ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2021
பார்வையிட்டோர்: 4,802 
 
 

அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 | அத்தியாயம்-25

ராஜம் விடாமல் ”சுரேஷ்,நீ சென்னைக்கு உடனே ‘போன்’ பண்ணி,ரமா நம்ம ஆத்லே அவ எழுதி வச்சுட்டுப் போன ‘லெட்டரை’ பத்தி விவரமா சொல்லி,குழந்தைக்கு ஒரு வருஷம் தான் ஆறது, அந்த குழந்தையே ரமா அவசியமா பாத்துக்கணும்ன்னு.அதனால்லே ரமாவை உடனே டெல்லிக்கு அனுப்பி வக்கச் சொல்லு.இப்ப சூட்டோடு சூடா சொன்னா தான் அவா பண்ணுவா.அப்புறமா ஆறின கஞ்சி பழங்கஞ்சியா ஆயிடும்”என்று கத்தினாள்.

சுரேஷ் ஒன்னும் பதில் சொல்லாமல் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான்.

ராஜம் விடாமல் சுரேஷை நச்சரித்துக் கொண்டு இருந்தாள்.

சுரேஷ் நிதானமாக ‘சோபா’வில் இருந்து எழுத்துக் கொண்டு அம்மாவைப் பார்த்து “அம்மா, நான் தான் சென்னைக்கு ‘போன்’ பண்ண மாட்டேன்னு சொன்னேனே.என்னே எதுக்கு வீணா ‘கம்பெல்’ பண்றே.நான் யாருக்கும் இனிமே ‘போனே’ பண்ண மாட்டேன்” என்று சொன்னான்.

உடனே வரதன் “ராஜம்,சுரேஷ் சொல்றது ரொம்ப நியாயமா இருக்கு.நீ இத்தனை நாளா பண் ணி வந்து இருக்கிற ‘பந்தா’ எல்லாம் இன்னேரம் ரமா மூலமா சம்மந்திகளுக்கு நன்னா தெரிஞ்சு இருக்குமே.சுரேஷ் அவாளுக்கு ‘போன்’ பன்ணீக் கேட்டா,திருப்பி அவா சுரேஷை ’என்ன மாப்பிள் ளே.உங்க அம்மா பண்ன ‘பந்தா’ பத்தி நீங்க எங்களுக்கு இது நாள் வரைக்கும் ஏன் சொல்லலே. நீங்க ஒரு சாதாரண BA.தான்,MBA இல்லே.நான் ஒரு சாதாரண கம்பனிலே ஒரு ‘அப்பர் டிவிஷன் க்லார்க்கு’தான்னு கூட சொல்லலே.எங்க மூனு பேரையும் இப்படி ஏமாத்தி இருக்கேளேன்னு கேப்பாளே. பாவம் சுரேஷ் என்ன பதில் சொல்லுவான்னு,நீ கொஞ்ச நேரமாவது யோஜனைப் பண்ணியா.விடாம அவனை நச்சரிச்சுண்டு வறயே.அவன் என்ன பண்ணுவான் பாவம்.அவனை வீணா ‘கம்பெல்’ பண் ண்ணாதே” என்று சொன்னார்.

உடனே ராஜம் “நீங்கோ என்ன பேசறேள்.அவா பொண்ணு ரமாவுக்குக் கல்யாணம் ஆயி வரு ஷம் ரெண்டு ஆகப் போறது.அவா பொண்ணுக்கு ஒரு குழந்தையும் பொறந்து இருக்கு.இனிமே நம்மே பத்தி சொல்லிண்டா அவாளுக்குத் தான் ரொம்ப கேவலம்.அவா பேசாம ரமாவை டெல்லிக்கு அனுப்பி வக்கறது தான் அவாளுக்கு நல்லது” என்று விடாமல் அவள் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் சுரேஷ் “அம்மா,நான் இனிமே ரமாவைத் தேடப் போறது இல்லை.அவ என் கிட்டே பல தடவை ’நான் ’சிவில் சர்விசஸ்’ பரிக்ஷ எழுதணும்ன்னு கேட்டுண்டு வந்தா.ஆனா நான் அவ கிட்டே ’ரமா,இந்த ஆத்லே எங்க அம்மா வச்சது தான் சட்டம்.என்னாலேயும்,என் அப்பா வாலேயும் அம்மாவை மாத்தவே முடியாதுன்னு சொல்லி இருக்கேன்.ரமா குழந்தையே நம்மாத்துக்கு அழைச்சுண்டு வந்து,ஒரு மூனு மாசம் ஆனதும்,நீங்கோ ரமாவை மறுபடியும் வேலைக்கு போய் வர ‘அப்ளை’ பண்ணுன்னு சொன்னப்ப,அவ என் கிட்டே‘எனக்கு இன்னும் ஒரு ‘அடெம்ட்’ தான் பாக்கி இருக்கு.நான் இந்த ‘அடெம்ட்லே’ ‘சிவில் சர்விசஸ்’ பரி¨க்ஷ எழுதி பாஸ் பண்ணாட்டா அப்புறமா, நான் ‘சிவில் சர்விசஸ்’ பரி¨க்ஷ ஏழுதவே முடியாதுன்னு சொல்லி கதறி அழுதா.அந்த படிப்பு படிக்கணும் அவளுக்கு கொள்ளை ஆசை.வாழ்க்கைலே அவள் குறிக்கோளே வேறே.நீங்க அவ கிட்டே இன் னும் அணுசரனையா இருந்துண்டு வந்து இருந்தா,ஒரு வேளைரமா நம்மோடு தங்கி இருந்து இருப் பாளோ என்னவோ.அவளை வேலைக்கு போகணும்ன்னு நீங்கோ வற்புறுத்தினது ரொம்ப தப்பு. நடந்தது நடந்து போச்சு.போகட்டும் விடுங்க.இனிமே என் குழந்தையே நான் வளத்து, அவனை முன் னுக்கு கொண்டு வருவது தான் எனக்கு முக்கியம்.இது தான் என் ஆசை.இதிலே நான் குறியா இருந்து கிரணை நல்லபடி வளக்கப் போறேன்” என்று தீர்மானமாக சொல்லி விட்டு,தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

ராஜத்துக்கு என்ன பண்ணுவது என்றே தொ¢யவில்லை.

அவள் யோஜனைப் பண்ணினாள்.

’நம்ம ஆத்துக்காரரும்,சுரேஷூம் நாம பந்தா பண்ணி ரமா அம்மா அப்பவை ஏமாத்தினது ரொம் ப தப்புன்னு சொல்றாளே.நாம இந்த பந்தா எல்லாம் எதுக்கு பண்ணோம்.நம்ம சந்தோஷத்துக்கா. இல் லையே.சுரேஷ் வாழ்க்கை நன்னா அமையணும்ன்னு தானே பண்ணோம்.ஆனா இப்போ சுரேஷ் வாழ் க்கை சந்தோஷமா அமையறதுக்கு பதிலா ஒரு நரகம் ஆயிடுத்தே.இதுக்கு பூரா காரணம் நாம தானே. ஒரு அம்மா அவன் வயத்லே பொறந்த பையனுக்கு நல்லது தானே பண்ணனும்.ஆனா நான் அப்படி பண்ணாம,வீணா பந்தா பண்ணீ வந்து,அவன் வாழ்க்கையை ஒரு தீராத கஷ்டத்துக்கு ஆளாக்கி விட்டு இருக்கோமே’ என்று நினைத்து தன் வாழ்க்கையிலே முதல் தடவையாக வருந்தினாள்.

வரதன் ‘ராஜம் பண்ண ‘பந்தா’வாலே,சுரேஷ் வாழ்க்கை இப்படி ஒரு பாலைவனமா ஆயிடுத்தே’ என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டார்.

தான் செய்த தவறை நன்றாக உணர்ந்தாள் ராஜம்.

ஒரு அரை மணி நேரம் கழித்து ராஜம் சுரேஷைப் பார்த்து “சுரேஷ்,நான் ரமா ஆசையை நன்னா புரிஞ்சுண்டு,அவளை ‘வேலைக்குப் போ’,’வேலைக்குப் போ’ன்னு சொல்லி வந்து இருக்க கூடாது. நான் பண்ணது ரொம்ப தப்பு தாண்டா.உன் வாழ்க்கை இப்படி பாழாயிடுத்தே.இதுக்கு பூரா காரணம் நான் தாண்டா சுரேஷ்” என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்களில் கண்ணீர் விட்டாள்.

அம்மா அழுவதைப் பார்த்த சுரேஷ் “நீங்கோஅழாதேங்கோம்மா.பகவான் என் தலைலே என்ன எழுதி இருக்காரோ,அதை நான் அனுபவிசுண்டு தானே வரணும்.அதே போல கிரண ஒரு வயசுக்கு அப்புறமா,அவன் அம்மா இல்லாம அப்பா,பாட்டி தாத்தா கிட்டே தான் வளந்துண்டு வரணும் அவன் தலைலே எழுதி இருக்கு.அதன் படி தான் எல்லாம் அமையும்” என்று வேதாந்தமாகப் பேசினான்.

சுரேஷ் ’இனிமே,நம் வாழ்க்கையையும்,கிரண் வாழ்க்கையும்,அம்மா,அப்பா வாழ்க்கையும் நன் னா கவனிச்சுண்டு வரணும்’ என்று தன் மனதிலே முடிவு பண்ணீவாழ்ந்துக் கொண்டு வந்தான்.

உடனே வரதனும், ராஜமும் “கவலைப் படாதே சுரேஷ்.நாங்க ரெண்டு பேரும் உனக்கு உறு துணையா இருந்துண்டு வறேம்.நாம மூனு பேரும் கிரணுக்கு அவன் அம்மா இல்லாத குறையை தீத்து வர பாடு படலாம்” என்று சுரேஷின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னார்கள்.

சுரேஷ் ”ரொம்ப ‘தாங்கஸ்ம்மா’,’தாங்கஸ்ப்பா” என்று சொல்லி அம்மாவையும் அப்பாவையும் சமாதானப் படுத்தினான்.

சென்னை ‘ஏர் போர்ட்டு’க்கு வந்த ரமாவுக்கு ரொம்ப நேரம் வரை ‘டாக்ஸியே’ கிடைக்கவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து அவளுக்கு ஒரு ‘டாக்ஸி கிடைத்தது.ரமா அந்த ‘டாக்ஸி’யிலே ஏறி தன் வீட்டுக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினாள்.
அவள் தன் கை கடிகாரத்தைப் பார்த்தாள்.மணி பத்தரை காட்டியது.

‘இத்தனை நேரம் கழிச்சு,நாம ‘காலிங்க் பெல்லை’ அழுத்தி இருக்கோமே.கதவை திறந்து அப்பா,அம்மா என்னே பாத்தா ரொம்ப கவலைப் படுவாளே.எனக்கு வேறு வழி தொ¢யவிலையே.இந்த பாழாப் போன ‘டாக்ஸி’ இன்னும் சீக்கிரமா எனக்குக் கிடைச்சு இருக்க கூடாதா’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.

“யார் இத்தனை நேரத்துக்கு அப்புறமா ‘காலிங்க் பெல்லை’ அழுத்துறது.ஒரு வேளை வீடு மாறி யாராவது வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தறாளா” என்று கேட்டாள் மங்களம்.உடனே ராமநாதன் “இரு,மங்களம்,நீ தனியா வாசல் கதவை தொறக்க வேணாம்.நானும் கூட உன் கூட வறேன்” என்று சொல்லி விட்டு தன் மணைவியுடன் கூடப் போனார்.

வாசல் கதவைத் திறந்துப் பார்த்த மங்களத்துக்கும்,ராமநானுக்கும் தூக்கி வாரிப் போட்டது.

உடனே மங்களம் ரமாவைப் பார்த்து “என்ன ரமா,நீ தனியா கையிலே ஒரு பெட்டியோடு வந்து இத்தனை நேரம் கழித்து ஆத்துக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தி இருக்கே.தனியா வேறே வந்து இருக்கே.உன் குழந்தே எங்கே.உன் ஆத்துக்காரர் எங்கே.நீ தனியா வந்து இருக்கறதேப் பாத்தா, அவா உன்னே ஆத்தே விட்டே அனுபிட்டாப் போல இருக்கே.நான் இத்தனை நாளா பயந்துண்டு வந்தது சரியா போச்சே.அந்த பணக்காரா மனுஷாளுக்கு ஒரு ‘கொழக்கட்டை’யாட்டும் பேரன் பொறந்து ஒன்னே கால் வருஷம் ஆனதும் உன்னே வேணாம்ன்னு துரத்திட்டாளா.பகவானே…” என்று கூக் குரல் இட்டாள்.

அம்மா பயப் பட்டு கூக்குரல் இடுவதைப் பார்த்த ரமா “அதெல்லாம் ஒன்னும் இல்லேம்மா.நான் ஆத்துக்கு உள்ளே வந்து உனக்கு எல்லா விவரமும் நிதானமா சொல்றேன்.கொஞ்சம் வழியே விடு” என்று தன் அம்மாவைத் தள்ளிக் கொண்டு வீட்டுள்ளே வந்து தன் பெட்டியை ஒரு ஓரமாக வைத்து விட்டு ‘பான்’ அடியிலே ஹாலில் இருந்த ‘சோபா’விலே உட்கார்ந்துக் கொண்டாள்.

தன் மனதிலே ‘நல்ல வேளை.இன்னும் டெல்லியிலே இருந்து,அவா யாரும் அம்மா,அப்பாவுக் கு ’போன்’ பண்ணலே.அது வரைக்கும் நாம பிழைச்சோம்’ என்று சொல்லிக் கொண்டு பகவானுக்கு நன்றி சொன்னாள்.

மங்களம் தன் பெண் ரமா பின்னாலேயே பகவானை வேண்டிக் கொண்டே வந்து “சொல்லேன் ரமா என்ன விஷயம்.ஏன் நீ உங்க அந்த ஆத்தே விட்டு இப்படி நிச ராத்திரியிலே,நம்ம ஆத்துக்கு வந் து இருக்கே.எனக்கு ரொம்ப பயமா இருக்கே ரமா” என்று அவசரப் படுத்தினாள்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு சும்மா நின்றுக் கொண்டு இருந்தார் ராமநாதன்.அவர் மனம் வேதனைப் பட்டுக் கொண்டு இருந்தது.

ரமா நிதானமாக “அம்மா,நீ பயப் படவே வேணாம்.என்னே யாரும் வேணாம்ன்னு துறத்தலே. எனக்கு இன்னும் ஒரு ‘அடெம்ப்ட்’ தான் இருக்கு.எப்படியாவது நான் ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுதி பாஸ் பண்ணனும்ன்னு நினைச்சுத் தான்,ஒரு ’லெட்டரை’ எழுதி வச்சுட்டு,யார் கிட்டேயும் சொல்லிக்காம,சாயங்கால ‘ப்ளைட் ஏறி சென்னைக்கு வந்துட்டேன்.நல்ல வேளே.இது வரைக்கும் டெல்லியிலே இருந்து உங்களுக்கு ‘போன்’ ஒன்னும் வறலேயே.இனிமே டெல்லியிலே இருந்து உங்களுக்கு ஏதாவது ‘போன்’ வந்ததுன்னா,‘நீங்க ரமா இங்கே வறலையே.ஏன் என்ன ஆச்சுன்னு ஒன்னும் தொ¢யாதவா மாதிரி கேளுங்கோ.ரெண்டு மூனு நாள் கழிச்சு நிங்க ரெண்டு பேரும் ரொம்ப கவலைப் பட்டுண்டு வறா மாதிரி உங்க குரலை வச்சுண்டு ரமா கிடைச்சாளா’ன்னும் கேட்டுண்டு வாங்கோ” என்று சொன்னதும் ராமநாதனுக்கு ரொம்ப கோவம் வந்தது.

அவர் உடனே “என்ன ரமா நீ பேத்தறே.நாங்க உன்னே இந்த ஆத்லே வச்சுண்ண்டு ‘ரமா இங்கே வறலையே’ன்னு எப்படி சொல்றது.ஒரு வேளை உங்க ஆத்துக்காரர் இங்கே வந்து நீ இங்கே இருக் கிறதேப் பாத்தார்ன்னா,நாங்க எங்க மூஞ்சியே எங்கே வச்சுக்கறது.எங்களுக்கு எவ்வளவு அவமானமா இருக்கும்.நான் அப்படி சொல்ல மாட்டேன்” என்று கத்தினார்.

உடனே மங்களமும் ”ஆமாம் ரமா,அப்பா சொல்றது ரொம்ப நியாயமான வார்த்தை.உன்னே இந் த ஆத்லே வச்சுண்டே இருந்து ‘நீ இங்கே வறலே’ன்னு நாங்க,நீ சொல்லச் சொல்ற பொய்யே சொல்ல முடியாது” என்று உரத்த குரலில் சொன்னாள்.

ரமாவுக்கு தரம சங்கடமாய் இருந்தது.’என்னடா இவா ரெண்டு பேரும் ஒரே மாதிரி ‘அந்த மாதி ரி சொல்ல முடியாதுன்னு சொல்றாளே’ என்று கவலைப்பட்டாள்.

அவள் உடனே “அம்மா அப்பா,நான் சொல்றதே முழுக்க நன்னா கேளுங்கோ.என் ஆத்துக்கா ரரும்,மாமனாரும் ரொம்ப நல்லவா.அவா ரெண்டு பேரும் என் மாமியாரை எதித்துண்டு ஒன்னும் பண்ண முடியாத நிலையிலே இருந்து வறா.அவா ரெண்டு பேரும் என் மாமியார் கிட்டே என்னை ‘சிவில் சர்விசஸ்’ பரி¨க்ஷ எழுதட்டும்ன்னு பல தடவை சொல்லிண்டு வந்து இருக்கா.ஆனா என் மா மியார் தான் ‘ரமா,குழந்தைக்கு இப்போ வயசு ஒன்னேகால் ஆயிடுத்து.நானும் அப்பாவும் இந்த குழந்தே ஆத்லே நன்னா பாத்துண்டு வறோம்.நீ உடனே ஒரு வேலைக்கு ‘அப்ளை’ பண்ணி வேலே க்குப் போய் வா’ன்னு நச்சரிச்சுண்டு வந்தா.நான் அவர் கிட்டே ‘எனக்கு ‘சிவில் சர்விசஸ்’ பரி¨க்ஷ இன்னும் ஒரு ‘அடெம்ப்ட் தான்’ இருக்குன்னு சொன்னேன்.அவர் என்னிடம் ‘ரமா நான் அம்மாவை எதித்துண்டு இந்த ஆத்லே ஒன்னும் பண்ண முடியாது’ன்னு சொல்லி அழுதார்” என்று சொல்லி தன் கண்களில் வழித்த கண்ணீர்ரைத் துடைத்துக் கொண்டாள்.

மங்களமும் ராமநாதனும் ரமா அழுவதைப் பார்த்து பயந்துப் போனார்கள்.

ரமா தன் அழுகையை நிறுத்தி விட்டு “எனக்கு வேறே வழி ஒன்னும் தொ¢யலே.இந்த ‘அடெம் ப்ட்டை’ ‘மிஸ்’ பண்ண எனக்கு இஷடம் இல்லே.நான் எப்படியாவது இந்த ‘சிவில் சர்விசஸ்’ பரிக்ஷயை எழுதி ‘பாஸ்’ பண்ணிட்டு,ஒரு கலெக்டர் ஆயி,இன்னும் ஏழோ,எட்டோ வருஷத்துக்குள்ளே, என் ஆத்துக்காரர்,குழந்தை,மாமனார் மாமியார் கூட போய் டெல்லியிலே இருந்து வருவேன்.எனக்கு அந்த ¨தா¢யம் இருக்கு.நீங்கோ பயப் படவே வேணாம். நீங்கோ ரெண்டு பேரும் அது வரைக்கும் எனக்கு கொஞ்சம் ‘சப்போர்டிவ்’ ஆக இருந்து வாங்கோ.என் வாழ் நாள் ஆசையை நான் பண்ண எனக்கு ஆசீர் வாதம் பண்ணுங்கோ.கல்யாணத்துக்கு முன்னாலே இருந்து நான் சொல்லிண்டு வந்து இருக்கேன். கல்யாணத்துக்கு முன்னாடி தான் அது நடக்கலே.இப்பவாவது அதே பண்ண எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்கோ.என் மனசே கல்லாக்கிண்ண்டுத் தான் நான் இங்கே வந்து இருக்கேன்” என்று சொல்லி அம்மா, அப்பா காலிலே விழுந்து நமஸ்காரம் பண்ணீனாள்.

உடனே ராமநாதன் “எழுந்தா¢ ரமா,எனக்கு இப்போ எல்லாம் புரிஞ்சுட்டது.நானும் அம்மாவும் உனக்கு பூரண ‘ஹெல்ப்’ தறோம்.நீ அந்த பகவான் பேர்லே பாரத்தைப் போட்டு அந்த ‘சிவில் சர்வி சஸ்’ பரி¨க்ஷயை எழுதிட்டு வா” என்று சொல்லி ரமாவை எழுப்பப் போனார்.

மங்களம் ரமாவை பார்த்து “நீ கடைசியான சொன்ன வார்த்தைகள் மனசுக்கு ரொம்ப ‘இதமா’ இருக்கு.எங்கே நீ ஒரு தனி மரமா நின்னுப் போயிடுவியோன்னு நினைச்சு நான் ரொம்ப பயந்தேன், எழுந்தா¢ ரமா” என்று சொல்லி அவளும் ரமாவின் தோளைத் தொட்டு எழுப்பினாள்.

உடனே ரமா “ரொம்ப ‘தாங்க்ஸ்ப்பா.தாங்க்ஸ்ம்மா’” என்று சொல்லி விட்டு எழுந்தாள்.

மணீ பன்னண்டு அடிக்கவே மங்களம் ரமாவை படுக்கப் போக சொன்னாள்.ரமாவும் தன் பையை எடுத்துக் கொண்டு கல்யாணத்துக்கு முன்னாடி அவள் படுத்து வந்த ‘பெட்’ரூமு’க்குள் படுக்கப் போனாள்.

காலையிலே எழுந்ததும் ராஜம் தன் கணவரையும்,சுரேஷயும் பார்த்து “என்ன ராத்திரி யோஜ னைப் பண்ணேளா.நான் பண்ண தப்பே அவா கிட்டே சொல்லிட்டு,மன்னிப்பும் கேட்டுட்டு,நாம சென்னைக்குப் ‘போன்’ பண்ணி, ரமாவை வரச் சொல்லட்டுமா” என்று கேட்டாள்.

வரதன் ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தார்.

சுரேஷ் “அம்மா,ரமா ஒன்னும் சின்ன பொண்ணு இல்லே.அவ இந்த ஆத்தே விட்டு இஷடப் பட்டுத் தான் கிளம்பிப் போய் இருக்கா.அவ கிளம்பிப் போனா மாதிரியே,என்னைக்காவது அவ திரும்பி இந்த ஆத்துக்கு வந்தா வரட்டும்.நாம யாரையும் ஒன்னும் கேக்க வேணாம்.நான் இருக்கேன் உங் களுக்கு.கிரண் இருக்கான்.இதே நினைச்சு சந்தோஷப் பட்டுண்டு வாங்கோ” என்று சொல்லி விட்டு தன் பல்லைத் தேய்க்கப் போனான்.

உடனே வரதனும் “ராஜம்,சுரேஷ் சொல்றது தான் சரி.நீ வீணா யாருக்கும் ‘போன்’ பண்ணி, உன் தப்பே ஒத்துண்டு,மன்னிப்பு எல்லாம் கேக்க வேணாம்” என்று சொன்னதும் ராஜம் “சரி, நீங்க ரெண்டு பேரும் அப்படி சொல்லிட்ட அப்புறமா நான் கேக்கறது சரி இல்லே தான்.சுரேஷ் சொல்றா மாதிரி ரமா மறுபடியும் இந்த ஆத்துக்கு அவளா திரும்பி வந்தா வரட்டும்.அப்படி வரலேன்னா,நாம இப்படியே ரமா இல்லாம இருந்துண்டு வரலாம்” என்று சொல்லி விட்டு தன் வேலையைக் கவனிக்கப் போய் விட்டாள்.

அடுத்த நாளே ரமா அம்மா அப்பா கால்லே விழுந்து நமஸ்காரம் பண்ணி விட்டு தான் முதல் லே சேர ஆசைப் பட்ட ‘சிவில் சர்விஸஸ்’ ‘கோச்சிங்க் க்ளாஸ்லே’ சேர்ந்து படித்து வந்தாள்.

கல்யாணம் ஆகி, ஆத்துக்காரர்,ஒரு குழந்தை எல்லாம் இருந்தும் ஒரு சின்ன பொண்னு போல ரமா இரவும் பகலும் படித்து வந்ததை பார்த்து வேதனைப் பட்டார்கள் ராமநாதனும் மங்களமும்.

இரண்டு பேரும் தினமும் பகவானை மனமார வேண்டிக் கொண்டு வந்தார்கள்.

மங்களம் மட்டும் அடிக்கடி ரமாவைப் பார்த்து “ரமா,நீ சீக்கீரமா அந்த பரி¨க்ஷயை ‘பாஸ்’ பண் ணிட்டு,உங்க ஆத்துக்காரர் குழந்தை,மாமனார் மாமியார் இவாளோட சந்தோஷமா இருந்து வரணும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.

ரமா தன் அம்மாவிடம் “அம்மா,நீ ஆசைப் படறா மாதிரியே,நான் இந்த பரிஷையை ‘பாஸ்’ பண் ணிட்டு,ஒரு கலெக்டரா ஆயி,கூடிய சீக்கிரமா டெல்லிக்குப் போய் அவா கூட சந்தோஷமா இருந்து ண்டு வருவேன்.நீங்க ரெண்டு பேரும் கவலை இல்லாம இருந்துண்டு வாங்கோ.எனக்கு அந்த தைரியம் இருக்கு” என்று சமாதானம் சொன்னாள்.

‘கோச்சிங்க் க்லாஸில்’ ஆறு மாதம் சேர்ந்து, நன்றாகப் படித்து விட்டு,’சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷ எழுதக் கிளம்பினாள் ரமா.

சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணி விட்டு,அம்மா அப்பா காலிலே விழுந்து நமஸ்காரம் பண்ணி விட்டு,அவர்கள் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டு ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டு அதில் ஏறிக் கொ ண்டாள்.சுவாமியை வேண்டிக் கொண்டு ஆட்டோ டிரைவரைப் பார்த்து ”நீங்க ‘ஸ்டார்ட்’ பண்ணுங்க” என்று சொல்லி விட்டு அம்மா அப்பாவைப் பார்த்து “கவலைப் படாம இருந்து வாங்கோ.நான் நிச்சியமா இந்தப் பரி¨க்ஷயை ‘பாஸ் பண்ணி விடுவேன்” என்று ‘காண்பிடண்டாக’ச் சொன்னாள் ரமா.

ரமா வீட்டை விட்டு ஓடிப் போன விஷயத்தைக் கேள்விப் பட்டு ராமசாமியும்,நளினியும் ராஜம் வீட்டுக்கு வந்து விசரித்து விட்டுப் போனார்கள்.

‘ஆபிஸ்’ போகும் வரை குழந்தை கிரணை சுரேஷ் பார்த்துக் கொண்டு வந்தான்.

மற்ற நேரங்களில் வரதனும் ராஜமும் குழந்தை கிரணைக் கவனித்து வந்துக் கொண்டு இருந் தார்கள்.சுரேஷ் ஒன்றிலும் அதிக பற்று இல்லாமல் நிறைய நேரம் சுவாமியை வேண்டிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தான்.

சுரேஷ் ‘ஆபீஸ்’ போன பிறகு ராஜம் தன் கணவா¢டம் “பாவம் சுரேஷ் வாழ்க்கை இப்படி பாழா போயிடுத்தே.நான் என் கர்வத்தாலே அவன் வாழ்க்கையை பாழ் பண்ணிட்டேன்.கல்யாணத்துக்கு முன்னாடி,நான் சம்மந்தம் பண்ண வந்த ரமா அம்மா அப்பா கிட்டே சுரேஷ் படிப்பை பத்தியும்,அவன் செஞ்சு வந்த வேலை பத்தின உண்மையையும் சொல்லி இருக்கணும்.போறாததுக்கு என் தம்பி பங்க ளாலே ரமா அம்மா அப்பாவை தங்க வச்சு,நாம ரொம்ப பணக்காரான்னு காட்டி,ஏமாத்தினது ரொம்ப தப்பு” என்று கண்களில் கண்ணிர் மல்க சொன்னாள்.

உடனே வரதன் “ராஜம், வாழ்க்கைலே கூடிய வரைக்கும் நாம எந்த தப்பும் பண்ணாம இருந்து வரணும்.என்ன பண்றது.நீ ரொம்ப தப்பு பண்ணிட்டே.இப்போ வருத்தப் படறே.நடந்தது நடந்து போ ச்சு.நாம ரெண்டு பேரும் இனிமே பகவானை தினமும்,ஆத்தே விட்டுப் போன ரமா சீக்கிரமா வரணும்ன்னு வேண்டிண்டு வரலாம்” என்று வேதாந்தமாக சொன்னார்.

“நான் பண்ணினது ரொம்ப தப்பு.’கண் கெட்டப் புறம் சூரிய நமஸ்காரம் பண்ற கதை’ மாதிரி தான் என் கதை ஆயிடுத்து” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

இந்த உறுத்தலே ராஜத்தை தினமும் வாட்டி வந்தது.

பரி¨க்ஷ ஹாலில் சுவாமியை வேண்டிக் கொண்டு கேள்வித் தாளைப் பிரித்துப் பார்த்தாள் ரமா. நல்ல வேளையாக நிறைய கேள்விகளுக்கு அவளுக்கு பதில் தொ¢ந்தது.ரமா முதலில் அந்த கேள்விக ளுக்கு எல்லாம் பதில் எழுதி விட்டு,பிறகு சுமாராக தொ¢ந்த கேள்விகளுக்கு பதில் எழுதிக் கொடுத்து விட்டு வந்தாள்.

வீட்டுக்கு வந்து அப்பா அம்மாவிடம் “நான் பரி¨க்ஷயை ரொம்ப நன்னா எழுதி இருக்கேன். நாளை பரி¨க்ஷயை நன்னா எழுதணும்” என்று சொல்லி விட்டு அம்மா கொடுத்த காபியைக் குடித்து விட்டு மறுபடியும் படிக்கப் போனாள்.

ரமா அடுத்த நாள் கேள்விதாள் கொடுத்தவுடன் முதல் நாள் சுவாமியை வேண்டிக் கொண்டது போல வேண்டிக் கொண்டு பரி¨க்ஷயை எழுதினாள்.

வீட்டுக்கு வந்து “இன்னைக்கும் அந்த பகவான் அணுக்கிஹத்தால் எனக்கு தொ¢ஞ்ச நிறைய கேள்விகளுக்கு எல்லாம் நன்னா பதில் எழுதி இருக்கேன்.பரி¨க்ஷ ‘ரிஸல்ட்’ வர ரெண்டு மாசமாவது ஆகும்.அது வரைக்கும் நான் ஆத்லே சும்மா தான் இருந்துண்டு வரணும்” என்று சொல்லும் போது அவள் குரலில் ஒரு வருத்தம் தொ¢ந்ததைக் கவனித்தார்கள் மங்களமும் ராமநாதனும்.

ரமா “நான் உங்க கிட்டே சொன்னா மாதிரி,என் ஆத்துக்காரர் கிட்டேயும் ‘போன்’ பண்ணி சொல்லணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு.ஆனா அவர் எப்படி அதே எடுத்துக் கொள்ளு வார்ன்னு எனக்குத் தொ¢யலே.அது மட்டும் இல்லாம நான் இங்கே வந்து இருக்கும் சமாசாரம் உங்க ளுக்கு தொ¢ஞ்சு இருந்தும்,நீங்க டெல்லிக்கு ‘போன்’ பண்ணீ சொல்லலையேன்னு உங்க ரெண்டு பேரையும் என் மாமியார் கண்டபடி பேசுவாளேன்னு பயந்துண்டு தான் நான் என் ஆசையை அடக் கிண்டு அவரோ¡ட பேசாம இருந்துண்டு வறேன்”என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீ ரைத் துடைத்துக் கொண்டாள்.

ரமா சொன்னதை கேட்டு ராமநாதன் வருத்தப் பட்டாரே ஒழிய,மங்களம் “ரமா,நீ கண்லே ஜலம் விடறது சரியே இல்லே.நீயா வச்சுண்டு கஷ்டம் தான் இது.உனக்குக் கல்யாணம் ஆயி ஒரு குழந்தை கூட பொறந்துடுத்து.நல்ல ஆத்துக்காரரும்,மாமனாரும் கிடைச்சு இருக்கா.மாமியார் சொன்ன படி நீ ஒரு நல்ல வேலைக்கு ‘அப்ளை’ பண்ணி,அந்த வேலே கிடைச்சதும் சந்தோஷமா அந்த வேலைக்கு போயிண்டு வந்துண்டு,இந்த ‘கலெக்டர்’ ஆகணும்ன்கிற ஆசையை மறந்துட்டு,உன் குடுமபத்தோடு ஒன்னா இருந்துண்டு வந்து இருக்கலாம்.எனக்கு என்னவோ நீ பண்ணது சரி இல்லேன்னு தான் தோ ன்றது” என்று தனக்குத் தோன்றியதைச் சொன்னாள்.

உடனே ரமா “ஏம்மா,நான் டெல்லி ஆத்தே விட்டுட்டு,இந்த கலெக்டர் ஆசையை பூர்த்தி பண் ணிக் கொள்ள வந்தது உனக்கு பிடிக்கலையா” என்று கேட்டாள்.

இவர்கள் ரெண்டு பேசுவதைக் கேட்ட ராமநாதன் “மங்களம், நீ சொல்றது ரொம்ப தப்பு.அவ தா ன் வந்தவுடனே எல்லா சமாசரத்தையும் விவரமா சொன்னாளே.கல்யாணத்துக்கு முன்னாடி,அவ தன் ஆசையை மாப்பிள்ளை கிட்டே கேட்டுண்டு தானே கல்யாணத்துக்கே சம்மதம் சொன்னா.அவ போ றாத வேளே அவளாலே படிக்க முடியலே.அவளுக்கு ஒரு குழந்தை பொறந்துடுத்து.தவிர அவளுக்கு வயசு வேறே ஆயிடுத்து.அவளுக்கு இன்னும் ஒரு ‘அடெம்ப்ட்’ தான் பாக்கி இருக்கு.அவ ‘ட்ரை’ பண்ணி இருக்கா.அந்த பகவான் அனுக்கிறஹதாலே அவ அந்த ‘சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷயிலே ‘பாஸ்’ பண்ணி,அவ ஆசை பட்டது போல,சீக்கிரமா ஒரு கலெக்டர் ஆகணும்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

‘அது வரைக்கும் நம்ம அப்பா நமக்கு சாதகமா பேசினாரே’ என்று தன் மனதில் சந்தோஷப் பட் டாள் ரமா.

ஒரு வாரம் ஓடி விட்டது.

ரகுராமன் ‘போன்’ பண்ணீனான்.

மங்களம் போனில் வந்ததும் அழுதுக் கொண்டே “அக்கா, இன்னைக்கு காத்தாலே ஆறு மணி க்கு அம்மா நம்மே விட்டு போயிட்டா” என்று சொன்னான்.

உடனே மங்களம் “என்ண்டா சொல்றே ரகுராமா.அம்மாவுக்கு என்ன ஆச்சு”என்று கலவரபட்டு க் கொண்டு கேட்டதும்,ரகுராமன் அழுதுக் கொண்டே “அக்கா,அம்மா பல்லே தேய்ச்சுண்டு வந்து சேர்லே உக்காந்துண்டா.ரெண்டு நிமிஷம் தான் ஆகி இருக்கும் என்னேப் பாத்து ‘ரகுராமா,கொஞ்சம் குடிக்க ஜலம் குடு.மாரை ரொம்ப அடைக்கறதுன்னு’ சொன்னா.நான் ஒரு ‘டம்ளர்லே’ ஜலத்தை எடுத் துண்டு போய் குடுக்கறதுக்கு முன்னாடி அம்மாவோட தலை சேர்லேயே சாய்ஞ்சுடுத்து” என்று சொல் லி விட்டு மறுபடியும் அழுது கொண்டு இருந்தான்.

“அப்படியா சாமாசாரம்.நாங்க உடனே கிளம்பி வறோம்” என்று ரகுராமனுக்கு சொல்லி விட்டு. தன் கணவா¢டமும்,ரமாவிடமும் ரகுராமன் சொன்ன எல்லா விஷயதையும் விவரமாகச் சொன்னாள்.

உடனே மங்களமும்,ராமநாதனும்,ரமாவும்திருவண்ணாமலைக்குக் கிளம்பி வந்தார்கள். அக்கா வும்,அத்திம்பேரும்,,ரமாவும் திருவண்ணாமலைக்கு வந்ததும்,ரகுராமன் அம்மாவை ‘தகனம்’ பண்ணி விட்டு, வீட்டுக்கு வந்து குளித்து விட்டு,வீட்டிலே இருந்த மோரைக் குடித்து விட்டு,கல்யாணம் ஆகி டெல்லிக்குப் போன ரமா,இப்போ தனியாக வந்து இருக்கும் விஷயதைக் கேட்டான்.

மங்களம் ரகுராமனிடம் ரமாவைப் பற்றின எல்லா விஷயத்தையும் விவரமாகச் சொன்னாள்.

உடனே ரகுராமன் “அக்கா,ரமா சீக்கிரமா அந்த பரி¨க்ஷயை ‘பாஸ்’ பண்ணிட்டு,அவ ஆசைப் பட்டது போல ஒரு கலெக்டர் ஆயி,சீக்கிரமா அவ குடும்பத்தோடு போய் சந்தோஷமா இருந்துண்டு வரணும்.நான் தினமும் அந்த பகவானை வேண்டிண்டு வறேன்” என்று சொன்னான்.

உடனே ரமா “ரொம்ப ‘தாங்க்ஸ்’ மாமா” என்று சொல்லி ரகுராமனை ‘தாங்க்’ பண்ணினாள் ரமா.

மங்களம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனைப் பார்த்து “ரகுராமா,அம்மா இந்த லோ கத்தே விட்டுப் போக வேண்டிய நேரம் வந்துடுத்து.அவ சௌக்கியமா போய் சேர்ந்துட்டா.நீ ஒரு தனி மரமா இனிமே இருந்துண்டு வர வேணாம்.சீக்கிரமா ஒரு நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணீண்டு வா.உனக்கு ஒரு உடம்புன்னு வந்ததுன்னா,கொஞ்சம் வென்னீர் வச்சுக் குடுக்கவாவது ஒத் தி வேணாமா” என்று அக்கா என்கிற முறையில் சுவாதீனமாக சொன்னாள்.
உடனே அதற்கு ரகுராமன் “இல்லேக்கா,நான் கல்யாணமே பண்ணீக்கப் போறது இல்லே. இப் படியே ஒண்டிக் கட்டையா இருந்துட்டு வந்து என் காலம் முடிஞ்சதும் நான் கண்ணே மூடலாம்ன்னு தான் முடிவு பண்ணி இருக்கேன்” என்று விரக்தியாகச் சொன்னான்.

”சரி உன் இஷ்டம்” என்று வருத்ததோடு சொன்னாள் மங்களம்.

ரகுராமன் இருந்து வந்த வீடு மிகவும் சிறியதாய் இருந்ததால்,மங்களம் அவனிடம் சொல்லிக் கொண்டு தன் கணவரையும் ரமாவையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து விட்டாள்.ரமா அவ அம்மாவுக்கு கூட மாட உதவிகள் பண்ணிக் கொண்டு வந்தாள்.

அவள் ‘ரிஸல்ட்’ வந்தது.அவள் ‘பாஸ்’ பண்ணி இருந்தாள்.ரமா சந்தோஷத்தில் தன் அம்மா வைக் கட்டிக் கொண்டு “அம்மா, நான் ‘பாஸ்’ பண்ணிட்டேன்” என்று சொன்னாள்.ராமநாதனும் மங்க ளமும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

மங்களம் ”ஒரு வழியா,நீஅந்த பரி¨க்ஷயிலே ‘பாஸ்’ பண்ணி விட்டே.இனிமே நீ சந்தோஷமா இருந்து வா.சீக்கிரமா ஒரு கலெக்டர் ஆயி உன் குடுமபத்தோடு போய் சேந்து இருந்துண்டு,உன் ஆத் துக்காரர்,குழந்தை,மாமனார்,மாமியார் இவாளோடப் போய் இருந்துண்டு வா” என்று சொன்னாள்.

“அம்மா நான் நாளைக்கே ஒரு கலெக்டர் ஆக முடியாதும்மா.எனக்கு இன்னும் ‘நேர் முக தேர்வு’ ஆகணும்.அதிலே ‘இன்டர்வியூ’ பண்றவா என்னே ‘செலக்ட்’ பண்ணா,அப்புறமா எனக்கு ரெண்டு வருஷம் ‘ட்ரெனிங்க்’குடுப்பா.’ட்ரெனிங்க்’ முடிஞ்சதும்,அப்புறமா ரெண்டு மூனு ‘லெவல்லே’ நான் வேலே பண்ணிண்டு வரணும்.அப்புறமா தான் நான் ஒரு கலெக்டர் ஆக முடியும்” என்று தன்னுடைய வேலை விஷயத்தை விவரமாக அம்மாவிடம் சொன்னாள் ரமா.

“நீ உன் குடும்பத்தோட போய் சேர இன்னும் இத்தனை வருஷம் ஆகுமா என்ன.நான் என்ன வோ நீ இந்த பரிக்ஷ பாஸ் பண்ணீனவுடேனே,ஒரு ‘கலெகடர்’ ஆயிடுவேன்னு இல்லே நினைச்சுண்டு இருந்தேனே, நீ உன் குடும்பதோடு போய் ஒன்னா இருக்க இன்னும் குறைஞ்சது ஒரு ஐஞ்சு, ஆறு வருஷமாவது ஆகும் போல இருக்கே.அது அரைக்கும் உங்க ஆத்துக் க்காரர் பொறுத்துண்டு இருந்து வரணுமே”என்று சொல்லும் போது மங்களம் கண்கள் கலங்கியது.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *