ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2021
பார்வையிட்டோர்: 2,976 
 
 

அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 | அத்தியாயம்-26

அம்மா கண் கலங்குவதை கவனித்தாள் ரமா.

‘என்னடா இந்த அம்மா அது அரைக்கும் உங்க ஆத்துக்க்காரர் பொறுத்துண்டு இருந்து வரணு மேன்னு சொல்றா.அவர் என்னே நீ மேலே படின்னு சொன்னதாலே தான் நாம படிக்க இங்கே வந் தோம்.அவர் எனக்காக நிச்சியமா காத்துண்டு இருப்பார்’ என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டு, ரமா “ஆமாம்மா.ஆனா நீ கவலைப் படறா மாதிரி எல்லாம் ஒன்னும் ஆகாதும்மா.அவர் எனக்காக நிச் சியமா காத்துண்டு இருப்பார்” என்று சொன்னாள் ரமா.

ரமா வேலை விவரம் எல்லாம் ராமநாதனுக்கு முன்னமே தெரிந்து இருந்ததால்,அவர் ரமாவும், மங்களமும் மாறி மாறி பேசுவதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருந்தார்.
ஒரு மாசம் ஆனதும் ரமாவுக்கு ‘நேர் முக தேர்வு’க்கு ஆர்டர் வந்தது.

அந்த தேர்வு டெல்லியிலே இருந்தது.

‘நேர் முக தேர்வு’க்கு முந்தைய நாள் ரமா டெல்லிக்குக் கிளம்பிப் போனாள்.ஒரு ஹோட்டலில் ஒரு சின்ன ‘ரூம்’ எடுத்துக் கொண்டு,‘நேர் முக தேர்வு’க்கு படித்துக் கொண்டு வந்தாள்.படித்துக் கொ ண்டு வந்த போது நடு நடுவே ‘நாம இப்போ டெல்லிக்கு வந்து இருக்கோமே.இந்த ‘நேர் முக தேர்வு’ முடிஞ்ச பிறகு,நம்ம ஆத்துக்குப் போய் ஆத்துக்காரரையும்,குழந்தையையும் பார்த்துட்டு வரலாமா’ என்று யோஜனைப் பண்ணினாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் ‘இப்போ என்ன ஆயிடுத்து.இன்னும் எவ்வளவோ பாக்கி இருக்கே. அது எல்லாம் நல்லபடியா ஆகணுமே’ என்று நினைக்கும் போது அவளுக்கு துக்கம் பொத்துக் கொண்டு வந்தது.

தன் துக்கத்தை அடக்கிக் கொண்டு படித்துக் கொண்டு வந்தாள்.

ரமாவின் ‘நேர் முக தேர்வு’க்கு மிக நன்றாக முடிந்தது.ரமா மிகவும் சந்தோஷப் பட்டாள்.

’ஏர் போர்ட்’டுக்கு வந்து ஒரு ‘ப்ளைட்’ பிடித்து சென்னைக்கு வந்து சேர்ந்தாள் ரமா.வீட்டுக்கு வந்ததும் ரமா அம்மா,அப்பாவிடம் தன் ‘நேர் முக தேர்வு’ மிக நன்றாக முடிந்து இருப்பதை சொல்லி சந்தோஷப் பட்டாள்.

ராமநாதனும்,மங்களமும் சந்தோஷப் பட்டார்கள்.

ஒரு மாசம் ஆனதும் டெல்லியில் இருந்து ‘ரமா ‘செலக்ட்’ ஆகி விட்டாள் என்றும்,டேராடூனில் ரெண்டு வருஷம் ‘டிரேனிங்கில்’ சேர ஆர்டர் வந்தது.
ரமாவுக்கும் ராமநாதனுக்கும் மங்களத்துக்கும் ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.

ரமா டேராடூன் போக தனக்கு வேண்டிய குளிர் ஆடைகள் எல்லாம் வாங்கிக் கொண்டாள். குறி ப்பிட்ட நாளில் ரமா சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணி விட்டு,தன் அம்மா,அப்பாவுக்கும் நமஸ்காரம் பண்ணி விட்டு,அவர்களையும் கூட்டிக் கொண்டு,தன் ரெண்டு பெட்டிகளை எடுத்துக் கொண்டு ‘ஏர் போர்ட்டு’க்கு வந்தாள்.
‘ப்லேன்’ ஏறுவதற்கு முன் ரமா தன் அம்மா அப்பாவைப் பார்த்து “ஜாக்கிறதையா இருந்துண்டு

வாங்கோ.என்னேப் பத்தி வீணா கவலை படாம இருங்கோ.நான் சீக்கிரமா என் குடும்பத்தோடு போய் சந்தோஷமா இருந்துண்டு வருவேன்”என்று கண்களில் கண்ணீர் தளும்ப சொல்லி விட்டுப் போனாள்

சிறகு முளைத்த பறவைப் போல் ரமா பறந்துப் போனாள்.

ராமநாதனும் மங்களமும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

ரமா வீட்டிலே இல்லாததால் மங்களம் தெரியமாக தன் கணவா¢டம் “உங்களுக்கு ரமா பண்ணது வேணுமானா பிடிச்சு இருக்கலாம்.எனக்கு அத்தனை பிடிக்கலே.எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு.இவ ஒரு ‘கலெக்டர்’ ஆகி,அவ குடுமபத்தோடு போய் சேந்து இருக்க இன்னும் அஞ்சோ ஆறோ வருஷம் ஆகப் போறது.அது வரைக்கும் அந்த கர்வி சம்மந்தி மாப்பிள்ளைக்கு வேறே கல்யா ணம் பண்ணீ வக்காம இருக்கனும்.மாப்பிள்ளையும் ரமா தான் ஓடிப் போயிட்டாளே,குழந்தை ரொம்ப சின்னவனா இருக்கானேன்னு நினைச்சு வேறே கல்யாணம் பண்ணிக்காம இருக்கணும்.இல்லையா சொல்லுங்கோ.நேக்கு இதே ரமா இருக்கும் போது கேக்க ரொம்ப பயமா இருந்தது” என்று கேட்கும் போதே அவளுக்கு நெஞ்சை அடைத்தது.

மங்களம் உடனே தன் கணவரைப் பார்த்து “எனக்கு கொஞ்சம் ஜலம் குடுங்கோ.நெஞ்சே ரொ ம்ப அடைக்கறது” என்று சொன்னதும் ராமநாதன் ஓடிப் போய் ஒரு ‘டம்ளா¢ல்’ ஜலத்தை கொண்டு வந்து மங்களத்திடம் கொடுத்து “மங்களம்,இந்தா சீக்கிரமா இந்த ஜலத்தைக் குடி.உனக்கு ஏற்கென வே BPஇருக்கு.நீ இந்த மாதிரி எல்லாம் யோஜனைப் பண்ணீண்டு வந்து,உன் BPயை ஜாஸ்தி ஆக்கி க்காதே.அப்புறமா டாக்டர் உனக்கு ‘ஹெவி டோஸ்’ BP மாத்திரையே எழுதிக் குடுப்பார்.அதே நீ சாப் பிட்டுண்டு வர வேண்டி இருக்கும்” என்று எச்சா¢த்தார்.

ராமநாதன் கொடுத்த ஜலத்தை வாங்கி குடித்து விட்டு மங்களம்”நீங்கோ சொல்றது எனக்கு நன்னா புரியறது.ஏதோ ஆதங்கத்லே நான் ‘எமோஷனல்’ ஆயிட்டேன்.இனிமே ஆகாம நான் பாத்துக் கறேன்” என்று சொன்னளே ஓழிய மங்களம் ரமாவை பற்றி மிகவும் வேதனைப் பட்டுக் கொண்டு வந்தாள்.

மங்களம் கொஞ்சம் ‘நார்மல்’ ஆனதும் ராமநாதன் நிதானமாக”மங்களம்,அதுக்கென்ன நீ சொ ல்லி ‘எமொஷனல்’ ஆயிட்டே.எனக்கு மட்டும் அந்த கவலை இல்லையா சொல்லு.நாம என்ன பண் றது சொல்லு.அந்த மாதிரி எல்லாம் ஆகாம இருக்கணும்ன்னு நாம ரெண்டு பேரும் அந்த பகவானேத் தான் வேண்டிண்டு வரணும்.நாம வேறே ஒன்னும் பண்ண முடியாது” என்று சொல்லி தன் கண் களைத் துடைத்துக் கொண்டார்.

ரமா ‘ட்ரெயினிங்க்’க்கு போய் ஒரு வருஷம் தான் ஆகி இருக்கும்.

அன்று எழுந்ததும் மங்களம் “எனக்கு நெஞ்சே ரொம்ப வலிக்கறது” என்று சொல்லி விட்டு பல் லைக் கூட தேய்க்கப் போகாமல் ‘சோபா’வில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டாள்.
பயந்துப் போன ராமநாதன் உடனே வாசலில் போய்க் கொண்டு இருந்த ஒரு ஆட்டோவைப் கூப்பிட்டு மங்களத்தை ஆட்டோ டிரைவர் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு “கொஞ்சம் மெதுவா ஓட்டீண்டு போப்பா.இந்த அம்மாவுக்கு உடம்பு ரொம்ப சா¢ இல்லே” என்று சொல்லி விட்டு அருகில் இருந்த ‘ஹாஸ்பிடலு’க்கு ஓடினார்.
பாதி தூரம் போய்க் கொண்டு இருந்த போதே மங்களம் தலை அவர் மேல் சாய்ந்து விட்டது. ஹாஸ்பிடல் வாசலுக்கு வந்து வாசலில் இருந்து ஒர் ‘ஸ்டெச்சா¢ல்’ மங்களத்தை ஆட்டோ டிரைவர்

உதவியுடன் மெல்ல படுக்க வைத்து ‘எமர்ஜென்ஸிக்கு’ போய்,அங்கு இருந்த டாக்டரிடம் காட்டினார்.அவர் மங்களத்தை நன்றாக ‘எக்சாமின்’ பண்ணி விட்டு “இவங்க இறந்துப் போய் இருக்கா ங்க” என்று சொல்லி விட்டு தன் ‘ஸ்டெதஸ்கோப்பை’க் கழட்டினார்.

ராமநாதனுக்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.

ராமநாதன் ‘குலுங்கி’ ‘குலுங்கி’ அழுதுக் கொண்டு இருந்தார்.

அவர் அழுவதைப் பார்த்த அந்த ‘எமர்ஜென்ஸி’ டாக்டர் ராமநாதனைப் பார்த்து “சார்,நான் உங் களுக்கு எங்க ‘ஹாஸ்பிடல்’ ‘வேனை’த் தறேன்.அதிலே நீங்க உங்க சம்சாரத்து ‘பாடியை’ வீட்டுக்குக் கொண்டு போங்க.அந்த ‘வேன்’ வாடகை ஐனுறு ரூபாயை அந்த ‘வேன்’ டிரைவர் கிட்டே குடுத்துடுங்க” என்று சொன்னார்.

ராமநாதன் அவரை ‘தாங்க்’ பண்ணி விட்டு தன் மணவியின் ‘பாடியை’ அந்த வேனில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்து ‘பாடியை’ வீட்டின் ஹாலில் விட்டு விட்டு,அந்த ‘வேன்’ டிரைவா¢டம் ஐனூ று ரூபாயைக் கொடுத்து அனுப்பினார்.ஒரு அரை மணி நேரம் கழித்து ராமநாதன் தன் ‘ஆபீஸ் ப்ரெண்ட்’ ரமணிக்கு போன் பண்ணி,அழுது கொண்டே நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னார்.

சமாசாரம் தெரிந்தவுடனே ரமணி இன்னும் சில ‘ஆபீஸ்’ நண்பர்களை அழைத்துக் கொண்டு ராமநாதன் வீட்டுக்கு ஓடி வந்தார்.வீட்டு வத்தியாரை வைத்துக் கொண்டு ராமநாதன் தன் ‘ஆபீஸ்’ நண்பர்களுடன் தன் மணைவிக்கு எல்லா ‘காரியங்களையும்’ செய்து முடித்தார்.

அடுத்த நாள் ராமநாதன் மங்களம் ‘திடீர்’ என்று இறந்து போன சமாசாரத்தை அழுதுக் கொண் டே டேராடூனில் இருக்கும் ரமாவுக்கு போனில் சொன்னார்.
அப்பா சொன்ன விஷயத்தைக் கேட்டு ஆடிப் போய் விட்டாள் ரமா.

உடனே ரமா “என்னப்பா சொல்றேள்.அம்மாவுக்கு அப்படி திடீர்ன்னு என்ன ஆச்சு.நான் டேரா டூன் கிளம்பி வரும் போது அம்மா நன்னா தான் இருந்தாளே” என்று அழுதுக் கொண்டே கேட்டாள்.

ராமநாதன் “அம்மா, நீ கிளம்பிப் போன பிற்பாடு அம்மா தினமும் உன் ஞாபகமாகவே இருந்து வந்தா.அடிக்கடி அம்மா ‘ரமா ஒரு ‘கலெக்டர்’ ஆகி,அவ குடுமபத்தோடு போய் சேந்து இருக்க இன் னும் அஞ்சோ ஆறோ வருஷம் ஆகப் போறதே.அது வரைக்கும் அந்த கர்வி சம்மந்தி மாப்பிள்ளைக்கு வேறே கல்யாணம் பண்ணீ வக்காம இருக்கனும்.மாப்பிள்ளையும் ரமா தான் ஓடிப் போயிட்டாளே குழந்தை ரொம்ப சின்னவனா இருக்கானேன்னு நினைச்சு,மாப்பிள்ளே வேறே கல்யாணம் பண்ணிக் காம இருக்கணுமே’ன்னு சொல்லி ரொம்ப வருத்தப் பட்டுண்டு வந்தா.இதே நினைச்சிண்டு அம்மா அடிக்கடி ‘எமோஷனல்’ ஆயிண்டு வந்தா.அவ ஏற்கெனவே ஒரு ‘BPபேஷண்ட்’.நேத்து காத்தாலே எழுந்ததும் அம்மா ’எனக்கு நெஞ்சே ரொம்ப வலிக்கறது’ன்னு சொல்லிட்டு பல்லைக் கூட தேய்க்க போகாம ‘சோபா’லே சாய்ஞ்சு உக்கார்ந்துட்டா.நான் உடனே அம்மாவை ஹாஸ்பிடலுக்கு அழைச்சு ண்டு போய் காட்டினேன்.ஆனா அதுக்குள்ளே அம்மா ‘ஹார்ட்’ நின்னுப் போச்சு” என்று சொல்லி அழுதார்.
ரமாவும் அழுதுக் கொண்டே”எனக்கு கேக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.அம்மா என்னேப் பத்தி ரொம்ப கவலைப் பட்டுண்டு வந்து தன் BPயே ஜாஸ்தி ஆக்கிண்டு விட்டா.அன்னைக்கு அந்த BPதான் ஜாஸ்தி ஆயி இருக்கும்.தவிர அம்மா ராத்திரி BPமாத்திரையே போட்டுக்க மறந்துட்டு இரு ப்பா.எனக்கு இந்த ‘ட்ரெனிங்க் பீரியட்லே’ லீவு தர மாட்டாளேப்பா.நான் இப்போ அங்கே நேர்லே வந் து உங்களே பாக்கக் கூட முடியாதேப்பா” என்று சொல்லி அழுதாள்.

உடனே ராமநாதன் “ரமா,நீ அப்படி எல்லாம் பாதி ‘ட்ரெனிங்க் பீரியட்லே’ எல்லாம் லீவு எடுத்து ண்டு எல்லாம் வராதே.உன் முழு ‘ட்ரெனிங்க் பீரியடையும்’ முடிச்சுட்டு அப்புறமா வா” என்று சொன் னதும் ரமா அழுதுக் கொண்டே “சா¢ப்பா” என்று சொல்லி விட்டு ‘போனைக்’ ‘கட்’ பண்ணினாள்.

வருத்த மிகுதியாலும்,கோவத்தாலும் ராமநாதன் மங்களம் இறந்துப் போன சமாசாரத்தை டெ ல்லிக்கு ‘போன்’ பண்ணி சொல்லவில்லை.

திருவண்ணாமலைக்கு மட்டும் ‘போன்’ பண்ணி “ரகுராமா,மங்களம் திடீர்ன்னு மாரே ரெமப அடைக்கறதுன்னு சொன்னா.நான் அவளே ‘ஹாஸ்பிடலு’க்கு ஒரு ஆட்டோவை வச்சுண்டு,அழைச்சு ண்டு போய் காட்டினேன்.மங்களத்தே நன்னா பா¢சோதனை பண்ணீப் பார்த்த டாகடர், அவ ‘ஹார்ட்’ நின்னுப் போச்சுன்னு சொல்லிட்டார்” என்று சொல்லி அழுதார்.

ரகுராமன் அழுதுக் கொண்டே”அக்கா,இப்படி அகாலமா போயிட்டாளே அத்திம்பேர்.அக்காவுக் கு ரமா வாழ்க்கையே நினைச்சு ரொம்ப கவலைப் பட்டுண்டு வந்து இருக்கா போல இருக்கு.எனக்கு கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கே அத்திம்பேர்.நீங்கோ உங்க உடமபே ஜாக்கிறதையாப் பாத்துண்டு வாங்கோ.நான் முடிஞ்சப்ப உங்களுக்கு ‘போன்’ பண்ணி,உங்க உடம்பே பத்தி விசாரிச்சுண்டு வறே ன்” என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீனான்.

‘போனை’ ‘கட்’ பண்ண ரகுராமன் வெகு நேரம் யோஜனைப் பண்ணீனான்.

’பாவம் அத்திம்பேர் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவார்.அக்கா இருக்கும் போது நாம கவலை இல்லாம இருந்து வந்தோம்.ஆனா இப்போ அப்படி இல்லையே.அவர் தனியா இருந்துண்டு வறாரே’ என்று அவன் மனம் ஏங்கியது.

‘நாம ஏன் சென்னைக்குப் போய் அத்திம்பேருக்கு சமைச்சுப் போடக் கூடாது.அக்கா உயிரோடு இருந்தா,அத்திம்பேர் தனியா சமைச்சு சாப்பிட்டுண்டு வர சம்மதிச்சு இருப்பாளா.அக்காவும் அத்திம் பேரும் என் மேலே எவ்வளவு ஆசையா இருந்துண்டு வந்து இருக்கா இத்தனை வருஷமா.அத்திம் பேர் தனியா கஷ்டப் பட்டுண்டு வர வேணாம் இனிமே.நாம இங்கே எதுக்ககாக தனியா இருக்கணும். நாம சென்னைக்குப் போய் அத்திம்பேருக்கு சமைச்சுப் போட்டுண்டு வரலாமே”என்று யோஜனைப் பண்ணினான்.அது தான் ‘சா¢’ என்று அவனுக்கு பட்டது.

அவன் மனசு இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அடுத்த நாளே ரகுராமன் அவன் சமையல் வேலை செய்துக் கொண்டு இருந்த வீட்டுக்கு போய் ” மாமா,நேத்து என் அத்திம்பேர் எனக்கு ‘போன்’ பண்ணீ,என் அக்கா திடீர்ன்னு ‘ஹார்ட் அட்டாக்’ வந்து செத்துப் போயிட்டான்னு சொன்னார்.அவர் பாவம் தனியா இருந்துண்டு சமைச்சு சாப்பிட்டுண் டு வரணும்.என் அக்கா உயிரோடு இருந்தா அவருக்கு இந்த கஷ்டம் இருக்காது.அதனால்லே நான் சென்னைக்குப் போய் அவருக்கு உதவியா சமைச்சுப் போடலாம்ன்னு இருக்கேன்.நீங்க வேறே ஒரு சமையல் காரரை வேலைக்கு வச்சுக்க முடியுமா” என்று தன் கைகளைக் கட்டிகொண்டு பவ்யமாக கேட்டான்.

உடனே அந்த பணக்காரர் “ரகுராமா,நீ எங்களே பத்திக் கவலைப் படாதே.நாங்க வேறே ஒரு சமையல் கார மாமாவை சமையல் வேலேக்கு வச்சுக்கறோம்.நீ சென்னைக்குப் போய் உங்க அத்திம்பே ருக்கு சமையல் பண்ணிப் போட்டுண்டு வா.பாவம் உங்க அக்கா இப்படி திடீர்ன்னு தவறிப் போன பிற் பாடு அவர் தனியா தானே சமைச்சு சாப்பிடணும்.அவருக்கு ரொம்ப கஷ்டமாய் இருக்கும் ”என்று சொ ன்னதும் ரகுராமன் அவருக்கு நன்றி சொல்லி விட்டு அவன் வீட்டுக்கு வந்தான்.

அன்று சாயங்காலமே ரகுராமன் அவன் தங்கி இருந்த வீட்டுகாரரைப் பார்த்து எல்லாம் விஷய மும் விவரமாகச் சொன்னான்.அந்த வீட்டுக்காரரும் ரகுராமன் மேலே பா¢தாபப் பட்டு அவன் கொடு த்து இருந்து மூனு மாச ‘அட்வான்ஸை’திருப்பிக் கொடுத்தார்.

ரகுராமன் தன்னுடைய கையை கூப்பி அவருக்கு தன் நன்றியை சொன்னான்.

அடுத்த நாளே ரகுராமன்,தன் பெட்டியை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து அவன் அத் திம் பேர் வீட்டுக்கு வந்தான்.

ரகுராமனைப் பார்த்த ராமநாதனுக்கு ஆச்சா¢யமாக இருந்தது.

அவர் உடனே “என்ன ரகுராமா,நீ சென்னைக்கு வந்து இருக்கே”என்று கேட்டார்.

உடனே ரகுராமன் “அத்திம்பேர்,நீங்க என் அக்கா திடீர்ன்னு செத்துப் போயிட்டான்னு சொன் னவுடனே,எனக்கு திருவண்ணாமலைலே தனியா இருந்து வர பிடிக்கலே.என் அக்கா இருந்தா அவ உங்களுக்கு சமையல் பண்ணிப் போடுவா.இப்போ நீங்க தானே சமையல் பண்ணிண்டு வரணும். அதனால்லே நான் சமையல் வேலே செஞ்சு வந்த மாமாவைப் பாத்து எல்லா விஷயத்தையும் விவரமா சொல்லிட்டு ‘தனியா இருந்து வரும் என் அத்திம்பேருக்கு சமைச்சுப் போட்டுண்டு அவருக்கு உதவி யா இருந்துண்டு வரணும்ன்னு ரொம்ப ஆசைப் படறே’ன்னு தயங்கிண்டே” சொன்னேன்.

அவர் உடனே என்னே பாத்து ‘ரகுராமா,நீ ஆசைப் படறது போல சென்னைக்குப் போய் உன் அத்திம்பேருக்கு சமைச்சுப் போட்டுண்டு வா.நான் வேறே ஒரு சமையல் கார மாமாவை சமையல் வேலேக்கு வச்சுக்கறேன்’ன்னு சொன்னார்.நான் அவருக்கு ரொம்ப நன்றி சொல்லி விட்டு,நான் இரு ந்த ஆத்தை காலி பண்ணிட்டு,உங்களுக்கு உபகாராம சமைச்சுப் போட்டுண்டு இருக்கலாம்ன்னு இங்கே வந்துட்டேன்” என்று சொன்னான்.

‘அப்படியா ரகுராமா.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீ என்னோடவே இருந்துண்டு வா. நீ எனக்கு சமைச்சுப் போட்டுண்டு இருக்கேங்கறதே பாத்தா உங்க அக்கா மனசு ரொம்ப சந்தோஷப் படும்.நீ சென்னைக்கு வந்து எனக்கு சமைச்சு போட வந்ததுக்கு உனக்கு ரொம்ப ‘தாங்ஸ்’.நீ சென் னைக்கு வந்து எனக்கு சமைச்சுப் போடுவேன்னு,நான் கொஞ்சமும் எதிர்பாக்கவே இல்லே” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் ராமநாதன்.

வீட்டில் ‘பதி மூன்று’ நாட்கள் ‘காரியங்கள்’ முடிந்ததும்,ரகுராமன் தன் அத்திம்பேருக்கு சமை யல் பண்ணீப் போட்டுக் கொண்டு வந்தான்.

ராமநாதன் ‘ரகுராமன் சென்னைக்கு வந்து தனக்கு சமையல் பண்ணீப் போட்டுக் கொண்டு இருக்கான்’ என்கிற விஷயத்தை ரமாவுக்கு ‘போனில்’ சொல்லி சந்தோஷப் பட்டார்.
உடனே ரமா தன் மாமா ரகுராமனை ‘போன்’லே கூப்பிட்டு “ரொம்ப ‘தாங்க்ஸ்’ மாமா உங்களுக்கு.நானே அப்பா பாவம் அவரே தனியா சமைச்சு சாப்பிட்டுண்டு வறணுமேன்னு ரொம்ப கவலை ப் பட்டுண்டு இருதேன்.இப்போ நீங்க சென்னைக்கு வந்து அப்பாவுக்கு சமைச்சுப் போட்டுண்டு வறப் போறேள்ன்னு கேக்க எனக்கு ரொம்ப சந்தோஷமாவும்,நிம்மதியாவும் இருக்கு”என்று சொல்லி ‘போ னை’ ‘கட்’ பண்ணீனாள்.

தன் மனதில் ‘அக்கா மேல் லோகத்லே இப்போ சந்தோஷமா இருந்துண்டு வருவா’ என்று தன் மனதில் சொல்லிக் கொண்டு சந்தோஷமாக தன் அத்திம்பேருக்கு சமைச்சுப் போட்டுக் கொண்டு வந்தான் ரகுராமன்.

’இத்தனை வருஷத்துக்கு அப்புறமா,ஒரு அவசியம் ஏற்பட்டப்போ,நம்ம குடும்பத்துக்கு சமை ச்சு போடற பாக்கியம் கிடைச்சுதேன்னு’ நினைச்சு சந்தோஷப் பட்டான் ரகுராமன்.
ரமா ‘ட்ரெயினிங்கில்’ இருந்து வந்தாலும்,அவள் மனது சதா ‘நாம இந்த ‘ட்ரெயினிங்கை’ நல்ல விதமா முடிச்சுட்டு,சீக்கிரமா டெல்லிக்குப் போய் குழந்தையோடவும்,கணவரோடவும் போய் சந்தோஷ மாக இருந்து வரணும்’ என்று ஆசைப் பட்டுக் கொண்டு இருந்தாள்.

அதற்காக தினமும் கடவுளை வேண்டிக் கொண்டு வந்தாள் ரமா.

ரமா ரெண்டு வருஷ ‘ட்ரெயினிங்கை’ முடித்து விட்டு,அவர்கள் வைத்த பா¢¨க்ஷயிலே ‘பாஸ்’ பண்ணதும்,அவளுக்கு ஹா¢யாணாவில் ஒரு ‘சப் கலெக்டர்’ பதவி கொடுத்து,அதற்கான ஒரு ‘ஆர்டரை’ க் கொடுத்தது மேலிடம்.

ரமா ஒரு வார ‘லீவி’லே சென்னைக்கு வந்தாள்.

வீட்டுக்கு உள்ளே வந்ததும் தன் பெட்டிகளை வைத்து விட்டு,போட்டுக் கொண்டு இருந்த ஷ¥வையும் கழட்டி வைத்து விட்டு,தன் கை கால்களை எல்லாம் நன்றாக கழுவி கொண்டு,நேரே அம்மா படத்துக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு,எழுந்து,அழுதுக் கொண்டு இருந்தாள் ரமா.

ரமாவைப் பார்த்த ராமநாதனுக்கும் ரகுராமனுக்கும் ஆச்சாரியமாக இருந்தது.

இருவரும் உடனே “வா ரமா வா, உன் ‘ட்ரெயினிங்க்’ முடிஞ்சுட்டதா” என்று ‘கோரஸாக’ கேட்டார்கள்.

”என் ‘ட்ரெயினிங்க்’ முடிஞ்சு நான் ‘பாஸ்’ பண்ணிட்டேன்.எனக்கு ஹா¢யாணாவில் ஒரு ‘சப் கலெக்டர்’ பதவிக்கு ஆர்டர் குடுத்து இருக்கா.நான் ஒரு வார லீவ்லே சென்னைக்கு வந்து இருக்கேன். உங்க ரெண்டு பேரையும் பாத்து இந்த சந்தோஷ சமாசாரத்தே சொல்லிட்டு,அம்மா படத்துக்கு ஒரு நமஸ்காரம் பண்ணிட்டு,அந்த வேலையிலே சேரலாம்ன்னு தான் நான் சென்னைக்கு வந்து இருக் கேன்.அம்மா உயிரோடு இருந்தா,’நான் என் ‘ட்ரெயினிங்கை’ நல்ல விதமா முடிச்சுட்டு இப்போ ஒரு ‘சப் கலெக்டரா’ வேலே பண்ணீண்டு வரப் போறேன்’ என்கிற விஷயத்தை கேட்டு ரொம்ப சந்தோஷப் பட்டு இருப்பா.அம்மா சந்தோஷப்படறதே பாக்க எனக்கு குடுப்பணை இல்லே.என் துரதிர்ஷ்டம் அது. என்னே பத்தி கவலைப் பட்டுண்டே,அம்மா இந்த உலகத்தே விட்டுப் போயிட்டா” என்று சொல்லி அழுதாள்.

ராமநாதனும் ரகுராமனும் ரமாவுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

ரெண்டு நாள் ரமா தன் அப்பாவோடவும்,மாமாவோடவும் சந்தோஷமாக இருந்து விட்டு ஹா¢யா ணாவுக்குக் கிளபிப் போனான்.

அடிக்கடி தன் அப்பாவிடமும் மாமாவிடமும் ‘போனி’ல் பேசிக் கொண்டு வந்தாள் ரமா.

ரெண்டு வருஷம் ரமா ஹா¢யாணாவில் ‘சப் க்லெக்டராக’ வேலை செய்த பிறகு அவளை,அந்த ஜில்லாவிலே ஒரு ‘கலெக்டராக’ பதவி உயர்வு கொடுத்தார்கள்.

உடனே ரமா தன் அப்பாவுக்கு போன் பண்ணி “அப்பா,நான் இத்தனை வருஷமா ஆசைப் பட்ட ‘கலெக்டர்’ பதவி எனக்குக் கிடைச்சு இருக்கு.என்னை இந்த ஜில்லாவிலேயே ஒரு ‘கலெக்டரா’ பதவி உயர்வு குடுத்து இருக்கா” என்று சொல்லி சந்தோஷப் பட்டாள்.

உடனே ராமநாதனும் ரகுராமனும் ரமாவுக்கு தங்கள் சந்தோஷத்தை சொன்னார்கள்.

ரமா தன் அம்மாவையும் அப்பாவையும் மனதில் நினைத்துக் கொண்டு ‘தான் ரொம்ப வருஷ மாக ஆசைப் பட்ட ‘கலெக்டர்’ வேலையை தனக்குக் கொடுத்த கடவுளுக்கு தன் நன்றியை மனதார சொல்லிக் கொண்டு அந்த கலெக்டர் ‘சீட்டில்’ உட்கார்ந்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தாள்.

அடிக்கடி தன் அப்பாவிடமும் மாமாவிடமும் ‘போனி’ல் பேசிக் கொண்டு வந்தாள் ரமா.

ஹா¢யாணா மாநிலத்தில் இருந்த ஒரு ஜாதியினர்,மற்றோரு ஜாதியினரோடு சண்டைப் போட்டு வந்துக் கொண்டு இருந்தார்கள்.அந்த சண்டை மிகவும் வலுத்து,ரெண்டு தரப்பினரும் ஹா¢யணாவின் முக்கிய ரோடு ஒன்றில் உட்கார்ந்துக் கொண்டு “தர்ணா” செய்துக் கொண்டு இருந்தார்கள்.

சாதரணமாக ஆரம்பித்த அந்த சண்டை வலுவடைத்து, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தடியால் அடித்து இரண்டு பேர் உயிர் ஆஸ்பத்திரியில் ஊசலாடிக் கொண்டு இருந்தது.

நிலைமையை சமாளிக்க ரமா ‘ஊரடங்கு உத்தரவை’ பிறபித்து விட்டு தன் காரை எடுத்துக் கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்குப் போய்க் கொண்டு இருந்தாள்.
அந்த சமயம் பார்த்து மாமா ரகுராமனிடம் இருந்து ஒரு ‘போன்’ வந்தது.

‘போனை’ ‘ஆன்’ பண்ணிக் கேட்டாள் ரமா.

ரகுராமன் “ரமா,அத்திம்பேர் என்னே ஏமாத்திட்டு,இன்னைக்கு காத்தாலே தூக்கத்திலே அக்கா கிட்டே போய் சேந்துட்டார்.மணி ஏழாயிட்டதேன்னு அவர் ‘ரூமு’க்குப் போய் பாத்தேன்.அவர் மூச்சு பேச்சு இல்லாம படுத்துண்டு இருந்தார்.அவர் உடம்பு ‘ஜில்’ன்னு இருந்தது” என்று அழுதுக் கொண் டே சொன்னான்.
ரமாவுக்கு ஒரு நிமிஷம் உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.

அவள் ‘போனில்’ அழுதுக் கொண்டு இருந்தாள்.

ரெண்டு நிமிஷம் ஆனதும் ரமா தன் சுய நினைவுக்கு வந்தாள்.

“மாமா,அப்பா இப்படி என்னே ஏமாத்திட்டுப் போவார்ன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலே. நான் இருக்கிற இந்த இடத்லே ஒரு கலரவத்தை அமைதிப் படுத்த ‘ஊரடங்கு உத்தரவு’ போட்டு இரு க்கேன்.நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.ரெண்டு பேர் உயிர் ஆஸ்பத்திரியில் ஊசலாடிண்டு இருக் கு.நான் இந்த கலவரத்தே மந்திரி ‘செகரட்டரி’ கிட்டே சொல்லணும்.கலவரத்துக்கு ஒரு சுமுகமான முடிவை பண்ணனும்.அதனால்லே நான் இப்போ சென்னைக்கு வர முடியாது. நீங்கோ அப்பாவுக்கு எல்லா காரியமும் பண்ணிடுங்கோ.எனக்காக காத்துண்டு இருக்க வேணாம்” என்று சொன்னாள்

ரகுராமன் அழுதுக் கொண்டே ”சா¢ ரமா.நீ,உன் வேலேயே கவனிச்சுண்டு செஞ்சு வா.நீ சொன்னபடியே நான் அத்திம்பேருக்கு எல்லா காரியமும் பண்ணீட்டு,’பதி மூனு’ நாள் ஆனதும் உன் கிட்டே மறுபடியும் பேசறேன்” என்று அழுதுக் கொண்டே சொல்லி விட்டு ‘போனை’ ‘கட்’ பண்ணீனான்.

ரமாவுக்கு வேலையே ஓடவில்லை.

ஒரு பத்து நிமிஷம் அழுதுக் கொண்டு இருந்தாள்.

தன் அப்பா ஆத்மா சாந்தி அடைய அவள் பகவானை நன்றாக வேண்டிக் கொண்டாள்.

பிறகு கலவரம் நடந்துக் கொண்டு இருந்த இடத்துக்குப் போய்,இரு தரப்பினருடன் நிறைய நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,இரு தரப்பினர் தலைவர்களை தனியாக அழைத்து அவர்களை ப் பார்த்து ”நீங்க சொன்ன எல்லா சமாசாரத்தையும் நான் நல்லா கேட்டேன்.எனக்கு ஒரு மாசம் ‘டைம்’ குடுங்க.நான் மந்திரி கிட்டே நீங்க சொன்ன எல்லா சமாசாரத்தையும் சொல்லி ரெண்டு தரப்பினருக் கும் எந்த பாதகமும் வராம இருக்க ஒரு நல்ல வழி பண்றேன்” என்று உறுதி மொழி அளித்தாள்.

ரமா சொன்னதைக் கேட்ட இரு தரப்பு தலைவர்களும் ஒரு வழியாக ஒத்துக் கொண்டு ரமாவைப் பார்த்து ”நீங்க சொன்னதாலே நாங்க இப்போ கலைஞ்சுப் போறோம்.ஆனா ஒரு மாசம் ஆன பிற்பா டும் எங்களுக்கு சாதகமா ஒரு நல்ல பதில் வரலேன்னா நாங்க மறுபடியும் இந்தப் போராட்டத்தை ஆர ம்பிப்போம்” என்று சொல்லி விட்டு,இரு தரப்புத் தலைவர்களும் தங்கள் தரப்பினரை அழைத்துக் கொ ண்டு கலைந்துப் போனார்கள்.

ரமா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

தன் சீட்டுக்கு வந்த ரமா உடனே மந்திரியின் செகரட்டரியைக் கூப்பிட்டு கலவரம் நடந்த இட த்தில் நடந்த எல்லா சமாசாரங்களையும் விவரமாக சொல்லி விட்டு “சார்,நான் ரெண்டு தரப்பு தலைவ ர்களையும் கூப்பிட்டு ‘எனக்கு ஒரு மாச அவகாசம் குடுங்க’ன்னு சொல்லி அவர்களை ஒரு வழியாக சமாதானைப் படுத்தி கலைஞ்சு போக வச்சு இருக்கேன்.நீங்க தயவு செஞ்சி மந்திரி கிட்டே, இந்த விஷயத்தே விவரமா சொல்லி,ஒரு மாசத்துக்கு உள்ளே ரெண்டு தரப்பு மக்களும் ஒத்துக் கொள்ளும் ஒரு நல்ல பதிலா சொல்ல சொல்லுங்க” என்று சொன்னதும் மந்திரியின் செகரட்டரி “சா¢,நான் மந்திரி கிட்டே நீங்க சொன்ன எல்லா சமாசாரங்களையும் விவராம சொல்றேன்” என்று சொல்லி விட்டு ‘போ னை’ ‘கட்’ பண்ணினார்.

பதிமூனு நாள் காரியங்களும் நல்ல விதமாக ரகுராமன் செய்து முடித்தான்.

அடுத்த நாள் ரகுராமன் ரமாவை ‘போனில்’ கூப்பிட்டான்.
ரமா ‘போனில்’ வந்ததும் ரகுராமன் “ரமா,நான் அத்திம்பேருக்கு பதி மூனு நாள் காரியங்களை யும் ரொம்ப சிரத்தையா பண்ணி முடிச்சேன்.ரமா அத்திம்பேர் ஒரு ‘தீர்க்கதரிசி’.அவர் காலம் முடியப் போறதுன்னு அவருக்கு நன்னா தெரிஞ்சு இருக்கு போல இருக்கு.ஒரு வாரம் முன்னாடி தான் அவர் இந்த ஆத்தை என் பேருக்கு மாத்திட்டார்.கூடவே அவர் ‘பாங்க்’ புஸ்தகத்திலே என் பேரையும் ‘ஜாயி ண்டா’ சேத்துட்டார்.நான் அவரேப் பாத்து ‘ஏன் அத்திம்பேர் இப்படி பண்றேள்’ ன்னு கேட்டேன்.அவர் அதுக்கு ‘எதுக்கும் இருக்கட்டும் ரகுராமா.என்ன எப்போ நடக்கும்ன்னு அந்த பகவானுக்குத் தானே தெரியும்.உனக்கும் எனக்கும் தெரியாதே’ன்னு சிரிச்சுண்டே சொன்னார்.அவர் சொன்னா மாதிரியே அடுத்த வாரமே அவர் நம்மே விட்டுப் போயிட்டார்” என்று சொல்லி அழுதான்.

ரமாவுக்கு ஒரு பக்கம் துக்கமாகவும் ஒரு பக்கம் ஆச்சா¢யமாகவும் இருந்தது.ரமா உடனே “அப்ப டியா மாமா கேக்கவே ரொம்ப ஆச்சா¢யமா இருக்கு.அப்பா உண்மையிலே ஒரு ‘தீக்கதரிசி’ தான்.நல்ல வேளே.அவர் படுத்துண்டு எல்லாம் கஷ்டப் படாமே தூக்கத்லே அம்மா கிட்டேபோய் சேந்துட்டார். நீங்கோ தனியா இருந்துண்டு வறேள்.சௌக்கியமா இருந்துண்டு வாங்கோ” என்று சொன்னாள்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *