அத்தியாயம்-20 | அத்தியாயம்-21
எல்லோரும் ரமாவிடமும்,அவள் பெற்றோர்களிடமும் மிக நன்றாக பழகினார்கள்.இரண்டு நாட்கள் இருந்து விட்டு,எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு, ராமநாதனும், மங்களமும் சந்தோஷமாக செ ன்னைக்குத் திரும்பிப் போனார்கள்.
ராமநாதன் தம்பதிகள் எப்போ கிளம்புவார்கள் என்று காத்துக் கொண்டு இருந்த வரதன் தன் மணைவி ராஜத்தைப் பர்த்து “ராஜம்,நீ பண்றது ரொம்ப சரியே இல்லே.எதுக்கு இந்த ‘டம்பமான’ வாழ் க்கை நமக்கு.பாவம் சம்மந்தி மாமாவும்,சம்மந்தி மாமியும் நாம உண்மையிலே ரொம்ப பணக்காரான்னு நம்பிண்டு சென்னைக்குப் போய் இருக்கா.அவா பொண்ணு ரமா நம்மாத்லே தான் குடித்தனம் பண்ணீண்டு வறப் போறா.ரமா அவா கிட்டே நாம பணக்காரா இல்லே,ரொம்ப சாதாரணமானவா தான், பையன் எம்.பி.ஏ.இல்லே வெறும் பி.ஏ.தான்னு தெரிய எத்தனை நாள் பிடிக்கும்.நம்ம குடும்ப உண்மை சமாசாரம் தெரிஞ்சா,அவா நம்மை எவ்வளவு மட்டமா எடை போடுவான்னு நீ கொஞ்சமா வது யோஜனை பண்ணயா.நீ இப்படி பண்ணியே இருக்க கூடாது ராஜம்.எனக்கு கொஞ்சம் கூட பிடி க்கலே நீ பண்ணது” என்று நடு ஹாலில் கத்தினார்.
ராஜம் அதற்கு கூலாக ”இப்போ கல்யாணம் ஆயிடுத்து.இனிமே தெரிஞ்சா ஒன்னும் தப்பு இல்லே.நாம சொன்னோம்.அவா நம்பினா.அவ்வளவு தான்.அவா நம்மேப் பத்தி நன்னா விசாரிச்சு இரு க்கணும்.அவா பண்ணலே.தப்பு அவா பேர்லே தான்.நீங்க சும்மா இருந்துண்டு,உங்க வேலையே கவனிச்சுண்டு வாங்கோ.இந்தாத்லே நீங்கோ அனாவசியமா ஒன்னும் பேச வேணாம்” என்று சொல்லி கணவனை மிரட்டினாள்.
சுரேஷூம் “அம்மா,அப்பா சொல்றது ரொம்ப கரெக்ட்ம்மா.ரமா மூலமா அவ அம்மா அப்பாவுக்கு எல்லா சமாசாரமும் நிச்சியமா தெரிய வருமே.அவா சென்னையிலே இருந்து கிளம்பி இங்கே வந்து நம்மைக் கேட்டா அவாளுக்கு நாம என்ன பதில் சொல்றது.நீங்க பண்ணது ரொம்ப தப்பு.எனக்கு கல்யாணம் ஆன பிற்பாடு,நாம டெல்லிக்கு திரும்பி வந்தப்ப,ஏன் நீங்கோ அவாளை மாமா பங்களா வுக்கு அழைச்சுண்டு வந்தேள்.நம்ம ஆத்துக்கு அழைச்சு வந்து நம்ம குடும்ப உண்மையை அப்போ தாவது சொல்லி இருக்கக் கூடாதா.ரமா அப்பா தன் கையிலே இருந்த எல்லா பணத்தையும் போட்டு, கடைசியிலே பணம் போறாம அவருடைய ‘பெஸ்ட் ப்ரெண்ட்’ ஒருத்தர் கிட்டே ஒரு லக்ஷ ரூபாய் கடன் வாங்கி பாக்கி பணம் குடுக்க வேண்டியவாளுக்கு குடுத்து பட்டுவாடா பண்ணீ இருக்காராம். இப்போ அவர் அந்த ஒரு லக்ஷ ரூபாய் கடனை கொஞ்ச கொஞ்சமா அடைச்சுண்டு வரணுமாம். ரமா வோட அப்பா இன்னும் நாலு வருஷம் ஆனா ‘ரிடையர்’ ஆகப் போறாராம்” என்று சொன்னான்.
கொஞ்ச நேரம் கழித்து சுரேஷ் மறுபடியும் “அவாளுக்கு இப்போ ரமா மூலமா எல்லா உண்மை யும் தெரியவந்தா,நமக்கு எவ்வளவு கேவலமா இருக்கும்.ஏம்மா இப்படி நீங்க பண்ணேள்” என்று கேட் டான் சுரேஷ்.
“நீ சும்மா இருடா.உனக்கு ஒன்னும் தெரியாது.கல்யாணம்ன்னு வந்தா இப்படித் தான் ரெண்டு மூனு பொய் எல்லாரும் சொல்லுவா.நம்ம பொ¢யவா எல்லாம் அந்த காலத்திலேயே ’ஆயிரம் பொய்யே சொல்லி ஒரு கல்யாணத்தே பண்ணு’ன்னு சொல்லி இருக்கான்னு உனக்குத் தெரியுமா.உனக்குத் தான் இப்போ ‘சாந்தி முஹ¥ர்த்தம்’ கூட ஆயிடுத்தே.இனிமே நம்ம குடும்பத்தை பத்தின எல்லா விஷயமும் தெரிஞ்சா என்ன.ஒன்னும் குடி முழுகி போகாது.பேசாம உன் வேலையே பாத்துண்டு நீ சும்மா இருந்துண்டு வா.இனிமே ரமா நம்மாத்து விஷயத்தே எல்லாம் அவ அம்மா அப்பா கிட்டே நிச் சியமா சொல்லவே மாட்டா.ரமா அப்படி பண்ணப் பட்ட பொண்ணு இல்லே”என்று சொல்லி சிரித்துக் கொண்டு இருந்தாள்.
வரதனுக்கும் சுரேஷூக்கும் ராஜம் பண்ணதும்,சொன்னதும் கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லே.
ரமா தன் மாமனாரும்,ஆத்துக்காரரும் பேசினதையும்,அதற்கு தன் மாமியார் சொன்ன பதிலை யும் கேட்டுக் கொண்டு சும்மா நின்றுக் கொண்டு இருந்தாள்.
’இந்த மாமியார் இவ்வளவு பொல்லாதவளா இருக்காளே.நாம எப்படி இந்த ஆத்லே இருந்துண் டு வரப் போறோம்.நல்ல வேளைக்கு மாமனாரும்,ஆத்துக்காரரும் நல்லவாளா இருக்காளே.அது வரை க்கும் நாம பிழைச்சோம்.இவாளும் மாமியார் மாதிரி இருந்து இருந்தா நாம என்ன பண்ணி இருப் போம்.பகவான் தான் நம்ம பங்க்லே இருந்து வந்து இருக்காரு’ என்று நினைத்து தன் மனதைத் தேற்றிக் கொண்டாள் ரமா.
அந்த பங்களாவில் இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தார்கள் சுரேஷூம் அவன் அம்மா அப்பாவும்.
அன்று மாலையில் எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு வெளியே போய் விட்டு வந்தார்கள் ரமாவும் சுரேஷூம்.
இரவு உணவுக்குப் பிறகு சுரேஷ் ரமாவைப் பார்த்து “ரமா,உன் துணிமணிகளை உன் ‘பாக்சில் பாக்’ பண்ணிக்கோ.நாம வேறு இடத்துக்குப் போகணும்” என்று சொல்லி விட்டு அவன் துணிமணி களை ‘பாக்’ பண்ணிக் கொண்டு இருந்தான்.
ரமாவுக்கு விஷயம் புரிந்து விட்டது.
ரமா ஒன்றும் கேட்காமல் தன் துணிமணிகளை தன் ‘பாக்ஸில் பாக்’ பண்ணிக் கொண்டு ரெடி ஆனாள்.
எல்லோரும் ஒரு டாக்ஸியில் ஏறிக் கொண்டு,பெட்டிகளை ‘டாக்சியின் டிக்கி’லே ஏற்றினார்கள்.
அந்த டாக்சி வெகு தூரம் சென்று டெல்லியிலே ஒரு நொ¢சலான தெருவில் வந்து நின்றது.
சுரேஷ் டாக்ஸி டிரைவருக்கு பணத்தை கொத்து விட்டு,டாக்ஸியை அனுப்பினான்.
பிறகு வரதன் தன் பெட்டிடையும், ராஜத்தின் பெட்டியையும் ‘டிக்கியில்’ இருந்து எடுத்துக் கொ ண்டார்.சுரேஷூம் ரமாவும் அவரவர்கள் பெட்டியை எடுத்துக் கொண்டார்கள்.
அவரவர்கள் பெட்டியுடன் எல்லோரும் மாடிப் படி ஏறி இரண்டாவது மாடியில் இருந்த ‘ப்ளாட்’ டில் நுழைந்தார்கள்.அந்த ‘ப்ளாட்டு’க்கு ‘லிப்ட்’ இல்லை.ஒரு ‘பெட் ரூம் ப்ளாட்’ அது. ’ப்லாட்டி டில் நுழைந்ததும்,ரமாவின் மாமியார் தன் பெட்டியை வைத்து விட்டு சமையல் ரூமுக்குள் போனாள்.
ரமாவின் மாமனார் பெட்டியை தரையில் வைத்து விட்டு,தன் துணிமணிகளை எல்லாம் ஹாலில் இருந்த பீரோவில் ஒரு அறையிலே வைத்து விட்டு,மாமியாரின் துணிம¨ணி¨ளை எடுத்து அந்த பீரோவின் அடுத்த அறையில் வைத்தார்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள் ரமா.
கொஞ்ச நேரம் ஆனதும் சுரேஷ் ரமாவை அழைத்துக் கொண்டு ‘பெட்ரூம்’ உள்ளே நுழைந்து ‘பெட்ரூம்’ கதவை தாள் போட்டான்.ரமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “ரமா,இது தான் எங்க ‘ப்லாட்’” என்று சொல்லி விட்டு ரமாவின் கைகளை பிடித்துக் கொண்டு அழுதான் சுரேஷ்.
அவன் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் அவர்கள் கைகள் மேல் விழுந்தது.
‘தீர விசாரிக்காம இவரை நமக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டாளே நம்ம அப்பாவும் அம்மா வும்.நாம் சொன்ன ஒரு ‘கண்டிஷனை’ இவர் ஒத்துக் கொண்டுட்டார்ன்னு தானே எல்லாரும் நம்பி இப் படி ஏமாந்துப் போயிட்டோம்.’இவர் வேணாம்’ன்னு சொல்லிட்டு,நாம சென்னைப் புறப்பட்டுப் போனா ஊர் உலகம் என்ன சொல்லும்.தனக்கு எப்படி வேறே வாழ்க்கை அமையும்.வேறு யார் நம்மை கல்யா ணம் பண்ணிப்பா.நான் இப்போ ஒரு ‘செகண்ட் ஹாண்ட்’ பெண் தானே.இத்தனை கேள்விகளும் ரமாவின் மனதை ரம்பம் அறுப்பது போல் அறுத்துத் தள்ளியது.
புழுவாய் துடித்தாள் ரமா.இந்த வாழ்க்கையே அவளுக்கு பிடிக்கவில்லை.அவளுக்கு அழுகை யாக வந்தது.விக்கி விக்கி அழுதாள்.
பெண் பார்த்த நாளில் இருந்து இன்று வரை அவன் மனதில் அடக்கி வைத்து இருந்த உண்மை களை கொட்டி விட்ட நிம்மதியில் தூங்கப் போய் விட்டான் சுரேஷ்.
இரவு பூராவும் தூங்காமல் தன் மூளையை கசக்கி பிழிந்துக் கொண்டாள் ரமா.
காலை ஆறு மணி இருக்கும்.அவள் எழுந்தாள்.
அவள் யோஜனை பண்ணி கடைசியாக ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.
‘ஆத்துக்காரர் ரொம்ப நல்லவரா இருக்கார்.தன் படிப்புக்கு ஒரு தடையும் சொல்லலே.தன்னை கண் கலங்காம பாத்துக் கொள்றதா உறுதியும் குடுத்து இருக்கார்.நாம மெல்ல இங்கு இருந்த படியே ‘சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷயை படிச்சு,எழுதி,பாஸ் பண்ணி நம் ஆசையை நிறைவேத்திக்கலாம்.நாம ஒரு கலெக்டர் ஆன பிற்பாடு,மெல்ல மெல்ல இந்த மாமியார் பணத் திமிர்லே இருந்து,நாம இவரை வெளிலே கொண்டு வந்து விட்டு,நாம சந்தோஷமா வாழ்ந்துண்டு வரலாம்’ என்று முடிவு பண்ணினாள் ரமா.
இந்த முடிவு அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.
எழுந்து தன் பல்லைத் தேய்த்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள் ரமா.
வீட்டில் மாமியார் ஆதிக்கம் தான் எல்லோரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது.மாமனாரு ம்,தன் கணவரும் மிக சாதுவாக இருந்துக் கொண்டு வந்தார்கள்.
ரமா வாரம் ஒரு முறை ‘போன்’ பண்ணி தன் பெற்றோர்ளுக்கு தன் மாமியார் வீட்டைப் பற்றி ஒன்றும் சொலாமல் தான் சந்தோஷமாக இருப்பதாய் சொல்லி வந்தாள்.
ஒரு நாள் ராமநாதனின் ‘ப்ரெண்ட்’ ரமணி, ராமநாதனை ‘போனி’ல் கூப்பிட்டு “மிஸ்டர் ராம நாதன் நான் ரமணி பேசறேன்.உங்க பொண்ணு கல்யாணம் தான் நன்னா ஆயி,அவ டெல்லிக்குப் போய் செட்டில் ஆயிட்டாளே.நீங்களும் உங்க இப்போ ‘வைபும்’ இப்ப ‘ப்¡£’தானே.நீங்க ரெண்டு பே ரும் வர சண்டே எங்காத்துக்கு மத்தியானம் சாப்பிட வர முடியுமா” என்று கேட்டதும் ராமநாதன் ஒத்து க் கொண்டு ‘சண்டே’ மத்தியானம் சாப்பிட வருவதாகச் சொன்னார்.
ரமணி சொன்னதை ராமநாதன் மங்களத்திடம் சொன்னார்.மங்களம் ஒத்துக் கொண்டாள்.
ஞாயிற்றுக் கிழமை பதினோறு மணிக்கு ராமநாதன் மங்களத்தை அழைத்துக் கொண்டு ரமணி வீட்டுக்கு வாசலில் இருந்த ‘காலிங்க் பெல்லை அழுத்தினார்.வீட்டு வாசலில் ராமநாதனையும்,மங்களத்தையும் பார்த்த ரமணி அவர்கள் உள்ளே கூப்பிட்டு ‘சோபா’வில் உட்காரச் சொன்னார்.
ரமணியும் ராமநாதனும் ஏதோ ‘பாங்க்’ விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்.
மங்களம் ரமணி ‘வைப்’ சுந்தரியின் உடம்பைப் பற்றீ விசாரித்து விட்டு, “உங்க ரெண்டு பேருக் கும் சமையல் கார மாமா சமையல் பிடிச்சு இருக்கா” என்று கேட்டாள்.
“நான் டாக்டர் குடுத்த மாத்திரைகளை தவறா சாப்பிட்டுண்டு தான் வறேன்.ஆனா எனக்கு ஒரு ‘இம்ப்ருமென்ட்டும்’ தெரியலே.என்ன பண்றது சொல்லுங்கோ.சமையல் கார மாமா பண்ற சமை யல் ரொம்ப நன்னா இருக்கு”என்று சுந்தரி சொன்னாள்.பிறகு ரமாவைப் பற்றியும்,அவர் கணவரை பற்றியும்,அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் விசாரித்தாள் சுந்தரி.
மணி பன்னண்டு அடித்ததும் சமையல் கார மாமா ஹாலுக்கு வந்து பவ்யமாக “மாமா சமையல் ரெடி ஆயிடுத்து.நீங்கோ எப்போ சொல்றேளோ,அப்போ நான் எல்லாருக்கும் இலைப் போடறேன்” என் று பவ்யமாக தன் கைகளைக் கட்டிக் கொண்டு சொன்னதும் ரமணி அவர் மணைவியை குரல் கொடுத்து கூப்பிட்டு விட்டு,சமையல் கார மாமாவைப் பார்த்து “நாங்க ரெடியா இருக்கோம்.நீங்க எங்க நாலு பேருக்கும் இலை போடலாம்” என்று சொன்னதும் சமையல் கார மாமா ரமணி வீட்டிலே இருந்த பொ¢ய ‘டைனிங்க் டேபிளீல்’ நாலு நுனி இலைகளைப் போட்டு விட்டு,அவர் பண்ணீ இருந்த சமைய லைப் பறிமாற ஆரம்பித்தார்.
மங்களத்துக்கு அந்த சமையல் கார மாமாவைப் பார்த்ததும் ’இந்த மாதிரி தானே என் தம்பி ரகு ராமனும் அந்த பணக்காரா ஆத்லே சமையல் பண்ணீண்டு வந்து பவ்யமா பேசிண்டு இருப்பான். படிக் கற நாள்ளே அவன் நன்னா படிக்கலே.அவனுக்கு படிப்பு மண்டையிலே ஏறலே.இன்னிக்கு ஒரு சமை யல் காரனா இருந்துண்டு வறான்’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டாள்.
நாலு பேரும் சமையல் கார மாமா பண்ணி இருந்த கல்யாண சமையலை நன்றாக ரசித்து சாப்பி டார்கள்.ராமநாதன் மிகவும் சந்தோஷப் பட்டு அந்த சமையல் கார மாமாவைப் பார்த்து “மாமா,நான் வீணா உங்களே புகழறேன்னு நினைச்சுக்காதீங்கோ.சமையல் உண்மையாகவே ரொம்ப நன்னா இருந்தது.வெண்டைக்காய் மோர் குழம்பும்,அன்னாசி பழ ரசமும் ரொம்ப ‘சூப்பரா’ இருந்தது” என்று சொ ன்னதும்”ரொம்ப ‘தாங்க்ஸ்’ மாமா.நாம பண்ற சமையலை யாராவது புகழ்ந்து பேசினா மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.உடம்ப்லே ஒரு புது தெம்பும் வறது” என்று மறுபடியும் தன் கைகளைக் கட்டி கொண்டு பவ்யமாக சொன்னார் அந்த சமையல்கார மாமா.
ரெண்டு நிமிஷம் கூட ஆகி இருக்காது ரமணி அந்த சமையல் கார மாமாவைப் பார்த்து “மாமா. உங்க அம்மா கண் ஆபரேஷன் முடிஞ்சி ஒரு மாசம் ஆகப் போறதே.இப்போ உங்க அம்மாவுக்கு ரெ ண்டு கண்ணும் நன்னா தெரியறதா” என்று கேட்டதும் அந்த சமையல் கார மாமா தன் தோள் மேலே போட்டுக் கொண்டு இருந்த துண்டினால் தன் கண்களத் துடைத்துக் கொண்டார் சுந்தரம்.
“அந்த கஷ்டத்தே ஏன் கேக்கறேள் மாமா.நானே உங்க கிட்ட இன்னிக்கு சொல்லலாம்ன்னு தான் இருந்தேன்.உங்க ஆத்லே இன்னிக்கு ‘கெஸ்ட்’ வந்து இருக்கவே,நான் நாளைக்கு சொல்லலா ம்னு இருந்தேன்.ஆபரேஷன் பண்ண கண் டாக்டர் என் அம்மாவுக்கு போடச் சொன்ன கண் சொட்டு மருத்தே நான் தவறாம போட்டுண்டு தான் வந்து இருக்கேன்.முந்தா நாளோடு ஒரு மாசம் ஆகி விட வே இங்கு இருந்து நான் ஆத்துக்குப் போய்,என் அம்மாவை அந்த கண் டாக்டர் கிட்டே அழைச்சுண்டு போய் காட்டினேன்.அவர் என் அம்மா போட்டுண்டு இருந்த கருப்பு கண்ணாடியை கழட்டி விட்டு ரெண்டு கண்ணையும் ‘செக் அப்’ பண்ணினார்.அப்போ என் அம்மாவால் அவர் காட்டின எழுத்து எதையும் சரியாவே படிக்க முடியலே.அதேப் பாத்துட்டு அந்த கண் டாக்டர் என்னேப் பாத்து ‘நான் நினைச்சது சரியாப் போச்சு.நீங்க உங்க அம்மாவை அவங்க ‘காட்ராக்ட்’ ரொம்ப முத்திப் போன பிறவு அழைச்சு கிட்டு வந்து இருக்கீங்க.நான் ’காட்ராக்ட்’ஆபரேஷனையே ரொம்ப கஷ்டபட்டு பண்ணேன். முத்திப் போய் ஆபரேஷன் பண்ணா கண் ரொம்ப சுமாராத் தான் தெரியும்’ன்னு சொல்லி எங்களே அனுப்பிட்டார்.நீங்க எனக்கு பண உபகாரம் பண்ணீயும் என் அம்மா கண் ரெண்டும் ரொம்ப சுமாரா தான் தெரியறது” என்று சொல்லி விட்டு,தன் கண்களை மறுபடியும் துடைத்துக் கொண்டார் சுந்தரம்.
உடனே ரமணி “அடப் பாவமே அப்படி ஆயிடுத்தா.கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கே”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது ராமநாதன் “மிஸ்டர் ரமணீ,சமையல் கார மாமா கண் டாக்டர் சொல்றது ரொம்ப நிஜம்.எங்க மாமியாருக்கும் என் மச்சினன் ரெண்டு கண்ணையும் ஆபரேஷன் பண் ண பிற்பாடு அவ ரெண்டு கண்ணும் சரியாத் தெரியலே.அந்த கண் டாக்டரும் சமையல் கார மாமா கண் டாக்டர் சொன்னது போலவே என் மச்சினன் கிட்டே சொன்னாராம்.பாவம் என் மாமியார் கண் சரியாவே தெரியாமத் தான் வாழ்ந்துண்டு வறா” என்று சொல்லி வருத்தப் பட்டார் சுந்தரம்.
ராமநாதன் சொன்னதைக் கேட்டு ரமணியும் அவர் மணைவியும் வருத்தப் பட்டார்கள்.
கொஞ்ச நேரம் ஆனதும் மங்களம் அந்த சமையல் கார மாமாமவை பற்றித் தெரிந்துக் கொள்ள ஆசைப் பட்டு அவரைப் பார்த்து “மாமா,நீங்க எத்தனை வருஷமா சமையல் வேலை செஞ்சுண்டு வறேள்” என்று கேட்டாள்.
உடனே அந்த சமையல் கார மாமா “மாமி, நான் என்னுடைய எட்டாவது வயசிலே இருந்து இந்த சமையை வேலையை என்னுடைய அப்பாவோடு இருந்துக் கொண்டு நான் கத்துண்டு வந் தேன்.என்னுடைய இருபதஞ்சாவது வயசிலே என் அப்பா திடீரென்று ஒரு நாள் காலமாயிட்டார். அவர் தவறிப் போன பிற்பாடு ஒரு வருஷம் கழச்சு நான் தனியா இந்த சமையல் வேலேயே செஞ்சி ண்டு வறேன்”என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் சுந்தரம்.
சமையல் கார மாமா அழுதைப் பார்த்தும் மங்களத்துக்கு ரொம்ப வருத்தமாய் இருந்தது.
”அழாதீங்க மாமா,உங்க அப்பா எப்படி இறந்துப் போனார்” என்று வருத்தத்தோடுக் கேட்டாள் மங்களம்.
”நானும் என் அப்பாவும் ‘மெஸ்ஸில்’ எல்லா வேலைகளையும் முடிச்சு ட்டு ராத்திரி ஆத்துக்கு வந்துக் கொண்டு இருந்தோம்.நான் சொல்லிக் கொண்டு இருக்கும் போது என் அப்பா கேக்காம அவசரமா ரோடை ‘கிராஸ்’ பண்ணும் போது,அவர் மேலே ஒரு தண்ணீர் லாரி மோதி அவர் ‘ஸ்பாட்டி லேயே’ செத்துப் போயிட்டாரு” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார் அந்த சமையல் கார மாமா சுந்தரம்.
சமையல் கார மாமா சொல்வதை வருத்தத்தோடுக் கேட்டுக் கொண்டு இருந்தாள் மங்களம்.
சுந்தரம் தன் கதையைத் தொடர்ந்தார்.
“மாமி,அப்பா இறந்து போன துக்கத்தில் ஒரு வருஷம் வரைக்கும் நான் ஆத்லேயே ஒன்னும் செய்யாம சும்மா இருந்துண்டு வந்தேன்.நாளாக நாளாக கையில் இருந்த பணம் எல்லாம் கரைய ஆரம் பிச்சுடுத்து.என் அம்மா என்னை கூப்பிட்டு ‘சுந்தரம்,நீ இப்படியே ஆத்லே சும்மா உக்காந்துண்டு இரு ந்தா,நாம குடும்பம் எப்படி நடத்தறது. உனக்கு ஆ§க்ஷபணை இல்லேன்னா நீயும் நானும் நம் ஆத்லே யே ஒரு சின்ன ‘மெஸ்’ நடத்தி வந்து பணம் சம்பாத்திக்கலாமா’ ன்னு கேட்டா.நான் உடனே ‘சரிம்மா’ ன்னு சொல்லிட்டு ஆத்லேயே ஒரு ‘மெஸ்’ நடத்தி வந்தோம்.அந்த ‘மெஸ்’ நன்னா நடந்து வந்தது கொஞ்ச மாசம் ஆனதும் எங்க ‘மெஸ்’லெ சாப்பிட வந்து ஒருத்தர் என்னை ஒரு பணக்காரா ஆத்லே சமையல் வேலைக்கு சேர்த்து விட்டார்.நானும் நான் நடத்தி வந்த ‘மெஸ்ஸை’ மூடிட்டு அந்த பணக் காரா ஆத்லே சமையல் வேலைக்கு சேந்தேன்.அவா குடுத்து வந்த சம்பளம் எனக்கும் என் அம்மாவுக் கும் போதுமானதா இருந்ததாலே,நான் என் அம்மாவை ஆத்லே ‘ரெஸ்ட்’ எடுத்துண்டு வர சொன்னே ன்” என்று சொல்லி விட்டு கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு வந்தார் சுந்தரம்.
‘அவர் தன் கதையை மேலே சொல்லட்டும்’ என்று காத்துக் கொண்டு இருந்தாள் மங்களம்.
“மாமி,நான் ஒண்டிக் கட்டையாய் தனியாய் திண்டாடி வருவதை பார்த்த என் அம்மா என் னைப் பார்த்து ‘சுந்தரம்,உனக்கும் வயசு ஏறிண்டே போறது. நீ சீக்கிரமா ஒரு கல்யாணத்தைப் பண் ணிக் கோப்பா’ என்று சொல்லிண்டு இருந்தா.நான் என் அம்மா கிட்டே’நான் கல்யாணம் பண்ணீண் டா எனக்கு பொண்டாட்டியா வர பொண்ணு தனிக் குடித்தனம் போகணும்ன்னு பிடிவாதம் பிடிச்சா, நான் எப்படி உன்னே தனியா தவிக்க விட்டுட்டு,அவ கூட போறது சொல்லும்மா.அப்படி நான் போயி ட்டா,நீ தனியா கஷ்டப் பட்டுண்டு தானே வரணும்’ ன்னு கேட்டேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது “அதுக்கு உங்க அம்மா என்ன சொன்னா” என்று கேட்டாள் மங்களம்.
“என் அம்மா அப்படி எல்லாம் ஆகாதுடா என்று பிடிவாதம் பிடிச்சு வந்து என்னே க்ல்யாணம் பண்ணீக்கணும் சொல்லிண்டு இருந்தா.ஏழை சமையல் காரனான எனக்கு பொண்ணுத் தர யாரும் முன் வரலே மாமி.என் அம்மா ரொம்ப விசாரிச்சு கடைசியா ஒரு புரோகிதரின் நாலாவது பொண்ணை எனக்கு ‘சிம்பிளாக’ கல்யாணம் பண்ணி வச்சா.நானும் என் மணைவி மஞ்சுளாவும் கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்து வந்தோம்.எனக்குக் கல்யாணம் ஆன ஆறாவது மாசமே என் அம்மாவுக்கு கால் முட்டி வலி வந்து ரொம்ப கஷ்டப் பட்டு வந்தா.தன்னால் நின்னுண்டு சமையல் எல்லாம் பண்ணி வரு வது கஷ்டமாய் இருந்தது” என்று சொல்லி நிறுத்தினார் சுந்தரம்.
அவர் கண்களில் நீர் வழிந்துக் கொண்டு இருந்தது.
மங்களம் ‘இந்த மாமா தன் மணைவியோட சந்தோஷமா இருந்து வந்தேன்னு சொன்னாரே இப் போ அவர் மறுபடியும் அழறாரே’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.
கண்களை துடைத்துக் கொண்ட சுந்தரம் “மஞ்சுளாவுக்கு பிரசவ வலி எடுத்ததாலே நான் அவளை ஹாஸ்பிடல்லே கொண்டு போய் சேத்தேன்.குழந்தை பிறக்காமலே அவள் வயித்திலேயே செத்துப் போயிடுத்து.மஞ்சுளாவும் அந்தக் குழந்தையுடன் கண்ணை மூடிட்டா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.
கொஞ்ச நேரம் ஆனதும் மங்களம் சமையல் கார மாமாவைப் பார்த்து “மஞ்சுளா செத்துப் போன பிறகு,நீங்க கல்யாணம் பண்ணிக்கலையா மாமா” என்று கேட்டாள் மங்களம்.
“நான் எனக்கு கல்யாணமே வேண்டாம்ன்னுத் தான் என் அம்மா கிட்டே சொல்லி வந்தேன். எனக்கும் கல்யாணத்துக்கும் இந்த ஜென்மத்லே ‘பிராப்தம்’ இல்லேன்னு சொல்லிண்டு இருந்தேன். ஆனா என் அம்மா பிடிவாதமா ‘நான் இன்னொரு கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இருந்து வரணும்’ன்னு பிடிவாதம் பிடிச்சி வந்து எனக்கு தனக்கு தெரிஞ்ச தன் சித்தியின் கடைசி பொண்ணா ன கிரிஜாவை கல்யாணம் பண்ணி வச்சா மாமி” என்று சொல்லி நிறுத்தினார் சுந்தரம்.
எல்லோரும் அந்த சமையல் கார மாமா ‘மேலே என்ன சொல்லப் போறார்’ன்னு அவர் வாயையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
கொஞ்ச நேரம் ஆனதும் “மாமி, கல்யாணம் ஆன முதல் மாசமே நானும் கிரிஜாவும் உக்காந்து ண்டு யோஜனைப் பண்ணோம்.நான் அவ கிட்டே‘கிரிஜா, நமக்கு ஒரு புருஷ குழந்தை பொறந்தா, அவன் படிப்பு முடிஞ்சதும் ஒரு வேலைத் தேடிண்டு,அதை பண்ணி வந்துண்டு,ரெண்டோ, மூனோ வருஷம் போன பிற்பாடு,அவன் தன் மனசுக்கு பிடிச்சவளேக் கல்யாணம் பன்ணிண்டு நமக்கு ‘டா’ ’டா’க் காட்டிட்டுப் போயிடுவான்.நான் இப்படியே மறுபடியும் சமையல் வேலையை பண்ணிண்டு வந்து தான் உன்னையும்,அம்மாவையும் காப்பாத்திண்டு வரணும்.அவனுக்கு படிப்புக்கு செலவு பண்ண பணம் எல்லாம் ‘விழலுக்கு இறைத்த தண்ணி மாதிரி’ ‘வேஸ்ட்’.நமக்குப் பையன் பொறக்கா மா ஒரு பொண்ணு பொறந்தா நாம ரெண்டு பேரும் அவளைப் படிக்க வச்சு,வயித்திலெ நெருப்பைக் கட்டிக் கொண்டு வளர்த்து வரணும்.அவ நாம சொல்ற பேச்சை கேட்டு ஒழுங்கா இருந்து வந்தா நல் லது.இல்லே ஒரு வேளை அவ நாம படிச்சுட்டதாலே,நாமே ஒரு படிச்ச பையனை காதல் பண்ணி கல் யாணம் பண்ணி ண்டு ஓடிப் போயிடலாம்.அப்படி ஒடிப் போயிட்டா,நான் மறுபடியும் இந்த சமையல் வேலையை பண்ணிண்டு வந்து தானே உன்னைக் காப்பாத்தி வரணும்ன்னு சொன்னேன்” என்று சொல்லி மறுபடியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் சுந்தரம்.
கொஞ்ச நேரம் ஆனதும் அவர் “ஆனா கிரிஜா ‘நாம நன்னா சொல்லி வளத்தா பையனும் சரி பொண்ணும் சரி,நம்மே விட்டு எங்கேயும் போக மாட்டா’ன்னு சொல்லி பிடிவாதம் பிடிச்சு வந்தா’.நான் அவ கிட்டே ‘கிரிஜா நீ சொல்றா மாதிரி பொண்ணு ஓடிப் போகாம நம்மோடு இருந்து வந்தா,நமக்கு வற சம்பளத்லே அவளுக்கு கல்யாணம் பண்றதே ரொம்ப கஷ்டமா இருக்குமே.இந்த காலத்லே கல்யா ணம்ன்னு சொன்னாலே வைரத்தோடு,வைர மூக்குத்தி எல்லாம் போட்டு கல்யாணத்தை பண்ணச் சொல்வாளே.இத்தனையும் போட்டு நான் போட்டு நாங்க அவளுக்குக் கல்யாணத்தை பண்ணா,அவ புக்காத்துக்குப் போய் இருக்கப் போறா.கையிலே சேத்து வச்சு இருக்கிற பணத்தை எல்லாம் போட்டு கல்யாணத்தை பண்ணி முடிச்ச பிறகு,என்னால் மறுபடியும் சமையல் வேலேக்கு போக முடியுமோ முடியாதோ.அதனால்லே நாம குழந்தையே பெத்துக்காம இருந்துண்டு வரலாம்.நான் சம்பாதிச்சு வர பணத்தை ஜாக்கிறதையா வச்சிண்டு,நாம மூனு பேரும் கஷ்டம இல்லாம சாப்பிட்டுண்டு வரலாமே’ ன்னு சொன்னேன்” என்று சொல்லி நிறுத்தினார்.
உடனே சுந்தரி தன் ஆசையை அடக்க முடியாமல் “நீங்க சொன்னதுக்கு கிரிஜா ஒத்துண்டா ளா” என்று கேட்டாள்.
அந்த சமையல் கார மாமா “ஆரம்பத்திலே நான் சொன்னதை அவ ஒத்துக் கொள்ளவே இல்லை பிடிவாதம் பிடிச்சு ‘எனக்குக் குழந்தை வேணும்’ன்னு அடம் பிடிச்சு வந்தா.நான் நிறைய சொல்லியும் அவ கேக்கலே.பிடிவாதம் பிடிச்சுண்டு வந்தா.‘சரி நாம சொன்னா அவ கேக்க மாட்டான்னு நினைச்சு நான் அவ சொன்னதுக்கு ஒத்துண்டேன்.இப்போ என்னன்டான்னா,அவ இந்தக்ஷனம் தனி குடித்த னம் போகணும்ன்னு பிடிவாதம் பிடிச்சுண்டு வறா.நான் அவ கிட்டே என் வயசான அம்மாவை விட்டு ட்டு உன்னோடு தனிக் குடித்தனம் வரவே முடியாதுன்னு சொல்லிண்டு வறேன்.எனக்கு என்னவோ அவ ரொம்ப நாள் என் கூட இருந்து வருவான்னு தோணலே.அவ என்னே வேணாம்னு சொல்லிட்டு, கோவிச்சுண்டு, கூடிய சிக்கிரமா அவ அம்மா ஆத்துக்கு போயிடுவான்னு தான் எனக்குத் தோன்றது” என்று சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் சுந்தரம்.
சமையல் கார மாமா சொன்ன சோகக் கதையை கேட்டு நால்வரும் ரொம்ப வருத்த பட்டார்கள்
மங்களம் ‘சமையல்கார மாமா கல்யாணம் பண்ணீண்டு,கிரிஜா குடுத்துண்டு வர கஷ்டத்தே அனுபவிச்சுண்டு வறார்.ரகுராமன் கல்யாணமே பண்ணிக்கம சமையல் கார மாமா படற கஷ்டத்தே படாம இருந்துண்டு வறான்.இது தான் வித்தியாசம்’ என்று நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டாள்.
ஒரு மணி நேரம் கழித்து ராமநாதன் ரமணியிடமும் சுந்தரியிடமும் “உங்க சமையல் கார மாமா எங்களுக்கு ஒரு நல்ல சாப்பாடு சமைச்சுப் போட்டார்.ரொம்ப ‘தாங்க்ஸ்’.நானும் மங்களமும் சப்பாட் டை ரொம்ப ரசிச்சு சாபிட்டோம்.நாங்க போய் வறோம்”என்று சொல்லிக் கொண்டு தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்
வீட்டுக்கு வந்ததும் ராமநாதன் மங்களத்தைப் பார்த்து “மங்களம்,இந்த காலத்லே கல்யாணம் ஆனவுடனே வர பொண்ணுங்க ஆத்துக்காரரை தனி குடித்தனம் போகணும் பிடிவாதம் பிடிச்சுண்டு வறா.கல்யாணம் பண்ணீண்ட பையங்க எப்படி அவாளை பெத்து வளத்த அம்மாவை தனிய தவிக்க விட்டுட்டு தனிக் குடித்தனம் போறது.கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.நல்ல வேளே ரகுராமன் புத்திசலித்தனமா உன் அம்மா கிட்டே எனக்குக் கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிட்டு உங்க அம்மா வை கூட வச்சுண்டு சாதம் போட்டுண்டு வறான்” என்று சொன்னதும் மங்களம் ”இப்படி பண்ணுவா இந்த காலத்து பொண்ணுங்கன்னு தெரியாம,நான் அவனை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி ண்டு வந்தேன்.ஆனா அவன் நல்ல வேளையா கல்யாணம் பண்ணிக்காம அம்மாவை காப்பாத்திண்டு வறான்” என்று சந்தோஷமாக சொன்னான்.
ரெண்டு வாரம் ஆயிற்று.
மாமியார் ரமாவை வேலைக்கு போக வேண்டும் என்று வற்புறுத்தி வந்தாள்.
மாமியாரிடம் “அம்மா,நான் ஒரு வேலைக்குன்னு போய் வந்துண்டு இருந்தா,எனக்கு பத்து மணி நேரம் ஆபீஸில் வேலை சரியா இருக்கும்.எனக்கு படிக்கவே நேரம் இருக்காது.அதனால் நான் வேலைக்குப் போகாம ஆத்லே இருந்துண்டு ‘சிவில் சர்விஸஸ்’ படிச்சு பரி¨க்ஷயை எழுதறேன்” என்று சொல்லி முடிக்க வில்லை மாமியார் “நீ ஒன்னும் படிக்க எல்லாம் வேணாம்.பேசாம ஒரு நல்ல வேலை யை தேடிண்டு வேலைக்குப் போய் வா.ஆத்து செலவுக்கு பணம் வேணும்”என்று சொன்னதும் ரமா ஆடிப் போய் விட்டாள்.
மாமியாருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தாள்.
இரவு கணவன் வீட்டுக்கு வந்ததும் மாமியார் சொன்னதையும்,அதற்கு அவள் சொன்ன பதி லையும் சொல்லி,அழுதுக் கொண்டே தன் கணவனைப் பார்த்து “நீங்கோ எனக்காக சித்தே உங்க அம்மா கிட்டே சொல்லி என்னே ‘சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷயை படிக்க ‘அலவ்’ பண்ணுங்கோ ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.“சரி, ரமா நான் காத்தாலே எழுந்ததும் அம்மா கிட்டே சொல்லிப் பாக்கறேன். ஆனா என் அம்மா நான் சொல்றதே கேப்பாளான்னு எனக்கு தெரியாது.என்னால் முடிஞ்ச வரைக்கும் நான் ‘ட்ரை’ பண்றேன்.நீ இப்போ நிம்மதியா தூங்கு” என்று ரமாவுக்குத் தேத்தறவு சொன்னான்.
காலயில் எழுந்ததும் சுரேஷ் தன் அம்மாவை ‘மூடை’ப் பார்த்தான்.
அம்மா சந்தோஷமாக இருப்பது போல தெரிந்தது சுரேஷூக்கு.
அவன் உடனே அம்மாவைப் பார்த்து “அம்மா,நீங்க ரமாவை வேலைக்கு போய்வான்னு சொல் றேள்ன்னு ரமா என் கிட்டே ராத்திரி சொன்னா.அவளே நான் ‘பொண்ணு பாத்தப்ப’ அவளே மேலே படிக்க நான் சம்மதிச்சு இருக்கேனே.அவ வேலைக்குன்னு போனா அவளாலே படிக்க முடியாதேம்மா. நான் தான் வேலேக்குப் போய் வறேனே.அவ ‘சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷயை எழுதி ‘பாஸ்’ பண்ணீ ஒரு ‘கலெக்டரா’ ஆனா,நம்ம குடும்பத்துக்கு தானே பெருமை.ரமா படிச்சு ‘சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷ யை எழுதட்டுமேம்மா.நீங்கோ ஏன் இப்போ ரமாவை ஒரு வேலேக்குப் போய் வரணும்ன்னு ‘கம்பெல்’ பண்றேள்” என்று பயந்துக் கொண்டே கேட்டான்.
– தொடரும்…