொஞ்ச நேரம் ஆனதும்,அந்த நண்பன் கிட்டே கொடுத்த ‘எக்ஸ்ட்ரா புடவைகளை’ அவன் கிட்டே இருந்து வாங்கி க் கொண்டு,அந்த புடவைகளை தனக்கு தெரிந்தவர்களுக்கு விற்று பணம் சம்பாத்தித்து வந்தான்.

இந்த வேலையை சுந்தரம் ராமசாமி கல்லாவைப் பார்த்துக் கொண்டு இருந்த போது அவருக்குத் தெரியாமல் செய்து வந்தான்.

ராமானுஜம் தன் நண்பனை கடைக்கு வரச் சொல்லி அவனை வேஷ்டிகள் வாங்குவது போல வாங்கச் சொல்லி விட்டு அவன் பில்லில் ரெண்டு வேஷ்டிகள் விலையைப் போட்டு விட்டு வேஷ்டி களை ‘பாக்’பண்ணும் போது அதில் ஆறு ஏழு விலை உயர்ந்த வேஷ்டிகளை போட்டு அனுப்பி விட்டு அவன் கூடவே வெளியில் போய் அந்த விலை உயர்ந்த வேஷ்டிகளை எல்லாம் விற்று,பணம் பண்ணி வந்தான்.இதையும் ராமானுஜம் ராமசாமி கல்லாவைப் பார்த்துக் கொண்டு இருந்த போது அவருக்குத் தெரியாமல் செய்து வந்தான்.

ராமானுஜமும் சுந்தரமும் செய்து வந்த இந்த திருட்டுத்தனம் கொஞ்சம் நாட்களில் மத்த ஆட்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

ராமசாமி வெறுமனே கல்லாவிலே உட்கார்ந்துக் கொண்டு துணிகள் வாங்கின ‘ கஸ்டமர்கள்’ கொடுத்த ‘பில்லை’ வாங்கிப் பார்த்து விட்டு,அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கி கல்லாவில் போ ட்டு விட்டு மீதி சில்லறையை அவர்களுக்கு கொடுத்து வந்தார்.

அந்த மாதிரி நேரங்களில் அவர் கவனம் கல்லா மேலேயும்,கொடுக்க வேண்டிய சில்லறை எடுத் து எண்ணி கொடுபத்திலேயும் தான் இருந்தது.கடையிலே வேலை செய்து வருபவர்கள்,கடையிலே திருட்டு வேலை செய்து வருவார்கள் என்று அவருக்குத் தெரியாதே.அவர் கடையிலே வேலை செய்து வருபவர்களை ‘நல்லவர்கள்’ என்று தானே நமபிக் கொண்டு இருந்தார்.

நம்முடைய ‘சூப்பர்வைசர்களே’ இப்படித் திருட்டுத்தனம்’பண்ணும் போது நாமும் பண்ணா என்ன என்று நினைத்து,கடையிலே வேலை செய்து வந்த மற்ற ஆட்களும் ராமசாமி கல்லாவில் கவன ம் செலுத்தி வந்தபோது ‘டீ’ குடிக்க வெளியில் போகும் சாக்கில் வேஷ்டி மறைவில் புது துணிகளை திருடிப் போய் வித்து பணம் சம்பாதித்து வந்தார்கள்.
ராமசமியின் துணிகடையில் லாபம் வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டே வந்தது.

தோட்டம் வைத்து வருபவர் தன் தோட்டத்தில் பயிர்கள் நன்றாக முளைத்து கொஞ்சம் பெரிய தாகிக் கொண்டு வரும் போது அந்த பயிரை சுற்றி ஒரு வேலியைப் போட்டு,அந்த பயிரை எந்த மிருக மும் மேய்ந்து விடாமல் பார்த்துக் கொண்டு வருவார்.மனம் நிம்மதியாய் இருந்தும் வருவார். ஆனால் வளர்ந்து வரும் பயிரை,அதை பாதுகாத்து வர போட்டு இருக்கும் வேலியே பயிரை சாப்பிட்டு வந்தால் அந்த பயிர்கள் எங்கே பிழைத்து வரப் போகிறது!.

ராமசாமி மாச வியாபாரம் முடிந்ததும் வரவு செலவு கணக்கைப் பார்த்து வந்தார்.அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது.மூனு மாசமா லாபத்தில் போய்க் கொண்டு இருந்த அவர் கடை,நஷ்டத்தில் போக ஆரம்பித் தது.அவர் கவலைப் பட்டார்.கடையை மூடி விட்டு இரவு வீட்டுக்கு வந்து மணையி டமும் மகனிடமும் சொல்லி வருத்தப் பட்டார்.அவருக்கு காரணமே புரியாமல் இருந்தது.

அடுத்த நாள் ராமசாமி கடைக்கு வந்து மறுபடியும் சுந்தரத்தை கூப்பிட்டு “என்ன சுந்தரம்,மூனு மாசமா நம்ம கடையிலே நல்ல லாபம் வந்துண்டு இருந்தது.இந்த மாசம் லாபமே வராமல் நஷ்டம் வந்து இருக்கே. உங்களுக்கு ஏதாவது காரணம் தெரியுமா” என்று கெஞ்சும் குரலில் கேட்டார்.

“இந்த மாசம் நஷ்டமா வந்து இருக்கு முதலாளீ.என்ன சொல்றீங்க.என்னால் நம்பவே முடிய லையே.நீங்க வரவு செலவு கணக்கே சரியா பாத்தீங்களா முதலாளி.கணக்கிலே தப்பு ஒன்னும் இல் லையே.கடை வியாபாரம் ரொம்ப நல்லாத் தானே போய் கிட்டு இருக்கு.நஷ்டம் வர ‘சான்ஸே’ இல் லையே.நீங்க மறுபடியும் வரவு செலவு கணக்கே நல்லா பாருங்க” என்று ஒன்றும் தெரியாதவன் போல் நடித்தான். ராமசாமி வருத்தப் பட்டார். அவருக்கு உண்மை தெரியாதே.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *