ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 2,824 
 
 

அத்தியாயம்-28 | அத்தியாயம்-29 | அத்தியாயம்-30

ரமா டிரைவரிடம் அந்த ‘ஸ்கூல்’ வாசலில் காரை நிறுத்தச் சொன்னாள்.கார் நின்றதும் ரமா காரை விட்டு கீழே இறங்கிக் கொண்டு டிரைவரைப் பார்த்து “ஹா¢ஷ்,உனக்கு எங்கே ‘பார்க்கிங்க்’ பண்ண இடம் கிடைக்குதோ,அங்கே காரை ‘பார்க்கிங்க்’ பண்ணிக் கொண்டு இரு.நான் உனக்கு அப்புறமா ஒரு ‘மிஸ் கால்’ தறேன்”என்று சொல்லி விட்டு பள்ளி கூடத்தின் வாசலில் இருந்த கடையில் இரண்டு ‘பைவ் ஸ்டார்’ சாக்லெட்களையும் வாங்கி,தன் ‘ஹாண்ட் பாக்கில்’ வைத்துக் கொண்டாள்.

‘மட’’மட’ என்று வேகமாக நடந்துப் போய்,அந்த பையன் பக்கத்தில் நின்றுக் கொண்டாள் ரமா.

கிரண் அவன் ‘ப்ரெண்டுடன்’ சுவாரசியமாக பேசிக் கொண்டு இருந்தான்.

மெல்ல போய் ரமா அந்தப் பையன் பேரைக் கேட்டாள்

உடனே அந்தப் பையன் “என் பேர் கிரண்” என்று சொன்னான்.

வெண்கல மணியோசை ஓசைப் போல ‘கணீர்’ என்று தன் பேரை சொன்னதைக் கேட்ட ரமா வுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.அவனை அப்படியே தூக்கிக் கொண்டு கொஞ்ச வேண்டும் போல இருந்தது ரமாவுக்கு.

சென்னைக்கு வந்து குழந்தையை பார்த்த போது தன் மாமியார் வாத்தியார் “குழந்தைக்கு என்ன நாமகரணம் பண்றது” என்று கேட்டவுடன் “குழந்தைக்கு கிரண் என்று பேர் வையுங்கோ” என்று சொன்னது ரமாவுக்கு ஞாபகத்துக்கு வந்தது.

ரமாவின் மனம் சந்தோஷத்தில் துள்ளியது.அவள் சதைகள் அவள் இஷ்டம் இல்லாமல் ஆடியது அவள் வயிற்றில் பத்து மாசம் வளர்ந்த குழந்தை அல்லவா கிரண்!

அவனையே ஆசை தீரப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ரமா.அவனிடம் ஆசை தீர ஒரு பத்து நிமிஷமாவது பேச வேண்டும் என்று மிகவும் ஆசைப் பட்டாள்.

ரமா அவனிடம் பேச ஆசைப் பட்டுக் கொண்டு இருந்ததால்,தான் வாங்கிக் கொண்டு வந்த ‘பைவ் ஸ்டார்’ சாக்லெட்களை’ அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதையே மறந்து விட்டாள்.

’திடீர்’ என்று ஞாபகம் வரவே ரமா தன் ‘ஹாண்ட் பாக்கை’ த் திறந்து அவள் வாங்கிக் கொண்டு வந்த ரெண்டு ‘பைவ் ஸ்டார்’ சாக்லெட்களை’ எடுத்து கிரணிடம் கொடுத்தாள்.
அவன் உடனே “ரொம்ப தாங்ஸ் ஆண்டி.நீங்க யார் ஆண்டி.ஏன் நீங்க எனக்கு இந்த ரெண்டு ‘பைவ் ஸ்டார்’ சாக்லெட்டை’குடுக்கறேள்” என்று கேட்டு விட்டு,ஒரு ‘சாக்லெட்டை’ பிரித்து சாப்பிட ஆரம்பித்தான்.

கூடவே கிரண் “ஆண்டி,இவன் என் ‘பெஸ்ட் ப்ரெண்ட்’ ராம்நாத்.நான் இவனுக்கு இந்த சாக் லெட்டை தரட்டுமா” என்று கேட்டான்.

தன் வயித்லே பொறந்த பையன் தான் வாங்கிக் கொடுத்த சாக்லெடைப் பிரித்து சாப்பிடும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தாள்.’இத்தனை வருஷமா நாம அவனுக்கு ஒன்னும் வாங்கிக் குடுக் காம எங்கேயோ இருந்து வந்தோமே.எங்க ரெண்டு பேர் வாழ்கையிலும் எத்தனை வருஷங்கள் வீணா யிடுத்து.அந்த வருஷங்கள் எல்லாம் வீண் ஆனது வீண் தானே.மறுபடியும் வராதே’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டாள்.

பிறகு ’அப்பாவைப் போலவே நல்ல எண்ணம் இவனுக்கும் இருக்கே’ என்று நினைத்து ஆச்ச ரியப் பட்டாள் ரமா.

“கிரண்,நீ ஒரு சாக்லெடை உன் ‘பெஸ்ட் ப்ரெண்டு’க்கு குடு” என்று ரமா சொன்னதும் கிரண் ஒரு சாக்லெட்டை அவனுடைய ‘பெஸ்ட் ப்ரெண்டு’க்குக் கொடுத்தான்.
ரமாவுக்கு ‘கிரண் தன்னைப் பாத்து ‘நீங்க யார் ஆண்டி’ன்னு கேட்டதுக்கு என்ன பதில் சொல் வது’ என்று யோஜனைப் பண்ணினாள்.

அவ உள் மனசு ‘எப்படி நான் என் வயித்லே பொறந்த பையன் கிட்டேயே பொய்யே சொல்றது. இப்ப உண்மையையும் நான் அவன் கிட்டே சொல்ல முடியாதே’ என்று ‘அனலில் விழுந்த புழு’ போல தவித்தாள்.

தன் மனதை கல்லாக்கிக் கொண்டாள்.

அவனைப் பார்த்து “நான் உங்க அப்பாவுக்கு ரொம்ப சொந்தம்”என்று சொல்லி விட்டு தன் ‘ஹா ண்ட் பாக்கில்’ இருந்து ஒரு கைக் குட்டையை வெளியே எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

உடனே கிரண் “ஏன் ஆண்டி நீங்கோ அழறேள்” என்று கேட்டான்.

உடனே ரமா “அது ஒன்னும் இல்லே கிரண்.என் கண்லெ ஏதோ தூசு விழுந்துடுத்து.நான் அதே துடைச்சுண்டேன்” என்று ஒரு பொய்யை தன் வயிற்றிலே பிறந்த பையனிடம் சொல்லி விட்டு மிகவும் வருத்தப் பட்டாள்.

ரமா தன் கண்களைத் துடைத்து முடிந்தவுடன் கை குட்டையை தன் ‘ஹாண்ட் பாக்கில்’ வைத்து விட்டு கிரணைப் பார்த்து “உங்க தாத்தா,பாட்டி எல்லாம் சௌக்கியமா இருக்காளா” என்று கேட்டாள்.

“நான் அஞ்சாவது படிச்சிண்டு இருந்தப்ப என்னோட பாட்டி செத்துப் போயிட்டா.நான் ஏழாவ து படிக்கும் போது என்னோட தாத்தா செத்துப் போயிட்டாரு” என்று கிரண் சொல்லி முடிக்கவில்லை ரமா உடனே “அப்போ ஆத்லே யார் சமையல் எல்லாம் பண்றா” என்று கவலையுடன் கேட்டாள்.

கிரண் “எங்க அத்தே பாட்டி தான் சமையல் எல்லாம் பண்ணீவறா” என்று சொன்னான்.

‘பாவம்,என் வயித்லெ போறந்த குழந்தே நான் சமைக்கற சாப்பாட்டே சாப்பிட முடியாம யாரோ ஒரு அத்தேப் பாட்டி சமைக்கற சாப்பாட்டை சாப்பிட்டுண்டு வறானே’ என்று நினைக்கும் போது, ரமா வுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.அதை அடக்கிக் கொண்டாள்.

கொஞ்ச நேரமானதும்”கிரண்,உங்க அத்தேப் பாட்டி சமையல் உனக்குப் பிடிச்சு இருக்கா”என்று கேட்டதும் கிரண் “எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு” என்று சொன்னான்.

கொஞ்சம் நேரமானதும் மனதில் பொங்கும் ஆசையை மெல்ல அடக்கி கொண்டு “உன் அம்மா பேர் என்ன.உன் அம்மா உங்க கூட இப்போ இல்லையா” என்று வருத்ததுடன் கேட்டாள் ரமா.

உடனே கிரண் ”ஆன்டி,என் அம்மா பேர் ரமா.நான் அப்பாவைப் பாத்து ‘ஏம்ப்பா,அம்மா நம்ம கூட இல்லே.ஏன் நம்மே எல்லாம் விட்டுட்டு போயிட்டான்னு கேட்டேன்.அதுக்கு என் அப்பா ‘கிரண் அம்மாவுக்கு இன்னும் மேலே படிக்கணும் ரொம்ப ஆசை.ஆனா பாட்டி அம்மாவைப் பாத்து ‘நீ வேலே க்குப் போய் வான்னு’ சொன்னா.அம்மாவுக்கு இது பிடிக்கலே.அவளுக்கு மேலே படிக்கற ஆசை இரு ந்தாலே,அம்மா ஒரு நாள் ஒரு ‘லெட்டர்’ எழுதி வச்சுட்டு,ஒரு நாள் மத்தியானமா யார் கிட்டேயும் சொ ல்லிகாம,நம்ம ஆத்தை விட்டு எங்கோ போயிட்டான்னு சொன்னார்” என்று சொன்னான்

கிரண் சொன்னதைக் கேட்டு ரமாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்ததது.

‘நம் கணவர் இந்தக் குழந்தை இடம் உண்மையை சொல்லி இருக்காரே.உள்ளதை உள்ளபடி சொல்வது தானே அவர் சுபாவம்.நமக்கு நல்லாத் தெரியுமே.கிரணும் அவர் என்ன சொல்லி இருக்கா ரோ அதே அப்படியே சொல்றானே’ என்று நினைக்குப் போது அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

கிரண் விடாமல் ரமாவைப் பார்த்து “நீங்க ஏன் ஆன்டி எனக்கு இந்த ரெண்டு சாக்லெடை வாங் கிக் குடுத்து இருக்கீங்க” என்று கேட்டான்.

ரமாவுக்கு கண்ணில் தளும்பும் கண்ணீர் தளும்பியது.அவள் தன் ‘ஹாண்ட் பாக்கை’த் திறந்து கைக் குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

கண்ணீரை அடக்கிக் கொண்டு “உன்னே எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.அதனால்லே தான் நான் உனக்கு சாக்லெட் வாங்கி குடுத்து இருக்கேன்.உனக்கு சாக்லெட் ரொம்ப பிடிக்குமா கிரண்” கேட்டாள் ரமா.

கிரண் உடனே “ஏன் ஆண்டி அழறீங்க” என்று கேட்டு விட்டு “எனக்கு சாக்லெட் ரொம்ப பிடிக் கும்.எனக்கு என் அப்பாவும் எனக்கு நிறைய சாக்லெட் வாங்கி தருவார்” என்று சொன்னான்.

சாக்லெட் சாப்பிட்டு முடிந்ததும் “ஆண்டி,இன்னைக்குத் தான் என் ‘ஸ்கூல் லாஸ்ட் டே’. எங்க ளுக்கு இன்னைக்கு ‘எக்ஸாம் ரிசல்ட்’ சொன்னதும்,நாங்க எல்லாரும் ஆத்துக்குப் போய் விடுவோம். ‘ஸ்கூல்’ மறுபடியும் ரெண்டு மாசம் கழிச்சுத் தான் மறுபடியும் தொறப்பா” என்று சந்தோஷமாகச் சொ ன்னான் கிரண்.

ரமா “கிரண் நீ ஆத்துக்கு எப்படிப் போவே” என்று கேட்டாள்.

கிரண் ”நான் என் ‘ப்ரெண்ட்ஸ்களோட’இப்படியே ஓரமா நடந்து ஆத்துக்கு போவேன்” என்று சொன்னான்.

“அப்பா ஆத்துக்கு வற வரைக்கும் நீ என்ன பண்ணிண்டு இருப்பே” என்று கேட்டாள் ரமா.

“ஆண்டி,நான் சாயங்காலம் ஆத்துக்குப் போன உடனே என் அத்தே பாட்டி எனக்கு ‘டிபனும் ‘ டீ’யும் குடுப்பா.நான் குடிச்சுண்டு ரெடியா இருப்பேன்.என் அப்பா ஆபீஸ்லே இருந்து வந்ததும், குளிச்சுட்டு அத்தே பாட்டி குடுக்கற ‘டிபனை’யும்,’டீ’யையும் சாப்பிட்டு விட்டு, என்னே அவர் ஸ்கூ ட்டர்லே ‘இஸ்கானு’க்கு அழைச்சுண்டு போவார்.அங்கே அப்பா கொஞ்ச நேரம் ‘ஷோஷியல் சர்வீஸ்’ பண்ணிட்டு,கொஞ்ச நேரம் தியானம் பண்ணுவார்.நான் என் ‘ஹோம் வர்க்கை’ எல்லாம் முடிச்சுட்டு, என் பாடங்களை எல்லாம் படிச்சுண்டு இருப்பேன்.ஒன்பது மணி ஆனதும்,நானும் அப்பாவும் அங்கே கிடைக்கற பிரசாதத்தை சாப்பிட்டுட்டு,ஆத்துக்கு வந்து படுத்துக்குவோம்” என்று சொன்னான்.
அந்த நேரம் பார்த்து பள்ளிகூடம் மணி அடிக்கவே “ஆண்டி,’ஸ்கூல் பெல்’ அடிச்சுட்டது.நான் எட்டாவதிலே ‘பஸ்ட் க்லாஸ்லே ‘பாஸ்’ ஆகணும்ன்னு,எனக்கு ‘பெஸ்ட் விஷஸ்’ சொல்லுங்க” என்று கேட்டதும், ரமா ஒரு நிமிஷம் அசந்து விட்டாள்.

‘என் பையன் என் கிட்டேயே ‘பெஸ்ட் விஷஸ்’ கேக்கறானே.அவன் கிட்டே நான் எப்படி உன் ‘ஆண்டி’ இல்லேடா கிரண்.உன் சொந்த அம்மாடா.சொந்த அம்மாடா’ ன்னு சொல்லத் துடித்தாள். அவள் மனம் வேதனைப் பட்டது.

ஆனால் அப்போது தன்னுடைய உள் ஆசையை அடக்கிக் கொண்டு “பெஸ்ட் விஷஸ் கிரண்.நீ நிச்சியமா ‘பஸ்ட் க்லாஸ்லே ‘பாஸ்’ பண்ணுவே” என்று சொன்னதும் கிரண் “ரொம்ப ‘தாங்க்ஸ்’ ஆண்டி” என்று சொல்லி விட்டு பள்ளிக் கூடத்திற்கு சிட்டாய் பறந்து போனான்.

கிரண் பள்ளி கூடத்திற்குப் போகும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தாள் ரமா.கொஞ்ச நேரம் ஆனதும் கீதா மேடத்திடம் ‘தான் ஆபீஸ்க்கு எவ்வளவு சீக்கிரமா வர முடியுமோ அத்தனை சீக்கிரமா வந்துடறேன்’ என்று சொன்னது ஞாபகத்துக்கு வரவே ரமா கார் டிரைவரை ’செல் போனில்’ கூப்பிட் டு பள்ளி கூட வாசலுக்கு வரச் சொன்னாள்.
கார் வந்ததும் ரமா காரிலே ஏறிக் கொண்டு ஆபீஸ்க்குப் போனாள்.

ஆபீஸில் நுழைந்ததும் ரமா மந்திரியின் மத்தியான மீட்டிங்க் தான் ரெடி பண்ணி வைத்து இருந்த எல்லா ‘பைல்’களையும் தன் பியூனை எடுத்துக் கொண்டு வரச் சொல்லி விட்டு,கீதா மேடம் ரூமுக்குப் போய் கதவை ரெண்டு தரம் லெசாகத் தட்டி,பிறகு மெல்ல கதவைத் திறந்துக் கொண்டு, உள்ளே போய் கூட வந்த பியூனைப் பாத்து எல்லா ‘பைல்’¨ளையும் ஒரு ஒரத்தில் இருந்த மேஜை மேலே வைக்கச் சொன்னாள்.அந்த பியூனும் அவன் கொண்டு வந்த எல்லா ‘பைல்’களையும் ரமா காட்டின மேஜை மேலே வைத்து விட்டுப் போனான்.

பியூன் எல்லா ‘பைல்’களையும் வைத்து விட்டுப் போன பிறகு ரமா “மேடம் நான் ஆபீஸ்க்கு வந்துட்டேன்” என்று சொன்னதும் கீதா மேடம் ரமாவைப் பார்த்து “என்ன ரமா,அந்த ஆத்லே உன் மாமியார்,மாமனார் .ஆத்துக்காரர்,உனக்குப் பொறந்த பையன் எல்லாரும் இருந்தாளா” என்று ஆர்வமா கக கேட்டவுடன் ரமா மெல்ல உள்ளே வந்து உட்கார்ந்துக் கொண்டாள்.

“மேடம்,எனக்கு,உங்க ‘பெஸ்ட் விஷஸ¤ம்’ ’லக்கும்’ தான் உதவி பண்ணீ இருக்கு.நான் அந்த தெருவிலே நுழைஞ்சதும்,நாங்க இருந்து வந்த ‘ப்லாட்டுக்கு’ ஐஞ்சு வீட்டு தள்ளி,என் ஆத்துக்காரர், தன் ‘ஸ்கூட்டரை’ ‘ஸ்டார்ட்’ பண்ணிக் கொண்டு என் பையனை,பின் சீட்லே ஏற்றிக் கொண்டு,அந்த தெரு கோடியிலே இருந்த பள்ளி கூடத்லே விட்டு விட்டுப் போனர்.நான் பள்ளிக் கூட வாசலிலே இரு ந்த ஒரு கடையிலெ ரெண்டு ‘பைவ் ஸ்டார்’ சாக்லெட்டை வாங்கிக் கொண்டு,அந்த பையன் கிட்டே குடுத்து அவன் பேரைக் கேட்டேன்.அவன் உடனே ‘என் பேர் கிரண்’ன்னு சொன்னதும்,என் உடம்பு சதைகள் எல்லாம் என்னை அறியாமலே ஆட ஆரம்பிச்சது” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“என் பையன் பேர் கிரண் தான் மேடம்.அந்தப் பேரைத் தான் என் மாமியார் குழந்தை பொறந்த நாளைக்கு வந்தப்ப வக்கச் சொன்னது என் ஞாபகத்துக்கு வந்தது.அவன் இப்போது எட்டாவது படிக் கிறான்.இன்னைக்கு அவன் ‘ரிஸல்ட்’சொலறா நாளாம்.என்னேப் பாத்து ‘நீங்க யாரு ஆண்டி.எனக்கு ஏன் ‘பைவ்’ஸ்டார்’ சாலெகெட் வாங்கி குடுத்து இருக்கேள்’ன்னு கேட்டான்,நான் அவன் கிட்டே எப்படி ‘நான் உன் அம்மா கிரண்’ன்னு சொல்றது.’உன் அப்பாவுக்கு நான் சொந்தம்’ன்னு ஒரு பொய்யே சொன்னேன் மேடம்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

கீதா மேடம் ரமா சொன்னதை கேட்டுக் கொண்டு சும்மா இருந்தாள்.

“உன் பாடு ரொம்ப கஷ்டம் ரமா.குழந்தேக் கிட்டே உண்மையை சொல்ல முடியாம,நீ தவிச்சு இருக்கே.அதனால்லே தான் நீ ஒரு பொய்யே சொல்லி சமாளிச்சு வந்து இருக்கே” என்று ரமாவுக்கு ஆறுதல் சொன்னாள் கீதா.

‘ஆமாம்,மேடம் நீங்க சொல்றது ‘கரெக்ட்’.அவசரப் பட்டுண்டு நான் கிரண் கிட்டே எப்படி ‘நான் தான் உன் அம்மா’ன்னு சொல்றது” என்று சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“கொஞ்ச நேரம் ஆனதும் பள்ளிக் கூட மணி அடிக்கவே கிரண் என்னேப் பாத்து ‘ஆண்டி, ‘ஸ்கூல் பெல் அடிச்சுட்டது.நான் ‘பஸ்ட் க்லாஸ்லே ‘பாஸ்’ ஆகணும்ன்னு,எனக்கு ‘பெஸ்ட் விஷஸ்’ சொல்லுங்க’ என்று கேட்டதும்,நான் ஒரு நிமிஷம் அசந்து விட்டேன்.பிறகு என்னை சுதாரித்துக் கொ ண்டு அவனைப் பாத்து ‘பெஸ்ட் விஷஸ் கிரண்.நீ நிச்சியமா ‘பஸ்ட் க்லாஸ்லே ‘பாஸ்’ பண்ணுவே’ ன்னு சொன்னதும் கிரண் “ரொம்ப ‘தாங்க்ஸ்’ ஆண்டி”என்று சொல்லி விட்டு பள்ளிக் கூடத்திற்கு சிட்டாய் பறந்து போனான்.அவன் பள்ளிகூடத்துக்கு உள்ளே போனவுடன் நான் ஆபீஸ்’க்கு வந்துட் டேன்” என்று சொன்னாள் ரமா.

“ரமா,இப்போ உன் ஆத்துக்கார் வீடு தெரிஞ்சுடுத்து.நீ ‘சண்டே’ அந்த ஆத்துக்குப் போய் மன் னிப்புக் கேட்டுட்டு,உன் ‘பாமிலியோட’ ¡£யுனைட்’ஆயிடேன்” என்று சந்தோஷமாகச் சொன்னாள்.

உடனே “மேடம்,நான் என் பையனைப் பத்தி பேசிண்டு இருந்தப்ப உங்களுக்கு சொல்ல மற ந்துட்டேன்.என் மாமியாரும் மாமனாரும் தவறிப் போய் விட்டு இருக்கா.கிரணோட யாரோ ஒரு அத் தே பாட்டி தான் ஆத்லே சமைக்கறாளாம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது கீதா தன் கை க் கடிகாரத்தைப் பார்த்து விட்டு “ரமா,மணி ரொம்ப ஆயிடுத்து.மத்தியானம் மூனு மணி ‘மீட்டிங்கு க்கு,எல்லா ‘பைலும்’ நீ ரெடி பண்ணிட்டயா” என்று கேட்டாள்.

உடனே ரமா “நான் எல்லா ‘பைலும்’ நேத்து சாயங்காலமே ரெடி பண்ணி விட்டேன்.நான் எல்லா ‘பைல்’களையும் அந்த மேஜே மேலே என் ‘பியூன் வச்சி இருக்கார்” என்று சொன்னதும் ”சரி,ரமா நான் பாக்கறேன்.ஏதாவது சந்தேகம் இருந்த நான் உன்னே கூப்பிடறேன்.நீ சரியா ரெண் டரை மணிக்கு எல்லாம் என் ‘ரூமு’க்கு வந்துடு” என்று சொன்னதும்,“சரி மேடம்,நான் கரெக்டா வந் துடறேன்” என்று சொல்லி விட்டு ரமா தன் சீட்டுக்கு வந்தாள்.

அன் சீட்டுக்கு வந்த ரமா யோஜனைப் பண்ணினாள்.

’கிரன் அவன் பாட்டி தாத்தா செத்துப் போயிட்டான்னு சொன்னானே.என் மாமனாரையும் மாமியாரையும் பாக்க முடியாதே.நான் ஆத்தே விட்டுப் போனப் பிற்பாடு ,அவா எல்லாரும் என்ன கஷ் டப் பட்டுண்டு வந்தாளோ.மாமியார் போன பிற்பாடு கிரணுடைய யாரோ ஒரு அத்தேப் பாட்டி தான், அவா மூனு பேருக்கும் சமைச்சுப் போட்டுண்டு வந்து இருக்காப் போல இருக்கு.நாம கிரணப் பாத்தப்ப இதே எல்லாம் கேட்டுண்டோம்.அவன் ஆத்து விலாசத்தைக் கேக்கவில்லையே.இன்னியோ டு அவன் பள்ளீ கூடம் மூடி இன்னும் ரெண்டு மாசம் கழிச்சித் தானே தோறக்கப் போறன்னு சொன் னானே கிரண்.எப்படி நாம அவரைக் கண்டு பிடிச்சுப் பேசப் போறோம்’ என்று கவலைப் பட்டாள் ரமா.
கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீனாள்.

பிறகு அவளுக்கு கிரண் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது,

’அவரும்’ கிரணும் தினமும் ‘இஸ்கானு’க்கு சாயங்காலம் போவா.அங்கே அவர் கொஞ்சம் ‘சோ ஷியல் சர்விஸஸ்’ பண்ணீட்டு,கொஞ்ச நேரம் தியானமும் பண்ணுவார்’ன்னு சொன்னானே.அதனால் லே அவா ஆத்து ‘அட்ரஸ்’ தெரியாததாலே,நாம் நாளைக்கு சாயங்காலா ‘இஸ்கானுக்கு’ப் போனா, அவரே சந்திச்சு பேச முடியும்.நாளைக்கு சாயங்காலமா நாம அந்த ‘இஸ்கான்’க்கு நிச்சியமா போக ணும்’ என்று முடிவு பண்ணினாள் ரமா.
கிரண் அவன் வகுப்பில் வந்து உட்கார்ந்துக் கொண்டான்.அவனுடன் மற்ற மாணவர்களும் மாணவிகளும் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.எல்லோர் முகத்திலேயும் ஒரு ‘டென்ஷன்’ இருந்தது.

அவன் வகுப்பு வாத்தியார் வகுப்புக்கு வந்தார்.

தன் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு,தன் மூக்குக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டு அவரிடம் படித்த எட்டாம் வகுப்பு மாணவர்களின் பா¢ஷை ‘ரிஸல்டை’ வாசிக்க ஆரம்பித்தார்.

அவர் “இந்த வருஷம் நம்ம வகுப்பிலே முதல் ராங்க் வாங்கி இருக்கும் பையன் பேர் கிரண். அவன் மொத்தம் ஆறு நூறு மார்க்குக்கு,ஐநூத்தி எண்பது மார்க் வாங்கி இருக்கான்” என்று சொல்லி விட்டு கிரணை மேடைக்கு வர சொன்னார் வகுப்பு வாத்தியார்.கிரண் வந்ததும் அவன் கையைப் பிடி த்து குலுக்கி “வெல் டண் கிரண்.யூ ஹாவ் கம் பஸ்ட்”என்று சொல்லி அவனை புகழ்ந்தார் வகுப்பு வாத்தியார்.பிறகு கிரணை கீழே இறங்கிப் போக சொல்லி விட்டு மற்ற மாணவர்களும்,மாணவிகளும் வாங்கி இருக்கும் மார்க்கைச் சொல்லி விட்டுப் போனார் அந்த வாத்தியார்.

வாத்தியார் கிளம்பிப் போன பிறகு எல்லா மாணவர்களும் மாணவிகளும் கிரணின் கையைப் பிடித்து குலுக்கி “கங்கிராட்ஸ் கிரண்” என்று சொன்னார்கள்.கிரண் எல்லோரையும் ‘தாங்க்’ பண்ணி னான்.பிறகு எல்லா மாணவர்களும் மாணவிகளும் வீட்டுக்குக் கிளம்பிப் போனார்கள்.

கிரண் வீட்டுக்கு வந்ததும் தன் பள்ளிக் கூடப் பையை வைத்து விட்டு “அத்தேப் பாட்டி,நான் தான் என் ‘க்லாஸ்’லே ‘பஸ்ட் மார்க் ‘வாங்கி பாஸ் பண்ணி இருக்கேன்.நான் மொத்தம் ஆறு நூறு மார் க்குக்கு,ஐநூத்தி எண்பது மார்க் வாங்கி இருக்கேன்” என்று சொன்னதும் சுஜாதா கிரணைப் பார்த்து “கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குடா கிரண்.நீ இந்த மாதிரியே எல்லா வகுப்பிலேயும் நன்னா படிச்சு ‘க்லாஸ் பஸ்ட்டா’ வரணும்” என்று சொல்லி அவன் தலையை வருடி விட்டாள்.

பிறகு கிரணுக்கு தட்டைப் போட்டு சாப்பாடு போட்டாள்.

சாயங்காலம் சுரேஷ் வந்ததும்,வராததும் கிரண் அவர் கிட்டே ஓடிப் போய் “அப்பா,அப்பா நான் தான் என் ‘க்ளாஸ்லே’ ‘பஸ்ட் மார்க்’ வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்.நான் மொத்தம் ஆறு நூறு மார்க்குக்கு,ஐநூத்தி எண்பது மார்க் வாங்கி இருக்கேன்ப்பா” என்று சொன்னதும் ரொம்ப சந்தோஷப் பட்டு “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கிரண்.நீ இதே மாதிரி ஒன்பதாவதிலே இருந்து ‘ப்லச் டூ’ வரைக்கும் நன்னா படிச்சு எல்லா ‘க்ளாஸ்’லேயும் ‘பஸ்ட் மார்க்’ வாங்கணும்”என்று சொன்னதும் கிர ண் உடனே “நான் ஒன்பதாவதிலே இருந்து ‘ப்லச் டூ’ வரைக்கும் எல்லா ‘க்லாஸ்லேயும் நன்னா படிச்சு எல்லா ‘க்ளாஸ்’லேயும் ‘பஸ்ட் மார்க்’ வாங்குவேன்ப்பா” என்று ‘காண்பிடண்டா’ க சொன்னான்.

சுரேஷ் சுஜாதா கொடுத்த ‘டிபனை’ சாப்பிட்டு விட்டு’ ‘டீ’யைக் குடித்து முடித்தவுடன்,கிரண் “அப்பா,நான் சொல்ல மறத்துட்டேன்.இன்னிக்கு காத்தாலே ஒரு ஆண்டி எனக்கு ரெண்டு ‘பைவ் ஸ்டார்’ சாக்லெட்டை வாங்கிக் கொடுத்து என் பேரைக் கேட்டா.நான் ‘என் பேர் கிரண்’ன்னு சொ ன்னேன்.அப்புறமா நான் அந்த ஆண்டியேப் பாத்து ‘நீங்க யார் ஆண்டி.ஏன் எனக்கு இந்த ரெண்டு ‘பைவ் ஸ்டார்’ சாக்லெட்டைவாங்கிக் குடுத்து இருக்கேள்’ன்னு கேட்டேன்.அதுக்குஅந்த ஆண்டி ‘நான் உங்க அப்பாவுக்கு சொந்தம்’ன்னு சொன்னா.யாருப்பா அந்த ஆண்டி.அந்த ஆண்டியே உங்க ளுக்கு தெரியுமா.நீங்க அந்த ஆண்டியே பாத்து இருக்கேளாப்பா” என்று கேட்டவுடன் சுரேஷ் ஆச்சரி யப் பட்டான்.
’யார் நம்ம கிரணுக்கு ரெண்டு ‘சாக்லெட்டை’ வாங்கிக் குடுத்து விட்டு ‘நான் உங்க அப்பாவுக் கு சொந்தம்’ன்னு சொல்லி இருப்பா.இந்த டெல்லியிலே கிரணை யாருக்குமே தெரியாதே’ என்று சுரே ஷ் கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீணான்.அவனுக்கு ஒன்னும் புரியவில்லை.

“கிரண்,எனக்கு எந்த ஆண்டியையும் தெரியாதே.உனக்கு அந்த ஆண்டி ஏன் ரெண்டு ‘பைவ் ஸ்டார்’ சாக்லெட்டை வாங்கித் தந்து இருக்கான்னு எனக்குத் தெரியலே.அந்த ஆண்டியே ஒரு வேளே நான் நேரேப் பாத்தா எனக்குத் தெரியலாம்”என்று சொல்லி விட்டு “வா கிரண்,நாம ‘இஸ்காணு’க்கு கிளம்பலாம் இன்னிக்கு வெள்ளிக் கிழமை.நிறைய பேர் வருவா” என்று சொல்லி விட்டு,அவன் போட் டுக் கொண்டு இருந்த சாதாரண ‘டிரஸ்ஸை’ கழட்டி விட்டு,காவி ‘டிரஸ்ஸை’ போட்டுக் கொண்டு ரெடி ஆனான்.
சுஜாதாவிடம் சொல்லிக் கொண்டு சுரேஷ் கிரணை அழைத்துக் கொண்டு ‘இஸ்கானு’க்கு தன் ‘ஸ்கூட்டா¢ல்’ கிளம்பினான்.

ரமா வெள்ளிக் கிழமை சாயங்காலம் ஆபீஸ் முடிந்ததும்,கார் டிரைவர் அவளை பங்களாவுக்கு கொண்டு வந்து விட்டதும்,அவ¨னைப் பார்த்து “ஹா£ஷ்,நீ நாளைக்கு சாயங்காலம் ஒரு நாலு மணி க்கு என் பங்களாவுக்கு வா.நான் கொஞ்சம் வெளியே போகணும்” என்று சொன்னதும் அந்த டிரைவர் “சரி,மேடம் நான் நாளைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு வறேன்”என்று சொல்லி காரை பூட்டி விட்டு, கார் சாவியை ரமாவிடம் கொடுத்தான்.

சனிக் கிழமை வந்தது.

அன்று நாள் பூராவையும் ஒரு மணியை ஒரு யுகமாகக் கழித்து வந்தாள் ரமா.மணி நாலடித் ததும் கார் டிரைவர் ஹா£ஷ் பங்களாவுக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினான். ரமா எழுந்து போய் வாசல் தவைத் திறந்து,வந்து இருப்பது ஹா£ஷ் என்று தெரிந்ததும்,உள்ளே வந்து கார் சாவியை கொ ண்டு வந்து அவனிடம் கொடுத்து விட்டு “ஹா£ஷ்,நீ காத்துக் கொண்டு இரு.நாம சரியா ஐஞ்சு மணி க்குக் கிளம்பலாம்” என்று சொன்னாள்.

உடனே ஹா£ஷ் ”சரி,மேடம்,நான் காரை ‘க்ளின்’ பண்ணி விட்டு ரெடியா இருக்கேன்” என்று சொல்லி விட்டு ரமாவிடம் இருந்து கார் சாவியை வாங்கிக் கொண்டு போனான்.
உள்ளே வந்த ரமா சமையல் காரர் செய்து இருந்த ‘டிபனை’ சாப்பிட்டு விட்டு, ‘டீ’யையும் குடி த்து விட்டு தன்னை சாதாரணமாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு, தான் தினமும் ‘ஆபீஸ்’க்கு கிளம்பு வதற்கு முன் ஒரு சின்ன பூஜையை பண்ணி விட்டு கிளம்பிப் போகும் அம்பாள் படத்துக்கு முன்னால் நின்றுக் கொண்டு “அம்மா,அவரும்,கிரணும் என் கூட இந்த பங்களாவுக்கு வந்து என்னோட காலம் பூராவும் இருக்கணும்.அதுக்கு நீ தான் எனக்கு அனுக்கிரஹம் பண்ணனும்” என்று வேண்டிக் கொண் டு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணீனாள்.

பிறகு தன் புடவையை சரி செய்துக் கொண்டு,சரியாக ஐந்து மணிக்கு பங்களாவை விட்டு வெளியே வந்து காரில் ஏறிக் கொண்டாள்.காரில் ஏறீனதும் ரமா டிரைவரைப் பார்த்து ”ஹா£ஷ்,காரை ’இஸ்கான்’ கோவிலுக்கு ஓட்டிண்டுப் போ” என்று சொன்னாள்.

ரமா பங்களா ‘இஸ்கான் கோவிலுக்கு மிக அருகாமையிலே இருந்ததால் ரமா ‘இஸ்கான்’ கோவிலுக்கு ஐந்தரை மணிக்கு எல்லாம் வந்து விட்டாள்.

டிரைவரைப் பார்த்து “ஹா£ஷ்,எனக்கு இந்த கோவில்லே கொஞ்சம் ‘டைம்’ ஆகும்.நீ காரை ‘பார்கிங்க்’ போட்டு விட்டு காரிலேயே இரு.நான் கிளம்பத் தயாராக இருக்கும் போது,உனக்கு ஒரு ‘மிஸ் கால்’ தறேன்”என்று சொல்லி விட்டு காரை விட்டு மெல்ல கீழே இறங்கினாள் ரமா.

ரமா காரை விட்டு கீழே இறங்கினதும் ஹா£ஷ் காரை ஓட்டிப் போய் விட்டான்.கோவிலை நெரு ங்க,நெருங்க அவள் உடல் எல்லாம் பதைப் பதைத்தது.

ஒரு பயம் வேறு சூழ்ந்துக் கொண்டது.

’எப்படி அவரை ஏறெடுத்துப் பாக்கப்போறோம்.அவரிடம் என்ன பேசப் போறோம்.நாம பாத்தாலும் அவர் என்னை ஏறெடுத்துப் பாப்பாரா.’நம்மை விட்டு விட்டு ஓடிப் போன இவ இப்போது என் கிட்டே எதுக்கு வந்து இருக்கா’ன்னு நினைச்சு,கோவத்லே கத்துவாரா.ஓடிப் போன நீ என்னை விட்டு ஓடிப் போனதாகவே இருக்கட்டும்.மறுபடியும் என் வாழ்க்கைலே குறுக்கிடாதே’ன்னு,கத்தி என்னை விரட்டிஅடிப்பாரா.அப்படி பண்ணா நாம என்ன பண்றது.கிரணையும்,அவரையும் விட்டுட்டு, நான் தனியா இந்த பங்களாவுக்கு வந்து இருக்கணுமா.பகவானே,எனக்கு இந்த சோதனயே தராதே.என்னா ல் தாங்கிக்கவே முடியாது.இதுக்கா நான் ‘சிவில் சர்விஸஸ்’ பா¢¨க்ஷ எழுதி ஒரு IAS ஆனேன். என் வாழக்கை சூன்யம் ஆயிடுமே.எனக்கு ஆத்துக்காரர்,குழந்தே இருந்தும்,நான் ஒரு தனி மரமா அந்த பங்களாலே வாழ்ந்துண்டு வரணுமா’ போன்ற பல கேள்விகள் அவள் மனத்தை துளைத்தது.

ரமா ‘இஸ்கான்’லே இருந்த ஒரு கடையிலே ரெண்டு ‘பைவ் ஸ்டார்’ சாக்லெட்டை வாங்கி தன் ‘ஹாண்ட் பாக்கில்’ வைத்துக் கொண்டாள்.மெல்ல மனதை கல்லாக்கிக் கொண்டு ‘இஸ்கான்’ உள்ளே நுழைந்தாளே ஒழிய, ‘நாம அவர் கிட்டே என்ன பேசப் போறோம்’ என்று புரியாமல் யோஜனைப் பண் ணிக் கொண்டு இருந்தாள்.

அங்கு வேலை பண்ணிக் கொண்டிருந்த ஓருவரிடம் போய் ‘தியானம்’ பண்ணும் இடம் எது என்று கேட்டு தெரிந்துக் கொண்டாள் ரமா.மெல்ல ஓரமாகவே போய் ஒரு தூண் மறைவில் நின்றுக் கொண்டு அந்த இடம் முழுவதும் ஒரு நோட்டம் விட்டாள்.நிறைய பேர்கள் ‘தியானம்’ பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.

அங்கே கிரணையும் காணோம்,அவள் கணவரையும் காணோம்.ரமாவுக்குக் கவலையாக இரு ந்தது.கோவில் வாசலையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ரமா.

சற்று நேரத்திற்கெலாம் தூரத்தில் சுரேஷ் அவன் ‘ஸ்கூட்டா¢ல்’ கிரணை ஏற்றிக் கொண்டு, வந்து,‘இஸ்கான்’ ‘ஸ்கூட்டர்’ ‘ஸ்டாண்டிலே’ ‘ஸ்கூட்டரை’ நிறுத்தி விட்டு,மெல்ல கிரணை இறக்கி விட்டு, பிறகு தானும் இறங்கிக் கொண்டான்.

அவள் கணவரும்,கிரணும் வந்து ‘இஸ்கானு’க்கு வந்துக் கொண்டு இருந்தார்கள்.

சுரேஷ் முழு காவி உடை அணிந்து இருந்தான்.அவன் தாடியும் மீசையும் வளர்த்துக் கொண்டு பார்பதற்கு சாமியாரைப் போல இருந்தான்.சுரேஷைப் பார்த்த ரமாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

‘என்ன இவர் ஒரு சன்னியாசியைப் போல காவி ‘டிரஸ்ஸ¤டன்’ தாடி மீசை எல்லாம் வளத்து ண்டு இருக்காறே.இவர் ஏன் இப்படி இருக்கார்.ஒரு வேளை நான் இவரே விட்டுட்டு ஓடிப் போனதா லே இருக்குமா’.’நான் ரமா கிட்டே ரொம்ப ஆசையாத் தானே இருந்தேன்.என் கிட்ட கூட ஒரு வார் த்தை சொல்லிட்டுப் போகலயே இந்த ரமா என்கிற விரக்தியா இருக்குமோ’ என்று நினைத்தாள் ரமா.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *