ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 2,667 
 

அத்தியாயம்-26 | அத்தியாயம்-27 | அத்தியாயம்-28

உடனே சுரேஷ் கவலைப் பட்டுக் கொன்டே அப்பா படுத்துக் கொண்டு இருந்த பெட்’கிட்டே வந்து உட்கார்ந்தான்.

அங்கே இருந்த ஒரு நர்ஸ் “சார்,இவர் இப்போ மயக்கமா இருக்கார்.இவர் மயக்கம் தெளிஞ்ச பிற் பாடு நான் அவருக்கு குடிக்க ‘ஜூஸ்’ தறேன்.நீங்க அவருக்கு மயக்கம் தெளீஞ்ச பிற்பாடு என்னே கூப்பிடுங்க” என்று சொல்லி விட்டு வெளியே போனாள்.

சுரேஷ் அவன் அப்பாவையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.

ரெண்டு மணி நேரம் ஆகியும் வரதனுக்கு மயக்கம் தெளியவில்லை.சுரேஷ் பயந்துப் போனான். அவன் உடனே வெளீயே வந்து அந்த ‘நர்ஸிடம்’ “எங்க அப்பாவுக்கு இன்னும் மயக்கமே தெளியலே யேங்க.நீங்க வந்து கொஞ்சம் பாக்கறீங்களா” என்று பயந்துடன் கேட்டான்.அந்த நர்ஸ் “நீங்க போங்க, நான் வந்து பாக்கறேன்” என்று சொல்லி சுரேஷை அனுப்பி விட்டாள்.

சுரேஷ் தன அப்பா பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டு அவரையே பார்த்துக் கொண்டு இருந் தான்.வரதன் கண்ணை முழிக்காமலே படுத்துக் கொண்டு இருந்தார்.

‘நர்ஸ்’ வந்து வரதனை கொஞ்சம் உலுக்கவே வரதன் மெல்ல் தன் கண்களை திறந்தார்.

உடனே அந்த ‘நர்ஸ்’ வரதனுக்கு குடிக்க கொஞ்சம் ஜூஸ் கொடுத்தாள்.வரதன் மெல்ல அந்த ‘ஜூசை’க் குடித்தார்.போன உயிர் சுரேஷூக்கு வந்தது,

அவன் சுவாமிக்கு தன் நன்றியை சொன்னான்.

ரெண்டு நாள் ஆனதும் டாகடர் வந்து சுரேஷைப் பார்த்து “நீங்க இவரை இப்போ வீட்டுக்கு இட்டுக் கிட்டு போவலாம்.இவரை ரொம்ப ஜாக்கிறதையா பாத்து கிட்டு வாங்க.இவர் ‘ஹார்ட்’ ரொம்ப வீக்கா இருக்கு.இவருக்கு ‘பை பாஸ் சர்ஜா¢’ வேறே நடந்து இருக்கு.இவர் எந்த காரணத்தைக் கொண் டும் நான் குடுக்கும் ‘ஹார்ட்’ மாத்திரைங்களை ஒரு நாளைக்கு ரெண்டு வேளை தவறாம போட்டுக் கிட்டு வரணும்.எண்னை,நெய் கொழுப்பு சக்தி இருக்கிற சாப்பாட்டை எல்லாம் சாப்பிடக் கூடாது. சாப்பாட்லே வெறுமே வெந்த காய் கறிங்க,மோர் மட்டும் குடுங்க.பழங்கள் குடுங்க.எல்லாத்துக்கும் மேலே இவர் எந்த விஷயத்துக்கும் ரொம்ப ‘எமொஷனல்’ ஆவக் கூடாது.காத்தாலேயும் சாங்காலமும் நடக்கச் சொல்லுங்க.அவர் ‘வெயிட்’ தூக்கக் கூடாது.நிறைய மாடிப் படி எல்லாம் ஏறக் கூடாது”என்று ‘ஸ்டிரிக்டாக’ சொல்லி அனுப்பினார்.

சுரேஷ் “டாக்டர்,நீங்க சொன்னா மாதிரி நான் அப்பாவை ரொம்ப ஜாக்கிரதையா கவனிச்சுண்டு வறேன்” என்று சொல்லி விட்டு அப்பாவை ஒரு ஆடோவிலே அழைத்துக் கொண்டு வந்து வீட்டிலே விட்டு விட்டு அத்தையிடம் டாக்டர் சொன்ன எல்லா விவரமும் சொன்னான்.

உடனே சுஜாதா “நீ கவலைப் படாதே சுரேஷ்.டாக்டர் சொன்னா மாதிரி ஆகாரம் நான் அப்பா வுக்கு போட்டுண்டு வறேன்” என்று கவலையுடன் சொன்னாள்.
சுரேஷ் ‘மெடிக்கல் ஷாப்பு’க்குப் போய் டாக்டர் எழுதிக் கொடுத்து இருக்கும் ‘ஹார்ட்’ மாத்தி ரைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து அப்பா கிட்டே கொடுத்து “அப்பா, டாக்டர் சொன்னா மாதிரி நீங்க மறக்காம ‘ஹார்ட்’ மாத்திரைகளை ரெண்டு வேளையும் போட்டுண்டு வாங்கோ.டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” என்று சொன்னதும் வரதன் “சரி சரேஷ்”என்று சொன்னாரே ஒழிய, அவருக்கு தன் மணைவி ராஜம் ‘அகாலமா’ தன்னை விட்டுப் போனது மனதை வெகுவாக பாதித்து இருந்தது.
சுரேஷ்க்கு அப்பா தினமும் ரெண்டு மாடி ஏறி இறங்குவது ஞாபகம் வரவே அவன் உடனே “அப்பா,நீங்க தினமும் கிரணை அழைத்துக் கொண்டு வறேள்.கடைக்குப் போய் காய்கறி எல்லாம் வாங்கிண்டு வறேள்.இனிமே நீங்க இத்தனை தடவை எல்லாம் மாடி ஏறக் கூடாது.அதனால்லே நான் இன்னும் ரெண்டு நாள் லீவு ‘எக்ஸ்டெண்ட்’ பண்ணி விட்டு,தரை மட்டதில் இருக்கிற ஒரு ‘ஆமா’ வாடகைக்கு பார்த்துண்டு வறேன்” என்று சொல்லி விட்டு வெளியே போனான்.

வரதனுக்கு BP ஏற்கெனவே இருந்து இருக்கு.அது அவருக்கு நன்றாகத் தொ¢யும்.’குடும்பம் இருந்த நிலையிலே அவர் ராஜத்திடமும் சொல்ல முடியாது,சுரேஷிடமும் சொல்ல முடியாதே’ என்று நினைத்து சும்மா இருந்துண்டு வந்தார்.

இப்போது ராஜம் ‘போன’ வருத்தமும் சேர்ந்து அவர் ‘ஹார்ட்டை’ இன்னும் ‘வீக்காக’ ஆக்கி விட்டு இருந்தது

ராஜத்துடன் நாற்பத்தைந்து வருஷ மண வாழக்கை வாழ்ந்தவர் இல்லையா வரதன்!!.

அடிக்கடி தன் மனதில் ‘ராஜம் யார் கிட்டேஎப்படியோ.என்னே நன்னா தான் பாத்துண்டு வந்தா எனக்கு ஒரு குறையும் வக்கலையே அவ.இப்படி என்னையும் சுரேஷையும்,குழந்தை கிரணையும் தவிக்க விட்டுட்டு ‘அகாலமா’ பகவான் கிட்டே போய் சேந்துட்டாளே.சுஜாதா மட்டும் இங்கே வந்து இருக்கேன்னு சொல்லா விட்டா,நாம சமையல் எல்லாம் எப்படி பண்ணிண்டு வந்து இருக்கப் போறோ ¡ம்’ என்று நினைத்து அடிக்கடி ரொம்ப வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தார்.

வெளியே போன சுரேஷ் அவனுக்குத் தொ¢ந்த ஒரு ‘ப்ரோக்கரை சந்தித்து “சார்,நான் வினோபா தெருவில் ஒரு ரெண்டாவது மாடியிலே இருக்கிற ‘ப்லாட்லே’ இருந்து வறேன்.என் அப்பாவுக்கு திடீர் ன்னு ‘ஹார்ட் அபரேஷன்’ பண்ண வேண்டிய நிர்பந்தம் வந்து அதே நான் பண்ணீ இருக்கேன்.எனக் கு அந்த தெருவிலேயே தரை மட்டத்லே இருக்கிற ‘ப்லாட் ஒன்னு வாடகைக்குக் காட்ட முடியுமா. என் பையன்அந்தத் தெருக் கோடியிலே இருக்கிற பள்ளீ கூடத்லே படிச்சுண்டு வறான்” என்று கேட்ட வுடன்,அந்த ‘ப்ரோக்கர்’ சுரேஷை அழைத்துக் கொண்டு போய் அவன் வசித்து வந்த தெருவிலே இரு ந்த ஒரு தரை மட்ட ஒரு ‘பெட் ரூம் ப்லாட்டை’ காட்டினான்.

அந்த ‘ப்லாட்’ சொந்தக் காரர் அந்த ‘ப்லாட்டி’ன் வாடகையையும் சொல்லி ஆறு மாச ‘அட்வாண்ஸ¤ம்’ கேட்டார்.

உடனே சுரேஷ் அந்த ‘ப்லாட்’ சொந்தக் காரர் கிட்டே தன் ‘ப்ராப்லெத்தை’ விவரமாச் சொல்லி விட்டு,அவர் கேட்ட வாடகையைக் கொடுப்பதாயும்,’அட்வான்ஸை’ மட்டும் மூனு மாசமா குறைத்துக் கொள்ளும் படி கேட்டான்.நெடு நேரம் இருவரும் நிறைய பேசின பிறகு, ‘ப்லாட்’ சொந்தக்காரர் ‘அட் வான்ஸை’ ரெண்டு மாசம் குறைப்பதாயும்,ஆனா நாலு மாச ‘அட்வான்ஸ்’ தர வேண்டும் என்று பிடி வாதமாகக் கேட்டார்.

சுரேஷ் வேறே வழி இல்லாமல்,அப்பா உடம்பு நலத்தை நினைச்சி,அந்த சொந்தகாரர் சொன்ன ‘கண்டிஷனுக்கு’ ஒத்துக் கொண்டு “சரி,சார்,நான் நீங்க சொன்னபடியே நான் நாலு மாச அட்வான்ஸ்’ தறேன்” என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தான்.

தனக்கு வேறே ‘ப்லாட்’ வாடகைக்குக் கிடைத்ததும் சுரேஷ் தான் இருந்து வந்த ‘ப்லாட்’ சொந்தக்காரர் கிட்டே தன் அப்பா ‘கண்டிஷனை’ விவரமாகச் சொல்லி,தான் இந்த ‘ப்லாட்டை’ காலி பண்ணப் போவதாய் சொன்னான்.அவர் உடனே “நீங்க குடுத்த அறு மாச ‘அட்வான்ஸை’ என்னா லே இப்போ உடனே தர முடியாது.நான் இப்போ ரெண்டு மாச ‘அட்வான்ஸை’த் தறேன்.நீங்க இந்த ‘ப்லாட்’லே இன்னும் நாலு மாசம் இருந்து விட்டு போங்க” என்று சொன்னதும் சுரேஷ் ஆடிப் போய் விட்டான்.

சுரேஷ் அந்த சொந்தக் காரரைப் பார்த்து,தன் பணக் கஷ்டத்தை எல்லாம் விவரமாக சொல்லி “சார்,நீங்க தயவு செஞ்சி எனக்கு நாலு மாச ‘அட்வான்ஸை’ இப்போ குடுங்க.மீதி ரெண்டு மாச அட் வான்ஸை அப்புறமா குடுங்க” என்று கெஞ்சிக் கேட்டான்.

அந்த சொந்தக்காரர் சுரேஷ் மேலே பா¢தாப பட்டு சுரேஷ் சொன்னதை ஒத்துக் கொண்டார்.

அடுத்த நாளே சுரேஷ் தான் இருந்து வந்த ‘ப்லாட்டை’ காலி பண்ணி விட்டு,தரை மட்டத் திலே இருந்த ‘ப்லாட்டில்’ பாலைக் காய்ச்சி குடித்து விட்டு,வாத்தியரைக் கூப்பிட்டு ஒரு ‘கிருஹப் பிரவேசம்’ பண்ணி விட்டு,தன் சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு,தன் அப்பாவையும் அத் தையயும்,கிரணையு ம்அழைத்துக் கொண்டு அந்த ‘ப்லாட்டு’க்கு குடி வந்தான்.

அந்த ‘ப்லாட்’லே நிம்மதியாக உட்கார்ந்துக் கொண்டு “அப்பா,நீங்கோ இனிமே மாடிப் படி எல்லாம் ஏறவே வேணாம்.கிரணை பள்ளீ கூடம் அழைச்சுப் போறதுக்கு,காய் கறி எல்லாம் வாங்கிண் டு வரதுக்கு எல்லாம் இந்த ‘ப்லாட்’ ரொம்ப சௌகா¢யமா இருக்கும்” என்று சொன்னான்.

உடனே வரதன்” சுரேஷ், நான் சொல்றேன்னு என்னே தப்பா எடுத்துக்காதே.என் ஆபரேஷனு க்கு கிட்டத் தட்ட மூனு லக்ஷ ருபாய் செலவழிச்சு இருக்கே.இந்த ‘ப்லாட்டுக்கு நாலு மாச ‘அட்வான் ஸ்’ குடுத்து இருக்கே.பழைய ப்லாட் சொந்தக்காரர் ஆறு மாச ‘அட்வன்ஸை’த் திருப்பித் தராம,நாலு மாச ‘அட்வான்ஸை’த் தான் தந்து இருக்கார்.நீ என் உடம்புக்காக இவ்வளவு பணம் செலவு பண்ண ணுமா.இன்னைக்கு இல்லே என்னைக்காவது ஒரு நாள் நான் இந்த ‘லோகத்தே’ விட்டு போய் தானே ஆகணும்… “ என்று சொல்லி அலுத்து கொண்டார்.

உடனே சுஜாதா “அண்ணா அப்படி எல்லாம் ‘அபசகுன’மா பேசாதேள். நீங்க இன்னும் ரொம்ப வருஷம் சுரேஷோடவும் கிரணோடவும்,என்னோடவும் இருந்து வரணும்.கிரண் கல்யாணம் பண்ணிக் கிறதே நீங்க உங்க கண்ணாலே பாக்கணும்.அது வரைக்கும் நீங்க எங்க கூட இருந்து வரணும்” என்று சொன்னாள்.

சுரேஷூம் “ஆமாம்ப்பா,அத்தே சொல்றது சரி.நீங்க எங்க கூட இன்னும் ரொம்ப வருஷம் சந் தோஷமா இருந்துண்டு வரணும்ன்னு நானும் ஆசைப் படறேன்” என்று சொன்னதும்,வரதன் தன் மனதில் சிரித்துக் கொண்டு சும்மா இருந்தார்.

வரதனுக்கு ராஜத்தின் பிரிவு வேதனையைக் கொடுத்துக் கொண்டு இருந்தது.

அவர் டாக்டர் கொடுத்த மத்திரைகளை தவறாம சாப்பிட்டுக் கொண்டு வந்துக் கொண்டு இருந் தாலும் அவர் நெஞ்சு வலித்துக் கொண்டு இருந்தது.
ஒரு நாள் நெஞ்சு வலி கொஞ்சம் அதிகமாக இருந்தாதால் அவர் சுரேஷைக் கூப்பிட்டு “சுரேஷ், தினமு எனக்கு நெஞ்சு லேசாத் தான் வலிச்சுண்டு இருக்கும்.நான் பொறுத்து கொண்டு இருந்தேன். ஆனா இன்னைக்கு நெஞ்சு வலி கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கு.ஏன்னே எனக்குத் தொ¢யலே” என் று சொன்னதும் சுரேஷ் பயந்துப் போய் அப்பாவைப் பார்த்து “அப்பா, நீங்க டாகடர் குடுத்த மாத்திரை யை மறக்காம ரெண்டு வேளையும் போட்டுண்டு வறேளா.இல்லே அடிக்கடி மறந்து போட்டுக்காம இருந்து விடறேளா” என்று கேட்டான்.
உடனே வரதன் “சுரேஷ்,நான் டாக்டர் குடுத்த மாத்திரையை தவறம ரெண்டு வேளையும் போட்டுண்டுத் தான் வறேன்.ஆனா என்னமோ தொ¢யலே.இன்னைக்கு நெஞ்சு வலி கொஞ்சம் ஜாஸ் தியா இருக்கு” என்று சொன்னவுடன் சுரேஷ் ஆபீஸ்க்கு ‘லீவு’ போட்டு விட்டு அப்பாவை ஒரு ஆட் டோவில் ஏற்றிக் கொண்டு ‘ஹாஸ்பிடலுக்கு’ ஓடினான்.
ஹாஸ்பிடலில் இருந்த டாக்டர் வரதனை நன்றாகப் பா¢சோதனைப் பண்ணி விட்டு சுரேஷைப் பார்த்து “இவர் ‘ஹார்ட்’ ரொம்ப ‘வீக்கா’ இருக்கு.கூடவே ‘பல்ஸ¤ம்’ ரொம்ப கம்மியா இருக்கு.நீங்க இவரை உடனே ‘அட்மிட்’ பண்ணுங்க” என்று சொன்னதும் சுரேஷ் அப்பாவை ‘அட்மிட்’ பண்ணினான்.

வீட்டுக்கு ‘போன்’ பண்ணீ அத்தைக்கு சமாசாரத்தை சொன்னான்.

டாக்டர்கள் வரதனை உடனே ICUக்குள் அழைத்துப் போய் ‘ஆக்ஸிஜன்’ வைத்து அவரை கண்காணித்து வந்தார்கள்.ஒரு டாக்டர் ICUவிட்டு வெளியே வந்து சுரேஷிடம் “உங்க அப்பாவுக்கு நாங்க ஆக்ஸிஜன் வச்சு இருக்கோம்.அவர் ‘பல்ஸை’ மானிட்டர் பண்ணீ வறோம்.அவர் ‘பல்ஸ்’ ‘இம்ப் ரூவ்’ ஆனாத் தான் நாங்க அவரை பத்தி ஏதாவது சொல்லமுடியும்.நீங்க நல்லா கடவுளை வேண்டிக் கிட்டு வாங்க” என்று சொல்லி விட்டு அந்த டாக்டர் ICUக்குள் போய் விட்டார்.

சுரேஷ் தன் அத்தைக்கு அப்பாவின் ‘கண்டிஷனை’ சொல்லி விட்டு,சுவாமியை நன்றாக வேண்டிக் கொண்டு வரச் சொன்னான்.அவனும் அங்கே போட்டு இருந்த ஒரு சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டு சுவாமியை வேண்டிக் கொண்டு இருந்தான்.

சுரேஷ் சொன்னதைக் கேட்டு சுஜாதா மிகவும் கவலைப் பட்டாள்.உடனே அவள் சுவாமி படத் திற்கு முன்னால் நின்றுக் கொண்டு வேண்டிக் கொண்டு வந்தாள்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை அந்த டாக்டர் ICU வை விட்டு வெளியே வந்து “உங்க அப்பா ‘பல்ஸ்’ ‘இம்ப்ரூவே’ ஆகலே.குறைஞ்சுக் கிட்டே வறது.நாங்க எங்களால் முடிந்த எல்லா முயற் சியும் பண்ணீ கிட்டு வறோம்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

டாக்டர் சொன்னதைக் கேட்ட சுரேஷூக்கு அப்பாவை பற்றீன கவலை இன்னும் அதிகம் ஆகி விட்டது.அவன் தன் அத்தைக்கு ‘போனிலே’ டாக்டர் சொன்னதைச் சொல்லி விட்டு அழ ஆரம்பித் தான்.

உடனே சுஜாதா “அழாதே சுரேஷ்,நான் சுவாமியே வேண்டிண்டு வறேன்.அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது.அவருக்கு ‘பல்ஸ்’ சீக்கிரமா ‘இம்ப்ரூவ்’ ஆயிடும்” என்று தேத்தறவு சொன்னாள்.

ஆனால் விதி என்று ஒன்று இருக்கே.நாம என்ன சுவாமியை வேண்டிக் கொண்டு வந்தாலும். என்ன நடக்க வேணுமோ அது நடந்து தானே ஆகணும்.

ரெண்டு மணி நேரம் கழித்து அந்த டாக்டர் ICU வை விட்டு வெளியே வந்து “சாரி,சார்,நாங்க எவ்வளவு முயற்சி பண்ணியும் உங்க அப்பாவின் உயிரை காப்பாத்த முடியலே.அவர் ‘பல்ஸ்’ ‘இம்ப் ரூவ்’ ஆகாம குறைஞ்சிக் கிட்டே வந்து, இப்போ அவர் ‘பல்ஸ்’ சுத்தமா நின்னுப் போய்,அவர் இறந்துப் போயிட்டாரு.எங்களாலே அவரைக் காப்பாத்த முடியலே” என்று சொல்லி விட்டு ICUக்குள்ளே போய் விட்டார்.

சுரேஷ் அழுதுக் கொண்டே தன் அத்தையை ‘போனி’லே கூப்பிட்டு “அத்தே,அப்பா ‘பல்ஸ்’ ‘இம்ப்ரூவ்’ ஆகாம குறைஞ்சிண்டே வந்து,அவர் நம்மை எல்லாம் விட்டுட்டு,போயிட்டார்” என்று சொல்லி அழுதுக் கொண்டு இருந்தான்.சுஜாதாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

அவள் உடனே “என்ன சொல்றே சுரேஷ்.அண்ணா நம்மே எல்லாம் விட்டுட்டுப் போயிட்டாரா” என்று கேட்டு அவளும் அழ ஆரம்பித்தாள்.

சுரேஷ் ‘ஹாஸ்பிடலு’க்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டி விட்டு ஒரு ‘வேனில்’அப்பாவின் ‘பூத உடலை’ எடுத்துக் கொண்டு தன் ‘ப்லாட்டு’க்கு வந்தான்.

விஷயம் கேள்விப் பட்ட சுந்தரும்,ரேகாவும் உடனே சுரேஷ் வீட்டுக்கு வந்தார்கள்.இருவரும் சுரேஷூக்கும்,சுஜாதாவுக்கும் ஆறுதல் சொன்னார்கள்.

அடுத்த நாள் சுரேஷ் வாத்தியாரை வரவழைத்து அப்பாவுக்கு எல்லா ஈமக் காரியங்களையும்’ செய்து முடித்தான்.சுந்தரும் ரேகாவும் அவர்கள் வீட்டுக்குப் போய் விட்டார்கள்.
பன்னண்டு நாள் காரியம் ஆனதும்,பதி மூன்றாம் நாள் ‘ப்லாட்டை’ புண்யாவசம் பண்ணினான்.

அப்பா தவறிப் போன பிறகு சுரேஷூக்கு ஒரு வேலையும் பண்ண பிடிக்கவில்லை.அவன் ‘ஆபீஸ்’க்கு போகாமல் வெறுமனே வீட்டில் இருந்து வந்தான்.அத்தையிடம் “ரமா இந்த ஆத்தே வீட்டுட்டுப் போயிட்டா.அப்புறமா அம்மா போயிட்டா.கொஞ்சம் வருஷம் ஆனதும் அப்பாவும் இப்போ என்னே விட்டுட்டு போயிட்டா.கிரண் ஒருவனுக்காகத் தான் இனிமே நான் வாழ்ந்துண்டு வரணும்” என்று சொல்லி வேதனைப் பட்டான்.

சுஜாதா சுரேஷைப் பார்த்து “சுரேஷ்,நீ இப்படி சும்மா ஆத்லே இருந்து வந்தா,உன் மனம் இன் னும் வேதனைப் படும்.நீ பராக்கா ஆபீஸ் போயிண்டு வா.உன் ‘ப்ரெண்ட்ஸ்கள்’ கூட மனம் விட்டுப் பேசு.உன் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்” என்று சொன்னதும் சுரேஷ் தன் மனதை மாற்றிக் கொண்டு அடுத்த நாளில் இருந்து ‘ஆபீஸ்’க்கு போக ஆரம்பித்தான்.

சுரேஷ் ‘ஆபீஸ்’ போகும் போது,கிரணை தன் ‘ஸ்கூட்டா¢ல்’அழைத்துக் கொண்டு போய் பள்ளிக் கூடத்தில் விட்டுப் விட்டுப் போய் கொண்டு இருந்தான்.சுஜாதா பன்னண்டு மணிக்கு, வீட்டை பூட்டிக் கொண்டு,கிளம்பிப் போய் கிரணுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வந்துக் கொண்டு இருந்தாள்.

அன்று ஞயிற்றுக் கிழமை.

அத்தை கொடுத்த ‘காபி’யைக் குடித்து விட்டு யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான்.

திடீர் என்று சுரேஷூக்கும் அவனுடன் காலேஜில் படித்த சுதீர் ஞாபகம் வந்தது.

சுதீர் சுரேஷிடம் “இந்த காலேஜ் படிப்பு படித்து முடிச்ச பிறகு,நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளாம ‘இஸ்கான்’லே சேந்து ‘ஷோஷில் சர்வீஸ்’ பண்ணப் போறேன்” என்று சொன்னது ஞாப கத்துக்கு வந்தது.

உடனே சுரேஷ் சுதீரை ‘இஸ்கான்லே’ சந்தித்து பேச விரும்பினான்.

அத்தைடம் சொல்லி விட்டு தன் ‘ஸ்கூட்டரை’ எடுத்துக் கொண்டு ‘இஸ்கானுக்குப் போய் சுதீரைத் தேடினான்.அங்கு இருந்த ஆபீஸிக்குப் போய் “சார்,என் பேர் சுரேஷ்.நான் காலேஜ் படித்து க் கொண்டு இருந்தபோது என்னுடன் சுதீர் என்று ஒரு ‘ப்ரெண்ட்’ படித்து வந்தான்.அவன் காலேஜ் படிப்பு முடித்து விட்டு ‘இஸ்கான்லே’ சேர்ந்து ‘ஷோஷியல் சர்வீஸ்’ பண்ணப் போறேன்’ என்று சொன் னான்.நான் அவனைப் பார்க்கணும்.அவன் எங்கே இருப்பான் என்று நீங்கள் கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று ஹிந்தியில் கேட்டான்.

அவர் உடனே “நீங்க நேரே போய் அங்கே இருக்கிற ‘ஹால்லே’ இருக்கிறங்க யார் கிட்டேயாவது கேளுங்க.அவங்க உங்களுக்கு அவர் எங்கே இருக்கார்ன்னு சொல்லுவாங்க” என்று சொல்லி அனுப் பினார்.சுரேஷ் அவர் சொன்னா மாதிரி போய் அந்த ஹாலுக்குப் போய் இங்கும்,அங்கும் பார்த்துக் கொண்டு இருந்தான்.அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை.

சுதீர் காவி ஜிப்பா போட்டுக் கொண்டு,காவி வேஷ்டியும் கட்டிக் கொண்டு தாடி மீசையுடன் இருந்தான்.அவன் அங்கு இருந்த ஒரு பெரியவா¢ன் கையைப் பிடித்துக் கொண்டு மெல்ல அழைத்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தான்.சுரேஷூம் ஒன்னும் சொல்லாமல் சுதீர் பின்னாலேயே போய்க் கொண்டு இருந்தான்.

சுதீர் அந்த பெரியவரை அழைத்துக் கொண்டு நிறைய பேர்கள் “ஹரே ராமா,ஹரே கிருஷ்ணா” என்று சொல்லிக் கொண்டு இருந்த பஜனை ஹாலில் ஒரு ‘வீல்’ சோ¢ல் உட்கார வைத்தான்.

அந்த பெரியவரை விட்டு விட்டு சுதீர் திரும்பியதும் சுரேஷ் அவனைப் பார்த்து” சுதீர் என்னே தொ¢தா” என்று ஹிந்தியிலே கேட்டவுடன் அவன் உடனே “உன்னே மறக்க முடியுமா சுரேஷ்.நாம ரெண்டு பேரும் ஒன்னா காலேஜ்லே ஒன்னா படிச்சோமே,நீ இப்போ ரொம்ப மாறி இருக்கே” என்று சொல்லி சுரேஷக் கட்டிக் கொண்டான்.

சுரேஷ் சுதீருடன் அரை மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தான்.பேச்சின் நடுவிலே சுரேஷ் தன் கதை பூராவையும் அவன் கிட்டே சொன்னான்.சுரேஷ் சொன்ன விஷயங்களை கேட்டு சுதீர் மிக வும் கவலைப் பட்டான்.சுரேஷ் வாழ்க்கையை மிகவும் வெறுத்து வருவதையும்,அவன் குரலில் ஒரு விரக்தியும் இருப்பதைக் கவனித்தான் சுதீர்.

சுதீர் சுரேஷைப் பார்த்து “சுரேஷ்,நீ ஏன் சாயங்காலத்திலே இந்த ‘இஸ்கான்’க்கு வந்து என்னை போல ‘ஷோஷியல் சர்வீஸ்’ பண்ணீ வரக் கூடாது.இந்த மாதிரி நீ பண்ணிக் கொண்டு வந்தா உனக்கு நல்ல மன அமைதி கிடைக்குமே.நீ சந்தோஷமா கூட இருந்து வரலாம்.நீ இஷ்டப் படறாதா இருந்தா சொல்லு.நான் ‘ஆபீஸ்’லே சொல்லி,உனக்கு இந்த மாதிரி காவி ‘டிரஸ்ஸை’ உனக்கு இலவசமா தரச் சொல்றேன்.நீ உன் ஆபிஸ் வேலே முடிஞ்சதும், வீட்டுக்குப் போய் நல்லா குளித்து விட்டு,சாயங்கா லம் ஆறு மணிலே இருந்து ஒன்பது மணி வரைக்கும் இங்கே ‘ஷோஷியல் சர்வீஸ்’ பண்ணி விட்டு, இங்கே குடுக்கற பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு வீட்டுக்குப் போயேன்” என்று சொன்னதும் சுரேஷூக் கு சுதீர் சொன்ன ஐடியா ரொம்ப பிடித்து இருந்தது.

உடனே சுரேஷ் சுதீரைப் பார்த்து “நீ சொன்ன ஐடியா எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.எனக்கும் இந்த ‘ஷோஷியல் சர்வீஸ்’பண்ண ரொம்ப பிடிக்கும்.நீ என்னை ஆபீஸ்க்கு அழைச்சுப் போய் என் னை அந்த ஆபீசருக்கு ‘இன்ட்ரடியூஸ்’ பண்ணி எனக்கு ‘காவி டிரஸ்சை’ வாங்கித் தர முடியுமா” என்று ஆர்வமாகக் கேட்டான்.

உடனே சுதீர் சுரேஷ ‘இஸ்கான் ஷோஷியல் சர்வீஸ்’ஆபீஸ்க்கு அழைத்துப் போனான்.

சுதீர் அங்கே இருந்த ஆபீஸா¢டம் சுரேஷ் கதையை முழுக்கச் சொல்லி விட்டு “சார்,சுரேஷ் என் கூட காலேஜிலே ஒன்னா படிச்சான்.படிக்கற நாள்ளே இருந்து சுரேஷூக்கு ரொம்ப கடவுள் பக்தி உண்டு.நிறைய உலக அறிவு உள்ளவன்.நல்ல ‘நோபுள் தாடஸ்’ உள்ளவன்.அவன் இப்போது ஒரு ‘ஆபீஸி’ல் வேலே செஞ்சு வரான்.அவன் வாழ்க்கையிலே பல ‘ட்ராஜடிகளே’ சந்திச்சு வந்து இருக் கான்.அவன் தினமும் ‘இஸ்கானுக்கு’ வந்து சாயங்காலம் ஆறு மணிக்கு வந்து ஒன்பது மணி வரை க்கும் ‘ஷோஷியல் சர்வீஸ்’ பண்ண ஆசைப் படறான்.இவனை என்னைப் போல ஒரு ‘ஷோஷியல் சர்வீஸ் வாலிண்டியரா’ சேத்துக் கொள்ள முடியுமா” என்று கேட்டான்.

உடனே அந்த ஆபீஸர் சந்தோஷப் பட்டு “எனக்குக் கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் இவரை நிச்சியமா ஒரு ‘ஷோஷியல் சர்வீஸ் வாலிண்டியரா’ சேத்துக்கறேன்” என்று சொல்லி விட்டு சுரேஷைப் பார்த்து “சுரேஷ்,நீங்க ‘இஸ்கான்’லே ஒரு ‘ஷோஷியல் சர்வீஸ் வாலியண்டயரா’ வேலே செஞ்சு வந்தா,உங்க மனசுக்கு ரொம்ப அமைதி கிடைக்கும்.நேரம் கிடைக்கும் போது நீங்க இங்கே தியானமும் பண்ணீ வரலாம்”என்று சொல்லி விட்டு சுரேஷ் பேர்,வீட்டு விலாசம்,’போன்’ நமபர் எல்லாம் வாங்கிக் கொண்டு,ஒரு ‘இஸ்கான் பாரத்தை’க் கொடுத்து, அதை நன்றாகப் படித்து விட்டு,பிறகு கை எழுத்தைப் போடச் சொன்னார்.

சுரேஷ் அந்த பாரத்தை வாங்கிப் படித்தான்.அதில் ‘நான் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், மனப் பூர்வமாக பகவான் ‘கிருஷ்ணனுக்கும்’,அவரை சேவிக்க வருபவர்களுக்கும்,என்னால் முடிந்த எல்லா சேவைகளை பண்ண ஒத்துக் கொள்கிறேன்’ என்று ‘கண்டிஷன்’ இருந்தது.

உடனே சுரேஷ் மிகவும் சந்தோஷப் பட்டு அந்த ‘இஸ்கான் பாரத்தை’ மிகவும் இஷ்டப் பட்டு கை எழுத்துப் போட்டு அந்த ‘ஆபீசர்’ கிட்டே கொடுத்தான்.
அந்த ஆபீசர் அந்த ‘பாரத்தை’ சுரேஷிடம் இருந்து வாங்கிக் கொண்டு,அவனுக்கு மூனு காவி ஜிப்பாவையும்,வேஷ்டியையும்,மூன்று தடவை ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்று சொல்லி விட்டு கொடுத்தார்.கூடவே சுரேஷைப் பார்த்து “நீ ‘இஸ்கான்’க்கு உள்ளே இருக்கும் போது எல்லாம் சதா ‘ஹரே ராமா,ஹரே கிருஷ்ணா” என்கிற தாரக மந்திரத்தை சொல்லி வரணும்” என்று சொன்னார்.

சுரேஷ் அவரைப் பார்த்து “சார்,நீங்க சொன்னா மாதிரியே.நான் செஞ்சி வறேன்.நான் முதல்லே ‘ஆபீஸ்’ நாட்களில் சாயங்காலம் ஆறு மணிக்கு இங்கே வறேன்.ஞாயிற்றுக் கிழமைகளில் காத்தாலே யும்,சாயங்காலமும் இங்கே வறேன்” என்று சொல்லி விட்டு,அவனும் மூனு தடவை ‘ஹரே ராமா,ஹரே கிருஷ்ணா” என்று சொல்லி விட்டு அவர் கொடுத்த ‘டிரஸ்களை’ வாங்கிக் கொண்டான்.

பிறகு கொஞ்ச நேரம் சுதீருடன் பேசிக் கொண்டு இருந்து விட்டு, அவனை ரொம்ப ‘தாங்க்’ பண்ணி விட்டு வீட்டுக்கு வந்தான்.

வீட்டுக்கு வந்து சுரேஷ் ‘இஸ்கானி’ல் நடந்த எல்லா விஷயத்தையும் விவரமாக சொல்லி விட்டு “அத்தே,எனக்கு ‘இஸ்கான்’லே ஷோஷியல் சர்வீஸ் வாலிண்டியரா’ வேலே செஞ்சு வறது ரொம்ப பிடிச்சு இருக்கு.நான் தினமும் ‘ஆபீஸ்’லே இருந்து ஆத்துக்கு வந்ததும்,குளிச்சு விட்டு இந்த காவி ‘டிரஸ்சை’ப் போட்டுண்டு ‘இஸ்கான்’லே ‘ஷோஷியல் சர்வீஸ் பண்ணிண்டு வந்து,டைம் கிடைக்கும் போது அங்கே கொஞ்சம் தியானமும் பண்ணிண்டு வரலாம்ன்னு இருக்கேன்.நாத்தி கிழமைளே நான் காத்தாலேயும்,சாயங்காலமும் ‘இஸ்கானுக்கு’ப் போய் வரகாம்ன்னு இருக்கேன்.அப்படி பண்ணா என் மனசுக்கு ரொம்ப அமைதி கிடைக்கும்ன்னு நான் நினைக்கிறேன்” என்று சொன்னான்.
உடனே சுஜாதா “சுரேஷ்,எனக்கு உன் மன வருத்தம் ரொம்ப நன்னா புரியறது.அப்படி நீ ‘இஸ்கானு’க்கு போய் வறது உனக்கு மன அமைதி குடுக்கணும்ன்னு நீ நினைச்சா,நீ தாராளமா போய் வா.எனக்கு ஒரு ‘ப்ராப்லெம்மும்’ இல்லே” என்று சொன்னதும் “ரொம்ப தாங்ஸ் அத்தே” என்று சொல்லி அத்தையை ‘தாங்க்’ பண்ணினான் சுரேஷ்.
அவன் மனம் இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருந்ததை உணர்ந்தான் சுரேஷ்.

கொஞ்ச நேரமானதும் சுரேஷ் தன் அத்தையைப் பார்த்து “அத்தே,நான் ‘ஆபீஸி’ல் இருந்து ஆத்துக்கு வந்ததும்,குளிச்சு விட்டு,நீங்க குடிக்கற ‘டிபனையும்’ ‘டீயை’யும் குடிச்சு விட்டு, கிரணை என் கூட ‘இஸ்கானு’ க்கு அழைச்சுண்டு போறேன்.அவன் ‘இஸ்கான்’லே,அவன் ‘ஹோம் வர்க்கை’ பண்ணீட்டு, பாடங்களை படிச்சுண்டு வரட்டும்.நானும் கிரணும் அங்கே கிடைக்கற பிரசாதத்தை சாப் பிட்டு ஆத்துக்கு வருவோம்.அதனால்லே நீ ராத்திரி பொழுதோட சாப்பிட்டுட்டு ‘ரெஸ்ட்’ எடுத்து ண்டு வாங்ங்கோ” என்று சொன்னான்.
உடனே “ சரி,சுரேஷ்,நீ சொன்னா மாதிரி நான் பண்றேன்”என்று சொன்னாள் சுஜாதா.

கிரண் சாயங்காலம் பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வந்ததும் சுஜாதா அவனுக்கு சாப்பிட ‘டிபனும்’ ‘டீ’யும் கொடுத்து வந்தாள்.கிரணும் அத்தைப் பாட்டி கொடுத்த ‘டிபனை சாப்பிட்டு விட்டு, ‘டீ’யை குடித்து விட்டு,அவன் பள்ளீக் கூட பையுடன் ரெடியாக இருந்து வந்தான்.

சுரேஷ் சொன்னது போல அவன் தினமும் ஆபிஸ் விட்டு வீட்டுக்கு வந்ததும்,குளித்து விட்டு,அவன் அத்தை கொடுத்த ‘டிபனையும்’ ‘டீ’யும்,குடித்து விட்டு,‘இஸ்கானி’ல் கொடுத்த காவி ஜிப்பாவை போட்டுக் கொண்டு,காவி வேஷ்டியை கட்டிக் கொண்டு,கிரணை அவன் ஸ்கூட்டா¢ல் அழைத்துக் கொண்டு ‘இஸ்கான்’க்குப் போய் ‘சோஷியல் சர்வீஸ்’ பண்ணி விட்டு,நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் தியானமும் பண்ணிக் கொண்டு வந்தான்.கிரண் ‘இஸ்கான்’ தியான மண்டபத்தில் உட்கார்ந்துக் கொண்டு அவன் பள்ளீகூட ‘ஹோம்’வர்க்கை’ எல்லாம் போட்டு விட்டு,அவன் பாடங்க ளை படித்துக் கொண்டு வந்தான்.

மணி ஒன்பது ஆனதும் சுரேஷூம்,கிரணும் ‘இஸ்கான்’லே கொடுக்கற பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு,வீட்டுக்கு வந்து படுக்கப் போய்க் கொண்டு இருந்தார்கள்.

இப்படி பண்ணிக் கொண்டு வந்தது சுரேஷூக்கு நிறைய மன அமைதியைக் கொடுத்து வந்தது.

சுரேஷ் அத்தையிடம் “நான் தினமும் ‘இஸ்கானுக்கு போய் வறது எனக்கு ரொம்ப நிம்மதியே குடுத்துண்ண்டு வறது அத்தே” என்று சொல்லி சந்தோஷப் பட்டான்.

சுஜாதா ‘எப்படியோ,என் பெரிய அண்ணன் பையன் நிம்மதியா இருந்துண்டு வறானே.அது போறும் எனக்கு’ என்று நினைத்து கொண்டு, சுவாமியைப் பார்த்து ‘பகவானே,என் அண்ணா பைய னை இப்படியா நிம்மதியா வச்சுண்டு வா’ என்று வேண்டிக் கொண்டாள்.

அந்த வருஷம் முடிஞ்சதும் கிரண் ஆறாவது வகுப்பில் சேர்ந்து படித்து வந்தான்.

பள்ளிக் கூடம் விட்ட பிறகு கிரண்,அவன் ‘ப்ரெண்ட்ஸ்களுடன்’ ஓரமாக வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்தான்.வீட்டுக்கு வந்ததும் கிரண்அவன் அத்தே பாட்டி கொடுத்த ‘டிபனை’ சாப்பிட் டு விட்டு,’டீ’யை குடித்து விட்டு, தன் பள்ளி கூட பையை எடுத்துக் கொண்டு ரெடியாக இருப்பான். சாயங்காலம் ‘ஆபீஸி’ல் இருந்து வந்ததும் சுரேஷ்,கிரணை அழைத்துக் கொண்டு ‘இஸ்கானு’க்குப் போய் கொண்டு இருந்தான்.கிரண் ‘இஸ்கானில்’ பள்ளீகூட ‘ஹோம்’வர்க்கை’ எல்லாம் போட்டு முடிச்சு விட்டு,அவன் பள்ளிப் பாடங்களை படித்துக் கொண்டு வந்தான்.சுரேஷ் ‘இஸ்கானில்’ ‘ஷோஷியல் சர்வீஸ்’ பண்ணிக் கொண்டும்,நேரம் கிடைத்த போது தியானமும் பண்ணீ வந்தான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *